ஜெயா தொலைக்காட்சியில், குஷ்புவின் “இது நம்ம பூமி” படம்

 

ஜெயா டிவியின் கொடுமையான செய்திகளுக்கு பின் ஆறுதலாக நல்ல படம் ஒளிபரப்புகின்றார்கள்

இன்று குஷ்பூவின் “இது நம்ம பூமி” படம் ஓடிகொண்டிருக்கின்றது

ஆலயமணியில் சிவாஜி நடந்த நடைக்குபின் மிக கம்பீரமான ஸ்டைலான நடையில் குஷ்பூ வருகின்றார்

17498477_10208785610292713_305013217133447127_n.jpg

முன்பு என்றோ நிலாவில் சிறிய துண்டு ஒன்றை உடைக்க அமெரிக்கா திட்டமிட்டதாம், அப்படி உடைத்திருந்தால் அது இந்த பட குஷ்பூ போலத்தான் கியூட்டாக இருந்திருக்கும்…

இந்த படத்திற்கு அல்லவா “இது நம்ம ஆளு” என தலைப்பு வைத்திருக்க வேண்டும்?

எப்படியோ மாறிவிட்டிருக்கின்றது..

 
 

ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தேன்: முன்னாள் நீதிபதி கட்ஜூ

17553687_10208784885114584_5007627069024049130_n.jpg

ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தேன்: மனம் திறக்கிறார் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கட்ஜூ

ஓஓஓ மலரரும் நினைவுகள், மலரட்டும்

அவர்தான் என்ன செய்வார்? முதலில் காதலை சொன்னால் எம்ஜிஆரால் தொல்லை, கட்ஜூ சென்னை ரோட்டில் ஓடவிடபட்டிருப்பார்

அடுத்து சொல்ல நினைத்தால் மன்னார்குடி குடும்ப தொல்லை, “எங்கள் அட்சய பாத்திரம் மீதா ஆசைபடுகின்றாய்..” என ஆட்டோவினை கோர்ட்டுக்கே அனுப்பியிருப்பார்கள்

கடந்தவருடம் கூட சொல்லியிருக்கலாம், சொல்லியிருந்தால் இன்னொரு மர்ம மரணம் என செய்திகள் வந்திருக்கும்..

அதனால் மனிதர் இன்னும் சொல்லாவிட்டால் எப்படி?, அதனால் சொல்லிவிட்டார்

நல்லவேளையாக ஜெயா சொத்துகுவிப்பு வழக்கு இவரிடம் சிக்கவில்லை, சிக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

வழக்கு தொடர்ந்தவரை உள்ளே வைத்துவிட்டு , ஆச்சாரியாவினை நாடு கடத்திவிட்டு, ஜெயாவிற்கு 100 கோடி நஷ்ட ஈடு வழங்கி வெளியே விட்டிருப்பார்

“எங்கிருந்தாலும் வாழ்க…..” என கண்ணீரோடு அனுப்பியிருப்பார்…

சசிகலா முதல்வராகியிருபபர்

ஆக ஜெயாவிடம் சொல்லபடாத ஒரு காதல், தமிழகத்தை காப்பாற்றியிருக்கின்றது

ஜெயாவின் சீடன், மருமகள், தோழி, மருமகளின் கணவன் எல்லாம் கட்சி தொடங்கும் நிலையில், நான் ஜெயலலிதாவினை காதலித்தவன் என கட்சி ஏதும் தொடங்கிவிடுவாரோ?

ஜெயா கட்ஜூ பேரவை என ஒன்றை தொடங்கினால் என்னாகும்?

கொஞ்சம் பயமாகத்தான் இருக்கின்றது..

(முன்பு இருவரும் சந்தித்த தருணத்தின் படம், “என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கின்றாய்..” என்ற பாடல் காதுகளில் கேட்டால் நாம் பொறுப்பல்ல)

சொன்னார்கள் : வைகோ, வாசன், திருநாவுக்கரசு

ம.தி.மு.க. நடத்தும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினையொட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

மதிமுகவிற்கு எதற்கு ராமசந்திரன் நூற்றாண்டு விழா? அவர் என்ன மதிமுக நிறுவணரா? புரவலாரா? தலைவரா?

