ஜெயா சசி சொத்துக்களை தமிழக அரசு எடுத்து கொள்ளும் : செய்தி

ஜெயா சசி சொத்துக்களை கையகபடுத்தபடுத்த நீதிமன்றம் உத்தரவு, தமிழக அரசு அந்த சொத்துகளை எடுத்துகொள்ளும் : செய்தி

தமிழக அரசின் சொத்துக்களை மீட்ட அரசு இது என அவர்களில் ஒரு பிரிவினரே அவர்களுக்கு வாழ்த்து நோட்டீஸ் ஒட்டுவார்கள்

ஆனாலும் தன் கட்சியின் தலைவியின் ஊழல் சொத்தினை, தானே பெற்றுகொள்ளும் விசித்திரம் தமிழகத்தில் முதல்முறையாக நடக்கின்றது

இந்த ஜெயலலிதாவிற்குத்தான் சட்டசபையில் படம் திறக்க வேண்டுமாம்

ஏதும் சொன்னால்..

தமிழக மக்களே, அம்மையார் தன் சொத்துக்களை எல்லாம் தமிழகத்திற்கே கொடுத்துவிட்டார், தியாக திருவுருவம் பாருங்கள, இவருக்கு அல்லாமல் வேறு யாருக்கு தமிழக சட்டசபையில் இடம் என சிரிக்காமல் சொல்வார்கள்..

 
 
 
Advertisements

பிரியங்கா சோப்ராவிற்க்கு சமூக வலைதளங்களில் கண்டனம்

Image may contain: 1 person, sitting

பிரியங்கா சோப்ராவிற்க்கு சமூக வலைதளங்களில் கண்டனம்., பிரதமரை சந்திக்கும்போது கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தாராம்

அட அந்த மனிதரே “கால் கண்டார் காலே கண்டார்” என எவ்வளவு பொறுமையாக தலை தாழ்த்தி அமர்ந்திருந்தார், இவர்களுக்கு என்ன வந்தது?

அவர் காலை அவரின் இன்னொரு கால் மீது போட்டு அமர்ந்தது தவறா? அருகில் இருந்த இன்னொருவர் மீதா போட்டுவிட்டார்?

உண்மையில் கோபபடவேண்டியது பிரியங்காவின் ரசிகர்கள், எதற்கு என்றால் …முடிந்தால் புரிந்தால் புரிந்துகொள்ளுங்கள்

 

செய்தி சிதறல்கள்

திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

பாரதிராஜா சார்.. We want more Emotion


சிவில் போர் மூளும் : மத்திய அரசுக்கு திருமா எச்சரிக்கை

சீமான் அடிக்கடி போர் நடத்துகின்றேன் என்கின்றார், ரஜினி வேறு போர் வந்தால் சந்திப்போம் என்கின்றார்,

இது பசுமீட்பு போர் என்கின்றார் எச்.ராசா

இதில் திருமா வேறு சிவில் போர் நடத்தபோகின்றாராம்

எங்கு திரும்பினாலும் போர்..ஆமாம் போர் எனும் வடிவேலு வசனமே தமிழகத்தில் எதிரொலிக்கின்றது

பாவம் தமிழர்கள், சரியான போர்களத்தில் மாட்டிகொண்டார்கள் தமிழர்கள்.


பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை வரை தண்டனை கொடுப்பது பற்றியும் சட்டம் இயற்ற ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை.

