தேர்தல் நேரத்தில் சிக்கி இருக்கும் கண்டெய்னர் …

பின்லேடன் அமெரிக்க இரட்டை கோபுரங்களை தகர்த்த பின், அமெரிக்காவில் அடுத்த தாக்குதல் எப்படி இருக்கலாம் என சிஐஏ மற்றும் எப்பிஐ போன்ற அமைப்புகள் எல்லாம் யாரிடம் விசாரித்தன தெரியுமா?

ஹாலிவுட் டைரக்கடர்களிடம். ஆம், அவர்களின் கற்பனா சக்தியில் சில சாத்தியங்கள் உண்டு, அப்படியும் நடக்கலாம் என எல்லா ஹாலிவுட் படங்களையும் பார்த்துவிட்டு, பின் அவர்களிடம் விவாதித்தும் விட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தினார்கள்

அதன்பின் இன்றுவரை அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கின்றது

தமிழகம் இதுவரை சினிமாவில் இருந்து முதல்வர்களை எடுத்ததே அன்றி, பாதுகாப்பு விஷயங்களை எல்லாம் எடுத்துகொள்ளவில்லை

ஆனால் பாருங்கள், சினிமா டைரக்டர்கள்தான் இப்படி எல்லாம் நடக்கலாம் என அன்றே எச்சரித்திருக்கின்றார்கள்

கோடிகணக்கான பணத்தினை கண்டெய்னரில் கடத்தலாம் என முதன் முதலில் திருடா திருடா படத்தில் சொல்லிகொடுத்தவர் நமது மணிரத்னம்

Image may contain: 1 person, glasses, sunglasses and close-up

இன்று திருப்பூரில் 570 கோடி கண்டெய்னர், சிறுதாவூர் கண்டெய்னர் என அது பிடிபட்டுகொண்டே இருக்கின்றது

துறைமுக கண்டெய்னர்கள் மீது எப்பொழுதும் கண் வைத்திருக்கவேண்டும் என சொன்னவர் டைரக்டர் ஹரி, சிங்கம் 3 வரை அதனைத்தான் சொன்னார்

இன்று சென்னை துறைமுகம் அல்லோலபட்டு கொண்டிருக்கின்றது, கண்டெய்னர் நிறைய பணம் வந்திருக்கின்றதாம், ஒரு கும்பல் அது ஆர்.கே நகருக்கான பணம் என்கின்றது

நாட்டுபற்று கோஷ்டி அதெல்லாம் கள்ளநோட்டு, மோடி பிடித்துவிட்டார் வாழ்க என சொல்லிகொண்டிருக்கின்றது

தேர்தல் நேரம், இப்படி ஒரு கண்டெய்னர் சிக்கியிருப்பது எங்கோ ஒரு விதை இரட்டை இலை விட கொண்டுவரப்பட்டிருக்கும் பணம், மரம் வளர்க்க கொண்டுவரபட்ட பணம் என்ற புகையும் வருகின்றது

இன்னும் எப்படி எல்லாம் கடத்தபோகின்றார்களோ தெரியாது

தேர்தல் கமிஷன் உடனடியாக ஆலோசிக்க வேண்டிய நபர் மணிரத்னம் முதலான டைரக்டர்கள்

எப்படி எல்லாம் பணம் கடத்தபடலாம் எனும் அனைத்து சாத்தியங்களும் அவர்களாலே ஊகிக்கபடுகின்றது

அது உண்மையாகவும் நடக்கும்பொழுது, அதனை முன் கூட்டியே தடுக்க காவல்துறை அவர்களை கலந்தாலோசிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஆக இனி ஸ்டோரி டிஸ்கஷன்களில் காவல்துறை நபரும் டீ பாய், அசிஸ்டெண்ட் டைரக்டர் , உதவி கதாசிரியர் எனும் வேடத்தில் ஊடுருவது தமிழகத்திற்கு நல்லது

ஆனானபட்ட சிஐஏ அதனை செய்யும்பொழுது தமிழகத்து யார்டு போலிஸ் செய்ய கூடாதா?

இந்த கண்டெய்னர் சிக்கும்பொழுதெல்லாம் மணிரத்னம் தான் நினைவுக்கு வருகின்றார்

மனிதர் எப்படி எல்லாம் யோசிக்கின்றார்?

