மனுஷ்ய புத்திரன் வீடு தேடுகின்றாராம்…

17626114_10208778435033336_8159996164483827134_n.jpg

மனுஷ்ய புத்திரன் வீடு தேடுகின்றாராம், அவருக்கு வீடு கொடுக்க ஒப்புகொண்டவர்கள் எல்லாம் அவர் இஸ்லாம் என தெரிந்தபின் மறுத்துவிடுகின்றார்களாம்

இப்படி வழக்கமான தன் 1 கிலோ மீட்டர் ஸ்டைலில் அழுதிருக்கின்றார்,

நான் இஸ்லாமியன் என்பதால் வீடு கிடைக்கவில்லை என சொன்னால் விஷயம் முடிந்துவிடும், அதற்கு 10 பக்கம் இழுப்பு

விஷயம் என்னவென்றால், தன் சொந்த பெயரான சாகுல் ஹமீதினை மறைத்து, மனுஷ்யபுத்திரன் மானிட மகன் என உலகெல்லாம் சொன்னது இவர்தான்

அன்றே நான் சாகுல் ஹமீது என்றால் இவ்வளவு சிக்கல் வந்திருக்குமா?

பெயரையே மறைத்தவன் இன்னும் என்னவெல்லாம் மறைத்தானோ எனும் அச்சத்தில் வீடு கொடுக்கமாட்டேன் என்கின்றார்கள்.

பெயரை மறைத்து இங்கு சுற்றியிருக்கின்றான் என்றால் ஐஎஸ் இயக்கத்தவனாக இருக்கலாமோ எனும் அளவிற்கு அலறியிருக்கின்றார்கள்..

இது புரியாமல் இவர் ஏதோ சென்னையில் இஸ்லாமியருக்கு வீடே கிடைக்காது என்பது போல பேசிகொண்டிருக்கின்றார்?

என்னா வில்லத்தனம்

மனுஷ்ய புத்திரன் என்றால் மானிட மகன் என பொருள்

பறவைக்கு கூடு உண்டு, நரிக்கு வளையுண்டு, மானிட மகனுக்கு தலைசாய்க்க இடமில்லை என இயேசு அன்றே சொல்லிவிட்டார்

மானிட மகன் என்றால் அப்படித்தான், வீடே கிடைக்காது என இயேசுவே சொல்லிவிட்டார்.

இவரை பார்த்தவுடன் வீட்டு முதலாளிகள் மனதில் என்ன தோன்றும்? தீவிரவாதி என்றா தோன்றும்?

இவர் டிவியில் எல்லோருடனும் வம்பு இழுப்பவர் ஆயிற்றே, அப்துல் கலாமினையே விமர்சித்தவர் ஆயிற்றே, வீடு கொடுத்து சனியனை இழுக்கலாமா? கண்ணாடி கதவு உடைந்தால் யார் பொறுப்பு என சிலர் யோசிக்கலாம்

முக ஸ்டாலினின் நிழலாக அலைகின்றார், இனி திமுக ஆட்சி என்கின்றார்கள், அப்படி இவனுக்கு கொடுத்துவிட்டால் வீடு திரும்ப வருமா? காலி செய்வானா? என சிலர் யோசிக்கலாம்.

வீட்டுமுதலாளிகள் இப்படி யோசிக்க…

திமுக ஆட்சியில் அரசு ஒதுக்கும் வீட்டில் குடியேற இப்போதே எனக்கு வீடு இல்லை, கிடைக்கவும் இல்லை என இவரே முன்பதிவு செய்யலாம்

இப்படி ஏராளமான வாய்ப்புகள் இவரின் அலறல் பின்னால் இருக்கின்றது, நிச்சயமாக இஸ்லாமியன் என்பதற்காக அல்ல‌…

ஆக இவர் இப்படி சொல்லி தந்திரம் செய்கின்றாராம்…

சக்கர நாற்காலியில் அமர்ந்தவெல்லாம் கலைஞராக முடியுமா?

இந்தியில் எழுதுவதற்கு வைகோ கொதிப்பு

நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தியில் எழுதுவதற்கு வைகோ கொதிப்பு, பகல் கனவு பலிக்காது என சாடல்

இவர்தான் ஆளுநர், மோடி, ஜெட்லி என பறந்து பறந்து சந்தித்தவர், ஆனால் அவர்களிடம் ஏதும் பேசாமல், எங்கு வந்து குட்டிகரணம் அடிக்கின்றார் பார்த்தீர்களா?

