திரைப்பட இயக்குனர்களில் மகா முக்கியமானவர் பாசில் ….

தென்னகத்து இயக்குனர்களில் மகா முக்கியமானவர் பாசில்

பூவே பூச்சுடவா, பொம்மு குட்டி அம்மாவுக்கு , காதலுக்கு மரியாதை என மிக நுண்ணிய உணர்வுகளை வெளிபடுத்திய பிரமாதமான இயக்குநர் அவர்

அழகான கதையினை அவர் தெர்ந்தெடுப்பதை விட அதற்கு பொருத்தமான நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுப்பதுதான் அவரின் திறமை.

பூவே பூச்சூடவா பத்மினியும், பொம்முகுட்டி அம்மாவுக்கு சுஹாசினியும் என்றும் நிலைத்த பாத்திரங்கள்….

மானிட வாழ்வின் பாச உணர்வுகளை அப்படி அழகாக படமாக்கியவர்,அற்புதமான படங்களை கொடுத்த அவரை மறக்கவே முடியாது

அதுவும் “வருஷம் 16” எனும் படத்தில் குஷ்பூவினை கொண்டுவந்த அவரை, நமக்கெல்லாம் குஷ்பூவினை மிக அழகாக மனதில் பதியவைத்த அவரை ஒரு குஷ்பூவின் தீவிர ரசிகனால் மறக்க முடியுமா?

அவர் என்றுமே குஷ்பூ ரசிகர்களின் பெரும் நன்றிக்குரியவர் என்பது மறுக்கமுடியாதது..

மனிதர் எவ்வளவு பெரும் ரசிகனாக இருந்திருந்தால் அந்த படத்தில் குஷ்பூவினை மிக சரியாக கொண்டுவந்திருப்பார்?

இன்றும் அவர் குஷ்பூவினை வைத்து “வருஷம் 46” என அடுத்த படம் எடுத்தால் நன்றாகத்தான் இருக்கும்..

குஷ்பூ ரசிகர்களின் சார்பாக அப்படி ஒரு கோரிக்கை வைக்கலாம் என தீவிரமாக‌ சிந்திக்கின்றோம்

விரைவில் சங்கம் கூடி முடிவெடுக்கும்…

தமிழகத்தை நேசிப்போர் அந்த பட்டினத்தார் சமாதியில் தியானம் செய்யலாம்…

No automatic alt text available.

தமிழகத்தில் ஜெயா, அண்ணா, எம்ஜிஆர் சமாதி என சுற்றிகொண்டிருக்கின்றார்கள், அதில் தியானம் எனும் இம்சை வேறு

உண்மையில் தியானம் செய்யவேண்டிய சமாதி சென்னை திருவொற்றியூரில் உண்டு, பட்டினத்தாரின் சமாதி அது.

பெரும் பணக்காரனான அவர், சொத்துக்களுக்கு ஆசைபட்ட உறவினர் பெண்ணின் நாடக‌ வாழ்வினை வெறுத்து ஞானியாகி பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தார்

பெண்ணால் பெரும் அழிவுவரும் என சொன்னது அவர், அதனால் பெண்ணால் பாதிக்கபட்ட மன்னர்கள் எல்லாம் அவருக்கு சீடரானார்கள், பத்ருஹரி மகாராஜாவும் ஒருவர்

இன்றும் பட்டினத்தார் பாடல்கள் செல்வத்தால் வரும் ஆபத்து பற்றியும், பெண்களின் பேராசை பற்றியும் சொல்லிகொண்டே இருக்கின்றன‌

இங்கு ஜெயா சமாதியில் எல்லோரும் தியானம், சசிகலா தியானம், பன்னீர் தியானம் தீபா தியானம், இப்பொழுது தீபா கணவர் தியானம் என அந்த சமாதி தியான பூமியாகிகொண்டிருக்கின்றது

ஆனால் உண்மையில் இவர்கள் தியானம் செய்துவிட்டு அரசியலை விட்டு ஓடவேண்டிய இடம் பட்டினத்தார் சமாதி

