நடிகை சாவித்திரி வாழ்க்கை திரைப்படமாக…

தமிழில் எத்தனை நடிகைகள் நடித்தாலும், தனக்கென தனி இடம் பெற்றிருந்தவர் சாவித்திரி

அவரின் வாழ்வு அவ்வளவு விசித்திரமானது, அவரை போல வாழ்ந்தவருமில்லை, அவரை போல வறுமையில் வாடியவருமில்லை

ஆயிரம் திருப்பங்கள் நிரம்பிய மிக வித்தியாசமான வாழ்வு அவருடையது, வெறும் 45 வயதிற்குள்ளே வாழ்க்கையின் எல்லா பக்கங்களையும் பார்த்துவிட்டு மறைந்தவர் அவர்

இன்று அவரின் வாழ்வினை திரைபடமாக எடுக்க போகின்றார்களாம்

நயந்தாராவும், சமந்தாவும் நடிக்க போகின்றார்களாம்

நயன் சிறந்த நடிகை என்பதில் சந்தேகமில்லை, ஆனால் சாவித்திரி பாத்திரத்திற்கு உருவ ஒற்றுமையுடன் பொருந்துவாரா என்பது நிச்சயம் முடியாது

சமந்தா ஒரு பொம்மை, அவரெல்லாம் சாவித்திரியின் கண்களுக்கு கூட நடிப்பினை கொடுக்கமுடியாது

சாவித்திரி பாத்திரத்திற்கு நயனையும், சமந்தாவினையும் எப்படி யோசித்தார்கள் என்றே தெரியாது

இன்றைய நிலையில் சாவித்திரி கதைக்கு, அவரின் திறமையோடும், உருவத்தோடும் ஒரு நடிகை பொருந்தமுடியுமென்றால் அது குஷ்பூ மட்டுமே

மிக கச்சிதமாக அந்த பாத்திரத்திற்கு பொருந்துவார்

நான் என்ன சொல்வது, நீங்களே கற்பனை செய்யுங்கள் மிக அருமையாக பொருந்துவார்

நான் குஷ்பூ ரசிகன் என்பதற்காக அல்ல, அந்த சாவித்திரிக்கு இனி திரையில் உருவம் கொடுக்க குஷ்பூவினை தவிர யாராலும் முடியாது

இதோ பாசமலர் படம் ஓடிகொண்டிருக்கின்றது, சாவித்திரி அற்புதமாக நடித்துகொண்டிருக்கின்றார்.

நயன், சமந்தா எல்லாம் அந்த வேடத்திற்கு நினைத்தாலே சிரிப்புத்தான் வருகின்றது

அந்த நடிப்பினை அவரின் தோற்றத்திற்கு இப்போதைக்கு குஷ்பூவினை தவிர யாராலும் நிரப்ப முடியாது..

சென்னையில் குடிநீர் பஞ்சம்

சென்னையில் குடிநீர் பஞ்சம் தொடங்கிவிட்டது என்கின்றன செய்திகள், அதோடு சில சர்ச்சைகளும் வருகின்றன‌

அதாவது கடந்தவெள்ளத்தில் புழல் ஏரி நிரம்பியதும், பின் பராமரிப்பு சரியால்லாத அந்த ஏரியில் நீர் நிற்காமல் ஓடியதும் எல்லோருக்கும் தெரிந்தது

அதன் பின் அரசு பெரும் நிதி ஒதுக்கி அதனை பாராமரிக்க சொன்னதும் செய்திகள்

இன்று புழல் ஏரி வற்றுகின்றது, அது பராமரிக்கபட்டதாக தகவலே இல்லை, ஒதுக்கபட்ட நிதி என்னாயிற்று எனவும் தெரியவில்லை

அந்த புழல் ஏரிக்கு ஒதுக்கபட்ட நிதி மர்மத்துடனே, இப்பொழுது அதனை சுற்றி கிணறுகளில் நீர் இருக்கின்றதா என தேடுகின்றது தமிழக அரசு

புழலுக்கு ஒதுக்கிய நிதி விழலுக்கு எங்கோ பாய்ந்துவிட்டது..

