முத்து என்றொரு படம்…

அது ரஜினிகாந்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த காலம், ஜெயலலிதாவுடன் அவருக்கு பிரச்சினை இருந்த காலம்

அப்பொழுதுதான் முத்து என்றொரு படம் வந்தது, தன் படத்தில் அரசியல் பொடி தூவும் ரஜினி அதிலும் தூவியிருந்தார்

அதாவது மீனாவும், காந்திமதியும் , வடிவேலுவும்(ஜெயா சசிகலா தினகரன்) எல்லாம் நாடக கம்பெனி நடத்துவார்கள், நாடகம் பார்க்கும் ரஜினிக்கும் மீனாவிற்கும் மோதும்

நான் நடிக்கும் பொழுது நீ எப்படி தும்மலாம் என மீனா கேட்க, தும்மினால் கூட தப்பா? என காட்சிகள் தொடங்கும்

பின் அரசியல் வசனங்கள் தூள்பறக்கும், ரமேஷ் கிருஷ்ணா ஜால்ரா வசனங்களில் ரஜினியினை மேடை ஏற்றுவார்கள், ரஜினி என்னவெல்லாமோ பேசுவார்

இது தியேட்டருக்குள் நடந்தாலும், தமிழகமெங்கும் ரஜினி அரசியலுக்கு வருவது போலவும், ஜெயாவினை அவர் பகிரங்கமாக எதிர்த்து பேசிவிட்டது போலவும் பரவசபட்டுகொண்டார்கள்

கிட்டதட்ட 20 வருடங்கள் ஆகின்றன‌

இன்று அந்த நாடகம் வேறுமாதிரி நடக்கின்றது, மீனா இல்லை, ஆனால் காந்திமதியும் , வடிவேலுவும் இருக்கின்றனர் அதுவும் வடிவேலு மன்னராகிவிட்டார்

ரஜினி நாடகம் பார்த்துகொண்டிருக்கின்றார்

எங்கே தும்மல் சத்தம் வரும்? இத்தனைக்கும் பல சரத்பாபு எஜமான்கள் “தும்மு முத்து தும்மு” என்றாலும் ம்ஹூம்..

மீனாவிற்கு எதிராக பொங்கிய ரஜினி, காந்திமதிக்கும் வடிவேலுக்கும் கனத்த மவுனம் காட்டுவதுதான் ஆச்சரியம்

 
 
 

அப்பாவியான மனைவி எவ்வளவு பெரும் வரம் …

திருமணத்திற்கு என்னவெல்லாம் கேட்கின்றார்கள் இக்கால பெண்கள்? கோபிநாத் முன் வைக்கும் கோரிக்கைகளை கண்டால் அம்பானி குடும்பங்களை போன்றோரை தவிர யாருக்கும் திருமணம் ஆக வாய்ப்பில்லை

எனக்கென்னமோ அந்த ஜட்டிசாமியார் தன் மகளுக்கு செய்த அந்த ஹெலிகாப்டர் சகித திருமணம் இந்த பெண்களை பாதித்திருக்கலாம், அவருக்கென்ன “அத்தனைக்கும் ஆசைபடு” என மகளுக்கும் சொல்லியிருக்கின்றார்

அந்த பெண்கள் சொல்லவரும் விஷயம் “அம்மா அப்பாவினை கொன்றாவது சொத்துக்களை கொண்டு செல்வேன், புருஷனிடம் சொத்து இல்லை என்றால் அவனையும் கொல்வேன்”

உடன்பிறந்தவர்களை கொஞ்சமும் நினைத்துபார்க்க தோன்றவில்லை, அவர்களை பங்குபோட வந்த பகையாளியாகவே நினைக்கின்றனர்

விட்டால் கொலையே செய்வார்கள் போலிருக்கின்றது..

