உலகம் முழுக்க மே தினம் கொண்டாடப்பட போகின்றது

Image may contain: 1 person, standing, sky, cloud and outdoor

உலகம் முழுக்க மே தினம் கொண்டாடப்பட போகின்றது

அது எப்படி உலக தொழிலாளர் தினமாக கொண்டாடுகின்றது என்றால், இந்த தொழிலாளி மானிட வர்க்கம் தாண்டி வந்திருக்கும் கொடூர காலம் அப்படியானது.

ஆதிகாலத்தில் தொழிலாளியின் பெயர் அடிமை, ஒரு அடிமை என்பவன் வாய்பேசும் மாடு அல்லது ஒட்டகம். மற்றபடி அவனுக்கு எந்த உரிமையோ பாதுகாப்போ இல்லை.

இந்த அடிமை முறை பைபிள் எழுதபட்ட காலத்திலே இருந்தது என்றாலும், அது சர்ச்சையாக வெடித்தகாலம் தொழில்புரட்சி காலமும், வெள்ளையன் உலகெல்லாம் சென்று தோடங்கள் அமைத்த காலமும், சுரங்கங்கள் அதிவேகமாக தோண்டபட்ட காலமும்தான்.

அதில் ஆப்ரிக்க அடிமைகள் கடுமையாக பாதிக்கபட்டார்கள், ஆனால் குரலெழுப்ப முடியாது. மற்ற தொழிலாளர்கள் ஓரளவிற்கு குரலெழுப்பி 15 மணிநேர வேலையினை 8 மணிநேரமாக குறைக்க அமெரிக்காவிலும், இன்னபிற நாடுகளிலும் போராடிகொண்டிருந்தார்கள்.

லிங்கனின் அடிமைமுறை ஒழிப்பிற்கு பின் அமெரிக்க கருப்பர்களும் அவ்வுரிமையினை கேட்டு போராடினர், முதலாளி வர்க்கத்தின் கடும் கெடுபிடியினையும் தாண்டி அவர்கள் வெற்றிபெற்றனர், மார்க்ஸின் முழக்கமும், சோவியத் யூனியனின் அசுரபலமும் உலகில் தொழிலாளர் நலம் காத்தன.

8 மணிநேர வேலை, பணி பாதுகாப்பு, இன்னபிற சலுகைகள் என உலகம் பயனடைந்தது இப்படித்தான், இன்று தொழிற்சங்கங்கள், கொடிகள்,யூனியன் என தொழிலாளருக்கு ஒரு பாதுகாப்பு இருப்பதும் இப்படித்தான், எல்லாம் 1990வரை சரியாக இருந்தது.

அதன்பின் சோவியத் சிதறவும், உலகமயமாக்கல் கொடுமையும் இன்று நவீன அடிமை முறையினை அறிமுகபடுத்திவிட்டன, அன்று பாமர அடிமைகள் இன்று படித்த அடிமைகள்.

அன்று சுரங்கத்திலோ, கரும்பு தோட்டத்திலோ, தேயிலை தொட்டத்திலோ 15 மணிநேரம் பாமரர்கள் உழைத்ததை போல இன்றைய காலத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் குறிப்பாக ஐ.டி கம்பெனிகள்.

ஒரு ஐடி தொழிலாளி அப்படித்தான் உறிஞ்சபடுகின்றான் 16 மணிநேரம் அவனை பிழிந்துவிடுவார்கள், இன்னும் ஏராள இம்சைகள். உச்சமாக அவனுக்கு சங்கமோ அல்லது பணிபாதுகாப்போ சுத்தமாக கிடையாது.

அதுவும் அவன் ஒழுங்காக வந்து உழைக்கும்பொழுதும் அவனுக்கு அப்ரைசல் என ஒரு கொடுமையினை வைத்து, அம்மா கட்சி அமைச்சராகவோ அல்லது வேட்பாளராகவோ பதைபதைப்பில் வைத்திருப்பதில் அவர்களுக்கொரு ஆனந்தம்.

நான் நீங்கள் இட்ட பணியினை எல்லாம் செய்துதானே வருகிறேன், பின்னர் ஏன் ஆயிரம் கேள்விகள்? என எந்த ஐ.டி தொழிலாளியும் கேட்க முடியாது. திடீரென தூக்குவார்கள் அதற்கு ஆயிரம் காரணம் வேறு சொல்வார்கள்.

ஒரு ஆட்டோ டிரைவருக்கு ஒரு அவமானம் என்றால் தமிழகம் முழுக்க அது எதிரொலிக்கும், ஒரு கொத்தனாருக்கு பிரச்சினை என்றால் அது கட்டட பணியினை பாதிக்கும், இவ்வளவிற்கும் இவர்கள் அடிப்படை கல்வி மட்டும் பெற்றிருப்ப்பார்கள.

ஆனால் ஒரு ஐ.டி ஊழியன் பணி பறிக்கபடும்பொழுது, அவசர அவசரமாக சக ஊழியன் தனது நண்பர் அல்லது உறவினரின் பயோடேட்டாவினை அங்கு சமர்பித்துகொண்டிருப்பான், படித்தவர் உலகம் இப்படி சுயநலமானது.

ஆக பெரும் போராட்டம் போராடி தொழிலாளர் உலகம் பெற்ற உரிமைகளை, இன்றைய கார்பரேட் உலகம் காலில்போட்டு நசுக்குகின்றது. மறுபடியும் ஆதிகாலத்திற்கு கொண்டுபோயாயிற்று.

ஐடி என்று மட்டுமல்ல, எல்லா கார்பரேட் தொழிலும் 15 மணிநேரம் உழைக்காமல் வாழமுடியாது என்ற அளவிற்கு உலகினை மாற்றிவிட்டார்கள்.

