எப்படி இருக்கின்றது இந்த காமெடி?

கடமை, கண்ணியம், கட்டுபாட்டினை கடைபிடிக்க கலைஞருக்கு சொன்னவர் எம்ஜிஆர் : எடப்பாடி பழனிச்சாமி

எப்படி இருக்கின்றது இந்த காமெடி?

உங்கள் வசனத்தில் நான் நடிக்காமல் எனக்கு எதிர்காலமில்லை, எனக்கு ஒரு வாய்ப்புகொடுங்கள் என கலைஞர் முன்பு நின்றவர் அந்த ராமசந்திரன்

இயக்கத்தில் சேருகிறேன் என ராமசந்திரன் வந்தபொழுது, “இந்த நெற்றிபட்டை மற்றும் ருத்திராட்சத்தோடா” என கலைஞர் கேட்டவுடன் , அவ்வளவுதான் விஷயமா? என சொல்லி நெற்றியினை துடைத்துவிட்டு கழகத்தில் சேர்ந்தவர் ராமசந்திரன்

1960களில் தமிழகம் இந்தி எதிர்ப்புக்கு எதிராக பற்றி எரிய, எங்கோ கோவாவில் ஆயிரத்தில் ஒருவன் படபிடிப்பில் இருந்தவர் அந்த ராமசந்திரன், அவரின் “கடமை” அங்குதான் இருந்தது

வெண்ணிற ஆடை நிர்மலாவிற்காக மேல்சபையினை கலைத்தபொழுது அவரின் “கடமை” உணர்ச்சி அப்பட்டமாக உலகிற்கே தெரிந்தது

ராமசந்திரன் காட்டிய “கண்ணியம்” என்ன என்பது அந்த கணபதி என்பவரை கேட்டால் தெரியும், கணபதிக்கும் விஎன் ஜாணகிக்கும் என்ன உறவு என்பது உலகம் அறியாததல்ல‌

அவர் காட்டிய கட்டுப்பாடு என்பது , என் அபிமான நடிகையினை இன்னொருவன் தொடகூடாது என்பதில் இருந்தது, அதுதான் அவருக்கு தெரிந்த “கட்டுப்பாடு”

அந்த ராமசந்திரனுக்கு தெரிந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அதுதான்

கலைஞருக்கு தெரிந்த கடமை, கண்ணிய, கட்டுப்பாடு என்பது வேறானது, அது அண்ணா கொடுத்தது

இப்படி யாரின் கொள்கை எது என தெரியாமலே அன்னார் சொல்லியிருக்கின்றார், பரிதாபம்

தன் கட்சிக்காரருக்கே அடி, உதை, பிடுங்கு என சொல்லிகொடுத்தவ‌ர் எம்ஜிஆர்

இன்னும் அக்கட்சி அடி, உதை, பிடுங்கு என்ற தத்துவத்தில்தான் இயங்குகின்றது என்பது யாருக்கு தெரியாது…

கலைஞருக்கு ராமசந்திரன் கற்றுகொடுத்தது எல்லாம், “செய்நன்றி கொல்வது” என்றால் என்ன? வளர்த்தவனுக்கு துரோகம் செய்வது என்றால் என்ன என்பதுதான், அது மட்டும்தான்


லகின் மிக பெரிய, அதி நவீனமான ஏவுகனையினை சோதித்தது ரஷ்யா, அந்த ஒரே ஒரு ஏவுகனையால் பிரான்ஸில் பாதியினையும், ஸ்பெயினின் முக்கால்வாசியினையும் அழிக்க முடியும், அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள் : செய்தி

அய்யய்யோ ஸ்பெயினா? வேண்டாம் வேண்டாம். குஷ்பூ இப்பொழுது ஸ்பெயினில் இருக்கின்றார், அவர் திரும்பி வந்தபின் இம்மாதிரி செய்திகள் வரட்டும்

அவர் வந்தபின் அந்த ஐரோப்பா இருந்தால் என்ன? போனால் என்ன?


இங்கும் அங்கும் …..

தமிழிசைக்கு எதிராக தமிழக பாஜகவில் போர்கொடி, விரைவில் தலமை மாறலாம், பொன்னார் கோஷ்டி கடும் முயற்சி : செய்தி

தமிழக காங்கிரஸ் எவ்வழியோ, தமிழக பிஜேபியும் அவ்வழி, இது தமிழக தேசிய கட்சிகளின் சாபம் போலிருக்கின்றது, இங்கும் கோஷ்டி சண்டை வந்தாயிற்று

ஆளே இல்லாத கடையில் டீ ஆற்ற ஏன் இவ்வளவு போட்டி? அங்கு தமிழிசை இருந்தால் என்ன, பொன்னார் இருந்தால் என்ன?

ஏன் மோடியே தமிழக பாஜக தலைவராக அமர்ந்தால் கூட‌ இங்கு கட்சி வளர்ந்துவிட வாய்ப்பா உள்ளது? மோடி என்ன ராமர் வந்தாலும் வாய்ப்பே இல்லை…

ஒரு எண்டர்டெயின்ட்மெண்ட் கட்சி தலமைக்கு இவ்வளவு போட்டியா?


பாகுபலி ஹீரோ பிரபாசை மணக்க 6,000 பெண்கள் விருப்பம் , சமீபத்தில் விஜய்டிவியில் வந்த “அந்த” தேவசேனைகளும் இந்த பட்டியலில் இருக்கலாம்

ஆனால் வில்லன் ராணாவினை மணக்க நிச்சயம் இத்தனை பெண்கள் தகவல் அனுப்பியதாக தெரியவில்லை

ஆக பிரபாசுக்கும் ராணாவற்கும் இடையே பாகுபலி படத்தை தாண்டியும் எங்கு போட்டி வந்து நிற்கின்றது பார்த்தீர்களா?

இதுதான் ரசிக்க வேண்டிய விஷயம் 🙂


மெக்டொனால்டு, கே.எஃப்.சி, சப்வே போன்ற துரித உணவு நிலையங்களுக்கும் போட்டியாகக் களமிறங்க பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவணம் முடிவு

இனி ஐரோப்பிய நிறுவணங்களை இந்தியாவிருந்தே விரட்டபோகின்றாராம், இது உணவு கடைகளோடு நிற்குமா இல்லை உள்ளாடை தயாரிப்பு, சன்னிலியோன் விளம்பர பொருள் சமாச்சாரம் வரை செல்லுமா? என்பது தெரியவில்லை

ராணுவ விமான தயாரிப்பு, கப்பல் கட்டும் தயாரிப்பு, செயற்கை கோள் ராக்கெட் தயாரிப்பு , பெரும் எந்திரங்கள் செய்தல், போன்ற வெளிநாட்டு நிறுவண பணிகளில் பதஞ்சலி எப்பொழுது இறங்கும் மிஸ்டர் ராம்தேவ்?

