ஜெயா மர்ம மரணம் என்பதை சுற்றி சுற்றி வந்தது….

நெடுநாளைக்கு பின் ஒரு நண்பரை மலேசிய தமிழ்நண்பரை சந்திக்கமுடிந்தது, அவர் பேச்சு முழுக்க ஜெயா மர்ம மரணம் என்பதை சுற்றி சுற்றி வந்தது

வடகொரிய பிரச்சினை என எதனை பற்றி பேசினாலும், மனிதர் அப்பல்லோ பற்றியே பேசிகொண்டிருந்தார், ஒரு கட்டத்தில் பேச்சு இப்படி மாறியது

“அதில் நிறைய மர்மம் இருப்பதாக சொல்கின்றார்களே..”

“தெரியாது, ஆனால் அவர் உடல் எடை ஏறியிருந்தது, மிகுந்த உடல் உபாதைகள் அவருக்கு இருந்ததை மறுக்கமுடியாது..”

“முன்பு அவர் சிகிச்சை எடுத்த ஒரு செய்தியும் வரவில்லையே…”

“அவர் அப்படித்தான், ஒரு செய்தியும் அவரைபற்றி முழுமையாக வராது, வந்ததுமில்லை..”

“அப்படியானால் அதில் மர்மம் இல்லையா? ஒரு விடியோ, ஒரு படம், நமபகமான ஒரு ஆதாரம் கூட இல்லையே..”

:அமாம், இல்லை ஆனால் ஜெயா அதனை விரும்ப்பாதவராக இருக்கவும் வாய்ப்பு உண்டு..”

“என்னய்யா நீர், மருந்தினை எல்லாம் அவரை கேட்டா ஏற்றினார்கள்? அப்படி படம் எடுத்தால் என்ன?..”

“எடுத்திருக்கலாம், ஏன் எடுக்கவில்லை என தெரியவில்லை..”

“மறைக்கபடும் விஷயம் உண்டு என்கின்றார்களே, பலவிதமான மர்மம் இருக்கின்றது என உலகெல்லாம் செய்திகள் வருகின்றதே, அது கொலை இல்லையா?..”

அதற்கு மேல் பொறுக்கமுடியவில்லை, பொங்கிவிட்டேன்

“என்ன நினைத்துகொண்டிருக்கின்றீர்கள் எங்களை பற்றி?,

மகாத்மா காந்தியினை கொன்றது யார்? இந்திராவினை கொன்றது யார்?

ராஜிவினை கொல்ல மறைமுக உதவிகள் செய்தது யார்?

இன்னும் பல அரசியல் கொலைகளை செய்தது யார்?

சாட்சாத் நாங்கள்தான்.

பெரியார் மீது எத்தனையோ முறை கல் வீசி கொலை முயற்சி நடத்தபட்டிருக்கின்றது, காமராஜர் டெல்லியில் வீட்டுக்கு தீவைக்கபட்ட கொலைமுயற்சியில் இருந்து தப்பினார்..

எம்ஜிஆர் கூட சுடபட்டிருக்கின்றார், கலைஞருக்கு பலமுறை விபத்து நடந்திருக்கின்றது,

ஆக கொலையோ, கொலை முயற்சியோ அங்கு புதிதே அல்ல,

ஏற்கனவே ஏகபட்ட அரசியல் கொலைகளை செய்தவர்கள் நாங்கள்..புரிகின்றதா?”

அதன் பின் மனிதர் பேசவே இல்லை

மர்மங்களும், கொலைகளும் ஏதோ இந்த நாட்டிற்கு புதிது போல பேசிகொண்டிருந்தால் வேறு என்னதான் சொல்வது???


பல நண்பர்கள் பேசுகின்றார்கள், உங்களால் நாங்களும் குஷ்பூ ரசிகர்கள் ஆகிவிட்டோம் என்கின்றார்கள்

இப்பொழுதெல்லாம் நிறைய குஷ்பூ படங்களை பார்க்கின்றோம், குஷ்பூவினை நினைவு படுத்தியற்கு நன்றி என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்..

இனி அவரின் பேச்சுக்களை எல்லாம் கவனித்து உற்சாகபடுத்துவோம், ஆதரவளிப்போம் என்றெல்லாம் உறுதியளிக்கின்றார்கள்

ஒரு குஷ்பூ ரசிகனுக்கு இதனை விட என்ன பெரும் மகிழ்ச்சி இருக்க முடியும்?

