நடிகை கஸ்தூரி மனம் திறக்கிறார்…

தன்னைபற்றி வந்த செய்தி தவறு என மறுக்கின்றது நடிகை கஸ்தூரியின் முகநூல் கணக்கு

ஆனால் அவர் சொன்னதாக சொன்ன செய்தி மீடியாக்களில் வந்துகொண்டிருக்கின்றது

இதில் எது போலி என தெரியாமல் திணற வேண்டியிருக்கின்றது..

கஸ்தூரியின் முகநூல் கணக்கு உண்மையானது என்றால், அந்த மீடியாக்கள் கண்டிக்கபட வேண்டியவைகள்…

கடும் நடவடிக்கைக்கும் உட்படுத்த படவேண்டியவவை…

இதோ கஸ்தூரி என‌ ஒருபெண் கதறுகின்றாள், அவள் குரலுக்கு வலுசேர்க்க யாருமில்லை, பெண்கள் குரலுமில்லை

அந்த மீடியாவினை கண்டிக்க ஒருவருக்கும் துணிச்சல் இல்லை

நாளை யாராவது ஒரு பிரபலம் பெண்களை ஏதும் சொல்லிவிட்டால் மொத்தமாக கொடிபிடித்து கிளம்புவார்கள், அதனை மகளிர் நலம் காப்பதாக சொல்லும் அந்த மீடியாக்களும் பிரசுரித்து கொண்டிருக்கும்

திராவிட எழுச்சி குரலால் காமராஜ் முதல்வரானார்…

Image may contain: 2 people, people standing and beard

 

திராவிடம் 50 என பேசகிளம்புவனெல்லாம் உருப்படியாக பேசவேண்டிய விஷயங்களை பேசுவதே இல்லை

அதாகபட்டது காங்கிரசின் உட்கட்சி பூசல் அக்காலமே இருந்தது, ராஜாஜி ஒரு கோஷ்டி, சத்தியமூர்த்தி ஒரு கோஷ்டி, சத்தியமூர்த்தியின் சீடர்தான் காமராஜர்.

இது சுதந்திரம் பெற்றபின்னரும் தொடர்ந்தது..

இதில் ராஜாஜி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்துவிட்டு, பிரிக்கபடாத சென்னை மாகாண‌ முதல்வராக அமர்ந்ததில் பலருக்கு விருப்பமில்லை

இந்நேரம்தான் எதனை பிடித்து அரசியல் செய்யலாம் என திணவெடுத்திருந்த , வாத திறன் மிக்க திமுகவிற்கு ராஜாஜியின் கல்வி திட்டம், லட்டு போல கிடைத்தது,

பெரியாருக்கு துரோகம் செய்தவர்கள் என்ற இமெஜ் எல்லாம் உடைக்க அவர்களுக்கான வாய்ப்பு ராஜாஜி வடிவில் வந்தது, விடுவார்களா?

“குலகல்வி திட்டம்..” என இவர்களே பெயர் சூட்டி ஆட ஆரம்பித்தார்கள், அவர்கள் ஆடிய ஆட்டத்தினை ்ராஜாஜியின் கட்சி எதிரிகளும் ரசித்தனர்,, விளைவு ராஜாஜி விலக, காமராஜர் முதல்வரானார்

அதாவது ராஜாஜியும், இன்னும் பலரும் பெரிய சாதி என்பதால், திமுகவின் வாயினை அடைக்க ஒரு சூத்திர முகம் தேவைபட்டது, அந்த காமராஜரை மிக சரியாக நிறுத்தினார்கள்

அதாவது பிராமண தலைவர்களை பின்னுக்கு தள்ளி மோடி என்பவரை முன்னிறுத்தி, இது பிராமண கட்சி அல்ல என பாஜக வேடம் போடுவது போல, அன்றே காங்கிரசால் போடபட்ட முகமூடிதான் காமராஜர்

பார்ப்பண ஆதிக்கத்தில் இன்றும் காங்கிரஸ், பாஜக என இரண்டும் ஒரே கட்சிதானே தவிர, முகமூடிகள் மட்டும்தான் வேறானவை, மற்றபடி சாதிய கொள்கைகளில் இரண்டும் சளைத்தவை அல்ல.

