புனிதமான ரம்ஜான் மாதம்

புனிதமான ரம்ஜான் மாதம் தொடங்கும்பொழுது இம்மாதிரி “மாடுவெட்டாதே..” என்ற அறிவிப்புகள் எதற்காக? இவர்கள் செய்யும் காரியம் இத்தேசத்தின் அமைதியினை குலைப்பதாகும்

இஸ்லாமிய பெருமக்களுக்கு இது அவர்களின் புனிதமான மாதத்தில் அநீதி இளைக்கும் செயல்

இப்படி மாடு , ஓட்டகம், எருது வெட்ட கூடாது எனும் சட்டம் எருது வெட்டும் இந்து ஆலயங்கள், கிடா வெட்டும் இந்து ஆலயங்களுக்கும் பொருந்துமா?

இனி ஆலயத்தில் கோழி, கிடா வெட்ட கூடாது என மொத்தமாகவாது சொல்லி தொலையுங்கள்

அவர்கள் வெட்டலாம், இவர்கள் மாடு வெட்ட கூடாது என்பது இத்தேசத்து அமைதியினை குலைத்துவிடும்

பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினால் அவற்றின் விளைவுகள் மோசமானதாக இருக்கும், இன்னொருமுறை பரீசீலனை செய்வது நல்லது

இந்த நாட்டை அமைதியாக இருக்க விடுங்கள், இன்னொரு பெரும் கலவரத்தை நாடு தாங்காது…

அந்த சகோதரர்கள் மனம் நோக செய்யும்படியான இந்த அறிவிப்பினை மறுபரீசீலனை செய்யவேண்டும் என்பதே தேச அபிமானிகளின் பெரு விருப்பம்…..


 மாடு மட்டும்தான் இந்துக்களின் புனித விலங்கா?

பிள்ளையார் வரும் மூஞ்சூறு போன்றவை எல்லாம் அந்த வகையில் வராதா? பட்டியல் மிக பெரிது, எல்லா சாமியும் ஒரு விலங்கோடு சம்பந்தபட்டது

மாடுகளை வெட்டுவது தடுக்கபடுகின்றது , ஆனால் இந்தியாவெங்கும் கொல்லபடும் எலிகள், பள்ளி கல்லூரி, மருத்துவமனை ஆய்வகங்களில் எல்லாம் கொல்லபடும் எலிகளுக்கு விடுதலை இல்லையா?

அவைகளையும் கொல்லாமல் விட்டுவிட சொல்லுங்கள், செழித்து பெருகட்டும்

பெருமாளின் மச்சவதாரம், கூர்மாவதாரபடி இந்த கடலில் மீன்பிடிப்பதை எல்லாம் தடுக்க வேண்டாமா?

வராக அவதாரம் என சொல்லி இந்த பன்றிகளை எல்லாம் விடுவிக்க வேண்டாமா?

மாட்டுக்கு ஒரு நியாயம் மற்ற புனித விலங்குகளுக்கொரு நியாயாமா?

அந்த சட்டத்தில் திருத்தம் செய்து, எலி, மீன், பன்றி என எல்லா மிருகங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும்படி அரசுக்கு ஒரு கடிதம் குஷ்பூ ரசிகர் மன்றத்தின் சார்பாக விரைவில் மனு அனுப்பபடும்..


முத்துராமலிங்கம் என்றொரு படம் வந்திருக்கின்றது, நமது கண்ணில் இன்றுதான் பட்டது

தமிழின் மிக மோசமாக வெறுப்பேற்றும் படங்கள் 5 எடுத்தால் அதில் நிச்சயமாக இந்த படம் இடம்பெறும்

ரஞ்சித் போல சாதிக்கொரு இயக்குநர் இருக்கத்தான் செய்கின்றார்கள்…


 

அரசு மாடுகளுக்கு விடுதலை கொடுத்திருக்கின்றது

அறியாமை, நோய், வறுமை,ஆயுத குவிப்பு, தீவிரவாதம் என பல விஷயங்களில் இந்நாடு விடுதலை அடைய வேண்டி இருக்கின்றது,

ஆனால் இந்த அரசு மாடுகளுக்கு விடுதலை கொடுத்திருக்கின்றது, இனி அவைகள் இஷ்டம் போல திரியலாமாம், பால் மட்டும் கறந்துவிட்டு மக்கள் சத்தம் போடாமல் இருந்துவிடவேண்டுமாம்

அவற்றை கட்டுதல், வர்ணம் பூசுதல் இன்னபிற தொந்தரவுகள் எல்லாம் செய்ய கூடாதாம், வயதான மாடுகளுக்காக நாடெல்லாம் முதிர்ந்த மாட்டு இல்லம் அமைக்கபட்டு, அங்கே மாடுகள் பாதுகாக்கபட்டு பின் அடக்கம் செய்யபடுமாம்.