ஆனந்த கண்ணீர் என்பதின் அர்த்ததை அறிந்து கொண்டிருக்கின்றேன்…


 

 
 

ஜப்பான் புக்குஷிமா அணுவுலை சுனாமி : 6 வருடங்களை கடந்து…..

 

அந்த ஜப்பான் துயரம் நடந்து இன்றோடு 6 வருடம் ஆயிற்று

புக்குஷிமா எனும் அணுவுலை சுனாமியால் பாதிக்கபட்டு, அது தொடங்கி ஜப்பான் நடத்தும் பெரும் போராட்டம் இன்றோடு 6 ஆண்டுகளை கடக்கின்றது

இதில் எந்த அளவு முன்னேற்றம் ஜப்பானிய அணுகழிவு நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கின்றது என்றால், ஜப்பானிய அரசும், அணு நிபுணர்களும் தலைகுனிந்து நிற்கின்றார்கள்

அதனால் இன்னும் பெரும் ஆபத்து நீடித்துகொண்டே இருக்கின்றது, முழுவது களைய 10 லட்சம் கோடி செலவாகலாம் என கணிக்கபட்டுள்ளது

பணம் கூட சிக்கலில்லை, ஆனால் தொழில்நுட்பம்? அதுதான் பெரும் சிக்கல், இன்னும் அந்த அணுவுலையினை நெருங்க முடியவில்லை, அது இன்னும் கதிர்வீச்சினை வெளியிட்டுகொண்டே இருக்கின்றது.

செர்னோபில் போல நிலம் என்றால் கூட சுற்றி வேலியிட்டு மக்கள் நுழையாமல் தடுத்துவிடலாம், இது அப்படி அல்ல கடல் அதன் கதிரியக்கம் கடலில் கலந்துகொண்டே இருக்கின்றது

இதனால் பெரும் அழிவும், சீர்கேடும் அங்கு நடந்துகொண்டே இருக்கின்றது. ஜப்பானிய கடல் உணவு சந்தை சரிந்துகிடக்கின்றது.

மக்களுக்கு ஏற்படும் ரகசிய நோய்கள் ஒருபுறம், மறுபடியும் மக்கள் அங்கு குடியேறமுடியா கொடுமை ஒருபுறம், கட்டுபடுத்தமுடியா கதிர்வீச்சு ஒருபுறம், விஷமான கணநீர் ஒருபுறம் என திகைக்கின்றது ஜப்பான்

பல ஆண்டு ஜப்பானின் முன்னேற்றத்தில் பெரும் தடையாக , பெரும் சவாலாக வந்து நிற்கின்றது புக்குஷிமா…

அதனை கடக்க ஜப்பான் பட்டுகொண்டிருக்கும் சிரமம் கொஞ்சமல்ல, பொருளாதார ரீதியாக அது பெரும் அடிவாங்கிகொண்டிருக்கின்றது..

எவ்வளவோ மறைத்தும் ஜப்பானால் இந்த கதிரியக்க சீர்கேடுகளை தடுக்கவே முடியவில்லை, 2020 ஒலிம்பிக் போட்டியினை நடத்தி தன் நாட்டில் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என சொல்லிகொள்ள துடிக்கின்றது.

புக்குஷிமா ஜப்பானின் பொருளாதாரத்தை சரித்து போட்டிருக்கின்றது என்பது உண்மை, இன்னும் பல சிக்கல்களை அது எதிர்கொள்கின்றது

எப்படிபட்ட பொருளாதார ஜாம்பவான் ஜப்பான், அதுவே அணுவுலையினை சரிகட்ட முடியாமல் , அந்த விபத்தை எதிர்கொள்ளமுடியாமல் மிக மிக திணறுகின்றது

அணுகுண்டின் அழிவை உலகிற்கு சொன்ன அதே ஜப்பானே, கடற்கரை அணுமின் நிலைய ஆபத்தினை உலகிற்கு சொல்லிகொண்டே இருக்கின்றது

Image may contain: one or more people, people standing, sky and outdoor

பெரும் வல்லரசுகளின் ஆதரவில், பெரும் பணத்தில் மிதக்கும் ஜப்பானுக்கே இந்நிலை என்றால்????

அனாதையாக உலகில் , பெரும் மக்கள் தொகையுடன், வளர்ந்துகொண்டிருக்கும் இந்நாட்டில் அப்படி ஒரு சம்பவம் நடக்குமானால்….

