ராஜபக்சேவினை சந்தித்தார் மோடி இன்னும் பிற…

ஆட்சி பிடித்து 3 வருடம் ஆகின்றது, வாக்குறுதி படி ஒரு புல்லையும் புடுங்கமுடியவில்லை, அசுர பலம் கிடைத்தும் காவி இந்தியா அமையவில்லை, உலக யதார்த்திற்கு அது அமையவும் அமையாது, இது அக்கட்சியின் பலருக்கு அதிர்ச்சி, தாங்க முடியா அதிர்ச்சி

இந்த அதிர்ச்சியில் பலருக்கு மனநிலையே இவ்வாறான பதிவுகளை எழுத சொல்கின்றன, மோடி அவசரமாக கட்ட வேண்டியது ராமர் கோவில் அல்ல, உலக தரத்தில் ஒரு மனநோய் மருத்துவமனை

கலைஞருக்கு வைரவிழா, அதற்கு இந்த “கஸ்மால ராமன்” எப்படி புலம்புகின்றார் பார்த்தீர்களா?

இங்கே சேர்பவர்கள் இருக்கட்டும், அங்கே கோவண‌ ஆண்டிகள், போலி சாமியார்கள், அரை கிறுக்கர்கள், புத்தி பேதலித்த பூசாரிகள் , பூதகிகள் எல்லாம் என்ன கிழித்து கொண்டிருக்கின்றீர்கள் என உலகிற்கு தெரியாதா?


 

ராஜபக்சேவினை சந்தித்தார் மோடி

டேய் தமிழ்நாட்டு ஈழ அல்ட்ராசிட்டிஸ், ஒன்று தற்கொலை செய்யுங்கள் அல்லது இனி இலங்கை பற்றி பேசமாட்டோம் என சூடமேற்றி சத்தியமாவது செய்துவிட்டு ஓடிவிடுங்கள்

இரண்டில் ஒன்றை செய்து தொலையுங்கள் அல்லது வைகோ போல எங்காவது சன்னியாசமாவது செல்லுங்கள்

புறக்கணிக்கபட்ட மலையக மக்களை சந்திக்கும் வேளையில், தேடி சென்று ராஜபக்சேவினை சந்தித்து இவர்கள் முகத்தில் தார் பூசியிருக்கின்றார் மோடி


ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதா? அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா? : சீமான் கண்டனம்

எங்கோ ஈழதமிழனை சிங்களன் அடித்தால் இனதுரோகி கலைஞர் திமுக‌ அரசு என இங்கிருக்கும் மாநில அரசினை நோக்கி கத்தவேண்டும்,

ஆனால் தமிழகத்தில் ஈழ தமிழனை அடித்தால் பொதுவாக கண்டிக்க வேண்டும்

பழனிச்சாமி அரசு என்றோ, அதிமுக அரசு என்றோ சொல்லிவிட கூடாது என்பதில் சீமானுக்கு கடுமையான எச்சரிக்கை உணர்வு

உலகில் தமிழனை எந்த மூலையில் அடித்தாலும் விடமாட்டேன் என சொன்ன சீமான், இங்கு தன் கண்முன்னே அடிக்கும்பொழுது கண்டனம் தெரிவித்துகொண்டிருக்கின்றார்


தமிழக அரசு கோமா நிலையிலுள்ளது : தீபா அறிக்கை

அம்மணி ரொம்ப ஸ்லோ, எப்பொழுதோ உலகிற்கே தெரிந்த விஷயம் இவருக்கு இப்பொழுதுதான் தெரிந்திருக்கின்றது பாவம்…

ஜெயா அப்பல்லோ போன பின்புதான் காட்சிக்கே வந்தார், அவர் செத்த பின்புதான் அரசியலுக்கே வந்தார்

அதிமுக அழியும்பொழுதுதான் கட்சியே தொடங்கினார், அவ்வளவு ஸ்லோ…

இம்புட்டு மெதுவாக இருந்தால் வேலைக்கு ஆகாது அம்மணி…


 