இனி மழை வந்தாலும் புழலில் நீர் முழுவதும் சேமிப்பது சிரமம், காரணம் பராமரிப்பு நடைபெறவில்லை, நிதி எல்லாம் ஸ்வாஹா..

ஆக புழலில் ஊழல் நடந்திருக்கலாம் என செய்திகள் சொல்கின்றன, இது புழலுக்கு மட்டுமல்ல பெரும் ஏரிகள் நிலை எல்லாம் இதுதான் என்கின்றார்கள்

இதனை எல்லாம் எந்த ஊடகமும் எழுதாது , எந்த டிவியும் சொல்லாது

ஆனால் கலைஞர் என சொல்லுங்கள் வீராணம் ஏரி என கிளம்புவார்கள்

அதிமுக ஆட்சியில் ஏரிகள் என்னாயிற்று என்றால் சத்தமே இருக்காது

அந்த மனிதன் எது செய்தாலும் ஊழல் என குதிப்பார்கள், மற்றவர்கள் ஊழல் செய்தாலும் கம்மென்று ஒன்றுமே நடக்காதது போல இருந்துவிடுவார்கள்..

தமிழகத்தில் இப்படித்தான் பத்திரிகா தர்மம் தலைகீழாக நிற்கின்றது..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மதிமுக புறக்கணிப்பு: வைகோ

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மதிமுக புறக்கணிப்பு: எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை- வைகோ

இப்படி சட்டமன்ற தேர்தலில் ஒதுங்கியிருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்குமா?

சசிகலாவினை ஆதரித்த வைகோ, தினகரனை ஏன் ஆதரிக்க மறுக்கின்றார்?? என்ன காரணம்?

வைகோ அவர்களே, உங்கள் ராசி உலகமே அறியும். தினகரனை ஆதரித்து தமிழகத்தை காப்பாற்றுமாறு கேட்டுகொள்கின்றோம்

ஆனால் செய்யமாட்டீர், தமிழகத்திற்கு நல்ல விஷயம் எதனைத்தான் நீர் செய்தீர்?, ஒன்றுமே இல்லை

அப்படி இந்த தேர்தலிலும் இவர் நன்மை செய்ய போவதில்லை..


இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் சென்னை விமான நிலையத்தில் தம்பிதுரை பேட்டி

வழக்கமாக இடிந்துவிடும் விமான நிலைய கூரையினை கோபமாக நினைத்து கொள்ளலாம்,

விழவேண்டிய நேரத்தில் அக்கூரை விழுவதே இல்லை…


ஆஸ்திரேலியாவில் இந்திய கிறிஸ்தவ‌ மதபோதகருக்கு கத்திக் குத்து

ஆஸ்திரேலியாவில் இந்திய கிறிஸ்தவ‌ மதபோதகருக்கு கத்திக் குத்து

பின்னே, ஆஸ்திரேலியாகாரனுக்கு கிறிஸ்தவம் தெரியாதா? இங்கிருந்து அங்கு சென்று ஏன் கிறிஸ்தவ போதனை செய்ய வேண்டும்?

கிறிஸ்துவை அறியாத தேசத்தில் சென்று பேசி இவர் குத்து வாங்கினால் நமக்கே அனுதாபம் வரும்

முழுக்க கிறிஸ்தவ தேசமான ஆஸ்திரேலியாவில் இவர் புதிதாக கிறிஸ்தவம் பேச என்ன வந்தது?

குத்தியவனும் கிறிஸ்தவன் என்பது குறிப்பிடதக்கது,

மனிதர் மிகவும் இந்த போதகர்களின் இம்சையால் பாதிக்கபட்டிருப்பார் போல‌, பலர் இவரை போல‌ பாதிக்கபட்டிருக்கலாம், இவர் குத்தும் போது சிலர் இப்படி கத்தியிருக்கலாம்…

“குத்துங்க எஜமான் குத்துங்க,

இந்த போதகர்களே இப்படித்தான், பொய்யனுக, பிராடுக, இவனுக இம்சை தாங்கல..

