ஆந்திராவிற்கு ஆளில்லா கார் வரப்போகின்றது

கூகுளின் ஓட்டுநர் இல்லா காரினை ஆந்திராவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர சந்திரபாபு நாயுடு விருப்பம், அமெரிக்காவில் கூகுள் அதிகாரிகளை சந்தித்தபின் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆக ஆந்திராவிற்கு ஆளில்லா கார் வரப்போகின்றது

தமிழகத்திற்கு என்ன வரப்போகின்றது தெரியுமா? 46 வருடங்களுக்கு முன்பு இரு சனியன்கள் நடித்து தொலைத்த “மாட்டுக்கார வேலன்” படம் மறுபடியும் ரீலிஸ் ஆகின்றதாம்

எதற்கு என்றால் மத்திய அரசினை அனுசரித்து செல்லவேண்டும் என பழனிச்சாமியே கூட்டத்தில் அறிவித்ததாக சொல்லபட்டது, அனுசரித்து என்பதை விட மகிழ்வித்தால் என்ன என முடிவு செய்துவிட்டார்கள்

“நாங்கள் மாட்டுகறிக்கு எதிரானவர்கள், பசு மாட்டை வணங்குபவர்கள், எங்கள் எம்ஜிஆரே அப்படித்தான் படங்களில் நடித்தார், நாங்கள் கூட உங்கள் கொள்கை, அல்ல அல்ல எம்ஜிஆரின் கொள்கைதான் பாஜக கொள்கை…” என சொல்லிகொண்டு டெல்லியினை சமாதனபடுத்தலாம்

அதனால்தான் இப்பொழுது “மாட்டுக்கார வேலன்” வருகின்றது, இனி விநாய சதுர்த்தி வேளையில் எம்ஜிஆர் யானைகளோடு நடித்த‌ “நல்ல நேரம்” படம் வெளிவரும்

ஆந்திராவும் சினிமா மோகத்தில் வீழ்ந்த மாநிலம்தான், ஆனால் ஆட்சியினை பறித்த சந்திரபாபு நாயுடு, சின்னாத்தா சிவபார்வதியினை எழும்பவிடமால் அடித்து ஆந்திராவினை நிமிர்த்திகொண்டிருக்கின்றார்

தமிழகமோ ராமசந்திரன் போனால் ஜெயா, ஜெயாவும் போனால் சின்னாத்தா என நாசமாய் போயிவிட்டது, சந்திரபபாபு போல ஒருவர் வரவேண்டிய நேரத்தில் வராமல் தொலைந்துவிட்டார், நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்

இனி ஆந்திரவில் நவீன கூகுள் கார் ஓடும், நாம் ஹூண்டாய், கியா , பெர்டானா கார் கம்பெனிகளையும் தமிழகத்திலிருந்து விரட்டிவிட்டு “மாட்டுக்கார வேலன், மந்திரி குமாரி” என பார்த்து தொலைவோம்

அவர்களுக்கு சந்திரபாபு கிடைத்திருக்கின்றார், நமக்கு பன்னீரும் பழனிச்சாமியும்தான் கிடைத்திருக்கின்றார்கள், நம் தலையெழுத்து அப்படி

Image may contain: 1 person, standing and car

திரிகோணமலை துறைமுகத்தை யார் கையில் வைத்திருப்பது ?

அது கிட்டதட்ட 50 ஆண்டுகால பிரச்சினை , இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தை யார் கையில் வைத்திருப்பது எனும் பிரச்சினை

காரணம் அதன் தன்மை அப்படி, மிக சிறந்த இயற்கை துறைமுகம், அதில் மட்டும் ஒரு ராணுவ தளம் அமைந்துவிட்டால் கிழக்காசியா முழுக்க நின்று ஆடலாம், அப்படியான இடம் அது

இப்படியான இடத்திற்கு மசால் வடையினை தேடிவரும் எலிபோல அமெரிக்கா வராமல் இருக்குமா? அது காலூன்ற சுற்றி சுற்றி வந்தது. அது வந்தது சோவியத் முகாமிற்கு எரிச்சல் குறிப்பாக இந்தியாவிற்கு

