காமராசர் பற்றி ஒரு சில திராவிட குஞ்சுகள் ….

டேய் நீ காமராஜரை பற்றி நல்ல அபிமானம் கொண்டிருக்கின்றாய், பின் ஏன் கலைஞரை கொண்டாடுகின்றாய், பெரும் குழப்பமாக இருக்கின்றது என சிலர் கேட்டுகொண்டே இருக்கின்றார்கள்

காமராஜர் போன்றவர்கள் ஒரு அவதாரம், அவர்களை போன்றவர்கள் அரசியலில் நிலைக்க முடியாது, தமிழக யதார்த்தம் அப்படி.

கலைஞர் போன்றவர்கள் மகா அறிவாளிகள், ரசனைகுரியவர்கள், அவர்களை மனதார ரசிக்கலாம், கொண்டாடி தீர்க்கலாம்.

தனக்குரிய எதிரி தன் கட்சியிலே உருவாகாமல் இருந்திருந்தால் இந்தியாவில் கிட்டதட்ட 50 வருடம் முதல்வராக இருந்து ஜோதிபாசு சாதனை எல்லாம் முறியடித்திருப்பார். ஆனால் விதி அது அல்ல..

அவர் தந்திரமும், சாகசமும் அப்படியானவை. பாரத கண்ணணின் தந்திரங்கள‌ நீங்கள் ரசித்திருந்தால் கண்டிப்பாக கலைஞரையும் ரசித்தே தீருவீர்கள்…

அவ்வளவு சுவாரஸ்யமான மனிதர் கலைஞர், அவர் அரசியலை விடுங்கள். அதனை மீறி ரசிக்க எவ்வளவோ உண்டு.

காமராஜரை வணங்கலாம், கலைஞரை மனதார ரசிக்கலாம்

நான் இதனைத்தான் செய்து கொண்டிருக்கின்றேன்…


காமராஜர் முள்மரங்களை கொண்டுவந்தார், சிவகாசி வெடிதொழிற்சாலை, பிரிண்டிங் பிரஸினை எல்லாம் தன் சொந்த சாதி மக்களுக்கு கொண்டுவந்தார், தமிழர் எல்லையினை மலையாளிக்கு கொடுத்தார்….

இப்படி ஒரு சில திராவிட குஞ்சுகள் கத்திகொண்டிருக்கின்றன‌

விருதுநகர் அக்காலத்திலே வியாபாரத்திற்கு பெயர்பெற்ற பகுதி, அதாவது காமராஜர் காலத்திற்கு முன்பே அது அப்படி இருந்தது

அய்ய நாடார் என்பவர் வியாரவிஷயமாக சீனா, ஜப்பான் சென்று அந்த நுட்பத்தை கற்றுவந்து தொழில் தொடங்கினார் அது வளர்ந்தது, பிரிண்டிங் நுட்பமும் அப்படியே

வறண்ட பகுதியில் அதுதான் மக்களுக்கு வாழ்வளித்தது

எந்த பெரும் அறிவாளியும் சில இடங்களில் சறுக்குவான், வறண்ட நிலங்களில் இந்த கருவேலமரங்களை இட்டால் அது ஓரளவேனும் காடுகளாகும், வெட்டியாய் இருக்காது. விறகுக்காவது ஆகும் என்றுதான் அவர் இத்திட்டத்திற்கு சம்மதித்தார்

இதன் விளைவு தெரிந்திருந்தால் என்றோ தடுத்திருப்பார்

நாடார்களுக்கான தொழிற்சாலைகளை நாடார்களே அமைத்தனர், காமராஜர் ஒன்றும் செய்தவர் அல்ல‌

அப்படியானால் தினதந்தி ஆதித்தனாரை காமராஜரா வளர்த்துவிட்டார்? விஜிபி குழும, எம்ஜிஎம் குழுமம் எல்லாம் அவராலா வளர்ந்தது?

சென்னை ஆவடி தொழிற்சாலை, ஊட்டி பிலிம் தொழிற்சாலை, திருச்சி பெல் தொழிற்சாலை எல்லாம் நாடார்களுக்காகவா கொண்டுவந்தார்??