இவர்கள் இந்த நாடக சமாதியினை சுற்றிவந்து தமிழகத்தை வெறுப்பேற்றும்பொழுதெல்லாம் அந்த திருவொற்றியூரின் பட்டினத்தார் சமாதியே நினைவுக்கு வருகின்றது

பெண்ணால் கெட்டோம், நடிப்பால் கெட்டோம், பேராசையால் கெட்டோம் என தமிழர்கள் சுற்றவேண்டிய சமாதி அதுதான்

இந்த போலிகள் ஜெயா சமாதியினை சுற்றிகொண்டே இருக்கட்டும்

தமிழகத்தை நேசிப்போர் அந்த பட்டினத்தார் சமாதியினை நினைத்துகொள்ளலாம்..

 
 

தீபாவின் கணவர் புதுகட்சி தொடங்கினார்

தீபாவின் கணவர் புதுகட்சி தொடங்கினார்

1972 முதல் அது காமெடி கட்சிதான், ஆனால் இப்பொழுது உச்சகட்ட பெரும் காமெடி காட்சிகள் எல்லாம் நடக்கின்றன‌

15 ஆண்டுகள் ராமசந்திரன் என்பவர் செய்த காமெடிகளும், அவரின் அண்ணாயிசம் கருத்துக்களும் பெரும் பிரசித்திபெற்றவை

ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை புரிந்தாலும், ஒரு காலமும் எம்ஜிஆரை தவிர யாருக்கும் புரியாத கொள்கை அண்ணாயிசம்

1987ல் ஜாணகி எனும் பொம்மையினை வைத்தும் காமெடிகள் நடந்தன, ஜெயா எனும் எம்ஜிஆரின் வார்ப்பு ஒன்று பின் அந்த காமெடிகளை அடக்கி வைத்திருந்தது

“குனிந்து நிற்காதவன் குறுக்கிலே மிதி” , “ஜெயா முகத்தை நோக்கி பேசுவன் முகத்தில் ஆசிட் ஊற்று..” எனும் அளவில் கொடூர காமெடிகள் நடந்தன‌

அதுவும் உல்லாச மாளிகையில் இருந்து கொண்டு மக்களுக்காக நான் என்பதும் 1 ருபாய் சம்பளத்தில் உலகின் எல்லா செல்வங்களை குவித்த காமெடிகளும் குமாரசாமி தீர்ப்பு வரை தொடர்ந்தது

இன்று ஜெயா இல்லாததால் எப்படி காமெடி செய்யலாம் என ஆளாளுக்கு யோசித்தார்கள், சசிகலா வெளியே இருந்தவரை “ஒரு கட்டம் வரை பொறுப்போம்”, “நான் சிங்கம்”, கல்லறையில் அடித்து சத்தியம் என ஏகபட்ட காமெடிகளை செய்தார்

கூவத்தூரில் கட்டிவைத்து அடித்தாலும் , பாஷா ரஜினி போலவே சிரித்துகொண்டிருந்த 122 எம் எல் ஏக்கள் காமெடி இன்னொரு புறம், தமிழக பட்ஜெட்டை ஜெயா கல்லறையில் வைத்தது இன்னொருபுறம்,.

பன்னீர் காமெடி இன்னொரு ரகம், புத்தனுக்கு ஏதோ மரத்தடியில் ஞானம் வந்தது போல, அவருக்கு ஜெயா சமாதியில் ஞானம் வந்திருக்கின்றது, அவர் ஒரு கூட்டத்தை சேர்த்துகொண்டு எல்லோரையும் சிரிக்க வைக்கின்றார்

சசிகலாவிற்கு பின் தினகரன் காமெடியும் உச்சம் அடைகின்றது, 100 வருஷம் நாங்கள் ஆளுவோம், திமுகவினை விடமாட்டோம் என அவர் உட்கட்சியினரிடம் முதுகில் அடிவாங்கிகொண்டே சவால் விடுவது பெரும் காமெடி

எம்ஜிஆர் என்பவரே மறந்துவிட்ட நிலையில் நான் அவரின் அண்ணன் மகன் என்றொருவர் வந்து நிற்பது இன்னொரு காமெடி

தீபா என்பவர் இன்னொரு காமெடி, எங்கிருந்தார் என தெரியாதவர், திடீரென வந்து கட்சி போட்டி என்கின்றார், ஜெயா அவரின் அத்தையாம், அதனால் கட்சி அவருக்காம்

இப்பொழுது தீபாவின் கணவர் புதுகட்சி தொடங்குகின்றாராம், தீபாவே 4 வோட்டு வாங்குவாரா என்பது தெரியாது, இதில் இவர் கணவர் வேறு..

