தமிழக பட்ஜெட் 2017-18 : தட்டுங்கள்.. அடிமைகளே மேஜையினை ஓங்கி தட்டுங்கள்…

ரூ.42 ஆயிரம் கோடி கடன் வாங்க திட்டம், தமிழக கடன் ஏற்கனவே தமிழகத்திற்கு ரூ.3.14 லட்சம் கோடி.

6 வருட அம்மா ஆட்சியின் சாதனையினை கண்டீர்களா?

இந்த கடனை வைத்துகொண்டுதான் விலையில்லா டவுடர் முதல் விலையில்லா ஹேர்பின் வரை கொடுத்தார்களா?

இவ்வளவு சிக்கலை வைத்துகொண்டுதான் ஸ்கூட்டி கொடுக்கவேண்டுமா?

ஆக கடன்வாங்கி மக்களுக்கு கொடுத்துவிட்டு , அம்மா கனவு, சின்னம்மா வழிகாட்டல் என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்

ஆனால் இவர்களை கண்டிக்கின்றோம், எப்படி சொல்லியிருக்க வேண்டும்?

அம்மாவின் தியாக வாழ்வின் பயனாக, இதய தெய்வம் அம்மாவின் சிறப்பான ஆட்சியில் தமிழக கடன் 3.14 லட்சம் கோடியாகிவிட்டது, சின்னம்மாவின் சிறப்பான வழிகாட்டலில் இன்னும் 42 ஆயிரம் கோடி கடன் வாங்க போகின்றோம்

(தட்டுங்கள், மேஜையினை ஓங்கி தட்டுங்கள் அடிமைகளே)

இந்த கடன் எங்கே வாங்கினார்கள்? யார் கடன் கொடுப்பார்கள்?

தாமிரபரணி ஏன் விலை போகாது?

ஆக அம்மா சமாதியில் வணங்கி சொல்லியிருப்பது என்னவென்றால், அம்மா , நீங்களே 3.14 லட்சம் கோடி கடனை விட்டு சென்றிருக்கும் பொழுது, பாவம் அடிமைகள் ஒரு 5 லட்சம் கோடி கடனாக உயர்த்தி உங்கள் பெயரை காப்பாற்றுவோம்

நாங்கள் கடனை உயர்த்தி வைக்க வைக்கத்தான் , உங்களுக்கு நல்ல பெயர் மிஞ்சும், நாங்கள் கடனை அடைத்துவிட்டால் உங்களைத்தான் தூற்றுவார்கள்

அதற்கு நாங்கள் வாய்பளிக்கவே மாட்டோம்..

இது சத்தியம், சத்தியம்,சத்தியம்


பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 20 முதல் 24 வரை நடைபெறும்: சபாநாயகர் அறிவிப்பு

அதில் என்ன விவாதம்?

விவாதிக்க கூடிய அறிவாளி அந்த கட்சியில் யார் இருக்கின்றார்கள்?

யார் உருப்படியான கருத்துக்களை சொல்லபோகின்றார்கள்? சொல்ல கூடிய தகுதியில் யார் இருக்கின்றார்?

அப்படி ஒருவர் இருந்தால் அக்கட்சியில் அவர் இருக்கமுடியுமா? இருக்கத்தான் விடுவார்களா?

பின் என்ன நடக்கும்?

வழக்கம் போல மகா அமைதி, அதற்கு மேல் கேட்டால் சின்னம்மா வாழ்க, தினகரன் வெல்க என்பார்கள்

இதற்கு எதற்கு ஒரு விவாதம்???


துணுக்கு 

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் : பகிரங்கமாக வெளியே வருவார்..! பழநெடுமாறன்

ஆம் இவர் வீட்டு அடுப்பாங்கரையில் பதுங்கி இருக்கின்றார், இனி வெளியே வருவார்

எல்லோரும் அவர் வீட்டு அடுப்படியினை பார்த்துகொண்டே இருங்கள்..

இன்னும் ஏமாற்றலாம் இனி இவர் சொல்லிகொண்டிருப்பதில் என்ன இருக்கின்றது??