இன்னும் என்னென்ன சாத்தியங்களை எல்லாம் மனிதர் யோசித்து வைத்திருக்கின்றாரோ தெரியாது

மனிதர் வாயினை திறக்கவும் மாட்டார், கோடி கொடுத்தாலும் 4 வார்த்தைதான் பேசுவார்

எப்படியோ போலிஸ் பட்ஜெட்டில் ரகசிய நிதியினை சினிமா டைரக்கடர்களுக்கும் ஒதுக்க வேண்டிய நேரம் நெருங்கிகொண்டிருக்கின்றது

அப்படி ஒதுக்கினால் பெரும் தொகை முதலில் மணிரத்தினத்திற்குத்தான், ஹரி எல்லாம் இரண்டாம் பட்சம்

அப்படி கொடுத்தாலும் மணிரத்னம் வாய்திறந்து எவ்வளவு தொகை என சொல்லவா போகின்றார்? அவர் அப்படித்தான்..ரகசியம் 100% கன்பார்ம்….

 

இளையராஜா எஸ்பி. பாலசுப்ரமணியம் ……

 

எந்த பெரும் கலைஞனுக்கும் தன் வித்தையில் ஒரு கர்வம் இருக்கும், தன் வித்தையில் எந்த நிலையிலும் தன்னால் உயர்ந்து நிற்க முடியும் என்ற தன்னபிக்கை அது

கலைஞர்கள் என்றல்ல, திறமையான எல்லோருக்கும் அவர்கள் துறையில் தன் இடம் என்ன என நிரூபிக்கும் ஒரு வெறி இருந்துகொண்டே இருக்கும், அதற்கு சோதனை வரும்பொழுதெல்லாம் அதனை நிரூபித்துகொண்டே இருப்பார்கள்

இளையராஜா அதனை எத்தனையோ முறை நிரூபித்துவிட்டார், நிச்சயமாக தமிழ் திரைப்பட உலகில் அவர் ஒரு சகாப்தம், வரலாறு

அவருக்கான இடம் என்றும் அவருக்கானது என்பதில் சந்தேகமே இல்லை

ஆனால் அவர் ஏன் தன் தகுதியினை மறந்து பல சர்ச்சைகளில் சிக்குகின்றார் என்பதுதான் புரியவில்லை

வைரமுத்துவுடனான அவருடன் பிரிவு நிச்சயம் தமிழ் திரையிசைக்கு இழப்பு, இன்றும் பாருங்கள் கடல் படத்தில் “நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்” பாடலில் வைரமுத்து அப்படியே இருக்கின்றார்

இளையராஜாவும் அப்படியே இருக்கின்றார், இருவருக்கும் இழப்பேதுமில்லை , இழப்பு ரசிகர்களுக்கே

Image may contain: 1 person, beard and close-up

அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது இப்பொழுது இளையரஜாவுக்கு வழக்கமாயிற்று, ரகுமானை சீண்டுவது,தன் பாடலை ரெகார்டிங் செய்தவர் மீது சர்ச்சை என அவ்வப்போது சிக்கிகொண்டே இருந்தார்

கங்கை அமரனை கூட அவர் கழ்ற்றிவிட்டிருந்தார்

இப்பொழுது எஸ்பி பாலசுப்பிரமணியம் தன் பாடல்களை பாட கூடாது என நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றார்

இளையராஜா திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் பாடலுக்கு அவர் மட்டும் சொந்தம்கொண்டாட முடியாது

பாடல் ஆசிரியர், பாடியவர் முக்கியமாக பணம் கொடுத்த தயாரிப்பாளர் என எல்லோரின் கூட்டுமுயற்சி அது

இளையராஜா பணம் வாங்கிகொண்டுதான் இசை அமைத்தார், அதோடு அந்த பாடல் அவருக்கு சொந்தமில்லாதது ஆயிற்று

இளையராஜா அது எந்நாளும் அது என்பாடல் என சர்ச்சையில் இறங்குவாரானால், பாடல் எழுதிய வைரமுத்து இறங்கமாட்டாரா?

ஏன்? என் குரலில் பாடிய பாடலை வேறுயாரும் பாட கூடாது என ஜேசுதாசு, பால்சுப்பிரமணியனும், சித்ராவும், ஜாணகியும் வந்து நின்றால் எந்த பாடல் ஒலிக்கும்?

இதோ இளையராஜாவின் இசை எந்த நொடியும் நீங்காமல் உலகில் ஏதாவது ஒரு இடத்தில் ஒலித்துகொண்டே இருக்கின்றது, இன்னும் ஒலிக்கும்

ரேடியோ, டிவி, இணையம் என எங்காவது ஒலித்துகொண்டேதான் இருக்கும்..

அங்கெல்லாம் சென்று இது என் படைப்பு என அவரால் தடுக்க முடியுமா? அது ஏற்றுகொள்ள கூடியதா?

