கமலஹாசன் மீது வள்ளியூரில் வழக்குபதிவு …

கமலஹாசன் மீது நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வழக்குபதிவு

அதாவது மஹாபாரதம் பற்றி கமலஹாசன் அவதூறு பேசிவிட்டாராம், உடனே வழக்கு தொடர்ந்துவிட்டார்கள்

ஒரு காலத்தில் பெரியாரும் அவரின் அடிப்பொடிகளும் பேசிய அளவிற்கு எல்லாம் கமலஹாசன் பேசவில்லை, இவர்களுக்கு அந்த பேச்சுக்கள் எல்லாம் தெரியாது போல, தெரிந்தால் ஓடி சென்று கன்னியாகுமரி கடலுக்க்குள் குதித்து செத்துபோவார்கள்

பெரியார் கேட்டது அம்மாதிரியான கேள்விகள், இப்பொழுது பிரச்சினை பெரியார் அல்ல, கமலஹாசன்

கமலஹாசனை பலர் கவனித்துகொண்டே இருப்பார்கள், ரசிப்பார்கள் ஆனால் எதிர்ப்பு எனும் பெயரில் வேறு மாதிரி காரியம் சாதிப்பார்கள்

அதாவது அவர் படத்தால் பிரச்சினை வரலாம், ( பிரச்சினை நிச்சயம் இவர்களால்தான் வரும் என்பது வேறுவிஷயம்) எங்களுக்கு போட்டு காட்டிவிட்டு ரிலீஸ் செய்யட்டும் என சவால் விடுவார்கள்

கமலஹாசனும் திரையிட்டு காட்டுவார், இவர்களோ முதல் காட்சிக்கு முந்தைய காட்சியினை இலவசமாக பார்த்துவிட்டு எப்படி எங்கள் சாமார்த்தியம் என கியூவில் நிற்கும் ரசிகர்களை ஏளனமாக பார்ப்பார்கள்

ஒரு பைசா செலவில்லாமல் முதன் முதலில் கமலஹாசன் படம் பார்ப்பதற்கு அவரை படாத பாடு படுத்துவார்கள்,

பெரும் அறிவாளிகள் அப்படித்தான்

இப்பொழுது சிலருக்கு கமலஹாசனை அருகிருந்து பார்க்கும் ஆசை வந்திருக்கின்றது, சென்னைக்கு சென்று அவரிடம் அப்பாயின்மென்ட் வாங்கி, சே எவ்வளவு அலைச்சல், செலவு?

அவர் செலவிலே அவர் வந்து நம்மை பார்க்குமாறு செய்துவிட்டால் என்ன என யோசித்திருக்கின்றார்கள்

வசமான இடம்பார்த்து கமலஹாசனை கோர்ட்டுக்கு இழுத்தாயிற்று, இனி அவர் வந்து நிற்கும்பொழுது கண்குளிர பார்த்துகொள்ளலாம்

கேஸ் வாபஸ் என சொல்லி செல்பியும் எடுத்துகொள்ளலாம்

எப்படி ஐடியா பார்த்தீர்களா?

இம்மாதிரியான ஐடியாக்கள் எல்லாம் தோழி Uma Magi அவர்களுக்கு வராது, அப்பாவியான அவர் காலமெல்லாம் “ஐ லவ் யூ கமலஹாசன்”, “வான்ட் டு சீ யூ டார்லிங்’ என சொல்லிகொண்டே இருக்க வேண்டியதுதான்

இப்படி எல்லாம் சிந்திக்க ஒரு குருட்டு குறுக்குமூளை வேண்டும், தோழி Uma Magi நம்மை போல அப்பாவி என்பதால் இப்படி எல்லாம் சிந்திப்பதில்லை,

சிந்திக்கவும் தெரியாது.

 
 
 

டிடிவி தினகரனை சந்தித்தார் வைகுண்டராஜன், இன்னும் பிற….

டிடிவி தினகரனை சந்தித்தார் வைகுண்டராஜன்.

நெல்லையில் கலெக்டரின் நடவடிக்கை இறுகுகின்றது, வைகுண்டராஜனின் அலுவலகத்தை இடிக்க அளந்துகொண்டிருக்கின்றார்கள்

என்ன மர்மமோ தெரியவில்லை, வழக்கமாக எந்த கலெக்டர் அவரை எச்சரித்தாலும் அடுத்த நொடி மாறுதல் கடிதம் வரும் சம்பிரதாயம் கருணாகரனுக்கு வரவே இல்லை

இந்நிலையில் மிக வேகமாக ஓடிசென்று தினகரனை சந்தித்திருக்கின்றார் அண்ணாச்சி

சசிகலா குடும்பம் எதிர்பார்த்தது நிச்சயம் இதனைத்தான்..

