ஜெ மரண மர்மம் : நெல்லை டு சென்னை சம்மந்தம் ….

‘ஜெயலலிதாவின் மரணத்தில் ‘நெல்லை டு சென்னை, சென்னை டு பெங்களூரு வரை’ சம்பந்தம் இருக்கிறது’ : பி.ஹெச் பாண்டியன்

குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என்றபின் , முதன் முதலாக “நெல்லை டூ சென்னை” என்ற‌ வார்த்தைகளை பி.எச் பாண்டியன் உபயோகபடுத்துகின்றார்

ஏதும் வெட்டு, குத்து, குண்டு வீச்சு, துப்பாக்கி சூட்டு கொலை என்றால் கூட நெல்லை என சொல்லிவிடலாம்

ஆனால் இவ்வளவு பெரும் விஷயம் எப்படி நெல்லையிலிருந்து கிளம்ப முடியும்? அப்படி நெல்லையில் என்ன இருக்கின்றது?

முதலமைச்சர் வேறு நெல்லைக்கு சென்றிருக்கின்றார், அங்கும் சில பரபரப்பான காரியங்கள் நடைபெறும் அறிகுறிகள் தெரிகின்றன.

ஆனாலும் பி.எச் பாண்டியன் வழக்கறிஞர், இந்த வார்த்தை விளையாட்டு அல்ல, யாரையோ குறித்துவிட்டார் என்பது மட்டும் தெரிகின்றது

அது யார் என்பது நெல்லையப்பருக்கே வெளிச்சம்.

ஆனாலும் பெரும் விவகாரம் கிளம்புகின்றது என்பது மட்டும் லேசாக தெரிகின்றது.

 
 

மனுஷ்ய புத்திரனின் கப்சா….

காமராஜர் காலத்தில் அரிசி பஞ்சம் நிலவியது, காமராஜர் அரிசி குறைத்தார், அதனை எதிர்த்து திமுக போராடியது எனும் கப்சாவினை யார் கிளப்பிவிட்டார் என்றால்,

மனுஷ்ய புத்திரனாக இருந்திருக்கின்றார்

அடேய், 1950களில் இந்த உலகம் பட்ட பாட்டினையும், ஒவ்வொருநாடும் நெல்முளைக்காதா, கோதுமை முளைக்காதா? என பரிததவித்த தவிப்பினையும் மறைத்துவிட்டு,

என்னவோ தமிழகத்தில் மட்டும் அரிசி இல்லாதது போலவும், காமராஜர்தான் எல்லா அரிசி வயல்களையும் அழித்தது போலவும் சொல்லியிருக்கின்றார்

கல்லணையினை கட்டியது திமுக என்பதை மட்டும் அன்னார் சொல்லவில்லை

200 ஆண்டுகளுக்கு முன்பே பெண் கல்வி நெல்லையில் பெண்களுக்கு தொடங்கபட்டது, திராவிட எழுச்சிக்கு முன்பே முத்துலெட்சுமி ரெட்டி போன்ற மருத்துவர்கள், இன்னும் படித்த பெண்கள் இருந்தார்கள்

பெண்கல்விக்கு சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலே வழி இருந்தது

அதனை எல்லாம் மறைத்து பெண்களுக்கு கல்வி கொடுத்தது திமுக என அவர் சொல்லியிருகின்றார்

ஏன் திமுகவில் பெண்களுக்கு 33% கொடுக்க சொல்லுங்கள் பார்க்கலாம் மனுஷ்?

ஆக திமுகவினை வெட்டுவதற்கு அதன் கழுத்தினை பிடித்து எதிராளிக்கு கொடுப்பது யார்? என்ன தேடிகொண்டிருந்தால் அது மனுஷில் முடிகின்றது

இந்த மனுஷ் போன்ற திடீர் திராவிடர்களை பேசவிட்டால் இப்படி மகா அபத்தமாகத்தான் முடியும்

அண்ணா காலத்தில் பெரும் சிந்தனையாளர் படை இருந்தது, கலைஞர் இருப்பவர்களில் சிலரை வைத்து சமாளித்தார்