காங்கிரஸ் சாதியற்ற கட்சி என்பது போல காட்டிகொள்ள முன்னிறுத்தபட்டவரே காமராஜர், மற்றபடி சண்டை என்பது ராஜாஜிக்கும் சத்தியமூர்த்திக்குமே

ராஜாஜி, ஆச்சாரியர் எனும் பெரும் அடையாளத்துடன் இன்றைய ப.சிதம்பரம் அளவில் பெருமதிப்பு பெற்றிருந்தவர். காந்தியின் சம்பந்தி என்றொரு பெரும் அடையாளமும் அவருக்கு இருந்தது

அவரை வீழ்த்துவது சாதரணமன்று, ஆனால் திமுக விரட்டி காட்டியது.

ராஜாஜிக்கு எதிராக அன்று திமுக பெரும் போராட்டம் நடத்தபடவில்லையெனில் ராஜாஜி நெடுங்காலம் முதல்வாரக இருந்திருப்பார்

காமராஜர் என்றொரு அரசியல்வாதி உருவாகியிருக்கவே மாட்டார்.

ராஜாஜி பெரும் படிப்பு படித்தவர், அவர் இடத்தில் நானா என தயங்கி நின்ற காமராஜருக்கு பெரும் தைரியமும், ஆதரவும் அளித்தவர்கள் பெரியாரும், அண்ணாவும் என்பது வரலாற்று உண்மை.

ஒரு சூத்திரன் முதல்வராவதில் அவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம், காமராஜரும் கக்கன் முதலானோருக்கு அமைச்சர்பதவி கொடுத்து உயர்த்தினார்.

இவை எல்லாம் திராவிட குரலால் எழுந்த நன்மைகள்..

ஆக திராவிட பெருமை பேசுவோர், ஒரே அடியில் அடிக்கலாம்

நாங்கள் அன்றே ராஜாஜியினை எதிர்க்கவில்லையென்றால், காமராஜர் முதல்வராகியிருக்க முடியுமா?

எங்கள் ஆரிய எதிர்ப்பினாலேயே ஒரு சூத்திர தமிழன் முதல்வராக முடிந்தது, காங்கிரசிலே ஒரு தாழ்த்தபட்ட காமராஜரை முதல்வராக்கியது திமுகவின் உழைப்பு என்றால், ஒரு பயலும் பேசமுடியாது

இது உண்மையும் கூட, வரலாறு இதனைத்தான் சொல்கின்றது

அப்படி எங்களால் முதல்வரான காமராஜரைத்தான், அதே ராஜாஜியின் உதவியோடு 1967ல் வீழ்த்தினோம், அதுவும் அவர் இனி முதல்வராக மாட்டேன் என சொன்ன பின்புதான் தோற்றார் என சொன்னால், எதிர்வாதம் புரிய ஒருவனும் இருக்கமாட்டான்

நிச்சயமாக காமராஜர் முதல்வராக, திமுகவின் போராட்டமும் முக்கிய காரணம். அந்த குலகல்வி முறையினை எதிர்த்து நடந்த போராட்டம் மூலமாக ஆட்சிக்கு வந்த காமராஜர், ராஜாஜி முடியாது என சொன்ன விஷயங்களை மாற்றி ஏராள கல்விசாலைகளை திறந்தார்

ஆக காமராஜர் கல்விபுரட்சி செய்யவும் திமுகவே வழி வகுத்தது, அவர் கல்விசாலை கட்டி கல்வி கொடுக்கு மட்டும் திமுக அமைதிகாத்தது.

அவர் பதவிவேண்டாம் என்ற பின்புதான் திமுக ஆட்சிக்கே வந்தது

இப்படி எல்லாம் போட்டு தாக்கினால் எப்படி இருக்கும், ஆனால் இப்படி ஒரு திமுக காரனும் எழுத காணோம், எழுதவில்லை

இப்படியும் ஒரு கோணம் வரலாற்றில் உண்டு,

திராவிட குரல் எழும்பாவிட்டால் காமராஜர் என்ற சூத்திரன் தமிழக முதல்வராக வந்திருப்பது சாத்தியமில்லாத ஒன்று

மானத் தமிழன் ஒருவன் அதிகாரத்தில்…. : சீமானின் சீற்றம்

தமிழர் வேண்டுமா? சிங்களர் வேண்டுமா? மானத் தமிழன் ஒருவன் அதிகாரத்தில் இருந்திருந்தால் சிங்களன் கை வைத்திருப்பானா? : சீமான் சீற்றம்

இது என்ன அர்த்தமில்லா கோஷம், சிங்களர் இந்திய அரசுக்கு ஏன் வேண்டும்? அவர்கள் என்ன வாக்களிக்கவா போகின்றார்கள்? சிங்கள 100 எம்பிக்கள் இந்திய அரசினை ஆதரிக்க போகின்றார்களா

அது இருக்கட்டும்….