கழுதைக்கு ஒரு கட்சி என்றால், கழுதை வாலுக்கும் ஒரு கட்சி எனும் அளவில் அக்கட்சி காமெடி செய்துகொண்டிருக்கின்றது

இன்னும் ஜெயா வீட்டு சமையல்காரி மட்டும் கட்சி தொடங்கவில்லை, சசிகலா அதிமுகவிற்கு உரிமை கோருவதால் அந்த கணக்கு சரியாகிவிடுகின்றது

இனி யார் கட்சி தொடங்குவார்கள்?

ஜெயா இருந்தபொழுது குப்புற விழுந்து கிடந்தவர்கள், கால் வலிக்க நின்றவர்கள் எல்லாம் கட்சி தொடங்கும்பொழுது, ஜெயா அருகிலே அவருக்கு சரிக்கு சமமாக அமர்ந்தவர் கட்சி தொடங்கமாட்டாரா?

ஆம், அப்படி ஒரு தைரியமானவர் இருந்தார், அதுவும் ஜெயா எங்கு சென்றாலும் தைரியமாக ஜெயா பக்கம் மணிகணக்கில் அமர்ந்திருந்தார், அவரை ஒருநாளும் ஜெயா எழும்பு என அவமதித்ததில்லை,

அவர் ஜெயாவின் கார் டிரைவர், அவர் எழும்பி நின்று கார்வோட்ட முடியாதல்லவா? அதனால் ஜெயாவிற்கு அருகில் சரிசமமாக அமர்ந்திருந்தார்

பெரும் அமைச்சர்கள், மில்லினர்கள் எல்லாம் நின்றுகொண்டு பேசிய காலத்தில், தைரியமாக ஜெயா பக்கம் அமர்ந்திருந்தவர் அவர்தான்,

ஆக ஜெயா காலத்திலே அவருடன் சரிக்கு சமமாக அமர்ந்தவன் நான், ஜெயாவிடம் என் மதிப்பு அப்படி, அதனால் கட்சி எனக்குத்தான் என அவர் என்று கிளம்பபோகின்றாரோ தெரியவில்லை..

அன்றே சொன்னார் எம்.ஆர் ராதா “டேய் ராமசந்திரா, அரசியலுக்கு சில நல்லவர்கள், சிந்தனையாளர்கள் எல்லாம் இருக்காங்க அவங்க பாத்துபாங்க‌

உனக்கு எதுக்குடா அரசியல்”

ஆளாளுக்கு அதிமுகவில் கட்சி தொடங்கும் பொழுது ராதாவின் அந்த வசனம்தான் நினைவுக்கு வருகின்றது

“டேய் ராமசந்திரா.. உனக்கு எதுக்குடா அரசியல்”

இது கிறிஸ்தர்களுக்கு விரத காலமாம்…

இது கிறிஸ்தர்களுக்கு விரத காலமாம், பலர் விரதமிருக்கின்றனர், அதில் பாகம்பிரியாளும் ஒன்று

கர்த்தராகிய இயேசு நமக்காக உயிர்விட்டார் என இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் விரதமிருக்கின்றார்கள், நல்லது

ஆனால் ஆனானபட்ட இயேசுபிரானே எனக்காக உயிர்விட்டிருக்கின்றார் எனும்பொழுது, சில மீன்களும் கோழிகளும் ஆடும் எனக்காக உயிர்விட கூடாதா?

இப்படி சொல்லிவிட்டு எல்லாம் தயார்படுத்தியாயிற்று..