பட்ஜெட் உரையை ஜெ. நினைவிடத்தில் வைத்து நிதியமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி

Image may contain: 2 people

பட்ஜெட் உரையை ஜெ. நினைவிடத்தில் வைத்து நிதியமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி

ஏனோ பெங்களூர் சிறைக்கு எடுத்து சென்று சரிபார்க்க மறந்துவிட்டார்

இப்படி ஒரு கொடுமை உலகில் எந்த மூலையிலாவது நடக்குமா? ஆனானபட்ட அமெரிக்கா பட்ஜெட் என்றாவது ஜார்ஜ் வாஷிங்டன் சமாதியிலோ, சீன பட்ஜெட் மாசேதுங் மசோலியத்திலோ வைக்கபட்ட வரலாறு உண்டா?

சிங்கப்பூரின் பட்ஜெட் லி குவான் யூ சமாதியில் வைக்கபட்ட செய்தி உண்டா?

இனியும் நாம் தமிழ்நாட்டு தமிழர்கள் என சொல்வது எவ்வளவு அவமானம்?

இப்படி ஒரு கோமாளித்தனத்தோடு தொடங்குவது 8 கோடி தமிழர்களை ஆளும் மாநில அரசின் வரவுசெலவு கணக்கு என்பதுதான் தமிழக சோகம்…

இம்மாநிலம் உருப்படும்??..

இன்றுமுதல் யார் கேட்டாலும் நான் தமிழ்பேசும் கென்யாகாரனோ அல்லது ஏதும் ஆப்ரிக்க குழுவினரோ என சொல்லிவிட போகின்றேன், என் உருவ‌ அமைப்பும் அதற்கு துணைவரும்

 
 

நெடுநாளைக்கு பின் ஒரு கடையில் கொள்ளு பார்க்க முடிந்தது

Image may contain: food

நெடுநாளைக்கு பின் ஒரு கடையில் கொள்ளு பார்க்க முடிந்தது, எங்கள் கிராமங்களில் அதனை காணம் என்பார்கள்.

குதிரைகளுக்கு அது பிராதான உணவு, இன்றைய மோட்டார்களாக அன்று குதிரைகள் இருந்தவரை அதற்கான விளைச்சல் தேவை இருந்தது

அதாவது இன்றைய இஞ்சின் ஆயில்களாக அன்று கொள்ளு இருந்தது, அந்த இடத்தினைத்தான் இன்று எந்திர ஆயில்கள் பிடித்துகொண்டன‌

அக்காலத்தில் அது கிராமங்கள் தோறும் விளையும், ஒரு மழை பெய்துவிட்டால் புஞ்சை நிலத்தில் உழுது விதைத்துவிடுவார்கள், அவ்வப்போது பெய்யும் மழையினிலே அது விளைந்துவிடும்

விளைந்த பின் வீடுகள் தோறும் அது நிரம்பிகிடக்கும், அவித்தோ அல்லது வறுத்து துவையல் செய்தோ சாப்பிடுவார்கள், அதுவும் அந்த துவையல் அவ்வளவு மணமும் சுவையும் நிறைந்தது

தேங்காய், வத்தல், இன்னும் சில வகையறாக்களை வைத்து, வறுத்த கொள்ளினை இட்டு அரைத்தால் அப்படி ஒரு சுவை

அன்று வயல் வரப்பிலும், தோட்டங்களிலும் அதுதான் மணமணத்துகொண்டிருந்தது, வாரத்தில் 3 நாட்களாவது அது கஞ்சி கலையத்தின் ஓரம் ஒட்டிகொண்டிருந்தது.

அவித்தோ, வறுத்தோ கருப்பெட்டி போட்டு இடித்து உருண்டை பிடித்து ஓலைபெட்டியில் போட்டு குழந்தைகள் கையில் கொடுத்துவிடுவார்கள், அது காலை ஆகாரமாக கூட இருந்த காலங்கள் உண்டு.

