தீபாவிற்கு படகு சின்னம்

தீபாவிற்கு படகு சின்னம்

இரட்டை மின்விளக்கு என பன்னீர் இன்டிகேட்டர் போட்டு மின்னிகொண்டிருக்க, தொப்பி என தினகரனும் பலர் தலையில் வைத்துகொண்டிருக்கின்றார்

இந்நிலையில் தீபாவின் சின்னமான படகு, அதாவது ஓடம் காகித ஓடம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

ஆக தீபா, பன்னீர், தினகரன் என மூன்றுபேருக்குள் அதிமுகவில் போட்டி

நிச்சயமாக கலைஞர் தீர்க்கதரிசி, இவர்கள் மூன்று பேர், அந்த ஓடம் (படகு) சின்னம் பற்றி அழகான பாடலை அன்றே எழுதினார்

“காகித ஓடம், கடலலை மீது.. போவது போலே..மூவரும் போவோம்….”

போங்கள், அப்படியே அலை அடித்து செல்லட்டும்..

ஆர்.கே நகரில் தொப்பிகளாய் தெரியும்பொழுது..

17498749_10208763653383804_2572887972364257744_n.jpg

அந்த ராமசந்திரன் யாருடனாவது புகைபடம் எடுக்கும்பொழுது மகா கவனமாக இருப்பார் என்பார்கள், அதுவும் யாராவது மாலையிட்டாலோ, சால்வையிட்டாலோ அவர்களின் கைகளை பிடித்துகொள்வார்

காரணம் எங்கே அவர்கள் தலையிலிருக்கும் தொப்பியினை தட்டிவிட்டு அது புகைபடத்தில் வந்துவிடுமோ எனும் அச்சம்

நன்கு கவனித்தால் இது புலபடும், மாலையிட வந்தவர்கள் கையினை பிடித்து லாவகமாக வாங்கிகொண்ட ஒரே தலைவர் அந்த ராமசந்திரனே..

இதனை அறிந்த சில குறும்பர்கள், கூட்டத்தில் அவர் தொப்பியினை தட்டிவிட முயன்றதும், அதனால் ஒரு பாதுகாப்புபடை அமைத்து எதிரிகளின் சூழ்ச்சியினை இறுதிவரை ராமசந்திரன் முறியடித்ததும் வேறு விஷயம்

இறக்கும்பொழுதும் அவரை தொப்பியுடனே அடக்கம் செய்தார்கள், இன்று காட்சியகத்தில் இருப்பது அவரின் இன்னொரு தொப்பி

அவர் தொப்பி மட்டுமா நிறைய வைத்திருந்தார்?

ஆ.கே நகர் தொப்பிகாட்சிகளை பார்க்கும்பொழுது ராமசந்திரனின் தொப்பி சாகசமும் நினைவுக்கு வருகின்றது

திரைப்படங்களில் தொப்பியோடு அவர் செய்த அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல‌

அதுவும் குடியிருந்த கோயில் படத்தில் ஒரு பாடல்காட்சியில் வருவார்

துள்ளுவதோ இளமை எனும் பாடல், 80 வயதில் அந்த இளமை துள்ளினால் என்ன? துள்ளாவிட்டால் என்ன?, விஷயம் இளமை அல்ல‌

மாறாக தொப்பி

அப்பாடலில் ஊஊஊஊஊ ப்பாப்பபாஆஅ என வரும் எம்ஜிஆரை பார்த்து சிரிக்காவிட்டால் நீங்கள் மானிடர் அல்ல‌…

ஆர்.கே நகரில் தொப்பிகளாய் தெரியும்பொழுது, இவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன…

 

“பற்றி எரிகின்றான்” அந்த வீரதமிழன்..

சர்ச்சையான ஓரு வீடியோ இணையமெங்கும் ஓடிதிரிகின்றது, காண நேர்ந்தது.

அதில் அப்படி பிரபாகரன் சீமான் படத்தின் முன்னால் ஒரு வீரதமிழன் என்ன செய்து கொண்டிருக்கின்றான்? என நோக்கினால்?

ஒரு பெண் தமிழச்சியா இல்லை வந்தேறியா? என கடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிகொண்டிருந்தான்.

ஒரு பெண் தமிழச்சியா இல்லையா என இப்படி கண்டுபிடிக்கலாம் என யாரோ அவனுக்கு சொல்லிகொடுத்திருக்கின்றார்கள், அவன் அதனை சோதித்து பார்க்கின்றான்.

வார்த்தைகள் ஒன்றும் கேட்கமுடியவில்லை, ஆனால் “ராஜபக்சே ஒழிக, சீமான் வாழ்க..” என சொல்லியபடியே சோதனையில் ஈடுபட்டிருக்கலாம்…

முதலில் சோதனைகள் முடிந்தன, பின் சோதனையில் அது தமிழ்பெண் என தெரிந்துகொண்டு பெரும் பயிற்சி அளிக்க தொடங்கிவிட்டான்..