இயேசு எனக்காக ஜீவன் விட்டார், இதோ பல உயிர்களும் எனக்காக ஜீவனை விட்டுகொண்டிருக்கின்றது

எவ்வளவு பெரிய பாக்கியசாலி நான்..

“சந்தோஷம் பொங்குதே..சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே

அதுவும் மீன் குழம்பினை பார்த்துவிட்டால் மிக அதிகமாக பொங்குதே..”

நான் சொல்லும்படி கேட்டிருந்தால் குர்துகள் போல புலிகள் போராடி கொண்டிருப்பார்கள் : நார்வேயின் எரிக் சோல்ஹிம்

நான் சொல்லும்படி கேட்டிருந்தால் குர்துகள் போல புலிகள் போராடிகொண்டிருப்பார்கள் : நார்வேயின் எரிக் சோல்ஹிம்

ஈழதமிழரை விட பெரும் சிக்கலான இனம் குர்து, ஈழத்தின் எதிரி சிங்களம், கொஞ்சம் ராஜதந்திரமாக முயற்சித்திருந்தால் ஈழம் என்றோ தன்னாட்சி பிரதேசமாக மாறியிருக்கும், புலிகளின் பிடிவாதம் அதனை அழித்தது, புலிகளும் அழிந்தனர்

ஆனால் குர்து இனம் மூன்று நாடுகள் சந்திக்கும் முச்சந்தியில் சிக்கியது, சிரியா, துருக்கு, ஈராக் என முன்று நாடுகளை அவர்கள் சமாளிக்க வேண்டும்

குர்து போராளிகள் இந்த மூன்றுநாடுகளுடனும் தீரா யுத்தம் நடத்தினார்கள், சதாம் அவர்களை அடக்கிய கொடூரங்கள் ரணகளமானவை

இன்று ஈராக்கில் அவர்கள் சுயாட்சியாக அறிவித்தாகிவிட்டது, சிரியா இடியாப்ப சிக்கலில் தவிக்க அங்கும் இனி குர்துகளின் விடுதலை சாத்தியமே, துருக்கியிலும் அவர்கள் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்க ஆரம்பித்தாயிற்று

காரணம் ஐஎஸ் எனும் பெரும் அரக்க பூதத்தினை அசால்டாக குர்துபோராளிகள்தான் சமாளித்து நிற்கின்றனர். அந்த கொடூர இயக்கத்தை எதிர்த்து உலகமே கலங்கி நிற்க , அசால்ட்டாக சமாளித்து ஆச்சரியத்தை கொடுத்தது குர்து போராளிகளே

இதனால் இனி துருக்கியினை மட்டும் சமாளித்தால் குர்திஸ்தான் எனப்படும் குர்துகளின் நாடு விரைவில் உருவாகலாம் என சில கணிப்புகள் தோன்றுகின்றன‌

இதனைத்தான் எரிக் சொல்ஹிம் சொன்னார், நாங்கள் சொன்னபடி சில முடிவுகளுக்கு புலிகள் சம்மதித்திருந்தால் இன்று குர்துகள் போல தொடர்ந்து போராடிகொண்டிருப்பார்கள் என்கின்றார்

அது உண்மையும் கூட‌

குர்து போராட்டம் அப்படி காலத்தை அறிந்து போராடியதால் இன்று வெற்றிக்கு அருகில் இருக்கின்றார்கள்

தன்னாட்சிதான் ஆனால் அது வருங்காலத்தில் தனிநாடாகும் ஆரம்பம் என ஏற்றுகொண்ட பாலஸ்தீனம் இன்றும் போராட்டத்தை தொடர்கின்றது

ஆனால் புலிகள் மட்டும் நாசமாய் போனார்கள்

குர்துகளும், பாலஸ்தீனியரும் தொடரும் போராட்டம் புலிகளால் மட்டும் தொடரமுடியாமல் அழிந்து போனது ஏன்?

அதற்கு ஒரே காரணம் புலிகளின் வறட்டு பிடிவாதமும், எல்லோரையும் சந்தேகமாக பார்த்த குருட்டு திமிரும். அதனால்தான் எத்தனையோ பேர் செய்த உயிர்தியாகங்கள் வீணாயின.