அந்த கொள்ளினை கண்டதும், அக்கால நினைவுகள் வந்தன. இன்று யாரும் அதனை தேடுவாரில்லை

பழைய நினைப்பில் அதனை வாங்கி துவையல் செய்து நாக்கில் வைத்தால் பழைய நினைவுகள் எல்லாம் வந்தன‌

பாட்டனும், பாட்டியும் அதனைத்தான் உண்டார்கள், தந்தை காலத்தில் அது குறைந்தது, என் காலத்தில் மறைந்தே விட்டது, இன்று அதெல்லாம் விளைவதில்லை, அது விளைந்த நிலங்கள் எல்லாம் கல் ஊன்றபட்டு வீட்டுமனைகளாகிவிட்டன‌

அந்த சுவை அந்த கிராமத்தை கண்ணில் கொண்டுவந்தது, எத்தனை மனிதர்களை இழந்திருக்கின்றோமோ, எத்தனை பேரோடு அதனை பகிர்ந்து சுவைத்தோமோ, எத்தனை கிழவிகள் அதனை மணக்க மணக்க அரைத்தார்களோ அத்தனை பேரும் நினைவுக்கு வந்தார்கள்

எப்படிபட்ட உணவுகளை எல்லாம் இழந்திருக்கின்றோம்?, எவ்வளவு தூரம் தள்ளி வந்துவிட்டோம்?

இது போக பெரும்பயிறு, சிறுபயிறு என ஏகபட்ட புன்செய் பயிர்கள் விளைந்தன, அவற்றிற்கெல்லாம் ஒரு செலவுமில்லை, உரம், களை,நோய் இன்னபிற அழிச்சாட்டியம் இல்லை

விதைத்து போட்டால் தானக விளைந்து காலடியில் கிடந்தன..ஆனால் தரமான உணவாக அமைந்தன‌

இன்றைய மருத்துவ உலகம் ஒப்புகொள்கின்றது, கொள்ளு தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் என அது சொல்கின்றது

“கொழுத்தவனுக்கு கொள்ளு..” என அன்றே சொன்னார்கள் நம் முன்னோர்கள், நாம் தான் மறந்துவிட்டோம்

உறுதியாக சொல்லலாம், காண துவையல் எனும் கொள்ளு துவையலும், கொள்ளு ரசமும், அவித்த கொள்ளு பண்டமும் இருந்தவரை அந்த கிராமத்தில் யாரும் மாரடைப்பால் சாகவே இல்லை

கொள்ளு விடைபெற்றபின், நாகரீக காலம் வந்தபின் சிலர் மாரடைப்பிலும், பலர் பைபாசிலும் சிக்கிகொன்டிருக்கின்றனர்

கண் கூடாக பார்க்கமுடிகின்றது

ஆக உடல் எடையினை குறைத்து, ரத்த நாளங்களை அடைப்பில்லாமல் வைத்திருக்க கொள்ளு அருமையான உணவு என்பது இப்பொழுது புரிகின்றது

இந்த நவீன காலத்தில் நவீன துரித வாழ்க்கை வாழ்ந்தாலும், முடிந்த அளவு உணவால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை வாழமுயற்சித்தால் சிக்கல் இல்லை என்ற ஞானம் உதித்திருக்கின்றது

உறுதியாக சொல்லமுடியும்

காணம் புழக்கத்தில் இருந்தவரை மாரடைப்பு என்பது அங்கு யாருக்கும் வந்ததாக தெரியவே இல்லை..

உடல் அரோக்கியம் என்பது தொலைத்துவிட்ட உணவுகளிலும் இருக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது.

 

மகளுக்கு இப்பொழுது அபிமான ஸ்டார் ரஜினிதான்

Image may contain: 1 person, close-up

மகளுக்கு இப்பொழுதெல்லாம் ரஜினி படம் பிடிகின்றது, குழந்தைகள் அவரை ரசிப்பது ஆச்சரியமல்ல, அவரை எல்லா குழந்தைகளுக்கும் நிரம்ப பிடிக்கின்றது , இவ்வளவிற்கும் அக்கால படங்களில் அவர் கூலிங்கிளாஸ் எல்லாம் அணிவதே இல்லை

அதனால் அந்த கண்கள் அழகாக தெரிகின்றன, அதில் ஒரு ஈர்ப்பும், கெத்தும் அழகாக தெரிகின்றது