குறைந்த பட்சம் “பென்ஸ்” சந்தையினையாவது “பதஞ்சலி கார்ஸ்” என தயாரித்து பிடிக்க கூடாதா?


மகாத்மா காந்தி படித்த 164 ஆண்டுகள் பழமையான ஆரம்ப பள்ளி இழுத்து மூடப்பட்டது

காந்தியின் கொள்கைகளையே மூட்டைகட்டி எங்கோ வீசியாயிற்று இதில் அவர் படித்த பள்ளி மூடபட்டதா பெரும் விஷயம்?

கரன்சியில் மட்டும் காந்திபடம் இல்லையென்றால் அவரை யாருக்கு இப்பொழுது தெரியும்?


 

வடகொரியா செய்யுமா என்றால் சிரமம்

அதிமுகவினை அடக்க வேண்டுமென்றால் இரட்டை இலையினை முடக்கவேண்டும், பாஜகவினை முடக்க வேண்டுமென்றால் பாபர் மசூதி கட்டவேண்டும், வன்னியரை பிரித்துவிட்டால் ராமதாஸ் மட்டை , பிரபாகரனின் நெருங்கிய புலி கிடைத்துவிட்டால் சீமானை ஓட அடிக்கலாம் இப்படி பல தந்திரங்கள் உலகில் உண்டு

அப்படி அமெரிக்காவினை யுத்தத்தில் வெல்ல ஒரு எளிய வழி அவர்களின் செயற்கை கோள்களை அழிப்பது

அமெரிக்க எல்லா ஆயுதங்களும் பெரும்பாலும் செயற்கை கோள்களை நம்பியே இருப்பவை, அவைகளை அடித்துவிட்டால் அமெரிக்கா ஜெயா இல்லா அதிமுக‌

இதனை முதலில் சொன்னது ரஷ்யா, இன்று வரை அமெரிக்க செயற்கை கோள்களை அழிக்கும் வல்லமை அவர்களுக்கு உண்டு, கொஞ்ச வருடத்திற்கு முன்பு சீனா தன் ஏவுகனையால் அமெரிக்க செயற்கை கோளை தகர்த்து எச்சரித்த சம்பவமும் உண்டு

இப்பொழுது வடகொரிய அதிபருக்கு அமெரிக்க செயற்கை கோள்களை அடக்க ஆசை, விண்வெளியில் அணுகுண்டை வெடிக்க வைத்தால் என்ன? என யோசிக்கின்றார் என பரபரப்பு செய்தி வருகின்றது

அப்படி நடந்தால் அது எல்லா நாட்டு செயற்கைகோள்களையும் பாதிக்கும், அப்படி நடந்துவிட்டால் உலகம் கொஞசநாளைக்கு இயங்காது, எல்லோரும் வீட்டில் சிறைவாசம் இருக்கலாம், போன் கூட வேலை செய்யாது

அந்த அளவிற்கு வடகொரியா செய்யுமா என்றால் சிரமம், ராக்கெட்  அவர்களிடம் இல்லை, ஆனால் அமெரிக்க செயற்கை கோளை தகர்க்க கடும் வெறியில் அலைகின்றது

வடகொரிய அதிபர் தமிழ்படங்களை பார்க்காதது நல்லது, பார்த்துவிட்டால் அமெரிக்க செயற்கை கோளை உடைக்க நமது சினிமா ஹீரோக்களை அழைத்தாலும் அழைப்பார்..

 
 
 

அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ்

Image may contain: 2 people, beard

உலகத்தை புரட்டி போட்டவர்களில் அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ், உலகம் கண்ட வரலாற்று மனிதர்களில் அவருக்கான இடம் எக்காலமும் அழியாதது

அவர் ஒரு யூதர், இயேசு நாதரின் உறவு வம்சமோ என்னமோ, தன்னலம் மறந்து மற்றவர்களுக்காக கவலைபட்ட யூதர், யூதருக்கே உரிய அறிவு அவரிடமும் இருந்தது, மிக சிறந்த அறிவாளி அதனை விட முக்கியம் அவரின் எழுத்துக்கள்

அவரின் பட்டமும், பதவியும், அறிவும், வாதமும் அவருக்கு பெரும் புகழை கொடுத்தன, வாதத்தில் அன்று அவரை வெல்வார் யாருமில்லை

பெரும் அறிவாளிகள் உலகினை ஒட்டிவாழமுடியாது, பெருந்த்த அறிவு ஒரு வகை பிணி, ஒரு சாபம். அது அந்த மனிதனை அவன் வாழும் சமூகத்தால் பரிகசிக்க வைக்கும், ஒதுக்கி வைக்கும், அவனை பைத்தியக்கார வகையில் சேர்க்கும், அவன் வாழ்வு மிக அலங்கோலமாய் அமையும்

ஆனால் பின்னால் வரும் தலைமுறை அவனை கொண்டாடும், அவனுக்காய் அழும், உலக வினோதம் இது, மிக சிறந்த உதாரணம் தமிழகத்து பாரதி

பாரதிக்கு முன்னோடி மார்க்ஸ், அவன் அறிவும் எழுத்தும் அவனை வினோதமாக பார்த்தன, நிச்சயம் ஏதோ சொல்கின்றான், ஆனால் சமூகத்திற்கோ குடும்ப வாழ்க்கைக்கோ ஒத்து வராதவன் என உலகம் அவனை ஒதுக்கியது, அந்த பெண்ணும் அவள் காதலும் இல்லை என்றால் மார்க்ஸ் இல்லை, கம்யூனிசம் இல்லை, லெனின் இல்லை, சோவியத் ரஷ்யா இல்லை, தமிழகத்தில் திராவிட குரலும் இல்லை

அவள் ஜென்னி, மிகுந்த பணக்கார வாரிசு, அழகியும் கூட. யூதனாயிலும் பார்க்க சகிக்காத அழகு மார்க்ஸ், கிட்டதட்ட நம் போல அழகற்ற முகம், மிக மெலிந்த தேகம், மொத்தத்தில் பெண் விரும்பாத ஆண் அவர்

