டிரம்ப் கொஞ்சநாளைக்காவது தாங்குவாரா?

17426271_10208748588127182_3309795388806791858_n.jpg

உலகில் ஒருமனிதரின் மூக்கு இருமாதமாக‌ உடைந்துகொண்டே இருக்கின்றது என்றால் அது டிரம்பின் மூக்குதான்

பதவிக்கு வந்து 3 மாதம் கூட ஆகாதநிலையில் அவருக்கு நடக்கும் அவமானங்கள் கொஞ்சம் அல்ல,உள்நாட்டில் மட்டுமல்ல, உலகமெல்லாம் பெரும் எதிர்ப்பு

வடகொரிய அதிபர், சீன அதிபர் உட்பட யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை , கத்திகொண்டே இரு என விட்டுவிட்டார்கள்.

சிரியாவிலும் ஒன்றும் புட்டீனை மீறி அவரால் செய்யமுடியவில்லை, அங்கும் தோல்விதான்.

உள்நாட்டிலாவது மதிக்கின்றார்களா என்றால்? சுத்தமாக இல்லை

ஒபாமா கொண்டுவந்த இன்சுரன்ஸ் திட்டத்தை “ஒபாமா கேர்” எனும் திட்டத்தை அவர் ரத்து செய்வதாக அறிவித்தார், அமெரிக்க அமைப்புபடி அதற்கு செனட் சபை அங்கீகாரம் வேண்டும்

ஆனால் அது “சோலியினை பார் , அப்படி எல்லாம் ரத்து செய்ய முடியாது..” என அறிவித்துவிட்டது , பொதுவாக இப்படி செய்யமாட்டார்கள்

டிரம்பிற்கு பெரும் அவமானம், நிச்சயமாக பெரும் அவமானம்

உச்சகட்டமாக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூட தன் பங்கிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார், அதாவது டிரம்ப் இப்படி இனவெறி பேசுவது அறிவியல் மற்றும் விஞ்ஞான உலகில் பெரும் சிக்கல் வரும்

விஞ்ஞான உலகில் ஆதிக்கம் செலுத்தும்நாடு இப்படியான விவகாரங்களை கையாண்டால் அது பெரும் சிக்கலாகும் என எச்சரித்திருக்கின்றார்

டிரம்ப் கொஞ்சநாளைக்காவது தாங்குவாரா? எனும் ரீதியில் பிரச்சினை சென்றுகொண்டிருக்கின்றது

இடையில் புட்டீனின் பார்வை வேறுமாதிரி திரும்புகின்றது

அதாவது இலங்கை அதிபர் மைத்ரிபாலாவினை அழைத்து, ஒரு பரிசினை அளித்திருக்கின்றார், என்ன பரிசு அது?

200 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தபட்ட, கண்டி மன்னரின் வாள் ஒன்று இங்கிலாந்தில் ஏலம் விடபட்டது, அதனை எடுத்தார்
புட்டீன்

அதனை மைத்திரிபாலாவிடம் அன்பளிப்பாக கொடுத்திருக்கின்றார்.

இலங்கையினை பொறுத்தவரை கண்டி அரசனின் வாள் பெரும் பாரம்பரியமிக்க பெருமை மிக்க பொக்கிஷம்

இது சுயநலமான உலகம், ஒரு பைசா சும்மா கொடுக்கமாட்டாரகள், பின் புட்டீன் ஏன் வாள்
கொடுத்தார், கூடவே ஒரு போர்கப்பலும் கொடுப்பதாக சொல்லியிருக்கின்றார்.

இந்தியா கச்சதீவினை கொடுத்தது நமக்கு தெரியும், ஆனால் கொடுத்துவிட்டு திரிகோணமலையில் 300 ஏக்கர் நிலத்தினை இந்தியா வளைத்திருப்பது நமக்கு தெரியாது

இன்றும் அங்கு சிங்கள அரசு நுழையமுடியாது, பல வகையாக இந்திய ஆதிக்கம் செலுத்தும் இடம் அது.

இதில் புட்டீன் ஏன் கொடுத்தார்?

இலங்கை அருகில் டிகோ கார்சியா தீவு உண்டு, அமெரிக்க ராணுவமுகாம் உள்ளது. தீவு இங்கிலாந்திற்கு சொந்தமானது

இப்பொழுது சீனாவினை தடுக்க‌ இலங்கையில் தளம் அமைக்கும் யோசனையில் உள்ளது அமெரிக்கா, இது புட்டீனுக்கு பிடிக்குமா?

