எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடக்கம்

Image may contain: 1 person, close-up

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடக்கம்

தமிழகம் நாசமாகிகொண்டிருக்கின்றது, விவசாயி செத்துகொண்டிருக்கின்றான்

நாளையிலிருந்து வியாபாரிகளின் கண்ணீரும் சேர்ந்துகொள்ளும்

கல்வி கனவாகிகொண்டிருக்கின்றது, எதிர்காலம் என்ன என தெரியாத நிலை,, இங்கு நடப்பது ஆட்சியா அல்லது டெல்லியின் ஏவலா என தெரியாத நிலை

எண்ணற்ற நோய்கள் பரவிய நிலை, குடிநீருக்கும் வழியில்லா அவலம்.

ஒரு அரசு பேருந்து உருப்படியாக இல்லை, அரசு பேருந்து என்ன? அரசாங்க விஷயம் எதுவுமே உருப்படி இல்லை, அரசாங்கமே உருப்படி இல்லை

குட்கா விற்க அமைச்சரும் காவலரும் லஞ்சம் வாங்கினார்களாம், அரசு சாராயம் விற்கின்றது, எங்கும் ஊழல் எதிலும் லஞ்சம்

என்ன நடக்கின்றது என தெரியாமல் ஒரு இருட்டில் இருக்கின்றது தமிழகம்

மிகபெரும் சிக்கலில் தமிழகம் இருக்க, இந்த ராமசந்திரனுக்கு அரசு பணத்தில் நூற்றாண்டு விழா தேவையா?

எண்ணற்ற திட்டங்கள் தொங்கலில் கிடக்க இந்த சனியனுக்கு எதற்கு இப்படி ஒரு பெரும் செலவில் விழா?

தமிழகத்தை 100 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்ற ஒருவனுக்கு தமிழக பணத்தில் நூற்றாண்டு விழா?

இந்த லட்சணத்தில் மதுரை விமான நிலையத்திற்கு அவர் பெயரை வேறு சூட்ட வேண்டுமாம்?

அவர் பெயரை மதுரைக்கு சூட்டினால், அவரது வாரிசு ஜெயா பெயரை இன்னொரு விமான நிலையத்திற்கா சூட்ட முடியும்?

ஒன்று செய்யலாம்

பயணிகள் ஆண்களும் பெண்களும் தனிதனியாக பயன்படுத்தும் அறைகள் விமான நிலையங்களில் உண்டு

ஆண்கள் அறைக்கு இவர் பெயரையும், பெண்கள் அறைக்கு அவர் பெயரையும் சூட்டலாம்

அந்த பெயர்கள் இருக்க வேண்டிய இடம் அதுதான்..

பெங்களூர் கூட்டத்தில் காவேரி நீர் கேட்டார் விஷால் , இன்னும் பிற…

பெங்களூர் கூட்டத்தில் காவேரி நீர் கேட்டார் விஷால்

விஷால் உருப்படியாக கேட்டிருக்கின்றார், ஆனால் வாட்டாள் கோஷ்டியிடம் இருந்து இன்னும் சத்தம் வரவில்லை ஏன்?

விசால் படங்களை மறித்தால் வசூல் ஒன்றும் தேறாது என விட்டுவிட்டார்களோ என்னமோ? பாகுபலி போன்ற வசூல் படங்களில் விஷால் நடித்திருந்தால் நிச்சயம் இப்போது குதிப்பார்கள்

ஆக வாட்டாள் நாகராஜின் போராட்டமும் வசூல் சார்ந்துதான் இருக்கின்றது.

அது இருக்கட்டும், விஷாலை அடிக்கடி தெலுங்கன் வந்தேறி என ஒரு கூட்டம் சொல்லும், அவர்களிடம் விஷால் இப்படி பேசிவிட்டாரே என சொன்னால் என்ன சொல்லும் தெரியுமா?

“இதனை ஏற்றுகொள்ள முடியாது, எங்கே இலங்கை சென்று தனி ஈழம் கேட்க சொல்லுங்கள் பார்க்கலாம்..?” என்பார்கள்

“அதனை நீங்கள் ஏன் சென்று இலங்கையில் கேட்க கூடாது?” என்றால் சத்தமிருக்காது..