இதன் மூலம் சசிகலா கும்பல் உலகிற்கு சொல்வரும் விஷயம் இரண்டு

முதலாவது தமிழகத்தில் உள்ள எல்லா தொழிலதிபர்களும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, இன்று தமிழகத்தை ஆள்வது நிச்சயம் தினகரன் தான்.

இரண்டாவது விஷயம் ஆனானபட்ட வைகுண்டராஜனே எங்களிடம் கதறும்பொழுது பன்னீருக்கோ, தீபாவிற்கோ எவனாவது பைனான்ஸ் செய்தால் விடமாட்டோம்

இப்படி தமிழகத்திற்கு சொல்லாமல் சொல்கின்றார்கள், இல்லாவிட்டால் தொலைபேசியில் பேசவேண்டிய விஷயம் எல்லாம் இப்படி தமிழக செய்தியாக வெளிவருமா?

ஆக அண்ணாச்சி தினகரனை பார்த்துவிட்டார் அல்லவா?, இனி அவரின் கட்டடம் இடிக்கடுமா? இடிபடாதா என்பதை பொறுத்து இந்த சந்திப்பின் முடிவு பின்னாளில் தெரியவரும்

நெல்லை கலெக்டரின் நடவடிக்கை அவரின் சொந்த நடவடிக்கையா? இல்லை யாருக்காகாவாது களமிறங்கினாரா என்பதும் தெரியவரும்

கலெக்டர் நிலைதான் இப்பொழுது சிக்கல், இனி அவர் பின்வாங்கினால் அவர் பெயர் கெட்டுவிடும், முன்சென்று கட்டத்தை இடித்தால் அரசு சிக்கல் வரலாம்..

ஆக ஒரு அரசியல்வாதியும், ஒரு தொழிலதிபரும் ஒரு கலெக்டருக்கு “சத்திய சோதனை” வைத்திருக்கின்றார்கள்


 சிங்கப்பூர் குடியுரிமை விவகாரம், திமுக சொல்வதை நம்பாதீர் : தினகரன் ஆவேசம்

முன்பு அமலாக்கதுறை வழக்கின்பொழுது நான் சிங்கப்பூர் குடிமகன் என்றது இவர்தான்

இன்று நான் மண்ணின் மைந்தன் என சொல்வதும் இவர்தான்

அதாவது வழக்கு என்றால் சிங்கப்பூர் குடிமகனாகவும், பதவி என்றால் தமிழ்குடிமகனாகவும் அன்னார் மாறிகொள்வார்

இதில் திமுக எங்கிருந்து வந்தது?

முன்பெல்லாம் அதிமுகவினர் பேசி முடிக்கும்பொழுது “அம்மா வாழ்க” என சொல்லி முடிப்பார்கள், இப்பொழுதெல்லாம் என்ன கேட்டாலும் “திமுக ஒழிக” என்று சொல்லியே முடிக்கின்றார்கள்

பாவம் அவர்களே ஒருமாதிரி ஆகிவிட்டார்கள்..

ஒன்றா இரண்டா சிக்கல்?


 

 அதிமுக ஆலோசனை கூட்டத்தில் வளர்மதியும் , நிர்மலா பெரியசாமியும் மோதல்

எம்ஜிஆருக்கு பின் அது முழுக்க பெண்கள் கட்சியாக போய்விட்டது

எம்ஜிஆருக்கு பின்பு அக்கட்சிக்கு பெண்களே சண்டையிடுகின்றார்கள், ஜாணகி, ஜெயா, சசிகலா என அது தொடர்ந்தது

எங்கே சசிகலாவோடு அது முடிந்துவிடுமோ? நமீதா வேறு கட்சியில் காணவில்லையே என்ற அச்சத்தில் மண் அள்ளி போட்டிருக்கின்றார்கள் வளர்மதியும், நிர்மலாவும்