# கதற, கதற பால் கறந்தால், கருவுற ஊசிபோட்டு சித்திரவதை செய்தால், கழுத்தில் கயிறு கட்டினால்
என்ன தண்டனை என இந்த நீதிமன்றம் இன்னும் பரிந்துரைக்கவில்லை


விதிமுறைகளை மீறினால் என்னாகும் என்பதற்கு இலங்கை வெள்ளமும், சென்னை தி.நகர் தீவிபத்தும் சமீபத்திய சாட்சிகள்

சென்னை தி.நகர் தீ நகராகிவிட்டது என்கின்றார்கள், அந்த பகுதி ஸ்தம்பித்திருக்கின்றது, பெரும் சிக்கலை அந்த பகுதி வியாபாரிகள் எதிர்நோக்கியிருக்கின்றார்கள்

விதிமுறைகளை கடுமையாக மீறும்பொழுது, அரசு கண்டுகொள்ளாமல் விட்டாலும் இயற்கை அதனை காட்டிகொடுத்துகொண்டுதான் இருக்கின்றது


 
 
 

 

 
 

 

 
 

மாட்டுகறி அரசியலின் உள் அர்த்தம் ஒன்றுமே அல்ல‌

No automatic alt text available.மாட்டுகறி அரசியலின் உள் அர்த்தம் ஒன்றுமே அல்ல‌

பூரண இஸ்லாமிய‌ நாடுகளில் எப்படி சில விலங்குகளை விலக்கவேண்டுமோ, அப்படி இந்த இந்துநாட்டில் மாடுகளை வணங்கியே தீரவேண்டும்

இதுதான் இவர்கள் சொல்லவரும் தத்துவம்

உலகில் அப்படியான கடுமையான சட்டதிட்ட இஸ்லாமிய நாடுகளை உலக நாடுகள் ஒருமாதிரியாகத்தான் பார்க்கின்றன, எண்ணெய் எனும் ஒரே ஒரு வளம் இல்லாவிட்டால் அவர்களை திரும்பி கூட பார்க்கமாட்டார்கள்

இப்படியான விஷயங்கள் 1000 காலத்திற்கு முன்பு அந்நாட்டை இழுத்து சென்றுவிடும், உதாரணத்திற்கு ஆப்கானிஸ்தானை சொல்லலாம்

இன்னும் வளமான நாடுகளாயிருந்தவற்றை தீவிர மதவெறி எப்படி எல்லாம் சீரழித்தது என்பதற்கு இலங்கையும், பர்மாவும் நம் கண்முன்னே தெரிகின்றன‌

மதசுதந்திரம் இல்லாத நாடு, அல்லது பூரண மதவிலக்கு எனும் கொள்கைக்கு வராத எந்த நாடும் உருப்படாது, அரேபிய நாடுகள் எண்ணெய் விலை குறைந்ததும் இதோ தடுமாறுகின்றன, நாளை எண்ணெய் வற்றுமானால் அவர்கள் நிலை அவ்வளவுதான்

உலக நாடுகள் எல்லாம் அதனைத்தான் சொல்கின்றன, மதங்களை பெரும் பொருள் ஆக்காத நாடுகள் எல்லா சூழலிலும் முன்னோக்கி செல்கின்றன‌

இஸ்லாமிய நாடுகள் என தங்களை அறிவித்துகொண்ட நாடுகள் கூட, சிறுபான்மையினரின் உணவில் தலையிடுவதில்லை, அவர்கள் மிகுதியான இடங்களில் அவர்கள் விரும்பும் உணவு பன்றியாக இருந்தாலும் அவை கண்டுகொள்வதில்லை

ஆனால் இந்தியா மிக தீவிரமாக இவ்விஷயத்தில் இறங்குகின்றது, இதன் விளைவுகள் வேறுமாதிரி செல்லும்

முன்பு பாபர் மசூதி இடிப்பிற்கு பின் இத்தேசம் இஸ்லாமிய நாடுகளில் இழந்த வியாபார வாய்ப்பு கொஞ்சமல்ல, நரசிம்ம ராவ் அரசு பெரும் சிரமபட்டு அவற்றை சமாளித்தது

இப்பொழுது இஸ்லாமியருக்கு எதிராக நோன்புகாலத்தில் இடைஞ்சல் செய்கின்றது எனும் செய்தி இந்தியாவிற்கு உலக அரங்கில் பெரும் கருப்புபுள்ளி

நாளை காஷ்மீர் விவகாரத்தை உலகில் விவாதித்தால் “உன்னை பற்றி தெரியாதா? இஸ்லாமியர் மாட்டுகறி உண்பதையே தடுத்தவர்தானே நீங்கள், பின் எப்படி அவர்கள் உங்களோடு இருப்பார்கள்..” என முகத்தில் அடிப்பார்கள்.

