“சங்க மித்ரா”

Image may contain: one or more people and text

எங்கு திரும்பினாலும் “சங்க மித்ரா” படத்தின் செய்திகள் சுற்றுகின்றன‌

சுந்தர் சி இயக்குகின்றாராம், அரசர் கால படமாம். நிச்சயம் குஷ்பூவிற்கு ராஜமாதா பாத்திரம் இருக்கும், இருக்க வேண்டும்,

இல்லாவிட்டால் “சங்க மித்ரா” , “பங்க மித்திரா” ஆகிவிடும்

படம் பாகுபலிக்கு போட்டியாக இருக்கலாம் என்கின்றார் ஒருவர், அது படம் வந்தபின் சொல்லவேண்டிய விஷயம்

இப்பொழுது தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்க, “சுந்தர் .சி ” இயக்கும் “சங்க மித்திரா” என விளம்பரங்கள் வருகின்றன‌

மித்ரா என்றால் சூரியன் என்பார்கள், அதனால் விளம்பரங்களில் இப்படி சொல்லலாம்

“தங்க மித்ரா” கணவர் இயக்கும் “சங்க மித்ரா” என அழைக்க தொடங்கினால் படம் இப்பொழுதே பாதி வெற்றி

 

படத்தில் என்ன செய்கின்றார்கள் தெரிகின்றதா?

Image may contain: 1 person, sitting and screen

படத்தில் என்ன செய்கின்றார்கள் தெரிகின்றதா?

ரன்சம்வேர் வைரசிலிருந்து பாதுகாக்க ரஷ்ய உச்ச மதகுரு கம்பியூட்டர் சர்வர்களுக்கு எல்லாம் புனித நீர் தெளிக்கின்றாராம்

ரஷ்ய புரட்சிக்கு முன்பு இப்படித்தான் அங்கு நிலை இருந்தது, மத குருமார்கள் சட்டமே உச்சமாக இருந்தது, லெனினும் ஸ்டாலினும் அதனை தகர்த்துதான் 1917ல் கம்யூனிச ரஷ்யா அமைத்தார்கள்

தேவாலயம் எல்லாம் நூலகமாக, உணவகமாக மாற்றபட்டன, சாமியார்கள் எல்லாம் வேலைக்காரர் ஆக்கபட்டார்கள்.

விண்வெளி வரை சென்று தேடியும் கடவுளை காணவில்லை என்றார்கள் ரஷ்யர்கள்

அடுத்த 100 ஆண்டுகளுக்குள் எப்படி மறுபடியும் சாமியார்கள் கையில் ரஷ்யா சிக்கிகொண்டது பார்த்தீர்களா?

இதற்குத்தான் குருச்சேவ் சொன்னார், போப்பாண்டவரை கொன்றாவது கிறிஸ்துவத்தை ஒழிப்போம், இன்றும் தலாய்லாமாவினை ஜெயா வீட்டு வேலைக்காரனை தமிழக மர்ம கும்பல் துரத்துவது போல சீனா துரத்திகொண்டிருக்கும் காரணம் இதுவே

ஒரு நம்பிக்கை வருகின்றது

ஆனானபட்ட ரஷ்யாவே 100 ஆண்டுகளில் இப்படி மாறிவிட்ட பின், இந்த சீனா மாற எவ்வளவு காலமாகும், சும்மாவே அவர்களுக்கு பேய் பிசாசு பயம் ஜாஸ்தி, ஒருநாள் அந்த தேசமும் நிச்சயம் மதபிடிக்கு மாறும்

ஒரு விஷயம் புரிகின்றது, மோசமான வறுமையில் நாத்திகம் மலர்கின்றது, அதில் பொதுவுடமையும் வருகின்றது

ஆனால் , பின்னர் செழுமை வந்தபின் கடவுளும் வந்துவிடுகின்றார்., நாத்திகம் வெளியேறுகின்றது

ரஷ்ய திருப்பம் அதனைத்தான் சொல்கின்றது

எப்படியோ பாத்திமா நகரில் தேவமாதா சொன்ன காட்சி நிறைவேறிற்று…

 

அற்புத இசையின் மானிட வடிவம்

Image may contain: 2 people, people smiling, people standing and indoor

ஏர் ரகுமானின் அழகான மயக்கும் இசைக்கு உயிர்வந்து பூமியில் நடந்தால் எப்படி இருக்கும்?