ஆனால் ஜென்னி அவன் அறிவிற்காக காதலித்தாள். அந்த ஒன்றிற்காக அவனை சுற்றி சுற்றி வந்தாள். அவளின் அணைப்பு ஒன்றிலே தன் அவமானத்தை எல்லாம் துடைத்துவிட்டு எழுதினார் மார்க்ஸ்

அது தொழில் புரட்சி காலம், ஆனால் தொழிலாளர்கள் உரிமை இல்லா காலம். மார்க்க்ஸ் அழுதது அவர்களுக்காக, சிந்தித்தது அவர்களுக்காக ஏதும் செய்யமுடியுமா? என முழுநேரமும் வாழ்ந்தது அவர்களுக்காக‌

வீட்டிலோ வறுமை, முதலாளிகளை பகைத்ததில் சுத்தமான வறுமை. ஆனாலும் ஜென்னி அவனை விட்டு செல்லவில்லை. அவள் காதல் அறிவிற்காக வந்ததல்லவா? அது மார்க்ஸிடம் நிரம்ப இருந்ததால் அவள் காதல் குறையவில்லை, இவன் 4 காசு சம்பாதிக்க மாட்டான், இவனுக்கு உன்னை திருமணம் செய்துகொடுக்கமாட்டோம் என சொன்ன பெற்றோர்களை தூக்கி எறிந்தாள் ஜெனி

மார்க்ஸின் எழுத்துக்கள் அடிமையான தொழிலாளர்களுக்கு கடவுளின் வார்த்தையாய் ஓளிவீசின, அவர் கொண்டாடபட்டார், விளைவு ஐரோப்பா எங்கும் விரட்டபட்டார். நீ எழுதகூடாது என சொல்லியே நாடுகள் அவரை அனுமதித்தன‌

எந்த ஒரு புரட்சியாளனும் தன்னைபோல ஒருவன் கிடைத்துவிட்டால் பற்றி எரிவான், ஏங்கல்ஸை சந்தித்தபின் அப்படி எரிய தொடங்கினார் மார்க்ஸ், “உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்” என அவன் நாடு, மொழி,இனம்,மதம் கடந்து அழைத்தபொழுது ஐரோப்பா திடுக்கிட்டது

ஏங்கல்சும் மார்க்சும் இணைந்தபின் ஐரோப்பா எங்கும் தொழிலாளர் குரல் ஓங்கியது, அது பிரான்சில் தெரிந்தது, பெல்ஜியத்தில் தெரிந்தது, ரஷ்யாவில் எதிரொலித்தது, அரசுகள் திகைத்தன‌

மறுபடியும் ஓட விரட்டபட்டார் மார்க்ஸ், ஜென்னியினை விபசார பொய்வழக்கில் எல்லாம் சிக்க வைத்து மார்க்ஸை சித்திரவதை செய்தனர், அவள் அசரவுமில்லை, மார்க்ஸை அழவிடவும் இல்லை

வாழ்வெல்லாம் சோதனையினை மட்டும் கடந்தன அந்த காதல் ஜோடிகள், லண்டன் வாழ்வு அவர்கள் சோதனையின் உச்சமானது, ஆம் மூன்று குழந்தைகளும் வறுமையால் இறந்தன‌

மார்க்ஸ் அந்த பிஞ்சு குழந்தையின் சடலத்தை மார்போடு அணைத்து சொன்னார், “மகனே நீ பிறக்கும்பொழுது தொட்டில் வாங்க காசில்லை, நீ இறக்கும்பொழுது சவபெட்டி வாங்கமும் பணமில்லை” அப்படித்தான் இருந்தது வறுமை

எவ்வளவு பெரும் சோகம்? யார் தாங்குவார்?

ஆனால் ஜென்னி தாங்கினாள், உங்களுக்கு பிறகுதான் எனக்கு குழந்தைகள் வந்தார்கள், நீங்கள்தான் முக்கியம், உங்கள் அறிவுதான் முக்கியம் என கொஞ்சமும் அசராமல் சொன்னாள்

ஒரு பெரும் அசாத்தியமான பெண்ணான ஜெனி என்னை தாங்கி நின்றபொழுதுதான், நான் மகத்தான காரியத்தை படைக்க பிறந்தேன் எனும் நம்பிக்கை எனக்கு வந்தது என மார்க்ஸே சொன்னார்

உலக காதலர்களில் மிக உன்னத இடத்தில் வைக்கவேண்டியது மார்க்ஸ் ஜென்னி காதல். உலகத்தின் நம்பர் 1 காதல் இதுதான். ஆனால் உலகம் சொல்லாது, காரணம் இந்த காதலில் சுயநலமின்றி ஏழை தொழிலாளரின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அல்லவா இருந்தது

இந்த சோதனைக்கு பின்புதான் மார்க்ஸ் மூலதனம் எனும் புத்தகத்தை எழுதினார், மூன்று பாகமாக எழுதினார்

இயேசு கிறிஸ்து, டார்வின், ஐன்ஸ்டீன் வரிசையில் , உலத்தை அதிரவைத்த வரிசையில் மார்க்ஸ் வந்தது அந்த புத்தகம் மூலம்தான்

அது ஒன்றும் பெரும் விஞ்ஞானம் அல்ல, எளிய தத்துவம் அதாவது விவசாயி காய்கறியினை உற்பத்தி செய்கின்றான், நாம் கடையில் வாங்குகின்றோம். உண்மையில் நாம் நமது தேவைக்கு அவன் உழைப்பினை கோருகின்றோம், அவன் உழைத்து தருகின்றான். ஆனால் நாம் கொடுக்கும் பணம் அவனுக்கு முழுவதுமாக சேர்கின்றதா? இல்லை இடையில் இருக்கும் வியாபாரி கையில் சேர்கின்றதா?

இதனை தடுத்து உழைப்பவனுக்கு முழுபலனும் கிடைக்க என்ன வழி? என போதிகும் புத்தகம்தான் அந்த மூலதனம்

அதுவரை மத புத்தகங்களையும் இன்னபிற ஏமாற்றுகொள்கைகளையும் பார்த்துகொண்டிருந்த ஐரோபா அந்த புத்தகத்தால் அதிர்ந்தது, இது சாத்தியமா? உழைப்பவனுக்கு அவன் முழு உரிமையும், பொருளும் கிடைக்குமா?