இன்னும் கொஞ்ச நேரத்தில் +2 ரிசல்ட் வரும்

இன்னும் கொஞ்ச நேரத்தில் +2 ரிசல்ட் வரும், அதன் பின் இரு நாட்களுக்கு ஊடகபக்கம் செல்ல முடியாது, எந்த ஊழலும் , எந்த அறிவிப்புக்களையும் அரசியல் கட்சிகள் செய்யலாம் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்

எல்லோர் கண்களும் அந்த மாணவர்களின் செய்திகளின் மேல் இருக்கும். அவர்களும் பெரும் சாதனை படைக்கபோவதாக சொல்வார்கள், அதனை கூட பொறுத்துகொள்ளலாம் அவர்களின் பெற்றோர் இச்சாதனைக்காக செய்த தியாகங்களை பட்டியலிடுவார்கள்,

மாணவ மாணவியரின் இண்டர்வியூ பெற்றோர், பள்ளி, ஆசிரியர்கள் என தொடர்ந்து செல்லும் சென்றுகொண்டே இருக்கும்

இப்படி பெரும் சாதனை மாணவர்கள் அடுத்த 4 வருடங்களில் என்ன ஆனார்கள்? அவர்கள் சொன்னதை செய்தார்களா? என்றெல்லாம் நாம் கேட்க கூடாது இத்தோடு விட்டுவிட வேண்டும்

ஊடகங்கள் இப்படி கிளம்ப யார் காரணம்? நிச்சயம் பள்ளிகள். அவற்றிற்கான விளம்பரம் இன்னபிற‌

இப்பொழுதெல்லாம் பள்ளி வாசலில் மட்டுமல்ல நகரின் எல்லா இடங்கள், பத்திர்கையின் எல்லா பக்கங்களிலும் அந்த மாணவ முகங்களும் பள்ளியும் தான்வரும்

எல்லாம் விளம்பரம்,

இன்னும் கொஞ்ச நேரத்தில் கொடுக்கபடும் அலப்பறைகள் தான், அடுத்து வரும் மாணவர்களுக்கான நெருக்கடி, குடும்பம் முதல் பள்ளிவரை இதனை சொல்லியே அவர்களை மனதால் கொல்வார்கள்

இவ்வளவு பெரும் பிம்பம் , நிச்சயம் வருங்கால மாணவர்களுக்கான நெருக்கடி, அவசியமான‌ கல்வி முறையினை அதன் தேர்ச்சியினை உலக ஒலிம்பிக் போட்டிக்கு நிகராக கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள்

என்ன முதலிடம்? என்ன பெருமை? ஒன்றுமில்லை. +2வில் சாதித்தவர்கள் தான் கல்வியில் சாதித்தார்கள் என்பதெல்லாம் வெற்று பிம்பம், வீணான கற்பனை

அம்பேத்கர், அப்துல் கலாம், சுஜாதா மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்கள் எல்லாம் இப்படி விளம்பரபடுத்தியா வெற்றிபெற்றார்கள்?

வெற்றிபெற முயற்சியுள்ளவன், அதற்கான தேடலில் இருப்பவனுக்கு வெற்றி எப்பொழுதும் காத்திருக்கும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்பொழுது அது அவனை தழுவிகொள்ளும்

உழைப்பே முக்கியம், தேடலே முக்கியம் மாறாக +2 எனும் தேர்வு அறிவிப்பு நாளில் வரும் சில விஷயங்கள் அல்ல‌

இந்த பெரும் அட்டகாசம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மிக அதிகம், வேறு எந்த நாட்டிலும் இந்த அழிச்சாட்டியம் இல்லை

அவர்களும் கல்வியில் நம்மை விட பெரும் சாதனை பல மடங்கு பெரும் சாதனை படைத்துகொண்டிருக்கின்றார்கள்

இம்மாதிரி கல்வி தேர்வு முடிவு வரும்பொழுது முதலிடம் பெற்றவர்களை நாம் கவனிப்பதில்லை, அதில் என்ன பெரும் அதிசயம் இருந்துவிட போகின்றது?