ஒரு பெண்ணின் இடத்திற்கு பெண்கள் போட்டியிடுவது அவர்கள் கட்சி கொள்கைபடி நல்லது

நிர்மலா பெரியசாமி சாமான்யர் அல்ல, கலைஞர் சட்டசபைக்கு வந்தால் வேட்டியினை உருவிவிடுவோமா என கேட்டவர்

இங்கு நாஞ்சில் சம்பத் மோதியிருந்தால் அவர் வேட்டிக்கு ஆபத்து வந்திருக்கும்

ஆனால் வளர்மதியும், சி.ஆர் சரஸ்வதியும் வேட்டி கட்டாமல் சேலை கட்டியிருந்தால் சிக்கல் இல்லை…


ஆர்.கே நகரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்தார் சீமான்

அங்கிள் சைமனுக்கும் அவ்வப்போது ஒரு ஆடு சிக்கிகொள்கின்றது,

கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படியளக்கும் ஈசன், அவருக்கும் ஒரு வேட்பாளரை கொடுத்துவிடுகின்றான்.

அரசியல் கணக்கிலும் ஆண்டவன் மிக கரெக்டாக இருப்பார் போல..


 
 
 

இளையராஜா காப்புரிமை கேட்பது வரவேற்கதக்கது : விஷால்

இளையராஜா காப்புரிமை கேட்பது வரவேற்கதக்கது : விஷால்

அப்படியானால் பாடல் எழுதியனுக்கு ஒன்றுமே இல்லையா?

இளையரஜாவிடம் வாத்தியங்கள் வாசித்தவனுக்கு ஒன்றுமே இல்லையா?

அதாவது இளையராஜா மட்டும்தான் 100 வாத்தியங்களை வாசித்து, அவரே பாட்டு எழுதி, அவரே பலகுரலில் பாடி, அவரின் சொந்த தியேட்டரில் ரெக்கார்டிங் செய்தார், சவுண்ட் இஞ்ஜினியராகவும் அவரே இருந்தார்.

இப்படித்தான் விஷால் சொல்ல வருகின்றார்…

விஷாலுக்கு என்ன சந்தோஷம்? என்றோ ஓடிய இவரின் ஒரே ஒரு படத்திற்கு திரும்ப திரும்ப ராயல்டி கேட்கலாம் எனும் திட்டமாக இருக்குமோ?

தீராத விளையாட்டு பிள்ளை போன்ற மொக்கை படங்களுக்கு எல்லாம் டிக்கெட் எடுத்த ரசிகன் நஷ்ட ஈடு கேட்டால் இவர் தாங்குவாரா?

திருப்தியில்லா படத்தின் டிக்கெட்டில் பாதி திருப்பி தரப்படும் என சொல்லிவிட்டு இதனை விஷால் வரவேற்றிருந்தால் நன்றாக இருக்கும்

மிஸ்டர் விஷால் அப்படி சொல்ல முடியுமா?

போகிற போக்கில் ராமராஜனை கூட ராயல்டி கேட்க வைத்துவிடுவார்கள் போல..

இளையராஜாவின் பாடலுக்கு மாங்குயிலே.. பூங்குயிலே என ஆடி ஹிட் ஆக்கிய‌ அவருக்கு ராயல்டி இல்லை என்றால் எப்படி?

ராமராஜனை விடுங்கள்

“நிலா அது வானத்து மேலே..” குயிலி, “ராத்திரி நேரத்து பூஜையில்.” டிஸ்கோ சாந்தி எல்லாம் ராயல்டி கேட்டால் நாடு தாங்குமா?

 
 

உலகின் பெரும் பணக்காரர் பட்டியல்…

உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் வாரன் பெப்பெட் 3ம் இடத்தில் இருக்கின்றார், பில்கேட்சுக்கு அதே முதலிடம்

முகநூல் நிறுவணர் மார்க் 8ம் இடம் சென்றுவிட்டார், போலி முகநூல் கணக்கினை எல்லாம் மூடிவிட்டார்கள் போலிருக்கின்றது

கார்லோஸ் ஸ்லிம் 7ம் இடத்திற்கு தள்ளபட்டுவிட்டார்

முதல் 50 பேர் பட்டியலில் ஆசியாவில் இருந்து சவுதி அரேபிய சுல்தானும் , அம்பானி, அசிஸ் பிரேம்ஜி என சில ஆசியர்களும் வருகின்றனர்

எமக்கு சந்தேகம் எல்லாம் எப்படி திமுகவினராக இல்லாமல், அதுவும் கலைஞர் குடும்பமாக இல்லாமல் இவர்களால் முதல் 50 இடத்திற்கு வரமுடிகின்றது?