கொலையும் செய்வாள் பத்தினி அல்ல, புதுபெண்ணும் கூட என மாற்றவேண்டியதுதான்

அதில் பேசிகொண்டிருந்த பெண்களில் யாருக்கும் தான் சம்பாதித்துகொள்ளலாம், ஏன் அப்பா சொத்துக்கும் , மாமனார் சொத்துக்கும் ஆசைபடவேண்டும் என்று தோன்றவே இல்லை

சம்பாதிக்கும் தன்னபிக்கையினை அறவே இழந்துவிட்டு, அப்பன் சொத்து, ஆத்துக்காரன் சொத்து என அடுக்கிகொண்டே இருக்கின்றார்கள்.

அவர்கள் சம்பாதித்தது அவர்களுக்கு, நமக்கு தேவையானதை நாம் சம்பாதித்துகொள்ளலாம் எனும் சிந்தனை கொஞ்சம் இல்லை. அப்படி ஒரு சிந்தனையே இல்லை

வீட்டின் சேர், கட்டிலை கூட விட்டுகொடுக்க மனமில்லை

மிக மிக சுயநலமான சமூகமாக மாறிகொண்டிருக்கின்றோமோ எனும் அச்சம் வருகின்றது, இது காமெடி நிகழ்ச்சியாகவே இருக்கட்டும் என மனம் சிந்திக்கின்றது

எல்லாம் அப்பாவும், அம்மாவும் , கணவனும் கொடுத்தால் இவர்கள் வாழ்வில் சம்பாதிக்கபோவது என்ன?

ஒரு குருவி கூட தன் தாய் தந்தையரின் கூட்டிற்கு சண்டையிடாது, அதுவாக தனியாக கட்டிகொள்ளும்..

அந்த 3 அறிவு பறவைகளை விடவா நம் சமூகம் அறிவுகெட்டு போயிற்று?

பெற்றோரிடம் இவ்வளவு கேட்கும் இவர்கள், நாளை தங்கள் பிள்ளைகளுக்கு என்ன கொடுப்பார்கள் என சிந்திப்பதே இல்லை

நொடிபொழுதில் மாறும் வாழ்க்கை எனும் தத்துவத்தை மறந்து, ஏதோ 5 ஆயிரம் வருடம் வாழபோவதை போல பேசி கொண்டிருக்கின்றார்கள்.

திட்டமிடுவது மனிதன் , திருமணம் எனும் பயிர் காலத்திற்கும் நிலைக்க ஆண்டவன் ஆசியே வேண்டும், அவன் அல்லவா நினைக்கவேண்டும்..

இவர்கள் செய்யபோகும் திருமணத்திற்கு, இவர்கள் வாழ்வில் அடியெடுத்து வைப்பதற்கு உலகம் என்ன நினைத்தால் இவர்களுக்கென்ன? ஆனால் உலகத்திற்காகவே திருமணம் செய்வது போல பேசிகொண்டிருக்கின்றார்கள்.

உலகம் தங்களை பற்றியே நினைத்துகொண்டிருப்பதாக நினைப்பு இருந்தாலன்றி இந்த ஆசை எல்லாம் வராது..

நாளை இவர்களுக்கு வாழ்வில் சரிவு என்றால் உலகம் ஓடி வந்து உதவுமா? நிச்சயம் இல்லை..

சிரியாவிலும், லிபியாவிலும், ஈராக்கிலும் அடுத்தவேளை உயிரோடு இருப்போமா என அந்த பெண்கள் அஞ்சிகொண்டிருக்க, சில ஆப்ரிக்க நாடுகளில் அடுத்தவேளை உணவிற்கு வழியின்றி பெண்கள் கதறிகொண்டிருக்க இவர்கள் ஆசை எங்கிருக்கின்றது?

நாளையே இலங்கை வழியாக சீனா படையெடுத்தால், நாமும் அந்த நிலையினை அடைய அரை நாழிகை ஆகாது..