ஆனால் இந்த தேர்வில் தோல்வி என்றவுடன் சில தற்கொலை செய்திகள் வரும் அதுதான் மனதை பாதிக்கும், இம்முறை அப்படி ஏதும் நிகழ்ந்து கூடாது என்பதுதான் பிரார்த்தனை

படி, அதுவே பணம் சம்பாதிக்கும் ஒற்றை வழி என மாணவர்களுக்கு சொல்லபடும் மூளை சலவையே இவை எல்லாவற்றிற்கும் காரணம்

ஆக தோல்வியுற்ற மாணவர்களே கலங்க வேண்டாம், தோல்வியுற்று பின் படித்து உயர்ந்தோர் உண்டு, படிப்பில்லை எனினும் தொழிலால் உயர்ந்தவர் உண்டு

இன்றைய தமிழக நிலையில் சினிமா, தொழில் இன்னபிற விஷயங்களில் உச்சத்தில் இருப்பவர் யாரும் +2 பக்கம் வந்தவர்களே அல்ல‌

அவ்வளவு ஏன் கல்வி தந்தை என +2 அளவில் மாணவர்களை மாநில ரேங்கில் உருவாக்கி பரிசு கொடுப்பவர்களே 10ம் வகுப்பு தாண்டவில்லை

ஆக வாழ ஆயிரம் வழி உண்டு, வழியா இல்லை உலகில்

ஒன்றும் செட் ஆகவில்லையா? அரசியலுக்கு வாருங்கள் அவ்வளவுதான்,மாநில முதல் மதிப்பெண் வாங்கியவன் உங்கள் சொத்துக்களை கணக்கெடுக்கும் வருமான வரி அதிகாரியாக, வங்கி அதிகாரியாக அல்லது ஏதோ ஒரு உருவில் உங்கள் முன் கைகட்டி நிற்கலாம்

அப்பொழுது கதற, கதற பழிவாங்கலாம்., அவ்வளவுதான் விஷயம்

உதாரணம் வேண்டுமா? கலைஞர் கருணாநிதியினையே 6ம் வகுப்பு பெயில் என சொன்ன கல்வி உலகம் இது, அவர் எட்டாத உயரமா? இன்னொருவன் எட்டிவிட முடியுமா?

இத்தனை ஆயிரம் பொறியியல் கல்லூரி உள்ள தமிழகத்தில் ஒரு ஜிடி நாயுடுவினை உருவாக்கிவிட்டோமா? இல்லை அல்லவா?

ஆக கல்வி முறையில்தான் கோளாறே தவிர, மாணவர்கள் மீது அல்ல‌

இந்த மாதிரி அதீத விளம்பர நிகழ்வுகளால் மனதால் பாதிக்கபடும் மாணவர்களுக்கு எப்படி உதவலாம் என “குஷ்பூ காக்கும் கரங்கள்” அமைப்பு தீவிரமாக சிந்தித்து கொண்டிருக்கின்றது

இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடி: புத்த கோவிலில் வழிபாடு

இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடி: புத்த கோவிலில் வழிபாடு

நமது பிரதமர் இந்தியாவில் இருக்கும்பொழுது இந்து கோவில்களுக்கு மட்டும் செல்கின்றார்

ஆனால் ஐரோப்பாவில் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு செல்கின்றார், அரபு நாடுகளில் கசகஸ்தானில் மசூதிக்கு செல்கின்றார், ஜப்பானில் புத்த ஆலயங்களில் டிரம் அடிக்கின்றார்

இப்பொழுது இலங்கையில் புத்த விகாரைக்கும் சென்றிருக்கின்றார்

ஆக இந்தியாவினை தவிர எல்லா நாடுகளிலும் நல்ல மத நல்லிணக்கத்தில் இருக்கின்றார், அதனை இந்தியாவிலும் செயல்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

அவருக்கும் ஆசைதான், ஆனால் அதனை மீறிய சிக்கல் எங்கோ இருக்கின்றது

 
 
 

ஜெயா யாரை திட்டியிருப்பார்?

