சினிமா தொழில் நஷ்டத்தில் இருக்கிறது : நாசர்

“அந்த” பரதநாட்டியத்திற்கு, நாடோடி மன்னனில் எம்ஜிஆர் ஆடிய நடனமும், வரலாறு படத்தில் அஜித் ஆடிய நடனமும், ஏன் பவர் ஸ்டார் ஆடிய நடனமும் எவ்வளவோ பரவாயிலை.

அது ஒரு நடனமா? என எல்லோரும் சொல்லிகொண்டிருக்க, வெங்கையநாயுடு மட்டும் பாராட்டுகின்றாராம்

அன்னார்தான் அன்று அப்பல்லோ முதல் அடக்கம் வரை கூடவே இருந்துவிட்டு இன்னும் அப்பலோ மர்மம் பற்றி பேசாமல் நழுவிகொண்டிருப்பவர்

அவர் பாராட்டியபின் நடனத்தை பற்றி என்ன சொல்வது

அடுத்து ஐ.நா சபையில் என்னை ஆடவிடுங்கள் என கேட்கும் முழு தகுதி பவர் ஸ்டாருக்கு இருக்கின்றது

சே..இந்நேரம் பார்த்து அல்லவா சிறையில் சிக்கிகொண்டார்?

அதனால் என்ன, வந்ததும் அனுப்பிவிடலாம்..

நிச்சயம் “சூப்பர் ஸ்டார்” மகளை விட மிக சிறந்த நடனத்தை “பவர்ஸ்டார்” கொடுப்பார்….


சினிமா தொழில் நஷ்டத்தில் இருக்கிறது – நாசர்

ஆனால் முண்ணணி நடிகர், நடிகைகள் வறுமையில் வாடியதாகவோ, சம்பளம் குறைந்ததாகவோ தகவல் இல்லை, அப்படி ஒரு தகவல் வரவும் வராது..

தொழில் நஷ்டமாம், ஆனால் முண்ணணி தொழிலாளர்கள் எல்லாம் மில்லியன் கணக்கில் சம்பாதித்துகொண்டே இருப்பார்களாம்..


 

5 மாநில தேர்தல் முடிவுகள் : தேசியம் வெல்கிறது ….

கருத்துகணிப்புகள் கணித்தபடியே உபியினை வாரி சுருட்டி இருக்கின்றது பாஜக, முலாயம் சிங்கினை மீறி கிளம்பிய அகிலேஷ் மண்ணை கவ்வியிருக்கின்றார், முலாயம்சிங்கினை அவர் எதிர்த்ததை அம்மக்கள் ரசிக்கவில்லை

அகிலேஷுடன் கூட்டணி வைத்த பாவத்திற்கு காங்கிரசுக்கும் செமத்தியாக கிடைத்திருக்கின்றது, இந்தியாவின் மிக பெரிய மாநிலத்தில் பாஜகவிற்கு கிடைத்திருக்கும் வெற்றி, நிச்சயம் மோடி மீது அம்மக்களுக்கொரு ஆதரவு இருப்பதை காட்டுகின்றது

உத்திரகாண்டிலும் பாஜக வெற்றிபெற்று தன் அசுரபலத்தினை மேலும் கூட்டியிருக்கின்றது

மணிப்பூரிலும், கோவாவிலும், பஞ்சாபிலும் காங்கிரஸ் தன் பிடியினை விட்டுவிடாமல் ஆட்சியினை பிடித்துகொண்டது.

கெஜ்ரிவாலுக்கும் ஆதரவு பெருகியுள்ளதும் கவனிக்கதக்கது, நல்ல கருத்துக்களை, கொள்கைகளை கொண்ட‌ ஒரு தேசியகட்சி வளர்கின்றது என்பதில் மகிழ்சி கொள்ளலாம்..

மணிப்பூரில் இரோம் ஷர்மிளா தோற்றது இந்தியா முழுக்க பெரும் அதிர்ச்சி போல காட்டபடுகின்றது, அதாவது அவர் போராடியது உண்மை, உயிரை கொடுத்து போராடியது உண்மை, பத்திரிகைகள் எல்லாம் அவரை பெரும் பிம்பமாக காட்டியதும் உண்மை

ஆனால் அதனை மீறி அங்கு ஏதோ இருக்கின்றது, மணிப்பூர் வாசிகளுக்கு அவர் அன்புக்குரியவர், ஆனால் வோட்டளிப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை

கூடன்குளம் உதயகுமார் எப்படி தோற்றாரோ, அப்படியே மணிப்பூரில் ஷர்மிளா தோற்கடிக்கபட்டிருக்கின்றார்

அவர் நல்லவர் என ஒப்புகொண்ட மக்களுக்கு, அவருக்கு வாக்களிப்பதில் தயக்கம் இருந்திருக்கின்றது. அவருக்கு என்ன? ஆனானபட்ட அப்துல்கலாம் கட்சி தொடங்கியிருந்தாலே 40 வோட்டுகள்தான் தமிழகத்தில் வாங்கியிருப்பார்