8 மணிநேர வேலை என, 8 மணிநேர சமூக உறவுகள், 8 மணிநேர தூக்கம் என அக்கால வாழ்க்கைமுறையினை சுத்தமாக ஒழித்தும் விட்டனர், அக்கால கிராம வாழ்க்கை இப்படித்தான் இருந்தது,

எவ்வளவு சுகமான காலங்கள் அவை

இன்று இந்தியாவில், பிலிப்பைன்ஸில் ஐ.டி வளர்ச்சிபெற்றிருக்கிறது என சொன்னால் அதன் பின்னால் மறைந்திருப்பது இந்த கடுமையான தொழிலாளர் சுரண்டல், 3 வருடத்தில் முடிக்கவேண்டிய பணீகளை 3 மாதத்தில் முடிக்கசொல்லி அவர்கள் படுத்தும்பாடு அப்படி.

ஐரோப்பியர்களிடம் அதிகம் பேசமுடியாது, அவர்கள் உல்லாசம் அவர்களுக்கு முக்கியம், ஓய்வு முக்கியம் என ஏராள சிக்கல்கள், அதன்பின் என்ன செய்ய ஆசியன் தான் இளிச்சவாயன், அந்நாட்டு அரசுகள் ஒரு மண்ணாங்காடி தொழிலாளர் நலமும் பேணாது.

இன்னும் ஆபத்தான அணுவுலை பணிகளில் தொழிலாளர்களுக்கு செய்யபடும் மருத்துவசோதனை, பாதுகாப்பு என ஏராளம் உண்டு, இந்தியாவில் எப்படி என தெரியவில்லை, ஆனால் நன்றாக மட்டும் இருக்காது.

அன்று கரும்பு பண்ணை அடிமைக்கு ஒரு பெட்டி சோளமும், ஒரு பெட்டி கறியும், குளிருக்கு சுருட்டும், தீபெட்டியும் வழங்கபடுமாம்.

இன்று ஐ.டி காரனுக்கு என்ன? பர்கர், பீசா கூடவே எடிஎம் கார்டு, அவ்வளவுதான், ஒரு போன் அதுவும் எதற்கு தூங்காமல் உழைப்பதற்கு, நடுநசியிலும் அழைப்பதற்கு, காரொ வாகனமோ அல்லது வீடோ, எல்லாமே பொறிகள், சிக்க வைக்கும் பொறிகள்.

இதில் அவனுக்கான உரிமையோ, அவனுக்கான சொந்த சிந்தனையோ அவன் செய்துவிட முடியுமா? விடுவார்களா? அனாதையாக விட்டுவிடுவார்கள்.

இன்று உலகில் சங்கமே இல்லாதவர்கள் இரண்டு பேர், ஒன்று தெருவில் சுற்றும் மனநிலை பாதிக்கபட்டவர்கள், அவர்களுக்கான சங்கம் எப்படி சாத்தியமாகும்? இன்னொன்று கார்பரேட் தொழிலாளர்கும் ஐ.டி பொறியாளர்களும்.

பைத்தியங்கள் ஒன்றாய் சேர்ந்து கொடிபிடித்தாலும் நிச்சயம் இந்த ஐ.டி தொழிலாளி ஒருநாளும் சேரப்போவது இல்லை, இப்படி உரிமைகெட்டு நிற்காவிட்டால் அவன் எப்படி அவன் கனவு தேசமான அமெரிக்கா செல்வது?

ஆனால் தொழிலாளர் போராட்டம் தொடங்கியதே அமெரிக்காவில் என்பதும், அங்கிருக்கும் வெள்ளை மக்களுக்கான மட்டும் பாதுகாப்பும் அவனுக்கு தெரியவில்லை அய்யோ பாவம்.

இந்த மே தினத்தில் பரிதாபபட்டு பார்க்கவேண்டியது இம்மாதிரியான தொழிலாளர்களைதான், நாகரீகமான வேடத்தில் இருக்கும் இந்த அடிமைகளைத்தான்.

இன்னும் இந்தியாவில் தொழிலாளர் சுரண்டல் எவ்வளவோ உண்டு, அது அங்காடி தெரு கதையாகட்டும், இன்னபிற சம்பவங்களாகட்டும் ஏராளம் உண்டு

களை கூத்தாடிகளில் உள்ள சிறுவர் சிறுமியரை கணக்கில் எடுக்காமல், கடைகளில் தொழிற்சாலைகளில் மட்டும் கணக்கெடுக்கும் விசித்திரமான நாடு இது, இதோ ஒரு சிறுவனை வேலைக்கு வைத்தால் மிரட்டும் அதிகாரிகள், சினிமாவில் நடிக்கும் சிறுமிகளை மட்டும் கொஞ்சுவார்கள், அங்கு என்ன சட்டமோ தெரியவில்லை.

இப்படி மேதினம் பல சிந்தனைகளை கிளறிவிட்டாலும், பொல்லாத முதலாளிவர்கக்கம் தொழிலாளர் உரிமையினை கொஞ்ச கொஞ்சமாக ஒழித்துவிட்டு மறுபடியும் அடிமை முறையினை ஆசியாவில் கொண்டு வந்துவிடுமோ என பலகுரல்கள் எழும் வேளையில் தமிழன் நிலை என்ன தெரியுமா?

தல அஜித்தின் பிறந்த நாள், தமிழக திருவிழா.

எங்கு நிற்கின்றான் தமிழன், இதுதான் தமிழகம், மே தினம், மார்க்ஸ்,தொழிலாளர் வரலாறு எல்லாம் அவனுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை, மாறாக அஜித் எனும் அவதாரம் பிறந்துவிட்டார் போதாதா?

உலகம் முழுக்க மே தின கொண்டாட்டமும் செய்தியும் தெரிவிக்கபட்டுகொண்டிருக்க, தல பிறந்த நாளிலும் மேதினத்தை கொண்டாடுகின்றான்.

ஐடி இந்திய அடிமையோ அன்று 24 மணிநேர உழைப்பில் தீவிரமாக இறங்கி இருக்கின்றான்.