முதல்வர் பழனிச்சாமி, உங்களை மானமில்லாதவன் என அங்கிள் சைமன் சொல்வதை கவனியுங்கள்

இன்றைய தமிழக உச்ச அதிகாரம் நீங்கள்தான், அதுவும் தமிழர்தான், ஆக உங்களுக்கு மானமிருந்தால் சிங்களன் கை வைப்பானா? என அங்கிள் வெடிக்கின்றார்.

மானமிருந்தால் இருக்கின்றது என அவருக்கு பதில் சொல்லுங்கள்

முன்பெல்லாம் தமிழன் முதல்வராக வேண்டுமென்றார், இப்பொழுது மான தமிழன் முதல்வராக வேண்டுமென்கின்றார்,

அடுத்தது முழு மான தமிழன் முதல்வராக வேண்டும் என்பாரோ?

அப்படி யார் இருக்கின்றார்கள் என்றால், நான் தான் அது என அவரின் வழக்கமான புன்னகையில் ஈஈஈ என இளித்துகொண்டே சொல்லுவார்..

 
 
 

15 திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைவார்கள்: டிடிவி தினகரன்

15 திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைவார்கள்: டிடிவி தினகரன்

15 என்ன?, 70ம் கொண்டு செல்லுங்கள், ஆனால் அடுத்த தேர்தலில் ஒரு இடம் வென்றுவிட முடியுமா?

திமுக இதனை போல எத்தனை எம் எல் ஏக்களையும் உருவாக்கும், உங்களால் இனி ஒரு எம் எல் ஏவினை உருவாக்க முடியுமா?

ஒருவேளை 15 எம் எல் ஏக்கள் சென்றாலும் கூட அது அவர்களின் தற்கொலையே தவிர, எதிர்காலம் அல்ல…

அதிமுக கட்சியினை அபகரித்தீர்கள், அப்படியே போயஸ் கார்டனை அபகரித்தீர்கள்,

இன்ன்றும் சசிகலா வழக்கில் கட்டவேண்டிய 10 கோடி ரூபாய்க்கு கணக்கு சொல்ல முறையான தொழில் இல்லாமல் கஷ்டபடுகின்றீர்கள்

மிஸ்டர் தினகரன், ஒரு எம் எல் ஏ கூட உருவாக்க தெரியாதா? எவனாவது உருவாக்கி வைத்திருப்பான் அதனை கடத்திகொண்டு செல்வதா?

கொஞ்சமேனும் வெட்கமில்லை?

15ஐ கொண்டு சென்றால் அடுத்த தேர்தலில் 150 ஆக திமுக தேர்தலில் பெற்றுகொள்ளும், அதன் பலம் அப்படி

காலமெல்லாம் எதனையாவது திருடுவது, இப்பொழுது எம் எல் ஏக்களை திருடுவது என உங்கள் அரசியல் இப்படி

நீங்கள் ஸ்டாலினை தவிர 80 எம் எல் ஏக்களை லவட்டி சென்றாலும் திமுக அசையாது, அடுத்த தேர்தலில் எழும்பும்

ராஜிவ் கொலையினையொட்டி ஒரே ஒரு திமுக எம் எல் ஏ இருந்த வரலாறெல்லாம் அதற்கு உண்டு, அடுத்த தேர்தலிலே 120க்கும் மேல் எம் எல் ஏக்களை உருவாக்கிய வரலாறும் அதற்கு உண்டு

122 பேரே தொகுதிக்குள் மாறுவேடத்தில் திரியும்பொழுது, திமுகவின் 15 பேருக்கு கொஞ்சமேனும் யோசனை இருக்காதா?

