“வருங்கால முதல்வரே” என ரஜினிக்கு போயஸ் கார்டனில் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு

top_3_3167769g.jpg

“வருங்கால முதல்வரே” என ரஜினிக்கு போயஸ் கார்டனில் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு

இதிலென்ன பரபரப்பு? அடிக்கடி இப்படி நோட்டீஸ்களை தமிழகம் கண்டிருக்கின்றது

ஆனால் முதல்வர் என்ன? எங்கள் பிரதமரே, குடியரசு தலைவரே என்றெல்லாம் நோட்டீஸ் அடித்தாலும் நெளிந்து கொடுக்கின்ற ரகமா ரஜினி? நெவர்

அந்த பாபாவே நீங்கள்தான் என்றாலும் அவர் அசரமாட்டார்

பின் என்ன செய்யலாம்

குஷ்பூ ரசிகர் மன்றம் சார்பாக, “வருங்கால கவுண்சிலரே” , “வருங்கால பஞ்சாயத்து தலைவா”, “வருங்கால நகரசுத்த தொழிலாளி””வருங்கால கொசுமருந்து” என நோட்டீஸ் ஒட்டலாம் என ஆலோசனை நடக்கின்றது

அப்படியாவது மனிதர் ரோஷத்தில் அரசியலுக்கு வருவாரா பார்க்கலாம்…

 

 

ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்தபின் சீமான் முழக்கம்

Image may contain: 2 people, people smiling, glasses and close-up

ஆதித்தனாரின் கனவுகளை நிறைவேற்ற உறுதியேற்போம், ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்தபின் சீமான் முழக்கம்

தந்திடிவிக்கு விசுவாசமாக இப்படி ஆதித்தனார் சிலைக்கு மாலை கூட போடாவிட்டால் எப்படி?

ஆதித்தனார் கனவு என்ன? கொள்கை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும், அவரின் முடிவு என்ன?

“நாம் தமிழர்” கட்சியினை திமுகவோடு சேர்த்து திமுகவின் அமைச்சரவையில் சபாநாயகர் ஆனார்

ஓஹோ..அந்த திமுக அரசின் சபாநாயகர் பதவிக்கா கனவு காணுகின்றீர் ஐயா?? நிச்சயம் நிறைவேறும்…

தினதந்தி நடத்தியவரே திமுகவில் சங்கமித்தார் என்பதால் தினப்பொய் நடத்துபவன் எல்லாம் வர முடியுமா?

எதற்கும் திமுகவினர் கவனமாக இருப்பது நல்லது,

இந்த எளிய தமிழ்பிள்ளை “நாம் தமிழர்”, “”தந்தி டிவி” , “ஆதித்தனார்” என திட்டமிட்டுத்தான் ஆதித்தனார் போலவே திமுக சபாநாயகர் பதவிக்கு குறி வைத்திருக்கின்றது


பாஜக, காங், திமுக, அதிமுக, பெரியாரிஸ்டுகள் என அனைவரும் “சீமான் எதிர்ப்பு” என்ற ஒற்றைப் புள்ளியில் இணைகின்றார்கள் : அங்கிளின் மங்கிகள்

ஆமாம் அய்யா, இப்படித்தான் முன்பு அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, ஈரான், இந்தியா,பாகிஸ்தான் எல்லாம் சேர்ந்து பிரபாரன் மண்டையில் போட்டது

அப்படி இந்த பாஜக,காங், திமுக, அதிமுக, பெரியாரிஸ்டுகள், மதவாதிகள், சாதி தலைவர்கள், கம்யூனிஸ்டுகள், தெலுங்கர், தமிழர், கன்னடர், மராட்டியர், மலையாளி எல்லாம் சேர்வதும் சீமானை பிடித்து வாயில் சயனடை கொடுக்கத்தான் போகின்றார்கள்

எதிரிகள் எல்லாம் அடிக்க‌ ஒன்றாகும் அளவிற்கு கூடிவிட்டார்கள் என்பதை கூட புரிந்துகொள்ளாமல் இப்படி சாதனை போல சொல்லிகொண்டிருக்கும் இந்த அபலைகளை வைத்துகொண்டு ……..

அந்த சீமானுக்கு கனவு வேறு


 
 

ரஜினி, குஷ்பு : பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்…

Image may contain: 3 people

ரஜினிக்கு பாதுகாப்ப்உ கேட்ட டிஜிபி அலுவலகத்தில் இந்து அமைப்புக்கள் மனு

முன்பு குஷ்பூவிற்கும் ரஜினிக்கு போன்றே அமைப்புக்களால் கடுமையான அச்சுறுத்தல் இருந்தது, ஒரு பாதுகாப்பும் அளிக்கபடவில்லை, வற்புறுத்தியும் வழங்கபடவில்லை

அச்சுறுத்தல், வீட்டில் கல் எறிதல் என கடும் அராஜகம் நடந்த பொழுதும் பாதுகாப்பு கொடுக்கபடவில்லை

இப்பொழுது ரஜினிக்கு மட்டும் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்கின்றார்கள்

ரஜினி இதுவரை எந்த அரசியல் பொறுப்பிலும் இல்லை ஆனால் குஷ்பூ காங்கிரஸ் பேரியக்கத்தின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் என்பது கவனத்திற்குரியது

ரஜினி மக்கள் அபிமானம் கொண்டவர் என்றால், அவரை விட பல மடங்கு மக்கள் அபிமானமிக்கவர் குஷ்பூ

