தொப்பி தொப்பியான பொய்கள்..

காவேரி பிரச்சினைக்கு திமுகதான் காரணம் , அதனால்தான் விவசாயிகள் பாதிக்கபட்டுள்ளனர்: எடப்பாடி பழனிச்சாமி

அவர்கள் வீட்டில் மூட்டைபூச்சி கடித்தாலும் திமுகதான் காரணம் என கத்தும் அளவிற்கு நிலமை சென்றாயிற்று

உண்மை என்ன?

1975 வரை காவேரியில் சிக்கல் பெரிதாக இல்லை, அதன் பின் கிட்டதட்ட 20 வருடங்கள் திமுக ஆட்சியிலே இல்லை

கன்ன்டம் அணைகளை கட்டி தள்ளும்பொழுது இங்கு ஆட்சியில் இருந்தது யார்? அந்த தொப்பி தலையர் ராமசந்திரன்

கன்னடன் அணைகட்டும் பொழுது இங்கு ராமசந்திரன் போட்டோவிற்கு வித விதமாக போஸ் கொடுத்துகொண்டிருந்தார், வெண்ணிற ஆடை நிர்மலாவிற்காக மேல்சபையினை கலைத்துகொண்டிருந்தர்

சராஜா தேவியா? ஜெயலலிதாவா? யாரை எம்பியாக்கலாம் என யோசித்துகொண்டிருந்தார்,

காவேரியில் மட்டுமா தடைபட்டது?

முல்லைபெரியாரில் 136 அடிக்கு மேல் உயர்த்தமாட்டோம் என சம்மதித்து அதனை கெடுத்ததும் சாட்சாத் அந்த அதிமுக ராமசந்திரனே

இப்பொழுது வந்து பழனிச்சாமி குதித்துகொண்டிருக்கின்றார்

6 ஆண்டுகளாக தமிழகத்தை ஆள்வது அதிமுக, ஆனால் எல்லா சமீபத்திய பிரச்சினைகளுக்கும் காரணம் திமுகவாம்

எப்படி இருக்கின்றது இவர்களின் தொப்பி தொப்பியான பொய்கள்..

 
 
 

மழை யாருக்கு பிடிக்காது, எல்லோருக்கும் பிடிக்கும் …

பெய்யென பெய்யும் மழை என்பார்கள், பேயென பெய்யும் மழை இங்கு கொட்டிகொண்டிருக்கின்றது

வருணனுக்கு நம்மீது மேல் என்ன கோபமோ தெரியவில்லை, ஊருக்கு அழைத்து பேசினால் தண்ணீர் பஞ்சம் பற்றி அவர்கள் சொல்லும்பொழுது அழுகையே வருகின்றது

600 அடிவரை தேடிபார்த்தும் ஒரு சொட்டு நீரினை காணவில்லை என கதறல்…

போனை வைப்பதற்குள் இங்கு காதோரம் சர்ரென்று இறங்குகின்றார் வருணன், அதுவும் இந்திரனின் ஆயுதங்களோடு வந்து கடும் சீன்.

எல்லா வேதங்களையும் புரட்டியாயிற்று, வருணனை போற்றுவதற்கே வரிகள் இருக்கின்றதே தவிர, அவரை எப்படி திட்டுவது என ஒரு வரியினை கூட காணோம்.

இருந்தால் சொல்லுங்கள் தேவைபடுகின்றது…

இம்மழையில் பத்தில் ஒருபங்கு பெய்தாலும் தமிழகம் 6 மாதம் தாங்கும்

ஆனால் இங்கு எல்லாம் வீணாக கடலுக்கு செல்கின்றது, பெரும் விளைச்சல் என எதுவும் இல்லை

எங்கு எது தேவையோ அங்கே அதனை கொடுக்காமல், இன்னொரு இடத்தில் தேவைக்கு அதிகமாய் கொடுத்து ஆடுவதில் ஆண்டவனுக்கு ஒரு ஆனந்தம்

மழை விஷயத்திலும் அப்படித்தான்

மழை யாருக்கு பிடிக்காது, எல்லோருக்கும் பிடிக்கும்

ஆனால் அங்கு ஒருசொட்டு தண்ணீருக்கு தவிக்கும்பொழுது, இந்த மழையினை ரசிக்க முடியவில்லை, கண்ணீர்தான் வருகின்றது

அந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமலே இந்த மழைக்குள் நனைந்துதான் கரைக்க வேண்டியிருக்கின்றது

ஆர்கே நகர் தேர்தல் துளிகள் …

ஒரு விளக்கு எம்ஜிஆர், ஒரு விளக்கு ஜெயலலிதா : மின் விளக்கு சிம்பத்திற்கு பன்னீர் செல்வம் விளக்கம்

என்ன இது? இப்படியாக மொட்டையாக விளக்கம் கொடுப்பார்கள்?

எம்ஜிஆரையும், ஜெயலலிதாவினையும் விளக்காக பிடிக்கின்றார் பன்னீர் என்பது பரவி மருவி, எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவிற்கும் விளக்கு பிடிக்கின்றார் பன்னீர் என்றால் என்னாகும் விஷயம்?

பெரும் சிக்கல் ஆகாதா?

அதனால் எம்ஜிஆர் ஒரு விளக்கு, ஜெயா ஒரு விளக்கு இருவரையும் சுமக்கும் கம்பம் நான் என சொன்னால் என்ன?..

என்ன விளக்குகளோ? இரண்டும் பியூஸ் போயிவிட்டது

பியூஸ் போன இரு விளக்குகளைத்தான் பன்னீர் சுமக்கின்றார், இதற்கு விளக்கம் வேறு

இதற்கு இதோ உங்களுக்கு முக்காடு போட வந்துள்ளோம் என நேரடியாக சொல்லும் தினகரன் கோஷ்டி பரவாயில்லை


தமிழக பாஜக தலைவர் தமிழிசை மாற்றபட வாய்ப்பு

என்னடா இது தமிழகத்திற்கு வந்த சோதனை?

தமிழிசையினை மாற்றிவிட்டால் அதிரடி காமெடி ஏது? சரவெடி சிரிப்புகள் ஏது?

அந்த கட்சியில் ஒன்றுமே உருப்படி இல்லை என்றுதானே தமிழிசையினை வைத்தார்கள், அவரையே மாற்றவேண்டும் என்றால்…

ஒருவேளை அவர் மாற்றபட்டால் அடுத்துவருவர் எப்படி இருப்பார் என நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்..