ஒன்று மட்டும் உண்மை, தொழில்நுட்பம் எவ்வளவும் வளரட்டும், அதன் கரங்கள் புளூட்டோ வரை கூட நீளட்டும். ஆனால் மனித உரிமைகளை காக்கும் பொறுப்பு தொழிலாளர் சங்கங்களுக்குத்தான் உண்டு.

அவ்வகையில் மேதினம் மகா மதிப்புகுரியது, போற்றுதலுக்குரியது

 
 

நீங்கள் அய்யாகண்ணு அல்ல, அம்மணகண்ணு

வறட்சியினால் விவசாயிகள் இறக்கவில்லை என தமிழக அரசு சொல்லிகொண்டிருக்கின்றது

மிஸ்டர் அய்யாகண்ணு, காதில் விழுந்ததா? இதற்கு உங்கள் பதில் என்ன?

டெல்லியில் கோவணம் அவிழ்த்த நீங்கள் நல்லவரென்றால் இப்படி எல்லாம் சொல்லிகொண்டிருக்கும் தமிழக அரசின் அமைச்சர்களின் வேட்டியினையாவது உருவ வேண்டாமா?

ஆக நீங்கள் நடத்தியதெல்லாம் நாடகம், அப்படித்தானே?

இனி நீங்கள் அய்யாகண்ணு அல்ல, அம்மணகண்ணு

ஹிட்லர் இறந்ததாக அறிவிக்கபட்ட நாள், இன்று …

Image may contain: one or more people

72 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐரோப்பா நிம்மதி பெருமூச்சு விட்டது, அமெரிக்கா பெர்லினுக்காக செய்த‌ அணுகுண்டை என்ன செய்யலாம் என யோசித்துகொண்டிருந்தது, ரஷ்ய படைகள் கொண்டாடிகொண்டிருந்தன, ஆனால் உலக தலைவர்களும் உளவுதுறைகளும் தலையினை பிய்த்து கொண்டிருந்தது

ஆம் ஹிட்லர் இறந்ததாக அறிவிக்கபட்ட நாள்

உண்மையில் அன்று ஜெர்மன் தோல்வி முகம் காட்டினாலும், ஜெர்மனிக்குள் நுழைய யாருக்கும் தைரியம் இல்லை, அவர் அப்படி குண்டு வைத்திருப்பார், அதி நவீன திட்டம் வைத்திருப்பார், அவரை தொட நினைத்தால் ஜெர்மனே அழியும் என ஆளாளுக்கு யோசித்துகொண்டிருந்தார்கள்

ஹிட்லர் மீது இருந்த பிம்பம் அப்படி..

ஆனால் ரஷ்யாவிலிருந்து நாஜிக்களை துரத்திய செம்படையினர் தீரமாக ஜெர்மனில் நுழைந்து ஹிட்லரை தேடின, இறுதியில் எரிந்த நிலையிலிருந்த இரு உடலை கைபற்றின, ஒன்று ஹிட்லர் எனவும் இன்னொன்று ஈவா பிரவுண் எனவும் சொன்னார்கள், கூடவே ஹிட்லரின் பிரியமான நாயின் சடலமும் கிடைத்தது

ஹிட்லர் தன்னை சுட்டு செத்தார், உடலை எரிக்க சொன்னார் என அவரின் காவலர்களில் ஒருவன் வாக்குமூலம் சொன்னான் , அவன் மட்டும்தான் சாட்சி, அவன் சொன்னதகவல்தான் உலகெல்லாம் சொல்லபடது

பின்பு அந்த மண்டையோட்டை ஆராய்ந்த ரஷ்யர்கள் திகைத்தார்கள், காரணம் அது ஹிட்லரின் மண்டையோடு அல்ல, அல்லவே அல்ல.

அப்படியானால் ஹிட்லர்?

இன்றுவரை தெரியாத மர்மம், ஜெகஜால கில்லாடியான ஹிட்லரின் இறுதிகாலம் இன்றுவரை மர்மமே, இதில் பலவகையான அரசியல் உண்டு

இந்த உலக அரசுகள் எல்லாம் மர்மமானவை, அவை ஏன் சில விஷயங்களை சொல்லாமல் இருக்கின்றன என்பதில் பெரும் அரசியல் உண்டு

உதாரணம் நேதாஜி என்ன ஆனார் என்பது, இன்றும் பிரபாகரனுக்கு சிங்கள அரசு மரணசான்றிதழ் கொடுக்க தயங்குவது, பின்லேடனை கொன்றதாக சொன்ன அமெரிக்கா கடைசிவரை அவர் முகத்தை காட்டாதது

ஆனால் சதாமினை தூக்கிலிட்டார்கள் ஏன்? அது அரபு உலகை ஆட்டி வைக்க, ஆனால் பின்லேடனை மர்மமாக புதைத்தார்கள்

இப்படிபட்ட மர்மங்களில் பெரும் மர்மம்தான் ஹிட்லரின் கடைசி காலம், அவனின் சாவு

ஹிட்லர் வாழ்ந்த நாட்களில் அவன் மீது நடத்தபட்ட கொலைமுயற்சி ஏராளம், அதனால் அப்பொழுதே அவன் தன்னை போல ஒருவனை நடமாட விட்டுவிட்டு அவர் பதுங்கிகொண்டார் என்பதும் ஒரு தியரி

அதனை உறுதிபடுத்தும் விதமாக அவருக்கு கொடுக்கபடும் உணவுகளை உண்டு சரிபார்த்து கொடுத்த பெண்ணின் சந்தேகமும் முக்கியமானது, அவள்தான் தினமும் ஹிட்லருக்கு முன்பு சாப்பிடுவாள், அவள் சாகவில்லை என உறுதிபடுத்தபட்டால்தான் ஹிட்லர் அந்த உணவினை உண்பார்

அப்பெண்ணும் கடைசி காலங்களில் ஹிட்லரை காணவில்லை என்றுதான் சொன்னாள்.