ரஜினிக்கு பாதுகாப்பு கொடுக்கும் முன், அவருக்கு முன்பே மிரட்டபட்ட குஷ்பூவிற்கும் பாதுகாப்பு கொடுக்கபட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்…


Image may contain: 2 people, people sitting and indoor
 மிஸ்டர் ரஜினி

இந்த சைமன், வீரலட்சுமி, பாரதிராஜா எல்லாம் குஷ்பூவிடம் மோதிவிட்டு பின்வாங்கிய கும்பல்தான்

முடிந்தமட்டும் அவரை மிரட்டி பார்த்தார்கள், விரட்ட பார்த்தார்கள் ஆனால் முடியவில்லை, குஷ்பூவின் தைரியம் முன் தோற்றார்கள்

அவர் திமுகவில் இருந்தபொழுதும் மிரட்டல்கள் பல வடிவில் வந்தன, உட்கட்சி தகறாறும் உண்டு

ஆனாலும் அவரை அசைக்க முடியவில்லை , நான் இந்திய குடிமகள் என மிக தைரியமாக, “நானும் தமிழச்சி” என மிக கம்பீரமாக நின்று சாதித்து இன்று அகில இந்திய கட்சியின் செய்தி தொடர்பாளராகிவிட்டார்.

அவரை இனி இவர்கள் என்ன செய்துவிட முடியும்? நெருங்கி பார்க்க முடியுமா?

உங்களுக்கு முன் இருக்கும் மிரட்டல்களை எல்லாம் கடந்து வர, தமிழகத்தில் மிகபெரிய உதாரணம் அந்த குஷ்பூ

அவரை வழிகாட்டியாக கொள்வீரானால் உங்கள் அரசியல் வாழ்வு நிச்சயம் ஜொலிக்கும்


 
 

ஏழு அரசியல் காமெடி துணுக்ஸ்….

அரசுக்கு தேவையில்லாத செலவு ஏற்படுவதால், வைகோ சொந்த ஜாமீனிலேயே போகலாம்..

ஒரு தேச துரோக இந்திய சட்டத்தை மதிக்காத இவரின் வழக்கறிஞர் பட்டத்தை பறித்திருக்க வேண்டும், ஆனால் இப்படி தலையினை தட்டி சொல்லி அனுப்பியிருக்கின்றார்கள் என்றால், என்ன அர்த்தம்??

ஏதோ சிரிப்பு வக்கீல் என்று அர்த்தம்..

கோவாலு.. உன்னையும் நம்பி ஒருத்தன் ஒரு பெரும் கொலையும் செய்து, விடுதலை போராட்டம் நடத்தினான் பாரு, அவன் எப்படி உருப்படுவான்? அப்படித்தான் சாவான்


தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளது: சீமான் காட்டம்

என்னய்யா நீ? என்ன பிரச்சினை உமக்கு? தமிழன் முதல்வராக வேண்டும் என்கின்றீர், அப்படி ஒரு தமிழன் வந்தால் ஆட்சி அடமானம் என்கின்றீர்

அடிக்கடி இனமானம் இனமானம் என கத்துவீர் அல்லவா? எங்கே படைதிரட்டி இந்த அடமானத்தை மீட்டுவிடும் பார்க்கலாம்

கச்சதீவினை மீட்க 50 ஆயிரம் பேரை அனுப்புவேன் என்றவர்தானே? 5 ஆயிரம் பேரை அனுப்பி இந்த அடமானத்தை மீட்டுவிட வேண்டியதானே சைமன்..


ரஜினி அரசியலுக்கு வருவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ

சிறைபறவை சின்னமாவினையும், திகார் தினகரனையும், மக்கள் ஏற்றுகொள்வார்களாம்,

ஆனால் ரஜினியினை ஏற்றுகொள்ள மாட்டார்களாம்,

ஒருவேளை ஊழல் குற்றசாட்டு, மோசடி குற்றசாட்டு, கொலை வழக்கு, சிறைவாசம் இப்படி எந்த தகுதியும் இல்லாத ரஜினியினை மக்கள் எப்படி ஏற்பார்கள் என்ற அர்த்ததில் சொல்லியிருப்பாரோ?

மிஸ்டர் செல்லூர் ராஜூ, ரஜினி மேடையில் இருந்த பாபா முத்திரை தெர்மாகோலில் செய்ததுதானே?


அண்ணாவுக்கு பிறகு கலைஞரை எம்.ஜி.ஆர் முதல்வராக்கினார் நெடுஞ்செழியன் வந்துருந்தா நல்லா இருக்கும்:- சீமான்

அந்த செபாஸ்டியனும் அன்னம்மாளும் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் , குழந்தை பெற்றுகொள்ளமால் இருந்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும்


 

தமிழக அரசு புயல் வேகத்தில் செயல்படுகிறது: அமைச்சர் ஜெயக்குமார்

எதில் புயல் வேகம்? மோடியினை ஓடி ஓடி சந்திப்பதிலா?

அல்லது பெங்களூருக்கும் திகாருக்கும் மாற்றி மாற்றி ஆளனுப்பவதிலா?


 

தமிழரை சிந்திக்க வைகின்றார், தமிழத்தின் சாக்ரடீஸ் சீமான் : மங்கி குரூப்ஸ்

அந்த கிறுக்குதனத்தின் பெயர் சிந்தனையா? இருக்கட்டும்

சரி, விஷம் கொடுத்து நீங்களே கொல்கின்றீர்களா? இல்லை நாங்கள் கொடுக்கட்டுமா?


சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன் : எடப்பாடி பழனிசாமி

அப்படியே ஜெயா தீர்ப்பு எழுதிய அந்த உச்ச நீதிமன்ற நீதிபதியினையும் படதிறப்புக்கு அழைத்தால் என்ன?


 
 

கலைஞருக்கான காலமும் கிட்டதட்ட முடிந்துவிட்டது

Image may contain: 4 people, people standing

ஆண்டவனோ, இயற்கையோ எல்லோருக்கும் குறிப்பிட்ட காலத்தைத்தான் கொடுக்கும், அதனை மீற யாராலும் முடியாது, யாராக இருந்தாலும் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.

கலைஞருக்கான காலமும் கிட்டதட்ட முடிந்துவிட்டது, என்று அவரின் எழுத்து வரவில்லையோ அன்றே உலகிற்கு தெரிந்த விஷயம் அது, தன் சுண்டுவிரல் அசைக்க முடிந்தாலும் எழுதுகின்ற வகை அவர்

இந்த புகைபடத்தினை ஏறெடுத்து பார்க்க முடியவில்லை, வழக்கமான கலைஞரின் முகம் இது அல்ல, அவரை ஏன் இப்படி எல்லாம் இம்சைபடுத்த வேண்டும்?

அம்மனிதன் ஏறாத மேடையோ அவரை கொண்டாடாத, பாராட்டாத தலைவர்களோ இல்லை, இனியும் அவரை பாராட்டிகொண்டிருக்க என்ன இருக்கின்றது?

திமுகவிற்கு இனியும் அவர் செய்ய என்ன இருக்கின்றது? அல்லது திமுக அவருக்கு செய்ய என்ன மீதி இருக்கின்றது?

திமுகவினர் ஏதும் கலைஞருக்கு செய்ய விரும்பினால் இப்படி விழா நடத்தி அவரை இம்சிக்காமல் இருந்தால் போதும்

அரசியல் செய்ய ஆயிரம் வாய்ப்பு களத்தில் இருக்கின்றது இதில் அவரை வைத்துத்தான் செய்ய அவசியமில்லை

படத்தினை பார்க்கும்பொழுது , விஸ்வரூபம் காட்டிய புயலொன்று கரை கடந்து சென்றுவிட்டதை போன்ற உணர்வு வருகின்றது,

ஆம் கடந்துவிட்டது, இனியும் சொல்ல ஒன்றுமில்லை,

கலைஞரை ரசிப்பவர்கள், உண்மையான திமுகவினர் இதனை வரவேற்க மாட்டார்கள், தளபதி என கூச்சலிடும் சிலருக்கு இது பிடிக்கலாம் அல்லது நடிக்கலாம்

சிங்கம் போல வந்தவரை இப்படி சிலையாக காண யாருக்கு சகிக்கும்?

தமிழிசை கவனிக்கவும், கலைஞரின் வைரவிழாவிற்கு கலைஞரையே இப்பொழுதுதான் அழைத்திருக்கின்றார்கள்.. இதில் நீங்கள் வேறு கோபபடுகின்றீர்கள்

 

 

என்றோ எழுதியது, இன்றும் சீமான், பாரதிராஜாவிற்கு பொருந்துகின்றது

என்றோ எழுதியது, இன்றும் சீமான், பாரதிராஜாவிற்கு பொருந்துகின்றது, ரஜினி ரசிகர்கள் இருப்பின் கவனத்தில் கொள்ளலாம்,

எப்பொழுதோ எழுதியது எப்பொழுதும் இந்த கும்பலின் அழிச்சாட்டியத்திற்கு பொருந்துகின்றது, அவர்கள் அப்படித்தான்

அதாகபட்டது, இது தமிழ்நாடு தமிழன் முதல்வராகவேண்டும், மற்ற இனம் எல்லாம் வாழட்டும் தமிழன் ஆளட்டும் என்பது சீமானின் தற்போதைய கொள்கை, இதற்கு சில சீடர்கள் சரி

ஆனால் சிங்களனும் இலங்கையில் அதனைத்தான் சொன்னான், இது சிங்கள பூமி, மலையக தமிழன்,ஈழ தமிழன், மூர்ஸ் எனப்படும் இஸ்லாமிய தமிழன் என எல்லோரும் வாழட்டும் நாங்கள் தான் ஆள்வோம், இது சிங்களர் கொள்கை,

அனாரிக தர்மபாலா அதனைத்தான் சொன்னான், ஜெயவர்த்தனே ராஜ்விடம் இதனைத்தான் சொன்னான். ராஜபக்சே நார்வே தூதரிடம் சொன்னான் இதோ மைத்ரிபாலா சொல்கிறார், “புலிகள் இல்லை என்பதற்காக எல்லா தமிழகர்களையும் அழித்தா விட்டோம்?, இல்லை அவர்களும் வாழட்டும்”

இவர்களுக்கும் சீமானுக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு வாதத்திற்கு வைத்தாலும் கூட‌ ராவணனை ராமன் அடியோடு அழித்தானா? அல்ல விபீஷ்ணனை அரசனாக்கித்தான் வைத்தான், அப்படியானால் இப்போது வாழ்வெதெல்லாம் கோழையான, ஈன, காலில் விழுந்த‌துரோகி வம்சமா?