இளையராஜாவின் கலைஞன் எனும் கர்வம் பாராட்ட கூடியது, ஆனால் இப்படி வம்புக்கு வந்து நிற்பது முகம் சுளிக்க வைக்கின்றது

ஓவியம், சிற்பம், இசை என எத்தனை கலைஞர்கள் வாழ்ந்த உலகமிது, அவர்களின் படைப்பு காலத்திற்கும் நிற்கும், ஆனால் அவர்கள் காலத்திற்கும் நிற்கபோவதில்லை

கலைஞன் என்பவன் கலையில் தன்னை சாகாமல் நிறுத்திகொள்பவன், இளையராஜா அப்படி நிறுத்திய பின்னும் ஏன் இப்படி செய்கின்றார் என்பது மகா குழப்பமானது

அதுவும் முதிர்ந்தவயதில் , பெரும் புகழை ஈட்டியபின் அவர் இப்படி நடந்துகொள்வது நிச்சயம் அவரின் தகுதிக்கு ஈடானது அல்ல, அல்லவே அல்ல‌

எல்லா கலைஞனுக்கும் ஒரு உச்ச காலம் உண்டு, அவன் ஓய்வெடுக்கவும் ஒரு காலம் உண்டு , இந்த நியதிக்கு யாரும் தப்ப முடியாது

எந்த புகழோடு ஓய்ந்திருந்தார்களோ, அந்த புகழுடனே கடைசிவரை அவர்கள் இருந்துவிடுவதுதான் நல்லது

இளையராஜா இப்படி தடுமாற கூடாது என்பதுதான் எல்லொரின் விருப்பமும்

தமிழிசையின் பெரும் அடையாளம் அவர், அவரை கொண்டாடி உச்சத்தில் வைத்ததும் இதே தமிழ் உலகம்

அந்த தமிழர்கள் என் உத்தரவின்றி என் இசையினை கேட்க கூடாது என அவர் சொல்வது நிச்சயம் சரி ஆகாது

“எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு”

அதாவது ஒருவன் உலகம் பரிகசிக்காத, தன் நிலைக்கு இழுக்கு வரும் காரியங்களை எண்ணி செயல்படவேண்டும் என்கின்றான் வள்ளுவன்

கம்பன், ராஜராஜ சோழன் முதல், பெரும் சிற்பிகள் வரை தங்கள் கலைகளை தமிழருக்கு விட்டுத்தான் சென்றிருக்கின்றார்கள்

அவர்கள் படைப்புகள் இருக்கும் வரை அவர்களும் இருப்பார்கள், இளையராஜாவும் அந்த இடத்தினை என்றோ அடைந்துவிட்டார்

அதனை மீறி இன்னும் அவர் புகழ் அடைய ஒன்றுமே இல்லை, இனி அந்த புகழை காத்து நின்றாலே போதும்….

தூய தமிழ் பிரியர்களின் இம்சை தாங்க முடியவில்லை..

சில தமிழ்பிரியர்கள் இம்சை தாங்கமுடியவில்லை, புழக்கத்தில் இருக்கும் ஆங்கில பெயர்களுக்கு தமிழ் பெயர்கள் மாற்றுவதில் கடுமையாக உழைக்கின்றார்கள், 24 மணி நேரமும் சிந்திக்கின்றார்கள்

உலகில் தன் மொழி சொற்களை 100% கொண்ட மொழி என எதுவுமில்லை. எல்லா மொழியிலும் எல்லா மொழி சொற்களும் கலந்தே இருக்கின்றன‌

இல்லாவிட்டால் அரசியலில் நேர்மையானவர்கள் அனாதை ஆவது போல பல மொழிகள் ஓரங்கட்டபடும்

ஆங்கிலத்தின் ஸ்பெஷலே எல்லா மொழி வார்த்தைகளையும் கிரகித்து தன்மொழியாக்கி கொண்டதுதான்

அது இருக்கட்டும்..

சில தமிழர்கள் இப்பொழுது செல்பி எனப்படும் சொல்லுக்கு தமிழாக்கம் செய்துகொண்டிருக்கின்றார்கள்

முதலில் “சுய படம்” என்றார்கள், பின் யோசித்தார்கள். அவனவன் எடுக்கும் படம் அவனுக்கு சுயம் தானே, அவன் எடுக்கும் படத்தில் அவன் தானே இருப்பான் என குழம்பினார்கள்

பின் “சுயமி” என அழைத்தார்கள்.