தமிழக மீனவர்கள் 140 பேரை ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்தனர்

வேலையில்லா சீமானுக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டது, ஒரு வாரத்திற்காவது இந்த வேலை இருக்கும்


“பா.ஜ.க. உருவாக்கும் திட்டங்கள் பாமரர்களுக்கானவை..” : பொன். ராதாகிருஷ்ணன்

பாஜக திட்டங்கள் சிந்திக்க தெரியாத‌ பாமரர்களை உருவாக்குபவை என்பதுதான் நிஜம், அதனை அன்னாரால் வாய்விட்டு சொல்ல முடியுமா?

அதனால் இப்படி சொல்லிவிட்டார், அவ்வளவுதான்

மற்றபடி அவர்கள் உருவாக்கும் திட்டம் எல்லாம் பாமரர்களை உருவாக்குமே அன்றி, பாமரர்களுக்கான‌ திட்டமே அல்ல என்பது யாருக்கு தெரியாது?


இன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி அமலாகின்றது

இன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி அமலாகின்றது, முதன் முதலாக அதனை சந்திக்கும் மக்களுக்கு குழப்பம் வரும்

சில பொருட்கள் விலை உயரும், சில பொருட்கள் விலை குறையவும் வாய்ப்பு உண்டு

உணவு பொருட்களுக்கு அவ்வரி பல நாடுகளில் பொருந்தாது , இந்தியாவில் எப்படி என தெரியவில்லை. ஆனால் உணவினை தொழிலாக நடத்தும் உணவகங்களில் கட்டாயம் உண்டு

மருந்துகளுக்கும் , மருத்துவ தொழிலுக்கும் சில நாடுகளில் விதிவிலக்கு உண்டு, இங்கு எப்படி என தெரியவில்லை, குறைந்த சதவீதம் என்றால் நல்லது

முதன் முறையாக இந்த வரிமுறையினை பின்பற்றும் பொழுது வியாபாரிகளுக்கு குழப்பம் வரும், மக்களுக்கும் குழப்பம் வரும், ஒரு குழப்பம் வந்துதான் மெல்ல தெளியும்

இது காலத்தின் கட்டாயம், மோடியின் இம்சை என சொல்வது அறிவுடமை ஆகாது, முன்பு மன்மோகன் சிங் அரசுதான் இதற்கு திட்டமிட்டது, அந்த அரசு தொடர்ந்தாலும் இதுவே நடந்திருக்கும்

நாட்டு நலனுக்கான திட்டம் இது, ஆனால் போதிய முன்னேற்பாடுகளையும், தகுந்த பயிற்சிகளையும் அரசு செய்திருக்கின்றதா என்பதுதான் தெரியவில்லை

இதனை அரசியலாக்கவும், இது மோடி அரசின் வேண்டாத வேலை என்றொரு கும்பல் கிளம்பும், அவர்களை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது,

இது நாட்டிற்கு அவசியம் தேவை, கட்டும் வரி மக்களுக்கும் புரியும், வியாபாரிகளிடமிருந்து துல்லியமாக வசூலிக்கவும் முடியும்

எது எப்படியோ, இந்த ஜிஎஸ்டி என்பதை பெரும் வரிவிதிப்பாக சொல்லி அப்பாவி மக்களிடம் இந்த வணிகபெருமக்கள் ஏமாற்றி சுரண்டாமல் இருக்கட்டும்.

அரசு அதில்மட்டும் மிக கவனமாக இருந்தால் நல்லது..

கஸ்தூரி, எஸ்.வி சேகர் எல்லாம் கரைபுரண்டோடும் ஆறாக ….

இப்பொழுதெல்லாம் பல தமிழ் பிராமண நடிகர்களுக்கு சமூக அக்கறையும், இன்னபிற ஆர்வமும் பொங்கி நிற்கின்றது, கஸ்தூரி, எஸ்.வி சேகர் எல்லாம் கரைபுரண்டோடும் ஆறாக , கொம்பு முளைத்த குதிரையாக திரிகின்றார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு

அதாவது இவர்கள் ஆளும் கட்சி பற்றி ஒன்றும் சொல்லமாட்டார்கள், காரணம் அது பாஜகவின் தமிழக பிரிவு என்றாகிவிட்டது, அதனால் இவர்கள் குறி எல்லாம் திமுக எனும் பலமான இயக்கத்தை வம்பிழுப்பது