என்னது? பகல் கனவு பலிக்காதா?

பிரபாகரன் தமிழீழ அதிபராகவும், தான் தமிழக முதல்வராகவும் இருப்போம் என நண்பகல் 12 மணிக்கு எல்லாம் கனவுகண்டவர் அல்லவா?

அதனால் பகல் கனவு பற்றி அவருக்கு நன்றாக தெரியும்…

 

கந்தன் கருணை இல்லம் : புலிகளின் காட்டுமிராண்டி தனத்தின் ஆறா தழும்பு

17553576_10208778172866782_5885283834195165784_n.jpg

அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு

இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம்

அன்று ஈழத்தில் எல்லாம் புலிகளுக்கு, எது வேண்டுமானாலும் அவர்களே எடுத்துகொள்வார்கள், கேட்டால் கொல்வார்கள், அதன் பெயர் மக்களுக்கான போராட்டம்

இந்த மக்களுக்கான போராட்டத்தில் அடவாடியாக யாழ்பாணத்தில் இருந்த ஒரு செல்வந்தரிடம் இருந்து பறிக்கபட்டது “கந்தன் கருணை” என பெயரிடபட்ட பெரும் வீடு, ஒரு செல்வர்க்கானது, அவரை விரட்டிவிட்டு புலிகள் அபகரித்துகொண்டார்கள், அது புலிகுகை ஆயிற்று

அதில் மாற்றியக்க போராளிகள் சுமார் 70 பேர்வரை விசாரணைக்காக அடைக்கபட்டனர், அவர்களும் தமிழர்கள், அதே மக்களுக்காக போராட வந்தவர்கள், ஆனால் புலிகள்முன் துரோகிகள்

இவர்கள் போக புலிகளுக்கு கப்பம் மறுத்தவர்கள், எதிர்த்தவர்கள், ஆலோசனை சொன்னவர்கள், சாபமிட்டவர்கள் எல்லாம் ஆங்காங்கு அடைத்துவைக்கபட்டனர்.

இது சகோதர இயக்கங்கள் சிறைவைக்கபட்ட இடம்..

விசாரணை என்றால் ஒன்றுமல்ல, அந்த மாற்றுகுழுவின் தலைவன் எங்கிருக்கின்றான், ஆயுதம் எங்கிருக்கின்றது என போட்டு அடிப்பது, சித்திரவதை செய்து அடிப்பது, இதன் பொறுப்பாளர் பொட்டு அம்மான், அவருக்கு கீழே பல அடியாட்கள் உண்டு

இந்த வீட்டிற்கு காவலாக வந்தவன் அருணா எனும் புலி

இந்த அருணா முன்பு பிரபாகரனுடன் இருந்தார், பின் சண்டையில் சிங்களபடையிடம் பிடிபட்டான், பின் சந்திரிகாவின் கணவரின் முயற்சியில் யுத்த கைதிகள் பறிமாறியபொழுது மறுபடி புலிகளோடு வந்தார்

பிரபாகரன் தன் நிழலையும் சந்தேகிப்பவர், இந்த அருணாவிற்கு சிங்களன் ஏதும் சொல்லி அனுப்பியிருக்கலாம் என அருகில் சேர்க்கவே இல்லை, ஒரு அல்லக்கை போல அலைந்தார் அருணா

தினமும் அந்த சிறைபட்ட போராளிகளை போட்டுசாத்துவது அவரின் அன்றாட பணி

அன்றைய காலகட்டத்தில் புலிகளுக்குள் அதிகாரபோட்டி நிலவியது, பிரபாகரன் தமிழகத்தில் இருக்கும்பொழுது புலிகள் கட்டுபாடு கிட்டுவிடம் இருந்தது, கிட்டுவிற்கும் மாத்தையாவிற்கும் ஆகாது

பிரபாரனுக்கோ கிட்டு மீது ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது, அவர் அப்படித்தான்

இந்நிலையில் தன் காதலியினை பார்க்க சென்ற கிட்டுவின் மீது குண்டு வீசபட்டு காலினை இழக்கின்றார்.