பாவம் ஸ்டாலின் அவருக்கு மனுஷ் தான் கிடைத்திருக்கின்றார்

திமுகவின் எதிரி ஸ்டாலின் பக்கத்திலே இருப்பதுதான் பெரும் கொடுமை

இந்த மனுஷை விட்டால் ஆளில்லை எனும் அளவிற்கு, ஒரு உருப்படியான திராவிட கட்டுரை கூட எழுதமுடியாத அளவிற்கு அது எழுத்து துறையில் வீழ்ச்சி கண்டிருக்கின்றது

பெரும் பரிதாபம் இது

மனுஷை எல்லாம் ஒரு திமுக கருத்துசொல்பவராக வைத்துவிட்டபின் அக்கட்சியினை பரிதாப கண்ணீரோடுதான் பார்க்கவேண்டி இருக்கின்றது

அவர் கவிதையினை படித்தாலே ஏன் தமிழ்படித்தோம் என்ற வெறுப்பு வரும், இதில் அவர் கட்சிக்கு கட்டுரை எழுதினால் எப்படி இருக்கும்?

இப்படி பெரும் ஓட்டைகளும், அபத்தமுமாகத்தான் இருக்கும்..

தத்திகள் எல்லாம் எழுதிபழகும் இடமாக திமுக மாறிவிட்டது…

காமராஜரையும், கக்கனையும் சீண்டாதீர்கள்

காமராஜர் நல்லாட்சிதான் வழங்கினார் சந்தேகமில்லை, ஆனால் அவர் தோற்றதில் உள்கட்சி தகறாறுகளும் இருந்தன.

இந்நிலையில்தான் திமுகவிடம் ஆட்சி சிக்கியது, அது பெரும்பாலும் சமூக விஷயங்களை பேசிகொண்டிருந்த இயக்கம், கூடுதலாக தமிழுக்கு மட்டும் போராடிகொண்டிருந்தது

அண்ணாவிடம் ஆட்சி இருந்தது 1.5 ஆண்டுகள், பெரும் குறை சொல்லமுடியாது, பண்பான ஆட்சியினை தொடர்ந்துகொண்டுதான் இருந்தார்

அவர் மறைந்த பின் உண்மையான திமுக ஆண்டது 3 ஆண்டுகள்தான், மிக தீவிரமாக அது ஆண்டது, அதில் பல நல்ல விஷயங்களும் நடந்தன, மதுகடை தவிர. அதுவும் அதனை விரைவில் மூடிவிடும் திட்டம்தான் திமுகவிற்கு அன்று இருந்தது.

என்று ம.கோ.ராமசந்திரன் தனியாக கிளம்பினாரோ அன்று பிடித்தது தமிழக‌ சனி

கொள்கை ரீதியான திமுக, இந்த சனியனை சமாளிக்கவே பெரும்பாடுபட்டது, அதன் கவனமெல்லாம அதிலே சென்றது. அவரோ அப்படியே டெல்லியின் எடுபிடியானார்.

திமுகவிற்கான தொந்தரவுகள் அவர் மூலமே நடந்தன..

பின் ஆட்சியும் மகோ ராமசந்திரனிடம் சிக்கியது, 10 ஆண்டுகள் அவரின் அரசாட்சி, அது முடியும் தருவாயில் இன்னொரு சனியனை உருவாக்கிவிட்டும் சென்றுவிட்டது

ஆக எதனையோ எதிர்க்க கிளம்பிய திமுக, தன் சொந்த சனியனை எதிர்பதிலே முழு காலத்தையும் கழித்தாயிற்று

மக்கள் பணத்தில் கட்டபட்ட சட்டசபை கட்டடத்தை கூட திறக்கமாட்டோம் என அடம்பிடிக்கும் கட்சியினை வைத்துகொண்டு என்ன செய்வது?

தமிழகத்தை குட்டிசுவராக்கிய பெரும் பங்கு அந்த கட்சியினுடையது..

அவரை அவர் பாணியிலே எதிர்க்கின்றேன் என அரசியல் செய்த திமுகவும் பல இடங்களில் தடுமாறிற்று.

உடன்பிறந்த வியாதி என்பது நிச்சயம் அந்த ” மகோ ராமசந்திரனே..”