நல்லவர் என்ற அடையாளம் வேறு, வாக்கு வாங்கும் வித்தை வேறு. முழு நல்லவர்களுக்கு அந்த வித்தை வராது, ஷர்மிளாவிற்கும் வரவில்லை

ராணுவகட்டுப்பாடு வேண்டாம் என முழுமக்களும் பொங்கியிருந்தால் இந்நேரம் ஷர்மிளா முதல்வராயிருக்க வேண்டும், ஆனால் உண்மை நிலவரம் குழப்பமாகவே இருக்கின்றது

நிச்சயம் ஷர்மிளா பிரிவினைவாதி இல்லை, அஹிம்சையாக ராணுவகட்டுப்பாட்டினை எதிர்த்து போராடினார், ஆனால் மக்களோ இன்று ராணுவம் அவசியம் என்பது போல நிற்கின்றனர்.

மொத்ததில் நாம் எதிர்பார்த்த அளவு அவருக்கு அங்கு பெரும் ஆதரவில்லை, எல்லாம் ஊடகமாயம் என்பது போல நிலை ஆகிவிட்டது.

இனி அவர் அரசியலிருந்து விலகுகின்றாராம், விலகட்டும். இனியாவது மணிப்பூரின் அனைத்து வகை உணவுகளையும் அவர் ருசிக்கட்டும்

காந்தி கொல்லபட்ட பூமி இது,காமராஜர் தோற்ற பூமி இது, ஷர்மிளா எல்லாம் எம்மாத்திரம்?

ஆம், எங்கள் அண்ணன் சைமனை இந்த தமிழகம் புரிந்து கொள்ளாதது போல, ஷர்மிளாவினை அந்த மணிப்பூர் புரிந்துகொள்ளவில்லை என அங்கிளின் அடிப்பொடிகள் ஆறுதல் கண்ணீர் விடலாம், என்ன சொல்லி திட்டுவது என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்

ஆனால் சில விஷயங்கலில் இந்த தேர்தல் சில மகிழ்வுகளை கொடுக்கின்றது

5 மாநிலத்திலும் தேசிய கட்சிகளே வென்றிருக்கின்றன, இந்நாட்டில் மக்கள் மாநில கட்சிகளை, பிரிவினை கட்சிகளை புறந்தள்ளி தேச அளவில் சிந்திக்கின்றார்கள் என்பது பெரும் மகிழ்ச்சியினை கொடுக்கின்றது

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியினை பிடித்திருப்பது , இந்நாட்டு தேசியத்தில் பஞ்சாப் சகோதர்கள் கொண்டிருக்கும் நம்பிகையினை காட்டுகின்றது

மாநில கட்சிகளின் ஆட்சி போதும், அவர்களின் சிலைவைப்பும் குடும்ப சண்டையும் போதும், தேசிய கட்சிகளுக்கே ஆதரவு என சொல்லிவிட்ட உபி மக்களுக்கும் சல்யூட்

முன்பொருநாள் பஞ்சாப் பிரிவினைவாதியினை கூட்டி சென்னையில் கூட்டமிட்டு, பஞ்சாபில் காங்கிரசினக் கருவருத்துவிட்டதாக சொல்லிகொண்டிருந்த சீமானை இப்பொழுது காணவில்லை

5 மாநிலங்களையும் தேசிய கட்சிகளை மக்கள் வரவேற்றிருப்பதில் இந்தியனாக பெருமகிழ்ச்சி

இந்த தேசத்திற்கு இது முழு நம்பிக்கை அளிக்கும் செய்தி.

அந்த நம்பிக்கையுடன், நக்ஸலைட்டுகள் தாக்குதலில் பலியான அந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்..

எத்தனையோ சவால்களை தாண்டிவந்த இந்த தேசம், இந்த மாவோயிஸ்ட் சவால்களை தாண்டி வரட்டும், நிச்சயம் வரும்


பாஜகவை ஒரு போதும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: திருநாவுக்கரசர்

கொஞ்சநாளைக்கு முன்பு வரை இவர் பாஜக உறுப்பினர் என்பது குறிப்பிடதக்கது.

அப்படியானால் இவர் என்ன சொல்லவருகின்றார்? இவர் தமிழர் இல்லை என சொல்ல வருகின்றார்

தமிழரல்லாத ஒருவரையா தமிழக காங்கிரசின் தலைவராக நியமித்திருக்கின்றார்கள்? என்ன அநியாயம் இது?


 16 வருடம் போராடியும் ஷர்மிளா வாங்கிய வோட்டுக்கு வருந்துகின்றேன் : தீபா

ஷர்மிளாவிற்கு அத்தை இருந்தாரா? அல்லது மாமன் இருந்தானா? ஒரே மாதத்தில் கட்சி தொடங்கும் அளவிற்கு செல்ல?