இதே கிட்டு முன்பு சிங்கள வீரனின் காலை குண்டுவீசி துண்டித்ததும், பின் அந்த காலை நல்லூர் கந்தசாமி கோவில் வாசலில் வீரசாட்சியாக ரத்தம் சொட்ட சொட்ட காட்சிக்கு வைத்த காலமும் உண்டு

கோவில் வாசலில் இப்படி செய்யாதீர்கள், இது ஆண்டவனுக்கே அடுக்காது என பலர் சொன்னபொழுது கிட்டு அவர்களை துப்பாக்கி முனையில் விரட்டிய காலமும் உண்டு

தெய்வம் நின்று குண்டு வீசியது..

குண்டை வீச திட்டமிட்டதும், வீசியதும் புலிகளின் உட்கட்சி விவகாரம், அதில் பல மர்மம் உண்டு, பிரபாகரனின் நண்பன் மீது கைவைக்க பிரபாகரனின் அனுமதி இன்றி எப்படி? என்ற சர்ச்சை அன்றே உண்டு

ஆனால் அது வேறு யாரோ வீசியது என கதை கட்டினார்கள் புலிகள், விஷயம் அருணா காதுக்கும் சென்றது

அவ்வளவுதான் ஆங்கில படங்களில் வரும் ஹீரோ போல (புலிகளுக்கு அடிக்கடி ஆங்கில யுத்தபடம் காட்டபடுவதுண்டு) இரு மெஷின்களை கையில் எடுத்து கந்தன் கருணை இல்லம் புகுந்தான் அருணா

அந்த கொடூரம் அரங்கேறிற்று

அங்கு இருந்த கைதிகள் மீது சுட தொடங்கினான், அவர்கள் அலறினார்கள், கதறினார்கள், காலில் விழுந்து அரற்றினார்கள், சிலருக்கு வாயிலே சுட்டான் சண்டாளன்

மாடிக்கும் தளத்திற்க்கும் ஓடி ஓடி சுட்டான், அவன் களைத்ததும் அடுத்தவனை அழைத்டு சுட சொன்னான், சிலர் உயிர்தப்ப சமையலறை போன்ற இடங்களில் பதுங்கிகிடந்தனர்

எண்ணி எண்ணி தேடினர், தப்பியவர்களை கண்டனர், அழைத்து வைத்து சுட்டனர்

அவர்கள் நிலை எப்படி இருக்கும் என எண்ணிபாருங்கள்?, யார் இந்த அநியாயத்தை கேட்க, தடுக்க முடியும்? ஒருவரும் இல்லை

ஏராளமான அப்பாவி போராளிகள் காரணமின்றி உயிர்விட்டனர், அவர்கள் செய்த தவறென்ன? போராட வந்தது, தமிழீழம் அமைய சிங்களனுக்கு எதிராக துப்பாக்கி ஏந்தியது

இன்னும் கொடூரமாக அரைகுறை உயிரோடு இருந்தவர்களை தலையிலே சுட்டு கொன்றார்கள், ஒருவன் மட்டும் தப்பினான்

அவன் சொன்ன சொல்தான் மானிட அவலத்தின் உச்சம்.

எல்லோரும் சாகும் பொழுது ஆடு அறுக்கும்பொழுது வரும் சத்தம் போலவே முணகி செத்தார்கள், என்னால் அதிலிருந்து மீளமுடியவில்லை

இவ்வளவு கொடூரம் நடந்தபின் , அவர்களை சாவாகசமாக கொண்டு எரித்துவிட்டு வந்தனர் புலிகள்

விஷயம் லேசாக கசிந்தபொழுது புலிகள் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார்கள் “அவர்கள் தப்ப முயன்றதால் நடவடிக்கை எடுக்கபட்டது, இருவர் மட்டும் பலி”

எப்படி இருக்கின்றது? இதுதான் புலிகள் நடத்திய போர், சொந்த மக்களையே கொன்று குவித்த சாகசம், தியாகம்,வீரம் இன்னபிற‌

இன்று சிங்களனிடம் சரண்டைந்த புலிகளை காணவில்லை, அதனால் ரஜினி போக கூடாது என திருமாவும் இன்னும் சிலரும் ஒப்பாரி வைக்கின்றனர்