80 சவரன் என்ன? எத்தனை கிலோ நகைகள் அணிந்து, தங்க கட்டிலில் படுத்து, தங்க தட்டில் உண்ட பெரும் மகாராணிகளின் எலும்பு கூடு கூட எங்கிருக்கின்றது என தெரியவில்லை

அலெக்ஸாண்டரின் கல்லறையினை கூட உலகம் தேடுகின்றது…

வாழ்வு என்பது விசித்திரமான ஒன்று, நொடியில் கடந்து போகும் மின்னலை போன்றது, இதில் இவ்வளவு ஆசைகளா?

இவர்கள் வெளிசொல்லும் ஆசையே இவ்வளவு இருந்தால், சொல்லாத ஆசைகள் எவ்வளவு இருக்கும்? பெண்ணின் மனம் ஆழமானது என வேறு சொல்லி தொலைக்கின்றார்கள்.

பெற்று வளர்த்து, படிக்க வைத்தபின் தனக்கான வாழ்வினை தானே அமைத்துகொள்ள முடியாமல் பெற்றவர்களை எதிர்நோக்கும் இவர்கள் என்ன சம்பாதித்து கிழிக்க போகின்றார்கள்?

அந்த பழத்தினை தின்றால் நீ கடவுளாவாய் என பாம்பு சொன்னவுடன், கடவுளின் கட்டளையினை மீறி செத்தாலும் கணவனோடு சாவோம் என பழம் கொடுத்த வம்சம்,

ஒரு பிள்ளையினை உலகம் சுற்ற அனுப்பிவிட்டு இன்னொரு பிள்ளைக்கு ரகசியமாய் பழம் கொடுத்த வம்சம் இப்படித்தான் இருக்கும்…

இந்த கொலைவெறி சூழலில் எனக்கெல்லாம் திருமணம் முடிந்தது எவ்வளவு பெரும் விஷயம்?, தாமதமாகத்தான் புரிகின்றது.

இவர்கள் கட்டளைகளை கண்டால், பாகம்பிரியாளை வணங்கிவிட்டு வானத்தை நோக்கி கத்த தோன்றுகின்றது

அப்பாவியான மனைவி எவ்வளவு பெரும் வரம்.

“இயேசப்பா..கோட்டான கோடி நன்றி இயேசப்பா.. கோட்டான கோடி நன்றி”

ஜூன் 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தபடும் : செய்தி

ஜூன் 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தபடும் : செய்தி

சும்மாவே எகிறிகொண்டிருக்கும் விலைவாசியில் எண்ணெய் ஊற்றுகின்றார்கள், ஜூனிலிருந்து பெரும் விலைவாசி உயர்வு இருக்கலாம்

சிறு, குறு வியாபாரிகளை முன்னமே தயார்படுத்திவிட்டு வசூலிக்க ஆரம்பித்தால் சிக்கல் பெரும்பான்மையாக இருக்காது, இல்லாவிட்டால் வியாபார உலகம் பெரும் சிக்கலை சந்திக்க நேரும்

இந்த புதுவிதமான வரிவிதிப்பு அவர்களுக்கு தொடக்கத்தில் பெரும் குழப்பத்தை கொண்டுவரும் என்பது உறுதி

மக்களுக்கு இது ஒரு கசப்பான மருந்து என்றாலும், உணவு பொருட்களுக்கு இந்த வரி பொருந்தாது , ஆனால் உணவகம் வியாபாரஸ்தலம் என்பதால் அங்கு விதிக்கபடும்

மொத்தத்தில் கூடுதல் சுமை மக்கள் சும்க்க போவது உறுதி,

கட்டுபிடியாகவில்லை எனில் வெளிநாட்டு நிறுவணங்கள் பெட்டியினை கட்டிகொண்டு கிளம்பும் ஆபத்தும் உண்டு, பார்க்கலாம்

மொத்தத்தில் ஒன்று புரிகின்றது

இந்த வரி உண்மையில் மார்ச் 1ம் தேதி விதிக்கபட்டிருக்க வேண்டும், ஆனால் 5 மாநில சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஜூன் 1ம் தேதிக்கு தள்ளிவைத்துவிட்டார்கள்

அதாவது இது விதிக்கபட்டால் பொருட்களின் விலை கூடும், அரசுக்கு கவலை இல்லை, ஆனால் வோட்டு விழாது அல்லவா?