அவனுகள குத்தணும்

குத்துங்க எஜமான் குத்துங்க….”

இளநீர் திருவிழா நடத்தும் சீமான்…

Image may contain: 1 person, text

அந்நிய குளிர்பானங்களை புறக்கணிக்க அன்னார் இளநீர் திருவிழா நடத்துகின்றாராம்

தமிழக அரசு டாஸ்மாக் என்றொரு பான கடை வைத்திருக்கின்றதே, அது என்ன இயற்கை பொருளா?

தமிழகத்தின் எல்லா மதுகடை முன்னும் சென்று அன்னார் இளநீர் திருவிழா நடத்துவாரா என்றால் இல்லை

சரி முன்பு கள் தமிழரின் தேசியபானம் என்றார் அல்லவா?, அப்படி மதுக்கடை முன் கள் திருவிழா நடத்துவாரா என்றாலும் இல்லை.

முன்புதான் வந்தேறிகள் ஆட்சியில் மது ஆறாக ஓடியது, இந்த பச்சை தமிழன் பழனிச்சாமி ஆட்சியிலுமா ஓடுவது என அங்கிள் சீறினால் என்ன?

அதனை எல்லாம் செய்யமாட்டார்..

மாறாக இயற்கை பானங்களை குடிப்போம் , அந்நிய பானங்களை புறக்கணிப்போம் என கிளம்புகின்றாராம்

அந்த அந்நிய பானங்களின் தமிழக டீலர்கள் யார்?, வைகுண்ட ராஜன் போன்றவர்களுக்கு அந்த தொழில் உண்டு அல்லவா என்றேல்லாம் அன்னாரை யாரும் கேட்க கூடாது

அந்நிய குளிர்பானத்தை விற்கும் தமிழனை அங்கிள் கண்டுகொள்ளமாட்டார், மாறாக எங்காவது மூலையில் இளநீர், கரும்புசாறு என குட்டிகரணம் அடிப்பார்

5 கோடி பேரை திரட்டி ஈழத்தை மீட்க கிளம்பிய அங்கிள், பின் 50 ஆயிடம் பேரை திரட்டி கச்சதீவை மீட்கும் அளவுக்கு பின்வாங்கி

இப்பொழுது 500 பேருடன் இளநீரை மீட்க கிளம்பிவிட்டார்

நாளை 5 பேருடன் எதை மீட்பாரோ தெரியாது..

ஆர்.கே நகரில் “நாம் தமிழர்கள், ஊழலை எதிர்ப்போம் தமிழகத்தை காப்போம், தினகரன் வென்றால் முதல்வாகிவிடுவார் என் சொந்தங்களே…” என அங்கிள் தினகரனை எதிர்த்து வீரமாக முழங்குவார் என எதிர்பார்த்தால்..

தமிழக அரசு மன்னார்குடி கும்பலிடம் நேரடியாக தினகரன் முதல்வராகி சிக்கிவிடும் சூழலில் இவர் ஏதாவது சொல்வார், தொண்டை கிழிய கத்துவார் என நோக்கினால்..

அவரோ எங்கோ ஹாயாக இளநீர் குடிக்க போகின்றாராம்….

