உன் ஆட்சியினை ஒழுங்காக பார் , ஏதாவது செய்..

Image may contain: 1 person, text

பொதுவாக பக்கத்து மாநில முதல்வர்கள் தமிழக முதல்வருக்கு வாழ்த்து சொல்வார்கள், அல்லது வருத்தம், இரங்கல் என ஏதாவது சம்பிரதாயங்களை சொல்வார்கள்

முதன் முதலாக பக்கத்து மாநில முதல்வர் செவிட்டில் அடித்தாற்போல் பழனிச்சாமிக்கு ஏதோ சொல்லியிருக்கின்றார்

இது நிச்சயமாக பெரும் அவமானம், “உன் ஆட்சியினை ஒழுங்காக பார் , ஏதாவது செய்..” என்ற ரீதியில் சொல்லபட்டிருக்கும் செய்தி

பெரியார் கேரளா சென்று போராடிய காலம் மாறி, இன்று அவர்கள் நமக்கு மானம் ஊட்ட வந்திருக்கின்றார்கள்

பச்சை தமிழன் ஆட்சியில், இன்னொரு மாநிலத்துக்காரன் பின் மண்டையில் அடித்து மானம் இருக்கின்றதா என கேட்கும் விசித்திரத்தை தமிழகம் இன்றுதான் சந்திக்கின்றது

தமிழனை தமிழனே ஆளவேண்டும், ஆனால் மானம் மட்டும் காற்றில் போக வேண்டும்

 
 

பழ.நெடுமாறன் ஏன் பேசபோகின்றார்?

கலைஞர் உடல்நலத்தோடு இருந்தபொழுது ஏன் சட்டமன்றம் வரவில்லை என பழ.நெடுமாறன் கிண்டல் செய்கின்றாராம், அன்னாருக்கு கலைஞரை சீண்டுவதில் அபார பிரியம்

அப்படி ஒருமுறை சொன்னார், தசரத மகராஜா கண்ணாடியில் தன் முகத்தை கண்டானாம், தன் தலைமயிரில் ஒன்று நரைத்திருப்பதை கண்டு, உடனே தனக்கு வயதாயிற்றென்று மகனுக்கு பட்டம் சூட விளைந்தானாம், கலைஞருக்கு ஏன் அப்படி தோன்றவில்லை”

கலைஞர் மறுநாள் முரசொலியில் எழுதினார்

“குன்றனைய குமரி அனந்தன்
புகழ்மறைத்த துரோகி
வரிபுலிமேல் அமர்ந்தவாறு
உறிஞ்சி தின்னும் ஒட்டுண்ணி
…..
…..என நீண்டன வரிகள்,, இறுதியாக இப்படி முடித்தார்

“நாட்டோரம், ரோட்டோரம்
ஆயிரம் கதை இருக்க‌
காதோரம் நரைத்த மயிர்கதை
சொல்ல வந்தான் மயிராண்டி”

என முடித்திருந்தார், அதன் பின் கொஞ்சநாள் பழ.நெடுமாறன் சத்தமே இல்லை

இன்று கலைஞர் இல்லாத நிலையில் அன்னார் கலைக்க வந்துவிட்டாராம்,

முரசொலிக்காரர்கள் அந்த கவிதையினை தேடி எடுத்து மறுபிரசுரம் செய்துவிட்டு அமைதியாக இருந்துவிடலாம்

மறுபடி கொஞ்சநாளைக்கு பழ.நெடுமாறன் ஏன் பேசபோகின்றார்?

சென்னை ஐ.ஐ.டியில் மாட்டுகறி சமைத்ததால் சர்ச்சை

சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள் மாட்டுகறி சமைத்ததால் சர்ச்சை

நாட்டின் அறிவு கோவில்களாக கருதபடுபவை அந்த ஐஐடிக்கள், அரசு அதற்கு அள்ளிகொடுக்கும் பணமும், மாணவர்களுக்கு அதன் மீதான கனவும் சாமான்யமல்ல‌

உலகளவில் மதிக்கபடும் இந்திய அறிவுநிலையங்களில் அதுவும் ஒன்று

அங்கு ஏன் அரசியல்? அங்கு ஏன் மாட்டுகறி அரசியல்?

அந்த அறிவு கோவிலில் ஐன்ஸ்டீன் வாசகர் வட்டம், நியூட்டன் வாசகர் சதுரம், ராமானுஜம் வாசகர் முக்கோணம், கெப்ளர் ஆயிலர் வாசகர் கன சதுரம் என இருந்தால் அது நல்லது, அப்படித்தான் இருக்க வேண்டும்

புனிதமான அந்த நிலையத்தில் சாதியோ, புரட்சியோ அந்த பெயரில் அரசியல் வட்டம் எதற்கு?

அம்பேத்கரை படிப்பவர்கள் சட்டகல்லூரியில் அப்படி வட்டம் வைத்து அவரைபோல் படித்து உயர்ந்தால் சரி, பெரியார் போல உருவாக சிந்தனை போதும், ஐஐடி எதற்கு?

ஆக அம்பேத்கருக்கும், பெரியாரின் சிந்தனைகளுக்கும் ஐஐடியில் என்ன வேலை?

