ரஜினியைச் சந்திப்பதெல்லாம் மரியாதை நிமித்தம் மட்டுமே: தமிழிசை

பாஜக வினர் ரஜினியைச் சந்திப்பதெல்லாம் அரசியல் ஆதாயத்திற்காக அல்ல மரியாதை நிமித்தம் மட்டுமே: தமிழிசை

இந்த எம்.என் ராஜம், சவுகார் ஜாணகி போன்ற மூத்த நடிகைகள் எல்லாம் முதுமையின் விளிம்பில் இருக்கின்றார்கள், ஆனால் அவர்கள் மீது வராத மரியாதை ரஜினி மீது மட்டும் பாஜகவினருக்கு வந்து விடுகின்றது என்கின்றார் தமிழிசை

அதே நேரம் ரஜினியினை தவிர எந்த தமிழ் நடிகர்கள் மேலும் பாஜகவிற்கு மரியதை இல்லை என்பதனையும் சொல்லிகொள்கின்றார் தமிழிசை..

ஆக தமிழக நடிகர்களே தமிழிசையிடம் கவனமாக இருங்கள், உங்கள் மீதெல்லாம் அவருக்கும் அவர் கட்சிக்கும் மரியாதையே இல்லை

இதனால்தான் சரத்குமார் ஓடிவந்திருப்பாரோ, மனிதர் மானஸ்தன் போலிருக்கின்றது.

மலையகத்திற்கு மோடி சென்றதில் வேல்முருகனுக்கு என்ன கோபம்?

தமிழர்களின் பிரச்னை குறித்து மோடி ஒருவரிகூட பேசவில்லை’ – வேல்முருகன்

மோடி சென்றது இலங்கை மலையகத்திற்கு, அங்கு மருத்துவமனை கொடுத்திருக்கின்றார், 10 ஆயிரம் வீடுகளை இந்தியா கொடுத்திருக்கின்றது, இன்னும் மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை அறிவித்துள்ளது

இதற்கு மேலும் மோடி என்ன செய்யவேண்டும் என இவர் எதிர்பார்க்கின்றார்?? ஈழம் சென்று மோடி துப்பாக்கி தூக்கி பங்கரில் பதுங்க வேண்டுமா?

ஈழதமிழருக்கு உதவபோய் இந்தியா தன் கையினை சுட்டுவிட்டு ஒதுங்கிகொண்டது, இனி மலையக தமிழர்களையும் விட்டுவிட வேண்டும் என்கின்றாரா வேல்முருகன்??

முன்பு ராஜிவ் செய்த வடமராட்சி சம்பவத்தின் துணிச்சல் போன்றது இலங்கை மலையகத்தில் மோடி தலையிட்டிருப்பது என சிங்கள தரப்பு சாடுகின்றது, நிச்சயம் இது துணிவான விஷயமே

வடபகுதிக்கு மோடி செல்லவில்லை, மீணவர் பிரச்சினை பேசவில்லை என குற்றம்சாட்டுகின்றார் இவர், வடபகுதி மீணவன் தான் சிங்களனிடம் தமிழ் மீணவர்களை விரட்ட சொல்கின்றான் என்பது வேல்முருகனுக்கு மறந்துவிட்டது

மலையகத்திற்கு மோடி சென்றதில் இவருக்கென்ன கோபம்? அவர்கள் தமிழர்கள் இல்லையா?

போரினால் வீடிழந்த ஈழமக்களுக்கு 60 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டி கொடுத்திருக்கின்றது, இப்பொழுது மலையக தமிழருக்கும் உதவியிருக்கின்றது, இதனை எல்லாம் மறைத்து சும்மா கத்திகொண்டிருக்கின்றார் வேல்முருகன்

செயலில் மோடி காட்டியபின் பேசுவதில் என்ன இருக்கின்றது? மோடி செய்தே காட்டிவிட்டார்.

முன்பு ராஜிவினை சிங்களன் ஒருவன் துப்பாக்கியால் தாக்கினான், அந்த துப்பாக்கியினை வாங்கி வந்து இவரை போன்றவர்கள் முதுகில் சாத்த வேண்டும்


 
 
 

சீமான் பல இடங்களில் பேசியது….