குஷ்பூ போலத்தான் இருக்கும்..

அந்த அற்புத இசையின் மானிட வடிவம் , அந்த இசைகடவுளுடன் காட்சியளிக்கும் தருணம்..

 
 

“போலி முகமூடிகளையும், பொய்யான பிம்பங்களையும் கிழித்தெறிவது தவறென்றால் அந்த தவறை ஆயிரம் முறை செய்வோம்”

கலைஞரையும் காங்கிரசையும் மனம்போன போக்கில் இல்லாத பொய்களை சொல்லி விமர்சிப்பார்களாம்

ஆனால் புலிகள் பற்றிய இன்னொரு முகத்தினையும், பிரபாகரனையும் பற்றி சொல்லிவிட கூடாதாம்

ஒரு பெரும் நாட்டினை எதிரியாக பாவித்து, அந்நாடு உருவாக்கிய சக போராளிகளை எல்லாம் அழித்து, அந்நாட்டிற்கே தன் நாட்டு மக்களை அகதிகளாக அனுப்பிவிட்டு, அந்நாட்டின் 1500 வீரர்களை கொன்று,

உச்சமாக அந்நாட்டு பிரதமரையே கொன்றுவிட்டு, கேமரா முன்னால் இந்தியாவிற்கு நேசகரம் நீட்டுகின்றோம் என சிரித்துகொண்டே சொன்ன பிரபாகரனுக்கு, இன்னமும் தன்னை பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைக்கும் என நம்பிய பிரபாகரனுக்கு,

இந்தியா முன்னால் நாம் ஈழம் அமைத்து அதிபராவோம் என கொஞ்சமும் சந்தேகமின்றி நம்பிய பிரபாகரனுக்கு

இவ்வளவு நடந்தும் இந்தியா
முள்ளிவாய்க்காலில் வந்து காக்கும் என நம்பிய அவருக்கு அறிவு இருந்தால்தானே இவர்களுக்கும் இருக்கும்?

அவர்கள் பேசிகொண்டே இருப்பார்களாம் கலைஞர் தரப்பு கேட்டுகொண்டே இருக்கவேண்டுமாம்

ஆனால் நாம் பேசினால் அவர்களுக்கு கடும் கோபமும் ஆக்ரோஷமும் வருமாம்

புலிகளின் இந்தியா பற்றிய‌ எண்ணம் எப்படி இருந்தது?

“இந்தியா எங்களை மட்டும் ஆதரிக்கவேண்டும், வேறு யார் பக்கமும் செல்ல கூடாது

நாங்கள் விசா இன்றி எப்பொழுதும் இந்தியா வருவோம், தமிழகத்தில் யாரையும் கொல்வோம் இந்தியா கண்டுகொள்ள கூடாது

இந்தியாவின் தமிழகத்து ஈழ அகதிகள் எல்லாம் இந்தியாபாடு, எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை

இது தமிழருக்கான போராட்டம், ஆனால் மலையக தமிழர் எனும் தமிழக வம்சம் பற்றி எமக்கு கவலை இல்லை

நாங்கள் போராடுவோம், எங்களுக்கு கஷ்டம் என்றால் இந்தியா வந்து காப்பாற்றவேண்டும், மற்றபடி நாங்கள் ஜெயித்தால் அது வீரம்

சுருக்கமாக சொன்னால் எங்கள் வழிக்கு இந்தியா வரவே கூடாது, முடிந்தால் எங்களை சரிக்கு சமமாக நடத்தலாம்..ஆனால் எங்களுக்கு அவசியம் என்றால் இந்தியா வந்தே தீரவேண்டும்

சிங்களனை அடிப்போம் அவன் எம் மக்களை அடிப்பான், அப்பொழுது இந்தியா வரவேண்டும் காரணம் மக்கள் நடுவில் நாங்கள் இருப்போம்.