அன்று புலிகளிடம் சரணடைந்த தமிழர்களும் இப்படித்தான் காணாமல் போனார்கள்

இந்த விவகாரம் அப்படியே அடக்கபட்டு பின் புலிகள் யாழ்பாணத்தை போட்டு ஓடிய பின்பே வெளிவந்தது,

தண்ணீர் லாரியில் வெடிகுண்டு நிரப்பி தாக்குவது அவர்கள் ஸ்டைல், ஒரு நாள் அது குடியிருப்பு அருகே வெடித்தது 50 தமிழர்கள் அங்கேயே செத்தர், புலிகள் ஜஸ்ட் டெக்னிக்கல் பால்ட் என சொல்லிவிட்டு சென்றனர், இப்படி ஏராள சம்பவம் உண்டு

இந்த படுகொலை சம்பவம் பாருங்கள், போராட வந்ததும் தமிழர்கள், சிறைபிடித்தவனும் சிறைபிடிக்கபட்டவனும் தமிழன், கொன்றவனும் தமிழன், கால் போனவனும் தமிழன், அவன் காலை உடைத்தவனும் தமிழன்..

இப்படி நடந்ததன் பெயர்தான் ஈழமக்களுக்கான போராட்டம்

கந்தன் கருணை மாதிரியான‌ ஏராள சம்பவங்கள் உண்டு, கொஞ்சம் ஆழமாக பார்த்த்தால் சிங்களனை விட அதிகமான தமிழர்கள் புலிகளால் பாதிக்கபட்டிருக்க்கின்றார்கள்

இதனை எல்லாம் நாம் சொன்னால் துரோகி

இப்படி மக்களின் வீட்டை அபகரித்து புலிகள் செய்த அட்டகாசம் கொஞ்சமல்ல, பணம், வீடு, சொத்து , குழந்தைகள் என எதனை அவர்கள் விட்டார்கள்?

அப்படி மக்களின் வீட்டை அபகரித்துகொண்டு சிங்கள படையினை தாக்குவார்கள், அவன் திருப்பிதாக்குவான் வீடு இடியும் புலிகள் அவர்கள் போக்கிற்கு ஓடுவார்கள்

அந்த வீட்டை கட்டிகொடுக்கும் விழாவிற்குத்தான் ரஜினி செல்ல இருந்தார், அதற்குள் திருமா கும்பல் பொங்கிற்று

இந்த கந்தன் கருணை சம்பவம் எல்லாம் சொல்வார்களா என்றால் சொல்லமாட்டார்கள்.

“கந்தன் கருணை” படுகொலை ஒரு எடுத்துகாட்டு, அது வெளிவந்தது

அதனைபோல வெளிவராத கொடூரங்கள் ஏராளம் உண்டு

அந்த அருணா என்ன ஆனான்?

பின் இந்திய அமைதிபடை சென்று அவனை சுட்டு கொன்றது, இதுதான் இந்திய அமைதிபடை இலங்கையில் செய்த அட்டகாசம்..

கிட்டு என்ன ஆனான்?

மிக தந்திரசாலி என தன்னை எண்ணிய அவன் அமைதிபடை காலத்தில் இந்திய நண்பன் போல நடித்து, ராஜிவ் கொல்லபடுவதற்கு கொஞ்ச நாளைக்கு முன்பு டெல்லியில் சென்று பார்க்குளவு இந்தியாவின் மதிப்பினை பெற்றான்

1987பிரபாகரனுக்கு குண்டு துளைக்காத சட்டையினை பரிசாக கொடுத்த ராஜிவ், கொல்லபடுவதற்கு கொஞ்ச‌ நாட்களுக்கு முன்பாக அவனை டெல்லியில் கார் வரை வந்து வழியனுப்பினார்.