நாயக்கர்கள் சிங்களரோடு சேர்ந்து இலங்கையில் தமிழர்களை அழித்தார்கள் என சீமான் பல இடங்களில் பேசினார், கேட்டால் பண்டாரநாயக்கே,சேன நாயக்கே எல்லாரும் இலங்கை சிங்கள நாயக்கர் கலப்பு, அதனால்தான் அப்படி, நாயக்கன் திருப்பதி கோவிலுக்கு வருவது அப்படித்தான் என கடும் அழிச்சாட்டியம்

அங்கிளின் தம்பிகளும் ஆமாம் அப்படித்தான் என எழுப்பிய சத்தம் இன்றுவரை ஓயவில்லை, ஆனால் வரலாற்றினை புரட்டினால் நாயக்கருக்கு முன்பே தமிழ் சிங்கள உறவுகள் இருந்திருக்கின்றன‌

சிங்கள தமிழ் உறவுகள் என்பது விஜயன் இலங்கை தீவில் கால்வைத்த காலமுதல் உள்ளது என்பது வரலாற்று ஆய்வு.

விஜயனுக்கு பாண்டிய மன்னன் பெண்கொடுத்ததையும், அவனது வம்சத்தில் ஒரு மன்னனுக்கு “பாண்டிகபையன்” அல்லது “பாண்டி அபையன்”எனும் பெயர் வைக்கும் அளவிற்கு அவர்களுக்கு நெருக்கம்,

இன்னும் மதுரை போல அவர்கள் அப்பெயரிட்டு நிர்மானித்த நகரம் தாம் இன்றைய சிங்கள “மாத்தரை”, அவர்கள் உச்சரிப்பில் மதுரை “மாத்தற” ஆனது என்பது வரலாறு, பாண்டியர்களை போலவே அங்கும் முருகபெருமானுக்கு ஆலயம் அதிகம்.

இன்னும் பழம் தமிழர்களான மறவர்கள் பெயரும் சிங்களர் வம்சத்தில் அதிகம், உதாரணம் வேண்டுமானால் “மறவன் அட்டபட்டு” பிரபல சிங்கள கிரிக்கெட் ஆட்டக்காரார்.

இன்னும் முதலியார் போன்ற தமிழ்சாதிகளும் அங்கு கலந்துள்ளன, அதுலத் முதலி போன்ற பெயர்களும் உண்டு

சிங்கள இனவெறியனும், பெரும் கொலைகாரனுமான ஜெயவர்த்தனே தமிழக செட்டியார்கள் வம்சம் என்கின்றது ஒரு ஆய்வு

இப்படியாக பாண்டிய சிங்கள உறவும், பாண்டியர் உதவிக்கு வந்ததற்காக சோழ சிங்கள பகையும் மறக்கமுடியாதது, அக்காலத்தில் சேர,சோழ,பாண்டி மன்னர்களின் மோதல் பிரசித்தி பெற்றது.

உண்மையில் அன்று சோழர்களுக்கும் தெலுங்கர்களுக்குமான உறவு இருந்திருக்கின்றது, பாண்டியர்களுக்கும் சிங்களருக்குமான உறவு இருந்திருக்கின்றது, பின்னாளில் மதுரைக்கு நாயக்கர்கள் வர, பின் நாயக்க சிங்கள உறவும் தொடந்து வந்திருக்கின்றது.

அக்கால சிங்களர்கள் திருப்பதி போலவே தமிழக முருகன் கோயில்களுக்கும் அடிக்கடி வந்திருக்கின்றார்கள், இன்றும் ரகசியமாக வருகின்றார்கள்.