ஏன் இதோ இந்தியாவில் இஸ்லாமியர் வயிற்றில் அடிக்கின்றார்கள் என தீவிரவாதிகளுக்கு காரணம் கிடைத்துவிடும், சில நாடுகள் அதனை ஆதரிக்கவும் செய்யும்

உலகின் ஒரே இந்துநாடு என்ற அந்தஸ்தில் இருந்தது நேபாளம், அங்கு கோயிலில் லட்சகணக்கான மாடுகள் பலிகொடுக்கும் திருவிழாக்கள் உண்டு

இந்திய இந்துக்களிலும் அப்பழக்கம் உண்டு, தமிழகத்தில் உண்டு, இவை எல்லாம் தடுக்க முடியுமா?

உள்நாட்டில் குழப்பத்தையும், வெளிநாட்டில் அவமானத்தையும் தேடிதரும் காரியங்களில் இந்த அரசு இறங்கியிருக்கின்றது

பல்லாயிர வருட பாரம்பரியமுள்ளது இந்துமதம், எத்தனையோ வேற்றுமத அரசுகளையும், அரசர்களையும் அது கண்டது, ஆனாலும் கடந்து வளர்ந்து நிற்கின்றது

அதனை எல்லாம் ஆர்எஸ்எஸ் செய்ததா? சங் பரிவார் செய்ததா? மோடி செய்ததா? இல்லை மாட்டினை காத்து செய்ததா?

அல்ல, இந்துக்களுக்கு தாங்கள் என்ன செய்யவேண்டும் என தெரிந்திருந்தது, செய்தார்கள். வழிவழியாக செய்தார்கள் இந்நாடு இன்றும் 80% இந்துமக்களோடு நிற்கின்றது

காலம் காலமாக இப்படி கட்டுபாடுகளை விதித்தா அம்மதம் வளர்ந்தது? ஒரு காலமும் இல்லை

உலக மதங்களில் வித்தியாசமானது இந்து மதம், அதற்கு தலமையோ, கட்டுபாடோ, இறுக்கமோ இல்லை, மிக சுதந்திரமான மதம் அது

பொதுவாக இறுக்கம் இல்லா மதம் அழியும், இஸ்லாமும், கிறிஸ்தவமும், யூதமும் மிக இறுக்கமான மதங்கள் அவை அப்படித்தான் வாழ்கின்றன‌

ஆனால் ஒரு கட்டுபாடும் இல்லா இந்துமதம் இதுகாலமும் வளர்ந்து ஆலமரமாக நிற்பது ஆச்சரியமே, அதனை இந்த பரிவாரங்களும், பாஜகவும் செய்யவில்லை

பாஜகவோ, அதன் பரிவாரங்களோ ஒரு நாளும் இந்துமதத்தை காத்துவிட முடியாது, அப்படி சொன்னால் அது அப்பட்டமான அரசியல். அவர்களுக்கு முன்னும் அம்மதம் வலுவாக இருந்தது , அவர்கள் காலத்திற்கு பின்னும் அது வலுவாக இருக்கும்

அப்படிபட்ட தேசத்தில் இப்படியான இம்சைகள் எதற்காக? இப்படி செய்யாவிட்டால் இந்துமதம் அழியுமா? அது நாட்டில் இல்லாமல் போய்விடுமா?