122 பேரையாவது அந்த அதிமுகாரன் மட்டும் தேடிகொண்டிருக்கின்றான்

ஒருவேளை இந்த 15 தாவினால், திமுக மற்றும் அதிமுக என எல்லா கட்சிகளிடமிருந்தும் அல்லவா அவர்கள் அடிவாங்க வேண்டும்.

முதுகு தாங்குமா?

கலைஞர் கட்டிவைத்த சட்டமன்றத்தில் கால்வைக்க மாட்டார்களாம், அவ்வளவு மானமாம்.

ஆனால் அவர் பெயரில் வென்ற எம் எல் ஏக்களை மட்டும் கடத்த துணிவார்களாம்

இவர்கள் என்ன ரகம், இது எவ்விதமான மானம்??

“பகைவனுக்கும் அருளும் நன்னெஞ்சு..” கலைஞருக்கு உண்டு… இன்னும் பிற

Image may contain: 1 person, smiling, sunglasses

அது கலைஞர் முதல்வராக இருந்த காலகட்டம், சாதி பிரச்சினையில் ஆங்காங்கு பெட்ரோல் குண்டுகள் வீசபட்டன, தன் ஆட்சிகாலத்தில் சந்திரலேகா மீது ஆசிட் வீசபட்டத்தை மறந்த ஜெயலலிதா சொன்னார்

“கலைஞரின் ஆட்சியில் குண்டு கலாச்சாரம் வந்துவிட்டது”

பெரும் பிரச்சினையாக மாறிகொண்டிருந்த , அந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள் கலைஞரிடம் ஜெயாவின் இந்த குற்றசாட்டினை முன்வைத்து கேள்வி கேட்டனர்

தனக்கே உரித்தான புன்னகையுடன் சொன்னார் கலைஞர்

“என்னது? குண்டு கலாச்சாரமா?, அம்மையாரை பார்த்தாலே தெரியவில்லையா, யார் குண்டு கலாச்சாரத்தை கொண்டு வந்தவர்களென்று”

சொல்லிவிட்டு அடுத்த கேள்வி? என அவர் சீரியசாக கேட்டார்

எல்லா கேள்வியினையும் மறந்து பத்திரிகை கூட்டம் வாய்விட்டு சிரித்துகொண்டிருந்தது

கலைஞர் அப்படி குறிப்பிட்டு சொன்னபிறகும் தன் உடல்நிலையில் ஜெயா அக்கறை காட்டவில்லை. ஒருவேளை அதில் கவனம் செலுத்தியிருந்தால் இன்று நம்மோடு இருந்திருப்பார்.

ஜெயாவின் சிக்கலுக்கு காரணம் உடல்பருமன் என்பதும் ஒரு தியரி, கலைஞர் அன்றே மிக சரியாகத்தான் ஆலோசனை சொல்லியிருக்கின்றார்.

“பகைவனுக்கும் அருளும் நன்னெஞ்சு..” கலைஞருக்கு உண்டு,

அப்படி பல சுவாரஸ்யங்களுக்கு சொந்தக்காரர் கலைஞர், அம்மனிதரை மனம் தேடிகொண்டே இருக்கின்றது


எம்.ஜி.ஆர்., அண்ணன் மகன் சந்திரன், புதிய கட்சி துவக்கிஉள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில், வேட்பாளரை நிறுத்த போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஆக அதிமுக சார்பாவகே ஆர்.கே நகரில் 20 வேட்பாளர்கள் நிற்பார்கள் போலிருக்கின்றது

முதலில் அதிமுகவினருக்கு ஒரு தேர்தலும், அவர்களில் ஒருவர் வென்று, அவர்களுடன் மற்ற கட்சியினர் இன்னொரு தேர்தலை எதிர்கொள்ளும் அளவு நிலமை செல்லலாம் என அஞ்சபடுகின்றது.

“இரட்டை தேர்தல் முறை” கொண்டுவருமா “இரட்டை இலை”?

ஜெயா தோழி, ஜெயா அண்ணன் மகன் என ஒருபுறம், இப்பொழுது எம்ஜிஆர் அண்ணன் குடும்பம் இன்னொருபுறம்.

செத்தும் தமிழ்நாட்டை கெடுத்துகொண்டிருப்பவர்கள் அந்த ராமசந்திரனும் அவரின் ஜெயலலிதாவும் என்பதில் சந்தேகமே இல்லை..