ஆக யாராவது தமிழகத்தை கெடுத்தது யார்? என கேட்டால் அந்த ம.கோ ராமசந்திரனை கைகாட்டுங்கள், அவரின் வாரிசுகளை கை காட்டுங்கள்

தானும் ஓழுங்காக ஆளாமல் , தன் வாரிசினையும் உருப்படியாக அறிவிக்காமல், எதிர்கட்சிக்கும் வாய்ப்புகொடுக்காமல் இந்த தமிழநாட்டை முழு சீர்கேடாக ஆக்க்கியது அந்த குல்லா மண்டையனே

அவரை எவ்வளவும் திட்டுங்கள், விமர்சியுங்கள். அதில் அர்த்தம் உண்டு

அதனை விட்டுவிட்டு காமராஜரையும், கக்கனையும் சீண்டாதீர்கள்

திமுக நிச்சயம் மாற்றம் நோக்கி புறப்பட்ட கட்சிதான், ஆனால் மகோ ராமசந்திரன் எனும் தீரா தலைவலியினை அவர்கள்தான் உருவாக்கிவிட்டார்கள்

அந்த விபத்து நடந்திருக்க கூடாது

ஆக எதிர்பாராமல் கிளம்பி தமிழகத்தை கெடுத்த அந்த மகோராவினை இந்த “திராவிடம் 50ல்” சாடுங்கள்….

திராவிடம் உருவாக்கிய அந்த உள்வீட்டு குட்டிசாத்தானை சாடுங்கள், திராவிட எதிரிகளிடம் விலைபோன அந்த கோடாரி காம்பினை திட்டுங்கள்..

பரிதாபமான காமராஜரையும், கக்கனையும் விட்டுவிடுங்கள்…

டெல்லியில் திமுக மகளிரணி போராட்டம் நடத்தும் : கனிமொழி

 

Image may contain: 1 person, smiling, close-up

மார்ச் 20ம் தேதி பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்ககோரி, டெல்லியில் திமுக மகளிரணி போராட்டம் நடத்தும் : கனிமொழி

திமுகவில் 33% பெண்களுக்கு இடம் கேட்டு எப்பொழுது அறிவாலம் முன்னால் போராட்டம் நடத்தபோகின்றீர்கள் மேடம்?

(கட்சியில் இருந்த குஷ்பூவினை விரட்டியாயிற்று, தமிழச்சி தங்கபாண்டியனை எல்லாம் காணவே இல்லை)

கட்சியில் பெண்களுக்கு 33% கொடுத்துவிட்டு, டெல்லியில் சென்று கேட்டால் ஒரு மதிப்பும் மரியாதையும் திமுக மேல் ஏற்படும் அல்லவா?

ஆக முதலில் செயல்தலைவர் முன்னால் சென்று கட்சியில் 33%, தேர்தலில் 33%, பதவியில் 33% என போராடி உறுதிசெய்துவிட்டு , டெல்லி சென்றால் நன்றாக இருக்கும் அம்மணி

முன்பு பாஜகவின் சுஷ்மா இப்படித்தான் சொல்லிகொண்டிருந்தார், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 33% இடஒதுக்கீட்டை வழங்குவோம் என்றார், ஆட்சிக்கு வந்தவுடன் 15 லட்சம் என்பது போல அதுவும் அவர்களுக்கு மறந்துவிட்டது

இப்பொழுது கனிமொழி நினைவுபடுத்த துடிக்கின்றாராம்

முதலில் பெரியார் வழி வந்த கட்சியில் 33% பெண்களுக்கு உரிமை கொடுக்க சொல்லுங்கள் அம்மணி, டெல்லியினை அதன் பின் பார்க்கலாம்

உங்களை தவிர எந்த பெண் தலைவரை திமுக உருவாக்கிவிட்டது அம்மணி?

இதற்கு அதிமுக பரவாயில்லை 2 பெண் முதல்வர்களையே கொடுத்துவிட்டது, விட்டால் மூன்றாவது பெண் முதல்வரையே கொடுத்திருக்கும்

ஆனால் திமுக நிலை என்ன?

முதலில் உங்கள் கட்சிக்குள் 33% இடஒதுக்கீடு என குரல் எழுப்புவீர்களா? பெற்று கொடுப்பீர்களா?

செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா?