நினைக்கவே பெரும் அச்சமூட்டும் விஷயமிது, தமிழக கடற்கரை ஒன்றும் சுனாமி அச்சமில்லா ஏரியா அல்ல, 2004 சுனாமி ஒரு காலமும் மறக்கமுடியாதது, அது சொல்லிகொண்டு வரவில்லை

ஒவ்வொரு விபத்திலிருந்தும் இந்த உலகம் ஒவ்வொரு பாடம் கற்று அதனை தவிர்த்தே வந்திருக்கின்றது,, எல்லா விஷயங்களிலும் அப்படித்தான்

ஆனால் அணு விஷயத்தில் அப்படி அல்ல, அந்த தவற்றை திருத்தவே முடியாது, அவ்வளவு ஆபத்தானது. தப்ப ஒரே வழி அதனை பாதுகாப்பாக மூடிவிட வேண்டியதுதான்

அமெரிக்கா அதனைத்தான் செய்ய தொடங்கியிருக்கின்றது , கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கின்றது. பிரான்ஸ் சிந்திக்க தொடங்கியிருக்கின்றது

புக்குஷிமாவினை தொடர்ந்து, ஜெர்மனி அணுவுலைக்கு வாய்ப்பு இல்லாத நாடாக தன்னை அறிவித்துகொண்டது

உலகெமல்லாம் அணுவுலையினை குறைக்க, தமிழகத்தில் மட்டும் கல்பாக்கம் ஈணுலை, கூடங்குளத்தில் 5,6 என எண்ணிக்கை கூடிகொண்டே செல்கின்றது

அணுகுண்டின் அழிவு ஹிரோஷிமா, நாகசாகி என இரு இடங்களில் தெரிந்தது. அணுவுலையின் அழிவு செர்னோபில் , புக்குஷிமா என இரு இடங்களில் உலகிற்கு சொல்லபட்டிருக்கின்றது

இந்த துயரங்களோடு அணு கொடுமைக்கு முடிவு கட்டினால் மானிட குலம் வாழும்

எல்லா அணுவுலைகளும் தூங்கும் அணுவுலை என்பதனைத்தான் இந்த விஞ்ஞான உலகம் சொல்லிகொண்டிருக்கின்றது

அவை நிரந்தரமாக தூங்கவும் ஒரு காலம் வரட்டும்….

தமிழகத்தில் உபி போல ஆட்சிமாற்றம் நடக்கும் : தமிழிசை

தமிழகத்தில் உபி போல ஆட்சிமாற்றம் நடக்கும் : தமிழிசை

உபி ராமர் பூமி, தமிழகம் ராமசாமி பூமி என்பது தமிசைக்கு தெரிந்திருக்கின்றது, அது போக இங்கு சகுனி, கூனி என பல பயங்கரமான வடிவங்கள் எல்லாம் உண்டு என்பதெல்லாம் அவருக்கு தெரிந்திருக்கின்றடு

அதனால் ஆட்சிமாற்றம் என மட்டும் சொல்லிவிட்டு அம்மணி நிறுத்திகொணடார், ஆட்சிமாற்றம் நடக்கும் என்பது யாருக்கு தெரியாது?, நமக்கெல்லாம் தெரிந்தது அம்மணிக்கும் தெரிந்துவிட்டது அவ்வளவுதான்

இன்னும் 100 வருடங்களுக்கு அதிமுக ஆட்சி என தன் காமெடியினை தொடர்ந்துகொண்டிருக்கின்றார் டிவி காமெடிகளை மிஞ்சும் டிடிவி தினகரன்

இன்னும் அட்சி 2 மாதம், மிஞ்சிபோனால் 2 வருடம் தாங்குமா எனும் நிலையில் அன்னாரின் கனவு 100 வருடம் செல்கின்றது, கட்சியே 10 வருடம் தாங்குமா என்பது தெரியவில்லை…..

முன்பெல்லாம் தேர்தல் தேதி அறிவிக்கபட்டவுடன் களமிறங்குவார் ஜே, மற்ற கட்சிகள் ஆலோசனை செய்துகொண்டிருக்கும் பொழுதே அவர் வேட்பாளரையும் அறிவித்து, பாதி பிரச்சாரத்தையும் முடித்திருப்பார்

அப்படியும் ஒரு காலம் அதிமுகவிற்கு இருந்தது, இன்றோ வேட்பாளரை அறிவிக்கவே தடுமாடுகின்றார்கள்

இதில் 100 வருடம் ஆள்வார்களாம், 100 நாள் கூட தாங்காது..