இந்த விஷயம்தான் இப்பொழுது அரசியல் மர்ம கிசுகிசுக்களில் டாப் என்கின்றார்கள் சில மீடியாக்கள்

அதாவது ஜெயா அப்பல்லோவில் இருந்தபொழுது சில வீடியோக்கள் எடுக்கபட்டிருக்கலாம் என்பது தெரிகின்றது, திவாகரனின் மகனே தன் முகநூல் பதிவில் அந்த வீடியோவில் ஜெயா பச்சை உடையுடன் எதிரிகள் பார்க்க கூடாத கோலத்தில் இருந்தார் என சொல்லியிருந்தார்

இப்பொழுது இன்னும் பல விஷயங்கள் வருகின்றன, அதில் ஜெயா மெலிந்த தேகம், நரைத்த தலையுடன் யாரையோ திட்டியபடி இருப்பதாகவும் அந்த வீடியோ வெளிவந்தால் தமிழகம் பற்றி எரியும் எனவும் பல பகீர் தகவல்கள் வருகின்றன‌

ஜெயா யாரை திட்டியிருப்பார்? வாழ்நாளெல்லாம் யாரை திட்டினாரோ அவரைத்தான் கடைசி காலத்திலும் திட்டியிருக்கலாம்

எப்படியோ பல சர்ச்சைகளை தாண்டவும், சில திசை திருப்பல்களுக்காகவும் அம்மாதிரி வீடியோக்கள் வர வாய்ப்பிருக்கின்றது

எதிர்முகாம் அதனை கடத்திகொண்டு செல்லும் கடும் முனைப்பில் உள்ளது என்கின்றது இன்னொரு செய்தி

ஆனால் கட்டிங், எடிட்டிங் மார்பிங் கிராபிக்ஸ் என பாகுபலி லெவனுக்கு ஒப்பனையோடுதான் வரும், ஒரிஜினல் வரவே வராது

பாகுபலிக்கு அடுத்து பெரும் எதிர்பார்ப்பு இப்பொழுது இந்த வீடியோவிற்குத்தான்.

முன்பதிவு எங்கே செய்யவேண்டும் என்பதுதான் தெரியவில்லை

மோடி இலங்கை சென்றுவிட்டார்….


Image may contain: one or more people, people standing and wedding

மோடி இலங்கை சென்றுவிட்டார், இலங்கை விமான நிலையத்தில் மிக கடுமையான பாதுகாப்பிற்கிடையே அவரை இலங்கை பிரதமர் ரணில் வரவேற்றுள்ளார்

அங்கு குழந்தைகளும் மோடிக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர், மோடியும் கொஞ்சமும் இமேஜ் பாராமல் குனிந்து வணங்கியுள்ளார்

மோடியின் இந்த பணிவு உலகெல்லாம் புன்சிரிப்புடன் நோக்கபடுகின்றது, விரைவில் “நேரு மாமா” இடத்தை மோடி பிடிக்க திட்டம் இருக்குமோ என்னமோ?

கொழும்பு சந்திப்புகளை முடித்துகொண்டு நாளை மலையகம் செல்கின்றார் மோடி

கடும் பாதுகாப்புக்கிடையே மோடியினை எதிர்பார்த்து கொண்டாட்ட மனநிலையில் இருக்கின்றனர் மலையகத்தார்

ராஜிவிற்கு இருந்த எதிர்ப்பினை போலவே மோடிக்கும் சில சலசலப்புகள் இருப்பதால் கடும் பாதுகாப்பு அளிக்கபட்டுள்ளது

சீனாவின் நீர்மூழ்கியினை இலங்கையில் அனுமதிக்க முடியாது என நேற்று இலங்கை சொல்லியிருப்பது மோடியின் வெற்றியாக நோக்கபடுகின்றது

ஏதோ அரசியல் புகை வருகின்றதா?