தமிழ்நாட்டில் யாரை கேட்டாலும் கருணாநிதி தன் குடும்பத்தை உலக பணக்காராக்கிவிட்டார், கட்சிக்காரர்களை பெரும் மில்லியனராக்கிவிட்டார் என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்

இந்த பில்கேட்சும், கார்லோசும், மார்க்கும், அம்பானியும் திமுக மாநாடுகளில் பேனர் பிடித்தோ, கலைஞர் அரசில் அமைச்சராகவோ யாரும் கண்டிருக்க மாட்டீர்கள்.

சவுதி சுல்தானும், அம்பானியும் திமுக போஸ்டர் ஒட்டியதாகவும் சரித்திரமில்லை..

வாரன் பெப்பட், அசீஸ் பிரேம்ஜி, கார்லோஸ் எல்லாம் கலைஞரின் அக்கா பிள்ளைகளும் அல்ல‌

பின் எப்படி உலக பணக்காரர்கள் ஆனார்கள்? என என் பாமர மூளைக்கு எட்டவே இல்லை

தமிழகத்தில் பிறந்துவளர்ந்தவர்களுக்கு போதிக்கபடுவதெல்லாம் கலைஞர் தன் குடும்பத்தார் எல்லோரையும் பணக்காராக்கினார், அதுவும் உலக பணக்காரனாக்கினார் என்பது.

ஒன்றுமே புரியாமல் இதனை பற்றி சிலரிடம் கேட்டால், அவர்கள் எல்லாம் கலைஞரின் பினாமி, சர்க்காரியா கமிஷனுக்கு பின் கலைஞரால் உருவாக்கபட்ட அவரின் பினாமிகள் என சிரிக்காமல் சொல்கின்றார்கள்

 
 
 

இரட்டை இலை யாருக்கு ? கண்டெய்னர் பணம் யாருடையது??

இரட்டைஇலை சின்னத்தை எனக்கே சொந்தம், காரணம் நான் ஜெயாவின் வாரிசு; தீபா

பன்னீரும், சசிகலாவும் அதற்குத்தான் மல்லுகட்டுகின்றார்கள், ஆளுக்கொரு இலை கொடுத்தாலும் அதில் இருப்பதோ இரு இலைதான்

என்ன செய்யலாம், இலையினை பிய்த்தபின் வெறும் கம்பு இருக்குமல்லவா? அது வேண்டுமானால் தீபாவிற்கு கிடைக்கலாம்

அத்தை வீடு வேண்டாம், அரண்மனை வேண்டாம், தோட்டம் வேண்டாம், சமாதி கூட வேண்டாம்

ஆனால் அத்தை கட்சியின் சின்னம் மட்டும் வாரிசுபடி இவருக்கு வேண்டும்


சென்னை துறைமுகத்தில் கண்டெய்னரில் வந்த பணம் பற்றிய செய்திகள் என்ன ஆனது?

அது கள்ளநோட்டு என்றால் அனுப்பியது யார்? யாருக்கு அனுப்பினார்கள்?

நல்லநோட்டு என்றாலும் அது யாருக்கு சொந்தமான பணம்?

இதை எல்லாம் மறைத்து இளையராஜா, அமரன், பாலசுப்பிரமணியம், தீபா , அவரின் கணவன், இரட்டை இலை யாருக்கு என தலைப்பு செய்திகள் பத்திரிகைகளால் சொல்லபடுகின்றன‌

இனி அந்த பணம் பற்றிய மர்மம் வெளிவரும்?

தமிழக அரசுக்கு 4 லட்சம் கோடி கடனாம், ஆனால் தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் கண்டெய்னர் எல்லாம் பணமாம்

சேகர் ரெட்டி முதல் திருப்பூர் குடோன் வரை பணமாம்..

எப்படி சாத்தியம்?

ஒரு மண்ணாங்கட்டியும் புரியாது, இதுதான் தமிழகம்.