திமுக தொண்டரடிபொடிகளே, வந்து உங்கள் கருத்துக்களை பொழியுங்கள்…


உடன் பிறப்புக்களே

உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50% என அறிவித்தவர் ஜெயலலிதா என செய்திகள் சொல்கின்றன, அதனால் திமுக 33% உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கியது என்பதெல்லாம் அடிபட்டு போகின்றன‌

கடந்த சட்டமன்ற தேர்தலில் 11 பெண் வேட்பாளர்களை மட்டும் திமுக நிறுத்தியிருக்கின்றது, அது 5%க்கும் குறைவானது

ஆக இங்கு 5% கூட கொடுக்காத திமுக, டெல்லியில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு கேட்டு போராடுவது எவ்வகை நியாயம்?

ஸ்டாலினிடம் கேட்காத கனிமொழி, டெல்லி மோடியிடம் மட்டும் போராடுவாரா?

common brothers….


 

 
 

காமராஜரும், கக்கனும் முதல் வகை

Image may contain: 1 person, indoor

கொஞ்சபேர் கிளம்பியிருக்கின்றான், காமராஜர் ஆட்சியில் பஞ்சம் இருந்தது அவர் அரிசி கொடுக்கவில்லை, கக்கன் ஒரு கொடுங்கோல் அமைச்சர் என பல கதைகளை கிளப்புகின்றார்கள்

அது சுதந்திரம் பெற்றிருந்த சமீபகாலம், இந்தியாவில் முறையாக எதுவுமில்லை, சுரண்டிவிட்ட பாண்டமாக வெள்ளையன் இந்தியாவினை விட்டுசென்றிருந்தான்

இந்தியா என்றெல்ல, மொத்த உலகமே 2ம் உலகப்போரில் கொடுமையில் பஞ்சத்தில்தான் இருந்தது, எல்லா நாடும் மூச்சுவிட ஆரம்பித்ததே 1970க்கு பின் தான்

அந்த பஞ்சம் சிங்கப்பூர் மலேசியாவில் இருந்தது, சீனாவில் இருந்தது, ஜெர்மனியில் இருந்தது, இன்னும் ஏராள நாடுகளில் இருந்தது

சீனாவின் மாவோ அந்த பஞ்சத்தில் தோற்றதும், அதனை மறைக்க இந்தியா மீது படையெடுத்ததும் வரலாற்று பக்கங்கள்

ரஷ்யா உக்ரைனை வைத்து பஞ்சம் தவிர்த்துகொண்டிருந்தது. ஐரோப்பா போரின் இடிபாடுகளிலிருந்து எழும்பமுடியாமல் தவித்தன. போர் தொடாத அமெரிக்கா மட்டுமே தெம்பாக இருந்தது

1945 முதல் 1970 வரையான காலங்கள் உலகின் மிக கொடுமையான காலங்கள்.அதற்கு இந்தியா மட்டும் தப்பிவிடுமா?

அந்நேரம் இந்தியாவினை இயற்கையும் வஞ்சித்தது, நம்மிடம் உணவு உற்பத்தி இல்லை, பெரும் அணைகட்டுகளும் இல்லை

இயற்கை விவசாயம் அன்றிருந்த மக்களுக்கு போதுமான விளைச்சலை கொடுக்கவில்லை, பற்றாகுறை இருந்தது. எப்படி சமாளிப்போம் என்ற அச்சம் இருந்தது.

வெள்ளையன் இருந்தவரை பர்மா முதல் எல்லா நாடுகளிலிருமிந்து அரிசி கொட்டினான், அவன் சென்றபின்பு குறிப்பாகா பாகிஸ்தானும், வங்கமும் பிரிந்தபின்பு இந்தியாவில் அரிசி கோதுமை சிக்கல் வந்தது, இது வரலாறு.

அந்த இக்கட்டான நேரம்தான் காமராஜர் முதல்வராகவும், நேரு பிரதமராகவும் இருந்தார். வெட்கத்தை விட்டு சொல்லலாம், கோதுமைக்கு நேரு பிச்சைதான் எடுத்தார், காமராஜரின் தமிழகமும் வறட்சியில்தான் இருந்தது

அந்த பஞ்சத்தில் அம்மனிதன் என்ன செய்துவிட முடியும்? பங்கீட்டுமுறையில்தான் கொடுக்கமுடியும்.

எல்லா மாநிலத்திலும் இந்த கொடுமை இருந்தது, நாம் மட்டுமல்ல.