இப்பொழுது தேர்தல் முடிந்து வெற்றியும் பெற்றாயிற்று, இனி போட்டு அடிக்கலாம்

இதனை அறிவித்தால் வோட்டு விழாது என அஞ்சி ஜூன் மாதத்திற்கு மாற்றியிருக்கின்றார்கள் என்றால் , அதன் பாதிப்பினை உணர்ந்துகொள்வது சிரமம் அல்ல..

இந்த அரசின் எல்லா தேர்தல் வெற்றிக்கு பின்னும் மக்களுக்கு ஒரு அடி விழுந்துகொண்டே இருக்கின்றது,

ஜூன் 1ல் இருந்து விலைவாசி எகிறபோவது நிச்சயம், சுமை மக்களுக்குத்தான்

அவர்களுக்கென்ன? சமீபத்தில் வரகூடிய தேர்தல் எதுவுமே இல்லை, அதனால் நிச்சயம் கண்டுகொள்ளமாட்டார்கள்..

இது அமலுக்கு வரும்பொழுது மோடி அமெரிக்கா செல்லபோகின்றாராம், மறுபடியும் உலக பயணம் தொடங்கிவிட்டார்

மனிதர் ஏதோ திட்டத்தோடு ஜூன்மாதம் கிளம்புவது போல் தெரிகின்றது…

 
 
 

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது : கர்நாடக அரசு

 

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது : கர்நாடக அரசு

என்றைக்கு தரமுடியும் என சொல்லியிருக்கின்றீர்கள்? நல்ல காலத்திலே தரமாட்டீர்கள், இந்த வறட்சியான காலத்திலா கொடுப்பீர்கள்??

காவேரி நீரினைத்தான் தரமுடியாது வேண்டுமானால் சசிகலாவினை தருகின்றோம் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்..

அண்ணாச்சி பெரும் வில்லாதி வில்லன், பெரும் சாமர்த்தியசாலி

FB_IMG_1490163497456

அண்ணாச்சி பெரும் வில்லாதி வில்லன், பெரும் சாமர்த்தியசாலி

அசைக்கமுடியாதவர், தென்னக சோழன், தேரிகாட்டு பாண்டியன், மன்னாதி மன்னன்

நாட்டுகுள்ளே நாடு வைத்திருப்பவர், அரசர்களை உருவாக்குபவர், கடல் அலையினை அலற செய்பவர், ஆண்டவனை தவிர அவரை அசைப்பவன் யாருமில்லை…

மற்ற பயலுக மாதிரி ஊருக்குள்ள நிலம் வைத்திருப்பவர் அல்ல, தன் நிலத்திற்குள் ஊரையே வைத்திருப்பவர், கடலை கட்டிவைத்திருப்பவர், கடல் ராசா…

கலைஞருக்கு கடுக்காய் கொடுத்தவர், தீப்சிங் பேடிக்கே பீடி கொடுத்தவர்

டாட்டாவிற்கே டாட்டா காட்டியவர் என்று அவருக்கு புழகாரம் சூட்டியவன் எல்லாம், நேற்று அவர் தினகரனை சந்தித்த செய்தி கேட்டபின் தலையினை மூடிகொண்டு படுத்துவிட்டான்

சிலர் வீட்டை பூட்டிகொண்டு முடங்கி கிடப்பதாகவும் செய்தி

மனோஜ் பாண்டியன் போன்றவர்களே தினகரனுக்கு சவால்விடும் வேளையில், அண்ணாச்சி ஓடி சென்று தினகரனை சந்தித்தது அவரின் இமேஜினை குலைத்துவிட்டது..

டாட்டாவினை விரட்டிய அண்ணாச்சி, தினகரனிடம் சிக்கிகொண்டது நன்றாக தெரிகின்றது.