இது மாட்டுகறி சர்ச்சையினை மறுபடி சீண்டுவதாகும், மாட்டுகறி இல்லையெனில் அது சிக்கலாகு, மக்கள் முதல் மிருககாட்சி சாலை புலி வரை பாதிக்கபடும்

பெரும் உணவு சந்தையினையே இது முடக்கும்,

இன்றோடு இந்த அரசு 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது என சொல்லிகொள்கின்றார்கள்

3 ஆண்டு சாதனை எது என கேட்டால் ஒன்றும் சொல்ல தெரியவில்லை, சொல்வதற்கு இல்லை

எதனை எல்லாம் சொல்லி ஆட்சிக்கு வந்தார்களோ அதில் ஒன்றை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை, கருப்பு பணம் ஒரு பைசா வெளிநாட்டிலிருந்து வரவில்லை,

அசுர பலமிருந்தும் ஒரு தைரியமான திட்டம் என எதுவுமில்ல்லை

ஒரே ஒரு ஆறுதல் இந்த பலம் இருந்தும் அவர்கள் ராமர் கோவில், கிருஷ்ணன் கோவில் என கட்டி கலவரம் செய்யாமல் இருந்தது, அது ஒன்றுதான் ஆறுதல்

இந்தியாவில் எப்படியோ தமிழகத்தில் சில விஷயங்கள் நடந்தன, பிண்ணனியில் அவர்கள் இருந்தால் அதுவும் ஆறுதல்

மற்றபடி மக்கள் எதிர்பார்த்து ஆட்சியினை கொடுத்த நம்பிக்கைக்கு பாத்திரமாக ஒன்றும் நடக்கவில்லை

இன்னும் 2 வருடங்கள், அதன் பின் மாடுகளா வாக்களிக்க போகின்றது?

 
 
 

“காலா..” கருப்பர்களுக்கான படம்

Image may contain: 1 person, close-up

“காலா..” கருப்பர்களுக்கான படம் என்பதால் இந்த பொன் முகத்தினை விட்டுவிட்டார்கள்

நிலக்கரி குவியல் நடுவில் இந்த தங்க தட்டு எப்படி இருக்க முடியும்….முடியவே முடியாது.

கருப்பு என பெயரிட்டுவிட்டு இந்த குங்குமத்தை எப்படி சேர்த்துகொள்ள முடியும்?

நியாமான காரணம்.

இதனால் போராட்டம் நடத்துவதில்லை என சங்கம் முடிவெடுத்தாயிற்று


கொசுறு

ஒரு போலி கிறிஸ்தவன் வீடியோ காண நேர்ந்தது, “பவர்” , பவர் என கத்திகொண்டே கை நீட்டுகின்றார் உடனே எல்லோரும் பொத் பொத்தென்று விழுகின்றார்கள்

இந்திய அரசு என்ன செய்கின்றது?

இப்படி ஒரு மகா சக்திவாய்ந்த மகானை எல்லையில் நிறுத்தினால் “பவர் பவர்” என கத்தியே பாகிஸ்தானியரை விரட்ட மாட்டாரா? ஒரு பீரங்கி குண்டு ஒரு தோட்டா உள்ளே வந்துவிடும்?

எல்லோரையுமே “பவர் , பவர்” என சுருண்டுவிழ செய்யமாட்டாரா?

இந்துத்வ மோடி அரசு, இந்த கிறிஸ்தவ மஹானின் சக்தியினை நாட்டிற்காக பயன்படுத்துவதில் என்ன தவறு???

குறைந்தபட்சம் ராமேஸ்வரம் கடலிலாவது நிறுத்தலாம், ஒரே பவரில் சிங்களனே இலங்கை விட்டு ஓடிவிடுவான்


 

இந்திய போர்விமானம் சுகோய் 30 காணாமல் போனது

இந்திய போர்விமானம் சுகோய் 30 காணாமல் போனது, இப்பொழுது பாகம் கண்டுபிடிக்கபட்டதாக சொல்கின்றார்கள்

ரஷ்ய தயாரிப்பு அது, அதி நவீன ரகம். அது பறக்கும்பொழுது சிக்கல் வந்தால் ஏன் சுட்டு வீழ்த்தபட்டால் கூட விமானி பாராசூட்டில் குதித்து தப்பலாம், காற்றுவெளியிடை படத்தில் கூட சொன்னார்கள்

சிரிய யுத்தத்தில் இதே விமானத்தை சுட்ட தீவிரவாதிகள் , அந்த விமானியினை உயிரோடு பிடித்து சுட்ட கொடுமையும் நடந்தது

பறக்கும் பொழுதும் தாக்கபடும் பொழுதும் எல்லா விவரங்களையும் அது கட்டுபாட்டு அறைக்கு அனுப்பிகொண்டே இருக்கும், ஆக அது காணமல் போக வாய்ப்பே இல்லை,

இன்னும் விமானிகள் கண்டுபிடிக்கபடவில்லை என்றால் ஏதோ மறைக்கின்றார்கள் என்றுதான் பொருள், அந்த விமானத்தில் விமானிகள் கொல்லபட வாய்ப்பில்லை, ஆனால் தப்பியிருக்கும் விமானிகள் நிச்சயம் தொடர்பு கொண்டிருக்கவும் வெண்டும்

விமானம் வேறு சீனா பக்கம் பறந்திருக்கின்றது

விமானிகள் பற்றி தகவல் இல்லையெனில் ராணுவம் எதனையோ மறைக்கின்றது என்றே அர்த்தம்..