பன்றியினை சாப்பிட்டாலும் கொழுப்பு ஏறாமல் பார்த்துகொள் என அன்னைபோல பாசமாக சொல்வதுதான் இந்துமதம், அதன் தன்மை அப்படி

மாவீரன் சிவாஜி கூட அவுரங்கசீப்பை எதிர்த்தானே அன்றி இஸ்லாமை அல்ல,

இத்தேசம் என்றுமே இந்து தேசம், அசோகர், முகலாயர், வெள்ளையர் என யார் ஆண்டபோதும் இது இந்து தேசமே, சந்தேகமே இல்லை

அதற்காக இப்படி மாட்டுகறி தடை செய்துதான் இந்துத்வாவினை காக்கும் அவசியமுமில்லை

இப்படி அழிச்சாட்டியம் செய்யாமல், கைலாச மலையினை சீனாவிடமிருந்து வாங்கி இந்துக்களுக்கு கொடுக்கும் காரியத்தை செய்யலாம், இந்நாட்டின் எல்லா இந்துக்களும் வணங்குவார்கள்

விசா இம்சை என சீனா செய்யும் தொந்தரவு மிக அதிகம், அதனை குறைக்கலாம்

பாழ்பட்டு கிடக்க்கும் இந்து ஆலயங்களை சீரமைக்கலாம், தொலைந்துவிட்ட பல பாரமப்ரியங்களை மீட்கலாம்

இந்துக்கள் உண்ணாத உணவினை யாருமே இத்தேசத்தில் உண்ண கூடாது என்பது ஏற்புடையது அல்ல, இது வெற்று அரசியல்

இது இந்திய சகோதரத்துவத்தை சீரழிக்குமே அன்றி, ஒரு நாளும் ஒற்றுமை வளர்க்காது

தவிர்க்கமுடியாத எண்ணெய் வளமுள்ள சிறிய
நாடுகளுக்கு தீவிர மதவாதம் இருக்கலாம், ஆனால் எண்ணெய் தவிர அங்கு என்ன உள்ளது? ஒன்றுமே இல்லை என்பதும் இன்னொரு விஷயம்

இந்தியா போன்ற பெரிய வளரும் நாட்டில், ஆயிரம் தேவைகள் உள்ள மிகபெரிய நாட்டில் மதவாதம் என்பது ஒருகாலமும் சரிவராது, அது பெரும் பின்னடைவையே கொடுக்கும்..

இப்படியான கட்டுபாடுகள் மூலம்தான் இந்துமதத்தின் பெருமையினை காப்போம் என்றால் அது சூரியனை பார்த்து இதோ வெளிச்சம் என தீபந்தம் காட்டும் விஷயம், கடலுக்கு உப்பு அள்ளி போடுவது போல மூடச்செயல்..

மணமிக்க மலரில் செயற்கை வாசனை அடிப்பது போன்ற அறிவற்ற செயல், இந்த பூ இந்த வாசனை திரவியம் பட்டுத்தான் மணக்கின்றது, நான் திரவியம் தெளிக்காவிட்டால் மணக்காது என்பது போன்றது

காற்றுக்கு நாங்கள் காவல் என்பது போலவும், நட்சத்திர கூட்டத்திற்கு நாங்கள் ஒளிகொடுக்கின்றோம் என்பது போல பேசிகொண்டிருக்கின்றார்கள்

அறம் அறிந்த, தர்மம் அறிந்த, மனித தன்மையறிந்த, நெறியுள்ள இந்துக்களே இதனை விரும்பமாட்டார்கள், வாழ்வின் எல்லா இன்பத்தையும் அனுமதிக்கும் மதம் அது,

மாட்டுகறி என்றால் கூட அது தடுப்பதில்லை என்பதுதான் யதார்த்தம்

இந்த அரசியலால் தேசத்தின் அமைதி குலைந்து, வெளிநாடுகளில் இந்த அரசு இஸ்லாமிய விரோத அரசு எனும் பெயர் வருமே அன்றி, இந்து மக்களுக்கோ இந்த தேசத்திற்கோ ஒரு நன்மையும் விளையபோவதில்லை

 
 

பிரியங்கா மோடி ஜெர்மனியில் சந்திப்பு

Image may contain: 2 peopleஇந்த பிரியங்கா சோப்ரா எனும் நடிகையினை பிரதமரால் இந்தியாவில் சந்திக்கவே முடியாதா?ஜெர்மனி சென்றுதான் அவரை சந்திக்க வேண்டுமா?