மகளுக்கு இப்பொழுது அபிமான ஸ்டார் ரஜினிதான், அதுவும் அன்னை ஒரு ஆலயம் போன்ற படங்கள் மிக பிடித்துவிட்டது

அக்கால ரஜினியிடம் ஒரு துடிப்பும், ஈர்ப்பும் இருக்கின்றது. அவரை கண்டாலே குழந்தைகள் முகம் பிரகாசமாகின்றன, கூடவே குட்டியானை வேறு

சும்மா சொல்ல கூடாது, அந்த குட்டியானையும் மிக பிரமாதமாக நடித்திருக்கின்றது

அடுத்த படமாக அன்புள்ள ரஜினிகாந்த் படம் பார்த்தாள், அவளுக்கு ஏனோ அந்தபடம் மிகவும் பிடித்துவிட்டது, குறிப்பாக குழந்தை மீனா

அந்த “ரோசி கேர்ள் அழககா இருக்காங்கப்பா..” என சொல்லிகொண்டே இருந்தாள், டோரா, அஞ்சலி பாப்பா போலவே இப்பொழுது ரோசி கேர்ளும் அவளுக்கு  பிடித்துவிட்டது

இவள் என்ன அழகு, இந்த படத்தில் குஷ்பூவினை குழந்தையாக போட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என சொல்ல வாய்வரை வார்த்தை வந்தது, சொன்னால் பிய்த்து விடுவார்கள்

குழந்தைகளில் எல்லோரும் அழகுதான், அதனால் மீனாவும் அழகான பொம்மையாக தெரிந்ததில் வியப்பில்லை

அதே படத்தில் இந்த “ஸ்பெஷல்” குழந்தையினை நடிக்க வைத்திருந்தால், உலக விருதுகளை எல்லாம் அப்படம் பெற்றிருக்கும்.

அக்கால டைரக்டர்களுக்கு இக்குழந்தை கிடைக்காமல் போனது அவர்களுக்கான துரதிருஷ்டம்..

 
 

ஆர்.கே நகர் சூடு பிடித்திருக்கின்றது, பலருக்கு குளிர் எடுக்க ஆரம்பித்திருக்கின்றது

ஆர்.கே நகர் சூடு பிடித்திருக்கின்றது, பலருக்கு குளிர் எடுக்க ஆரம்பித்திருக்கின்றது

சில கட்சிகள் வழக்கம் போல சீ சீ இந்தபழம் புளிக்கும் என ஒதுங்கிவிட்டன, வைகோ, ராமதாஸ் அப்படியானவர்கள்

கோப்பை கிடைக்காது என தெரிந்தும் களம் காணும் கென்யா, ஜிம்பாப்வே போல சில கட்சிகள் களம் வந்திருக்கின்றன‌

திருமா கட்சி அப்படியானது,

நாம் நிச்சயம் தோற்போம், சந்தேகமில்லை ஆனால் திமுகவின் வோட்டுகளில் 2 பிரிந்தால் கூட அது வாழ்நாள் வெற்றி என தேமுதிக களமிறங்கியிருக்கின்றது

அதிமுகவிற்கு இது வாழ்வா சாவா போராட்டம், ஆட்சியினை கைபற்றி தீரவேண்டிய கட்டாயம் சசிகலா குடும்பத்திற்கு, அவர்களுக்கு இருக்கும் சிக்கல் அப்படி. கவுரவர்கள் போல ஏகபட்ட பாத்திரங்கள், எல்லோருக்கும் ஏகபட்ட சொத்துக்கள்எ

அனைத்தும் காக்கபடவேண்டுமானால் கட்சியும் ஆட்சியும் அவர்களிடம் இருந்தே ஆகவேண்டும், இல்லாவிட்டால் கயிலை மலை ஏறவேண்டியதுதான்

பன்னீர் கோஷ்டி கங்கணம் கட்டி நிற்கின்றது, தமிழகத்தை காக்க வந்தது நாங்களே என அது விடாபிடியாக நிற்கின்றது, பாம்பின் கால் பாம்பறியும், பன்னீர் சசிகலா குடும்ப தேர்தல் வித்தையினை அறிவார்