ஈழமக்களை வைத்து ஆடிய காங்கிரஸின் ஆட்டம் சில சறுக்கல்களை சந்தித்திருக்கலாம், அதற்கு புலிகளின் அடாவடியும், யாழ்பாண மேலாதிக்க சிந்தனையும் ஒரு காரணம்

பாஜக அரசு மிக தந்திரமாக மலையக தமிழர் பக்கம் இறங்கியிருக்கின்றது, எப்படியோ இப்படியாவது அம்மக்கள் வாழ்வில் வெளிச்சம் பரவட்டும்


துணிச்சல் மிகுந்தவர் வாஜ்பாய்: பொக்ரான் அணுகுண்டு சோதனை தினத்தையொட்டி மோடி பாராட்டு

1998ல் அணுகுண்டு வெடித்த வாஜ்பாய் துணிச்சலானவர் என்றால், பனிப்போர் காலத்தில் 1974ல் அணுகுண்டு வெடித்த இந்திரா எவ்வளவு துணிச்சலானவராக இருந்திருக்க வேண்டும்?

இந்தியாவிடம் அணுகுண்டு இருப்பது யாருக்கு தெரியாது? வாஜ்பாய் வெடிக்க போய், இதுதான் சாக்கு என பாகிஸ்தான் அடுத்த 4 நாட்களில் வெடித்தது

அவ்விஷயத்தில் வாஜ்பாய்க்கு நன்றி சொல்லவேண்டியது மோடி அல்ல, மாறாக பாகிஸ்தான்.


 

மலையக மக்களை பற்றி சொன்னால் …

மலையக மக்களை பற்றி சொன்னால் அப்படியா? அப்படி கொஞ்சம் தமிழர் உண்டா? என வியந்து கேட்கின்றார்கள்

இது கூட தெரியாமலா ஈழத்திற்கு கொடிபிடித்தார்கள் என்றால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கின்றது

வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் இந்த சிக்கலை பட்டும் படாமலும் சொல்லி வந்தவர் கலைஞர், மலையக மக்களை நேசித்த‌ பத்மநாபா போன்றவர்கள் மீது அன்றே அவருக்கு ஒரு அனுதாபம் இருந்தது

ஈழபோராட்டத்தில் இப்படி எல்லாபிரிவினையும் அவர் அழைத்து செய்த ஆலோசனைக்குத்தான் புலிகள் வர மறுத்தனர், ஆனால் எம்ஜிஆர் அழைத்தவுடன் ஓடினர்

எல்லா இலங்கை தமிழரையும் அணைத்த கலைஞரை புலிகள்தான் பிடிக்காமல் வெளியேறினரே தவிர, கலைஞர் யாரையும் வெறுக்கவில்லை, அவர் ஈழபிரச்சினையினை மலையக மக்களோடுதான் அணுகினார்.

ஈழபிரச்சினையினை எழுதிய சில இடங்களில் “தேயிலை கொழுந்தினை கிள்ள சென்ற எம் குல கொளுந்தினை கிள்ளும் லங்காபுரியே” எனும் இன்னோர் கவிஞனின் வரிகளையும் அவர் புகுத்திகொண்டுதான் இருந்தார்

உச்சமாக ஒருமுறை சொன்னார்

உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? என 1990களில் கேட்கும் பொழுது சொன்னார், லாரா எனக்கு பிடிக்கும், தமிழராக முத்தையா முரளீதரனை பிடிக்கும்.