அது மர்ம தாக்குதலோ இல்லை நம் விமானத்தில் சொல்ல முடியாத கோளாரோ அப்படி எதுவும் இருக்கலாம்..

Image may contain: aeroplane
 
 

பன்மொழி புலவர் க.அப்பாத்துரை

Image may contain: 1 person, text

கடந்த நூற்றாண்டில் தமிழுக்கு பாடுபட்டது பலர், ஏராளமானோர் உண்டு மறைமலை அடிகள், உ.வேசா என வரிசை பெரிது

தமிழனின் ஆராய்ச்சிக்கும் பாடுபட்டவர் பலர், தமிழனின் பழமை என்ன? மற்ற மொழிகளில் தமிழின் தொடர்பு என்ன? மற்ற கலாச்சாரங்களுடன் தமிழ் கலாச்சாரம் எப்படி ஒத்துவருகின்றது?, தமிழன் எப்படி மூத்தகுடி? அவன் எங்கிருந்திருக்கலாம் என ஆராய்ச்சி செய்தவர் வெகு சிலர்

அவர்கள் தான் கடல்கொண்ட தென்னாடு, கபாட புரம் என ஆராய்ச்சியினை செய்தனர், பலமொழிகள் கற்று எல்லா மொழிகளிலும் ஆதாரம் தேடினர். எகிப்து தமிழக தொடர்புகளை அவர்கள் சொன்னார்கள், நீல நதி நைல் நதியாயிற்று, பெருமேடு பிரமிடு ஆயிற்று என்றார்கள்

ஐரோப்பிய அரேபிய மொழியில் ஆராய்ந்தார்கள், கிழக்கு ஆசிய மொழிகளில் புகுந்தார்கள் பெரும் ஆராய்ச்சி எல்லாம் செய்தார்கள், செய்துவிட்டுத்தான் தமிழன் முன் தோன்றிய இனம், முன் தோன்றிய மொழி தமிழ் என்றெல்லாம் சொன்னார்கள், கிழக்காசிய மொழிகளிலும் வாழ்வியலிலும் இருக்கும் தமிழ் தாக்கம் பற்றி சொன்னார்கள்

அப்படிபட்டவர்கள் தேவநேய பாவணர், பன்மொழி புலவர் க.அப்பாத்துரை போன்றோர்,

இன்று க.அப்பாத்துரை இறந்த நாள், தமிழுக்காகவும் தமிழரின் ஆராய்ச்சிக்காகவும் அவர் பட்ட பாடு கொஞ்சமல்ல, பெரும் நூல்களை எல்லாம் எழுதியவர்

ஆனால் அவர்பிறந்த ஆரல்வாய்மொழியில் அண்ணா சிலை இருக்குமேயன்றி இவருக்கு ஒரு கல் கூட கிடையாது

காரணம் பன்மொழி படித்த அப்பாத்துரை தேசியவாதி, சமஸ்கிருதம் முதல் எல்லாம் கற்றவர் பின் எப்படி திமுக தேடும்?

அதுவும் பிராமணர் தமிழர் எதிரி அல்ல என க சொன்னபொழுது, ஆம் அவர்கள் தமிழருக்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கே எதிரி என சொன்னவர்கள் திமுகவினர், பின் எப்படி?

ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரி இவர் பெயரில்தான் அமைந்திருக்க வேண்டும், அப்படி ஒரு அபூர்வ தமிழன் அப்பாதுரையார், இன்றும் அந்த ஊரில் அப்பாதுரை பெயரில் எதுவுமில்லை என்பதுதான் சோகம்..

திமுக மீது நமக்கு மரியாதை இருப்பினும் அதன் அரசியலில் மறைக்கபட்ட எத்தனையோ பேர் உண்டு, பாரதி முதல் அப்பாதுரை என ஏராளம் உண்டு, அவர்களை பொறுத்தவரை அவர்கள் பின்னால் சென்றவர்கள் திராவிடர்கள் அவ்வளவுதான், துரோகிகள், இனதுரோகி என்றெல்லாம் திட்டமாட்டார்கள் அதுவரை பரவாயில்லை

ஆனால் தமிழகத்தில் சில காரியங்களை அவர்கள் செய்தார்கள், தொடக்ககால திமுக அதனை செய்தது, ஆனால் இந்த ராமசந்திரன் எனும் கோடாரிகாம்பு முளைத்து அவர்களுக்குள்ளே சண்டையிட்டு பல விஷயங்கள் நாசமாயின‌

பெரும் இயக்கமான திமுக பல தலைவர்களை தமிழகத்திற்கு தரும் என்ற எதிர்பார்ப்பு அன்று இருந்தது, அது ஜெயலலிதா, பன்னீர், பழனிச்சாமி , தின்கரன் என பல விவாகரங்களை தந்துவிட்டது, இதுதான் எதிர்பாரா பின்விளைவு