அப்பொழுதுதான் அரிசி கட்டுப்பாடு முதலானவை இருந்தன, அதில் அனுபவம் பெற்றபின்புதான் அணைகளும், விவசாய புரட்சியும், பசுமை புரட்சியும் தொடங்கபட்டன‌

அவர்கள் போட்ட அந்த அடித்தளத்தில்தான் இன்று பஞ்சம் நீங்கியிருக்கின்றது,

அந்த உலகளாவிய பெரும் மந்த நிலையினை, மொத்த இந்திய பஞ்சத்தை மறைத்து, காமராஜர் அரிசியினை குறைத்தார் என சொல்பவனை எல்லாம்

படகில் ஏற்றி கச்சதீவினை தாண்டி அனுப்பவேண்டும், படுபாதகம் இது

இன்னொரு கும்பல் கக்கனை குறைசொல்ல கிளம்பிற்று, அவர் அமைச்சராக இருக்கும் பொழுது இந்தி எதிர்ப்புபோரில் சுட சொன்னாராம்

இந்தி எதிர்ப்பினை திமுக பெரும் எடுப்பாக எடுத்தது, அது குமாரசாமி முதல்வராக இருந்தபொழுதே கல்லகுடியில் 3 பேரை சுட்டுத்தான் முடிவுக்கு வந்தது

பின் பக்தவச்சலம் ஆட்சியில் அது பெரிதாக வெடித்தது, கட்டுகடங்காத கலவரம், ரயிலை மறித்தல், தண்டவாளங்களை பிடுங்குதல் என இல்லாத அழிச்சாட்டியம் செய்தால், சட்டம் ஒழுங்கு நடவடிக்கை என அரசுகள் களமிறங்கத்தான் செய்யும்

வடக்கே நக்சல்பாரி என்ற கிராமத்தில் நடக்கவில்லையா? குஜராத்தில், மேற்குவங்கத்தி, பஞ்சாப் பொற்கோயில் எல்லாம் நடக்கவில்லையா?

அரசு அதன் கடமையினை செய்தது

கக்கன் என்ன அண்ணாமலை பல்கலைகழக மாணவன் தன்னை டாக்டர் என அழைக்கவில்லை என்பதற்காக போலிசை ஏவினாரா?

இல்லை மகனின் ஆதிக்கத்திற்காக கட்சி தொண்டனை வாக்கிங் செல்லும்பொழுது பலிகொடுத்தாரா?

இல்லை என் வாரிசு யார் என சொல்லி களபேரத்தில் 3 பேரை எரித்தாரா?

என்ன செய்தார் கக்கன்??

அந்த கக்கன் எப்படிபட்ட கக்கன்? தான் நோயுற்றபொழுது அரசு மருத்துவமனையில் ஏழைகளோடு ஏழையாக படுத்திருந்த கக்கன், அந்த அளவு அவருக்கு வறுமை இருந்தது,

காமராஜரின் வறுமை சோ ராமசாமியே சொன்னது,டெல்லி விருந்தினர்களை காமராஜர் பணக்காரன் வீட்டுக்கு அனுப்புகின்றார் என்ற குற்றசாட்டு எழுந்த நேரம் அது

“டெல்லில இருந்து யார் வந்தாலும் வேற பணக்காரன் வீட்டுக்கு தங்க அனுப்புறார்னு சொல்றாங்க, என் வீட்ல சாப்பிட என்ன இருக்கு? மாசம் ஒருக்கா 2 முட்டை, அதான் இங்க விருந்த்துண்ணேன்..

ஆட்டுகறி, ஆத்தா காலத்துல அவகுடுத்த உப்புகண்டத்தோட போயிட்டுண்ணேன்….

என்னைக்காவது என் கூட யாராவது இந்த வீட்டுல சாப்புட்டு பாத்திருக்கியா?, யாரையும் சாப்பிட கூட கூப்பிட கூட முடியாம இருக்கேண்ணேன்..

இவ்வளவு நாள் இந்த வீட்டுக்கு நீ வாரல்ல, என்னைக்காவது உன்ன இட்லி சாப்பிட கூப்டிருக்கேனா, காபி கொடுத்திருக்கேனா? சொல்லு.

இங்க வசதி இவ்வளவுதாண்ணேன்..”

கண்ணீர் விட்டார் சோ ராமசாமி, அவர் வாழ்க்கையில் அழுத ஒரே இடம் இதுதான். சோ என்ன, நமக்கே கண்ணீர் வருகின்றது

மக்கள் கொடுத்த சில்லறைகளை கூட சேர்த்து கட்சிக்காக இடம் வாங்கிகொடுத்துவிட்டு செத்தவன் காமராஜர்

ஏழையாக வாழ்ந்து, பரம ஏழையாகவே செத்தார்.