இன்று ஆந்திராவில் இருந்தாலும் திருப்பதி அன்று தமிழன் ஆலயமே, திரு எனும் வார்த்தையே தெலுங்கில் கிடையாது, அது தமிழன் பெயர், தமிழனின் ஆலயம்

மொத்தத்தில் நாயக்க வம்சம் சிங்களனிடம் உறவாடியது என்றால், அது பாண்டிய சிங்கள உறவும், சோழ பாண்டிய பகையின் தொடர்ச்சியே ஆகும். உண்மையில் சோழர்கள் தெலுங்கர்கள் உறவு பல காலம் தொடந்திருக்கின்றது.

தஞ்சை பெரிய கோயிலை காட்டி சென்று உருளும் திடீர் தமிழன் ஒருவனாவது மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் வருவானா என்றால் வரமாட்டான், இவ்வளவிற்கும் தமிழ் வளர்த்த சங்கம் இருந்தது மதுரையில் தான்.

இது இனி இப்படியே தொடருமாயின் பழைய சோழ,பாண்டிய சண்டைக்கும் சர்ச்சைக்கும் தான் இட்டு செல்லும், தமிழை நேசிப்பவர்கள் வரவேண்டிய இடம் எது? தமிழ் வாதாடிய பொற்றாமரை குள மண்டபமா? அல்லது ஈழத்தை வெற்றிகொண்ட நினைவிற்காக கட்டபட்ட தஞ்சாவூர் கோயிலா?

தமிழனின் அடையாளம் தஞ்சாவூர் மட்டுமா?

மற்றபடி சிங்களனை தெலுங்கன் கலந்து தமிழனை கொன்றான், விரட்டினான் என்பதெல்லாம் பாரதிராஜாவின் கற்பனையில் உருவாகி சீமானிடம் வடிவம் பெற்ற வார்த்தைகள்.

35 வருடங்களுக்கு முன்பு வரை இலங்கை தமிழரின் பெரும் எதிரிகளாக பெரும் கலவரத்தை நடத்தியவர்கள் ஜெயவர்த்தனேயும் அதுலத் முதலியும்

இருவருமே தமிழக வம்சாவளி என்கின்றன ஆய்வு

இவர்களை எதிர்த்த பிரபாகரனும் தமிழர்

ஆனால் சீமான் சொல்வதென்ன? தெலுங்கர்கள் சிங்களரோடு சேர்ந்து தமிழரை அழித்தனர், நாயக்கர்கள் சதி செய்தனர்

வரலாற்றை தோண்டினால் ஒரு கப்பல் நிறையத்தான் சிங்களன் இலங்கைக்கு வந்திருக்கின்றான், தமிழன் உட்பட கலந்துதான் அந்த இனம் வளர்ந்திருக்கின்றது, சிங்களனிலும் ஏகபட்ட தமிழ் கலப்பு இருக்கின்றது, அதுதான் தமிழருக்கு எதிராகவும் பல இடங்களில் திரும்பியிருக்கின்றது

இந்த உண்மை எல்லாம் அங்கிள் சொல்லவா போகின்றார்,

சீமானின் பொய்மூட்டைகளையும் அவரின் அடிப்பொடிகளின் பெரும் பொய் வீச்சுக்களையும் நம்புவீர்களானல் நிலமை இன்னும் மோசமாகும்.

அங்கிள் சைமன், இந்துக்களுக்கும் இந்தியாவிற்கும் குறிப்பாக முப்பாட்டன் முருகனுக்கும் எதிராக சகீர் நாயக் என்றொருவர் உலகெல்லாம் பேசி சர்ச்சையினை உண்டாக்கியிருக்கின்றாரே அவரும் தெலுங்கனாகத்தான் இருப்பாரோ??

 
 
 

ரஜினிகாந்த் போல ஒருவரை பார்த்திருக்க மாட்டோம்

Image may contain: 1 person, close-up

மனிதர்களில் பலவகை பார்த்திருப்போம், ஆனால் ரஜினிகாந்த் போல ஒருவரை பார்த்திருக்கமாட்டோம்

அவர் இப்பொழுதெல்லாம் ரசிகர்களை அதிகம் சந்திக்கின்றாராம், இவ்வளவு நாள் எங்கிருந்தார் என கேட்க கூடாது, இங்குதான் இருந்தார். சந்தித்து பல முத்தான கருத்துக்களை தெரிவிக்கின்றார் எது தெரியுமா?