இப்பக்கம் கலைஞர் மட்டும் 60 ஆண்டுகாலம் இருந்தார், அவருக்கு பின் அந்த இடமும் காலி

அப்பாதுரை போன்றெல்லாம், மறைமலை அடிகள், மபொசி போன்றெல்லாம் தமிழுக்கு உழைத்தவ்ர்கள் இருந்தார்கள், எத்தனை பேர் தமிழனையும் தமிழன் வரலாற்றிற்காகவும் வாழ்ந்திருகின்றார்கள், வரலாற்றில் மறைக்கபட்டிருக்கின்றார்கள் ஏன் என்றால் அவர்கள் அரசியலில் இல்லை,

இன்னும் மறைந்திருப்பவர் எத்தனை பேரோ, இவர்களை எல்லாம் நினைத்து பார்ப்பது யார்? பாடபுத்தகத்தில் கூட் அண்ணா, கலைஞர் , பெரும் அறிவாளி எம்ஜிஆர் என காரல் மார்க்ஸுக்கு இணையாகத்தான் மாணவர்கள் படிக்கின்றார்கள் என சிந்திக்கும் பொழுதுதான்….

திடீரென தம்ழரின் மொத்த அதிகாரமும் எனக்கு என சீமான் வந்தார், தமிழருக்கு எல்லாம் இனி நம்பிக்கை நானே என்றார், கலைஞர் செய்தது எல்லாம் துரோகம் என்றார், எல்லாம் அல்ல கொஞ்சம் என்றாலும் ஆம் ஈழத்திற்கு அதிகம் தமிழகத்திற்கு கொஞ்சம் என சொல்லிகொண்டார்,

தமிழனை தமிழனே ஆள்வான் என்றார், சரி நீங்கள் தமிழுக்கும் தமிழருக்கும் செய்தது என்றால் நான் தமிழன், பிரபாகரனின் தம்பி அந்த தகுதி போதுமென்றார், சரி தமிழை தவிர என்ன படித்தீர் என்றால் பாரதிராஜாவிடம் பாலுமகேந்திராவிடம் சினிமா கற்ற தகுதி போதாதா என்றார்.

பிரபாகரா நீனா இவனை அனுப்பினாய் என கேட்க அவனுமில்லை, இவரோ அட்டகாசம் ஆரம்பித்துவிட்டார், உலகில் எங்கு தமிழனை தொட்டாலும் விடமாட்டேன் என்றார், இவர் காலடியிலே இளவரசன் முதல் ராம்குமார் சாவு வரை நடந்தது, அன்னார் வாளாயிருந்தார், கேட்டால் எனக்கு ஆயிரம் கனவு என்றார்

இவரை போலவே மூலவியாதிகாரனாக கத்தும் ஒரு கும்பலை சேர்த்தார், கொஞ்ச நாளாக தமிழகத்தில் ஒலிமாசு ஆனது. ஏய் கருணாநிதி என இவர்கள் கத்திய சத்தம் சர்வதேச விண்வெளிநிலையம் வரை கேட்டதாக சொன்னார்கள்

தமிழக எல்லை என்றார், தமிழன் பெருமை என்ன? என முழங்கினார், அடடா இனி மறைமலை அடிகள், மபொசி, அப்பாத்துரை, திருவிக, வையாபுரி பிள்ளை, என மறைக்கபட்ட தமிழக அடையாளம் எல்லாம் இனி வளம்பெறுமோ என எண்ணினால்….

பிரபாகரனும், வீரப்பனும் தமிழருக்காக வாழ்ந்தவர்கள் , தமிழருக்காக வாழ்வினை தொலைத்தவர்கள், தமிழுக்கு தொண்டு செய்தவர்கள், தமிழனை சிந்திக்க செய்து தமிழ்பெருமை காத்தவர்கள், அவர்களே நம் வழிகாட்டி, நம் அடையாளம் வேறு யாருமே அல்ல..
என சொன்னார் அல்லவா?

அப்பொழுது எடுத்ததுதான் செருப்பு

இப்பொழுதும் வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் சாத்திகொண்டே இருக்கின்றோம், இப்பொழுது ரஜினியிடம் மல்லுகட்டுகின்றார், அதாவது ரஜினி யார்? இங்கு வந்து தமிழ்படித்து தமிழில் பேசி தமிழராக வாழ்பவர், அதுதான் தவறாம்

தமிழ் தமிழன் பேசும் மொழி, கன்னடன் எப்படி தமிழ்படிக்கலாம்? பேசலாம்?, தமிழரின் மொழியினை அந்நியர் பேசவிடமாட்டோம், தமிழ் தமிழனுக்கே, தமிழகம் தமிழனுக்கே

இவை எல்லாம் வெறுப்பும், வன்முறையும் கொண்டுவரும் குருட்டு சித்தாந்தங்கள்.,

இவர் கன்னடம் கற்று கர்நாடகாவில் நிற்பதை யார் தடுத்தார்கள்? மலையாளம் கற்று மலையாளியாய் வாழ்ந்து கேரளாவில் நின்றால் யார் தடுப்பார்கள்

மக்கள் அளிப்பதே அல்லவா முடிவு? குறுக்கே படுத்து என்னை கடந்து செல், நான் தமிழன் என்றால் என்ன ரகம்?