நிச்சயம் கிடைக்கும் அதற்கான வழிமுறை இது என பல்லாண்டு கால ஆராய்சியில் அழகாக சொல்லியிருந்தார் மார்க்ஸ், அது ஒரு லாஜிக், சூத்திரம் போன்றது. இப்படி செய்தால் தொழிலாளர்களை வாழ வைக்கலாம் எனும் சித்தாந்தம் அது

முதன் முதலில் உலகில் தொழிலாளர் நலனுக்காக எழுதபட்ட புத்தகம் அதுதான், அது ஒன்றுதான்.

இந்த புத்தகம் தான் கம்யூனிஸ்டுகளின் பைபிள் ஆனது, உலகெல்லாம் எல்லா கம்யூனிஸ்டுகளுக்கும் வேதமானது. அதாவது அதுவரை தொழிலாளர்களை வாழவைக்க முதலாளிகளால் மட்டும் முடியும் என உலகம் நம்பிகொண்டிருந்தது. மார்க்ஸின் சிந்தனை அவற்றை தகர்தெறிந்து எப்படி தொழிலாள்ர்கள் நிர்வாகத்தையே நடத்தமுடியும் என சொல்லிகொடுத்தது

கிட்டதட்ட ஆதாமுக்கு கிடைத்த ஞானபழம் போல, தொழிலாளருக்கு மூலதனம் எனும் புத்தகம் கிடைத்தது, அது உலகை மாற்றிற்று

அதனை பின்பற்றி சோவியத் ரஷ்யா அமைந்தது, சீனா, கியூபா என எல்லா தேசங்க்ளும் அமைந்தன, கொரியாவும் ஒரு கம்யூனிச தேசமாக மலர்ந்திருக்கும், அமெரிக்கா கெடுத்தது அது இன்றுவரை தீரவில்லை

இன்று எல்லா நாடுகளிலும் உள்ள தொழிலாளர் நலனுக்கான சட்டங்களின் மூலம் இந்த கார்ல் மார்க்ஸின் கொள்கைகளே, அவரின் சிந்தனைதான் இன்று ஓரளவிற்காவது உலக தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தருகின்றது

இன்று காரல் மார்க்ஸுக்கு பிறந்தநாள்

மானிட நேயம் என்றால் என்ன? தொழிலாளர் நலன் என்றால் என்ன? என முதன் முதலில் சிந்தித்த அந்த கடவுளின் பிறந்தநாள். சாதிப்பது பெரிதல்ல , வறுமையிலும் சாதித்தான் அல்லவா? அதுதான் பெரிது

கம்யூனிச உலகிற்கு அவனும் அந்த ஜெனியும் மறக்க முடியாதவர்கள்

உலகெல்லாம் இன்று மார்க்ஸ் கொண்டாடபட்டாலும், பல நாடுகளின் தலைமகனாக அவன் வீற்றிருந்தாலும் அன்று வறுமை அவன் குடும்பத்தை கொன்றது, பின் அவனருமை ஜெனியினை கொன்றது

ஜெனி இறந்த கொஞ்சநாளில் மார்க்ஸும் இறந்தார், அந்த ஜெனியும் அவள் காதலும் இல்லையேல் மார்க்ஸ் இல்லை, இல்லவே இல்லை

மார்க்ஸின் அறிவு மீது அவளுக்கு அவ்வளவு நம்பிக்கையும், காதலும் இருந்திருக்கின்றது, அது பொய்க்கவில்லை மாறாக வரலாறு ஆயிற்று என்பதுதான் அவள் கண்ட ஒரே நிம்மதி

மார்க்ஸின் வாழ்விற்கும் பாரதி வாழ்விற்கும் நிறைய ஒற்றுமை காண முடியும், மார்க்ஸ் கவிஞன் கூட‌

பெருத்த அறிவு பெரும் நோவு என சொன்ன பழமொழி பொய்யல்ல, பெரும் அறிஞர்களின் வாழ்வு இப்படித்தான் இருந்திருக்கின்றது. அவர்களை புரிந்துகொள்ள 100 ஆண்டுகளுக்கு பின் கழிந்து முடிந்திருக்கின்றது

மார்க்ஸுக்கு ஜெனியும், ஏங்கல்சும் கிடைத்தார்கள் ஆயுளும் கிடைத்தது, ஆனால் நம் பாரதிக்கு இப்படி ஒன்று கூட வாய்க்கவில்லை.

வாய்த்திருந்தால் அவன் உலகில் பெரும் உயரத்தில் எங்கோ சென்றிருப்பான்

 

அன்றே சொன்னான் தலைவன் எம்.ஆர் ராதா

Image may contain: 1 person, smiling, sunglasses and close-up

நீதிபதிகளுக்கு இடையேயான சண்டை, சட்டையினை கிழித்துகொள்ளும் அளவிற்கு சென்றுகொண்டிருக்கின்றது, நான் பைத்தியம் இல்லை என இவரும், அதனை அறிக்கை படித்து நாங்கள் சொல்லவேண்டும் என அவர்களும் மல்லுகட்டி நிற்கின்றார்கள்

இப்படி பெரும் சர்ச்சையில் சிக்கி செய்திகள் வந்தபிறகு உலக நாடுகள் எல்லாம் கவனிக்கின்றன, இந்தியாவில் மனநோயாளிகள் எல்லாம் நீதிபதிகளா? அப்படியானால் தீர்ப்பின் நிலை எப்படி இருக்கும் என்ற ரீதியில் சிந்திக்கின்றன‌

அன்றே சொன்னான் தலைவன் எம்.ஆர் ராதா

“ஆமாடா..பொய்யா சொல்லிகொண்டிருக்கும் வக்கீல் ஒருநாள் ஜட்ஜ் ஆயிட்டாம்ணா அதுக்கப்புறம் உண்மைய மட்டும்தான் பேசுவாண்ணு எல்லோரும் நம்பணும் அப்படித்தானே.. நீ நம்புடா நான் நம்பமாட்டேன்

நாட்டுல பாதி நீதிபதி ஒரு மாதிரி ஆளாத்தாண்டா இருக்கிறானுக..”