21 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அரசியல் கூட்டணியினை நான் ஆதரித்தது ஒரு விபத்து, என்னை அரசியல்வாதிகள் பயன்படுத்திகொண்டார்கள் என்றெல்லாம் அன்னார் பொன்மொழியினை அள்ளி தெளித்திருக்கின்றார்

எது விபத்து மிஸ்டர் ரஜினிகாந்த்?

திரையுலகில் நீங்கள் வளர்ந்துவிட கூடாது, என குறிவைத்து விரட்டிய எம்ஜிஆர் காலமா? அக்காலத்தில் கலைஞர் கைகொடுத்து சூப்பர்ஸ்டார் என பட்டம் கொடுத்த காலமா?

எம்ஜிஆரின் ரகசிய போலீஸ் 100 படத்தின் பிற்பகுதியினை உங்களை வைத்து தயாரிக்க வந்த தயாரிப்பாளரை எம்ஜிஆர் ஓட விரட்டினாரே அது விபத்தா? கத்திப்பாரா ஓட்டபந்தயம் விபத்தா? அல்லது அடுத்த எம்ஜிஆர் எனும் அடைமொழி வராமல் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் காவல் காத்தார்களே அது விபத்தா?

மணிரத்னம் வீட்டு குண்டுவெடிப்பும், அதனை தொடர்ந்த உங்கள் சீற்றமும் எல்லாம் விபத்தா?

ஜெயா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என சொன்னது விபத்தா?

மூப்ப்பனரும், சோவும் உங்களை சந்தித்து ஆதரவு கேட்டபொழுது தமிழமெங்கும் சைக்கிள் சின்னத்துடன் போஸ் கொடுத்தது விபத்தா?

அதன் பின்னும் ஆட்சி மாறியபின் அதிமுக கூட்டணிக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்ததும், என் வோட்டு அதிமுகவிற்கு என சொன்னதும் விபத்தா?

இவ்வளவு நடந்தும் கலைஞர் உங்களை சரிக்கு சமமாக தன் அருகே அமர வைத்ததும், ஜெயா ஒரு கூட்டத்தின் பின் வரிசையில் உங்களை நிற்க வைத்ததும் விபத்து என்றா நினைக்கின்றீர்கள்???

மனிதர் எவ்வளவு வன்மமாக பேச தொடங்கிவிட்டார், அரசியல்வாதிகள் பொய் சொல்வார்கள், அரசியல்வாதிகள் சந்திக்கும் நபர்களுமா பொய் சொல்வார்கள்? நல்ல வேளையாக இம்மனிதர் கட்சி தொடங்கவில்லை

நான் அரசியலுக்கு வந்தால்… என மறுபடியும் இழுத்திருக்கின்ரார். நான் அரசியலை விட்டு சென்றுவிடுவேன் என சிலநேரங்களில் கட்சிக்குள் அஸ்திரம் வீசும் தலைவர்கள் உண்டு, அரசியலுக்கு வந்துவிடுவேன் என சொல்லியே இத்தனை காலம் கடத்தும் ஒரு விசித்திர மனிதனை இப்பொழுதுதான் பார்க்கின்றோம்

பசுமாட்டின் முன் கன்றினை கட்டி பால்கறக்கும் வித்தை இது, ரசிகர்கள் முன் இப்படி சொல்லி சொல்லியே பாக்கெட்டில் இருப்பதை கறந்துகொண்டிருக்கின்றார் இவர்

ஆனால் இம்முறை ரஜினியின் வார்த்தைகள் வழக்கமான அவரின் காமெடி அல்ல, இதன் பின் பெரும் தந்திர திட்டங்கள் இருக்கலாம், ரஜினி சும்மாவே கருப்பு பிராமணர் என்பதில் சந்தேகமில்லை