இப்படி ஒரு விபரீத தமிழனை எங்காவது காணமுடியுமா? சட்டியில் இருப்பது அவ்வளவுதான், பாரதிராஜாவின் சீடனிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

விடுங்கள்….

வருங்கால திமுக தன் தவறுகளை திருத்தி இம்மாதிரி திமுக அடையாளமற்ற தமிழறிஞர்களை நினைத்துகொள்வது நல்லது,

திமுக அல்லாத தமிழரிஞர்களையும் அவர்தம் ஆராய்ச்சிகளையும் தொண்டுகளையும் புறக்கணிக்காமல் அவர்களை அடுத்த தலைமுறைக்கு அடையளம் காட்டுதல் வேண்டும்..

இல்லாவிட்டால் இன்னொரு சீமான் வந்து மலையூர் மம்பெட்டியான், நாகர்கோவில் லிங்கம், ஆட்டோ சங்கர், அட்டாக் பண்டி, பொட்டு சுரேஷ், காஞ்சி அப்பு எல்லாம் தமிழின தலைவர்கள் என சொல்ல ஆரம்பித்துவிடுவான்

 
 

தாடி பாலாஜி நித்யா ஜோடி

இரு நாட்களாக ஒரு சங்கதி மீடியாவில் ஓடிகொண்டிருக்கின்றது, அதாவது உலக புரட்டிய புரட்சியாளரும் , புதிய இந்தியாவினை உருவாக்கி ஒளிகாட்டியவருமான ஒருவரின் செய்தி அது

அந்த மாபெரும் தலைவன் , அகில உலகத்தை ஆட்டிய இந்திய பெருமகன் தன் காதல் மனைவியினை நாட்டு நலனுக்காகவும், தான் கொண்ட கொள்கைக்காகவும் பிரிய போகின்றானாம்

அவனது உன்னத லட்சிய போராட்ட வாழ்வில், பல்லாயிரம் மக்களுக்கு அவன் வழிகாட்டும் மாபெரும் பணியில் அவன் இருக்க, அவனின் அருமை மனைவி அதாவது கார்ல்மார்க்ஸின் அறிவில் மயங்கி அவனுக்காய் வாழ்ந்த ஜென்னி போல இவன் மீது உயிரையே வைத்த அந்த மனைவி பிரிய போகின்றாளாம்.

அந்த ஜோடி யார் தெரியுமா?

தாடி பாலாஜி நித்யா ஜோடி

ஏதோ இந்தியாவிற்காக அணுகுண்டை சுமக்கும் விமானத்தின் விமானி விடைபெறுவது போலவும், புதிய நாட்டை கண்டுபிடிக்க கிளம்பும் கொலம்பஸ் தன் மனைவிக்கு கடைசிவிடை கொடுப்பது போலவும் அவர் பேசிகொண்டிருக்கின்றார்

விஞ்ஞானி எடிசன், ஐன்ஸ்டீன் போன்றோருடன் வாழமுடியாது என சென்ற, சிந்தனையாளன் சாக்ரடீசை கொட்டி தீர்த்த மனைவி போல அந்தம்மாவும் பேசிகொண்டிருக்கின்றது

தாடி பாலாஜி நித்யா ஜோடி பிரிகின்றதாம், ஒரே அழிச்சாட்டியம், பேச்சுவார்த்த நடத்தி சேர்த்து வைக்க ஐ.நா பொதுசெயலாளர் ஏன் வரவில்லை எனும் அளவிற்கு அலப்பறைகள்…

இந்த செய்தியினை 2 நாட்களாக தலைப்பு செய்தியாக சொல்லிகொண்டிருக்கின்றார்கள், இந்த தமிழக ஊடகத்தார்

குடிநீர் முதல் குழப்பமான பாடதிட்டம் வரை உள்ளூர் பிரச்சினை ஆயிரம், சிரியா முதல் அமெரிக்க கால் திரிகோணமலையில் படுவதுவரை வெளிநாட்டு சிக்கல் பல்லாயிரம்

ஆனால் இவர்கள் கவலை பாலாஜியின் தாடியினை சொறிவதில் இருக்கின்றது

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி காலமானார்

Image may contain: 1 person, selfie and close-up

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி காலமானார்

கலைஞர் ஏரளமானோரை கவர்ந்தார், அதில் ரசிகர்கள், தொண்டர்கள், கொள்கையாளர், என ஏராள வகை உண்டு, சில பச்சோந்திகளும் உண்டு

பக்தர்கள் என்றொரு பிரிவும் உண்டு, அதிலொருவர்தான் இவர், இன்று மறைந்துவிட்டார்

தன் சமகாலத்தில் யார் இறந்தாலும் மரியாதை செலுத்துவதில் கலைஞர் மகத்தானவர், தன் தள்ளாத வயதில் அவர் செல்லமுடியாமல் இருந்தது கலாமிற்கும், ஜெயாவிற்குமே, மற்றபடி அந்த இறுதிமரியாதை விஷயத்தில் கலைஞரை பாராட்டியே தீரவேண்டும்