அம்மணிக்கு தாதா சாகிப் பால்கே விருது வேறு கொடுக்க போகின்றார்களாம்

அப்படி என்ன இந்த அம்மணி கலைதுறைக்கு செய்துவிட்டார்? என நாம் கேட்க கூடாது

பெரியார் படத்தில் மணியம்மையாக குஷ்பூ நடிக்காததையா பிரியங்கா நடித்துவிட்டார்?

குஷ்பூ பெறாத எந்த விருதும் கலைவிருதுகளே அல்ல என்பதால் இதனை நமது மன்றம் புறக்கணிக்கின்றது

Image may contain: 1 person, close-upவருங்காலத்தில் என்றாவது பிரியங்கா நடித்தார் என்றால் பின்னாளில் அவருக்கு “குஷ்பூ விருது” வழங்க வாய்ப்பு வரலாம், இப்போதைக்கு எல்லாம் இல்லை

பால்கே விருது பெற்றவர்க்கு எல்லாம் குஷ்பூ விருதுகொடுத்து அதன் பெருமையினை குறைக்க முடியாது

இப்போதைக்கு மிக சிறந்த நடிப்பினை வழங்கிகொண்டிருப்பது பிரதமர் மோடி, இன்னும் இரு வருடத்தில் அவரின் நடிப்பில் மெருகு இன்னும் ஏறலாம்

அதன் பின் அவருக்கு குஷ்பூ விருது நிச்சயம் வழங்கபடும் வாய்ப்பு இருக்கின்றது, இப்போதைக்கு மோடியின் அபார நடிப்பிற்காக அவர் பெயர் “”குஷ்பூ விருது” பரிசீலனையில் மட்டும் இருக்கின்றது.

 
 

இவர்களின் வீர, மான, இனவுணர்வு ….

இலங்கையில் பெரும் வெள்ளம், தென்னிலங்கையில் வெள்ள அழிவு என்றால், இங்கும் சிலர் கூச்சலிடுகின்றனர்

2009ல் என் இனம் அழியும் பொழுது சிங்களன் அமைதி காத்தான், 2017ல் இறைவனின் தண்டனையில் சிங்களம் அழியும் பொழுது நாங்கள் அமைதி காப்போம்” என வீரமுழக்கம் இடுகின்றனர்

இங்கு குடிக்க நீர் இல்லை என்றாலும் வீரமுழக்கம் எப்படி பார்த்தீர்களா?

தென்னிலங்கையில் தமிழர்கள் இல்லை என சொன்னது யார்? அங்கும் தமிழர்கள் உண்டு, இந்த வெள்ளத்தில் தமிழர்களும் பாதிக்கபட்டிருக்கின்றார்கள்

அவர்களை சாவுங்கள் என விட்டுவிடலாமா?

ஒரு மண்ணும் தெரியாது, இலங்கை அமைப்பும், மக்களின் வாழ்வும் புரியாது, சும்மா சீமான் சொன்னவுடன் கத்திவிட வேண்டும் என்பது இவர்களின் வீர, மான, இனவுணர்வு

இந்திய மாட்டுகறி விவகாரம் உலக விவாதமாயிற்று

இந்திய மாட்டுகறி விவகாரம் உலக விவாதமாயிற்று, அதுவும் மதுரை நீதிமன்ற அறிவிப்பு ஒருவித பரபரப்பினை ஏற்படுத்துகின்றது

ஒரு நீதிமன்றம் சில காரியங்களை சொல்லுமாயின் அதில் ஓரளவேனும் நியாயம் இருக்கலாம் என்பது தியரி, அப்படி மதுரை தீர்ப்பு உலகில் விவாதிக்கபடுகின்றது