அந்த அப்பாவி தலைவன் அப்படி எல்லோரையும் நம்பி செத்திருக்கின்றான்

அந்த கிட்டு கொடுத்த நம்பிக்கையே புலிகளால் தனக்கு ஆபத்து இல்லை என அவரை நம்ப வைத்து, தைரியமாக சென்னைக்கு வரவழைத்தது

அப்படிபட்ட நயவஞ்சக கிட்டுவினை இந்திய கடற்படை கப்பலோடு கொன்றது

ஆக அப்பாவி தமிழர்கள் சாக காரணமான‌ கந்தன் கருணை சம்பவத்திற்கு காரணமான அருணாவினையும், கிட்டுவினையும் தண்டித்தது சிங்களனோ, பிரபாகரனோ அல்ல‌

மாறாக இந்தியா

இப்படி பெரும் துரோகம் செய்தது இந்தியா, நம்பிகொள்ளுங்கள்

இந்த கந்தன் கருணை இல்லம், சொந்த மக்களின் மேலே புலிகள் நிகழ்த்திய கொடூரத்திற்கு சுவடாய் இன்னும் அங்கே நிற்கின்றது

நிச்சயமாக அது ஒரு நினைவிடம், பெரும் அடையாளம், புலிகளின் காட்டுமிராண்டி தனத்தின் ஆறா தழும்பு

சத்யமூர்த்தி …

17629655_10208777179281943_3930794238174832582_n.jpg

அந்த காந்தி காலத்து காங்கிரஸ் சுதந்திரத்திற்கா உழைத்து கொண்டிருந்த காலங்களில் தமிழகத்தில் அதன் தூணாக நின்றவர் அந்த சத்யமூர்த்தி,

புதுகோட்டை திருமயத்தில் பிறந்தவர் நன்கு படித்தவர், ஆங்கிலத்தில் பின்னி எடுத்தவர் என்பதால் பெரும் இடம் பெற்றிருந்தார், பெரிய இடமென்றால் எப்படி?

ரவுலட் சட்டம், மாண்டேகு செம்ஸ்போர்டு போன்ற விவாதங்களில் இங்கிலாந்தில் வெள்ளையனோடு அமர்ந்து வாதிட்டவர், அந்த அளவிற்கு இந்திய அளவில் அவருக்கு மதிப்பு இருந்தது

வெள்ளையன் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த தொடங்கியபொழுது தேர்தலிலும் வெற்றிபெற்றார், ஆனால் சுதந்திர போரட்டத்திலும் கலந்துகொண்டே இருந்தார்

பாரதியாரின் பாடல்களை பிரிட்டிசார் தடை செய்தபொழுது, பொங்கி எழுந்து கண்டித்தவர், அந்நேரம் அவருக்கு துணை நின்றவர் வல்லபாய் பட்டேல்

திலருடன் அவர் நாடெல்லாம் சென்று சுதந்திர உணர்வினை ஊட்டியது பெரும் உழைப்பு.

பெரும் தொண்டும், விடாபிடியான அவரின் சுதந்திர உணர்வும் அவருக்கு பெரும் பதவிகளை கொடுத்தன, அப்படி சென்னை நகராட்சியின் மேயரும் ஆனார்

அப்பொழுது அவர் செய்த பெரும் சாதனை தான் பூண்டி நீர்தேக்கம், அது அவரின் சாதனை, காங்கிரசின் சாதனை.

அன்றைய பெரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அவர் எடுத்த நடவடிக்கை அது, இன்றுவரை சென்னையின் தாகம் தீர்க்கின்றது
அது அன்று பெரும் சாதனை, அதனை சாதித்ததால் தீரர் சத்யமூர்த்தி ஆனார்.

தன் சொத்துக்கள், பணம் எல்லாவற்றையும் சுதேசி இயக்கத்திற்காக கொடுத்து , நாட்டிற்காக கொடுத்தார்

எல்லாவற்றிற்கும் மேல் தமிழகத்திற்கு ஒரு உண்மை தொண்டனை வளர்த்து கொடுத்தார், அவர்தான் காமராஜர்

சத்தியமூர்த்தி என் அரசியல் குரு என சொல்லும் அளவிற்கு சத்யமூர்த்தி மீது காமராஜருக்கு மதிப்பும், பக்தியும் இருந்தது.

தமிழக காங்கிரஸ் வரலாற்றில் பெருஇடம் பெற்றிருந்தார் சத்யமூர்த்தி, மறக்கமுடியாத மாமனிதர்

ராஜாஜி, சத்யமூர்த்தி என தமிழர்கள் பெரும் அகில இந்திய அளவில் கொண்டாடபட்ட காலங்கள் அவை, காமராஜர் அதற்கு அடுத்தால் வந்தார்.