நன்றாக இளநீராக குடிக்கட்டும், வயிறு நிரம்பட்டும், சிறுநீரகம் அதன் வேலையினை செய்யட்டும்

அதன் பின் ஆர்.கே நகர் தேர்தல் முடிவு அறிவிக்கபடும்பொழுது இவர் எங்கிருப்பார் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்…

 

சிம்புவின் புதிய படம் AAA …

வழக்கமான தன் அல்ட்ராசிட்டி டைட்டிலுடன் டிரைலர் வெளியிட்டிருக்கின்றார் சிம்பு, படம் AAA என்னமோ என அவரே வைத்துவிட்டார்

அது சென்சாரில் A வாங்கவேண்டிய படம் என அவரே ஒரு வசனமும் பேசுகின்றார் “இது பொண்ணுங்களே தொடாத டி.ஆர் படம் இல்லடா, பொண்ணுங்க உதட்ட பிச்சி எறியிற எஸ்.டி.ஆர் படம்”

முகம் நிறைய தாடியும், வாய் நிறைய பஞ்ச் டயலாக்கும், 1000 டெசிபலில் சத்தமான டண்டனக்காவும், வைத்திருந்தால் எந்த நடிகையாப்பா டி.ஆர் பக்கம் வருவாள்??

இதில் டி.ஆர் பெண்களை தொடவே இல்லை என பெருமை வேறு, ஒரு கரடி குட்டியினை அருகில் விட்டால் கூடத்தான் பயந்து ஓடியே விடும்.

பெண்ணின் உதட்டை கடிப்பது ஏதோ செவ்வாய்க்கு சென்று ஆப்பிள் கடிப்பது போல மிக கஷ்டமான காரியம் என சிம்பு டிரைலரில் சீறிகொண்டிருக்கின்றார்

உருப்படுமா?

தயாரிப்பாளர் ராயப்பனை இனி வாடிகனின் ராயப்பர்தான் காப்பாற்றவேண்டும்…

சிம்பு பிறந்தவுடன்” இவன் ஒருகாலமும் திருந்திவிடவே கூடாதுப்பா சாமி..” என ஏதோ ஒரு கோயிலில் நேர்ந்து விட்டிருக்கின்றார்கள்

அது மிக சக்தியான தெய்வம் போலிருக்கின்றது, சிம்புவினை திருந்தவே விடாது, சிம்புவும் திருந்தவே மாட்டார்..

இளையராஜா போல வடிவேலுவும் பொங்கி எழுந்தால் ஆதித்யா டிவி திவாலாகிவிடும்

இந்த இளையராஜா போல வடிவேலுவும் பொங்கி எழுந்தால் ஆதித்யா டிவி திவாலாகிவிடும்

மற்ற எல்லா டிவிக்களும் பெரும் தொகை கொடுக்க நேரும், இன்னும் ஏராளமான இன்றைய காமெடியன்கள் வடிவேலுவுக்கு வரிகட்ட வேண்டி வரும்

பில்கேட்ஸினை விட வடிவேலுதான் பணக்காரராக இருப்பார்…

செந்திலும், கவுண்டமணியும் அட்லீஸ்ட் அம்பானி அளவிற்காவது சென்றுவிடுவார்கள் என்பது உறுதி..

குஷ்பூ எவ்வளவு பெருந்தன்மையானவர்,

என் படங்களை என் அனுமதியின்றி பயன்படுத்தகூடாது என என்றாவது சொல்லியிருக்கின்றாரா?

அப்படி சொன்னால் நாமெல்லாம் இந்த உலகத்தில் வாழத்தான் முடியுமா? அப்படி ஒரு வாழ்க்கை வாழத்தான் வேண்டுமா?

Image may contain: 1 person, standing

குஷ்பூ படங்களை நான் பார்த்த கணக்கிற்கு ராயல்டி வேண்டுமென்றால் என் 10 தலைமுறை சம்பாதித்தாலும் முடியாது…

 

அங்கிள் பாய்ஸ், எங்கே சென்றீர்கள் ?

எப்படி தெலுங்கரான பால சுப்பிரமணியம் தமிழரான இளையராஜாவுடன் மோதலாம், தமிழ்நாட்டில் தமிழ் இசை அமைப்பாளருக்கும் சிக்கலா?

விடமுடியுமா?

அங்கிள் பாய்ஸ், எங்கே சென்றீர்கள்

இதோ ஒரு தமிழன் தெலுங்கரால் பாதிக்கபட்டிருக்கின்றதாக சொல்லிகொண்டிருக்கின்றார்.