தற்காலிக உறுப்பினராக கூட ராமசந்திரன் மதிமுகவில் இல்லையே பின்ன ஏன்?

விஜயகாந்த் மருத்துவமனைக்கு சென்றதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை, இந்த மனிதரையா நம்பினோம் என நினைத்தால் நெஞ்சு வலி வராதா?

அதிமுகவிற்கு கொள்கையே இல்லை,

மதிமுகவின் ஒரே கொள்கை யாருக்காவது அஞ்சலி செலுத்திகொண்டே இருப்பது, அப்படி இன்று ராமசந்திரனுக்கு

விரைவில் அதிமுகவிற்கு…..


சட்டசபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்: வாசன்

ஆமாம், அதில் ஆட்சியினை கைபற்றும் வாய்ப்பு இவருக்கு பிரகாசமாக உள்ளது. அதனால் தேர்தலை நடத்துவதில் இவருக்கு அவசரம்.

தேர்தல் எப்பொழுது நடந்தால் இவருக்கு என்ன?,

அதில் இவர் கிழித்தது கிழிக்க போவது என்ன?


“ஹெச்.ராஜாவை அடக்கி வையுங்கள்” பாஜகவினை எச்சரிக்கின்றார் திருநாவுக்கரசர்

ஆமாம், முன்பு பாஜகவில் இவரை எப்படி அடக்கி வைத்தீர்களோ, அப்படி அந்த ஹெச்.ராஜாவினையும் அடக்கி வையுங்கள்..

அன்று இவரை அடக்கிவைத்துவிட்டு இன்று எச்.ராசாவினை பேசவிடுவது என்ன நியாயம்?

அது சரி திருநாவுக்கரசர்? உங்கள் கட்சியில்தான் யாரும் எதற்கும் அடங்கமாட்டீர்களே, அவரைப்போல சீறிபார்த்தால்தான் என்ன?


 

மனுஷ்யபுத்திரனின் கண்ணீருக்கு ஆறுதல் கண்ணீர் வடிக்கும் ஜெயமோகன்

17629891_10208784512705274_2279163978110491933_n.jpg

மனுஷ்யபுத்திரனின் கண்ணீருக்கு ஆறுதல் கண்ணீர் வடிக்கும் ஜெயமோகன் அவர் ஸ்டைலில் நிறைய புலம்பியிருக்கின்றார், இப்படி முடிக்கின்றார்

“இஸ்லாமியர் பல நூறு ஆண்டுகளாக இங்கே ஈட்டிவைத்திருந்த நல்லெண்ணம் கடந்த இருபதாண்டுகளில் இங்குள்ள வஹாபியக் கும்பல்களால் அழிக்கப்பட்டுவிட்டது. துரதிருஷ்டவசமாக அவர்களே இஸ்லாமின் முகமாக பரவலாக அறியப்படுகிறார்கள்.

ஒவ்வொரு இந்துவும் அந்த பழைய இஸ்லாமியருக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறான். அதை இஸ்லாமியரில் சிலராவது உணரவேண்டும்.”

மிஸ்டர் ஜெயமோகன் அதனை நாங்கள் திருப்பி கேட்கின்றோம்

“திப்பு சுல்தான் காலத்தில் வெள்ளையானால் வளர்க்கபட்ட வெறி, தேசம் பிரிந்து, காந்தி கொலையால் அடக்கபட்ட அந்த வெறி, இந்திரா காலத்திற்கு பின் வளர ஆரம்பித்து, பின் ,மசூதியினை இடித்து கடந்த 30 ஆண்டுகளில் பெரும் கலவராமாகி இன்று மாட்டுகறி முதல் கல்வி என‌ எல்லாமே பிரச்சினை என வளர்ந்து நிற்கின்றது