இன்னொன்று தோல்வி முகம் தெரிந்தவுடன் அவர் அர்ஜெண்டினாவிற்கு தப்பினார் எனும் தியரி உண்டு, அக்கால அரசியல் அப்படி

இத்தாலி, ஜப்பான், ஜெர்மன் என்றொரு கூட்டணிதான் நமக்கு தெரியும், தெரியாத கூட்டணி அர்ஜெண்டினா. அதற்கு கத்தோலிக்க மதம், பிரிட்டன் எதிர்ப்பு என ஏராளமான காரணங்கள்

ஐரோப்பாவில் ஹிட்லர் படைகள் தோற்க தோற்க அவர்கள் எல்லாம் அர்ஜெண்டினாவிற்குத்தான் தப்பினார்கள், ஹிட்லரின் தளபதி ஈச்மென் கூட இஸ்ரேலால் பின் கொண்டுவரபட்டது எல்லாம் வரலாறு

அப்படி ஹிட்லரும் அர்ஜெண்டினாவிற்கு தப்பினார் என ஏகபட்ட தியரிகள் உண்டு, ஆனால் அவர் சிக்கவில்லை

அக்காலத்தில் ஹிட்லரிடம் நவீன வாகனங்கள் இருந்தன, நீர்மூழ்கி கப்பல்கள் இருந்தன, பறக்கும் தட்டு போன்ற ஒரு அதிவேக விமானம் அவனிடம் இருந்தது என்பது உண்மை

அதிலொன்றில் அவர் தப்பியிருக்கலாம் என தேடினார்கள், அந்த ஜெகஜால கில்லாடி சிக்கவே இல்லை

ஆக ஹிட்லர் தப்பி அர்ஜெண்டினாவிற்கு சென்றான் என்பது உளவுதுறைகளின் முடிவு, அவன் அகப்படவில்லை, மண்டையோடும் அவனது இல்லையெனில் அவன் எங்கே?

ஹிட்லருக்கு பின் அமெரிக்காவும் ரஷ்யாவும் மோதலில் இறங்க, ஹிட்லரை தேடுவதை குறைத்தார்கள், அவன் வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது என்ற ஒரு நிலையும் காரணம்

இந்த உலகத்திற்கு புரியாத புதிர் ஹிட்லர், இன்றுவரை அவனை முழுக்க யாருக்கும் புரியவில்லை, ஆனால் மகா அசாத்தியமான மனிதன்

அவனின் மரணம் கூட மர்மம்தான், அவன் போர்கலை வித்தகன், அவனின் போர்வியூகங்கள் எல்லாம் அபாரமானவை

நார்மாண்டி முற்றுகை நடந்தால் கூட எப்படி முறியடிக்க வேண்டும் என வியூகம் எழுதிவைத்துதான் தூங்கிகொண்டிருந்தான், அவனை எழுப்பாமலே ஜெர்மன் படை அந்த வியூகத்தில் போரிட்டது

அப்படிபட்ட ஹிட்லர் தான் தோற்றால் என்ன செய்யவேண்டும் என நிச்சயம் யோசித்திருப்பான், அதனால்தான் அவன் தப்பியது 100% வாய்ப்புள்ள விஷயம் என உலகம் சொல்கின்றது

மற்றபடி அவனின் இறுதிநாட்கள் என சொல்லபடுவதெல்லாம் கட்டுகதைகள், அந்த மர்மான நாட்கள் ஹிட்லருக்கும் ஈவா பிரவுணும் மட்டுமே அறிந்த ரகசியங்கள்

எப்படியோ, உலகத்தை தன் கண் அசைவில் ஆட்டுவித்த ஒரு பெரும் சத்திவாய்ந்த தலைவனின் சகாப்தம் முடிந்த நாள் இன்று

உலகம் தன் கனவுகளை, தன் திட்டங்களை, தன் ஆராய்ச்சிகளை பயன்படுத்தி பல துறைகளில் முன்னேறிகொண்டிருப்பதை பார்த்துகொண்டே தென் அமெரிக்காவில் எங்கோ வாழ்ந்தபடி மறைத்திருக்கின்றான் ஹிட்லர்.

முக்கியமானவர்களின் மரணங்களில் மர்ம ஆட்டம் ஆடும் வல்லரசுகள், ஹிட்லர் தப்பிய மர்மத்தை சொல்லாமல் அதனை எப்படியோ வசனம் எழுதி மறைக்கபார்த்தன , முழுதும் மறைக்க முடியவில்லை

ஹிட்லர் கடைசியிலும் தன் எதிரிகள் முகத்தில் பூசிய கரி இன்றுவரை அப்படியே இருக்கின்றது

 
 

“ஜாதிமல்லி” கூட்டத்தின் நடுவில் ஒரு காஷ்மீர் ரோஜா..

Image may contain: 1 person, close-up

பாகுபலி இன்னொரு முறை பார்க்கபோகலாம் என கிளம்பினால் டிவியில் ஜாதிமல்லி படம் தொடங்கிற்று, இதனை விடவா பாகுபலி பெரிது, கொஞ்சம் கழித்து செல்லலாம் என டிவி முன் அமர்ந்தாயிற்று

கிளியோபாட்ராவின் மூக்கு கொஞ்சம் சிறியதாக இருந்திருந்தால் அவருக்காக உலகமே அழிந்திருக்குமாம், அப்படி குஷ்பூ இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்தால் நிச்சயம் உலக வரலாறே மாறி இருக்கும்..

ஆனாலும் தங்கசிலை என்ன உயரத்தில் இருந்தால் என்ன? மின்னத்தான் செய்யும்

“ஜாதிமல்லி” கூட்டத்தின் நடுவில் ஒரு காஷ்மீர் ரோஜா..