அப்படிபட்ட கலைஞரின் முரட்டு பக்தன் இன்று மரணித்துவிட்டார், அவர் மரண செய்தியினை அறிந்துகொள்ளமுடியாமல் தெய்வம் கோபாலபுரத்தில் ஓய்வில் இருக்கின்றது

கலைஞரை பற்றி ஒரு துர்செய்தி கேட்காமல் கண்மூடிவிட்ட பெரியசாமி,

வினோதமான காட்சியினை காலம் காட்டிகொண்டிருக்கின்றது,

நிச்சயம் கலைஞரின் பக்தராகவே இருந்திருகமுடியும், பெரும் துர்ப்பாக்கிய நிலை அவருக்கு வாய்க்கவில்லை, கொடுத்து வைத்தவர்

தென்பகுதி திமுகவிற்கு சோதனை வந்தபொழுதெல்லாம் தாங்கி நின்றவர். சந்தர்ப்பம் பார்த்து நுழையமுயன்ற நஞ்சக வஞ்சகர்களை எல்ல்லாம் ஓட அடித்த கலைஞரின் கட்டப்பா அவர்

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்…

 
 

சன்னிலியோன் கவலை

Image may contain: 1 person, close-up

எனக்கு யாருடைய புரு‌ஷனும் தேவை இல்லை ஆனாலும் நடிகர்களின் மனைவிகள் பயப்படுவது ஏன் என்று தெரியவில்லை : சன்னிலியோன் கவலை

இவருக்கு அவரின் கணவனே தேவையில்லை, இதில் அடுத்தவள் கணவன் எதற்கு?

அம்மணிக்கு இன்னும் இந்திய மனைவிகள் பற்றி தெரியாது போல, முன்பின் தெரியாதவளை நோக்கினாலே கணவன் விழியினை தோண்டிவிடும் மனைவியர் உள்ள நாடு,

மணாளனின் மனமகிழ்வே முக்கியம் என்ற கண்ணகி, நளாயினி எல்லாம் புராணத்தோடு சரி, நிஜத்தில் சாத்தியமே இல்லை

புராணத்தில் வேண்டுமானால் சீதை தீகுளித்திருக்கலாம், ஆனால் நிஜத்தில் ஒவ்வொரு நாளும் தீகிணறில் இறங்கி எழும் இந்திய கணவர்கள் உண்டு, இதில் இந்திய ஜனாதிபதி முதல் அடிமட்ட தொழிலாளிவரை யாரும் தப்பமுடியாது.

அமெரிக்க சி.ஐ.ஏ , இஸ்ரேலிய மொசாத் எல்லாம் இந்திய மனைவியின் உளவுபார்த்தல் முன் ஒன்றுமே இல்லை, ஆனால் கணவனை மட்டும் உளவுபார்ப்பதால் அவர்களுக்கு சிக்கல் இல்லை

“இந்த‌ போன் மூலம் உங்கள் கணவனின் போனை கண்காணிக்கலாம் என்ற வாசகத்தை சொன்னால் தன்னிடமுள்ள தங்கத்தை எல்லாம் கொடுத்து இந்திய பெண்கள் போன் வாங்கும் வாய்ப்பபு உண்டல்லவா?” எனும் அளவிற்கு சாம்சுங்கும், ஆப்பிளும் யோசித்துகொண்டிருக்கின்றன‌

ஐரோப்பிய பெண்களை போல் அல்ல, கணவன் காதல் சர்ச்சை வந்தால் அவள் கூந்தல்வரை வெட்டியெடுக்கும் பத்தினிகள் நிறைந்த நாடு என்பதை சன்னிக்கு யாராவது சொல்லிவைப்பது நல்லது

ஆடையில்லா சன்னியினை பார்க்கலாம் தான், கூந்தலில்லா சன்னியினை பார்க்கமுடியுமா?

அதனால் அம்மணி இந்திய மனைவிகள் பற்றி தெரிந்துகொள்வது நல்லது

திரிகோணமலையின் ஒரு பக்கத்தில் அமெரிக்க முகாம் அமையலாம் : செய்தி

No automatic alt text available.

திரிகோணமலையின் ஒரு பக்கத்தில் அமெரிக்க முகாம் அமையலாம் : செய்தி

1980ல் அமெரிக்கா இதற்குத்தான் முயன்றது, தந்திரமாக ஆடிய இந்திரா அதனை முறியடித்தார், அதன் பின் புலிகள் இந்திய எதிரிகள் என்றாலும் இந்தியா விட்டுகொண்டே இருந்த காரணம் அதுதான், சிங்ளனை மிரட்ட ஒரு சக்தி தேவை

இது பிரபாகரனுக்கு மிக நன்றாக தெரியும், அந்த தைரியத்தில்தான் ராஜிவ் கொலையினை ஒரு பொருட்டாக எடுக்காமல் இருந்தார் பிரபாகரன்