பிராமண சூதுக்கள் பொல்லாதது, ராஜாஜிக்கு பின் தமிழகத்தில் தங்கள் ஆட்சி இல்லை என்ற வன்மம் அவர்களுக்கு இருந்தது, ஆனால் எம்ஜிஆர் கிடைத்தார் ஓரளவு பயன்படுத்தினார்கள், பின் ஜெயாவின் மூலம் முயற்சித்தார்கள், ஜெயா நிச்சயம் இன்னொரு ராஜாஜியாக வந்திருக்கவேண்டியவர்

ஆனால் நடராஜன் ஜெயாவினை ஒரு வளையத்தில் கொண்டுவந்தார், அது தேவர் சாதி பிடியாயிற்று, இப்படித்தான் பிராமணர்கள் ஆட்சியாக வந்திருக்க வேண்டியது இன்னொரு தமிழ்சாதி ஆட்சியாக போயிற்று

இப்பொழுது பிராமண நோக்கம் இந்த கருப்பு பார்பணன் மூலம் வெளிவருகின்றது, ரஜினி இப்படி எல்லாம் பேச அதுதான் காரணம் இல்லாவிட்டால் அவருக்கு அல்மைசர் ஏற்பட்டிருக்க வேண்டும், அப்படியெல்லாம் ஏதும் மருத்துவ தகவல் இல்லை, டயலாக் நன்றாக பேசுவதாக ரஞ்சித் கூட சொல்லியிருந்தார்

இவரை, இவருக்கு சோதனையான 1980 முதல் பல இடங்களில் காத்தவர் கலைஞர், எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ ரஜினியிடம் முகம் கொடுத்து பேசியது கூட கிடையாது

அந்த கலைஞருக்கு 1996ல் அதுவும் தமிழகமே பொங்கிய காலங்களில் ஆதரவு தெரிவித்துவிட்டு இப்பொழுது விபத்து என்றால்…

தமிழச்சி மனோரமா முன்பு இவரை பற்றி சொன்னதுதான் நினைவுக்கு வருகின்றது, இவர் அப்படித்தான் போல..

இவர் ரசிகர்களுக்கு மானம் இருக்கின்றதோ வெட்கம் இருக்கின்றதோ தெரியாது, ஆனால் இவருடனெல்லாம் இணைந்து குஷ்பூ நடித்தார் என்பதனை நினைத்து அவரின் ரசிகர்களான நாங்கள் பெரும் வருத்தம் கொள்கின்றோம்..

தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என கொண்டாடபடுபவர், தமிழகத்தின் நச்சுவிதை என்ற பட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றார்…

கொஞ்சநாளைக்கு முன்புதான் இலங்கைக்கு செல்லும் வழி அந்த லைக்கா சுபாஷ்கரன் மூலம்தான் தெரிந்தது என சொன்னவர்தான் இவர், அந்த அறிக்கையின் வியப்பே இன்னும் தீரவில்லை

அதற்குள் இப்படி விபத்து அறிக்கை…

21 வருடத்திற்கு முன்பு நடந்த அரசியலை சொன்னவர், இன்று நடக்கும் மிக குழப்பமான அரசை பற்றி ஏதும் சொன்னாரா? சொல்ல மாட்டார்..

இப்படி பகிரங்க பொய்களை சொல்லும் மனிதர் இன்னும் கட்சி தொடங்காதது நல்லது, தொடங்கவும் வேண்டாம்

முதல்வர் இனியும் கவுரவம் பார்க்கக்கூடாது : மு.க ஸ்டாலின்

முதல்வர் இனியும் கவுரவம் பார்க்கக்கூடாது : மு.க ஸ்டாலின்

அவர் என்றைக்கு அய்யா கவுரவம் பார்த்தார்? ஜெயாவிடம் அவர் படாத பாடா? கவுரவம் இருந்தால் அவர் அங்கு இருந்திருப்பாரா?

அவ்வளவு ஏன்? சசிகலா அதிகாரத்தில் பன்னீர் செல்வத்திற்கே ரோஷம் வந்த பின்னும் இவருக்கு வந்திருக்கின்றதா?