முதலில் கல்வி நிலையங்களில் இம்மாதிரி அரசியல் கோஷ்டிகள் ராஜாஜி, சாவர்க்கர், அம்பேத்கர், பெரியார் என யார் பெயரில் இருந்தாலும் தடை செய்ய வேண்டும்

மாட்டுகறி சுவைபார்க்க ஒரு உணவகம் போதாதா? ஐஐடி எதற்கு?????

அரசியல் அந்த அறிவுகோவிலில் இருந்து வெளியேறட்டும், மதம் அதிலிருந்து ஓடட்டும்

அறிவிலும், விஞ்ஞானத்திலும் அந்த அறிவு கோயில்கள் ஓளிவீசட்டும்

ஐன்ஸ்டீகளும், சீனிவாச ராமனுஜமும் , ஜிடி நாயுடுவும், மார்க் சுக்கர்பெர்க்கும், சர்சிவி ராமனும் அதிலிருந்து வந்தால் போதும்,

அரசியல் எதற்கு? அது உருவாக ஏராளமான இடங்கள் இருக்கின்றன‌

ஆண்டவன் கட்டளை படம் ஓடி கொண்டிருக்கின்றது

ஆண்டவன் கட்டளை படம் ஓடிகொண்டிருக்கின்றது

சிவாஜி கணேசன் அப்படி ஒரு நடிப்பினை கொட்டியிருக்கின்றார், கல்லூரி பேராசிரியராகவும், ஒரு பாடலில் சாமியார் உடையிலும் கலக்குகின்றார்

அற்புதமான நடிகன், சந்திரபாபு தன் உச்சகாலங்களில் நடித்த படம், பின்னியிருக்கின்றார்

படம் நேரு மறைந்த பின் வந்திருக்கலாம், நேருவின் பெருமைகளை முடிவில் அழகாக சொல்கின்றார்கள், அக்கால படங்கள் அப்படி சமூக பொறுப்போடு வந்திருக்கின்றன‌

இனி இப்படி நல்ல தலைவர்கள் பெருமையினை சொல்லும் படங்கள் வரப்போவதே இல்லை

படத்தில் மிக குறிப்பிடதக்கவர் தேவிகா

அளவான உயரம், குண்டு கண்கள், உதட்டில் சிரிப்பு என அவர் வரும்பொழுது எப்படி இருக்கின்றது? குறிப்பாக அவர் சிரிக்கும்பொழுது கன்னத்தை பார்த்தவுடன் அப்படித்தான் சொல்ல முடியும்

எப்படி?

தேவிகா அக்கால குஷ்பூ…


கொசுறு

தமிழகத்தை தமிழனே ஆளவேண்டும் : பாரதிராஜா ஆவேசம்

அதாவது தேசத்திற்காக எல்லையில் பல யுத்தம் நடத்திய திருமுருகனை உள்ளே போட்டுவிட்டார்கள், அவரை வெளியிட சொல்லி இயக்குநர்கள் கூட்டமாம், அதில் அன்னார் சீறிவிட்டார், அவர் சிறை செல்லவும் தயாராம்

இவரை சிறைக்கு அனுப்ப தேவையில்லை, மாறாக மனநல மருத்துவரிடம் அனுப்புவது நல்லது

பின்னே?

திருமுருகனை உள்ளே போட்டிருப்பது அதிமுக அரசு, அதன் முதல்வர் பச்சை தமிழன் பழனிச்சாமி

அவரை ஒன்றும் சொல்லாமல் இன்னும் தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும் என சொல்பவரை வேறு எங்கு அனுப்புவது? அங்குதான் அனுப்ப வேண்டும்.


இலங்கையில் கடும் மழை, பெரும் நிலச்சரிவு

இலங்கையில் கடும் மழை, பெரும் நிலச்சரிவு : மீட்புபணிகளில் பல நாடுகள் களமிறங்கியிருக்கின்றன‌

இலங்கை நல்ல மழைபொழியும் நாடுதான், ஆனால் சிக்கல் மழையில் மட்டும் அல்ல என்கின்றார்கள்

ஏகபட்ட ஆக்கிரமிப்புகளும், முறையில்லாமல் கட்டபட்ட கட்டிடங்களும், ஆபத்தான இடங்களில் அனுமதியின்றி கட்டபட்ட கட்டங்களே பெரும் ஆபத்தினை கொண்டு வந்திருகின்றது என்கின்றன செய்திகள்

பொதுவாக வெள்ளையன் ஆண்ட நாடுகளில் எல்லாம் நல்ல சட்டதிட்டங்களும் வழிகாட்டலும் உண்டு, மலேயா சிங்கப்பூர் போன்றவை இன்றும் அதனை பின்பற்றி வளர்ந்துகொண்டே இருக்கின்றன‌

நமக்கும் அருமையான சட்டங்களையும், மக்கள் இடைஞ்சலில்லாமல் வாழும் சட்ட திட்டங்களையும் தான் வெள்ளையன் கொடுத்திருந்தான், பஸ் நிலையம் ரயில் நிலையம் வரை அக்காலத்தில் இந்தியரும் சட்டத்திற்குட்பட்டுதான் நடந்திருக்கின்றார்கள்