 
 

பாகுபலி : தொடரும் விமர்சனங்கள்…

பாகுபலி விமர்சனம் ஆளாளுக்கு சொல்லி கொண்டிருக்கின்றார்கள், ஒரு சிலர் முதல்பாகம் போல “பகடை” என்றொரு வார்த்தை சிக்குமா? என அலசி பார்த்துவிட்டு சென்று படுத்து உறங்கியாயிற்று, இன்னும் கொஞ்சம் பேர் கதை சரியில்லை, அரசரின் கிரீடம் சரியில்லை என பல விமர்சனங்கள்…

இதில் ஒரு சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று, அதெப்படி? ராணிக்கு உளவாளிகள் இல்லையா? அது என்ன ராணி? யார் போட்டு கொடுத்தாலும் நம்பிவிடுவாரா? செல்லாது செல்லாது, இது சரியில்லை என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

கதைபடி அது அக்காலம், அதுவும் மகனின் முகத்தில் ரத்தம் பார்த்துவிட்ட தாய் உணர்ச்சியில் முடிவெடுப்பது ஏற்றுகொள்ள கூடிய விஷயம்தான், அது இருக்கட்டும்

இந்த நவீன உலகத்தில் இந்திய மாநில முதல்வர், அதுவும் பிரதமராக வரகூட வாய்ப்பு இருப்பதாக சொல்லபட்ட ஒரு பெண்மணி எப்படி இறந்தார்? இறுதிகாலத்தில் அவருக்கு நிகழ்ந்தது என்ன? என தெரியாமலே போய்விட்டது

அந்த பெரும் இரும்புபெண்ணுக்கு இல்லாத அதிகாரமா? அவரிடம் இல்லாத அரசு உளவாளிகளா? ஆனால் அந்த இரும்பு பெண்ணால் தப்பிக்க முடிந்ததா?

இதுதான் அரசியல், பெரும் அதிகாரமுள்ள ஒருவரை ஒரு கும்பல் தனிமைபடுத்தி, சூழ்ந்துகொண்டு , அவரை மக்களிடம் இருந்து துண்டித்து, தன் வசபடுத்திகொண்டால் எளிதாக அதிகாரத்தை அடையலாம்

ஆச்சரியமாக அந்த பாகுபலி ராணியின் கதை, தமிழகத்தின் இரும்புபெண்ணின் கதையோடு பொருந்தித்தான் வருகின்றது,

அதற்காக பன்னீர் செல்வம் கட்டப்பா, தினகரன் ராணா , சசிகலா நாசர் என நீங்களாக கற்பனை செய்துகொள்ள கூடாது…

ராஜமவுலி திமுக எல்லாம் இல்லை, அவருக்கும் தமிழகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதால் சிக்கல் இல்லை

அரசகுடும்பத்தின் பொதுவான தன்மை உலகெல்லாம் ஒன்றாகத்தான் இருக்கின்றது என சொல்லிவிடலாம், அது உண்மையும் கூட‌

இதனை தமிழகத்தில் கண்முன்னே கண்டபின்பும், அது எப்படி சிவகாமிக்கு உளவாளிகள் இல்லை என சொல்லிகொண்டிருப்பவர்களை என்ன செய்வது?

படத்தில் கட்டப்பா எனும் விசுவாசி என்ன கொடூரம் நிகழ்ந்தது என சொல்லும்பொழுது அழுதுவிட்டு பாகுபலி எனும் மக்கள் அபிமான மன்னன் மர்மமாக இறந்த பின் மக்கள் பொங்கி எழுந்து அராஜக ஆட்சியினை வீழ்த்தியதாக காட்டும் பொழுது கைதட்டிவிட்டு வெளிவரும் தமிழன்

சொந்த மாநிலத்தில் என்ன நடக்கின்றது என தெரிந்தாலும் தெரியாதது போல் இருந்துவிட்டு, அதெப்படி சிவகாமிக்கு உளவாளி இல்லையா?? என கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றான்

அவன் அப்படித்தான்..

பாகுபலி 2 : திரை விமர்சனம்

 

பாகுபலி 2 : பாடல்கள் (இசை  ஒலி வடிவம்)

பாடல்களை கேட்டுக்கொண்டே விமர்சனம் படியுங்கள் 


ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்.. என கதை கேட்டு வளர்ந்த தலைமுறை நாம், ராஜா கதைகள் என்றால் ஆர்வம் வருவதொன்றும் ஆச்சரியமல்ல..

அப்படி பாகுபலி ராஜாவின் கதையினை இரண்டாம் பாகமாக சொல்லியிருப்பதை பார்த்தாகிவிட்டது, அழகாக என சொன்னால் தவறு, அற்புதமாக சொல்லியிருக்கின்றார்கள்

Image may contain: 4 people, textபடத்தின் பெரும் பலம் ரம்யா கிருஷ்ணன், மனுஷி போன பிறவியில் மங்கம்மாளாக இருந்திருக்கலாம், நடை முதல் முழி வரை அப்படியே “ராஜகளை” காட்டுகின்றார், பாசமா? கடமையா? என அவர் திணறும் இடத்தில் நம்மையும் அழவைக்கின்றார்.

நிச்சயம் அவர் நடிப்பு மகா ராணி, நாம் குஷ்பூ ரசிகன் தான், அதற்காக நல்ல நடிப்பினை குறிப்பிட்டு சொல்லாமல் இருக்க முடியாது,

குஷ்பூ கோபபட்டாலும் பரவாயில்லை

நாசரும், ராணாவும் வஞ்சக, பேராசையின் வடிவங்களாக வாழ்ந்திருக்கின்றனர், இருவர் நடிப்பும் அபாரம் என்பதற்கு 10 படி மேல்.