அவரிடம் போய் கவுரவம் அது இது என்றால் அவருக்கு புரியுமா? அப்படி என்றால் என்ன என்று கூட அவருக்கு தெரியாதே…

 

பின்னொரு நாளில் வரப்போகும் ஆட்சிக்காக ஸ்டாலின் காத்திருக்கின்றார்

ஆனால் இன்றைய அவலத்தை தீர்ப்பது யார்? என தமிழகம் தத்தளித்து கொண்டிருக்கின்றது

இதனை சொன்னால் நம்மை திமுக துரோகி என்பார்கள்..


தீப்பொறி ஆறுமுகத்தின் அதிரடி பேச்சுக்கள் சுவாரஸ்யமானவை,

அக்காலத்தில் தமிழ் பேசுவதற்கென்று சில இலக்கணம் இருந்தது, அப்பொழுது திக்கி திக்கி பேசி கிண்டலுக்கு இலக்கானவர் பழ.நெடுமாறன்

ரஜினியின் தமிழ் உலகறிந்தது, அஜித்குமாரின் தமிழ்போல ஒரு மாதிரியான தமிழ் அது

ஒரு மேடையில் தீப்பொறி ஆறுமுகம் சொன்னார், “எனக்கு ஒரு ஆசை, இந்த ரஜினிங்கிற பயலையும் இந்த திக்குவாய் பழ.நெடுமாறனையும் ஒரு பட்டிமன்றத்திலோ கவியரங்கிலோ பேசவைக்க வேண்டும்

கூட்டம் முடியும் வரை சிரித்துகொண்டே இருக்கலாம்”

இன்றும் ரஜினியும், பழ.நெடுமாறனும் பேசாமலே சிரிக்க வைத்துகொண்டுதான் இருக்கின்றார்கள்…


 

ரோம் நகரில் குஷ்பூ

Image may contain: 3 people, outdoor

ரோம் நகரில் குஷ்பூ

அன்று எகிப்தின் கிளியோபாட்ராவினை கண்ட ரோம் , இன்று இந்தியாவின் கிளியோபாட்ராவினை கண்டிருக்கின்றது

முன்பு உலக‌ பேரரசி விக்டோரியா, தான் உலகாளும் ராணியாயினும் கணவனுக்கு மனைவி என கட்டுபட்டு நின்றாள்,

அப்படி கோடான கோடி ரசிகர்களின் அபிமானம் பெற்றவராயினும் தன் மகள்களுக்கு தான் பாசமிகு அன்னை என்பதை சொல்லிகொண்டே இருக்கின்றார் குஷ்பூ

அழகின் அன்னை , அன்னையர் தினத்தினை கொண்டாடிய தருணம்..


18447413_10209165625392853_1092154940274433966_n.jpg

நீ குஷ்பூ பற்றி எழுதுவதால் உன்னை அன்பிரண்ட் செய்கின்றோம் என சிலர் சொல்லிவிட்டு செல்கின்றார்கள்

நான் நல்ல விஷயங்களை எழுதுவதால் வந்தார்களாம், குஷ்பூ பதிவு பிடிக்காமல் செல்கின்றார்களாம்

ஏண்டா டேய்.. நீங்க நினைச்சமாதிரி எல்லாம் எழுத நான் என்ன உங்கள் வீட்டு வேலைக்காரனா?

என்னவோ நல்ல பதிவுக்கு 100 டாலர் அனுப்பி வைத்ததை போல, சிலர் சிலிர்த்துகொள்கின்றார்கள்

ஓசியில் படித்துவிட்டு அதற்கு கோபம் வேறு..என்னா வில்லத்தனம்.