கண்ணகியும், நக்கீரனும் உலவிய மண் அல்லவா? நியாயத்தினை சொல்கின்றது

அது இருக்கட்டும்

நேற்று கடும் காமெடி செய்தவர் இருவர், ஒருவர் நாஞ்சில் சம்பத் வழக்கமான காமெடி, கூடவே ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்திற்கு பேராபத்து என கொளுத்திபோட்டிருக்கின்றார்

ரஜினி வந்தால் யாருக்கு ஆபத்து? சாட்சாத் அதிமுகவிற்கு, அதனை தமிழக ஆபத்து என ஒப்பாரி வைக்கின்றார் அன்னார், கூடவே தன் சொந்த கட்சி முதல்வரையும் திட்டியிருக்கின்றார்

ஆக அன்னார் நிதானத்தில் இல்லை என்பது புரிகின்றது, இவரை பற்றி சொல்ல ஒன்றுமில்லை, நாளை ரஜினி கட்சி ஆரம்பித்தால் நான் கோபாசே என கூசாமல் சென்றுவிடும் ரகம்

இன்னொருவர் பாரதிராஜா, திருமுருகனை வெளியே விடு என கத்துகின்றார், எடப்பாடி மானமில்லா தமிழனாம் , இதனை கண்டுபிடிக்க இவருக்கு இத்தனை காலம் ஆகியிருக்கின்றது என்பதுதான் சோகம்

திருமுருகனை ஆதரித்து கூட்டம் போட்ட அந்த மொத்த இயக்குநர் கும்பலையும் உள்ளே தள்ளலாம், அவர்கள் என்ன தேசம் காக்கும் தளபதிகளா? இல்லை அணுவுலை விஞ்ஞானிகளா? ஒன்றுமே இல்லை, நாட்டிற்கு ஒரு பாதிப்பும் வராது

இந்த திருமுருகன் காந்தி விவகாரத்தில் குரல் கொடுத்து மாட்டியிருப்பவர் யாரென்றால் மு.க ஸ்டாலின்

அதாவது லாட்டரி புகழ் மார்ட்டின் என்றொருவர் உண்டு, மோசடி பேர்வழி, இவர் எடுத்தபடத்தில் முன்பு கலைஞர் கதை வசனம் எழுதினார், அப்பொழுதே சர்ச்சை வெடித்தது

அந்த மார்ட்டினின் மகன் தமிழர் விடியல் என்றொரு கட்சி நடத்தினார், திருமுருகனோடு அவரும் கைதானர், அவரை விடுவிக்க சொல்லிதான் ஸ்டாலின் குரல் கொடுத்தார் என சில பார்வைகள் திரும்புகின்றன‌

ஆக சூனியத்தை தேடி சென்று நடு சக்கரத்தில் அமர்ந்திருக்கின்றார் ஸ்டாலின், இதனை சொன்னால் அவரின் தந்திரம் உனக்கு புரியாது என்பார்கள்

இப்பொழுது மானம் ரோசம் உள்ள தமிழனை பாரதிராஜா தேடுகின்றார், எம்ஜிஆர் ஜெயா இல்லாத காலத்தில் பாரதிராஜாவிற்கு ரோசம் பொத்துவிட்டது

சிலரை சேர்த்துகொள்கின்றார், ஒரே சத்தம்

ஆக தமிழகத்தில் சினிமா இயக்குனர்களுக்கு தவிர யாருக்கும் வெட்கமில்லை என்பது அவரின் கொள்கை

திருடர்களுக்கும், தேசவிரோதிகளுக்கும், அரை பைத்தியங்களுக்கும், சுயநல வாதிகளுக்கும் ஆதரவாக குரல் கொடுப்பது மானம், ரோசம் என்றால் அந்த ரோசம் பாரதிராஜா கும்பலிடம் மட்டும் இருந்துவிட்டு போகட்டும்