அநேகமாக அது பெரும் விடுதலைக்கான கடும் பயிற்சியாக இருக்கலாம், அந்த பெண் கதற கதற கடும் பயிற்சி

தமிழ்பெண்ணுக்கு வீரதமிழன் கொடுத்த பயிற்சி அது..

எளிய தமிழ்பிள்ளை வீர களமாடுகின்றது, எவ்வளவு பெரும் தமிழ் வீரசெயல்…

“இருப்பாய் தமிழா நெருப்பாய்” என அங்கிள் சைமன் எந்த நேரத்தில் கத்த தொடங்கினாரோ, இப்படி நெருப்பாய் கொதித்து இறங்கிவிட்டார்கள்

“நெருப்பாய் இரு” என அங்கிள் சொன்னால், கட்டாயம் இந்த “நெருப்புதான்” என அவர்களே முடிவு செய்துவிட்டார்கள் போல…

“பற்றி எரிகின்றான்” அந்த வீரதமிழன்..

 
 
 

டெல்லியில் தமிழக விவசாயிகளை சந்தித்த வைகோ….

டெல்லியில் தமிழக விவசாயிகளை சந்தித்த வைகோ, அவர்களின் கோரிக்கையையினை அருண் ஜெட்லியிடம் சமர்பித்தார்

சமீபத்தில் டெல்டா மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்று, அங்கே சுள்ளி பொறுக்கிகொண்டிருந்த கனிமொழியினால் காப்பாற்றபட்டவர் இந்த வைகோ

தினகரனின் மாட்டுவண்டியில்தால் பழனிச்சாமி எனும் விவசாயி இவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்.

இதற்கு களை பறித்துகொண்டிருந்த தமிழிசை எனும் விவசாயியும், வரப்பு வெட்டிகொண்டிருந்த ஸ்டாலின் எனும் விவசாயியும் சாட்சிகள்..

அதனால்தான் கனிமொழி தஞ்சாவூர் பக்கமெல்லாம் வசூல் செய்து டெல்லிக்கு சென்று போராடும் விவசாயிகளுக்கு ஆறுதல் சொன்னார், செத்து தொலைத்துவிட கூடாது அல்லவா?

உயிர்பிழைத்த கோப்பால் சாமியும் இப்பொழுது சென்றிருக்கின்றார், கொஞ்சம் ஆங்கில பேசும் விவசாயி அல்லவா? அதனால் நிதியமைச்சரையும் சந்தித்துவிட்டார்…

இவர்களை எல்லாம்……………..

ஏன் மிஸ்டர் வைகோ? போராடும் விவசாயிகளுக்கு அவர்கள் கோரிக்கைகளை வைக்க தெரியாதா?

அங்கும் புரோக்கராக சென்று தொழில் பக்தியினை காட்டத்தான் வேண்டுமா?

 
 
 

ஈழத்தமிழனை வைத்து பிழைப்பு நடத்தாதே….

17553979_10208761078639437_5964197633836897569_n.jpg

இப்படி போஸ்ட அடித்திருப்பது ஈழத்து மக்கள்,.

மானமுள்ளவர்கள் என்றால் இந்த திருமாவும், திருமுருகனும் இனியாவது வாயினை மூடட்டும்..

கலைஞனும், விஞ்ஞானியும், விளையாட்டு வீரனும் அரசியலை கடந்தவன் என்பது உலக உண்மை..

இதோ ஈழத்து மக்கள் அழைக்கின்றார்கள், இனியாவது ரஜினி சென்றால் என்ன?

எப்படியோ ஈழமக்கள் போஸ்டர் அடிக்க ஆரம்பித்தாகிவிட்டது, திருமா, திருமுருகனை கண்டித்து யாழ்பாணத்தில் போராட்டம் வெடித்துள்ளது..

விரைவில் கடப்பாரை, உருட்டுகட்டை, சாக்குபை சகிதம் இந்த திருமா, திருமுருகன், சீமானை பிடிக்க வருவார்கள்

நாம் முன்பே சொன்னது போல அவர்கள் படகேறி வந்து இந்த திருமா, திருமுருகன், சீமானை பிடித்துபோட்டு அடிக்கும் காலம் நெருங்கிகொண்டிருக்கின்றது

வரட்டும், இவர்களை பிடித்து நாமே அவர்களிடம் ஒப்படைத்துவிடலாம்…

தமிழகமும் அமைதியாக இருக்கும்

இனியும் இவர்கள் அழிச்சாட்டியம் தொடர்ந்தால் ஈழமக்கள் இலங்கையின் இந்திய தூதரகத்தில் புகார் செய்வார்கள்

அப்படி செய்யும் பட்சத்தில் இந்திய அரசே இவர்களை வாய் மூட வைக்கும்

அப்படியும் “அத்து மீறி” பேசிகொண்டிருந்தால் பிடித்து இழுத்து சென்று கச்ச தீவு தாண்டி விட்டுவிடலாம்.. இந்த போஸ்டர் அடித்தவர்கள் அங்குதான் காத்து கொண்டிருக்கின்றார்கள்..