நம் காந்தி சட்டத்தை மீறுவோம் என அழைத்தார் அல்லவா? அப்பொழுது சட்டத்தை மீறி ஆட்சிக்கு தொல்லை கொடுக்க தொடங்கியவர்கள் நாம், இன்னும் செய்து கொண்டே இருக்கின்றோம்

சுதந்திரம் பெற்றதெல்லாம் நமக்கு தெரியவே இல்லை, சட்டத்தை மீற காந்தி சொன்னார், செய்கின்றோம், இனி அவர் வந்து சொல்லும் வரை மீறுவோம்

இலங்கைக்கும் நல்வாழ்வு வெள்ளையன் கொடுத்திருந்தான், ஆனால் சிங்கள புத்தவாதமும் போதாகுறைக்கு பெரும் போரும் அந்நாட்டை சிக்கலில் தள்ளின‌

ஹாங்காங் அளவிற்கு வளர்ந்திருக்க வேண்டிய இலங்கை தீவு நாசமானது, லஞ்சமும் ஊழலும் அதிகரித்து எல்லாமே சட்டத்திற்கு புறம்பாய் நடந்து, இன்று கட்டங்கள் இடிந்து சாவும் அதிகரித்திருத்திருக்கின்றது

லஞ்சமும் ஊழலும் அதிகரிக்கும் நாட்டில் கண்ட இடங்களில் கட்டடம் கட்டபடும், என்றாவது ஒரு நாள் அது பெரும் அழிவிற்கு காரணமாயிருக்கும் என்பதை இலங்கை மழை வெள்ளம் உலகிற்கு சொல்லிகொண்டே இருக்கின்றது

ஆண் தெருவில் விழுந்தால் கைதூக்கிவிட ஆளிருக்காது, ஆனால் சொப்பன சுந்தரிக்கு சுளுக்கு என்றால் கூட ஆண் வர்க்கமே பொங்கும் அல்லவா?

அப்படி இலங்கை பல நாடுகளுக்கு சொப்பன சுந்தரி, அதன் அமைவிடம் அப்படி

அதனால் உலகநாடுகள் ஆளாளுக்கு ஓடிப்போய் விழுந்து விழுந்து உதவி கொண்டிருக்கின்றார்கள்..

அந்த ராகவேந்திரர் ரஜினியை ரஞ்சித்திடமிருந்து காக்கட்டும்

Image may contain: 1 person, beard, glasses and close-upதிருமுருகன் கைதான விஷயத்தில் அரண்டு போயிருக்கின்றார் சீமான், அவரோடு அவரை போல ஈழ கான சபா எல்லாம் அப்செட்

எங்கே நம்மையும் கம்பிக்குள் வெளிச்சம் பார்க்க வைத்துவிடுவார்களோ என கச்சேரிக்கு பதில் ஒப்பாரியில் இறங்கியிருக்கின்றன‌

ரஜினியினை விமர்சிக்கும் குரல்கள் சற்று ஓய்ந்தன என்றால் இதுதான் சாக்கு என விஜயகாந்த் கட்சியினர் அடுத்து கல் எறிகின்றனர்

அதாவது விஜயகாந்த் மகா நல்லவராம், ரஜினியினை விட மிக பெரும் நல்லவராம், அப்படி எல்லாம் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்

விஜயகாந்த் வடலூர் வள்ளலாருக்கும் மேற்பட்டவரா இல்லையா என்ற சர்ச்சை வேறுவிஷயம், ஆனால் கவனிக்க தக்கது ஒன்று உண்டு

ரஜினியினை கண்டு முதலில் அஞ்சியவர் எம்ஜிஆர், வரலாறு அதனைத்தான் சொல்கின்றது, இருவருக்குமான உரசலும், தன் அவரசர போலீஸ் படத்தினை ரஜினியினை வைத்து நிரப்பகூடாது என உறுமியதும், உச்சமாக என் சினிமா வாரிசு பாக்யராஜ் (எம்ஜிஆருக்கும் பாக்யராஜூக்கும் என்ன?) என சில தமாஷ்களை செய்ததும்  வரலாறெங்கும் காண கிடக்கின்றது

இருவரும் ஒரு வார்த்தை பேசிய விஷயம் கூட இல்லை, ஆனால் அதனை தாண்டி ரஜினி வளர்ந்தார்

ஆனால் ஆர்.எம் வீரப்பன் விழாவில் ரஜினி அரசியல் பேசியது சர்ச்சை தொடங்கியது, அதுவும் அரசியல் அல்ல, மணிரத்னம் வீட்டில் குண்டுவெடித்த சம்பவத்தை சொன்னார்

ஏற்கனவே எம்ஜிஆர் வழியில் வந்த ஜெயலலிதாவிற்கும் , எம்ஜிஆருக்கு இருந்த அதே அச்சம் இப்பொழுது அதிகரித்தது
அப்பொழுதும் ரஜினி அரசியலுக்கு வரவில்லை