மனிதர் இப்படி களமிறங்குகின்றார். இலங்கையின் ஆட்டமே இதுதான் எல்லா நாடுகளுக்கும் அது ஒரு “சொப்பன சுந்தரி”.

கூவத்தூரில் இருந்த எம் எல் ஏ போல கொடுத்து வைத்த நாடு அது, அப்படி ஆளாளுக்கு பொன்போல கொண்டாடுவார்கள்..

இந்தியா கச்சதீவினை கொடுத்து, திரிகோணமலையினை வளைத்தது

புட்டீன் வாளும் கப்பலும் கொடுத்து எதை வளைப்பாரோ தெரியாது…

என்ன இருந்தாலும் புட்டின் முன்னாளைய கேஜிபி பயிற்சிபெற்ற உளவாளி, அவருக்கு எல்லா வித்தையும் அத்துபடி

ரஷ்யா இனி அவ்வளவுதான் என சொன்ன காலங்களில் பதவிக்கு வந்த அவர், அதனை தூக்கி நிறுத்திவிட்டு இப்பொழுது சிரியா, ஈரான், இலங்கை என அடித்துவிளையாடுகின்றார்

“கத்துகிட்ட வித்தையெல்லாம் மறக்கலடா…” எனும் வரிகள் அவருக்கும் பொருந்தும்…

 

மன்னார் & கம்பெனி.. கல்யாணப்பரிசு காமெடி..

ஜெயா டிவியில் கல்யாண பரிசு படம் ஓடிகொண்டிருக்கின்றது, நிச்சயமாக தங்கவேலு ஒரு தீர்க்கதரிசி

“மன்னார்” & கம்பெனி என காமெடியில் பின்னிகொண்டிருக்கின்ரார்

“மன்னார்”குடி என்றொரு தமிழக கம்பெனி பின்னாளில் உருவாகும் என அவருக்கு தெரிந்திருக்கின்றது,

அப்படி ஒரு கம்பெனி உருவாகி, இப்பொழுது ஜெயலலிதாவின் அதிமுக என்றொரு கம்பெனியினை வாங்கி பிரமாதமாக வியாபாரம் செய்கின்றது

இப்பொழுது ஆர்.கே நகர் தொகுதியில் ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பினை கொடுத்து கொண்டிருக்கின்றது

பெரும் கஷ்டமான வேலை எல்லாம் அல்ல, அம்மா வாழ்க, தினகரன் வாழ்க என சொல்லிவிட்டு பார்க் பெஞ்சில் படுத்துகொள்ளவேண்டும்

இப்படி அன்றே “வாழ்க” மட்டும் சொல்லாமல், மன்னார் & கம்பெனி நடத்தியிருக்கின்றார் தங்கவேலு, அவர்தான் இவர்களுக்கு எல்லாம் முன்னொடி…

 
 
 

ரஜினி இலங்கைக்கு செல்வதை ரத்து செய்துவிட்டாராம்…

17498742_10208748401802524_1296759217395286484_n.jpg

சும்மாவே கால்நடுங்கிகொண்டிருக்கும் ஒருவனிடம் சிலர் கத்திகொண்டு ஓடிவந்தால் அவன் என்ன செய்வான்?

அதனைத்தான் ரஜினி செய்துகொண்டிருக்கின்றார்.

இலங்கைக்கு செல்வதை ரத்து செய்துவிட்டாராம், ஏன் என்றால் அதுதான் ரஜினி. தொழிலை தவிர அவர் எல்லா விஷயங்களுக்கும் இப்படித்தான்

கன்னடன் ரஜினி ஈழத்திற்கு செல்வதா? என பலர் பொங்குகின்றார்களாம்

அட பதர்களா? மீணவனை சுட்டான் என நீங்கள் முறையிடும் சுஷ்மா சுவராஜூம், மோடியும், பிரணாப் முகர்ஜியும் தமிழர்களா?

இலங்கைக்கு யாருமே செல்லவில்லையா?

சென்னை திருச்சி மதுரை என எத்தனை விமானங்கள் தினம் பறக்கின்றன? எத்தனை கப்பல்கள் வந்து போகின்றன‌

அவர்களை எல்லாம் தடுத்தா விட்டீர்கள்?

அதாவது யாரும் செல்லலாம், ரஜினி சென்றால் மட்டும் தவறு.

போரில் அழிந்த ஈழமக்களுக்கு வீடு கொடுப்பதும், அதில் ரஜினி கலந்து கொள்வதும் தவறா?