அவராவது 16 வருடம் மக்களுக்காக போராடியிருக்கின்றார், தோற்றாலும் இன்று அது பெரும் கவுரவமான தோல்வி

ஒரு 16 செக்கண்ட் தமிழத்திற்காக போராடியிருக்கின்றீர்களா தீபா?

நீங்களெல்லாம் அந்த ஷர்மிளாவினை பார்த்து வருந்த அல்ல, பார்க்கவே தகுதியற்றவர்கள்..


 
 

சிறையில் மயங்கி விழுந்தார் இளவரசி : செய்தி

சசிகலா உறவுகளில் தினகரனை தவிர யாரும் சசிகலாவினை சந்திக்கவில்லை, தினகரனுக்கு மட்டும் பொறுப்பு கொடுத்ததால் குடும்ப பிரச்சினை வெடித்தது, உச்சகட்ட மோதலில் குடும்பம், சிறையில் மயங்கி விழுந்தார் இளவரசி : செய்தி

இது ஒரளவு யூகிக்க கூடிய விஷயம், சிறைக்கு தினகரனை தவிர யாரும் சென்றதாக தெரியவில்லை

குறிப்பாக திவாகரன், மகாதேவன் போன்ற பூதங்களையும் இன்னும் பல பாலதுவாகரர்களையும் காணவே இல்லை

இதுதான் குடும்ப அரசியலின் சோகம், எல்லோரையும் உள்ளேவிட்டால் சிக்கல் இப்படித்தான் வெடிக்கும், எல்லோருக்கும் பதவி கொடுத்தால் கட்சி தாங்காது

ஜெயா இருக்கும் வரை, மறைமுகமாக ஆட்சி செய்யும் வரை ஒற்றுமையாக இருந்த குடும்பம், அதிகாரம் கிடைத்தவுடன் எப்படி மோதிகொள்கின்றது பார்த்தீர்களா?

கட்டுபடுத்தும் வித்தை தெரியாமல் தவித்துகொண்டிருக்கின்றார் சசிகலா

கலைஞர் எப்படி சமாளித்தார், ஸ்டாலினை மட்டும் முன்னிறுத்திவிட்டு எப்படி மற்றவர்களை ஓரம்கட்டினார் என தினகரனுக்கோ கடும் கோபம்

அந்த பொறாமையில்தான், நிம்மதியாக கட்சியில் இருக்கும் ஸ்டாலினை பார்த்து திட்டி தீர்த்துகொண்டிருக்கின்றாரோ?

இதுதான் மறைமுக அரசியலுக்கும், நேரடி அரசியலுக்கும் உள்ள வித்தியாசம்

சசிகலா கும்பல் மறைமுக அரசியலில் கை தேர்ந்தது, ஆனால் நேரடி அரசியல் அவர்களுக்கு வராது, சுட்டு போட்டாலும் வராது

கலைஞர் எல்லா வகை அரசியலிலும் கை தேர்ந்தவர், அதனால்தான் அவரால் அசால்ட்டாக தாண்டி வர முடிந்தது

ரகசியமாக சங்கரமடம் செல்லும் தினகரன், அதற்கு பதில் அப்படியே ரகசியமாக கோபாலபுரம் சென்று குடும்ப அரசியலை கட்டுபடுத்துவது எப்படி என ஆலோசனை பெற்று வரலாம்

கலைஞரை தவிர இன்றைய நிலையில் அந்த சிக்கலுக்கு அவர்களுக்கு ஆலோசனை வழங்க யாராலும் முடியாது…..

மாநில தேர்தல் முடிவுகள் ….

நமக்கே இவ்வளவு பரபரப்பு இருக்கின்றதே? மோடிக்கும் அகிலேஷுக்கும் ராகுலுக்கும் மாயாவதிக்கும் எவ்வளவு பரபரப்பு இருக்கும்

கருத்துகணிப்புகள் பாஜக பக்கமே கைகாட்டுகின்றன, பொதுவாக எல்லா கட்சிகளும் தங்களுக்கு சாதகமான கணிப்பு என்றால் நம்பும், இல்லாவிட்டால் நம்பாது

பாஜக அணிக்கு வெற்றிவாய்ப்பு இருப்பது போல பிம்பம் உருவாகிவிட்ட நிலையில் இன்று முடிவு தெரிந்துவிடும்

ஒருவேளை கருத்துகணிப்புகள் உண்மையாகிவிட்டால், பாஜக அசைக்கமுடியாத இடத்துக்கு சென்றுவிடும்

கிட்டதட்ட மோடியின் ஆட்சிக்கு மக்கள் ரெஸ்பான்ஸ் என்ன என்பதை குறிக்கும் முடிவாகவே இந்த முடிவு எதிர்பார்க்கபடுகின்றது

இந்தியா மட்டுமல்ல, உலகெங்கிலும்