#தலைவா யூ ஆர் கிரேட்

 
 
 

நீதிகேட்டு பன்னீர் தமிழமெங்கும் சுற்றுபயணம்

நீதிகேட்டு பன்னீர் தமிழமெங்கும் சுற்றுபயணம்

இந்தியாவிலே, இல்லை இல்லை இந்த உலகிலே இப்படி ஒரு காமெடியான காட்சியினை பார்க்கமுடியாது

ஜெயா மருத்துமனையில் இருந்தபொழுது இவர்தான் முதல்வர், இவருக்கு தெரியாமல் அங்கு ஒன்றும் நடந்திருக்கமுடியாது. அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்தார்

பின் முதல்வராக தொடரும்பொழுதும் சசிகலா போலவே அழுதுகொண்டார்

இன்று ஆட்சியில்லை என்றவுடன் நீதிகேட்டு நடக்கின்றாராம், எங்கே நடக்கின்றார்? தமிழக மக்களை நோக்கி நடக்கின்றார்

நிச்சயம் இது உட்கட்சி பிரச்சினை அல்லது உள்மர்மம். இது சசிகலாவிற்கும் அவருக்குமான பிரச்சினை

மர்மம் இருந்தால் இவர் முதல்வராக இருக்கும்பொழுது சொல்லியிருக்கலாம், அல்லது இவருக்கு தெரிந்த தகவலை சொல்லியிருக்கலாம், பொதுநல வழக்கு கொண்டுவந்திருக்கலாம்

ஆனால் அன்னார் ஒரு மண்ணாங்கட்டியும் செய்யவில்லை

ஆக இவர் நடக்கவேண்டியது மன்னார்குடி நோக்கியோ அல்லது பெங்களூர் சிறை நோக்கியோ அன்றி தமிழக மக்களிடம் அல்ல‌

புரூட்டஸ் சீசரின் கொலைக்கு நீதிகேட்டு நடந்தால் எப்படி ரோமாபுரி செருப்பால் அடித்திருக்குமோ, அப்படி ஒரு காட்சிக்கு தமிழகம் தயாராகின்றது

சிலம்பை திருடிய பொற்கொல்லன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டால் எப்படி இருக்கும்? அதுதான் இது.

இன்றிருக்கும் அரசியல்வாதிகளிலே மகா ஆபத்தானவர் பன்னீர் செல்வம்

மன்னார்குடி கும்பலாவது நாங்கள் திருந்தவில்லை, திருந்தவும் மாட்டோம் நாங்கள் இப்படித்தான் என சொல்லிகொண்டிருக்கின்றது

ஆனால் எல்லா அயோக்கியதனத்திலும் கூடவே இருந்துவிட்டு, இன்று உத்தமர் வேடமிடும் பன்னீர் மிக மிக ஆபத்தான அரசியல்வாதி

பார்சிலோனாவில் ஒரு “பார்பி டால்”….

ஐரோபாவின் மிக சிறந்த சிற்பங்களை தோற்கடித்து பின்னுக்கு தள்ளிவிட்டது இந்தியாவின் மிக அழகிய நடமாடும் சிற்பம்

 

Image may contain: 1 person, sunglasses and outdoor

பார்சிலோனாவில் ஒரு “பார்பி டால்”….

 Image may contain: 1 person, standing, mountain, sky, bridge and outdoor


 

உண்மையில் வடகொரியாவில் நடப்பது என்ன?

Image may contain: 1 person, standing and outdoor

பொதுவாக பத்திரிகைகளுக்கு சமூக பொறுப்பும் நாட்டுபற்றும் வேண்டும், தமிழக பத்திரிகைகளுக்கு சுத்தமாக இரண்டும் இல்லை, சரி உலக செய்திகளிலாவது உண்மை சொல்லலாம் அல்லவா? அதுவும் இல்லை

வடகொரிய அதிபரை பற்றி விமர்சனங்களை அள்ளிவிடுகின்றார்கள், அதுவும் பெரும் பொய்களை, உண்மை தன்மையினை வரலாற்றை மறைத்து அள்ளிவிடுகின்றார்கள்

அதில் ஆனந்த விகடனும் சிக்கியிருக்கின்றது, என்னமோ தெரியவில்லை பாரம்பரியமிக்க அந்த பத்திரிகை சில அனுபவமில்லா நிரூபர்களை எழுதசொல்லி அபத்தத்தில் சிக்குகின்றது

ஒரு மனிதனை அடிக்கும் முன்னால் அவனின் பிம்பத்தை அடித்து நொறுக்குவது அமெரிக்க ஸ்டைல், அப்படி இப்பொழுது வடகொரிய தலைவரின் இமேஜை கெடுக்கும் விதமாக , குடி ஆபாசம் நீலபடம் பார்ப்பவர், கொடூரர் என உலக மீடியா மூலம் கசிய விட்டிகொண்டிருக்கின்றார்கள், உலக மீடியா எல்லாம் அவர்கள் கட்டுபாடு, அதுதான் உண்மை

அதனை அப்படியே நம்பிகொண்டு ஆனந்தவிகடனில் எழுதபடும் கட்டுரைகள் சரியான அளவு அல்ல‌

உண்மையில் வடகொரியாவில் நடப்பது என்ன?

1950 முதலே அது அமெரிக்க கண்ணை உறுத்தும் நாடு, அப்போரில் அமெரிக்கா கடும் முயற்சி செய்தும் அதனால் முழுவெற்றி பெறமுடியவில்லை

அதன் பின்னும் சோவியத் யூனியன் இருந்த வரை வடகொரியாவினை அமெரிக்காவால் சீண்ட முடியவில்லை, சோவியத் சிதறவும் தன் கரங்களை வலுப்படுத்தியது

இன்றும் பிரம்மாண்ட அமெரிக்க ராணுவதளம் தென்கொரியாவில் உண்டு, ஜப்பானில் உண்டு, ஏன்? எதற்காக என்றால் அதுதான் அரசியல்

முன்னோட்டம் சொல்லவேண்டுமென்றால் முன்பு சவுதியில் அமெரிக்க படைகள் இல்லாமல் இருந்தன, கர்ணல் நாசர் காலத்தில் அமெரிக்க படைகள் அரேபியாவிலே இல்லை

பின் சதாமை காட்டி சவுதிக்கு வந்தன, பின்லேடன் வெளியேற சொன்னபொழுது அவசரமாக சதாமை கொன்றுவிட்டு பின்லேடன் அடுத்த எதிரி என்றனர்

இப்பொழுது பின்லேடனும் இல்லை, ஆனால் ஐஎஸ் என பயம்காட்டி அதே சவுதிக்குள் நீடிக்கின்றன, இப்பொழுது ஈரானை காட்டி பயமுறுத்துகின்றது,

ஆக சவுதிக்கு அமெரிக்கா ஜென்ம சனியாகிவிட்டது

இப்படித்தான் கொரிய மக்களும், ஜெர்மனி போல ஒரே கொரியாவாக இணைய நெருங்கினர், இருவருக்கும் உறவு பலபட்டது, விட்டிருந்தால் வாழ்ந்திருப்பார்கள்