1996ல் ஜெயாவினை வீழ்த்த ரஜினி முதலில் தானாக கிளம்பவில்லை, மாறாக சோ, மூப்பனார், எல்லோரும் சேர்ந்தே அவரை ஆதரிக்க வைத்தனர், கலைஞர் முதல்வரானார்

அதன்பின் நடந்த மர்மம்தான் இன்னும் புரியவில்லை, மூப்பனார் பிரதமராவது மறுக்கபட்டபின் தமிழக காட்சிகள் மாறின, மூப்பனார் ஜெயா பக்கமே சென்றார், ரஜினி அமைதியானார், ஏதோ கசப்பான அனுபவம் கிடைத்திருக்கின்றது

அதுபற்றி மூப்பனாரோ, ரஜினியோ, சோ, சிதம்பரம் என யாரும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை, அந்த கூட்டணி ஏன் பிரிந்தது என இன்றுவரை தெரியாது

அதன் பின் ரஜினி அரசியல் பற்றி அதிகம் பேசவில்லை, சில இடங்களில் ராமதாஸ் கோஷ்டி சீண்டினாலும் அவர் பெரிதாக ரியாக்ஷன் காட்டவில்லை, பாபா பிரச்சினையில் கூட ரஜினி தன் முழுபலத்துடன் அவர்களோடு மோதவில்லை

இன்று கலைஞர் ஓய்ந்து, ஜெயா இல்லா நிலையில் அரசியலுக்கு வருவாரா? என்ற விவாதம் நடக்கின்றது

இந்திரா இருக்கும் வரை அவர் ஏன் வரவில்லை, எம்ஜிஆர் இருக்கும் வரை பன்னீர் ஏன் வரவில்லை என்பதெல்லாம் வெற்றுவிவாதம், அவரவர்க்கு நேரம் வரும்பொழுது யாரும் வரலாம்

பழனிச்சாமியும், பன்னீரும் முதல்வராக நேரம் வரவில்லையா அப்படித்தான்

இது ரஜினி கதை…

விஜயகாந்த் கதையே வேறு, அவரை யாரும் அரசியலுக்கு அழைக்கவுமில்லை, அவர் மேல் எதிர்பார்ப்புமில்லை

அவரை யாரும் எதிர்பார்க்கவில்லை, திடீரென அரசியல் ஆசை வந்தது கட்சி தொடங்கினார்

கொஞ்சம் வாக்கினை பெற்றதும் அவருக்கு தலைகால் புரியவில்லை, போதாகுறைக்கு எதிர்கட்சி தலைவரானதும் சுத்தமாக தன் நிலை மறந்தார்

அந்த போதையினை அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட வவ்வால்கள் இன்னும் ஏற்றி, அடுத்த முதல்வர் என காட்டி இன்று படுகுழியில் வீழ்த்திவிட்டன‌.

60 ஆண்டுகளாக அரசியல் செய்த கலைஞரிடம், 6 ஆண்டுகள் கூட அரசியல் செய்யாத விஜயகாந்த் சரிக்கு சரி என நின்றது பெரும் தவறு

இவரை அந்நாளைய கலைஞராகவும், கலைஞரை ராஜாஜியாகவும் எண்ணி இவர் மேல் நின்று பேசியதுதான் இன்று குப்புற கிடக்கின்றார்

மனிதரின் ஆசையும், எதிர்பார்ப்பும் அப்படி இருந்திருக்கின்றன‌

ரஜினி தனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பினையும் புறம் தள்ளிவிட்டு அமைதியாக தன் வழியில் சென்றவர், விஜயகாந்த் பாதை மாறி அரசியலுக்கு வந்தவர்

எல்லாவற்றிற்கும் ஆசைபடுவது விஷயம் அல்ல, கிட்டும் கிரீடம் கைக்கு எட்டும் தொலைவில் இருந்தும் தொடாமல் செல்ல ஒரு பெரும் மனது வேண்டும்

அது ரஜினியிடம் இருக்கின்றது, தன் இமேஜ் பற்றியோ , தன் உடை பாவனை பற்றியோ கொஞ்சமும் கவலை இல்லாதவர் ரஜினி

பெரும் செல்வாக்கிருந்தும் வழுக்கை தலை, தாடி என வந்து நிற்கின்றார், எம்ஜிஆரை இப்படி பழிவாங்குகின்றாரோ என்னமோ?, அந்த எளிமை இன்றைய நிலையில் யாருக்கும் இல்லை, விஜயகாந்த் தலையில் நட்டுவைத்த முடியும், முகத்தில் ஒட்டிவைத்த மீசையும் உண்டு

ரஜினியிடம் வியப்பது அதுதான், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கே பல கொலைகள் செய்ய துணிபவர்கள் உள்ள தமிழகத்தில் , தன் தொழிலை மட்டும் பார்த்துகொண்டு மிக அமைதியாக, எளிமையாக தன் வழியில் செல்பவர் ரஜினி

இப்பொழுதும் நேரம் வந்தால் அரசியலுக்கு வருவேன் என்கின்றார், இப்பொழுதுள்ள சூழலில் அவர் வரலாம்

தீபா மாதவனே கட்சி தொடங்கிய தமிழகத்தில் ரஜினிக்கு என்ன?