பிரபாகரனும் பொட்டுவும் துரோகி,கோழையான, ஈன, காலில் விழுந்த‌ வம்சமா? அதனையா கொண்டாடுகின்றீர்கள் சீ..சீ

சிங்களன் வந்தேறி என்றால் இன்று 80% அவன் இனம், 13% ஈழதமிழன், 5% மலையக தமிழன், 2% அனாதை தமிழ் இஸ்லாம், இதில் எப்படி 13% மக்களுக்கு தனிநாடு கொடுப்பார்கள்? ஒட்டுமொத்த ஐரோப்பிய ஈழத்தவரும் இலங்கையில் குடியேறி மக்கள் தொகையினை உயர்த்தி காட்டலாம் அல்லவா? செய்வார்களா? செய்வார்களா? ஐரோப்பிய குடியுரிமை துறப்பார்களா?

இலங்கையில் இருப்பவர்களில் மலையகத்திற்கும் ஈழத்தவருக்கும் ஆகாது, ஈழத்தவருக்கும் இஸ்லாமிய தமிழகருக்கும் ஆகாது, இன்னும் ஏராளம்.

சரி அவன் வந்தேறி சிங்ளனாக இருந்து தொலையட்டும்,

அப்படியானால் நாம் தமிழர் கொண்டாடும் சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ யார்? சிங்கப்பூரின் வந்தேறி அல்லவா? மலேசியன் அல்லவா சிஙகப்பூரினை ஆண்டு சொர்க்கமாக்கி இருக்கவேண்டும், வந்தேறி லீ வினை நீங்கள் புகழ்வதேன்.

உங்கள் வழிகாட்டி ஹிட்லர் என்ன ஜெர்மனியில் பிறந்தவனா? ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனிக்கு வந்த வந்தேறி அல்லவா?

அமெரிக்கர்கள் என்ற வந்தேறியிடம் இவர்கள் போர்குற்ற விசாரணைக்கு முறையிடுவதேன்? ஒரு மண்ணின் மைந்தனான மிசவுரி ஆற்றங்கரையில் மீன் பிடிக்கும் செவ்விந்தியனிடமல்லவா முறையிடவேண்டும், போர் குற்ற விசாரணைக்கு ஐநா அதிகாரியாக வந்த நவநீதம் பிள்ளை யார்? தென்னாப்பிரிக்காவின் வந்தேறி அல்லவா?

நீங்கள் நாங்கள் ஆளட்டும் மற்றவன் வாழட்டுமென்ற சிங்களனின் தத்துவத்தை பின்பற்றுகின்றீர்கள், ஆனால் பிரபாகரனை ஆதரிக்கின்றீர்கள்.

அப்படியே இங்குள்ள தெலுங்கு மக்களை வந்தேறி என்கின்றீர்கள் ஆனால் உலகெல்லாம் உள்ள வந்தேறி தலைவர்களை வழிபடுகின்றீர்கள்.

ரஜினியினை அனுமதிக்க முடியாது என்கின்றீர்கள், ஆனால் சிங்கப்பூர் லீ குவான் யூவினை கொண்டாடுகின்றீர்கள்.

தமிழகம் தமிழருக்கு என்கின்றீர்கள், ஆனால் மும்பையில் நாம் தமிழர் கட்சி நடத்துகின்றீர்கள்..

இதற்கு மேலும் கேட்டால் கலைஞர்,ஜெயலலிதா மாற்று சீமான் தான் என்பீர்கள். இப்பொழுது ரஜினி வந்தாலும் அலறுகின்றீர்கள்

அப்படி அண்ணனுக்கு முதல்வராக் ஆசை என்பதை நேரடியாக சொல்லலாம் அல்லவா? இதற்கு ஏன் ஆயிரம் வந்தேறி, இன துவேஷம், ஆயிரம் கத்தல்கள்?

ரஜினி சென்னைக்கு வந்தேறி என்றால், பாரதி ராஜாவும் சீமானும் சென்னைக்கு யார்? பூர்வகுடி மக்களா? வந்தேறிகள் தான். ரஜினி வந்தேறி என்றால் நீங்களும் வந்தேறியே..

எல்லா மக்களையும் அரவணைத்து ஒரு மாற்றம் கொடுக்கமுடியாதா? தமிழன், தெலுங்கன், கன்னடன் என பேசி வன்மம் வளர்த்துதான் செய்வீர்களா? இது நல்ல பலனை கொடுக்கும் என நினைக்கின்றீர்கள்?

ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனிக்கு வந்து பெரும் உலக அழிவினை காட்டினானே ஹிட்லர், அப்படி பெரும் அழிவினை அன்றி உங்கள் புலம்பல் ஒருவருக்கும் நல் வாழ்வினை கொடுக்கபோவதில்லை, பிரபாகரனும் ஹிட்லரும், வீரப்பனும் காட்டிய வழி அப்படி.

உண்மையில் தமிழகத்தின் முதல் வந்தேறி யார் தெரியுமா?

அந்நிய நாடான திபெத் பகுதியில் ஒரு குடும்ப சண்டையில், ஒரு பழத்திற்காக சண்டையிட்டு உடை கூட உடுத்தாமல் கோபித்து தமிழகம் வந்து தென்பகுதி பழநியில் கோமணத்தோடு நின்ற முப்பாட்டன் முருகன், அவன் தான் முதல் வந்தேறி. அந்த வந்தேறிக்கா ஊர்தோறும் ஆலயம அமைக்கபோகின்றீர்கள்? சீ சீ, இதுதான் மானமா?