ஆக பன்னீரை சமாளிப்பது அவர்களுக்கு பெரும்பாடு

ஜெயலலிதாவிற்கு கொள்கையினை பார்த்தா வாக்களித்தார்கள்? பின் நான் ஏன் வாக்கு வாங்க முடியாது என வந்திருக்கின்றார் தீபா,

அட கட்சியின் பிதாமகனே என் சித்தப்பா தெரியுமா? என திடீரென களத்தில் வந்திருக்கின்றார் எம்ஜிஆரின் அண்ணன் மகன், அண்ணா மகன் அல்ல, அவரும் நிற்கின்றாராம்

ஆக அதிமுகவிற்கு பெரும் எதிர்ப்பு அதிமுக உள்ளே இருந்தே வந்திருக்கும் சுவாரஸ்ய காட்சிகள்

பிரதான திமுகவினை பொறுத்தவரை இத்தேர்தல் அவர்களுக்கு மகா முக்கியம் அல்ல, ஜெயாவிற்கு பின்னரான தேர்தலில் மக்களின் நாடியினை பிடித்துபார்க்கும் பரிசோதனை தேர்தலாக அவர்கள் பார்க்கின்றார்கள்

திருமங்கலம் போன்ற இடைதேர்தலை எதிர்கொண்டவர்கள் என்பதால், இடைதேர்தல் என்பது ஆளுங்கட்சியின் ஆதிக்கத்தில் நடபது என்பது அவர்கள் அறியாததல்ல…

அதனால் வந்தால் மலை, போனால் … எனபது போல களமிறங்கிவிட்டார்கள்

வெற்றி அவர்களுக்கு மிகுந்த உற்சாகமும் கொடுக்காது, தோல்வி அவர்களை பாதிக்கவும் செய்யாது.

ஏதோ பிரபலமில்லாதவரை ஏன் முன்னுநிறுத்தினார்கள் என பல கேள்விகள் எழுகின்றன, திமுக வரலாற்றில் இதெல்லாம் ஆச்சரியமில்லை

1960களில் திமுக இப்படித்தான் இருந்தது, அப்படி இருந்துதான் ஏராளமானோரை உருவாக்கியது, அவ்வளவு ஏன்? ஆனானபட்ட காமராஜரை எதிர்க்க கூட ஒரு சிறு இளைஞனைத்தான் நிறுத்தியது

இரண்டுவகையில் எடுத்துகொள்ளலாம், அதாவது பெரிய தலைநின்று தோற்றால் அது அவர்கள் அரசியல் வாழ்வினை கெடுத்துவிடும், புதுமுகம் என்றால் தலையில் தட்டி விரட்டலாம்

இன்னொன்று ஒரு புதுமுகம் எந்த பெரும் எதிரியினை வீழ்த்திவிட்டால், பார்த்தீர்களா அவரை அடிக்க இந்த சிறு அம்பு போதும் என பெருமையாக சொல்லிகொள்ளலாம்

அன்றைய திமுக தந்திரம் இது, கலைஞர் சொல்லிகொடுத்த தந்திரம்

இன்று ஆர்.கே நகரில் அதனைத்தான் ஸ்டாலின் செய்கின்றார், மற்றபடி சொந்த ஐடியா எல்லாம் இல்லை

ஒருவேளை மருது வெல்லட்டும், அதன்பின் எங்கிருப்பார் என நினைக்கின்றீர்கள்? இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார், காமராஜரை வென்ற சீனிவாசன் என்ன ஆனார் என யாருக்காவது தெரியுமா? அரசியல் அப்படித்தான்

ஆக பெரும் சிக்கலில் தினகரன் களம்காண்கின்றார், எவ்வளவு நெருக்கடி இருந்தால் பெரும் தலையினை களத்தில் இறக்குவார்கள்? ஆட்சியினை கைபற்றியே தீரவேண்டும் என்ற வன்மம் அவர்களிடம் இருப்பது நன்கு தெரிகின்றது

தினகரன் வென்றுவிட்டால் பழனிச்சாமி அரியணை இறங்கவேண்டியது, அதன் பின் என்னை மிரட்டினார்கள் என அம்மா சமாதியில் தியானம் இருப்பாரா என்பதெல்லாம் பின்னால் தெரியலாம்..