புழுக்களே ஊர்வலம் வரதுடிக்கும் தமிழகத்தில் அந்த பட்டத்து யானைக்கு என்ன? வரலாம், கதவு திறந்தே இருக்கின்றது

ஆக விஜயகாந்தையும் ரஜினியினையும் ஒப்பிட முடியாது, ஓடி சென்று கிரீடம் சூட்ட துடித்தவர் விஜயகாந்த்

கிடைத்த கிரீடத்தை தள்ளி வைத்துவிட்டு, நடந்து சென்றவர் ரஜினி, கிரீடம் துரத்தினாலும் அவர் நகர்ந்துகொண்டுதான் இருக்கின்றார்

அவர் சொன்ன நேரம் விரைவில் வரட்டும், அவரால் முடிந்ததை அவர் செய்யட்டும்

ராமன் ஆண்டாலும் பரதன் ஆண்டாலும் அயோத்தி நன்றாக இருக்க வேண்டும் என்பார்கள், அப்படி யார் ஆண்டாலும் தமிழகம் நன்றாக இருக்கவேண்டும்

அது ரஜினியாக இருந்தால்தான் என்ன? அல்லது அவர் கைகாட்டுபவராக இருந்தால்தான் என்ன?

ரஜினி தமிழகத்தை காப்பது இருக்கட்டும், முதலில் ரஜினியினை ரஞ்சித் என்பவரிடம் இருந்து காக்க வேண்டும்

கபாலி என சொல்லி அவரை என்னவெல்லாமோ செய்தவர், இப்பொழுது காலா என சொல்லி எப்படி எல்லாம் கொத்துகின்றாரோ.

ரஜினிக்கு ஜனரஞ்சகமான படங்களே பொருந்தும், டான் என்றால் கூட பாஷா வகைதான் பொருந்தும்

அவரை குப்பை தொட்டி அருகே இறுக்கமான‌ புரட்சியாளாரக அமரவைத்து ரஞ்சித் செய்யும் இம்சைகள் தாளவில்லை,

அதுவும் உடைககளை பார்த்தாலே முடியவில்லை, எல்லா படத்திலும் ரஜினி அம்மாதிரி ஒரு சில காட்சிகளில் பிளாஷ் பேக்கில் வருவார்,

ஆனால் படம் முழுக்க அப்படியே அலைய விடுவதுதான் ரஞ்சித் பாணி, அவரின் வட்டம் அப்படியான குறுகிய ஒரே நோக்கம் கொண்டது, பின்பு ரஜினி நிச்சயம் வருந்தலாம்

அந்த ராகவேந்திரர் அவரை ரஞ்சித்திடமிருந்து காக்கட்டும்

 

செய்தி அவியல் ….

வள்ளுவன் புலால் மறுத்தல் எழுதியிருக்கின்றான், பின்னும் ஏன் தமிழர் மாட்டுகறி பற்றி பேசுவது என சில பாஜக தரப்பு கிளம்புகின்றது

நல்ல அரசும், நல்ல துறவியும் எப்படி இருக்க வேண்டும் என்று கூடத்தான் வள்ளுவன் சொல்லியிருக்கின்றான்

அதனை நீங்கள் பின்பற்றி காட்டுங்கள்.

ராமர் , யோகா பற்றி எல்லாம் வள்ளுவன் சொல்லவே இல்லை ஆக அதனையும் விட்டுவிட்டு புலால் மறுத்தல் பேச வாருங்கள்


பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணை, முறைகேடான உறவில் ஈடுபட்டதாக கூறி கல்லால் அடித்து கொலை செய்ய கிராம பஞ்சாயத்து உத்தரவு

எப்படி பட்ட அறிவார்ந்த நாடாக பாகிஸ்தான் ஆகிவிட்டது?, மேற்படி சம்பவம் வர்சிஸ்தானில் நடந்தாலும் பழங்குடி என சொல்லலாம், ஆனால் நடந்திருப்பது பாகிஸ்தான் பஞ்சாபில்

இப்படி ஒரு நாடா? என சொல்லிவிடும் முன் அடுத்த கேள்வி எழுகின்றது

அதாவது இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஊறிய அந்த நாடு இப்படித்தான் செய்யும், ஆனால் இன்னும் கொஞ்சநாளில் மாட்டுகறி, மனுநீதி என பழமைவாதம் நோக்கி சென்றுகொண்டிருக்கும் நமது நாட்டிலும் இப்படி விபரீதம் நடக்கலாமோ?

மாட்டுகொம்பை காட்டி கற்பழித்த ஒருவனுக்கு, மனுநீதிபடி அவளை கட்டிவைத்துவிட்ட செய்திகள் பிற்காலத்தில் நடக்கலாம்

இதில் நாம் பாகிஸ்தானை பார்த்து பரிதாபபட என்ன இருக்கின்றது??


மோடியின் மூன்றாண்டு சாதனையை பற்றி தமிழக மக்கள் பேசாதது ஏன்? : தமிழிசை

மூன்றாண்டு கடப்பது எல்லாம் சாதனையா அம்மணி, ரோட்டில் ஓட்டை டவுண்பஸ் கூட 30 ஆண்டுகளாக ஓடிகொண்டிருக்கும்

மூன்றாண்டில் என்ன சாதனை என முதலில் சொல்லுங்கள், முடியாதல்லவா?