சசிகலா புஷ்பா கிட்டதட்ட தலைமறைவான பின் இன்னும் நன்றாக விளங்குகின்றது..

அண்ணாச்சியின் பெரும் பிம்பம் தென்னக பகுதியில் ஒரே நாளில் சிதறிவிட்டது, அவரின் முகமூடி ஒரேநிமிடத்தில் கிழிந்துவிட்டது.

அண்ணாச்சியின் நிலை மாறியாச்சி…..

 
 

இரட்டை இலை சசிகலா தரப்பிற்கே கிடைக்கலாம்

2l

இரட்டை இலை சசிகலா தரப்பிற்கே கிடைக்கலாம், ஆதரவு எண்ணிக்கை அங்கேதான் அதிகம்

முறைகேடான வகையில் சசிகலாவும் தினகரனும் பதவிக்கு வந்தார்கள் என பன்னீர் தரப்பு நிரூபித்தால் மட்டுமே சிக்கல் உருவாகும், அப்பொழுது வேண்டுமானால் முடக்கபடலாம்

தீபாவிற்கு எல்லாம் இரட்டை இலை கிடைக்க 100% வாய்ப்பு இல்லை, வாசலிலே விரட்டிவிடுவார்கள்

ஒருவேளை சசிகலா தரப்பிற்கு கிடைத்துவிட்டால் நிச்சயம் அது அவர்களுக்கு பெரும் வெற்றி, காரணம் இரட்டை இலை என்பது அலாவுதின் விளக்கு போன்றது

பெரும் பூதம் அதற்கு கட்டுபட்டு நிற்கின்றது, அது கண்களுக்கு தெரியாதது தேர்தலில் மட்டுமே தெரியும்

அப்படி சசிகலா தரப்பு இரட்டை இலை பெற்று பலம்பெற்றுவிட்டால்…சிலர் சொல்வது போல தமிழக‌ சொத்துக்களை விற்றுவிட்டு கிளம்பவேண்டியதுதான்

ஆனால் அதில் ஒரு திருத்தம், சொத்துக்களை விற்றுவிட்டு செல்வதா??

வாய்ப்பே இல்லை, சொத்துக்களை அவர்களே எடுத்துகொள்வார்கள், கங்கை அமரனே சாட்சி

ஆக சொத்துக்களை கொடுத்துவிட்டு கிளம்பலாம் என்பதே மிகசசரியான வார்த்தை

பார்க்கலாம், அந்த இரட்டை இலை எனும் விளக்கு யாரிடம் சிக்குகின்றதோ அதை பொறுத்தது தமிழக அடுத்த 10 ஆண்டு கால அரசியல்

10 அல்லது 15 வருடத்திற்கு வருடத்திற்கு பின் நிச்சயம் இரட்டை இலை மங்க தொடங்கும், தலைமுறை மாற்றம் அதனை செய்யும்.

ஆனால் அந்த 10 ஆண்டுகளும் பெரும் சீரழிவினை கொடுக்கும், அதிலிருந்து தமிழகம் மீள 100 ஆண்டுகள் ஆகலாம்..

தமிழகத்து தலைவிதி இன்று தெரியபோகின்றது..

ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கி யோகி ஆதித்யநாத் உத்தரவு

ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கி யோகி ஆதித்யநாத் உத்தரவு

சாமியாரை முதல்வராக வைத்தால் தொழிற்சாலையா திறப்பார்? ராமாயண காட்சிசாலைதான் திறப்பார்

பெரும் பின்னடைவில் இருக்கும் பெரிய மாநிலத்தித்து அரசின் முதல் நாள் முதல் கையெழுத்து இப்படியாக இருக்கின்றது.

இனி ஊருக்கொரு ராமர் கோவில் கட்டபடும், மக்களின் தேவையினை ராமரிடமே கேட்டுகொள்ள வேண்டும்.