கலைஞர் அப்படி சொன்னதன் அர்த்தம் வெகு சிலருக்குத்தான் புரியும், அர்த்தமான வரிகள்

முத்தைய முரளீதரன் மலையக தமிழரின் வாரிசு, இன்றும் யாழ்பாணத்தாருக்கு அவர் “எஸ்டேட் தமிழன்” எனும் இரண்டாம் தர தமிழனே,

உலகமே கொண்டாடிய அந்த கிரிக்கெட் தமிழனை ஈழத்தவர் அவ்வளவாக நினைக்கமாட்டார்கள், நினைத்திருந்தால் அவருக்கான இடமே தனி

இலங்கையில் தமிழனாக தான் பாதிக்கடவில்லை என சொல்ல போக அவர் சிங்கள சார்பு எனும் சர்ச்சை வந்ததும் குறிப்பிடதக்கது..

கோலாலம்பூரில் நண்பர் கென்னடியுடன்

18403537_10209141761916281_1772793031297338755_n.jpgநண்பர்களில் பலர் அவ்வப்போது கோலாலம்பூர் வருகின்றார்கள், சிலர் நம்மை சந்திக்க அழைக்கின்றார்கள்.

அவ்வளவு தொலைவிலிருந்து வந்து, பரபரப்பான நேரத்திலும் நம்மை சந்திக்க முயல்கின்றார்கள் என்றால் அவர்களை மதித்து செல்வதுதான் சரி.

அப்படி நண்பர் Kennedi M G அவர்கள் வந்திருந்தார், 5 மாதத்திற்கு முன்பே சொல்லியிருந்தார், அதனால் நேற்று மாலை சந்தித்தாகிவிட்டது

நண்பர் சிரித்த முகத்துடன் இருந்தார், சென்னையில் கட்டுமான நிறுவணம் நடத்துவதாக சொன்னார், “சென்னையில் கட்டுமானமா?” என்று சத்தமாக கேட்டால் மவுலிவாக்கம், சென்னை விமான நிலைய கட்டடம் எல்லாம் நான் கட்டவில்லை என அவசரமாக மறுத்தார்

பழகுவதற்கு இனிமையான மனிதர், சென்னை நிலவரம் அரசியல் வியாபாரம், சர்வதேசம் என பேசினார், அருகில் அவரது மகன் சிரித்துகொண்டே இருந்தான், அவனிடம் மலையாளத்தில் பேசிகொண்டார், மனைவி கோட்டயம் பக்கம் என்றார், பல மொழிகள் தெரிந்திருக்கலாம்

கொஞ்ச நேரம் பேசிகொண்டிருந்தோம், அவர் குடும்பத்தோடு சுற்றுலா வந்தவர், அவரை பிடித்து வைத்து கதற கதற பேசி கொல்வதில் அர்த்தமில்லை, அதனால் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வந்தாயிற்று

ஓரளவு சந்திக்க விரும்புவர்களை எல்லாம் சந்தித்துகொண்டுதான் இருக்கின்றேன் Jesinth, Raja Paul Ignatius , இருவர் மட்டும் மிஸ்ஸிங், காரணம் அவர்கள் வந்த நாட்களில் சந்திக்க முடியாத சூழல். அது ஒன்றுதான் காரணம்.

நண்பர் பேசிவிட்டு கிளம்பும்பொழுது குடும்பத்துடன் ஒரு ஏரியா பக்கம் சுற்றபோவதாக சொன்னார், அவரை பிடித்து காதோரம் “அய்யா குடும்பத்தோடு அங்கு ஒரு விவரமுள்ளவன் செல்வானா?, அது கொண்டாடி தீர்க்கவேண்டிய இடமல்லவா?” என சொல்ல வார்த்தை வாய் வரை வந்தது

பக்கத்தில் மகன் பன்னீர்செல்வம் பக்கம் பாண்டியராஜனை போல ஓட்டிகொண்டிருந்தான், அதனால் சொல்லமுடியவில்லை

அந்த இடம் “சில” கொண்டாட்டங்களுக்கான இடம், ஐரோப்பிய பாணி கொண்டாட்டத்தை கிழக்காசியவிற்கான புன்னகையோடு கொண்டாடி தீர்க்கலாம், அப்படியான தினம் தோறும் விடிய விடிய திருவிழா நடக்கும் இடம்..