காமராஜர் இருக்கும் வரை முல்லைபெரியாறு பிரச்சினை இல்லை, அவர் இருக்கும் வரை காவேரி சிக்கல் இல்லை, காரணம் டெல்லி வரை அவர் செல்வாக்கு அபபடி இருந்தது

10 வருடம் திமுக டெல்லியில் அமைச்சரவையில் இருந்ததே, இந்த பிரச்சினைக்கு என்ன கிழித்தீர்கள்? காவேரிக்கு என்ன செய்தீர்கள்?

மாறாக காவேரி மணலை விற்க திட்டம் தீட்டினீர்கள்….

தேவிகுளம் பீர்மேடு வேண்டுமா? கன்னியாகுமரி மாவட்டம் வேண்டுமா? என கேட்டபொழுது அவரது தேர்வு கன்னியாகுமரியாக இருந்தது

அதாவது முப்போகம் விளையும் பகுதி, மிளகு விளையும் பகுதி, குளச்சல் உட்பட கடல்வளம் நிரம்பிய பகுதி என அதுதான் அறிவாளிகளின் தேர்வாக இருக்கமுடியும்?

ஒன்றை விட்டுகொடுக்காமல் அரசியலில் இன்னொன்றை பெறமுடியாது

அவராவது பீர்மேட்டை விட்டுகொடுத்தார், நீங்களோ காவேரியினையே கன்னடனிடம் கொடுத்துவிட்டீர்கள், முல்லை பெரியாறு எம்ஜிஆர் ஆட்சியில் நீர்மட்டம் குறைக்கபட்டது

ஆக துரோகம் செய்தது யார்? காமராஜரா , திராவிட ஆட்சியா?

இன்று காமராஜர் பீர்மேட்டினை விட்டுவிட்டார் என சொல்லும் திமுக, அன்று இவற்றை மீட்க என்ன கிழித்தது?

சென்னை மீட்பு, குமரி மீட்பு , திருத்தணி மீட்பு போன்ற போராட்டங்களில் திமுக என்ன கிழித்தது?

திருப்பதி தமிழனுக்கு, திருவனந்தபுரமும் தமிழனுக்கு. திரு என்ற வார்த்தை தமிழுடையது என ம.பொ.சி போராடியபொழுது, திமுக திரும்பி பார்த்ததா?

அந்நேரம் பெரிதாக கிளம்பியிருந்தால் அவற்றை மீட்டிருக்கமுடியாதா? மாறாக மபொசி ஒரு பைத்தியக்காரன். திருவனந்தபுரம், திருப்பதி எல்லாம் திராவிடத்தில் இருக்கின்றன என சொன்னது யார்?

எல்லை மீட்புக்கு திமுகவில் எவன் குரல் கொடுத்தான்? ஒருவன், ஒரே ஒருவனை காட்டுங்கள்?

மபொசியும் அவரை தொடர்ந்த காமராஜராலும் சென்னை மீண்டது, நேசமணியின் போராட்டத்தில் குமரி கிடைத்தது

நெல்லை என் எல்லை, குமரி தொல்லை என எந்நாளும் சொன்னவர் கலைஞர், இதுதான் அவர் குமரி மீட்ட வரலாறு.

சொல்லுங்கள், திமுக அப்படி போராடியது என்ன? சொல்லிவிட்டு பேசுங்கள்.

ஒன்றை நினைவில் நிறுத்துங்கள்

திமுக பதர்களே, எம்ஜிஆர் வென்ற கதை உங்களுக்கு புரியாவிட்டாலும் பரவாயில்லை, மறுபடியும் கிளறாதீர்கள்

காமராஜரை வீழ்த்திய கலைஞர் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்துகொண்டே இருந்தது, எம்ஜிஆர் வெளிவந்து கத்தியதும் அந்த வெறுப்பு எம்ஜிஆர் வோட்டாக மாறியது

கலைஞர் ஊழல்வாதி என எம்ஜிஆர் சொன்னதும், “ஆமாம் ராசா அவன் காமராஜைரயே பொய் சொல்லி திட்டியவன்..” என்று தமிழகம் அவரை அணைத்துகொண்டது

இன்றுவரை அதிமுக நிலைத்து நிற்கும் மர்மம் அந்த காமராஜரை எதிர்த்த கலைஞரை எம்ஜிஆர் எதிர்த்தார் என்பதுதான்

இன்றுவரை கலைஞர் தீரா பழி சுமப்பதும், எம்ஜிஆர் மிஸ்டர் கிளீன் இமேஜோடு இன்றும் இருப்பதும் இப்படித்தான்.