அப்படிபட்ட தியாகிகள் வாழ்ந்த நாடு இது

எழுதுவதாக இருந்தால், இரண்டாம் உலகபோரினை தொடர்ந்து எழுந்த உலகளாவிய கொடும்பஞ்சமும், இந்தியா போன்ற நாடுகளை அவன் பிரித்து போட்டு செய்த வஞ்சகம் பற்றியும் எழுதுங்கள்

நேரு கோதுமைக்கு பிச்சை எடுத்த கதையும், பர்மா அரிசிக்கு தமிழக காமராஜர் பிச்சை எடுத்த கதையும் எழுதுங்கள்,

வட்ட செயலாளரே கோபுரம் கட்டும் நாட்டில் , அமைச்சன் கக்கன் மருத்துவமனை பாயில் படுத்திருந்ததை எழுதுங்கள்

திமுகவின் அரசியல் வேறு, அதன் அடிப்படை வேறு

அதனை சொல்ல வந்து, காமராஜரின் மீதும், கக்கனின் மீதும் பழிபோடாதீர்கள்

அவர்கள் வறுமைபட்டு நமக்கு சோற்றுக்கு வழிகாட்டினார்கள், படிக்காத அவர்கள் நம்மை எல்லாம் படிக்க வைத்தார்கள். தொழில் இல்லா அவர்கள் நமக்கெல்லாம் தொழிற்சாலை கொடுத்தார்கள்

அவர்கள் கைகாட்டினார்கள் நாம் நடந்தோம், அவர்கள் படிக்கல் ஆனார்கள் நாம் ஏறினோம், அவர்கள் எரிந்தார்கள் நாம் வெளிச்சம் பெற்றோம்.

அந்த தியாக தீபங்களை கொச்சைபடுத்தாதீர்கள்.

கடும் வறுமையில் குடும்பத்தை நடத்துபவன் தான் நல்ல தியாக‌ தலைவன், வருமானம் கொட்டும் நேரத்தில் நடத்துபவன் தியாகி அல்ல‌

காமராஜரும், கக்கனும் முதல் வகை

திமுகவின் சாதனைகள் வேறு, திமுகவின் கொள்கைகள் வேறு

அதற்காக இந்த உத்தமர்களை பழிக்காதீர்கள் , அப்படி செய்தால் அந்த பழி ஒருகாலமும் நம்மை மட்டுமல்ல, நம் தலைமுறையினையும் விட்டு நீங்காது

அவர்களை நினைக்க கூட வேண்டாம், தயவு செய்து பழிக்காதீர்கள்

அப்படி மீறி பழிக்கவேண்டுமென்றால், திமுகவிலோ அதிமுகவிலோ அப்படி ஒருவன் பதவியில் இருந்த போதும், பதவி சென்ற பின்னும் வறுமையில் நாட்டுக்காக வாழ்ந்து, வறுமையில் செத்தான் என நிரூபித்துவிட்டு வாருங்கள்

அப்படி ஒருவனை உங்களால் காட்டமுடியுமா?

ஏழையாக அரசியலுக்கு வந்து, ஏழையாகவே வாழ்ந்து, ஏழையாகவே செத்த ஒரே ஒரு திராவிட கட்சிக்காரனை காட்டிவிட்டு பேசுங்கள்

சரித்திரத்தை , அக்காலநிலையினை படித்துவிட்டு பேசுங்கள், சும்மா சீமான் போல அள்ளிவிடாதீர்கள்

திமுகவிலும் சீமான்கள் இருப்பதுதான் கொடுமை

ஒன்றே ஒன்றிற்கு பதில் சொல்லமுடியுமா?, அப்படி எல்லாம் காமராஜரும், கக்கனும் சுய்நல வாழ்க்கை வாழ்ந்திருந்தால் காமராஜர் நூற்றாண்டு விழாவில் கலைஞர் சொன்னது என்ன? என்பதை நினையுங்கள்

“காமராஜரை எதிர்த்து அரசியல் செய்ததற்காக பெரிதும் மனம் வருந்துகின்றேன்..” என பகிரங்கமாக தன் மனதினை திறந்து சொன்னார் கலைஞர்.