 

விரைவில் உள்ளாட்சி தேர்தல்

இன்று ஓரளவு அமைதி கிராமபுறங்களில் நிலவுகின்றது, பெரும் தகறாறுகளோ , சண்டைகளோ இல்லை

அந்த குறையினை தீர்க்கத்தான் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தபட இருக்கின்றது

இப்படி தேர்தல் வைத்தால்தான் சாதி, மதம்,அடுத்த தெரு, அடுத்த வீடு, குடும்பம் உட்பட எல்லா தகறாறும் வரும்,

தகாறாறே இல்லை எனும் குறை இதனால் முழுக்க தீரும்,,

அந்த தகறாறை தீர்த்துவைக்க தலைவர் தேவை, தலைவரை தேர்ந்தெடுக்க கண்டிப்பாக தேர்தல் தேவை

ஆக அமைதியாக இருக்கும் கிராமங்களில், அந்த குறையினை தீர்த்து, அந்த களபேரத்தை தீர்க்க ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து, அந்த பகையினை அப்படியே தொடர்வதன் பெயர்தான் உள்ளாட்சி தேர்தல்…

 


 

இது என்ன கொரியாவா? தமிழகம்தானே…

தமிழக தொலைகாட்சிகளுக்கு திடீரென ஞானோதயம் ஏற்பட்டிருக்கின்றது, எந்த புண்ணியவான் கொடுத்த ஐடியாவோ தெரியவில்லை, இப்பொழுதெல்லாம் வடகொரியா நிலவரத்திற்கு சென்றுவிட்டன‌

சன்டிவி மர்ம தேசம் எனவும், புதிய தலைமுறை டிவி கிம் தேசம் எனவும் போட்டு தாக்கிகொண்டிருக்கின்றன‌

உண்மை நிலவரத்தினை இருநாடுகளுமே சொல்லவில்லை, இன்றைய வடகொரியா கொஞ்சம் சிக்கலான நாடுதான், கெடுபிடி அரசுதான், ஆனால் அதன் மக்களை பெரும் மடையர்களாக போட்டு தாக்குகின்றன‌

Image may contain: 1 person, text

அதாவது அம்மக்கள் அதிபரை கடவுளாக வணங்குகின்றார்களாம், அரசுக்கு ஒன்று என்றால் உயிர்துறப்பார்களாம், இன்னும் ஏராள கதைகளை அள்ளிவிடுகின்றன‌

உண்மையில் நடப்பது என்ன?

கொரியபோருக்கு பின்னரான சிக்கல் இன்னும் தீரவில்லை, 50 ஆண்டுகளாக வடகொரியா அமெரிக்காவுடன் இன்னும் யுத்தம் நடத்தியே வருகின்றது. மூன்றாம் அணுகுண்டை உங்கள் நாட்டில் வீசுவோம் என அமெரிக்கா ஒரு காலத்தில் விரட்டியதை அம்மக்கள் மறக்கவில்லை

அமெரிக்கா ஒன்றும் யோக்கிய சிகாமணி நாடல்ல, ஒருவனை குறிவைத்துவிட்டால் எப்படி எல்லாம் அவன் பிம்பத்தை சிதறடிப்பார்கள், முடிந்தால் அவனையே சிதறடிப்பார்கள் என்பது உலகறிந்தது

சதாமும், கடாபியும் அப்படித்தான் ஒழிக்கபட்டனர், இதோ அவர்கள் நாடு சீரழிந்து கிடக்கின்றது

காஸ்ட்ரோ, கோமேனி போன்ற வெகுசிலரே அமரிக்காவினை உள்விடாமல் தங்கள் நாட்டை காத்துகொண்டனர், இதில் வடகொரியாவும் அடக்கம்

அமெரிக்காவுடனான யுத்தம் தீரா நிலையில்தான் அது அணுகுண்டு, ரக்கெட் என ஏதோ செய்து தங்களை பாதுகாக்க நினைக்கின்றது

வடகொரியா பக்கம் நியாயம் இல்லை என சொல்லவே முடியாது, அதுவும் முடியவே முடியாது

சரி வடகொரிய அதிபர் அம்மக்களை அடிமைகளாய் வைத்திருக்கின்றார் என சொல்லும் தமிழக டிவிக்கள், என்றாவது இங்கு நடந்த, நடக்கும் விஷயங்களை சொன்னதா?