 

ரஜினி , திருமா, அத்வானி ……

‘ரஜினி போனால் என்ன… மோடி போனால் என்ன? ஒரு பயனும் இல்லை!” – சீமான்

இந்திய அரசு 5 ஆயிரம் வீடுகளை கட்டிகொடுத்திருக்கின்றது, மோடி அரசு யாழ்பாண விளையாட்டு மைதானத்தை சீரமைத்துகொடுத்திருக்கின்றது

இன்னும் பல விவகாரங்களில் மத்திய அரசுதான் உதவுகின்றது

உண்மையில் வைகோ, நெடுமாறன், திருமா கத்திதான் ஒன்றும் ஆகபோவதில்லை, அதில் அங்கிள் சைமனையும் சேர்த்துகொள்ளலாம்

தான் கத்தி ஒன்றுமே ஆகவில்லை எனும் ஆதங்கத்தில் அங்கிள் ரஜினியினையும், மோடியினையும் சேர்த்துகொள்கின்றார்..


17498801_10208760894914844_7911240407928084148_n.jpg

திருமாவுக்கும், வேல்முருகனுக்கும் பயந்து வீட்டோடு முடங்கி கிடக்கின்றார் ரஜினிகாந்த்

திருமாவிற்கு கூட பயமா? மிஸ்டர் ரஜினிகாந்த்.

குஷ்பூ கூட புலிகள் பயங்கரவாதிகள் என சொல்லிவிட்டு எவ்வளவு “தில்லாக சமாளித்தார்.

எத்தனை எதிர்ப்புகள், மிரட்டல்கள் வந்தாலும் எப்படி சமாளித்து நின்றார்?. அந்த தைரியத்தில் 1000ல் ஒரு பங்கு கூட ரஜினிக்கு இல்லை..

இத்தனைக்கும் தேசிய ஆளும் கட்சி, மாநில ஆளும்கட்சி எல்லாம் கொண்டாடும் நபர் ரஜினி, மோடி முதல் ஜெட்லி வரை அவருக்கு காத்திருப்பார்கள்

அப்படி இருந்தும் இப்படி ஒரு பயமா?

நாளை ரஜினி எந்த படத்தில் நடிக்கவேண்டும் என்பதை திருமாவளவன் தான் முடிவு செய்வார் போல‌

“அண்ணே ரஜினியினை 4 படம் நடிக்க சொல்லி சொல்லுங்கண்ணே, நீங்க சொன்னாதான் கேட்கிறாம்ணே”.. இப்படி இனி தயாரிப்பாளர்கள் திருமா வீட்டு வாசலில் நிற்கலாம்.

இனி யாரெல்லாம் ரஜினியினை மிரட்ட போகின்றார்களோ..

“நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்..” பாடலை நினைத்தால் இப்பொழுது சிரிப்பு சிரிப்பாக வருகின்றது.

தைரியம் என்றால் என்ன என்பதை குஷ்பூவிடம் இருந்து ரஜினி கற்றுகொள்வது நல்லது..

இதே லைக்கா நிறுவணம் குஷ்பூவினை விழாவிற்கு அழைத்திருந்தால் மிக தைரியமாக சென்றிருப்பார் அவர்

அதுவும் 4 வார்த்தை “நச்சென்று” சொல்லிவிட்டுத்தான் சென்றுவருவார், அதுதான் குஷ்பூ,


ஒழுக்கத்தை கற்று தந்தது ஆர்.எஸ்.எஸ்., : அத்வானி

காந்தி கொலை தொடங்கி, பாபர் மசூதி இடிப்பு , பின் மாட்டுக்கறி சர்ச்சை என எவ்வளவு ஒழுக்கங்களை கற்று தந்திருக்கின்றது.

முஸ்லீம் பெண்களை செத்தாலும் விடாதீர்கள் , மாட்டுகறி உண்டால் வீதியில் வெட்டுங்கள் எனும் அளவிற்கு எவ்வளவு ஒழுக்கங்கள்…

கொலையும், மசூதி இடிப்பும், கலவரமும் ,தேவாலயங்களை கொளுத்துவதும் , ஜீப்போடு குடும்பத்தை கொளுத்துவதும் ஒழுக்கம் என்றால் அந்த ஒழுக்கத்தில் ஒப்புர ஒழுகுவது ஆர்.எஸ்.எஸ் தான்.

அத்வானிக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் ஏதோ தகறாறு போல, இல்லாவிட்டால் இப்படி எல்லாம் போட்டு கொடுக்கமாட்டார்.