எல்லோரையும் விட இந்த தேர்தலில் முக்கிய இடம் வகிப்பது இரட்டை இலை சின்னம், என்ன கருமாந்திரமோ? அந்த சின்னம் பெற்றிருக்கும் இடம் அப்படி

அச்சின்னத்தில் நின்றால் சசிகலா என்ன? தாவுத் இப்ராஹிம் மருமகனே தமிழகத்தில் முதல்வராகலாம், அப்படி ஒரு பூதம் அது.

ஜெயாவோ, சசிகலாவோ ஆளட்டும், தமிழ்நாடு நாசமாய் போகட்டும் ஆனால் நாங்கள் சாவது வரை இரட்டை இலைக்குத்தான் வோட்டு என சொல்வோர் ஏராளம் உண்டு, தமிழகம் நாசமாய் போவதற்கும், தினகரன் சிரித்துகொண்டு திரிவதர்கும் அதுதான் காரணம்

என்னது சாகும் வரை இரட்டை இலைக்கு வாக்கா? என அவர்களை கொல்லவா முடியும் முடியாது

இப்பொழுது பன்னீர் என பிரிந்து கிடப்பதால் இந்த இரட்டை இலையினை கைபற்ற கடும் பிரயர்த்தனம், ஒருவேளை சின்னம் முடக்கபட்டால் தமிழகத்திற்கு நிச்சயம் விடிவு

இலையில்லா தினகரன் நீரில்லா குளம், துளிர்க்கமுடியாது.

சின்னம் என்னாகும் என்பதும் முக்கியம் பெறுகின்றது

மற்றபடி ஜெயா இல்லாத அதிமுகவும், கலைஞர் இல்லாத திமுகவும் முதல் தேர்தலை சந்திக்கின்றன‌

அதில் அதிமுக தன் முழுபலத்தினை திரட்டி , எதிர்காலத்தை தேடி களமிறங்குகின்றது, பன்னீர் கோஷ்டி அதற்கு கடும் சவாலை கொடுக்கின்றது

திமுக மிக ஆசுவாசமாக ஒரு பரிசோதனை தேர்தல் எனும் வகையில் வருகின்றது, அதாவது தானாக தன் கையில் விழபோகும் கனிக்கு ஏன் மிக மென்னகெட வேண்டும் எனும் சிந்தனை அது

இந்நிலையில் தேசிய கட்சிகள் நிலை என்னவென தெரியவில்லை, அவை வந்தும் ஒன்றும் கிழித்துவிட போவதில்லை

காங்கிரஸ் மூக்கை சீந்தி அழுதுகொண்டிருக்கின்றது, தேர்தல் தோல்விகளை கொஞ்சம் மறந்தாலும், திருநாவுக்கரசை நினைத்து மறுபடியும் ஓஓஓ என அழுகின்றது

தமிழிசை அவர் போக்கில் பேசிகொண்டிருக்கின்றார், அவருக்கு எங்கே கவுதமியினை நிறுத்திவிடுவார்களோ எனும் அச்சம் இருப்பது தெரிகின்றது.

வடக்கே பெரும் பலம் பெற்றுவிட்ட பாஜக இந்த தேர்தலில் பரிசோதனை செய்யலாம் தான், வலுவான வேட்பாளரை நிறுத்தி ஒரு ஆட்டம் ஆடித்தான் பார்க்கலாம், என்ன வந்துவிடும்

மோடி எனும் பிம்பம் நிச்சயம் குறிப்பிட்ட வாக்குகளை கொடுக்கத்தான் செய்யும், மொத்த இந்தியாவே எங்களை நம்பி வாக்களிக்கும்பொழுது தமிழக மக்களே நீங்கள் ஏன் நம்பகூடாது? என கேட்கலாம்தான்..

ஆனால் செய்வார்களா என தெரியாது, செய்தால் நன்றாகத்தான் இருக்கும்

ஆக பல சுவாரஸ்ய காட்சிகளோடு ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் நாளை நோக்கி நகர்கின்றது..