பின் அதே இயமலையிலிருந்து தமிழகம் வந்து தமிழ்வளர்த்தானே அகத்தியன், அவன் இரண்டாம் வந்தேறி.

ஒரு வந்தேறியா தமிழ் வளர்த்தான்?, தமிழுக்கு இலக்கணம் எழுதினான்? நீங்கள் எல்லாம் அந்நிய பாஷயா பேசிகொண்டிருக்கின்றீர்கள்? அட சீ..என்ன மானங்கெட்ட இனம் இது?

இதனை நீங்கள் மறுக்க முடியுமா? ஏற்றுகொண்டு அகத்தியனின் தமிழை விரட்டுவீர்களா? அகத்தியனுக்கு முன்பிருந்த மொழியினை கொண்டு வருவீர்களா?

மானமுள்ளவர்கள் என்றால் அதனை செய்யுங்கள்

அதனை செய்துவிட்டு ரஜினி வரகூடாது என சொல்லுங்கள்.

வாக்கு வங்கிகாக பிந்த்ரன் வாலேயினை வளர்த்துவிட்டு…

வாக்கு வங்கிகாக பிந்த்ரன் வாலேயினை வளர்த்துவிட்டு பஞ்சாபில் பேரழிவினை ஏற்படுத்தி அதனால் செத்தும் போனார் இந்திரா

அவர் செய்த மாபெரும் தவறு அது, அடுத்த தவறு ஈழத்தில் செய்தது, பாம்புகளுக்கு பால்வார்த்தது நிச்சயமாக சீக்கியரிடம் தப்பியிருந்தால் ஒரு ஈழத்தவரால் இந்திரா கொல்லபட்டிருப்பார்

பின் அது அவர் மகன் தலையில் விடிந்தது, பிரபாகரனுக்கு முன்பே ராஜிவினை குடும்பத்தோடு கொல்ல தேடியவர் உமா மகேஸ்வரன் எனும் ஈழபோராளி

பஞ்சாப் போல ரத்த ஆறு ஓடியிருக்க வேண்டிய தமிழகம் மக்களின் தேசிய உணர்வால் தப்பித்தது

ஈழபேரழிவிற்கு உளவுதுறையின் தோல்வியும் ஒரு காரணம், இந்திய உளவுதுறையினை தந்திரமாக ஏமாற்றி, அதே பாணியில் அமெரிக்க உளவுதுறையிடம் விளையாடி வாங்கி கட்டி அழிந்தனர் புலிகள்

இப்பொழுதும் இந்திய உளவுதுறை திருந்தியதாக தெரியவில்லை, இலங்கையிடம் மேஜையில் பேச தமிழகத்தில் சில ஈழகுரல்கள் இருக்கவேண்டும் என சில காரியங்களை செய்வது தெரிகின்றது

இல்லையென்றால் இந்த திருமுருகன் முதல் சீமான் வரை இப்படி பேசமுடியாது, யாசின் மாலிக்குடன் எல்லாம் சீமான் கைகோர்க்கும் தைரியம் வராது, இன்னும் மிக கடுமையாக சிலர் பேசும் நிலையும், இன்னும் பல விபரீத முழக்கங்களும் வந்திருக்காது

முன்பு அண்ணா காலத்தில் திராவிட நாடு என்பதற்காக உங்களை தடைசெய்வோம் என மிரட்டிய டெல்லி , இந்த கும்பலை எல்லாம் விட்டு வைத்திருக்கும் ரகசியம் என்ன?

மத்திய அரசு உளவுதுறையினை கட்டுபடுத்தி இவர்களை எல்லாம் இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும்

சில அந்நிய நாட்டுவிவகாரங்களுக்காக இவர்களை வளர்த்துவிட நினைத்தால் என்னாகும் என்பதற்கு பஞ்சாபும் பொற்கோயிலும் இந்திராவு ஈழமும் ராஜிவும் இன்னும் பல விஷயங்களும் நினைவுக்கு வரும்

சில விஷ்யங்களை சோதித்து பார்க்க கூடாது, இந்திரா அப்படி செய்துவிட்டார், அமெரிக்காவும் பின்லேடன் விஷயத்தில் செய்தது

செய்ய கூடா காரியங்களை செய்தால் விளைவுகள் மிக கடுமையாக இருக்கும்

அந்நிய சக்தி அல்லது உளவுதுறை தூண்டுதல் இல்லாமல் எவனும் தைரியமாக பிரிவினை பேசமாட்டான் என்பது அரசியல் உலகின் பாலபாடம், யாருக்கும் புரியாதது அல்ல‌

முளையிலே இவர்களை அடக்கி வைப்பது தேச ஒருமைபாட்டிற்கும் அமைதிக்கும் நல்லது

உள்துறை அமைச்சகம் உருப்படியாக இருக்குமானால் உளவுதுறைகளின் பேச்சை கேட்காமல் இவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையினை செய்யட்டும்

வீழ்ந்துவிடா வீரம், மண்டியிடா மானம்

சிங்கப்பூர் மலேசிய மக்களுக்கான மண், அங்கு குடியேறி வந்த சீன வம்சம் தான் லீ குவான் யூ