இன்று இலங்கையின் எதிர்கட்சி தலைவராக, ஜனாதிபதி மைத்ரிபாலாவுடன் நெருக்கமான உறவில் இருக்கும் சம்பந்தனுக்கு சென்னையில் வீடு உண்டு.

சிங்கள அரசில் இருக்கும் தமிழ் அமைச்சர்களுக்கு சென்னையில் குடும்பம் முதல் சொத்துவரை உண்டு.

புலிகளை ஆதரிக்காமல் சிங்களனோடு நல்ல உறவில் இருக்கும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு இங்கு மணவுறவு உண்டு

இவர்கள் முரளிதரனின் மனையினை பிடித்து “ஏய் இனதுரோகி, சிங்களனுடன் கைகுலுக்கும் முரளிதரனை விவாகரத்து செய்…” என இன்னும் கிளம்பவில்லை, அதுவரை நல்லது

சொல்லமுடியாது செய்தாலும் செய்வார்கள்…

அதாவது சிங்களனோடு பழகும் ஈழதமிழர்கள் இங்கு வந்து வீடுகட்டலாம், சிங்களனோடு கைகுலுக்கும் எல்லோரும் சென்னை வரலாம்,

லைக்கா போல ராஜபக்சே நண்பர்கள் படமே எடுக்கலாம்

ஆனால் ரஜினி மட்டும் ஈழம் செல்ல கூடாது.

அவர்களை விடுங்கள், ரஜினி பற்றி நமக்கு தெரியாததல்ல, டாக்டர் ராமதாஸின் கும்பலே ரஜினியினை ஓட அடித்திருந்தது.

ஆனால் அவர்கள் தொகுதியிலே வென்று காட்டினார் விஜயகாந்த், அவரின் தைரியத்தில் கொஞ்சமும் ரஜினிக்கு கிடையாது.

கலைஞர் வாழ்க, ஜெயா நல்லாட்சி செய்கின்றார், சோனியா குட், மோடிஜி சூப்பர் இப்படியே பேசிகொண்டிருப்வர் ரஜினிகாந்த்

அவர் பின் வாங்கியதில் எந்த ஆச்சரியமும் இல்லை, அவர் தைரியமாக இலங்கை சென்றால்தான் ஆச்சரியம்.

என்ன கொடுமையோ தெரியவில்லை, இந்த தமிழுணர்வாளர்களின் அட்டகாசம் அதே காமெடியுடன் நடந்து கொணடே இருக்கின்றது

இனி லைக்கா நிறுவணம் கட்டிகொடுத்த வீடுகளை இடிக்க வேண்டும், அந்த மக்களை வீடில்லா அபலைகளாக நடுரோட்டில் நிறுத்த வேண்டும் என சொன்னாலும் சொல்வார்கள்.

இனி ஈழமக்கள் படகேறி வந்து இவர்களை 4 சாத்து சாத்தாவிட்டால் திருந்தமாட்டார்கள்.

 
 

விக்ரம் (1986 தமிழ் திரைப்படம்) ஏன் தோற்றது?

பன்முக தன்மை கொண்ட எழுத்தாளன் எப்படி இருப்பான், எப்படி உலகினை நொடிநொடியாக கண்காணிப்பான், ஒவ்வொரு நொடியின் உலக நிலமைமையினையும் தன் மனதில் நிறுத்துவான் என்பதற்கு பெரும் உதாரணமான எழுத்தாளர் சுஜாதா

விக்ரம் என்றொரு கமலஹாசனின் படத்தில் அவரின் பங்கு 90% இருந்தது, அப்படி ஒரு அட்டகாசமான கதை அது

உலகம் ஏவுகனை யுத்தத்தை கண்டது வளைகுடா போரின்பொழுது மட்டுமெ, அதற்கு முன்பு வல்லரசுகளிடம் ஏவுகனை இருந்தாலும் அதனை பயன்படுத்தி யுத்தம் ஒன்றும் நடக்கவில்லை

வளைகுடா யுத்தத்தில் ஸ்கர்ட், பேட்ரியாட், டொமஹாக் என ஏவுகனைகள் பறக்கும்பொழுதுதான் அதன் முகம் உலகிற்கு தெரிந்தது.