நாங்கள் செய்யும் எந்த கொலைகளையும் இந்தியா கண்டுகொள்ள கூடாது, நாங்கள் யாரையும் கொல்வோம், எப்பொழுதும் கொல்வோம்

அதற்காக கலைஞர் போன்றவர்கள் ஆட்சியிழந்தார்கள் என்றால் அது எங்களுக்கு கவலையே அல்ல, அவர் ஆட்சி எப்படி போனால் என்ன? நாங்கள் யாரையும் தமிழகத்தில் கொல்வோம், எங்களுக்கு தனி சலுகை வேண்டும்

ஆனால் ஈழத்தில் சிங்களன் எங்களை கொல்லவந்தால் கலைஞர் ராஜினாமா செய்யவேண்டும் , அப்படியும் முடியவில்லையென்றால் தூக்கில் தொங்கி எங்களை காப்பாற்ற வேண்டும்

பிரபாகரனின் உடன்பிறந்த‌ அண்ணன் , அக்கா எல்லோரும் கனடாவிலும் , லண்டனிலும் இருப்பார்கள், ஆனால் பிரபாகரனின் அன்னையினை கலைஞர்தான் சிகிச்சை அளித்து பாதுகாக்க வேண்டும்

சுருக்கமாக சொன்னால், இந்தியா எமக்கு வேலைக்காரன் போல இருக்கவேண்டும், இல்லாவிட்டால் ஏற்றுகொள்ள மாட்டோம்

கலைஞர் உட்பட எல்லா தமிழக அரசியல்வாதிகளும் எங்களுக்கு சொம்பு தூக்க வேண்டும்

இதுவே எங்கள் கட்டளை , எங்கள் கட்டளையே சாசனம், இந்த சாசனமே ஈழபோராட்டம்”

இந்த கொள்கையுடன் இருந்த ஒரு கும்பலுக்கு இந்தியாவின் தமிழக முதல்வர் என்ன செய்துவிட முடியும்??

இந்த குணத்துடன் தான் நார்வே தூதுகுழுவிடமும் புலிகள் இருந்தார்கள், அதுதான் அவர்களை உலகிலிருந்தே தனிமைபடுத்திற்று

“பிரபாகரன் எதனையும் யோசிக்க கூட விரும்பவில்லை, இந்த மனிதரிடம் என்ன பேச? உங்களுக்கு தெரிந்த பாஷையில் பேசுங்கள்..” என சிங்களனிடம் சொல்லிவிட்டு சென்றது நார்வே

எல்லோரையும் பகைத்த புலிகள், கேட்க ஆளின்றி மறைந்தார்கள்

உண்மை இப்படி இருக்க, கலைஞரை அவர்கள் விமர்சிப்பார்களாம், படு கேவலமாக பேசுவார்களாம்

ஆனால் இந்த ரத்த புனிதர்களைபற்றி யாரும் எதுவும் சொல்லிவிட கூடாதாம், குற்றமாம்

கலைஞர் சொன்ன சொல்தான் “போலி முகமூடிகளையும், பொய்யான பிம்பங்களையும் கிழித்தெறிவது தவறென்றால் அந்த தவறை ஆயிரம் முறை செய்வோம்”

ரஜினி அரசியலுக்கு ஆண்டவன் சொன்னால்தான் வருவார்

“ரஜினியிடம் எந்த பிரச்சினைக்குமே தீர்வு இல்லை, அமிதாப் பச்சன் போன்றே ரஜினி மண்டையிலும் ஒன்றுமில்லை..” : மார்கண்டேய கட்ஜூ

கட்ஜூ ஏன் இப்படி சொன்னார்?, ஏன் அமிதாப்பச்சனை மட்டும் சொல்லவேண்டும்?

எம்ஜிஆர், ஜெயா, அமிதாப், போன்றே ரஜினி மண்டையிலும் ஒன்றுமில்லை என சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

ஜெயாவினை பற்றி கட்ஜூ நிச்சயம் அப்படி சொல்லமாட்டார் என்பது நமக்கு தெரியும், கட்ஜின் மலரும் நினைவுகள் அப்படி

ஆனால் ராமசந்திரனை சேர்த்திருக்கலாம்..