ஆனால் உலகமகா வல்லரசான அமெரிக்கா விரும்புமா? அவர்களின் ராணுவ தளம் என்னாவது, அமெரிக்க ராணுவ தளத்தை தென்கொரியர்களும் விரும்பவில்லை, ஜப்பானியரும் விரும்பவில்லை, அடிக்கடி ஆர்பாட்டம் நடந்தது

உலகசந்தையில் தென்கொரிய நிறுவணங்களை அமெரிக்கா தூக்கிவிட்டாலும் உள்ளூர தென்கொரியர்கள் அமெரிக்க ராணுவ தளங்களை அப்புறபடுத்துவதில் ஆர்வமாயினர்

இனி போர் பதற்றம் ஒன்றுதான் வழி, அவர்களை பாதுகாக்க நாம் இருப்பதாக நம்பவைக்கவேண்டும் என இப்பொழுது வடகொரியாவினை அடிக்க கிளம்புகின்றார்கள்

உண்மையில் வடகொரியா 1990களிலே அணுகுண்டு செய்தாயிற்று, ஏவுகனையும் செய்தாயிற்று, அப்பொழுதெல்லாம் வராத ஆத்திரம் இப்பொழுது அமெரிக்காவிற்கு வருவதென்ன?

முன்பே அதாவது 1990லே முடிவெடுத்தார்கள் , அமெரிக்கா பாகுபலி ராணாவாக ஒற்றை அரசனாக முடிசூட்டும்பொழுதே தன் ஆளுமை ஏற்காத அரசுகள் யாரென குறிப்பெடுத்தார்கள்

ராஜிவ், சதாம் உசேன், லிபியா அதிபர் கடாபி, சிரியா அதிபர் அல்பசாத், வடகொரிய அதிபர் கிம்மின் தந்தை என வரிசையிட்டார்கள்

எல்லோரும் அனுப்பபட்டு வரிசையில் மிஞ்சி இருப்பது ஈரானும், வடகொரியாவும், சிரிய அதிபர் கழுத்துக்கு வந்த கத்தியினை புட்டீன் தடுத்துவிட்டார்

ஆக வடகொரியாவினை இப்பொழுது தீர்க்க கிளம்பிவிட்டார்கள், அது அமெரிக்க எதிரி நாடுகளுக்கு ஆயுதம் விற்பது ஒன்றும் ரகசியமல்ல‌

ஏன் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு விற்கவில்லையா? இறுதிபோரில் சிங்களனுக்கு கொடுக்கவில்லையா? முன்பு தாலிபான்களுக்கு கொடுக்கவில்லையா? ஏன் சதாமையும் பின்லேடனையும் வளர்த்ததே அவர்கள் அல்லவா?

உண்மையில் சீனா, ரஷ்யா எல்லை அருகில் அமெரிக்காவிற்கு பெரும் ராணுவதளம் நிலையாக வேண்டும், ஜப்பான் மீது அணுகுண்டு வீசிவிட்டு தலையிட்டு அமர்ந்தது, கொரியாவில் புகுந்தது எல்லாம் அப்படித்தான்

இனி நிரந்தரமாக அமர ஒரு வாய்ப்பு வேண்டும், இப்போதைய வாய்ப்பு வடகொரியா, நாளை வடகொரியா இல்லை என்றால் தைவானை தூண்டிவிடுவார்கள்

எப்படி அமெரிக்கர்கள் அரேபியாவில் புகுந்து ஆட்டம் போட்டு அமைதி குலைத்திருக்கின்றார்களோ, அப்படி கிழக்கே புகுந்து குட்டையினை குழப்பும் இடம்தான் வடகொரியா

அப்படி வடகொரிய அணுகுண்டு ஆபத்தானது என்றால், ஏன் பாகிஸ்தானிடம் இருப்பதை அனுமதிக்கவேண்டும்? வட கொரியாவிலாவது தீவிரவாதி கிடையாது, பாகிஸ்தானில் திரும்பிய இடமெல்லாம் தீவிரவாதிகள்

அவர்களை கையில் அண்குண்டு கிடைத்தால் என்னாகும்?

ஆக அடித்து நொறுக்கவேண்டிய நாடு பாகிஸ்தானா? வடகொரியவா? என்றால் நிச்சயம் பாகிஸ்தான். ஆனால் அடிப்பார்களா என்றால் இல்லை மாறாக இந்தியாவின் ராணுவ சமநிலைக்கு சற்றும் குறையாமல் பாகிஸ்தானை வைத்திருப்பார்கள், உதாரணம் எப் 17 எனும் நவீன விமானங்களை கொடுத்திருப்பது

இப்படி உண்மையினை எழுதி , உலக யதார்த்ங்களை சொல்லவேண்டிய விகடன் போன்றவைகள், இந்த நாட்டிற்கு எது தேவை என சொல்ல வேண்டிய பொறுப்பான விகடன் அதனை செய்யாமல் வடகொரிய அதிபர் நீலபடம் பார்த்தார் என எழுதுகின்றன‌

கென்னடியும், கிளிண்டனும் ஆடாத ஆட்டத்தையா வடகொரிய அதிபர் ஆடிவிட்டார், அவ்வளவு ஏன்? டிரம்பின் மூன்றாம் மனைவியின் முன்னாள் தொழிலே சந்தி சிரித்தது

உள்ளூர் அரசியலில்தான் உண்மையினை எழுதுவதில்லை, புலிகள் விவகாரத்திலும் உண்மை இல்லை, உச்சமாக வடகொரிய விவகாரத்திலும், அதுவும் பாகிஸ்தானை ஒருவிதமாக கையாண்டு இந்தியாவினை கெடுக்கும் அமெரிக்காவினை எழுத துணியாமல், எங்கோ இருக்கும் வடகொரியாவின் நியாயத்தை மறைந்த்து

அங்கு 1953ல் அமெரிக்கா நடத்திய இனபடுகொலைகளை மறைத்து, ஜப்பானுக்கு அடுத்து அங்கு அணுகுண்டு வீசுமளவு சென்ற அமெரிக்காவின் கொடூரத்தை மறைத்து எழுதுவது நல்லதல்ல‌

அந்த அணுகுண்டு மிரட்டலுக்குத்தான் இன்று வடகொரியா பதிலுக்கு வெடித்து சோதனை செய்கின்றது என்றுமா சொல்லமுடியாது?

இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பதற்றம் 60 ஆண்டுகால தொடர்ச்சி, மூன்று தலைமுறையாக வடகொரியா மல்லுகட்டும் காரியம், பாகுபலி போல நீண்ட கதை

அதனை ஏதோ இன்று அதிகாலை நடந்த சம்பவம் என்பது போல எழுதுவது ஏற்றுகொள்ள கூடியது அல்ல‌

விகடன் வர வர தன் அனுபவமற்ற , அதிகம் வாசிக்காத, நுனிபுல் மேயும் சில எழுத்தாளர்களால் தன் தரத்தினை இழந்து வருவது பெரும் வருத்தமளிக்கின்றது

 
 

மோடி , போயஸ் தோட்டம் , ரஜினி ….

மோடியை விட மன்மோகன் சிங் அதிக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார் : அமித்ஷா

10 வருடம் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், அதற்கு முன்பே பல நாடுகளின் பல்கலைகழகங்களுக்கு பேராசிரியராக சென்ற அந்த மன்மோகன்சிங்கின் மொத்த வெளிநாட்டு பயணமும், 2 வருட மோடி பயணமும் ஒரே தராசில் வருமா?

இப்படி ஒரு வாதத்தை வைக்க முடியுமா?

1966 முதல் வெளிநாட்டுக்கு பறக்க தொடங்கிய மன்மோகன் சிங், அதாவது கிட்டதட்ட 46 வருடம் மன்மோகன் சிங் செய்த வெளிநாட்டு பயணமும், விமான பைலட் போல மோடி இரு வருடத்தில் செய்த பயணமும் ஒன்றாகுமா?

அமித்ஷாவின் அறிவு இவ்வளவுதானா? ஏதோ காலகாற்றில் பாஜக வெற்றிமுகம் காட்டுவது நன்றாக தெரிகின்றது

தமிழிசைக்கும். எச்.ராஜாவுக்கும் தலைவர் என்றால் இப்படித்தான் அபத்தமாக‌ பேசவேண்டும் என்பது அக்கட்சியின் விதி போல..


போயஸ் கார்டனை கதிகலக்கும் ‘நள்ளிரவு அலறல்’! : கலக்கத்தில் மன்னார்குடி குடும்பம் : செய்தி

மின்வெட்டு, கடும் வெப்பம் , குடிக்க நீர் இல்லை என தமிழகம் ஒவ்வொரு நொடியும் கலங்கிகொண்டிருக்கின்றது, இரவு மின்வெட்டால் தூக்கமில்லாத ஏராளமான தமிழக குடும்பங்கள் உண்டு

இதில் போயஸ் கார்டனில் அலறலாம், மன்னார்குடி குடும்பம் தூங்கவில்லையாம், இந்த ஊடகங்களை எல்லாம் அந்த டிவி நடிகை வயிறு எரிந்து கண்ணீரோடு சாபமிடுவது போல சாபமிட தோன்றுகின்றது


ரஜினியும் ராஜமவுலியும் இணைந்து படம் எடுத்தால் அது அவதார் படத்தினை இரண்டாம் இடத்திற்கு தள்ளும் : மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்

இந்த மனுஷ்ய புத்திரன், அல்போன்ஸ் புத்திரன் எல்லாம் ஒரே வகை போலிருக்கின்றது, இனி புத்திரன் என்றபெயரினை யாருக்கும் வைக்க கூடாது போல, பெயர் ராசியே சரி இல்லை

மிஸ்டர் அ.புத்திரன் ரஜினி படம் இயக்கும் ஆசை இருந்தால் நேரடியாக அவரிடமே கேட்டுவிடலாம் , அதற்கு ஏன் இப்படி ஜால்ரா அடிக்க வேண்டும்?

ஹாலிவுட் ஆயிரம் பாகுபலிகளை காட்டிவிட்டது, நாம் இப்பொழுதுதான் பார்த்திருக்கின்றோம் அவ்வளவுதான், இதில் அவதார் படத்தினை பின்னுக்கு தள்ளிவிடும் என்பதெல்ல்லாம் ரொம்ப ஓவர்

என்னது? அவதார் படத்தினை ரஜினி படம் இரண்டாம் இடத்திற்கு தள்ளுமா? இன்று நம்பர் 1 ஆக இருக்கும் ராஜமவுலியினையே கடைசி இடத்திற்கு தள்ளும் வாய்ப்பும் பிரகாசமாக இருக்கின்றது


 

 

 
 

பெரும் சிக்கலை தமிழகம் சந்தித்து கொண்டிருக்கின்றது

ஒரு பெரும் சிக்கலை தமிழகம் சந்தித்துகொண்டிருக்கின்றது, இது மிக எளிதாக கடந்து போகும் விஷயம் அல்ல, ஏராளமான பாதிப்புகளை கொண்டுவரும் விஷயம்

6 ஆண்டு அதிமுக ஆட்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுகொண்டிருக்கின்றது, பொதுவாக கொஞ்சம் கொஞ்சமாக வேர்கள் பட்டு மரம் சரியும் பொழுதுதான் சத்தம் வரும், 6 ஆண்டுகள் தமிழக தொழில்துறை கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கி இப்பொழுது பெரும் ஓலமாக மாறுகின்றது

முன்பு ஹூண்டாய் மற்றும் போர்டு ஆலைகளின் விஸ்தரிப்பினை தடுத்து அவற்றை குஜராத்திற்கே விரட்டிவிட்டது தமிழக அரசு, காரணம் ஏன் என்று தெரியாது, ஆனால் மக்கள் நலம் என்பது மட்டும் இல்லை, அப்படி இருந்திருந்தால் இப்படி செய்திருக்கமாட்டார் ஜெயலலிதா

அவரின் சீடர்கள் இன்று கியா காரின் ஆலையினையும் விரட்டியிருக்கின்றார்கள்

இந்த மறை நீர் மண்ணாங்கட்டி நீர் எல்லாம் சும்மா, சென்னை வெள்ளத்தில் எத்தனை ஆயிரம் டிஎம்சி கடலுக்கு சென்றது, அதில் மறைநீர் பார்க்கமுடியுமா? அவை எல்லாம் சும்மா சொல்லும் கதைகள், மறைநீர் என கணக்கு பார்த்தால் அரிசி கூட உண்ணமுடியாது, ஏன் கம்பு சோறு, கேப்பை களிக்கும் கணக்கு பார்க்கவேண்டி வரும்

ஆக இப்படி பெரும் ஆலைகள் எல்லாம் அரசின் தொலைநோக்கு பார்வையின்றி விரட்டபடுகின்றன, தெரிந்த ஆலைகளே இப்படி என்றால் இன்னும் தெரியாத ஆலைகள் எவ்வளவோ?