ஆனால் விக்ரம் படம் அதற்கு பல வருடங்களுக்கு முன்பே வெளிவந்தது, அதில் ஏவுகனை என்றால் என்ன? அதனை கம்பியூட்டர் கொண்டு இயக்குவது எப்படி என அன்றே சொல்லியிருந்தார் சுஜாதா

அமெரிக்காவின் டொமஹாக் ஏவுகனை 1985களில் அப்படித்தான் இருந்தது, அன்று அதுதான் உச்சபச்ச நுட்பம். சுஜாதா அதனைத்தான் விக்ரம் படத்தில் காண்பித்தார்.

விஞ்ஞான ரவுடி எப்படி இருப்பான் என்பதற்கு சத்யராஜ் அழகான நடிப்பினை கொடுத்திருந்தார், இன்றுவரை சத்யராஜின் டாப் நடிப்பு அந்தபடமே

இந்திய, தமிழக‌ அமைச்சர்களின் அறிவு நிலமையினை வி.கே ராம்சாமி வேடத்தில் அன்றே காட்டியிருந்தார் , அட்டகாசமான கைதட்டவேண்டிய காட்சி அது

உளவுதுறை, அதிலுள்ள ஓட்டைகள், டிடெக்க்டிவ் ஆபிசர்கள், இந்திய ராக்கெட் ஆராய்ச்சி, பின்லேடன் பிடித்து வைத்த ஆப்கன் போல அன்றே கற்பனையில் ஒரு நாடு என அசத்தினார் சுஜாதா

மிக மிக குறிப்பிட்டு சொல்லவேண்டிய படம் அது

ஆனால் தமிழக மக்களுக்கு அப்படம் ரசிக்கவில்லை, இது விசித்திரமான தமிழகம் அல்லவா?, ரஜினிகாந்த்
“ஹெ..ஹா ஹா ஹாஹ் ஆஹ்” என முடியினை கோரிவிடும் அழகினை பார்த்து கைதட்டி கொண்டிருந்தது, பாக்யராஜ் தாய்மார்களை எல்லாம் சிந்திக்க வைத்துகொண்டிருந்தார்

விசு அழவைத்துகொண்டிருந்தார். அப்பொழுதுதான் விக்ரம் விஞ்ஞான அறிவியில ராணுவம் ராக்கெட் பேசிகொண்டு திரைக்கு வந்தது

1980களின் அத்தனை அறிவியல் நுட்பங்களையும் உணர்ந்த ஒருவானால் அன்றி விக்ரம் மாதிரி படங்கள் சாத்தியமில்லை

அதன் தோல்வியோ என்னமோ அதன்பின் சுஜாதா அம்மாதிரியான விஷயங்களுக்கு செல்லவில்லை, வேறு படங்களுக்கு சென்றுவிட்டார்

இன்று மணிரத்தினத்தின் “வான்” படம் டிரைலர் ஒடிகொண்டிருக்கின்றது

அதில் இந்திய விமானபடையின் பெரும் பலமான “சுகொய் 30” காட்டபடுகின்றது, 4ம் தலைமுறை ரஷ்ய தயாரிப்பு அது. அப்துல்கலாம் பறந்த அந்த விமானம்

படத்தின் கதைபடி நாயகன் ராணுவ பைலட் என்பது புரிகின்றது, கதை எப்படி இருக்கின்றது என இனிதான் தெரியும்

அந்த டிரைலரை பார்த்தபின் விக்ரம் படமும், சுஜாதாவும் கண்ணுக்குள் வந்து சென்றனர்

சுஜாதா இருந்திருந்தால் இந்த படத்தில் சுகோய் ரக விமானம், ஜாக்குவார் ரக விமானம் என இந்திய விமான படையின் பல விதமான நவீன விஷயங்கள், அதன் நுட்பங்கள், அதிலிருந்து வீசபடும் ஏவுகனைகள் என பின்னி எடுத்திருப்பார்

தமிழ்சினிமாவிற்கு தேவை அடுத்த எம்ஜிஆரோ, ரஜினியோ அல்ல, மாறாக இன்னொரு சுஜாதா

வான் படம் வந்த பின் நிச்சயம் அவரை பலரின் மனம் தேடலாம், டிரைலரில் சீறிகொண்டிருந்த சுகோய் விமானத்தை கண்டபொழுது அது உறுதியாயிற்று

படம் வரட்டும் பார்க்கலாம்

விக்ரம் படம் ஏன் தோற்றது? என சிந்திக்கின்றேன். அப்படம் காலத்தை முந்திகொண்டு வந்தபடம், பின்னாளில் வந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும்

பின்னாளில் என்றால் 20 ஆண்டுகள் கழித்து அல்ல, ஒரு 3 வருடம் கழித்து வந்திருந்தாலும் போதும்

3 வருடத்தில் என்ன நடந்தது?