நீங்களும், எச்.ராஜாவும் பேசுவதை எல்லாம் சாதனை என்றா எடுத்துகொள்ள முடியும்??? அது இம்சை அல்லவா?

உங்கள் பேட்டிகளை கண்டபின்னும் தமிழகம் அமைதியாக இருக்கின்றது என்றால், மக்களுக்கு வந்த‌ அந்த “சகிப்பு தன்மைதான்” மோடி அரசின் சாதனையாக இருக்கமுடியும்.

இதனையும் மீறி சாதனை என்ன என தெரியவேண்டுமென்றால் , மாட்டு தொழுவம் பக்கம் சென்று கேளுங்கள்…

மாட்டிடம் கேட்க வேண்டிய கேள்வியினை மனிதரிடம் கேட்டால் எப்படி பதில் வரும் மேடம்??

தமிழக மக்கள் மாடுகளா என்ன?


சங்கமித்ராவிலிருந்து ஸ்ருதிஹாசன் வெளிவந்துவிட்டாராம்,

அதனாலென்ன குஷ்பூவினையே அந்த இளவரசியாக்கி படத்தை தொடரலாம், படம் பாகுபலி வரலாற்றை நிச்சயம் உடைக்கும்

ஆனால் ஆணாதிக்க சுந்தர்.சி அதனை செய்ய யோசிக்கின்றார்..


 சுவாதி கொலை திரைப்படமானது டிரெயிலர் வெளியிடபட்டதுஎங்கே? “அப்பல்லோ மிஷன்” என அந்த மருத்துவமனை சம்பவத்தை எவனாவது படமாக எடுக்கட்டும் பார்க்கலாம்..

ஏழை சொல் சபையேறாது, ஆனால் ஏழை வீட்டு சம்பவம் சினிமா வரை ஏறும்..


 சவுதி அமெரிக்க அடிமைகளில் ஒன்று, சமீபத்தில் அங்கு சென்ற டிரம்ப் பெரும் தொகைக்கு ஆயுதங்களை விற்றிருக்கின்றார்

அவை எல்லாம் ஈரானை தாக்க என்பது எல்லோருக்குமே தெரியும் பொழுது ஈரானுக்கு தெரியாதா?

ஈரானிய அதிபர் சாடியிருக்கின்றார், எப்படி?

“அமெரிக்கர்கள் பசுவிடம் பால் கறப்பது போல சவுதியிடம் கறப்பார்கள், பால் ஒய்ந்ததும்
வெட்டி கறியாக்கிவிடுவார்கள்..”

ஒருவேளை மோடியினை ஈரானிய அதிபர் லேசாக சீண்டியிருப்பாரோ?

என்ன செய்திகளோ? உள்ளூரில் மாட்டு சர்ச்சை என்றால், உலக செய்திகளும் அப்படி மாட்டுகறியாகவே இருக்கின்றன‌.


 

ஜிகா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுகின்றது

Image may contain: 1 person, sitting and babyஜிகா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுகின்றது என்கின்றது வெளிநாட்டு செய்தி, அது மருந்து இல்லா கொடூர நோய்..

இப்பொழுது இந்தியாவில் ஜிகா விஸ்வரூபமெடுக்கின்றது, ஆனால் அரசு இன்னும் கவனத்தில் கொள்ளவில்லை

குஜராத்திலும் வட இந்தியாவிலும் பிறந்த குழந்தைகள் ஜிகா நோயால் பாதிக்கபட்டிருப்பது உறுதி செய்யபட்டிருக்கின்றது

தொடக்கத்திலே கண்டறியபட்டும் அரசின் அஜாக்கிரதையோ அல்லது மறைத்துவிட்ட கொடுமையோ நடந்திருக்கின்றது, உங்கள் நாட்டில் இந்த நோய் இருந்தும் ஏன் அறிவிக்கவில்லை என இந்தியாவோடு உறவாடும் நாடுகள் கேட்கின்றன‌

அதாவது இங்கு ஜிகா வைரஸ் இருப்பது தெரிந்தால், அந்நாட்டு மக்களை அவர்கள் எச்சரிக்கை செய்யவேண்டுமல்லவா? அதற்காக‌

இந்திய அரசு இருக்கு ஆனால் இல்லை என்ற ரீதியில் என்னமோ சொல்லிவிட்டு நழுவியது

சர்வதேச விவகாரமாக இந்த பிரச்சினை உருவெடுக்கின்றது, இந்தியாவிற்கு தலைகுனிவு

இந்நிலையில் மாட்டுகறி சர்ச்சை ஏன் கிளம்பியது என்ற சிந்தனை இப்பொழுது உங்களுக்கு வரகூடாது, ஆம் வரவே கூடாது, அதெல்லாம் பசுவினை காக்கும் நடவடிக்கை