என்னிடம் அரசியல் பற்றி ஏதும் பேசவேண்டாம், செய்தியாளர்களிடம் ரஜினி கோரிக்கை

ஆமாம், அவர் அரசியலுக்கு ஆண்டவன் சொன்னால்தான் வருவார், அப்படி செய்தியாளர்களும் ஆண்டவன் கேள்வி கேட்க சொன்னால்தான் கேட்க வேண்டும்

அது என்ன அந்த ஆண்டவன்?? , ரஜினியினை நடிக்க சொல்லியிருக்கின்றான், கோடி கோடியாக சம்பளம் வாங்க சொல்லியிருக்கின்றான், ஒரு பைசா குறைக்க சொல்லவில்லை

அழகு பெண்களுடன் ஆட சொல்லியிருக்கின்றான், இவருக்கு என்ன வயதானாலும் கதாநாயகிகள் மிக இளம்வயதினராக இருந்தே ஆகவேண்டும் என்று கட்டளை வேறு போட்டு தொலைத்துவிட்டான்

முன்பு சிகரெட்டும் தண்ணியும் அடித்து ஊத சொல்லியிருக்கின்றான்

ஏதும் பட நஷ்டம் என்றாலும் விநியோகிஸ்தர்களுக்கு ஒரு பைசா கொடுக்காதே என்றும் சொல்லிருக்கின்றான்..

ஆனால் அரசியலுக்கு வருவது பற்றி மட்டும் அவரிடம் சொல்லவே மாட்டேன் என்கின்றான்.

ஆனால் அடுத்த படம் வரும் முன் தவறாமல் இப்படி சில சந்திப்புகளை நடத்து , இப்படி ஆண்டவன் சொன்னால்தான் அரசியலுக்கு வருவேன் என சொல் என சொல்லிவிடுகின்றான்

ஆக செய்தியாளர்களே ஆண்டவன் உங்களிடம் வந்து அவரிடம் அரசியல் கேள்வி கேட்க சொல்லும் வரைக்கும் கேட்காதீர்கள்

(ஆனால் வீட்டுக்கு வந்த மோடியிடம் மட்டும் அரசியல் பேசுகின்றார் ரஜினி என்கின்றார்கள், ஒருவேளை அந்த ஆண்டவன் மோடியாக இருக்கலாமோ???..)

ஜெயலலிதான்னா சாயிஸ்தங்கே வேறே யார்னுனு சாயிஸ்சல்லா

சிறையில் இருக்கும் இளவரசி நோயுற்றதை அடுத்து அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற சொல்லியிருக்கின்றார் சசிகலா, ஆனால் சிறை நிர்வாகம் அங்குள்ள மருத்துவமனை சிகிச்சையே செய்திருக்கின்றது

மீறி வற்புறுத்தியிருக்கின்றார் சசிகலா, அதற்கு ஒரு அதிகாரியிடம் இருந்து பதில் இப்படி வந்ததாம்

“ஜெயலலிதான்னா சாயிஸ்தங்கே வேறே யார்னுனு சாயிஸ்சல்லா” என கன்னடத்தில் வந்ததாம்,

தமிழ்படுத்தினால் என்ன வரும்? இந்த மாதிரி வரும் என செய்திகள் சொல்கின்றன..

“ஜெயலலிதாவை கொன்றது மாதிரி யாரையும் நாங்க சாகடிக்க மாட்டோம்…”

அதற்கு மேலும் சசிகலா ஏதும் சொல்லியிருப்பார்?


கொசுறு

எடப்பாடி பழனிச்சாமி அரசு சார்பில் தேர்தலில் யார் நின்றாலும் டெபாசிட் இழப்பார்கள்: ஓபிஎஸ்

அவர்கள் மட்டுமா இழப்பார்கள்? அதிமுக என சொல்லி யார் நின்றாலும் அதுதான் கதி, இவருக்கும் சேர்த்துதான்…


புலிகள் எங்குமே முழு வெற்றி பெற்றவர்கள் அல்ல…

புலிகள் எங்குமே முழு வெற்றி பெற்றவர்கள் அல்ல, அவர்களின் சிறிய தாக்குதலையும் ஏதோ பெரும் அமெரிக்க தாக்குதல் போல சித்தரித்தவை தமிழக ஏடுகள், அங்கே சும்மா புலிகள் ஆயுதம் இல்லாதவனை சுட்டால் கூட, இங்கே பெரும் யுத்தம் இலங்கையில் நடந்தது போல எழுதுவார்கள்