அது நிறைவேறாவிட்டால் அப்படியே விட்டுவிடவேண்டும், ராமரால் முடியாததையா இந்த மானிடன் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் செய்துவிட முடியும்?

இப்பொழுதே உபி பின்தங்கி பாபர் காலத்தில் இருக்கின்றது, யோகியின் 5 ஆண்டு காலம் முடியும் பொழுது மேலும் பின் தங்கி ராமர் காலத்திற்கு சென்றுவிடும் என்பது மட்டும் புரிகின்றது

உலகெல்லாம் வாழும் ஈழதமிழர்கள் விடுத்திருக்கும் அறிவிப்பு…

bal

உலகெல்லாம் வாழும் ஈழதமிழர்கள் விடுத்திருக்கும் அறிவிப்பு இது

“தமிழகத்தில் திருமுருகன் காந்தி என்பவர் தன் மே 17 இயக்கத்தின் மூலம், திடீரென அமெரிக்க நிறுவணங்களை அடிப்பேன் என்றும், தூதரகத்தை கண்டிப்பேன் என்றும் தமிழகத்தில் கிளம்பியிருக்கின்றார்

பிரிட்டன் உட்பட மற்ற நாடுகளின் நிறுவணங்கள், தூதரகத்தையும் தமிழ்நாட்டில் அவர் கண்டித்து நொறுக்க போகின்றாராம்

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை ஈழத்தமிழர்கள் பால் மாற்றாத மட்டில் தமிழர் சார்பாக எந்த மாற்றமும் ஐ.நாவில் ஏற்படப்போவதில்லை

அந்நாடுகளை மேலும் விரோதி ஆக்கினால் ஈழதமிழருக்கு ஒரு நன்மையும் விளையபோவதில்லை..

ஈழத்தமிழர்களின் பெயரால் மற்றவர்களின் உடைமைகளை சேதப் படுத்துவதையோ மற்றைய நாட்டவர்களை புண்படுத்துவதையோ ஈழத்தமிழர்கள் பால் போராடுவதாகச் சொல்லும் தமிழக அமைப்புக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவரின் இந்த செயல் தமிழர்களின் கொழுந்து விட்டெரியும் இனப்பிரச்சசையை மேலும் சிக்கலாக்கும், உலகெல்லாம் ஈழ தமிழருக்கு பெரும் சிக்கலை இவர் ஏற்படுத்துகின்றார் இவர்.

த‌மிழக மக்களும் தமிழகப்போராட்ட அமைப்புக்களும் மே பதினேழு இயக்கம் ஒழுங்கு செய்துள்ள இம் முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காது விலகியிருக்குமாறு தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த திருமுருகன் காந்தி என்பவர் ஈழமக்களுக்கு எதிரான காரியங்களையே செய்கின்றார்”

ஆக திருட்டு திருமுருகன் காந்தி என்பவர் , வாயினை மூடிகொண்டு இருக்குமாறு உலகெல்லாம் வாழும் ஈழ தமிழர்களே சொல்லியாகிவிட்டது,

ஈழதமிழர்களே சொல்லிவிட்ட பின், இங்கிருக்கும் தமிழர்கள் சிந்திப்பது நல்லது.

இதற்கு மேலும் திருமுருகன் காந்தி கத்துவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது?,

அவர் அந்த இயக்கத்தை கலைத்துவிட்டு தியானம் செய்வது நல்லது .

 
 

மாணவி காதல் காட்சி என்றவுடன் சென்சார் சிக்கிகொண்டது

மயிலாடுதுறையில் மாணவி காதலுடன் உடன்போக்கு (அதுதான் ஓடி செல்லுதல்) சென்றிருக்கின்றோள், 8 மாத கர்பிணியாக மீட்கபட்டிருக்கின்றாள்

கோர்ட்டில் நிறுத்தபட்ட அவள், தான் காதலித்தது சென்றதற்கு சினிமா காட்சிகள்தான் காரணம் என சொல்லியிருக்கின்றாள், உடனே நீதிபதியும் சென்சார் போர்டுக்கு எப்படி காதல் காட்சிகளை அனுமதிக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்