ஜிகா வைரஸ் கொடூரமமானது, பரவுகின்றது ஆனால் அரசு என்ன திட்டம் வைத்திருக்கின்றது என்றே தெரியவில்லை, ஒருவிதமான பரிதாப நிலை இது

மருந்து கண்டிபிடிக்காத , பிஞ்சுகளை, கருக்களை அழித்துவிட கூடிய ஒரு பெரும் நோய் பரவிகொண்டிருக்கும் வேளையில் இத்தேசம் மாட்டை கட்டி அழுகின்றது

அப்படி எந்த மாடு பாராளுமன்றத்து ஆராய்ச்சி மணியினை அடித்தது எனவும் தெரியவில்லை

ஆனால் வெளிநாடுகள் அபாய மணி அடிக்கின்றன, பொறுப்பில்லா இந்திய அரசு எனும் அளவிற்கு சில கருத்துக்கள் வருகின்றன‌

பிரதமர் வெளிநாட்டுக்கு பறந்துவிட்டார், ஜிகா வைரஸ் பறக்குமா?

இது தாக்கினால் சிலருக்கு மரணம், கர்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் மண்டையோடு பாதிக்கபட்டு, மூளை பாதிக்கபட்டு அகோரமாக குழந்தை பிறக்கும், அது வாழ்வதும் சந்தேகம்…

தலையினை குறிவைத்து தாக்கும் வைரஸ் இது

வட இந்தியாவில் இப்பொழுது இந்நோய் பரவுகின்றதாம், தெற்கே இன்னும் நிலை தெரியவில்லை, தமிழகத்தில் சும்மாவே அமைச்சர் வரை மூளை காலி, இதில் சிகா வந்து அவர்களை என்ன செய்ய??

இந்நோய் கருவுற்ற பெண்ணின் சிசுக்களையே பெரிதும் பாதிக்கும் என்பதால், இந்திய கர்பிணிகள் பரந்தாமன் கண்ணனை வேண்டிகொள்வது நல்லது

அவர்தான் பாரதபோரில் அர்ஜூனன் மனைவி வயிற்றின் சிசுவினை காப்பாற்றினாராம்

 
 

இந்தியாவின் நாட்டுபற்று மிக்க பெருமகன் கேபிஎஸ் கில் மறைந்துவிட்டார்

Image may contain: 1 person, hat, beard and close-upஇந்தியாவின் நாட்டுபற்று மிக்க, பிரிவினை வாதிகளை எல்லாம் ஒடுக்கவேண்டிய வழியில் ஒடுக்கிய அந்த பெருமகன் கேபிஎஸ் கில் மறைந்துவிட்டார்

ஒரு இந்தியன் எப்படி இருக்கவேண்டும் என சொன்ன அந்த கன்வார் பால் சிங் இனி இல்லை, கடந்த 26ம் தேதி இறந்திருக்கின்றார்

மிக உறுதியான இந்தியர் அவர், அசாமில் கலவரங்களை ஒடுக்கியது அவரின் காவல்துறை வாழ்வில் பொறுப்பான துவக்கம்

அக்காலங்கள் கடுமையானவை, சும்மவே மனதில் பொறுமிகொண்டிருந்த சீக்கியர்களுக்கு அந்த இந்தி திணிப்பும் இன்னும் சில புறக்கணிப்பும் பெரும் சீற்றத்தை கொடுத்த்தன‌

பிந்த்ரன் வாலே அவர்களின் பிதாமகன் ஆனார், பல நாடுகள் அவனை வளர்த்துவிட்டன, அந்த சீக்கியர் பொற்கோயில் கலவரமும் தொடர்ந்த இந்திரா படுகொலையும் இந்தியாவின் ரணங்கள்

கில் ஒரு சீக்கியரானாலும் இந்தியராய் நின்றார், பொற்கோவில் படுகொலைகளை தொடர்ந்தும் அங்கு தீவிரவாதிகள் மறைந்திருந்தனர், கில்லின் அணுகுமுறையில் அவர்கள் வெளியேற்றபட்டனர்

பின்பும் தன் கடுமையான அணுகுமுறையாலும், திறமையாலும் நாட்டுபற்றாலும் பஞ்சாபில் தீவிரவாதத்தை வேரறுத்தார் கில்

சொந்த இனத்தை விட நாடே முக்கியம் என நின்ற அந்த வீரசிங்கத்தின் தியாகத்திற்கு எதுவும் ஈடாகாது

இன்று பஞ்சாப் அரசு அந்த பெருமகனின் மரணத்தை சாதாரணமாக, ஆம் வயதானால் சாவார்கள் என சொல்லியிருப்பதே அதற்கு சான்று

அரசியல் அப்படித்தான்

பஞ்சாபில் அவர் தீவிரவாதத்தை வேறோடு அறுத்தார், பெரும் சாதனை அது, ஒரு சீக்கியன் சீக்கிய பூமியில் இந்தியனாய் நின்ற பெரும் சாதனை அது

அந்த கில்லின் வழிப்படி தமிழகத்திலும் ஒருவர் இருந்தார், அவர் மோகன் தாஸ், எம்ஜிஆரின் அரசியலில் அவருக்கு பங்கு உண்டு, எம்ஜிஆர் எப்படி அரசியலுக்கு கொண்டுவரபட்டார் என்பதை முழுக்க அறிந்தவர் அவர்