சிங்கப்பூரை சிங்கப்பூர் குடிமகன் தான் ஆளவேண்டும் என்றால் சிங்கப்பூர் இன்று இந்தோனேசியா போலத்தான் இருந்திருக்கும்

முன்பு சீமான் தூக்கிபிடித்த சே குவாரா அர்ஜெண்டினாகாரர், ஆனால் கொண்டாடபட்டது கியூபாவில்

ஏராளமான தீவுகளை கொண்ட கியூபாவின் ஒரு தீவினை சேர்ந்தவர்தான் காஸ்ட்ரோ

அமெரிக்காவினை அமெரிக்கன் ஆளவேண்டும் என்றால் அது இன்று செவ்விந்தியன் கையில்தான் இருக்கும், இவ்வளவு வளர்ந்திருக்காது

ஆனானபட்ட ஹிட்லரே ஆஸ்திரியாவில்தான் பிறந்தார், கலிபோர்னிய கவர்ணராக இருந்த ஆர்னால்ட் ஆஸ்திரிய‌ பிறப்பு, ஏன் எம்ஜிஆரே மலையக இலங்கையில்தான் பிறந்தார்

உலகம் முழுக்க ஏராள விஷயங்களை காட்ட முடியும்,

இன்று மராட்டியன் ரஜினி என எதிர்க்கும் சீமான், இனி மும்பையில் நான் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரிப்பு என செல்ல முடியும்? அங்கு நாம் தமிழர் கட்சிக்கு … வேலையா?

கோலாரில் நாம் தமிழர் கட்சிக்கு எதற்கு கிளை?

லண்டனிலும் நார்வேயிலும் ஈழதமிழர் தேர்தலில் வென்றால் இவர்கள் இங்கு வெற்றிமுரசு கொட்டுவது ஏன்?

ஈழதமிழன் ஐரோப்பிய நாடுகளில், கனடாவில் தேர்தலில் நிற்கலாம், மன்றம் செல்லலாம் ஆனால் ரஜினி தமிழக அரசியலுக்கு வர கூடாதா? என்ன நியாயம் இது?

யாரும் எங்கும் அரசியலுக்கு வரலாம், ஏற்றுகொள்வது மக்கள் விருப்பம், அவர்கள் பார்த்துகொள்ளட்டும்

எளிய தமிழ்பிள்ளைகளின், புரட்சி படை வீரமிக்க தமிழ்கூட்டம் ஒரு நடிகனை பார்த்தா அஞ்ச வேண்டும்”

“வா வந்து பார் மோதுவோம் ..” என்பது சவாலா? அல்லது “நீ வரவே கூடாது நான் தனியாக விளையாடி வீரம் காட்டுவேன்..” என்பது சவாலா?

அது கோமாளித்தனம் அல்லவா? அதனைத்தான் சீமானும் பாரதிராஜாவும் செய்கின்றார்கள்

ஈழத்தில் பிரபாகரன் அதனைத்தான் செய்தான், தன்னை எதிர்த்த தமிழரை எல்லாம் கொன்றுவிட்டு தனியாக களத்தில் நின்று நான் மட்டும் தலைவர் என்றான்

இவர்களால் அப்படி செய்யமுடியவில்லை மாறாக நீ களத்திற்கு வர கூடாது, நாங்கள் மட்டும்தான் நிற்போம் என்கின்றார்கள், அஞ்சி உளறுகின்றார்கள்

இதன் பெயர் தான் “வீழ்ந்துவிடா வீரம், மண்டியிடா மானம்”

ஒன்றுமட்டும் இவர்கள் நினைவில் வைக்க வேண்டும்

இந்தியாவோடு இவர்களால் ஒட்டமுடியாது தமிழகம் தனியாக வெண்டுமென்றால், மறுநிமிடமே இவர்களோடு வாழமுடியாது தனி “பாண்டியநாடு” வேண்டும் என்ற குரல் உடனே ஒலிக்கும்

நாமும் தமிழர், நாம் பாண்டியர் என்ற கட்சிகள் எல்லாம் முளைக்கும்

அதனை நினைவில் வைத்துகொண்டு இந்த கும்பல் அமைதி காப்பது நல்லது

பிரபாரனின் தாயாரை கலைஞர் ஏன் சிகிச்சை அளித்து காக்கவில்லை?

Image may contain: 1 person, sitting

பார்வதி அம்மா எனும் பிரபாரனின் தாயாரை கலைஞர் ஏன் சிகிச்சை அளித்து காக்கவில்லை என பலர் கேட்கின்றனர், இதற்கு திமுகவினர் பொறுமையாக பதில் அளிக்கின்றனர் சுப.வீ உட்பட‌

“பிரபாகரனின் அண்ணன் அக்கா எல்லோரும் கனடாவில் இருக்க, அவர்களுக்கு எல்லாம் தன் தாயினை காக்க வராத அக்கறை எங்களுக்கு மட்டும் வரவேண்டுமோ..” என கேட்டால் முடிந்தது விஷயம்

பிரபாகரனுக்கே தன் தாய் தந்தை பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை, அமெரிக்காவிலும் கொரியாவிலும் ரஷ்யாவிலும் ஆயுதம் கடத்திய அவருக்கு அங்கு தன் தாய்க்கு சிகிச்சை அளிக்க வகை செய்ய முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்?