இதில் திராவிட கட்சிகளையும், தேசிய கட்சிகளையும் குழிதோண்டி புதைப்பேன் அதில் தமிழ்தேசிய கொடியினை பறக்கவிடுவேன் எனும் சைமனை காணவே இல்லை

ஒரு அதிமுக என்றாலே வாய் திறக்கமட்டார், இதில் ஏராளமான அதிமுக வந்தபின் அன்னார் வாய் திறப்பார்? ம்ஹூம்…

சுதந்திரம் பெற்ற காலங்களிலிருந்து , அதாவது தமிழகத்தில் ஜனநாயக தேர்தல் தொடங்கபட்ட காலங்களில் இருந்து , கடந்த 67 வருடமாக எல்லா தேர்தலில் கேட்ட , அந்த கரகரப்பான குரல் கேட்காத முதல் தேர்தல் இது.

எவ்வளவு தூரம் அந்த மனிதனும், எத்தனை தலைமுறையோடு தளராமல் ஓடி வந்திருக்கின்றார்…

அவர் வந்துவிட்டால் நன்றாக இருக்குமே என தேடிவிட்டு, கண்களை துடைத்துகொள்ளத்தான் முடிகின்றது…

அந்த கண்ணீரோடுதான் இந்த ஆட்டத்தினை பார்க்க வேண்டி இருக்கின்றது…


தினகரன் வெற்றி பெற மக்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள்: தமிழிசை

தினகரனுக்கு மட்டுமா ஆதரவளிக்க மாட்டார்கள்? ஏன்? நீங்களும் நின்று பார்க்க வேண்டியதுதானே..


 எனது வெற்றி உறுதியாகிவிட்டது; ஜெ.தீபா

அதாவது முற்றிவிட்டது., தேர்தல் முடிவு வந்தபின் எல்லாம் சரியாகிவிடும்..


 

பெரம்பலூரில் ஒரு மந்திரவாதி கைது…

பெரம்பலூரில் ஒரு மந்திரவாதியினை போலிசார் கைது செய்திருக்கின்றனர்

மனிதர் ஏராளமான மண்டையோடுகள், மை, தகடு இன்னபிற பொருட்களுடன் ஒரு இளம்பெண்ணின் சடலத்தையும் வைத்திருந்தாராம், அதாவது குடியிருப்பு நடுவே சுடுகாடு அமைத்திருக்கின்றான்

அவரை கைது செய்யும்பொழுது அவன் சொன்னதுதான் பேரதிர்ச்சி

“என்னை விடுங்கள், இது சசிகலா வெளிவருதற்கான உச்சகட்ட பூஜை. ஒருவாரம் செய்யவேண்டும், நான் வாக்குறுதி கொடுத்துவிட்டேன்

இது சின்னமாவிற்கான பூஜை, உங்களை விடமாட்டோம்” என ஆடியிருக்கின்றார்

கொஞ்சம் அரசியல் தெரிந்த மந்திரவாதி போலிருக்கின்றது, தப்பிக்க வழிதேடியிருக்கின்றான், பிடித்து அடைத்துவிட்டார்கள்

சசிகலா ஜோதிட, மந்திரங்களில் நம்பிக்கை உள்ளவர் என்ற செய்தியினை எப்படி எல்லாம் தனக்காக வளைத்திருக்கின்றான்.

அது மட்டுமல்ல அவனிடம் 2 ஆயிரம் ஆவி உள்ளதாம், ஏவி விட்டால் தமிழகம் தாங்காதாம், ஆனால் இதனால் தினகரனுக்கு 2 ஆயிரம் வோட்டு உறுதி என்றெல்லாம் அவன் சொல்லவில்லை..

இவனையும் பார்பன அக்ரஹார சிறையில் அடைக்கவேண்டும், மீதியினை சசிகலா பார்த்துகொள்வார், அவர் ஜெயா சமாதியில் அடித்த அடி எல்லோருக்கும் தெரியும்

இந்த மந்திரவாதி சசிகலாவிற்கான பூஜை என எதனையோ சொல்ல, உண்மையான அகோரி பூஜைக்கு ஆர்.கே நகர் மக்கள் தயாராகிகொண்டிருக்கின்றார்கள்..