அப்படித்தான் புலிகளின் செய்திகள் இருந்தன, தாக்குதல் வெற்றிக்கும், பெரும் போருக்கும் புலிகளுக்கும் வெகுதூரம், எல்லாம் ஊதிபெருக்கிய பிம்பம்

அன்றைய வடமராட்சியில் அவர்கள் கதை முடியும்பொழுதே ராஜிவ்காந்திதான் காத்தார்,

புலிகள் அப்படித்தான் சிங்களனை அடித்துவிட்டு ஓடுவார்கள், அல்லது மக்கள் நடுவில் அமர்வார்கள், சிங்களன் வந்து மொத்தமாக அப்பாவிகளை கொல்வான்,
இப்படித்தான் அவர்களின் வீரவிளையாட்டு பொதுவாக‌ இருந்தது

அவர்களின் ஒரே பலம் ஊதிபெரிதாக்கும் ஊடக செய்திகளும், ஆண்டன் பாலசிங்கத்தின் வாயும்

ஆனால் ஒரே ஒரு இடத்தில் புலிகள் முழுவெற்றி பெற்றார்கள், அது ஆனையிறவு தாக்குதல் , முக்கியமான வெற்றி அவர்களின் முந்தைய‌ 20 வருட போராட்டத்தில் அது ஒன்றுதான் உச்ச வெற்றி…

இலங்கையின் வரைபடத்தினை கவனித்தால் புரியும் யாழ்பாண பகுதிகளையும் இலங்கையினையும் இணைக்கும் நிலபரப்பது அதுவே, மிக முக்கியமான பகுதி, அங்கு இலங்கை ராணுவத்தின் முகாம் இருந்தது 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர்

கிட்டதட்ட 2 ஆயிரம் புலிகளை இழந்து அந்த முகாமினை புலிகள் பிடித்தனர், புலிகள் வாழ்வில் ஒரே வெற்றி

அந்த வெற்றியில் 50 ஆயிரம் சிங்களர்களை புலிகள் சிறைபிடித்தனர், அத்தோடு வடக்கில் இருந்து சிங்களம் வெளியேறிற்று,இனி ஈழக்கொடி ஏற்றவேண்டியதுதான் பாக்கி

அப்படியான நிலை, போரில் புலிகளுக்கு வெற்றிதான், ஆனால் அங்கீகரிப்பது யார்? ராஜதந்திரம் வேண்டும், புலிகளிடம் அது என்றைக்கு இருந்தது..

ஆனால் சிங்களம் ஆடியது, தன் நேசநாடுகளுக்கு தூது அனுப்பியது. எப்படி தூது அனுப்பும்? “எங்கள் உள்நாட்டில் குழப்பம் வந்து தீர்த்து வைப்பீர்..”

இப்படியான அழைப்பு இந்தியாவிற்கும் வந்தது, “நீங்கள் வருகின்றீர்களா அல்லது வேறுயாரையும் அழைக்கட்டுமா? பாகிஸ்தான் கூட தயார்தான்..”

ஆனால் ராஜிவ் கொலைக்கு பின் தயங்கி நின்ற இந்தியா, லேசாக எட்டிபார்த்தது, அப்பொழுது வாஜ்பாய்தான் பிரதமர்

ஈழம் அமைய அதுதான் வாய்ப்பு, அந்த சூழ்நிலை ஒன்றுதான் ஒரே வாய்ப்பு, ஆனால் நடந்ததென்ன?

புலிகளுக்கு இந்தியா சார்பில் ஓலை அனுப்பபட்டது, 50 ஆயிரம் சிங்கள வீரர்களை விடுவித்துவிட்டு , உங்கள் வழியில் செல்லவும் இல்லையென்றால் இந்தியா களமிரங்கும்

அவ்வளவுதான் கிட்டதட்ட 2 ஆயிரம் புலிகள் செத்து கிடைத்த ஒரே வெற்றியும் வீணானது

ஏன் அன்று வாஜ்பாய் அப்படி அறிவித்தார்? ஏன் ஈழம் அமைவதை தடுத்தார்கள்? சரி இந்தியா ஏன் தன் ராணுவத்தை அனுப்பி ஆனையிறவினை மீட்கவில்லை??