பசும்பொன் தேவருக்கும் இந்திய அளவில் ஒரு அபிப்ராயம் இருந்தது.

அதன் பின் அகில இந்திய அளவில் தமிழர்கள் பெரிய தலைவர்களாக வரமுடியாத அளவு தங்களை சுருக்கிகொண்டனர்,

விளைவு பல பிரச்சினைகளில் தமிழகமும் சுருக்கிட்டு கொண்டது.

இனி அப்படிபட்ட பெரும் தலைவர்கள் தமிழகத்தில் சாத்தியமில்லை, ஆனால் வராமல் தமிழகத்தை முன்னேற்ற முடியாது.

சத்யமூர்த்தியின் உருவசிலை பாராளுமன்றத்தில் திறக்கபட்ட நிகழ்வில், அதனை திறந்து வைத்தவர் அப்துல் கலாம்

நாட்டிற்காய் வாழ்ந்த ஒரு தியாகியின் சிலையினை, இன்னொரு தியாகி அப்துல்கலாம் திறந்த காட்சி மனதை விட்டு நீங்காதது, இருவரும் வாழ்ந்த வாழ்க்கை நிச்சயம் நாட்டிற்கானது

இருவருமே தமிழர்கள்..

அப்படி இன்னும் பல தமிழர்கள் அகில இந்திய அளவில் உருவாக வேண்டும், அப்படி வந்தால் தமிழகம் இன்னும் செழிக்கும்..

என்ன ராசியோ தெரியவில்லை, ராஜாஜிக்கும் சத்யமூர்த்திக்கும் ஒத்துவரவில்லை, அது சத்யமூர்த்தி காலத்திற்கு பின்னும் தொடர்ந்தது, அந்த கோஷ்டி பூசல் தீரவே இல்லை

ராஜாஜியினை தொடர்ந்து காமராஜர் வந்ததை ராஜாஜியால் சகிக்க முடியவில்லை, அதாவது தீரர் சத்யமூர்த்தியின் இடம் காமராஜருக்கு வந்தது எனும் ஒரு வன்மம் ராஜாஜிக்கு இருந்தது

நிச்சயமாக ராஜாஜி பெரும் அறிவாளி, பெரும் தந்திரி, அபார மூளைக்காரர், ஆனால் இந்த இடத்தில் அவர் சறுக்கினார்

அதன் பின் காட்சிகள் மாறின, தமிழக காங்கிரஸ் தலமை செயலகம் அவர் பெயராலே அமைந்திருக்கின்றது, அதன் ஒரு பக்கத்தில் ராஜாஜி பெயரும் இருந்திருக்கவேண்டும், விதி அது அல்ல‌

மறக்க முடியாத சுதந்திரபோராட்ட தியாகி சத்யமூர்த்தி , பூண்டி நீர்தேக்கம் எந்நாளும் அவர் பெயரை சொல்லிகொண்டே இருக்கும்.

அந்த ராஜாஜி சத்யமூர்த்தி வழிவந்தவர்களாலோ என்னமோ இன்னும் கோஷ்டி சண்டை தீரவில்லை

நேற்று அவருக்கு நினைவுநாள் அனுசரித்திருக்கின்றார்கள், அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அனுசரித்திருக்கின்றார்கள்

பல கோஷ்டிகளை காணவே இல்லை, வெகு சிலர் மட்டும் வந்திருக்கின்றனர்,ஒவ்வொருவரும் ஒரு கோஷ்டி என்பதால் பல கோஷ்டிகள் வந்ததாகவே அர்த்தம்

ஏன் எல்லா கோஷ்டிகளும் வரவில்லை?

வந்திருந்தால் அஹிம்சை போதித்த சத்யமூர்த்தி படத்தின் முன்பு புரண்டு அடித்திருப்பார்கள், அவர்கள் அப்படியானவர்கள்

ராஜாஜி, சத்யமூர்த்தி, காமராஜர் என பெரும் தமிழர்களின் ஆளுமை ஒரு காலத்தில் இந்தியா எங்கும் இருந்திருக்கின்றது

அப்படிபட்ட தலைவர்களை தொடர்ந்து உருவாக்காமல் ராமசந்திரன், அம்மா, சின்னம்மா என உருவாக்கி தமிழகம் நாசமாயிற்று

இனியாவது தமிழகம் தன் இழந்த பொற்காலத்தை மீட்டெடுக்கட்டும்

அதற்கு அகில இந்திய அளவில் நல்ல தலைவர்கள் தமிழகத்திலிருந்து உருவாகட்டும்.