அனுஷ்கா அசத்தியிருக்கின்றார், இந்த பாகம் முழுக்க அவருக்கானது, அக்கால நாயக்க ராணிகள் சாயல் அவருக்கு அசால்ட்டாக பொருந்துகின்றது

பிரபாஸ் பற்றி சொல்லவேண்டியதில்லை, முன்பே அனுபவபட்டது, அதாவது ஒரு தெலுங்கு நண்பர் இருந்தார், ஏதோ ராமராவ் பற்றி சொல்லபோக மனிதர் டென்சனாகி சொன்னார, “ஆமா எங்க ஊர்ல ஹிட் நடிகர் ஆகணும்னா பாடி வெயிட், உயரம் எல்லாம் இருக்கணும், சிரஞ்சீவி இப்போ பிரபாஸ் எல்லாம் அப்படித்தான்

உங்க ஊர்ல இந்த தனுஷ், சிம்பு மாதிரி எல்ல்லாம் எங்கள் ஊரில் வரமுடியாது” உண்மையும் அதுதான், ஆஜானுபாகுவான பாத்திரத்திற்கு பிரபாஸ் அட்டகாசம்

சத்யராஜ் மகா நடிகன், இறுதிவரை நான் அரசனுக்கு அடிமை என போராடும் விசுவாசமான பாத்திரத்தில் உச்சம் தொடுகின்றார், வாட்டாள் நாகராஜ் கும்பல் கூட ரசிக்கும் நடிப்பு

படம் மிரட்டுகின்றது, ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு நுணுக்கமாக எடுக்கபட்டிருக்கின்றது, நுணுக்கமாக மட்டும் அல்ல, அழுத்தமாகவும், ரசனையாகவும் எடுத்திருக்கின்றார் ராஜமவுலி

எது கிராபிக்ஸ், எது இயற்கை என தெரியாத அளவு படத்தினை கொண்டு சென்றிருப்பதற்கு பெரும் வாழ்த்துக்களை சொல்லலாம்

இந்திய திரைப்பட வரலாற்றில் நிச்சயம் பாகுபலி ஒரு மைல்கல் அல்லது கோபுரம் என்பதில் இனி சந்தேகமில்லை, இனி நிச்சயம் இம்மாதிரியான படங்கள் நிறைய வரும் , ஆனால் பாகுபலிக்கு மேலா? கீழா? என்றுதான் அளக்கமுடியும்

கொஞ்சம் அல்ல, நிறையவே நீளமான படம், ஆனால் படம் பார்பதை மறந்து, அந்த காலத்திற்கே நம்மை ராஜமவுலி குழு அழைத்துசென்றிருப்பதால் ஒரு அலுப்புமில்லை, படம் முடிந்த பின்னாலும் நான் இங்கே இருக்கின்றேன் அடுத்த ஷோ போடுங்கள் என சொல்லும் ஆர்வம்தான் இருக்கின்றது

இரு பாகத்தையும் சேர்த்துபோட்டு 7 மணிநேரம் ஓடவிட்டால் கூட நன்றாக இருந்திருக்கும், இதுதான் படத்தின் வெற்றி

கொஞ்சம் யோசித்தால் இது அம்புலிமாமா கதைதான், அரச கீரிடம் எனும் மாயை எத்தனை உயிர்களை பழிவாங்கும், சொந்த ரத்ததை சிந்த வைக்கும், பல குடும்பங்களை அழிக்கும் எனும் ஒரு வரி கதைதான், ஆனால் தொழில்நுட்பம் , நல்ல நடிப்பு என மிகுந்த ஆச்சரியமான கண்கட்டி வித்தையாக டைரக்டர் காட்டிவிட்டார் அல்லவா? அதுதான் சிறப்பு

மலேசியாவில் இப்படி வரவேற்பு பெற்ற இந்தியபடத்தினை இப்பொழுதுதான் பார்க்கின்றேன், எல்லா திரையரங்கும் நிரம்பி வழிகின்றன, நள்ளிரவு காட்சிகளும் புல் என்கின்றார்கள், எங்கும் பாகுபலி எதிலும் பாகுபலி

ஆக நல்ல படத்திற்கு, மக்களை கட்டிபோட தெரிந்த படத்திற்கு மக்கள் வரவேற்பு இருக்கின்றது, எடுக்க வேண்டிய விதத்தில் எடுத்தால் சினிமா தியேட்டர்களை நிரப்பமுடியும் என தெளிவாக சொல்கின்றது பாகுபலி

நல்ல படத்திற்கு செலவழிக்க மக்கள் தயங்குவதில்லை , அவர்கள் நல்ல படத்தினை எதிர் பார்கின்றார்கள், அப்படி அமைந்துவிட்டால் கொண்டாடி தீர்க்கின்றார்கள் என்பது கண் கூடாக தெரிகின்றது.

திரைப்பட தொழில் நஷ்டம், எங்களுக்கு வரிவிலக்கு வேண்டும், இன்னும் பல சலுகை வேண்டும் என ஒப்பாரி வைக்கும் விஷால் போன்றவர்களை இந்த படத்திற்கு வரும் கூட்டத்தை காட்டி காட்டி அடிக்க வேண்டும்

உறுதியாக சொல்லலாம் இன்னும் குறைந்தது 20 வருடத்திற்கு இப்படி ஒரு படம் சாத்தியமே இல்லை, நிச்சயமாக இந்த பாணியில் வரும், ஆனால் பாகுபலி அளவிற்கு நுட்பமாக எடுக்கமுடியுமா? என்பது கேள்விகுறி

என்னிடம் மட்டும் ஒரு 100 கோடி இருந்தால், அந்த ராஜமவுலியினை அழைத்து வந்து ராஜராஜசோழன், நரசிம்ம பல்லவன், ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன் என எல்லா தமிழ் வரலாற்று நாயகர்களையும் படமாக எடுக்க சொல்லலாம்

தமிழகத்தில் இப்படி மிரட்ட யார் இருக்கின்றார்கள்? ராஜமவுலிதான் பக்கத்து மாநிலத்தில் இருக்கின்றார்

சினிமா ரசிகர்கள் தவறவிட கூடாத படம் இது, இனி அரசர் கதைகளை எடுத்தால் இப்படித்தான் எடுக்கவேண்டும் என வழிகாட்டிவிட்ட ராஜமவுலிக்கு பெரும் வாழ்த்துக்கள்

இப்பாணியில் கமலஹாசனும் மருதநாயகம் எடுக்கலாம்தான், ஆனால் மனிதர் வித்தியாசமானவர், சொல்லி கேட்கின்ற ரகம் இல்லை, ஆனால் இனி இந்த சாயலின்றி மருதநாயகம் வரமுடியாது