இந்தியா மிரட்டவில்லை என்றால் ஐ.நா பன்னாட்டு படை அங்கே வந்திருக்கும், பன்னாட்டு படை என்றால் அமெரிக்க படை என அர்த்தம்,

இந்தியா அதனைத்தான் தடுத்தது

பாலஸ்தீனம் போல ஈழபோராட்டம் சர்வதேச அரசியலை பெறவில்லை, ஒருவகையான ரவுடிச பேரம்பேசுதலாகவே உலகம் அதனை 1991க்கு பின் கண்டது..

ஆனால் இந்தியா ஈழத்தை விரும்புமோ இல்லையோ புலிகள் அழிவதை விரும்பாது, இது ஒரு அரசியல். பன்னீரை வைத்து டெல்லி ஆடுகின்றல்லவா அப்படி

ஈழம் அமைய ஒரே வாய்ப்பான அந்த ஆனையிறவு வெற்றி வீணாய் போனபொழுது வாஜ்பாய் அமைச்சரவையில் வைகோ இருந்தார், ஒரு வார்த்தை எதிர்த்திருப்பார்?

உண்மையில் அன்றுதான் தமிழகம் பொங்கியிருக்க வேண்டும், அன்றுதான் ஏன் புலிகள் பின்வாங்க வேண்டும்? என சீறியிருக்க வேண்டும் ஆனால் எல்லாம் அமைதி, வைகோ, திருமா,நெடுமாறன் எல்லாம் அமைதி

சீமான், வேல்முருகன், திருமுருகன் எல்லாம் அன்று எங்கிருந்தார்களோ தெரியாது, சீமான் பாஞ்சால்ங்குறிச்சி எடுத்துகொண்டிருந்தார்

ஆக அன்று ஈழம் அமைய தங்கள் வாழ்நாளின் உச்சபட்ட ஒரே வெற்றியினை புலிகள் பெற்றபொழுது ஈழம் அமையாமல் தடுத்தது பாஜக அரசு, அருகே இருந்தவர் வைகோ

அதனை எல்லாம் பற்றி ஒருவரும் பேசமாட்டார்கள், மாறாக ஈழத்தை அழித்தது கலைஞர், காங்கிரஸ் என கடும் ஒப்பாரிமட்டும் மறக்காமல் வைப்பார்கள்….

தன் நாட்டில் பெரும் படுகொலை புரிந்த ஒருவனை, இந்திய ராணுவத்தார் 1500 பேரை கொன்ற இயக்கத்தின் தலைவனை, ஒரு நாட்டின் அதிபராக இந்தியா அனுமதிக்குமா? ஒருகாலும் இல்லை

வாஜ்பாய் அதனைத்தான் செய்தார்,அன்று வாஜ்பாய் முன்னால் அமைதியாக இருந்த வைகோதான் பின்னாளில் குதியோ குதி என குதித்தார்..

இந்தியாவிற்கு எதிராக அவ்வளவு காரியங்களை செய்துவிட்டு இந்தியா தங்களை காக்கும் என்றோ, தங்களை அதிபர்களாக ஆளவிடும் என்றோ மனப்பால் குடித்தவர்களை என்ன சொல்லமுடியும்??

ஈழதமிழர் விவகாரத்தில் பலர் அள்ளிவிட்டனர்…

ஈழதமிழர் விவகாரத்தில் பலர் அள்ளிவிட்டனர், கடைசியில் வந்து கப்சா விட்டவர் ஜெகத் கஸ்பர் எனும் பாதிரி, சும்மா சொல்ல கூடாது , அவர்தான் சீமானுக்கு முன்னோடி