காமராஜர் மீது இம்மாநிலம் கொண்டிருக்கும் அபிமானம் அப்படியானது.

ஆக நீங்களும் அந்த காமராஜரை சாடி திமுகவினை படுகுழியில் தள்ள முயற்சிக்கின்றீர்கள்

கலைஞர் மிக சமார்த்தியமாக சொல்ல தவிர்த்ததை எல்லாம், நீங்கள் கொஞ்சமும் நிதானமும், அறிவும் இன்றி பேசுகின்றீர்கள்

திமுகவிற்கான குழியினை நீங்களே வெட்டுகின்றீர்கள்

கலைஞர் 1972க்கு பின் எங்காவது காமராஜரை விமர்சித்து பார்த்தீர்களா? கிடையாது

தவிர்க்கவேண்டிய விஷயங்களை தவிர்த்தார், மறைக்க வேண்டிய விஷயங்களை மறைத்தார்

அவர் அப்படிபட்ட அறிவாளி

ஆனால் அவரில்லா திமுகவில் என்னவெல்லாமோ பேச தொடங்கிவிட்டார்கள், ஸ்டாலினும் கண்டுகொள்வதாக தெரியவில்லை

நீங்கள் காமராஜரை மட்டமாக பேச பேச திமுக தன் மதிப்பினை இழந்துகொண்டு வருகிறது என்பது உண்மை

கலைஞர் மிகுந்த சிரமபட்டு மறைத்த விஷயங்களை, மறைத்த தவறுகளை நீங்கள் செய்ய கிளம்பிவிட்டீர்கள்

இது நிச்சயம் திமுகவினை பலவீனபடுத்தும், இது தொடருமானால் “திராவிடம் 50..” என சொல்லிவிட்டு 50 வோட்டுக்கள்தான் வாங்குவீர்கள்.

ஸ்டாலின் விழிக்க வேண்டிய நேரமிது, அவரோ ஆழ்ந்த தூக்கத்தில் நல்ல கனவில் இருக்கின்றார்.

காமராஜரை கேள்வி கேட்டு வளர்ந்தவர் கலைஞர், கலைஞருக்கு பதில் சொல்லியே அவரை மறைமுகமாக வளரவிட்டவர் காமராஜர்

இந்த நுட்பம் கலைஞருக்கு தெரியும், கடைசி வரை சீமானுக்கு அவர் பதில் சொல்லாத மர்மம் இதுதான்

அப்படி காமராஜரை எதிர்த்து கலைஞர் வளர்ந்தது போல, இன்றும் காமராஜரை எதிர்த்து தானும் முதல்வராகிவிடலாம் என ஸ்டாலின் கனவு காண்கின்றாரோ என்னமோ?

இவர்களை அவர் பேச அனுமதித்திருப்பதை பார்த்தால், அப்படிபட்ட விபரீத யோசனை அவருக்கு இருக்கலாம் போல தெரிகின்றது

மிஸ்டர் ஸ்டாலின் , உங்கள் எதிரி சசிகலாவா? அல்லது காமராஜரா?

இந்த திராவிட சிகாமணிகளுக்கு சொல்லிவிடுங்கள், இல்லாவிட்டால் உங்கள் அரசியலுக்கு இவர்கள் சமாதி கட்டபோவது உறுதி….


ஏலேய்.. கச்சதீவினை கொடுக்கும் பொழுது காமரஜர் சும்மா இருந்தார் என சொல்லும் திமுக பாய்ஸ்

சென்னை மீட்பு, குமரிமீட்பு, திருத்தணி மீட்பு போன்ற தமிழக எல்லைகளை மீட்ட போராட்டத்தில் திமுக என்ன கிழித்தது என சொல்வீர்களா?

தமிழக எல்லை மீட்புக்கு திமுக செய்தது என்ன?

பெரியாரோ, அண்ணாவோ, கருணாநிதியோ, குல்லா மண்டையனோ எல்லை மீட்புக்கு என்ன செய்தார்கள்?

உருப்படியாக அன்று ஒரு அறிக்கையாவது விட்டிருப்பார்களா? ஒன்றுமே இல்லை.

அதனை கேட்டால் சொல்ல தெரியாதவன் எல்லாம் வரலாறு பேசிகொண்டிருக்கின்றான்..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s