சத்திய மூர்த்திபோல நாட்டிற்கு உழைத்த ஏராளமான நல்லவர்கள் தமிழகத்திலும் உண்டு, திராவிட காட்சிகளில் அவர்கள் பின்னுக்கு தள்ளபட்டிருக்கலாம் , மறைக்கபட்டிருக்கலாம்

ஆனால் அவற்றை எல்லாம் மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கு சொல்லி, அவர்களை போல சிலரையாவது இந்திய அளவில் உருவாக்கும் கடப்பாடு இந்தியர்களாகிய தமிழர்களாகிய நமக்கு உண்டு.

இல்லாவிட்டால் ரிப்பன் பில்டிங்கினை எம்ஜிஆர் தன் சொந்த செலவில் கட்டினார் சென்னைக்காக கொடுத்தார், பூண்டி நீர்தேக்கத்தை கலைஞர் கட்டினார் எனும் அளவிற்கு வரலாற்றை மாற்றிவிடுவார்கள்..

சத்யமூர்த்தியின் நினைவுநாளில் அப்படித்தான் சிந்திக்க தோன்றுகின்றது.

எங்கும் பணமழை பொழிகின்றது…

17553985_10208776827953160_7813911765887129631_n.jpg

“அன்பே வா” படத்தில் கையில் சூட்கேசும், ஒரு கம்பும் தலையில் தொப்பியுமாக ராமசந்திரன் பாடுவார்

காலங்கள் கடந்தாலும் எவ்வளவு ஆச்சரியமாக காட்சிகள் பொருந்துகின்றன?

இப்பொழுது அதே தொப்பி, ஆனால் மறைமுகமாக சூட்கேஸ், அவ்வப்போது சிலருக்கு கம்பு அடி என அந்த கோஷ்டி ஆர்.கே நகரில் சுற்றுகின்றது

4 வரிகளோடு பாடல் முடிந்தால் அதிமுகவினருக்கு நல்லது, தொப்பி சூட்கேஸ் சகிதம் “எங்கும் பணமழை பொழிகின்றது” என சுற்றி சுற்றி பாடலாம், தொப்பி சகிதம் பாடல் களை கட்டியிருக்கும்.

ஆனால் ராமசந்திரன் தெரியாமல் கூட இரு வரிகளை பாடியல்லவா தொலைத்திருக்கின்றார்,

“உதய சூரியனின் பாதையிலே
உலகம் விழித்துகொண்ட வேளையிலே,
நல்லவர் எல்லாம் நலம்பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கின்றது” என வரும் வரிகள் அவை

(அது ராமசந்திரன் திமுக காலம், உதய சூரியனின் வரி பின் புதிய சூரியன் என திருத்தபட்டது)

அதனால் அந்த பாடலை அதிமுகவினர் பாடவே மாட்டார்கள், அப்படி பாடினால் பாதிக்கு பின் திமுக தொடர்ந்து பாடும்

பிரச்சாரம் பாட்டுக்கு பாட்டு போட்டியாகும், அதனால் அதிமுகவினருக்கு அந்த பாடல் தந்திரமாக‌ மிஸ்ஸிங்..

எப்படியோ அதே தொப்பி, சூட்கேஸ் ஆங்காங்கே மிரட்டல் (கம்பு) என அதே பாடல்காட்சிகள் ஆர்.கே நகரில் களைகட்டுகின்றது.

 

எங்கும் பணமழை பொழிகின்றது…

 

 

இலங்கை ரசிகர்களுக்கு ரஜினி செய்தி

நேரம் வரும்பொழுது உங்களை சந்திக்கின்றேன் : இலங்கை ரசிகர்களுக்கு ரஜினி செய்தி

சந்திக்கவே மாட்டேன் என்னை விட்டு விடுங்கள் என இதற்கு பொருள், அதாவது முன்பு இப்படித்தான் நேரம் வந்தால் அரசியலுக்கு வருவேன் என சொல்லிகொண்டே இருந்தார்

அவரை பொருத்தவரை வரமாட்டேன் என்பதை “நேரம் வரும்பொழுது..” என சொல்லிகொள்வார்.