அது ஏதோ விஷமி போல இருப்பதாக பின் குழம்பினார்கள்

மறுபடி அறிஞர் கூட்டம் கூடி ஆராய்ந்து “தன் படம்” என செல்பி அழைக்கபடும் என முடிவினை சொல்லிவிட்டது

ஒருவன் தான் எடுக்கும் படத்தில் அவந்தானே இருப்பான், அப்படியானால் “அவன் படம்” என சொல்லலாம் என புறக்கணித்தது ஒரு குழு

முடியாது சொந்தமாக அவனே எடுப்பதால் “சொந்த படம்” என சொல்லலாம் என ஆலோசனை கொடுத்தது

அது ஏற்றுகொள்ளபடவில்லை, அப்படியானால் கமலஹாசன், தனுஷ் போன்றவர்கள் எடுப்பது குழப்பும் அல்லவா? என சொல்லி தலையினை சொறிந்தார்கள்

“போன் படம்” என சொல்லிபார்த்து விட்டும் தலையாட்டிவிட்டார்கள், “கேமரா படம்” என சொல்வோமா? என ஆலோசித்துவிட்டு , கேமராவில்தானே படம் எடுக்கின்றார்கள்? வரையவா செய்கின்றார்கள் என குழம்பிவிட்டார்கள்

இறுதியில் தன் படம் என்பதே கொஞ்சநாளைக்கு இருக்கட்டும் என விட்டுவிட்டார்கள், ஆராய்ச்சி தொடர்கின்றதாம்

நம்முடைய கருத்து என்னவென்றால் , இந்த இணைய உலகில் செல்பி சொந்தரவு தாங்க முடியவில்லை, பிணத்தோடு எல்லாம் செல்பி எடுக்கும் அளவு நிலை மோசமாகிவிட்டது

அதனால் “தன் படம்” என்பதை கூட “தம்பட்டம்” என மாற்றி கொள்ளலாம்

“சுய தம்பட்டம்” இன்னும் நல்ல பெயராக இருக்கும்..

சதி செய்து என கணவனை பிரித்துவிட்டார் சசிகலா : தீபா கண்ணீர்

Image may contain: 1 person, selfie and close-up

எனக்கெதிராக சதி செய்து என கணவனை பிரித்துவிட்டார் சசிகலா : தீபா கண்ணீர்

அதிமுக தலமை எப்பொழுதும் அப்படித்தான், எம்ஜிஆர் பிரிக்காத ஜோடிகளா, குடும்பங்களா?

அந்த தெலுங்கு நடிகரிடம் இருந்து கூட பிரதான நாயகியினை யார் பிரித்தார் என்பதெல்லாம் வரலாறு

ஜெயா பிரிக்காத குடும்பங்களா? தாமரை கனியின் மகன் முதல் மு.க முத்துவரை எத்தனை பேரை குடும்பத்திற்கு எதிராக நிறுத்தினார்??

சசிகலாவினையே பிரித்து தன்னோடு வைத்திருந்தவர் அல்லவா அவர்.

அக்கட்சியின் பாரம்பரியம் அப்படி, கலாசாரம் அப்படி

இன்று அந்த கட்சியின் தலமைக்கு வந்திருக்கும் சசிகலா சிலபேரையாவது பிரிக்காவிட்டால் கட்சியின் பாரம்பரித்தினை காப்பாற்றுவது எப்படி?

இதோ தன் பங்கிற்கு தீபா குடும்பத்தை பிரித்து தன் கட்சியின் பாரம்பரியத்தினை காப்பாற்றிவிட்டார், கட்சி தலமைக்கு தான் பொருத்தமானவர் என நிரூபித்தும் விட்டார்

ஏம்மா தீபா? அரசியல் என்றால் டாஸ்மாக் கடையில் பீர் வாங்கி வருவது போல அவ்வளவு சுலபம் என்றா நினைத்து வந்தீர்கள்?

அரசியல் எப்படிபட்டது, எப்படி எல்லாம் அடிக்கும் , எப்படி எல்லாம் கண்ணை கட்டி அடிப்பார்கள் என்பது தெரியாமலா வந்தீர்கள்?

அரசியல் சூது எப்படி என முதல்முறையாக உணர்கின்றார் தீபா,

அம்மணி இதற்கே அசந்துவிட்டால் எப்படி? இன்னும் எவ்வளவு இருக்கின்றது

இந்த தளர்வினை எல்லாம் போக்கி தன்னம்பிக்கை பெறவேண்டுமென்றால் கலைஞர் படத்தினை அடிக்கடி பார்த்துகொள்ளுங்கள்

வோட்டினை வேண்டுமானால் உங்கள் அத்தை போன்ற முகம் வாங்கிதரலாம், ஆனால் அரசியல் சூதினை வெல்வது எப்படி என‌ நீங்கள் கலைஞரிடம்தான் படித்தாக வேண்டும்