உலகெல்லாம் எங்கும் யாரையும் கொல்லும் சக்திபடைத்த, உலகின் எல்லா மூலையில் இருந்து பணம் முதல் ஆயுதம் வரை கடத்தும் திறன்படைத்த, வெளிநாடுகளில் இருந்து விமானம் வரை வாங்கிய புலிகளுக்கு அவரின் அன்னையினை மட்டும் அனுப்ப முடியவில்லையாம்

அண்டன் பாலசிங்கம் லண்டனில் இருக்க, நெடியவன் பாரீசில் இருக்க புலி பினாமி எல்லாம் ஐரோப்பாவில் இருக்க பார்வதி அம்மாளை கோபாலபுரத்தில் இருந்து தான் காக்க வேண்டுமாம்.

புலிகளின் தளபதி பால்ராஜின் சிகிச்சை சிங்கப்பூரில் மகா அவசரமாக நடக்குமாம், ஆனால் பார்வதி அம்மாளை மட்டும் சென்னைக்கு கொண்டு வருவார்களாம்..

எவ்வளவு பெரும் நாடகம்..

இப்படி செவிட்டில் அடித்து சொல்ல வேண்டிய சொல்லவேண்டிய பதிலுக்கு ஆளாளுக்கு சுப வீ உட்பட திமுகவினர் முணகி கொண்டிருக்கின்றனர், இவர்களை எல்லாம் வைத்து கொண்டு….

 
 

பாரத பாரம்பரியங்களை வேறு எப்படி காப்பது?

Image may contain: 1 person, hat

சில வரலாறுகளை புரட்டினால் பல சிந்தனைகள் வருகின்றன‌

பௌத்தம், சமண மதங்கள் எழுந்து இந்தியா முழுக்க ஆக்கிரமித்த பின் இந்து மதம் ஒடுங்கிற்று, அதன் பின் ஆதிசங்கரர் அதற்கு புத்துயிர் கொடுக்கின்றார், இந்தியா முழுக்க தனி இடம் பெறுகின்றார்

அதன் பின் ராமானுஜர் பெரும் இடம் இந்தியாவில் பெறுகின்றார், இந்த இருவரின் இடமும் எக்காலமும் அழிக்கமுடியாத இடம், இருவருமே தமிழர்கள், நிச்சயம் தமிழரின் பெருமை

எப்படி சாத்தியமாயிற்று? சமஸ்கிருதம் எனும் இணைப்புமொழியினை கற்றிருக்கின்றார்கள் அது சாத்தியமாயிற்று, இன்று ஆங்கிலம் உலக இணைப்புமொழியாய் இருப்பது போல அன்று சமஸ்கிருதம் இந்தியா முழுவதையும் இணைத்திருக்கின்றது

நாம் இன்று இந்தியர், அன்று தமிழர் இந்தியா என்றொரு நாடு இல்லை என சொல்பவர் எக்காலமும் உண்டு, அவர்களை விடுங்கள்

இந்தியாவின் எல்லா இனங்களுக்குள்ளும் அன்றே ஒரு பிணைப்பு இருந்திருக்கின்றது, வேதம் சமஸ்கிருதம் உட்பட பல விஷயங்கள் நூலிழை போல இணைத்திருக்கின்றன‌.

அதனால்தான் வெள்ளையன் காலம் இந்த நாடு பல இனங்களை கொண்டாலும் ஒரே நாடாக இயங்க முடிந்தது, அது அன்றும் ஒரே இந்தியா இன்றும் ஒரே இந்தியா

ஆங்காங்கே அரசர்கள் தனியாக இருந்தாலும் மக்களை இம்மாதிரியான விஷயங்கள் ஒன்றிணைத்தன..

அந்த பாரம்பரியத்தில்தான் வால்மிகி ராமாயணத்தை எல்லாம் கம்பனால் தமிழுக்கு மாற்ற முடிந்தது பாரதியார் போன்ற மகா கவிகள் உருவானார்கள்.

தமிழர்கள் தமிழகம் தாண்டி சிறகு விரிக்க மற்ற மொழிகளை கற்கவேண்டியது மகா அவசியம் என்பது அக்காலத்திலே விளைந்த சிந்தனை

அடுத்த மொழியினை படிக்காதவன் சொந்த மண்ணை தாண்டி ஆதிக்கம் செலுத்த முடியாது, அவன் எவ்வளவு அறிவாளியாயினும் மொழியின்றி முடியாது

சமஸ்கிருதம், வேதம் , உபநிஷங்கள் எல்லாம் அருமையான விஷயங்கள், ஆனால் அவை எல்லாம் ஒரு குலத்திற்கு மட்டும் சொந்தம் என்பதுதான் மாபெரும் தவறு

அந்த ஒரு தவறில்தான் இத்தேசத்தில் பல குழப்பங்களும் சீமான் போன்ற பெரும் அறிவாளிகளும் உருவானார்கள்

இந்நாடு அன்றே ஒற்றுமையாகத்தான் இருந்திருக்கின்றது, பல விஷயங்கள் நம்மை பின்னி வைத்திருக்கின்றன மதமும் வேதமும் அதில் முக்கியமானது

இந்த புள்ளியினை உடைத்தால் இந்தியா உடையும், என்பது இந்த பிரிவினை வாதிகளுக்கு தெரியும், அதனால்தான் இப்பிரிவினை வாதிகளின் முதல் குறி இம்மாதிரி விஷயங்கள் மேல் படியும்