ஆனால் இந்திய வம்சாவளியினரை திரும்ப ஏற்றுகொண்டது, கச்ச தீவினை கொடுத்தது, 1979ல் நடந்த உள்நாட்டு கிளர்ச்சியினை அடக்கியது என இந்தியாவும் இலங்கையுடன் நட்புறவில்தான் இருந்தது

ஆனால் ஜெயவர்த்தனே திரிகொணமலையினை சொப்பன சுந்தரியாக காட்டி உலகெல்லாம் வசூல் செய்துகொண்டிருந்தார், கூடவே அப்போது துளிரிவிட்டிருந்த தமிழ் போராளிகளை ஒடுக்க அமெரிக்கா இஸ்ரேல் உதவியினை அவர் நாடினார், அவருக்கு பாடம் கற்பிக்க களத்தில் இறங்கியது இந்தியா

அவர்கள் பார்வை அங்கிருந்த போராளிகளுக்கு பயிற்சி கொடுக்க தொடங்கினார், நிச்சயம் தனிநாடு அமைத்துகொடுக்கும் எண்ணம் இந்தியாவிடம் இல்லை, ஒரு காலமும் இல்லை

காரணம் வங்கதேசத்தை பிரித்துகொடுத்தாலும் அதனால் இன்றுவரை இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இல்லை, மேற்கு வங்க மக்கள் அது எங்கள் தொப்புக்ள்கொடி என கத்துவதில்லை, அந்த புள்ளியில் இந்தியா வங்கத்தி சாதிக்கமுடிந்தது

ஆனால் ஈழசிக்கல் அப்படி அல்ல, சும்மாவே திராவிட நாடு , தனி நாடு என குரல் கேட்ட இடம் தமிழகம், மாநில கட்சிகள் ஆளும் மாநிலம், வோட்டுக்காக எதனையும் சொல்லும் அரசியல்வாதிகள் நிறைந்த மாநிலம், ஈழம் உருவாக்குவது பிரச்சினை அல்ல‌

ஆனால் உருவாக்கிவிட்டால் தமிழகம் அமைதியாக இருக்கும் என்பது மட்டும் எதிர்பார்க்கவே முடியாது, அதனால் ஒரு கல்லில் பலமாங்காய் அடிக்க திட்டமிட்டது இந்தியா

அதாவது போராளிகளின் அடியில் இலங்கை அரசு இறங்கி வரவேண்டும், ஈழமக்களுக்கு சில உரிமைகள் கிடைத்ததாக இருக்கவேண்டும், இந்திய படை ஒன்று இலங்கையில் குறிப்பாக திரிகோணமலையினை ஒட்டி நிறுத்தபடவேண்டும்

இந்த நுட்பத்தில் இந்தியா வெற்றிபெறும் பொழுதுதான் இந்திரா படுகொலை நிகழ்ந்தது

அடுத்து வந்த ராஜிவ் அந்த திட்டத்தை அப்படியே செயல்படுத்தினார், ஈழமக்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த அரசு என அவர் பேசதொடங்கினார், இந்திய அமைதிபடை இந்திராவின் கனவுபடி அனுப்பபட்டது, ஆனால் திரிகோணமலை துறைமுகத்தை ஜெயவர்த்தனே அமெரிக்க திட்டபடி குழப்பினார்

அது ராணுவத்திற்கு இல்லை என்றார், இன்னும் பலவாறு குழப்பினார், இந்தியா மிரட்டி எண்ணெய் நிலைய டாங்கிகள் அமைப்போம் என சொல்லி தன் பிடியினை பெற்றது, இன்றும் திரிகோணமலையில் இந்திய கட்டுபாடு பகுதி உண்டு, இறுதி யுத்தத்தின்பொழுது இந்திய படைகள் அங்கும் சிறிய அளவில் இருந்தன‌