ஜெயா சிறை சென்றபொழுது தமிழகம் கலவரத்தில் மிதந்ததே, அந்த காமெடி பற்றி ஏதும் சொன்னார்களா?

இன்றும் ஜெயா குற்றவாளி என சொன்னபின்பும் அவர் கல்லறையில் மாலை மரியாதை என்ன? அவர்படத்தை தூக்கிபிடிக்கும் கொண்டாட்டம் என்ன? இதனை பற்றி சொன்னார்களா?

கூவத்தூரில் 125 எம் எல் ஏக்களை அடிமைகளாக வைத்தது பற்றி சொன்னார்களா?

மக்கள் செத்துகொண்டிருக்கும் பொழுதும் இங்கு விவசாயிகள் நலம என சொன்ன அமைச்சர்களையும், பன்றிகாய்ச்சல் இல்லவே இல்லை என சொன்ன அமைச்சர்களையும் என்ன சொன்னார்கள்?

கல்வி கொள்ளையாகிவிட்டது, மருத்துவம் முதல்வருக்கே கிட்டவில்லை

இன்னமும் அரசு மதுகடைகள் நடத்ததான் செய்வோம் என இறுமாப்பில் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றது

ஆக அடிமைத்தனம் என்பது எல்லா விதத்திலும் அப்பட்டமாக தெரியும் மாநிலம் இது, குற்றவாளி என தெரிந்தபின்னும் கொண்டாடும் மாநிலம் இது, பெரும் அடிமை கூட்டத்தை கொண்டிருக்கும் இயக்கம் ஆளும் மாநிலம் இது

இதனை பற்றி வாய்திறக்காத டிவிதான் கொரியாவினை பற்றி கிண்டல் செய்கின்றதாம்

வடகொரியாவில் இன்றளவும் அமெரிக்க நிறுவணம் கிடையாது, பெப்சி, கோக் இல்லை. நம்மை போல தாமிரபரணியினை பெப்சிக்கு கொடுக்கும் அநியாயம் இல்லை

காட்டுமிராண்டி தேசம் என சொன்னாலும் வடகொரியா அந்த தில்லில் இருக்கின்றது, ஏன் தமிழக அரசால் முடிகின்றதா?

யார் அடிமை தேசம்?

தென்கொரியாவில் பெண் அதிபர், தன் தோழியுடன் சேர்ந்து (அப்படியே தமிழக நிலைதான்) ஊழலில் ஈடுபட்டார் என்பதற்காக , தேசமே திரண்டு தோழியினை விரட்டி, அதிபரை பதவியிறக்கி கதறவைத்துகொண்டிருக்கின்றது

தமிழகமோ தியாக திருவுருவம் என ஊழல்வாதிகளை கொண்டாடுகின்றது

வடகொரியர்கள் உலகம் அறியாதவர்களாம், அரசுக்காக சாவு என்றால் சாவார்களாம்

50 வருடமாக நடக்கும் யுத்தத்தில் தாய்நாட்டிற்காக சாக வடகொரியன் தயார், அவன் நாட்டுபற்று அப்படி

இங்கு எம்ஜிஆருக்கு செத்தவனும், ஜெயா ஜெயிலுக்கு போனதற்கு செத்தவனும், நாக்கு மூக்கு அறுத்தவனும் என்ன வகை?

ஆக தமிழக ஊடகங்கள் கிழிப்பதாக இருந்தால் இந்த தமிழக சீரழிவினை கிழிக்கட்டும்

எம் எல் ஏக்களை அடிமையாக வைத்திருக்கும் அதிமுகவினை கிழிக்கட்டும், கட்சியில் திடீரென அதிகாரம் பெற்ற தினகரனை கிழிக்கட்டும்

நம்மை விட வடகொரியர்கள் ஒன்றும் தாழ்ந்துவிடவில்லை, நாளையே அமெரிக்காவுடன் உடன்பாடு என்றாலோ, ஆட்சி மாற்றம் என்றாலோ அவர்கள் தங்களுக்கான அரசினை தேர்ந்தெடுப்பார்கள்

இப்படியா எத்தனை வாய்ப்புகிடைத்தும் காசுக்கு தன்னை விற்றுவிட்டு அடிமை ஆவார்கள்?