துரதிருஷ்டவசமாக அவர்களே இந்துக்களின் முகமாக அறியபடுகின்றனர், போகிற போக்கில் பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல் , தேவதாசி போன்ற முறைகளை கொண்டுவந்து விடுவார்களோ எனும் அச்சம் ஏற்படுங்கின்றது

இத்தேசத்தின் ஒவ்வொரு முஸ்லீமும், கிறிஸ்தவனும், புத்தனும் அந்த பழைய இந்துக்களுக்காக ஏங்கி கொண்டிருக்கின்றான்”

உங்களுக்கு மட்டும்தான் சொல்ல தெரியுமா?
மற்றவர்களுக்கு சொல்ல தெரியாதா?

எச்.ராசா என்பவர்தான் பெரும் உதாரணம்…. எதற்கு?

17522870_10208783891129735_5146503678341151241_n.jpg

மதவெறி உச்சத்திற்கு போனால் எப்படி நடப்பார்கள் என்பதற்கு ஐஎஸ் இயக்கம் எடுத்துகாட்டு

எப்படி பேசுவார்கள் என்பதற்கு எச்.ராசா என்பவர்தான் பெரும் உதாரணம்.

சோனியாகாந்தி பற்றி என்னவெல்லாமோ பேசிகொண்டிருக்கின்றார், அந்த பெண் ஏதாவது அரசு பதவியில் இருந்தவரா? நாட்டை ஆண்டவரா?

மத சம்பந்தமான எந்த கருத்தினையாவது அவர் சொல்லியிருக்கின்றாரா?

கடந்த ஆட்சியின்பொழுது விவசாயிகளுக்கான கடனை மன்மோகன்சிங் அரசு தள்ளுபடி செய்யும்பொழுது எந்த விவசாயி சோனியாவிடம் சென்று கத்தமுடியும்?

அப்படி அறிவுகெட்டு கத்த அவர் என்ன எச்.ராசாவா?

நொடிக்கொருமுறை சோனியா அந்நிய தேசத்தவர் என சொல்லிகொண்டே இருக்கின்றார் அய்யோ பாவம்.

மிஸ்டர் ராசா, ஆனானபட்ட சிவபெருமானே கையால மலை எனும் அந்நிய தேசத்தில் இருந்துதான் தேற்கே வந்திருக்கின்றார், முருகனும் அப்படித்தான் வந்திருக்கின்றார்

ராமனின் குருநாதர் விஸ்மாமித்திரரும் இந்தியர் அல்ல என்கின்றது புராணம்

அவ்வளவு ஏன்? ராமன் பெண்ணெடுத்த சீதையே பர்மா அல்லது தாய்லாந்து பக்கம் என்கின்றது புராணம், சீதை ஒரு அந்நியர் என சொல்லிவிடலாமா?

இந்தியபெண்ணை மணக்காமல் அந்நிய பெண்ணை மணந்த ராமனுக்கு ஏன் இங்கே கோவில் என சொல்லிவிடலாமா?

கனத்த சங்கிலியால் கட்டி, நல்ல சிகிச்சைக்கு இவரை அனுப்புவது நலம், மனிதருக்கு முற்றிகொண்டிருக்கின்றது

இவரை எல்லாம் வைத்து தமிழகத்தில் கலகம் செய்யலாமே ஒழிய கட்சி வளர்க்கமுடியாது

காங்கிரஸ்காரர்கள் கோபத்தில் இருக்க பாஜகவினர் இவரை நினைத்து தலையில் அடித்துகொண்டிருக்கின்றார்கள்

அவர்கள் நிலையும் பரிதாபம் தான், கட்சியில் இருப்பதே சிலர் அதில் இந்த எச்.ராசாவினையும் விரட்டிவிட்டால் இருப்பது யார்?

அதுவும் “என்னது?? எச்.ராசா இருந்த கட்சியில் நாங்கள் இருந்தால் எங்களை பற்றி என்ன நினைப்பார்கள்?..” என்ற பயத்தில் யார் அந்த கட்சிக்கு வருவார்???