ஏன் வருந்தினார்? காமராஜன் என்ற மனிதன் ஆட்சியில் சந்தித்த சிக்கல் அவருக்கு முதல்வர் ஆனபின் புரிந்திருக்கின்றது. அவர் அருமை அப்பொழுதுதான் அவருக்கு தெரிந்திருக்கின்றது.

அதனை மனதில் வைத்துவிட்டு எழுதுங்கள்

 
 

டி.டி.வி.தினகரன் நேற்று சங்கரமடம் வந்தார் : செய்தி

டி.டி.வி.தினகரன் நேற்று சங்கரமடம் வந்தார் : செய்தி

சங்கரமடம் என்பது டெல்லியின் தமிழக கிளை என்பது யாருக்கு தெரியாது, அங்கு விழுந்தால் சாட்சாத் டெல்லி காலில் விழுந்தது போல அல்லவா?

பன்னீர் உண்ணாவிரதம், தேர்தல் ஆணைய சிக்கல்கள் என பல பெரும் பிரச்சினைகள் இருக்கும்பொழுது இவர் காஞ்சிமடம் சென்றது ஏன் என யோசித்தால்…

சரண்டர் ஆகும் படலம் பகிரங்கமாக நடக்கின்றது.

நடக்கட்டும்

அங்கோ சங்கரராமன் கொலை சர்ச்சை, இங்கோ அப்பல்லோ சர்ச்சை, ஆக இரு சர்ச்சைகுரியவர்கள் சந்தித்து என்ன நல்ல ஆலோசனை நடத்தியிருக்கபோகின்றார்கள்?

சங்கரராமன் கொலை சர்ச்சைக்கு பின் ஜெயா அப்பக்கம் செல்வதில்லை, அம்மாவின் கனவினை அதிமுகவினர் நிறைவேற்றுவது இப்படித்தானா?

மறுபடியும் மீனவர் பிரச்சினை….

கச்சத் தீவை மீட்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இரு நாட்களுக்கு முன்பு 7 தமிழர்கள் விடுதலை செய்யபடவேண்டும் என்றார்

ஸ்டாலினுக்கு என்னமோ ஆகிவிட்டது , ஒருமாதிரி பேசிகொண்டிருக்கின்றார்.

மீணவர்கள் பிரச்சினையில் அன்று கலைஞர் சொன்னது உண்மை, பேராசை பட கூடாது என அவர் சொன்னது, கூலிக்கு மீணவர்களை பயன்படுத்தும் பெரும் மீன்வியாபாரிகளை பற்றியது, அது புரியவேண்டியவர்களுக்கு புரியும்.

உண்மையில் தமிழக மீணவர்களை இலங்கை கடற்படை பெரும் காரணமின்றி சுட்டால் என்றோ இந்திய கடற்படை களமிறங்கியிருக்கும்,

இது ஒருவிதமான பிண்ணணியுடன் நடக்கும் பிரச்சினை, கச்சதீவு மட்டும் அல்ல, அல்லவே அல்ல.

திரிகோணமலையில் இந்திய ஆயில்குடோன் கட்டுபாடு அதுபோக இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு, இந்தியா அமைதிகாக்க பல காரணம் உண்டு.

இதன் பிண்ணணியில் இந்தியா அடிப்பதும், சில நேரம் இலங்கை சீண்டுவதும் சர்வதேச விவகாரங்கள். வீதிக்கு வராதவை

இந்தியா அமைதிகாப்பதாக காணப்படும் தோற்றத்தில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு

மோடி அரசும் சும்மா அல்ல, குளச்சல் பக்கம் பெரும் துறைமுகம் கட்டுகின்றது, சேது சமுத்திர பக்கமும் அடிக்கடி சோதனைகளை நடத்துகின்றது

அதாவது இணையத்தில் பெரும் துறைமுகம் கட்டி, சேதுசமுத்திரத்தை தோண்டிவிட்டால் போதும், இலங்கையின் கொழும்பு தானாக சிறப்பிழக்கும்

பெரும் கப்பல்கள் இணயம் வந்து சேதுசமுத்திரம் வழியாக கொழும்பினை தவிர்த்து செல்லமுடியும், இலங்கையினை இதனை விட வலுவாக அடிக்கவே முடியாது, இது அதன் முதுகெலும்பினை ஒடிக்கும் முயற்சி

இப்படி ஆயிரம் யோசனைகளில் இந்தியா இருக்கும்பொழுது, அது மீணவர் பிரச்சினையினையும் எதிர்கொள்கின்றது.