தமிழர்களை விட கொரியர்கள் பெஸ்ட்தான், தமிழக அரசியலை விட கொரிய அரசியல் நன்றாகத்தான் நடக்கின்றது,

ஒரு கொரியா அமெரிக்காவினை தில்லாக 50 வருடமாக எதிர்க்கின்றது, ஒரு கொரியா ஊழலற்ற நாடு எப்படி இருக்கவேண்டும் என பாடம் சொல்கின்றது

சொந்த நதியினை அமெரிக்காவிடம் விற்றுவிட்ட நாமும், ஊழல்வாதிகளை தியாக உருவம் என கொண்டாடும் நாம் அந்த கொரியர்களை பார்த்து சிரிக்க என்ன இருக்கின்றது

வெட்கமாக இல்லை….

கொஞ்சமேனும் உலக அறிவும், இப்படி நிகழ்ச்சி நடத்தினால் உலகம் காரிதுப்புமே என்ற அறிவும் கொஞ்சம் இருந்திருந்தால் இப்படிபட்ட தமிழக அவமான நிகழ்ச்சிகளை நடத்தமாட்டார்கள்

ஒருவேளை இப்படி சிந்தித்திருப்பார்களோ?

இது என்ன கொரியாவா? தமிழகம்தானே, என்ன சொன்னாலும் நம்பத்தான் போகின்றார்கள். தன் நிலையினை உலகோடு ஒப்பிட்டு பார்த்து யோசிக்கும் இனமா இது, அதனால் இஷ்டத்திற்கு வடகொரியர்களை கிண்டல்செய்வோம் என கிளம்பியிருக்கலாம்

அடுத்தவன் வேட்டி அழுக்கு என சொல்லுமுன், தனக்கு கோவணமே இல்லை என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்

இந்த தமிழக டிவிக்கள் வடகொரியாவினை விமர்சிக்கின்றோம் எனும் பெயரில் தமிழகத்தில் கோவணம் இல்லை என்பதை மறந்தே விட்டார்கள்…

இனியாவது தமிழக மானம் காற்றில் பறக்கவேண்டாம் என்றால் இப்படியான நிகழ்ச்சிகளை படைப்பதை அவை நிறுத்திகொள்ளவேண்டும்

அடிமை முறை, அபத்தமுறை, அறிவில்லா மக்கள் என உலகில் மற்ற இனத்தை சொல்ல தமிழக‌ தமிழனுக்கு என்ன உரிமை இருக்கின்றது??

இவற்றிற்கெல்லாம் இந்த ஜனநாயக உலகில் மொத்த உருவமாக வாழ்ந்து வருவது அவன் மட்டும்தானே, அவன் எப்படி அடுத்தவனை கலாய்க்கமுடியும்?

 
 

“என்னை கை பிடித்து இழுத்தார்கள்” நிகழ்ச்சியில் பங்குபெற்றது கஸ்தூரி…

தமிழகத்திற்கு வரும் தேசிய கட்சிகள் திராவிடத்தை ஏற்று கொள்ள வேண்டும் : கமலஹாசன்

50 வருடமாக அதுதானே நடந்துகொண்டிருக்கின்றது, எல்லா தேசிய கட்சிகளும் திராவிடத்தை ஏற்றுதான் கூட்டணி வைக்கின்றன‌

திராவிடத்தை ஏற்காத எந்த தேசியகட்சியும் இங்கு வெற்றிபெற வாய்ப்பே இல்லை, இது தமிழக எதார்த்தம்

டோண்ட் வொரி கமலஹாசன்..


 ஒரு ஹீரோ என்னை அடிக்கடி சீண்டிகொண்டே இருந்தார், அவரால் பல பட வாய்ப்புகளை இழந்தேன் , பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகள் சினிமாவில் காலம் காலமாக நடக்கின்றன, நானும் பாதிக்கபட்டேன் : நடிகை கஸ்தூரி

ஆக இன்றைய “என்னை கை பிடித்து இழுத்தார்கள்” நிகழ்ச்சியில் பங்குபெற்றது கஸ்தூரி…

விடாமல் தொடர்ந்து யாரவது ஒருவர் பங்குபெற்றுகொண்டே இருக்கின்றார்கள், நிகழ்ச்சி பல எபிசோடுகளை தாண்டி செல்லும் போல் இருக்கின்றது..