அம்மாணவி கொஞ்சம் விபரமானவர், காதலுக்கு காரணம் சொன்னாரே ஒழிய, கர்ப்பமானதற்கு காரணம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் “நாங்கள் அதிலெல்லாம் கவனமாக காட்சிகளை வெட்டுவோம் மை லார்ட்” என சென்சார் தப்பித்திருக்கும்

மாணவி காதல் காட்சி என்றவுடன் சென்சார் சிக்கிகொண்டது

இந்த காதல் காட்சிகளால் ஒரு மாணவி வாழ்வு போயிற்று, இதற்கு சென்சார் என்ன சொல்ல போகின்றதோ தெரியாது

ஆனால் டாஸ்மாக் முதலான காட்சிகள் முதல் அந்நாளைய தனுஷ் இந்நாளைய ஜிவி பிரகாஷ், செல்வராகவன் படங்கள் வரை எப்படிபட்ட தத்துவங்களை வலியுறுத்தும் காட்சிகளை எல்லாம் சென்சார் அனுமதித்தது என சொல்லி தெரியவேண்டியதில்லை.. ..

இதிலெல்லாம் இந்த சென்சார் என்ன கிழித்தது? ஒன்றுமில்லை

பாய்ஸ் போன்ற படங்கள் வரும்பொழுது சென்சார் என்ன தடுத்தது?

எத்தனை ஆபாச பாடல்கள், அசைவுகள் இன்னபிற அழிச்சாட்டியங்கள் என பல இம்சைகளை இந்த போர்டு தடுத்ததா?

இக்காலத்தை விடுங்கள், அன்று ராமசந்திரன் இல்லாத பொய்களை சினிமாவினால் கட்சி நடத்தும்பொழுதே, “இங்கே பாருங்கள் ராமசந்திரன் உங்கள் கட்சி கொள்கைகளை சினிமாவில் சொல்ல அனுமதிக்க மாட்டோம்

அண்ணா என கத்துவது,அம்மா என அலறுவது.. ஆட்டுகுட்டி முதல் கிழவி வரை தூக்குவது இப்படி எல்லாம் அரசியல் செய்தால் வெட்டுவோம்” என சொல்லியிருந்தால் தமிழகம் இப்படி ஆகியிருக்குமா?

ஆக சென்சார் கமிட்டி பல இடங்களில் கண்ணை மூடி பல காட்சிகளை அனுமதித்து ராமசந்திரன் காலம் முதல் தமிழகத்தை கெடுத்திருக்கின்றது

அப்படியாக மயிலாடுதுறையில் ஒரு மாணவியின் வாழ்வினையும் கெடுத்ததாக நீதிமன்றம் சொல்லியிருக்கின்றது

இன்னும் எது எதனை எல்லாம் கெடுக்கும் என்பது தெரியவில்லை..

பன்னீரின் நடிப்பிற்கு ஆஸ்கர் கொடுக்கலாம் : எடப்பாடி பழனிச்சாமி

பன்னீரின் நடிப்பிற்கு ஆஸ்கர் கொடுக்கலாம் : எடப்பாடி பழனிச்சாமி

நடிகர்,நடிகை கட்சியினர் இப்படி நடிப்பு , ஆஸ்கர் என்றுதான் பேசிகொண்டிருப்பார்கள், அதில் ஆச்சரியமில்லை

ஆனால் பன்னீருக்கு ஆஸ்கர் என்றால், இவருக்கு நடிப்பில் ஒரு “தாதா சாகிப் பால்கே..” விருதாவது கொடுக்காமல் இருக்க முடியுமா?


இரட்டை இலை சின்னம் யாருக்கு? இன்று முடிவு

யாருக்கும் வேண்டாம்,..

ஜெயா எம்ஜிஆர் கல்லறைக்கு நடுவில் அதனை புதைத்துவிடுவது தமிழகத்திற்கு நல்லது…