பின் அமைதிபடை இருக்க பிடிக்காமல் பிரேமதாசவும் புலிகளும் ஆடிய ஆட்டத்தில் எல்லாம் நாசமாகி, ராஜிவ் கொலைக்குபின் இந்திய ஈழபார்வை மாறினாலும், திரிகோணமலையினை இந்தியா விடுவதாக இல்லை

பின் மகிந்தா சீனாவுடன் நெருங்கிய காலத்தில் அந்த எண்ணெய் டாங்கிகளை சீனாவிற்கு கொடுக்க முயன்றதும், பின் அவர் அரசியலில் இன்றுவரை பல சிக்கல்களை சந்திப்பதுன் இன்னொரு செய்தி

இந்திரா, ராஜிவ் காலத்திற்கு பின் மன்மோகன் சிங் எதுவும் பேசாமலே இலங்கையினை கையாண்டார்

இப்பொழுது மோடி காலம், அந்த எண்ணெய் டாங்கிகளின் ஒப்பந்தம் புதுப்பிக்கபடும் நேரம், இன்னும் 5 நாட்களில் புத்தர் விழாவிற்காக செல்லும் மோடி அதில் கையெழுத்திட வேண்டும்

ஆனால் இலங்கை எதிர்கட்சிகளை யாரோ தூண்டிவிட ஆட்டம் சூடுபிடிக்கின்றது

இலங்கை விற்பனைக்கல்ல என அந்த கட்சிகள் கொடிபிடிக்கின்றன, அதிபர் பாலசேனா மன்றாடிகொண்டிருக்கின்றார்

முன்பு ஜெயவர்த்தனேவினை சமாளிக்க இந்தியாவிற்கு போராளிகள் வாய்ப்பாக இருந்தனர், இலங்கையில் ஒரு சமநிலை வேண்டுமென்றால் சிங்களை அரசினை எதிர்க்கும் ஒரு தரப்பு வேண்டும் என்பது அரசியல், இந்த தைரியத்தில்தான் புலிகள் ராஜிவ் கொலைவரை சென்றனர்

இன்று போராளிகள் இல்லை, இலங்கை அரசை வழிக்கு கொண்டுவர இந்தியா என்ன செய்யும் என கேள்விகள் எழுகின்றன?

எதிர்கட்சிகளின் போராட்டத்தை பாலசேனா அடக்கிவிடுவார்தான், ஆனால் இந்தியா நீண்ட காலமாக எப்படி அந்த இடத்தினை தக்க வைக்க முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன‌

மோடி ஒரு உறுதியான தலைவர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் எப்படி இலங்கையில் எப்படி சாதிக்க போகின்றார் என இனிதான் தெரியும்

திரிகோணமலை விவகாரத்தில் மோடி செய்யும் ஒவ்வொரு காரியமும் இனி இந்திரா, ராஜிவ் இலங்கையில் செய்த ராஜதந்திர நிகழ்வுகளை சொல்லிகொண்டே இருக்கும், அவர்களின் தேசாபிமான‌ நடவடிக்கைகள் அப்படி

இந்தியா சுற்றி அரண் அமைக்க அவர்கள் அப்படிகாரியங்களை செய்தார்கள், நேபாளத்தை இந்திய நட்புநாடாக்கியது, திரிகோணமலையினை இந்திய கட்டுபாட்டில் எடுத்தது என பெரும் காரியங்களை அவர்கள் செய்தார்கள்

உச்சமாக இந்த விவகாரத்திற்காக ராஜிவ் உயிரையே கொடுத்தார், திரிகோணமலையில் ராஜிவிற்கு வேறு என்ன வேலை? எல்லாம் நாட்டிற்காக‌

இனி எந்த இந்திய பிரதமருக்கும் இலங்கை விஷயத்தில், குறிப்பாக திரிகோணமலையில் ராணுவத்தை நிறுத்தும் ஆசையே வரகூடாது என பயமுறுத்தும் வகையில் நடந்ததுதான் ராஜிவ் கொலை,

புலிகளும் பிரபாகரனும் ஒரு கருவிகள், அதற்கான விலையினை அவர்களும் கொடுத்தாயிற்று

முன்பாவது திரிகோணமலைக்கு அமெரிக்கா மட்டும் வந்தது, இப்பொழுது சீனாவும் வந்து நிற்கின்றது, நிச்சயம் மோடிக்கு ஒரு அக்னி பரீட்சை.