1987ல் ராஜிவ்காந்தி இந்த சுயாட்சிக்குத்தான் பாடுபட்டார், அவரை போல பலர் பேசிபார்த்துவிட்டு தலைதெறிக்க ஓடினர், அவர்களில் எரிக்சோல்ஹிமும் இருவர்..

இன்று எரிக்சோல்ஹிம் அதனைத்தான் வருத்தத்தோடு சொல்கின்றார்

நாளை குர்திஸ்தானோ, பாலஸ்தீனமோ மலரும்பொழுது உலகம் இப்படித்தான் சொல்லும்

அது இருக்கட்டும்

எரிக்சோல்ஹிம் தமிழ்நாட்டு அரசியலில் இருந்தால் எப்படி அழைக்கபடுவார்?

தமிழின துரோகி, கலைஞரின் கூட்டாளி, சோனியாவின் அடியாள் எரிக்சோல்ஹிம் ஒழிக…

அவர் இந்திய அரசியலில் இல்லாததால் அவருக்கு அங்கிள் சைமன், திருமுருகன் காந்தி போன்றோரால் சிக்கல் இல்லை..

இன்னொன்று நார்வேகாரானை எல்லாம், ஐரோப்பியனை எல்லாம் இந்த திருட்டு முருகனும், சீமானும் திட்டமாட்டார்கள்

திட்டினால் எப்படி யூரோ வரும், வராது

அதனால் தம்பிடி வ்ருமானத்திற்கு வழியில்லாத‌ இல்லாத இந்திய அரசினையும், கலைஞரையும் திட்டிகொண்டே இருக்கலாம்

 
 
 

கன்னத்துல கிஸ்ஸுங்கோ … … மொட்ட ஷிவாடா..கெட்ட ஷிவாடா..

ஒரு பாடல் ஒலித்துகொண்டிருக்கின்றது

“கன்னத்துல கிஸ்ஸுங்கோ
கழுத்துல கிஸ்ஸுங்கோ
வயித்துல கிஸ்ஸுங்கோ..

ஜெஸ்ட் கொஞ்சம் மிஸ்ஸுங்கோ


மொட்ட ஷிவாடா..கெட்ட ஷிவாடா..”

பாடல் வரியிலே கெட்ட சிவா என்றபின் பாடல் இப்படித்தான் இருக்கும், படத்தின் ஆல் இன் ஆல் லாரன்ஸ் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

டாஸ்மாக்கில் சம்பாதித்து மக்களுக்கு கிரைண்டரும், மிக்ஸியும் இப்பொழுது ஸ்கூட்டியும் கொடுத்து ஏமாற்றிவிட்டால் அது அரசாங்கம்

இப்படி ஒரு மாதிரியான பாடல்களை வைத்து, அதில் சம்பாதித்து அவ்வப்போது அதற்கி ஒரு கோடி, இதற்கு பிரியாணி என சொன்னால் அது லாரன்ஸ் போன்ற சினிமாக்காரர்கள்

இதே பாடலை சிம்பு வைத்திருந்தால் எப்படி பொங்கியிருப்பார்கள், வீட்டில் சும்மா இருக்கும் உஷா ராஜேந்தரே கதற கதற அலப்பரை செய்திருப்பார்கள்

ஆனால் சிம்பு தவிர மற்ற யார் எழுதினாலும் பிரச்சினையே இல்லை, இம்மாதிரி பாடலை வைத்து ஆடியும் விட்டுதான் அவர் “மக்கள் சூப்பர் ஸ்டார்” என பட்டமும் வைத்துகொண்டார் போல‌

இப்படி எல்லாம் சம்பாதித்துதான் தமிழக சமூக சேவைக்கு அன்னாள் அள்ளிவிடுவதாக அறிவித்துகொண்டிருக்கின்றார்

பாடலை கவனித்தீர்களா? யாப்பிலக்கணம் அப்படியே அமைந்திருக்கின்றது, அடி, மடி, முடி எல்ல்லாம் சீர், தளை என பொருந்தியிருக்கின்றது

“தொடை” மட்டும் மிஸ்ஸுங்கோ….