இதனை உடைத்தால், அழித்தால் இந்தியாவினை உடைத்துவிடலாம், அது உண்மையும் கூட‌

நாம் சொல்வது அதுதான், சிந்தனையில் விளைவதும் அதுதான், ஒரு மொழியினை படிக்காமல் அந்த பெருவாரி மக்கள் பேசும் மொழியினை படிக்காமல் நல்ல அகில இந்திய தலைவனாக தமிழன் இனி வரமுடியாது

அகத்தியன் வடக்கத்தியன் இங்கே வந்து தமிழன் ஆனான் நாம் போற்றுகின்றோம், பவுத்த சமண முனிவர்கள் வந்தார்கள் தமிழ்படித்தார்கள், ஓவியம் காவியம் என அழியா தமிழ்படைப்புகள் கொடுத்தார்கள்

தமிழ்படிக்காமல் அவர்களால் முடியுமா? இன்றைக்கும் பெரும் அழியா புகழுடை தமிழ் பண்டைய இலக்கியம் அவர்கள் கொடுத்ததே

பல மொழிகற்றே இந்தியா முழுக்கவும், கிழக்காசியா முழுக்கவும் செட்டி இனம் வியாபார உலகில் வெற்றிகொடி நாட்டிற்று, ப‌ன்மொழி படித்தே நம் பாரதி காசி கரையில் உருவானான்

அப்படி தமிழரும் இனி பலமொழிகள் கற்று பல பெருமை அடையட்டும், ஹிந்தியினை கற்கலாம் அதன் மூலம் இந்திய தேசிய அரசியலில் உச்சமும் பெறலாம், எதார்த்தம் இதுதான்

ஆனால் அதே நேரம் சொந்த தாய்மொழி பற்றும், அதனை காக்கும் பெரும் வேட்கையும் வேண்டும்

சொந்த மொழியினை காத்துவிட்டு அந்நிய மொழிகள் எவ்வளவும் படிக்கலாம், நம் பாரம்பரியமான சமஸ்கிருதம் முதல் எல்லாவற்றையும் படிக்கலாம்,
உறவினையும் ஒற்றுமையினையும் வளர்க்கலாம்

தமிழ்காக்க பெரும் போராட்டம் நிகழ்ந்த இம்மாநிலத்தில் இன்று தமிழும் அழிந்து, அந்நிய மொழிகளும் அரைகுறையாய் திரிக்கபட்டு ஒரு வினோத நிலை தெரிகின்றது

எந்த மொழியும் இப்போதுள்ள தலைமுறைக்கு உருப்படியாக தெரிவதில்லை, 1960 வரை இருந்த ஆங்கில தரமும் இப்பொழுது சுத்தமாக இல்லை, தரம் கெட்ட ஆங்கிலமும் கலப்பட தமிழுமே சுற்றி வருகின்றது

இதனின்று இத்தலைமுறை மீளுதல் வேண்டும்

இத்தேசத்தில் தமிழை காத்துகொண்டு , மற்றமொழிகளை கற்று இந்தியா முழுக்க வெற்றிகொடி நாட்டவும் நம்மால் முடியும்

பள்ளிகளில் பகவத் கீதை நடக்கும் என செய்திகள் வருகின்றன, வரட்டும்

அதனை இந்த மோடி அரசு மிகுந்த கவனமுடன் செய்யுமானால் அதனை வாழ்த்தலாம்

ஆண்டாண்டு காலமாக கீதையும் , குரானும் கிரந்த சாகிப்பும் சில இடங்களில் பைபிளும் ஒலித்தநாடுதான் இது, என்ன சிக்கல் வந்தது? சிவாஜி கூட அவுரங்கசீப் எனும் அரசனை எதிர்த்தானே அன்றி இஸ்லாமை அல்ல..

ஆதலால் அப்படி படிப்பதால் அது மததிணிப்பு, மதவெறி என ஆகாது, ஆகவே ஆகாது

பாரத பாரம்பரியங்களை வேறு எப்படி காப்பது? இப்படி அமைதியாக நெறியாக காக்கலாம்

ஆனால் வெறியாக மாறிவிட கூடாது, ஆண்டாண்டு காலமாக ராமர் ஆலயமும், பாபர் மசூதியிம் அடுத்தடுது மிக அமைதியாகத்தான் இருந்தது, சுதந்திரத்தையொட்டி பிரச்சினைகள் வலுத்தன‌, அன்றே முடித்திருக்க வேண்டிய விஷயம் அது

இந்திரா காலம் வரை அடங்கி இருந்த அதனை பின்பு பெரிதாக்கி கலவரமாக்கி ஆட்சிக்கு வந்திருப்பது பாஜக அது ஒன்றுதான் அச்சமாக இருக்கின்றதே அன்றி வேறல்ல‌

மற்றபடி இம்மாதிரியான சில விஷயங்களை வரவேற்கலாம், இந்திய பாரம்பரியம் அறிந்தவர்கள் அதனைத்தான் சொல்வார்கள்

கடந்த காலங்கள் போகட்டும், இனி வரும் தலைமுறை பழம் இந்திய பாரம்பரியத்தில் எல்லாமும் கற்று வளர்ந்து பெரும் தலைவர்களாய் ஒளிவிடட்டும்..

சங்கரர் முதல் பாரதி போல‌ பெரும் இந்திய ஆளுமைகள் தமிழகத்திலிருந்து உருவாகட்டும், அதற்கு தமிழுடன் மற்ற மொழிகளையும், இந்திய பாரம்பரியத்தையும் படிக்க வைப்பதே ஒரே வழி