குஷ்பூ அப்பொழுதுதான் வந்திருந்தார். விக்ரம் படத்தில் அந்த லிசிக்கு பதிலாகவோ, டிம்பிளுக்கு பதிலாகவோ இல்லை இரட்டை வேடத்திலும் அவரே நடித்திருந்தால்

படம் பெருவெற்றி பெற்றிருக்கும்…

 
 

நெல்லையில் நகை கடையில் தங்கம் கொள்ளை

நெல்லையில் நகை கடையில் தங்கம் கொள்ளை போயிருக்கின்றது, ஆனால் வேலுர் பக்கம் தமிழக பொலீஸ் மீட்டுவிட்டது, தன் திறமையினை போலீஸ் நிலைநாட்டிற்று

இப்பொழுது சிக்கல் என்னவென்றால் ஒரு பத்திர்கை 40 கிலோ எனவும், இன்னொரு பத்திரிகை 37.5 கிலோ எனவும் , இன்னொரு பத்திரிகை 60 கிலொ எனவும் எழுதுகின்றன‌

ஆக கடையில் இருந்த மொத்த தங்கத்தின் அளவு என்ன என்பதே தெரியவில்லை, என் தெரியவில்லை? என கேட்க கூடாது

ஏதோ ஒரு படத்தில், எம்.ஆர் ராதா வீட்டில் களவு போயிருக்கும் அவர் போலிசிடம் சொல்வார் ” எவ்வளவு கொள்ளை போச்சிணு நீங்க கேட்க கூடாது

களவு போச்சி..நீங்க கண்டுபிடிச்சி குடுக்கணும், அவ்வளவுதான் உங்க வேல…

சும்மா வருமானவரி அதிகாரி மாதிரி கேட்க கூடாது, அதுக்கு வேற டிப்பார்ட்மெண்ட் இருக்கு, சொல்ல வேண்டியதெல்லாம் அவங்க கிட்டதான் சொல்லமுடியும்.

இப்போ ஓடிபோய் களவுபோனத கண்டுபிடிச்சி என் கையில கொடுத்துருங்க, கவர்மெண்ட்ல வாங்குற பணத்துக்கு என்ன மாதிரி பொது மக்களுக்கு சேவை செய்ங்க”

நடிகர் விஜய் அரசியலுக்கு வரமாட்டார் : எஸ்.ஏ சந்திரசேகர், மற்றும் குஷ்பு …..

நடிகர் விஜய் அரசியலுக்கு வரமாட்டார் : எஸ்.ஏ சந்திரசேகர்

ஏன் வந்து பார்த்தால்தான் என்ன?

பெரும் முதலை கட்சிகளே எப்படி அரசியல் செய்யலாம் என்ன மண்டையினை பிய்த்துகொண்டிருக்கும் பொழுது விஜய் வந்து என்ன செய்துவிடுவார்?

விஜயகாந்த் படும்பாடு தெரிந்திருக்குமோ?

திடீரென இவர் விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என சொல்லவேண்டிய அவசியம் என்ன? அதுவும் இடைதேர்தல் நேரத்தில்?

யாரும் பிரச்சாரத்திற்கு அழைத்திருக்கலாம், அதனால் பொதுவாக இப்படி இவர் சொல்ல வாய்ப்பிருக்கின்றது

ம்ம்ம்ம் தேர்தல் முடிந்துவிடும், விஜய்படம் தொடர்ந்து வரவேண்டும் அல்லவா?

இப்பொழுது கொஞ்சநாளாகத்தான் அவர் படங்கள் சிக்கலில்லாமல் வந்துகொண்டிருக்கின்றதது,

இனி என்னாகுமோ???


17499306_10208746173266812_1351813942689207049_n.jpg

குஷ்பூவினை நிறுத்தியிருந்தால் ஆர்.கே நகரில் காங்கிரஸ் பெருவெற்றி பெறும், நிச்சயமாக தினகரனுக்கு பெரும் சவாலாக அவர் இருந்திருப்பார்

தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ந்துவிடவே கூடாது என கங்கணம் கட்டி காத்திருக்கும் காங்கிரசார் எப்படி குஷ்பூவினை நிறுத்துவார்கள்?

பெரும் வரலாற்று தவறினை தமிழக காங்கிரஸ் செய்துகொண்டிருக்கின்ரது..