புலிகள் பற்றி அவர் அள்ளிவிட்ட கதைகள் ஏராளம்

அதாவது இவர் பிரபாகரனை பார்த்து நாள்கணக்காக பேசி ஒரே இலையில் உண்டு மகிழ்ந்தாராம்

ஒருநாள் பிரபாகரன் சொன்னாராம், “பாதர், 1983க்கு பின்னால இன்னைக்கு வரைக்கும் கொழும்பில, மற்ற இடத்தில‌
சிங்களன் தமிழரை அடிக்கையில்லை, ஏன் என்டால் புலியள் திருப்பி அடிக்கும்ங்க்ற பயம்

அந்த பயபயத்துலதான் பாதர், இந்த நாட்டிலே தமிழன் வாழமுடியுது, புலியள் இல்லண்ணா ஒரு நொடி கூட தமிழன விடமாட்டான்”

உடனே கஸ்பார், “பிதா சுதன் பரிசுத்தஆவி பெயராலே ஆமென், ஸோஸ்த்திரம் கர்த்தாவே ஸ்ஸோஸ்திரம் புலியள் இல்லாட்டி தமிழினம் அழிஞ்சி போயிரும் கர்த்தாவே” என நெற்றியில் சிலுவை போட்டாராம்

இன்றோடு புலிகள் அழிந்து 8 வருடம் ஆகின்றது, எங்காவது ஒரு கலவரம் இலங்கையில் நடந்திருக்கின்றதா?

ஒரு ஈழதமிழன் வலியோடு சொன்னது நிஜம்

“பிரபாகரன் பிறந்தான், அமைதியான நாட்டில் குண்டுகள் வெடிக்க தொடங்கின, அவன் இறந்ததும் மறுபடி நாடு அமைதியாயிற்று”

ஆக புலிகள் இல்லையென்றால் இலங்கை தமிழர் எல்லாம் அழிந்துவிடுவர் என்பதெல்லாம் தமிழக பொறுப்பற்றதரப்பினர் கட்டிவிட்ட கதைககளில் ஒன்று

சீமான், வைகோ, வேல்முருகன், திருமுருகன், திருமாவளவன் இந்த பாத(க)ர் எல்லாம் ஒரே வரிசை..

சீனா, ஐரோப்பாவை இணைக்கும் பட்டு சாலை

No automatic alt text available.

No automatic alt text available.

அக்காலமுதலே தன்னை உலகோடு தன்னை சாலை மூலம் இணைத்து கொள்ள துடித்த நாடு சீனா, பட்டும் தேயிலையிலும் ஐரோப்பா கொண்டு செல்ல பட்டு சாலையே அமைத்திருந்தது

அந்த சாலையின் சில பிரிவுகள் மூலம் அன்றே உலகெல்லாம் தொடர்புகொண்டிருந்தது சீனா, பின் உலகாண்ட மங்கோலியர்கள் அதனை செம்மைபடுத்தி டோல்கேட் எல்லாம் அமைத்து வசூலித்தார்கள்

மங்கோலியர் காலத்திற்கு பின் அடங்கி கிடந்த சைனா, மாவோ காலத்தில் விழித்துகொண்டு இப்பொழுது பழம் பெருமையினை மீட்க வல்லரசு கனவில் அலைகின்றது

உலகெல்லாம் சாலை, ரயில், துறைமுகம் என எல்லாமும் தங்கள் நாட்டோடு இணைக்கபடவேண்டுமென்று மிக பெரும் திட்டத்தில் இறங்கியிருக்கின்றது

கப்பல் வழியாக செல்லும் அடுத்த நாட்டு துறைமுகங்களுக்கு, தரை வழியாகவும் சாலையும், தண்டவாளமும் அமைக்க தீவிரமாகின்றது

ரஷ்யா வழியாக லண்டனுக்கு ஏற்கனவே 14 ஆயிரம் கிமீ தூர ரயில் பாதையினை பல நாடுகள் வழியே கட்டியாயிற்று, இப்பொழுது சாலையும் போடவேண்டுமாம்

கிழக்காசியாவில் கூடுமானவரை அவர்களின் கூட்டாளி நாடுகளுடன் சாலை, ரயில் என எல்லாவற்றையும் துறைமுகம் வரை இணைக்க கிளம்பிவிட்டது