யாரும் உங்களை இங்கு அழைக்கவுமில்லை, நீங்கள் சென்றால் தடுக்கபோவதுமில்லை

காரணம் உங்களுக்காக நான் எழுதியதுமில்லை, எழுதபோவதுமில்லை…

நான் ஒன்றும் சமூக காக்கும் போராளி அல்ல, அறிவு ஜீவி முகமூடி போட்டவனும் அல்ல, உலகத்தை மீட்க கிளம்பியவனும் அல்ல‌

ஏதோ ஒரு பதிவு குறித்து ஒரு பத்திரிகையில் கூட எழுத அழைத்தார்கள், பிரபல பத்திரிகை அது. என் உயரம் எனக்கு தெரியும் என்பதால் ஒதுங்கிவிட்டேன்

இன்னொன்று எழுதி ஒருவன் வாழ்வது என்பது தமிழகத்தில் நடக்காத விஷயம், தமிழக எழுத்தாளன் நிலை அப்படித்தான். ஆனான பட்ட சுஜாதாவே ஒன்றும் சம்பாதித்ததாக தெரியவில்லை

முகநூலில் எழுதி ஒரு புல்லையும் புடுங்கமுடியாது என்பது எனக்கும் தெரியும், ஆனாலும் தோன்றியதை எழுதுகின்றேன்..

நான் எழுத உங்கள் அனுமதி தேவையுமில்லை…

இவர்களுக்கு எல்லாம் மறுமை நாள் பற்றி கவலை இல்லை போலும், பின்னொரு காலத்தில் நான் மரித்து கடவுளின் விசாரணைக்கு செல்லும் பொழுது என்ன கேட்பார்?

“மானிடனே பூலோகத்தில் என் படைப்புகளை கண்டாயா? என் ஞானத்தை கண்டாயா?, எப்படி மகிழ்ந்திருந்தாய் சொல்” என்பார்

அதற்கு நான் கடவுளே பூலோகத்தில் நான் மிக நல்லவனாக இருந்தேன், அதனால் குடிக்கவில்லை, சினிமா பார்க்கவில்லை , பாகம்பிரியாள் தவிர எந்த பெண்ணையும் திரும்பி கூட பார்த்ததில்லை, உண்டு என் வீடு உண்டு வேலை உண்டு என்றிருந்தேன், என்னை பொறுத்தவரை நல்லவனாக வாழ்ந்தேன் என்றால் கடவுளுக்கு கோபம் வராதா?

“அற்ப மானிட பதரே இதற்காகவா உன்னை படைத்தேன், பூமியில் கொஞ்சமும் ரசனையின்றி வாழ்ந்த ஜென்மமா நீ, மானிட மகிழ்வே உனக்கு தெரியவில்லை

என் படைப்பின் உச்சமான குஷ்பூவினை உன் காலத்தில் படைத்திருக்கின்றேனே, அதனை கூடவா நீ ரசிக்கவில்ல்லை

நீ வாழ்ந்த வாழ்க்கை வீண், நான் கொடுத்த வாய்ப்பினை தவறவிட்டுவிட்டாய் போ நகரகத்திற்கு..” என்றால் என்னாகும்

அப்படி கடவுளுக்கு பயந்துதான் குஷ்பூவினை ரசிக்கின்றோம், போதுமா?


 
 

அமைச்சர் விஜயபாஸ்கர் இப்படி சிந்தித்தால் நல்லது..

ஜெயலலிதாவிற்கு சொந்தமான பல சொகுசு வாகனங்கள் உண்டு, அவர் இல்லாததால் அவற்றை முறைபடி இயக்குவதில் சில சிக்கல்கள் உண்டு

இப்பொழுது பேருந்து போராட்ட காலம், சில இடங்களுக்கு மகா அவசர தேவைக்கு அரசு சார்பாக அந்த வாகனங்களை இயக்கினால்தான் என்ன?

அரசுடமை ஆக்கினால்தான் என்ன? அவை எல்லாம் எதற்கு வீணாக நிறுத்தி வைக்க வேண்டும்? அம்மா ஆன்மா இனி காரோட்டவா போகின்றது?

அமைச்சர் விஜயபாஸ்கர் இப்படி சிந்தித்தால் நல்லது..


இந்தோனேசியாவில் இறந்து கரை ஒதுங்கியது மர்மமான உயிரினம் : விஞஞானிகள் ஆய்வு, பரபரப்பு

இது என்ன பிரமாதம்? சென்னையில் சில உயிருள்ள மர்ம உயிரினங்கள் அமைச்சரவையிலே இருந்து ஆள்கின்றன..