அங்கு கோவிலுக்கு செல்வது போல குடும்பத்தோடு கிளம்பிய நண்பரை பார்க்க பாவமாகத்தான் இருந்தது.

நண்பர் அங்கு தன் குடும்பத்தாரால் நீட் தேர்வு மாணவனை போல நிச்சயம் கண்காணிக்கபட்டிருப்பார்

என்ன இருந்தாலும் தமிழகத்து நண்பர்களை சந்தித்துவிட்டு திரும்பும்பொழுது மனதில் வந்து அமரும் அழுத்தம் அப்பொழுதும் வந்து அமர்ந்துகொண்டது

 

நாம் சொன்னதன் அர்த்தம் இதுதான்

என்னமோ எழுத போக, நீ திமுக எதிரி, ஆர்.எஸ்.எஸ் உளவாளி, மோடியின் கை கூலி, தமிழிசையின் தம்பி ( இனியும் உயிரோடு இருக்கவேண்டுமா?) என்றெல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

நாம் சொன்னதன் அர்த்தம் இதுதான்

அதாவது திமுக என்பது யானை, இப்பொழுது அது பதவி எனும் சங்கிலியிலும் இல்லை, சுதந்திரமாக கையில் கிடைத்ததை அடித்து சென்றுகொண்டே இருக்கலாம்

ஆனால் பாஜக எனும் கட்சிக்கு ஏன் அஞ்சவேண்டும்? அவர்கள் அப்படி என்ன செய்துவிடுவார்கள்? டெல்லியில் ஆளும் கட்சிதான் ஆனால் தமிழக அரசியலில் என்ன செய்துவிடமுடியும்?

அதிமுகவினை அவர்கள் உடைக்கட்டும், விழுங்கட்டும் இல்லை பொம்மையாக ஆக்கி வைக்கட்டும், அது அவர்கள் பாடு. அதனால் திமுகவிற்கு என்ன?

திமுகவினை அழிப்பேன் என இந்திரா, குமாரமங்கலம் முதல் ஜெயா, சீமான் வரை போடாத சத்தமா? ராமதாஸ் கூட அடிக்கடி சொல்லியிருப்பார்

அதற்காக அவர்கள் எல்லாம் திமுகவினை அழித்துவிட்டார்களா?

அரசியலில் ஒரு தந்திரம் உண்டு, அதாவது ஒன்றுமே இல்லாமல் இருப்பவன் யார் பெரும் கட்சியோ , அதிகார கட்சியோ அவர்களை சாடுவான், சீண்டுவான், கோபபடுத்துவான், அப்பெரும் கட்சி பதில் சொல்ல சொல்ல இவன் வளருவான்

இந்த தந்திரத்தில் காமராஜரை சீண்டியே வளர்ந்து நின்றவர் கலைஞர், அப்படித்தான் வளர்ந்தார்

இந்த வியூகத்தின் அடிப்படையில்தான், தனக்கு சமமானவர்களுக்கு பதிலோ, வாதமோ செய்வாரே அன்றி சில்லரை கட்சி தலைவர்களுக்கு அவர் பதிலளித்ததே இல்லை, அப்படி செய்தால் அவர்களை வளர்த்தது போலாகிவிடும்

சீமானும், வைகோவும் கேட்காத கேள்விகளா? எதற்காவது அவர் பதில் சொன்னாரா? வைகோ இன்றுவரை திமுக மீது வெறிகொண்டு அலைவதற்கு கலைஞரின் அந்த மவுனமே காரணம், வைகோவிற்கு அது பெரும் அவமானம்