நேபாளம், பாகிஸ்தான் வழியாக பாகிஸ்தானின் குவெட்டா துறைமுகதையும் தரை மார்க்கமாக இணைக்க கிளம்பி விட்டது, இன்றைய தேதியில் பாகிஸ்தானில் பாதி சீனாவிற்கு எனும் நிலை

ஏற்கனவே முத்துமாலை திட்டம் என துறைமுகங்களை எல்லாம் இணைத்து சங்கிலி தொடர் அமைத்த சீனா, இப்பொழுது தரைமார்க்கமாகவும் அந்த துறைமுகங்களை கட்டுபடுத்துகின்றது

இந்த இணைப்பில் சில ஆப்ரிக்க நாடுகளும் உண்டு

ஏன் இவ்வளவு ஆர்வம்? இரண்டுவிஷயம் பிரதானம்

முதலாவது வியாபாரம் நொடிபொழுதில் பொருள்களை வாங்க விற்க செய்யலாம், எந்த துறைமுகத்திலும் விற்கலாம், எந்த துறைமுகத்திலிருந்தும் சீனாவிற்கு ஏற்றிவிடலாம்

கண்டெயினர், லாரி, கப்பல் என எல்லா வகையிலும் சரக்கு செல்லும்

இரண்டாவது லாபம் ராணுவ அணுகூலம், படை அனுப்பவோ அல்லது மிரட்டவோ பெரும் வேகத்தோடு செல்லலாம்

பாகிஸ்தானோடு சேர்த்து கிட்டதட்ட 60 நாடுகளை இந்த திட்டத்தில் சேர்த்திருக்கின்றது, ஒரு வகையில் உலகை மிரட்டுகின்றது சீனா

ஒன் பெல்ட் ஒன் ரோடு எனும் அந்த திட்டம் பெரும் தொலைநோக்கோடு செய்யபட்டிருக்கின்றது,

ஆசியாவில் நாங்கள்தான் தாதா என்பதை இந்த ஆக்டோபஸ் கரங்கள் போன்ற அமைப்பில் பல பிடிகளை ஏற்படுத்தி உலகிற்கு சொல்ல முனைகின்றது சீனா

இந்த புதிய பட்டு சாலைதான் இன்றைய உலகில் பெரும் கவனம் பெற்றுவருகின்றது

படம் இன்னும் நன்றாக அந்த திட்டத்த்தினை விளக்கும், இதில் இலங்கை மிக முக்கிய இடத்தில் வருகின்றதல்லவா?, சிங்கள பலம் அதுதான்.

(இதில்தான் இந்தியா சிந்திக்கின்றது இணையம் எனும் துறைமுகத்தை எழுப்பிவிட்டால் கொழும்பு எனும் கண்ணியினை இந்த சங்கிலியிலிருந்து தூக்கிவிடலாம் )

அது இருக்கட்டும்

இப்படி சீனா உலகை எப்படி வளைக்கலாம் என சிந்தித்துகொண்டிருக்க , பாஜகவின் மத்திய அரசோ தமிழகத்தை எப்படி வளைக்கலாம் என மகா தீவிர திட்டம் தீட்டிகொண்டிருக்கின்றது

அதன் பெரிய கவலை இப்பொழுது அதுதான். அது ஒன்றுதான்

இந்தியா திரும்புகின்றார் குஷ்பூ

Image may contain: 1 person, close-up

இந்தியா திரும்புகின்றார் குஷ்பூ

திருவிழா முடிந்த ஊராக களை இழந்தது இத்தாலி, ஒரு வெறுமை வந்தாயிற்று

இத்தாலியும், பிரான்சும் இனி இயல்பு நிலைக்கு திரும்ப கொஞ்சகாலம் ஆகும் , அங்கு கடந்து சென்றிருக்கும் அழகிய வானவில்லின் தாக்கம் அப்படி..

// நயன் தாராவும் வெளிநாடு சென்றிருக்கின்றாராம், ஆனால் பாவம் ஏதும் அகதியோ என வெளிநாட்டவர்கள் பரிதாப பார்வை பார்ப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன‌,

நண்பர் Babu Rao தலையில் துண்டு போட்டு அழும் நேரமிது, Chandran Kannanக்கு இனி உணவு உள்ளே போகாது//