2009ல் விஷயம் எல்லை மீறியது, புலிகளை ஒழித்து தீருவோம் என உலகம் மொத்தமாய் களமிரங்கியபொழுது இந்தியாவால் தடுக்கமுடியவில்லை, முடியவும் முடியாது

அதனால் மறுபடியும் 1987 ஒப்பந்தத்தை காட்டி உட்புகுந்துவிடலாமா என யோசித்தது, ஆனால் புலிகள் விடவில்லை

இந்திய ராணுவத்தை அனுப்பும் முடிவினை இந்திய தளபதிகளே நிராகரித்தனர், சென்று காப்பாற்றினால் அமைதிபடை பட்டபாடுதான், புலிகள் ஆயுதம் ஒப்படைத்து சரணடையட்டும் மறுநொடி நாம் இறங்கலாம்

புலிகள் ஒப்புகொள்ளவே இல்லை, எல்லாம் முடிந்தது

இப்பொழுதும் திரிகோணமலை துறைமுகத்தில் இந்திய பிடி உண்டு, அது யுத்த முகமாக மாற்றபடாது என்ற இலங்கை சட்டமிருப்பதால் அது எண்ணெய் குடோனாக உள்ளது

அமெரிக்காவிற்காக அது யுத்தமுகாம் என திருத்தபடுமானால் நிச்சயம் இந்தியாவால் சும்மா இருக்கமுடியாது, இந்தியா என்ன திட்டம் வைத்திருக்கின்றதோ தெரியவில்லை

ராஜிவினை இழ்ந்தும் திரிகோணமலையில் காங்கிரஸ் அரசு தன் கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தது, ஆனால் பாஜக அரசு சறுக்குகின்றது

இனி அமெரிக்க படைகள் இலங்கையில் கால்பதிக்கலாம், நாளை அமெரிக்கா இந்தியா மோதும் சூழல் வந்தால், அதாவது இந்தியா பாகிஸ்தான் மோதலிலோ அல்லது இன்னொரு நாட்டுடன் இந்தியா மோதும் சூழல் வந்தாலோ நாங்களும் இறங்குகின்றோம் என இறங்கினால்

சாகபோவது தமிழகம் தான், இப்போதைக்கு சீனாவினை விரட்டுகின்றோம் என அமெரிக்காவுடன் இந்தியா கரம்கோர்த்தாலும் அவர்கள் நம்பகூடியவர்கள் அல்ல‌

இனி நெல்லைமாவட்ட விஜயநாராயணத்தை மேம்படுத்தும் அவசியம் இந்தியாவிற்கு வரலாம், சேது சமுத்திர திட்டத்தை மீளாய்வு செய்யும் நிலைவராலாம்

அமெரிக்கா கால்பதித்துவிட்டால் இனிவரும் காலங்கள் பரபரப்பானவை, அது கால்பதிக்கும் அறிகுறி தெரிகின்றது

அதெல்லாம் இருக்கட்டும்

இந்திய படை ஆக்கிரமிப்பு படை, கற்பழிப்பதற்கு என்றே ஜட்டியோடு ஈழம் சென்றபடை என சொன்னவன் முகத்தை எல்லாம் தேடிகொண்டிருக்கின்றேன்

இதோ அமெரிக்க முகாம் இலங்கையில் வருகின்றதே? அது என்ன ராவணன் கோயிலை தேடிய திருபயணமா? புனித யாத்திரையா?

இலங்கையில் கால்பதித்த இந்தியாவினை புலிகளை வைத்து விரட்டியதும் , பின் புலிகளை அழித்துவிட்டு ஒன்றும் தெரியா கன்னிபோல கால் வைப்பதும் யார் விளையாட்டு என தெரிகின்றதா?? முள்ளிவாய்க்கால் கொடுமை ஏன் நடந்தது என புரிகின்றதா?

புரிந்தாலும் சொல்லமாட்டீர்கள்

அந்த அரைகிறுக்கனும், உலகத்தை தன் அடிதொண்டையில் வைத்திருப்பவனுமான சீமான் என்பவன், திருமுருகன் காந்தி, திருமா, வேல்முருகன் சொல்வதை நம்பியதாக நடியுங்கள்

உண்மைகள் சாகாது, பொய்கள் நிலைக்காது

ராஜிவின் தியாகமும், புலிகளின் சாயமும் வெளியே வந்துகொண்டிருக்கின்றது

அது இருக்கடும், இந்தியாவிலிருந்து வெறும் 50கிமீ தூரத்தில் உலக வல்லரசு முகாம் அமைக்கின்றது, மோடி என்ன செய்ய போகின்றார்? மோடி செய்யமாட்டார்

ஆனால் புட்டீன் செய்யலாம், ஐ.என்.எஸ் கட்டபொம்மன் இனி விஸ்வரூபமெடுக்கலாம்

காங்கிரசின் அயல்நாட்டு திட்டங்கள் எப்படி எல்லாம் இருந்திருக்கின்றன, புலிகள் எனும் அந்நிய சக்தி எப்படி சிதைத்திருக்கின்றது என்பதை கண்ணார காண்பீர்கள், இதோ கண்டுகொண்டிருக்கின்றீர்கள்