ஆனால் சிலருக்கு “நேரம் கூடி” வந்துவிட்டது

வேல்முருகன் மீது 10 கோடி ரூபாய் அபராதம் கேட்டு லைக்கா நிறுவணம் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றது

அவரோ உடனே முத்தரசன், திருமாவுடன் “கூடி”, பெரும் அறிக்கை எல்லாம் தெரிவிக்கின்றார், ஒருவேளை 10 கோடி கட்டவேண்டிய நிலை வந்தால் மூன்றில் ஒருபங்காக குறையும் அல்லவா?

பொதுவாக அங்கிள் சைமன் சினிமாக்காரர்கள் பற்றி வாய்திறக்கமாட்டார், அதுவும் பாஜக அபிமானம் பெற்றோர் பற்றியெல்லாம் சீமானுக்கு வாய் வராது

எங்கே தன்னை இழுத்துவிடுவார்களோ என யோசித்து, அந்த வீடியோவிற்கு விழுந்து விழுந்து விளக்கம் அளிக்கின்றார்

வைகோ வேறுமாதிரி லைக்காவால் கையாளபடுபவர்,

சீமானையும், வைகோவையும் ஐரோப்பா ஈழ‌ தமிழர்கள் மூலம் கையாள்வது லைக்காவின் சுபாஷ்கரனுக்கு மிக எளிதான வேலை..

ஆக இப்பொழுது சிக்கியிருப்பது திருமாவும், வேல்முருகனும், முத்தரசனும்

இவர்கள் மூவருக்கும் “நேரம் கூடி” வந்துவிட்டது தெரிகின்றது.

“குஷ்பூ விருது” வழங்கி பதிலடி கொடுப்போம்

17626133_10208776709430197_3004495910686198281_n.jpg

89 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கபட்டிருக்கின்றன‌

கிரிக்கெட் சிங்கம் டோனி, மயிலு ஸ்ரீதேவி, ஜெயா பச்சன் உட்பட பலரை மத்திய அரசு நிராகரித்துள்ளதாம்.

அந்த நிராகரிப்பு பட்டியலில் குஷ்பூ பெயர் இருந்ததா இல்லையா என்பது பற்றி செய்தியில்லை..

ஆனால் விருது பெற்றவர்கள் பெயரிலும் அவர் இல்லை

ரஜினிக்கே பத்ம விருது கிடைத்திருக்கும் பொழுது, குஷ்பூவிற்கு ஏன் மறுக்கபடுகின்றது?

இது தான் அரசியல், இந்திய அரசியல், இது பெரும் வருத்தமான விஷயம்..

அது என்ன பத்ம விருது? அவர்களே வைத்துகொள்ளட்டும்

குஷ்பூவிற்கு கிடைக்காத அந்த “பத்ம”விருதினை அவரது கோட்டான கோடி ரசிகர்கள் மிக கடுமையாக நிராகரிக்கின்றோம்.

விரைவில் அந்த ஸ்ரீதேவிக்கும், டோனிக்கும் “குஷ்பூ விருது” வழங்கி பதிலடி கொடுப்போம்

அது ஆயிரம் பத்ம விருதுக்கு சமம் என விரைவில் உலகிற்கே அறிவிப்போம்.

நயன் தாராவிற்கு முதல் விருதினை வழங்குமாறு நண்பர் Babu Rao பரிந்த்துரைக்கின்றார்.

“குஷ்பூ விருது” வழங்கும் உயர்நிலை கமிட்டி அதனை பரீசிலனை செய்யும்..

உகாதி சுபகாங்சலு…

17554153_10208776159416447_7071087308725072921_n.jpg

தங்கள் கலாச்சாரப்படி யுகாதி கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் உகாதி நல்வாழ்த்துக்கள்

வளமும், ஐஸ்வர்யமும், அமைதியும், ஆசியும் இல்லமெல்லாம் வந்து நிறையட்டும்

“உகாதி சுபகாங்சலு…”