 
 
 

தினமும் நான்கு மணிநேரம் மட்டுமே உறங்கும் உ.பி முதல்வர் …

தினமும் நான்கு மணிநேரம் மட்டுமே உறங்கும் உ.பி., முதல்வர் பத்திரிகைகளில் செய்தி

முன்பு குஜராத்தின் மோடியினை இப்படித்தான் பெரிதாக்கினார்கள், இப்பொழுது யோகிக்கு வந்துவிட்டார்கள்

அவர் அப்படி இப்படி, என மோடிக்கு என்ன பில்டப் கொடுத்தார்களோ, அதனை இவருக்கும் கொடுக்க தொடங்கியாயிற்று

அவர் பெரும் நீச்சல் வீரர், பேட்மிட்டன் சாம்பியன் என வாய்பிளக்கின்றது ஒரு பத்திரிகை, அப்படியா? ஒலிம்பிக் அனுப்புவோமா?

அமெரிக்க பெல்ப்ஸூடன் நீந்தி சிலபதக்கமும், சீனாவின் லிண்டானுடன் பேட்மிட்டன் விளையாடி சில பதக்கமும் கொண்டுவருவாரா? என்றால் பதிலிருக்காது.

இந்த மோடியிடம் ஏதோ அதிருப்தி கண்டிருக்கின்றார்கள், அடுத்தவரை உருவாக்க கிளம்பிவிட்டார்கள்

விரைவில் மோடி Vs யோகி பனிப்போர் தொடங்கலாம்..

ஒரு மனிதன் என்ன செய்கின்றான், அதன் பயன் என்ன? என்பதுதான் முக்கியமே தவிர, அவன் எவ்வளவு நேரம் உறங்குகின்றான் என்பதா முக்கியம்?

உலகை அழிக்க கிளம்பிய ஹிட்லர் ஒரு நாளைக்கு 2 மணிநேரம் தான் உறங்கினானாம், அவனை பெரும் உழைப்பாளி, சேவகன் என சொல்லிவிட முடியுமா?

இரட்டை கோபுர இடிப்பு காலங்களில் பின்லேடன் நாட்கணக்காக உறங்கவே இல்லையாம்..

அதுவும் உழைப்பா?

 
 
 

நடிகர் தனுஷ் வழக்கில் திருப்பம்

தனுஷ் வழக்கில் திருப்பம் : அங்க அடையாளங்களை லேசர் மூலம் அழித்திருக்கின்றார் என பரபரப்பு

அதாகபட்டது நடிகர் தனுஷ் எங்கள் மகன் என சிங்கங்கை மாவட்ட தம்பதி ஒன்று வாதிட்டு வருகின்றது, காணாமல் போன தங்கள் மகன் தான் தனுஷ் எனவும், அவரது அங்க அடையாளம் (தழும்பு, மச்சம் இன்னபிற) பள்ளி சான்றிதழ்படி இது எனவும் குறிக்கபட்டிருந்ததை சமர்பித்தது.

நீதிமன்றம் சோதனைக்கு உத்தரவிட்டது

தனுஷை அழைத்தால் நீதிமன்றம் செல்லாமல் இருக்க அவர் என்ன கமிஷனர் ஜார்ஜா? பள்ளி சான்றிதழ்படி தனுஷின் அடையாளங்களை சோதித்த மருத்துவர்கள் அவை லேசர் மூலம் நீக்கபட்ட தகவலை உறுதிபடுத்தியுள்ளனர்

ஆக தனுஷ் ஏதோ தகிடுதித்தோம் வேலை செய்திருப்பது உறுதியாகின்றது

இனி நீதிமன்றம் டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க சொல்லலாம் என தகவல்கள் வருகின்றன?

தனுஷ் என்ன செய்வார்? ஏதும் வெளிநாடு சென்று டி.என்.ஏ வினை மாற்றிவிடுவாரோ? அப்படி எல்லாம் முடியாது

பொதுவாக அங்கிள் சீமான் கட்சியினர்தான் இந்த டி.என்.ஏ டெஸ்ட் எல்லாம் பற்றி பேசுவார்கள், அதனை எடுத்தால் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பரம்பரை வரை கண்டறியலாம் என்பார்கள்

இனி தனுஷூக்கு அந்த சோதனை செய்யபடலாம்

அவர் யார் மகன் என தெரிவதில் அந்த தம்பதி ஆர்வமாக இருக்க, ரஜினி அப்படி ஒன்று நடந்துவிட்டால் நமக்கு இரு சம்பந்தியா? என யோசித்து கொண்டிருக்க…

நாம் தமிழர் கட்சியினரோ அவர் தமிழரா இல்லையா என அறிந்துவிடலாம் என பெரும் எதிர்பார்ப்பில் இருக்கலாம்..