எம்ஜிஆர் ஆட்சியில் அவர்தான் இங்கு டிஜிபி, அப்பொழுதுதான் ஈழபோராளிகளுக்கு இங்கு பயிற்சி நடந்தது, புலிகளை எம்ஜிஆர் வளர்த்த காலம்

ஈழபிரச்சினையில் நாம் இப்படி செய்தால், காஷ்மீரிலும் பஞ்சாபிலும் தலையிடும் பாகிஸ்தானை கண்டிக்கும் உரிமையினை நாம் இழப்போம், கில் போன்றோர்
செய்த தியாகம் எல்லாம் வீணாகும் என எச்சரித்தது அந்த மோகன் தாஸ்.

தமிழகத்தில் ஈழபோராளிகளை கட்டுபடுத்தியதும், பிரபாகரனை வீட்டுகாவலில் வைத்ததும் அவர்தான், அது பிடிக்காமல்தான் ஓடினான் பிரபாகரன்

அவர் எச்சரித்ததுதான் பின்னர் நடந்தது, அவசரமாக ராஜிவ் அந்த தவறை சரி செய்ய முயன்று உயிரையும் விட்டார்

அப்படி காவல்துறை அதிகாரிகளுக்கு எல்லாம் நாட்டுபற்றிலும், கடமை உணர்விலும் வழிகாட்டியாய் நின்ற அந்த பெருமகன் கேபிஎஸ் கில்லுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் பெருமை அடைகின்றோம்

இத்தேசத்தில் பிரிவினைவாதிகள் குதிக்கும் பொழுதெல்லாம், அவர்களை அடக்க காவல்துறை களத்தில் இறங்கும்பொழுதெல்லாம் கில் நினைவுக்கு வருவார், எக்காலமும் வருவார்

அவரை போல ஆயிரம் கில் வரட்டும், இத்தேசம் பிரிவினைவாதிகளை போட்டு சாத்தி அடக்கட்டும், நாடு நிலைபெறட்டும்

அந்த வீர சிங்கத்திற்கு ஆழந்த அஞ்சலியோடு, இத்தேசத்திற்கு அவர் செய்த சேவைக்கு நன்றி கண்ணீரோடு அனுப்பி வைக்கின்றோம்

வந்தே மாதரம்.. ஜெய் ஹிந்த்

 

திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் உண்டு

திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் உண்டு, அப்படி மெரீனா சம்பவம் கூடுதலான ஒரு வழக்கு

பல வழக்குகள் பாயும் ஒருவன் குண்டர் சட்டத்தில் அடைபடுவது நடைமுறை, அதுதான் நடந்தது

இது தெரிந்தும் ஸ்டாலின் போன்ற அரசியல்வாதிகள் இந்த பிரிவினைவாதிகளை ஆதரிக்க தொடங்கியாயிற்று

இனி திமுக புலிகள் உறவு எந்த அளவு இருந்தது? எந்த எல்லை வரை இருந்தது? ஏன் திமுகவினை உணர்வாளர்கள் துரோகி என சொன்னார்கள்???

இப்படி பல விஷயங்கள் உண்டு, கலைஞரின் பெயர் அடிபடும் என்ற காரணத்திற்காக அவைகளை பட்டும் படாமலும் விமர்சித்ததுண்டு

ஸ்டாலின் இந்த அளவு சென்றுவிட்ட பின், இனி திமுக என்பது அந்த கும்பலில் முன்னாளைய ஒன்று என சொல்ல ஏகபட்ட விஷயங்கள் உண்டு

நாம் சொல்லாவிட்டாலும் இன்னொருவர் சொல்வர், அதனால் அவ்வப்போது எடுத்து விடலாம்.

கலைஞர் செய்ய யோசித்ததை எல்லாம் ஸ்டாலின் தயக்கமின்றி செய்ய தொடங்கிவிட்டார்..

ஆச்சரியமாக அதிமுக அரசு அதிரடி மூலம் தன் தேசபற்றை காட்டி, செய்ய வேண்டிய விஷயங்களை செய்கின்றது

அல்லது அவர்களை செய்ய வைத்து மத்திய அரசு விரிக்கும் வலையில் கொஞ்சமும் யோசனையின்றி சிக்கிவிட்டார் ஸ்டாலின்…

சீ..ச்சீ.. இவரெல்லாம் என சொல்ல தொடங்கிற்று தமிழகம்..

இன்றே இப்படி பல்டி அடிக்கும் நபர் , நாளை புலிகள் உத்தமர்கள் என கொடிபிடிக்க எவ்வளவு நேரமாகும்?

சீமானோடு கூட்டணி வைக்க எவ்வளவு நேரமாகும்???

அப்படியானால் நடிப்பின் மொத்த உருவமா இவர்கள்???

கேவலம் அரசியலுக்காக தேசவிரோத சக்திகளை ஆதரித்து திமுகவினை ஸ்டாலின் நாசமாக்கினார் என வரலாறு நாளை எழுதும்…

அது நடக்கத்தான் போகின்றது..