வீணாக தனக்கு நிகராக ஒருவனை பெரியபிம்பமாக மாற்ற கலைஞர் விரும்பமாட்டார்

கலைஞர் செய்யாத அந்த தவறினை ஸ்டாலின் செய்கின்றார், பாஜகவின் சீண்டலை கண்டுகொள்ளாமல் விட்டாலே அடங்கிவிடும், இப்போதைக்கு அது தமிழகத்தில் ஒன்றும் செய்துவிட முடியாது, பத்தோடு பதினொன்றாக அதனையும் வரிசையில் வைத்துவிட்டு சென்றுவிடலாம்

எப்படியும் போகட்டும், நாம் திமுக எல்லாம் அல்ல, கலைஞரின் ரசிகன், அவரின் தந்திர விளையாட்டுக்களை ரசித்தவன்

இப்பொழுது கலைஞர் தீவிர அரசியலில் இருந்தால் என்ன செய்வார்? என்பது கணிக்க கூடியது

எப்படியாவது பாஜகவினை வழிக்குகொண்டுவந்து தேர்தலை சந்தித்திருப்பார், கொஞ்ச நாளில் முதல்வராகவும் ஆகியிருப்பார்,

மக்கள் நாடி பிடித்துபார்ப்பார், அகில இந்திய அளவில் பாஜகவிற்கு ஏறுமுகம் என்றால் காந்தியினை மோடி வடிவில் பார்க்கின்றேன் என சொல்லிவிடுவார் அல்லது ஏதும் சிக்கல் என்றல் என்ன செய்வார்?

“ஏய் ஆரிய கூட்டமே, திராவிடத்தினை தீண்ட வந்த தீரா விடமே, எடுத்தேன் கொடுவாளை, வீசினேன் உன் நஞ்சுதலையில்….” என முழங்க ஆரம்பித்துவிடுவார்

இன்று மோடி என்றால் அன்று இந்திரா, மோடியினை விட 10 மடங்கு உறுதியான இந்திரா

அவரிடமே மோதி திமுகவினை காத்தவர் கலைஞர், அப்படிபட்ட திமுக இந்த பாஜகவினை, அதுவும் தமிழக பாஜகவினை கண்டேல்லாம் அஞ்ச வேண்டுமா?

ஜெயலலிதா தான் ஒரு அரசியல்வாதியாக வருவோம் என நினைத்ததில்லை, எம்ஜிஆர் மறைந்தவுடன் நடராஜன் அவரை இயக்கினார், ஆரம்பத்தில் ஜெயலலிதா தனக்கு அரசியலில் இடம் கிடைக்கும் என நம்பவில்லை

அரசியலில் இருந்து விலகுகின்றேன் என ஜெயலலிதா எழுதிய கடிதத்தை நடராஜன் மறைக்க விஷயம் கசிந்தது, கலைஞர் அதனை அரசியலாக்கினார்

ஜெயாவிடம் இப்படித்தான் கொளுத்தி போட்டார்கள், “பார்த்தீர்களா கலைஞர் உங்களுக்கு அஞ்சுகின்றார், நீங்கள் அரசியலை விட்டு போவதில் அவருக்குத்தான் ஆர்வம் அதிகம்..”

இந்த இடத்தில்தான் நிமிர்ந்து உட்கார்ந்தார் ஜே, “கலைஞர் என்னை கண்டு அஞ்சுகின்றாரா ?” எனும் வார்த்தையினை 5 முறை ஆச்சரியமாக சொல்லிகொண்டே இருந்தவர் அதன் பின் எடுத்ததுதான் விஸ்வரூபம்

அப்படி இனி இன்னொருவருக்கு வாய்ப்பில்லை எனினும், ஸ்டாலின் எங்களுக்கு அஞ்சுகின்றாரா? அப்படியானால் நாம் உண்மையிலே பெரிய கட்சியா என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்துவிட்டால் என்னாகும்?

கொஞ்சமேனும் சுதாரித்துவிட மாட்டார்களா?