ஒரு சுவாரஸ்யமான ஆட்டம் 35 வருடத்திற்கு பின் மறுபடியும் தொடங்குகின்றது,

திருநாவுக்கரசை சந்தித்தார் நடராஜன்

திருநாவுக்கரசை சந்தித்தார் நடராஜன்

இருவரும் ஜெயா அடக்கத்தின்பொழுது பேசிகொண்டிருக்கும் பொழுதே தெரிந்தது, இனி அடிக்கடி சந்திபார்கள் என‌

எம்ஜிஆருக்கு பின் ஜெயாவினை உருவாக்கியதில் இருவரின் பங்கும் பெரிது, பின் திருநாவுக்கரசு ஆட்களை ஒவ்வொருவராக வெளியே தள்ளி, கடைசியில் திருநாவுக்கரசையும் தள்ளி கட்சியினை கைபற்றினார் நடராசன்

திருநாவுக்கரசு தெருவுக்கு வந்து தனிகட்சி எல்லாம் தொடங்கி பின் பாஜக சென்றுவிட்டு இப்பொழுது காங்கிரசுக்கு வந்து தலைவரும் ஆகிவிட்டார்

இப்பொழுது இருவரும் சந்தித்துவிட்டார்களாம், இருவரும் ஒரு மாதிரி சிரித்திருப்பார்கள் என்பது வேறுவிஷயம். ஆனாலும் தமிழக காங்கிரஸ் தலைவரான அவர், மிக சர்ச்சையான காலத்தில் சர்ச்சைகுரிய நடராஜனை சந்தித்திருப்பது வில்லங்கமானது

ஜெயா இல்லாத அதிமுகவிற்கு ஓட அவர் மனதில் திட்டமிருக்கலாம், அதிமுக அவரின் தாய்வீடு என்பது ஒன்றும் ரகசியமல்ல..

நிச்சயம் திருநாவுக்கரசு தமிழக காங்கிரசுக்கு மட்டுமல்ல, காங்கிரசுக்கே பொருத்தமற்றவர்.இந்த பிரச்சினை ஒருபுறம் ஓடிகொண்டிருக்கின்றது,

இன்னொருபுறம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை சத்தியமூர்த்தி பவனில் எப்படி கொண்டாடலாம் என சில காங்கிரசார் கொந்தளிக்கின்றார்கள்

இந்திராவின் மிரட்டலுக்கு பயந்து, திமுக எனும் கட்சியினை உடைத்து, தன்னை உருவாக்கிய கலைஞரின் நெஞ்சிலே மிதித்த, அதற்கு தீரா தலைவலியான், காங்கிரசின் கட்டளைக்கு இறுதிவரை கட்டப்பா போல விசுவாசமாக இருந்த அந்த அடிமை ராமசந்திரனுக்கு காங்கிரஸ் சத்தியமூர்த்தி பவனில் நன்றி தெரிவிக்காமல் வேறு எங்கு தெரிவிப்பது?

அந்த டெல்லி அடிமையின் நூற்றாண்டு விழாவினை கொண்டாட சத்தியமூர்த்திபவனே மிக பொருத்தமான இடம் என்பது தமிழக அரசியல் புரிந்தோர்க்கு புரியாதா?


கொசுறு

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு மிரட்டல், பாதுகாப்பு அதிகரிப்பு

நேற்று குஷ்பூ வீட்டினை மிரட்டினார்கள், இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு மிரட்டலாம்

ஆக தமிழகத்து முக்கியமான “கோயில்களுக்கு” மிரட்டல் என பொதுவாக சொல்லிவிடலாம்….