குடிநீருக்கு தமிழகம் பெரும்பாடு பட்டுகொண்டிருக்கின்றது, விவசாயிகள் நிலை சொல்லவே வேண்டாம். மின்சார தடையும் வந்தாயிற்று, இந்த ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் என ஏதுமில்லை , உடன்குடிக்கு வந்த சீன நிறுவணம் கடல்வழியே நீந்தி தப்பிசென்றிருக்கலாம் எனும் அளவு அரசின் சர்ச்சைகள் இருந்திருக்கின்றன‌

இப்பொழுது மின்சார ஆலைகளுக்கு எல்லாம் சிக்கல், அடுத்த தலைமுறைக்கான உற்பத்தியினை செய்யவில்லை, பெருகி வரும் மக்களுக்கான மின்சாரதேவையினை பூர்த்தி செய்ய புது திட்டங்களை வகுக்கும் திட்டமில்லை

இருக்கும் நிலையங்களுக்கும் பணம் கொடுக்காத நிலை என்கின்றார்கள், அப்படியானால் அரசு பணங்கள் எல்லாம் எங்கு போயின?

கொஞ்ச நாளைக்கு முன்பு 2 லட்சம் கோடி தமிழகத்தில் அந்நிய முதலீடு குவிந்தது, என சொல்லி கரகாட்டம் ஆடியது இவர்கள் தான், ஆனால் உண்மையில் ஒரு மண்ணாங்கட்டியுமில்லை, எல்லாம் பொய்

தானாக வந்த கியாவினையும் இன்னும் சில கார் கம்பெனிகளையும் விரட்டியாயிற்று, இன்னும் தெரியாத கணக்கு ஏராளம் இருக்கலாம்,

ஏன் விரட்டுகின்றார்கள்? அதுதான் தமிழக அரசியல் கட்சி நிவாரண நிதி முதல் இப்போதைய டிரெண்டான கூவத்தூரில் தொடங்கிய எம்எல்ஏ பராமரிப்பு நிதி கலெக்சன் வரை ஏகபட்ட மர்மம் இருக்கலாம், வாய்ப்பு இருக்கின்றது

எல்லா கம்பெனியும் விரட்டுகின்றார்களே, இந்த பீர் கம்பெனிகள், சாராய ஆலைகளுக்கு ஏதும் மூடுவிழா இருக்குமா? என்றால் ஒருக்காலும் இல்லை

மொத்தத்தில் தமிழ்நாடு பெரும் ஆபத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது, ஏராளமான வேலை வாய்ப்புகள் அண்டை மாநிலங்களுக்கு விரட்டவே படுகின்றன.

இப்படி எல்லாம் தமிழகம் அழிந்துகொண்டிருக்கின்றது, 6 ஆண்டுகள் ஆட்சியின் உச்சகட்ட சீரழிவாக இப்போதைய நிலை தெரிகின்றது

இப்பொழுதும் சிலரிடம் கேளுங்கள், திமுக தமிழகத்தை கெடுத்துவிட்டது அழித்துவிட்டது என புலம்புவான், அவர்கள் அப்படித்தான்

மிக உறுதியாக சொல்லலாம் அதிமுக என்றுமே அப்படியான கட்சிதான், அவர்கள் ஆட்சியில் என்றுமே தொலைநோக்கான திட்டமோ, பெரும் பொருளாதார வாய்ப்புகளோ சுத்தமாக இருக்காது, இருக்கவே இருக்காது, சுத்தமான மேக் அப் ஆட்சி என்பது அதுதான், அவர்கள் கவனமெல்லாம் மேக் அப் மேல் மட்டுமே இருக்கும்.

எப்படியோ , இப்பொழுது ஏற்பட்டிருக்கும் சீரழிவுகள், ஆட்சி மாறினாலும் இன்னும் பல காலத்திற்கு தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை கொண்டுவரும் போல தெரிகின்றது

அரசுக்கு எந்த கவலையும் இல்லை, எந்த கம்பெனி எங்கு போனால் என்ன? எத்தனை ஆயிரம் வேலைவாய்ப்புகளை இழந்தால்தான் என்ன? அவர்களுக்கு என்ன கவலை? தமிழகத்தில் விவசாயிகள் சாகவே இல்லை என சிரிக்காமல் சொல்லும் அரசு இது

இவர்கள் கவலை எல்லாம் பன்னீர் என்ன செய்கின்றார், அடுத்து யாரை இழுக்கலாம், யாரை தடுக்கலாம்? சசிகலா தினகரனை சமாளிப்பது எப்படி?, 122 எம் எல் ஏக்களுக்கு இனி என கொடுத்து சமாளிக்கலாம், இரட்டை இலை எப்பொழுது வரும்? இப்படி ஏக கவலைகள்

இதில் தமிழகமே அழிந்தாலும் கவலைபட அவர்களுக்கு ஏது நேரம்??

இப்படி ஏக சிக்கல்கள 6 ஆண்டு அதிமுக ஆட்சி செய்துகொண்டிருக்கின்றது அது இன்னும் கூடுதல் சிக்கல்களை உருவாக்குமே ஒழிய ஒன்றையும் சாதிக்காது.

அந்த அரசு எப்படி இயங்குகின்றது என அவர்களுக்கே தெரியாது, பாதாளத்தில் விழும் பேருந்து போல அது சென்று கொண்டிருக்கின்றது, எதுவும் அவர்கள் கைகளில் இல்லை

இப்படி இக்கட்டான நிலையில், காரிருளில் தமிழகம் கிடக்க இந்த அரசு எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா கொண்டாடுகின்றதாம், எவ்வளவு ஒரு ஆத்திரம் ஏற்படுத்தும் விஷயம் இது?

இப்பொழுதும் தமிழகத்தை அழித்தது திமுக, கலைஞர் என எவனாவது சொல்லிகொண்டிருந்தால், அவனை வடகொரியாவிற்கு கடத்துவது நலம்..

இப்படி பெரும் ஆலைகள் மூட்டைகட்டும் பொழுதும் பிரதான எதிர்கட்சிகள் என்ன செய்கின்றன என கேட்டால், என் தளபதியின் ராஜ தந்திரம் உனக்கு புரியாது என பதில் வரும்

அந்த ராஜ தந்திரம் அவர்களுக்காவது புரிந்தால் சரி…