 

ஒரு தேர்தல் நேரத்தில் தெறிக்கும் உண்மைகள்…

சசிகலா எழுதி கொடுத்த போலி அறிக்கையை படித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம்: ஜெ.தீபா

அட என்னய்யா இது?

சசிகலாவினை ஜெயா சாவிற்கு பொறுப்பு, எனும் அளவிற்கு பன்னீர் செல்வம் கிழித்துகொண்டிருக்க, பன்னீரை தீபா கிழிக்க தொடங்கிவிட்டார்

இன்னும் சுவாரஸ்ய உண்மைகள் வெளிவரலாம்

சசிகலா பற்றிய உண்மைகளை பன்னீர் சொல்ல, பன்னீர் பற்றிய உண்மைகளை தீபா சொல்ல தொடங்கிவிட்டார்

தீபா பற்றிய உண்மைகளை யார் சொல்வார்களோ?

அதற்கும் ஒருவர் வராமலா போய்விடுவார், தீபாவின் கணவர் பேசாமலா போய்விடுவார்??

ஒரு தேர்தல் நேரத்தில்தான் எத்தனை உண்மைகள் தெறிக்கின்றன..

 
 
 

திருமாவின் உண்மை முகம்…

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரினால் தமிழ் மக்களுக்கு என்று எதுவித முன்னோடியான வேலைத்திட்டங்கள் எதனையும் முன்னெடுக்காத தொல் திருமாவளவன்..

தமிழின விடுதலை மீது பற்று வைத்துள்ளவர் என்று தமிழ் மக்களுக்கு காட்டிக்கொள்ளும் திரு தொல் திருமாவளவன், தமிழ் மக்களுக்கும் அன்றி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் எதுவித உதவிகளும் செய்ததில்லை.

17629773_10208783717365391_3503373847990276290_n.jpg

மேலும் திருமாவளவன் மக்களுக்கு நன்மை பயக்கும் வேலைத்திட்டங்களை முடக்கும் வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் அறிக்கைகள் விடுவதனையும், முற்றாக தவிர்க்கும் படியும் கேட்டுக்கொள்ளுகின்றோம்

இத்தோடு திருமா தன் பேச்சுக்களுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.”

இப்படி எச்சரித்திருப்பது யார் தெரியுமா?

விடுதலை புலிகள்.

ஆம் இலங்கையில் இல்லாவிட்டாலும் ஈழத்தை நாடு கடத்திகொண்டு சென்ற புலிகள், சொத்துக்களை கடத்திய புலிகள் என ஏராளமான ஐரோப்பிய புலிகள் உண்டு

அவற்றில் பல பிரிவுகள் உண்டு, அதில் ஒன்று “புலிகளின் விசேட அணி”

இந்த விசேட அணிதான் இப்பொழுது திருமாவினை எச்சரித்திருக்கின்றது

இந்த அணியோடு நெருக்கமானவர்கள் வைகோ, சீமான் எல்லாம் இப்பிரச்சினையில் ஒதுங்கியிருப்பதை காணலாம்

திருமா கத்திகொண்டிருக்க, வைகோ முள்மரங்களையும் தொடர்ந்து மைல்கற்களையும் புடுங்க சென்றுவிட்டார்

சீமான் ஏதும் புடுங்கவில்லை மாறாக ஆபாச படத்திற்கு விளக்கம் சொல்லிகொண்டிருக்கின்றார்

எப்படி இந்த விசேட புலிகள் திருமாவினை மிரட்டும் அளவிற்கு வந்தார்கள்?

பிரபாகரன் இல்லாததால் திருமா தப்பித்தார், பிரபாகரன் இருந்திருந்தால் சிக்கல்தான்..

ஏன்?

அது அப்படித்தான் பெரும் ஈழபணக்காரர்களின் கப்பத்திற்கு ஆபத்து வரும்வகையில் புலிகள் என்றுமே நடந்துகொள்வதில்லை