உண்மையில் மீன் வளம் அவர்கள் எல்லைக்குள் அதிகம் உண்டு, தமிழக மீணவர் பக்கமும் சில‌ தவறுகள் உண்டு, கச்சதீவினை மீட்டுவிட்டாலும் இப்பிரச்சினை முடியாது, தீரவே தீராது

மோடி நேற்று அறிவித்திருக்கும் திட்டம் உண்மையில் வாழ்த்துகுரியது

மீணவர்களுக்கு நவீன படகுகள் வாங்க 1 கோடிவரை கடனுதவி அளிக்கபடும் என்கின்றார், இது அந்த குறுகிய பகுதியினை தவிர நம் மீணவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வழிவகுக்கும்

மோடி இவ்வளவுதான் செய்யமுடியும், அவரே வந்து மீன் எல்லாம் பிடித்துகொடுக்கமுடியாது

மத்திய அரசு இப்படி நல்ல திட்டங்களை அறிவிக்கும்பொழுது ஸ்டாலின் இப்படி புலம்புவது சரி ஆகாது

7 பேரும் விடுதலை செய்யபடவேண்டும் என நேற்று சொன்னார், ஈழபிரச்சினையில் திமுகதான் காரணம் எனும் வெற்றுவாதத்தை தமிழகம் என்றோ புறந்தள்ளிற்று

ஒருகாலும் ஈழசிக்கல், ராஜிவ் கொலை கைதி விவகாரம் எல்லாம் திமுகவிற்கு கொஞ்சமும் பின்னடைவல்ல‌

ஆக இவர் 7 பேர் விடுதலை என்பது திமுகவின் வாக்குவங்கியினை குறைக்குமே ஒழிய கூட்டாது

அல்லக்கை கட்சிகள், 1 % வாக்குவங்கி கூட இல்லா அனாமுத்து கட்சிகள் கச்சதீவு, மிச்சதீவு, 7 பேர் என புலம்பும்

ஆனால் மிக பிரதான கட்சியான திமுக அப்படி சொல்வது சரியல்ல, அது மிக மிக யோசித்தே சொல்லவேண்டும்

கலைஞர் ஒரு வார்த்தை சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும், காரணமின்றி அவர் ஒரு வார்த்தை கூட சொல்லமாட்டார்.

பயனில சொல்லாமை எனும் குறள்படி கட்சி நடத்தியவர் அவர்

ஸ்டாலின் இந்த 7 பேர் விடுதலை, மத்திய அரசு ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவிக்கும் நேரத்தில் கச்சதீவு மீட்பு என்பதெல்லாம் நல்ல அரசியல் அல்ல‌

அது திமுகவிற்கு நல்லதே அல்ல…

குஷ்பூவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள்

Image may contain: 6 people, people smiling, people standing

உலகெங்கிருந்தும் குஷ்பூவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன, உலகின் எல்லா தெய்வங்களிடமும், எல்லா மொழிகளிலும் அவருக்க்காக சிறப்பு பிரார்த்தனை நடக்கின்றது

அந்த கலைமகள் வந்த பின் தமிழக திரையுலகம் அழகானது, அவரால் தமிழகமே அழகானது, அவர் மணவாழ்க்கைக்குள் புகுந்தபின் சுந்தரின் வாழ்க்கையும் சிறப்பானது

இதுபோன்ற ஜோடி தமிழ்திரையுலகில் இல்லவே இல்லை. எந்நாளும் விளக்காக‌, எத்திசையிலும் கிழக்காக அவர்கள் வாழட்டும்

எல்லா உலக தெய்வங்களும், தேவதைகளும் இவர்களை வாழ்த்தட்டும்

கண்ணான மளவாளனுடன் , பொன்னான மகராசி பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வளமாக, நலமாக, எல்லா உயர்வும், செள்பாக்கியங்களும் பெற்று வாழ உலகில் இருக்கும் எல்லா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகின்றோம

“தங்கமே நீ வாழ்க, மங்களமே நீ வாழ்க‌

கட்டழகும் குங்குமம் வாழ்க‌ “