அரேபியருக்கு பெட்ரோல் போல ஈழமக்களுக்கு அந்த துறைமுகம் துருப்பு சீட்டு, அதனை வைத்து சிங்களிடம் பல உரிமைகளை வல்லரசு துணையோடு பெற்று அமைதியாக வாழும் வாய்ப்பு இருந்தது, அது ஒன்றுதான் தீர்வு , சுயநல உலக யதார்த்தம் அது

அப்படி இந்தியா சில உரிமைகளை பெற்றுகொடுக்க முயன்றது, அடிபட்டு ஒதுங்கியது, இதோ அமெரிக்கா நுழைகின்றது? என்ன உரிமை ஈழ தமிழருக்கு பெற்று கொடுத்தது? போர்குற்றம் கூட குப்பைக்கு சென்றாயிற்று

புலிகள் ஒருகாலமும் சிங்களனை வெல்லமுடியாது, வென்றாலும் அது தனிநாடு ஆகமுடியாது, ஏதாவது ஒருநாடு வந்து மீட்டு சிங்களனிடம் கொடுத்தே தீரும்

இந்நிலையில்தான் இந்தியா ஓரளவு ஈழதமிழருக்கு நலம் கொடுக்கும் திட்டங்களை சொன்னது, கேட்கவேயில்ல்லை, தனிநாடு கிழிப்போம் என்றார்கள், எங்கே அமெரிக்க படைகளை விரடட்டும் பார்க்கலாம்..

இனியும் எவனாவது அமைதிபடை ஏன் சென்றது என கேட்கமுடியுமா? முடிந்தால் அமெரிக்க தூதரகத்தில் சென்று ஈழ் திரிகோணமலையில் அந்நிய வெள்ளையனே உனக்கு என்ன வேலை என கேட்டுவிட்டு வாருங்கள்.

 
 

“நெல்லை வட்டாரத்தில் எமனை காலா சாமி என்பார்கள்” : ரஞ்சித்

“நெல்லை வட்டாரத்தில் எமனை காலா சாமி என்பார்கள், இது மும்பையில் நடக்கும் நெல்லை வட்டார கதை படம் என்பதால் காலா என பெயரிட்டோம்” : ரஞ்சித்

ஏம்பா நெல்லை மக்கா, கருப்ப சாமி, சுடலைமாடன், இசக்கி தவிர காலாசாமி எங்காவது அந்த பக்கம் இருக்கின்றதா? காலா சாமி கொடை என எங்காவது பார்த்தோமா?

எங்காவது “டேய் நான் காலா சாமிடா.. கரும்பு எங்கடா” என சாமி ஆடியிருக்கின்றதா?

நெல்லையில் சுடலைதான் பிரதானம், அடுத்து இசக்கியும் கருப்பசாமியும், காலா எனும் வார்த்தை நெல்லையில் எங்காவது உண்டா?

இந்த ரஞ்சித் எப்படி அவிழ்த்துவிடுகின்றான் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள், நெல்லை மக்களான நம்மிடமே கதைகட்ட வந்துவிட்டார் இவர், என்ன சொல்ல? இவர் இப்படித்தான்.

அய்யா நெல்லை வட்டார கதைக்கு ஏன் ரஜினி BR 1956 காரில் இருக்கின்றார்??

நெல்லை சாதிவெறியில் ஊறிய மண், கொஞ்சம் தொட்டாலும் சீறிகொள்ளும், பெரும் எரிமலைகள் அங்கு உறங்குகின்றன‌

அந்த கணலில் ரஜினி மூலம் பெட்ரோல் ஊற்றாமல் இருப்பது நல்லது

எமனை தமிழில் கூற்றுவன் என்றுதான் சொல்வார்கள் , அவருக்கு தமிழகத்தில் வெள்ளலூர் பக்கம் உள்ளது அதுவும் கோவை பகுதி,

நெல்லை பகுதி அல்ல‌

சினிமா என்பது பொய், அதற்காக இயக்குனர்களும் பொய் சொல்லலாம் , ஆனால் இப்படி பச்சை பொய் சொல்ல கூடாது…

அதுவும் பெயர் விளக்கத்திலே பச்சை பொய், இவர் சொன்னதெல்லாம் நம்ப, எல்லோரும் ரஜினிகாந்தா?

காலாவிற்கு பதிலாக “சுட்லை மாடன்” என பெயர்வைத்துவிட்டு இவர் இப்படி சொன்னால் நாம் மறுக்க முடியுமா?

அட மும்பை நெல்லை தமிழர் என நோக்கினாலும் அங்கு பிள்ளையார்தான் பிரசித்தம், டான் வரதராஜ முதலியார் போன்றவர்கள் அதனைத்தான் உற்சாகபடுத்தினார்கள், கண்பத்தி என அவர்கள் வழக்கில் சொல்வார்கள்,

இதில் காலா சாமி எங்கிருந்து வந்தார்?

இவரின் சிந்தனையும் பேச்சும் காட்சியும் ஆழ்ந்த அறிவில்லா மேம்போக்கானது, அரைகுறையானது , அதனைத்தான் சொல்கின்றோம்