தமிழரான கங்கை அமரனின் வீட்டை ஒரு தமிழச்சி சசிகலா அபகரித்திருக்கலாம், அது தமிழர் பிரச்சினை என நீங்கள் விட்டுவிடுவீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்

ஆனால் இளையராஜாவுடன் மல்லுகட்டும் ஒரு தெலுங்கரை எப்படி விடுவீர்கள்?

எங்கே உங்கள் பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் மற்றும் வீர முழக்கங்கள்??

 
 
 

மதவெறி எவ்வளவு கொடுமையானது…

கோவையில் ஒரு இஸ்லாமியர் சில சொந்த கருத்துக்களுக்காக தன் சொந்த மக்களால் கொல்லபட்டிருக்கின்றார்

மதவெறி எவ்வளவு கொடுமையானது என அப்பட்டமாக தெரியும் நேரமிது

தாலிபான்களும், ஐஎஸ் இயக்கமும் செய்வதை கோவை மண்ணிலும் பார்க்கும்பொழுது பகீர் என்றுதான் இருக்க்கின்றது, அவன் மதத்தை ஏற்றான் அல்லது நிராகரித்தான் என்பதை பொறுத்தா இந்த பூமியில் வாழும் உரிமை நிர்ணயிக்கபடும்???

சிங்கமும், புலியும், கரப்பானும் வாழும் பூமியில் ஒரு மானிடன் வாழகூடாதா?

இவ்வளவு நடந்திருக்கின்றது, இஸ்லாமிய சங்கங்கள் கடும் அமைதி

ஆனால் ஒரு வேற்றுமதத்துகாரன் கொன்றிருந்தால் இந்நேரம் தமிழகத்தில் யார் வசிக்கமுடியும்?

இந்தியாவில் மோடி ஆட்சியின் படுகொலைகளை பாரீர் என வீதிக்கு வந்திருப்பார்கள், பெரும் கலவரமே வெடித்திருக்கும்

அதாவது அவர்களை அவர்களே கொல்லலாம், கழுத்தறுத்து துடிக்க துடிக்க கொல்லலாம், சத்தமே இருக்காது, ஆனால் அடுத்தவன் அடிக்க கூட விடமாட்டார்கள்

அவன் எந்தமதமாகவும் இருக்கட்டும் கவலையில்லை, ஆனால் இந்த தேசம் மதவெறியில் ஒரு குடிமகனை இழந்திருக்கின்றது, மானிட சமூகம் ஒரு மனிதனை இழந்திருக்கின்றது

இப்படி சக மனிதனை கொன்றுவிட்டு அவர்களுக்கு கிடைக்கபோவது என்ன கடவுளின் அருளா?

இல்லை, நிச்சயம் இல்லை

சாத்தான் கூட அவர்களை சேர்க்காது, இவர்களை கண்டாலே வெறுத்து ஒதுக்கும்., சாத்தானே வெறுக்கும் கொடூரம் இது

அந்த மானிடனுக்கு சக மானிடனாக ஆழ்ந்த அஞ்சலி…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ….

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், வைகோ முடிவு

தினகரன் தோற்பாரா இல்லையா என்பதை விட, திமுக வென்றுவிட கூடாது என்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கின்றார்கள் பார்த்தீர்களா? இதுதான் மக்கள் நல கூட்டணி

ஒரு கொள்ளை கும்பலிடம் இருந்து தொகுதியினை மீட்க வேண்டும் என்ற சிந்தனை கொஞ்சம் கூட இல்லாத இவர்கள்தான், தமிழ்நாட்டினை காப்பாற்ற கிளம்பியவர்களாம்..

கடந்த தேர்தலில் இவர்கள் கூட்டணி எப்படி ஏற்பட்டது என்ற மர்மம் இன்னும் புரியாதவனெல்லாம் உத்திரபிரதேசம் செல்ல முழு தகுதியுள்ளவன்..