எப்படியோ காலத்திற்கேற்ற சிறந்த படம் வந்திருக்கின்றது, ராஜமவுலி தன் விஸ்வரூபத்தை காட்டியிருக்கின்றார், வணங்கலாம். நல்ல நடிகர்கள் நல்ல இயக்குநர் கதைகளில் எப்படி மின்னுவார்கள் என தெரிகின்றது, இதே ரம்யா கிருஷ்ணன் சத்யராஜினை “அசத்தல்” படத்தில் ஒரு மாதிரி அலைய வைத்தது தமிழ்சினிமா

ஆனால் நல்ல இயக்குநர் இருவரின் அபார நடிப்பையும் பிழிந்து கொடுத்திருக்கின்றார்,

மிக மிக அசத்தலான படம் கண்களை மூடினால் அம்புமழை பொழிகின்றது, அரசவையும் ரம்யா கிருஷ்ணனின் கெத்தான முகமுமே நினைவுக்கு மாறி மாறி வருகின்றன‌

நல்ல வேளையாக இம்மாதிரி படங்கள் இப்பொழுது வந்திருக்கின்றன, ஒரு 35 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் என்ன ஆயிருக்கும் தெரியுமா?

அந்த ராமசந்திரன் கோபத்தில் கிளம்பியிருப்பார், “என்ன? பாகுபலியா? நான் இருக்கும்பொழுதா?

கூப்பிடு அந்த லதாவினையும், ஜெயலலிதாவினையும், மஞ்சுளாவினையும். நான் ராமுபலி என்றொரு படம் 3 பாகமாக எடுத்து என்னை நிரூபிக்க போகின்றேன்”

யாராவது தாங்கமுடியுமா? ஆனால் அவர் செய்வார். வாழ்க்கையெல்லாம் அதனைத்தான் செய்திருக்கின்றார்

இப்பொழுது அவர் இல்லை, ஆனால் கமலஹாசனை இந்த படம் உறங்கவிடாது, விடவே விடாது என்பதை மட்டும் யூகிக்கலாம்

மருதநாயகம் படம் இப்பாணியில் வந்தால் நிச்சயம் கொண்டாடபடும், இன்னொரு பாகுபலியாய் அமையும்.

ஆனால் ராஜமவுலி, கமல் என இருவரும் இணையவேண்டும், அது சாத்தியமில்லை, ஒரு குகைக்குள் இரு சிங்கம் இருக்க முடியாது என்பது விதி, அதனால் கனவு மட்டும் கண்டுகொள்ளலாம்….

பாகுபலி எனும் மாயலோகத்தில் நம்மை இழுத்துசென்று அற்புதமான காட்சிகளை காட்டிவிட்டு மறுபடி தியேட்டர் இருக்கைக்கு அழைத்து வந்திருக்கின்றது பாகுபலி குழு

அவர்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும், வாழ்த்திகொண்டே இருக்கலாம்..

படம் முடிந்த பின் பேரமைதி மனதை ஆட்கொள்கின்றது, பெரும் கனவுலோகத்தை கடந்து வந்தது போல, சுனாமி கடந்து சென்றது போல மனம் ஏதோ ஒரு பெருமூச்சு வருகின்றது

Image may contain: 1 person, textஇப்பொழுது எழும் கேள்வி ஒன்றுதான், அது கமலஹாசனை நோக்கித்தான்

மிஸ்டர் கமலஹாசன், மருதநாயகம் எப்படி வரும்? இதே போல் வருமா? இல்லை இதற்கு மேலுமா?,

தமிழ் சினிமாவில் இம்மாதிரி படங்களை உங்களை தவிர யாரிடம் எதிர்பார்க்கமுடியும் மிஸ்டர் கமலஹாசன்?, தெலுங்கு படமொன்று உலகத்தை திரும்பி பார்க்க வைத்திருப்பதை போல , ஒரு தமிழ்படமும் உலகை திரும்பி பார்க்க வைத்தால் நன்றாகத்தான் இருக்கு..

ராஜமவுலி ஒரு தீக்குச்சியினை கொளுத்தியிருக்கின்றார், நீங்கள் ஒரு தீப்பந்தத்தினை எரியவிடுவீர்கள் என காத்திருக்கின்றோம் மிஸ்டர் கமலஹாசன்..


 
 
 

Continue reading

நாஞ்சில் சம்பத் : முழுக்க நனைந்த பின் “எல்லாம்” எதற்கு?

முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு? என்பது பழமொழி, நாஞ்சில் சம்பத்தோ முழுக்க நனைந்த பின் “எல்லாம்” எதற்கு? எனும் அளவில் டெல்லியில் தமிழக விவசாயிகள் நின்ற கோலத்திற்கு சென்றுவிட்டார்

ஜெயா டிவியின் செய்தியினை அவருக்கு குத்தகைக்கு விட்டாயிற்று, மனிதர் உறுமிகொண்டே உளறிகொட்டுகின்றார்

“அரசியல் பெண்கள் உலாவும் சோலை அல்ல” என்கின்றார், ஜெயாவும் சசிகலாவும் பெண் இல்லையா என அருகிலிருப்பவர்களும் கேட்கவில்லை, சகித்துகொள்கின்றார்கள்

சிறை தினகரனை சந்தித்துவிட்டு ஏதோ மண்டேலாவினை பார்த்துவருபவரை போல முழங்குகின்றார், அதிலொரு வார்த்தை குறிப்பிடதக்கது

“தினகரனின் முகத்தை பார்த்ததில் நெஞ்சார மகிழ்கின்றேன்”, அதாவது சிறையில் தினகரனை பார்த்ததில் மகிழ்ச்சியாம்.

வைகோவின் அரசியல் வளர்ப்பல்லவா? மனிதர் அச்சுபிசகாமல் அவர் பாணியிலே அரசியல் செய்கின்றார்

இவர் சீறும் சீற்றத்தை கண்டால் மனிதர் வைகோவின் சிலீப்பர் செல்லாக இருக்கலாம் என சந்தேகிக்க தோன்றுகின்றது

ஸ்டாலினிக்கு வாய்ப்பு இருக்கின்றது, ஆனால் அவர் ….

தமிழக அரசியல் களம் திறந்து கிடக்கின்றது, பெரும் ஆளுமை என யாரும் இல்லை, ஓங்கி அடித்தால் சிம்மாசனத்தை தூக்கிவிடலாம்

ஆனால் ஓங்கி அடிக்கத்தான் ஆளில்லை

காமராஜர் எனும் பெரும் மலையினை சாய்த்து ஆட்சி பிடித்தார் கலைஞர், இங்கோ பூப்பாதையிலும் நடக்க ஸ்டாலினுக்கு தெரியவில்லை

நியாயம், நீதி, நேர்மை என சொல்லிகொண்டிருக்கின்றார் என்கின்றார்கள், 1960ல் இப்படி கலைஞரும் சொல்லிகொண்டிருந்தார் என்றால் இன்று நல்லகண்ணு போலவோ அல்லது டிராபிக் ராமசாமி போலவோதான் கருணாநிதி இருந்திருப்பார், இப்படி அரசியல் சாணக்கியனாக ஜொலித்திருக்கமாட்டார்

இது அரசியல், பூனை எந்த நிறமாக இருந்தால் என்ன? எலியினை பிடித்தால் போதும் என்ற கொள்கைதான் இங்கு சாத்தியாகுமே தவிர, வேறு எதுவும் சரிவராது, கலைஞர் அதனைத்தான் செய்தார்

ஸ்டாலினிக்கு வாய்ப்பு இருக்கின்றது, ஆனால் அவர் , அவரது அரசியல் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் ஒவ்வொரு பொன்னான நொடியினையும் தவற விட்டு கொண்டிருக்கின்றார் என்றே தோன்றுகின்றது

 
 
 

கீழடி தேவைதான், ஆனால் ஆதிச்சநல்லூர் அவசியம் தேவை

Image may contain: 2 people

அகழ்வாராய்ச்சியில் ஏதும் செய்யவேண்டுமென்றால் நெல்லை மாவட்ட ஆதிச்சநல்லூரில் செய்யுங்கள்

பெரும் நாகரீகம் அங்குதான் உறங்கிகொண்டிருக்கின்றது, தமிழனின் ஆதி அங்குதான் புதைந்திருக்கின்றது, அதனை தோண்டுங்கள்

சிந்துவெளி, எகிப்து, மெசடோபியாவினை மிஞ்சும் தொன்மையான விஷயம் வெளிவரும், அதனை செய்யுங்கள்

கீழடி தேவைதான், ஆனால் ஆதிச்சநல்லூர் அவசியம் தேவை

அம்மா தமிழிசை, அதனை செய்வீர்களா? செய்து காட்டுவீர்களா?

திராவிட, காங்கிரஸ் ஆட்சிகள் செய்யாததை நீங்கள் செய்வீர்களா? நிச்சயம் உங்கள் பிஜேபி செய்யுமா?

அப்படி மட்டும் செய்துவிட்டால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிஜேபி ஆட்சி தமிழகத்தில் நடக்கட்டும், தமிழறிந்த, தமிழர் நாகரீகமறிந்த யாரும் அந்த நன்றியினை மறக்கமட்டார்கள்

கீழிசையில் சண்டையிடும் தமிழிசையே, கொஞ்சம் தேற்கே வந்து ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் இறங்குங்கள்

அப்படி இறங்கிவிட்டால் நிச்சயம் தமிழர் ஆதரவு உங்களுக்குத்தான், உங்களுக்கு மட்டும்தான்..

 
 

தமிழக அரசியல் களம் திறந்து கிடக்கின்றது

தமிழக அரசியல் களம் திறந்து கிடக்கின்றது, பெரும் ஆளுமை என யாரும் இல்லை, ஓங்கி அடித்தால் சிம்மாசனத்தை தூக்கிவிடலாம்

ஆனால் ஓங்கி அடிக்கத்தான் ஆளில்லை

காமராஜர் எனும் பெரும் மலையினை சாய்த்து ஆட்சி பிடித்தார் கலைஞர், இங்கோ பூப்பாதையிலும் நடக்க ஸ்டாலினுக்கு தெரியவில்லை

நியாயம், நீதி, நேர்மை என சொல்லிகொண்டிருக்கின்றார் என்கின்றார்கள், 1960ல் இப்படி கலைஞரும் சொல்லிகொண்டிருந்தார் என்றால் இன்று நல்லகண்ணு போலவோ அல்லது டிராபிக் ராமசாமி போலவோதான் கருணாநிதி இருந்திருப்பார், இப்படி அரசியல் சாணக்கியனாக ஜொலித்திருக்கமாட்டார்

இது அரசியல், பூனை எந்த நிறமாக இருந்தால் என்ன? எலியினை பிடித்தால் போதும் என்ற கொள்கைதான் இங்கு சாத்தியாகுமே தவிர, வேறு எதுவும் சரிவராது, கலைஞர் அதனைத்தான் செய்தார்

ஸ்டாலினிக்கு வாய்ப்பு இருக்கின்றது, ஆனால் அவர் , அவரது அரசியல் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் ஒவ்வொரு பொன்னான நொடியினையும் தவற விட்டு கொண்டிருக்கின்றார் என்றே தோன்றுகின்றது


கொசுறு 
போர் வெடிக்கும் இறுக்கமான சூழலிலும் ஏவுகனை சோதனை செய்தது வடகொரியா

இந்த வடகொரிய வைகோ திருந்தபோவதில்லைபோர் வெடிக்கும் இறுக்கமான சூழலிலும் ஏவுகனை சோதனை செய்தது வடகொரியா

இந்த வடகொரிய வைகோ திருந்தபோவதில்லை, அடிபட்டு சாகட்டும், அடிபட்டு சாகட்டும்