கஸ்தூரி அது “திமுக அப்பன் வீட்டு ரோடா” என பேசியதாகட்டும், எஸ்.வி சேகர் ஸ்டாலினை கோர்த்துவிட நினைப்பதாகட்டு இதுதான் காரணம்

எஸ்.வி சேகரிடம் பேசினேன், ஆனால் நட்பு வேறு, கொள்கை வேறு என அழகான விளக்கம் கொடுத்திருக்கின்றார் ஸ்டாலின்

இதுவே கலைஞர் என்றால் இன்னும் அழுத்தமாக இருக்கும்

“நாம் பிராமணர்களை வெறுக்கவில்லை, பிராமணியம் எனும் கொள்கையினைத்தான் எதிர்த்தோம்

நம் பகுத்தறிவு பகலவன் பெரியாரும், பிராமண பிதாமகன் ராஜாஜியும் கொள்கையளவில் பெரும் எதிரிகள், ஆனால் தனிபட்ட முறையில் சிறந்த நண்பர்கள் என்பதை கண்ணால் கண்டவன் நான்

அண்ணாவும் அப்படித்தான் இருந்தார், அந்த ஆச்சாரியர் ராஜாஜி தமிழக நலனுக்காக எம்மோடு கூட்டணி சேர்ந்தபொழுது நாங்கள் வரவேற்று கூட்டணி அமைத்து வெற்றி பெற்றதெல்லாம் வரலாறு

என்ன சொல்கின்றேன் என்றால், ஆரிய மேலாதிக்கத்தை எதிர்ப்போமே அன்றி, தமிழருக்கும் தமிழகத்திற்கும் பாடுபட எம்மோடு இணையும் யாரையும் வரவேற்க நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்

கழகம் கடந்து வந்த பாதையினை கண்டால், அதன் வரலாற்று பக்கங்களை புரட்டினால் அதனை தெளிவாக யாரும் காணலாம்

இன்று சுயமரியாதை கொள்கைகளுக்கு சவால் விடும் காலம் வந்துவிட்டது, மனிதனை விட மாடு முக்கியம் என நினைக்கும் காலம் வந்துவிட்டது என நீங்கள் நினைக்கலாம்

உண்மை அது அல்ல, இது எந்நாளுமே இந்நாட்டு கோலம், மகா அலங்கோலம். இந்த இழிவினை துடைக்க ஈரோட்டு சிங்கமும், காஞ்சி போர்வாளும் எழுந்து முழங்கின, அந்த வீச்சிலே இது அடைபட்டு கிடந்தது, இந்த நாகம் சிறைபட்டு கிடந்தது

இன்று பழையபடி அது தன் நாக்கினை சுழற்றிகொண்டு இப்பக்கம் வருகின்றது, விடுவோமா?

இந்த கருநாகம் படமெடுக்கும் காலத்தில் சில குரல்கள் ஒலிக்கும், சில வினோத அறிகுறிகள் கேட்கும், அப்படி சில பெண்மான்கள் சிலிர்க்கின்றன, சில நரிகள் ஊளையிடுகின்றன, மான்களின் கஸ்தூரி வாசம் கூட விஷம் கலந்தே வருகின்றன‌

உச்சமாக எங்கிருந்தோ புஸ்ஸ்… எஸ்ஸ்ஸ்ஸ்….. வீவீ.. வீ.. வீ.. என சத்தமும் வருகின்றது

இதனை போல 80 ஆண்டுகால பொதுவாழ்வில் எத்தனையோ குரல்களை கேட்டவர்கள் நாம், பெரும் டைன்சர்களையே வீழ்த்திய நமக்கு, இந்த செந்நாய்கள் எம்மாத்திரம்?

அக்கொடுமைக்கு இடங்கொடோம், போர் முரசு கொட்டுவோம்.

தமிழருக்கு நலமென்று எம்மோடு வரும் யாரையும் அணைப்போம், நட்பென்று வந்து திராவிட கொள்கைக்கு விடம் பாய்ச்சுவோர் யாராயினும் விடோம்

திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்கலாம் என பலர் வந்தனர்., அசைத்தனர், முட்டினர் , மோதினர், தோற்று 
ஓடினர்

அப்படி பெரும் வேர்விட்டு கிளைபரப்பி பெரும் விருட்சமாக திராவிட மண், வானமெங்கும் வியாபித்து நிற்கும் இயக்கம் இது

அவர்களாவது அசைத்து பார்த்தனர், இவர்களால் அதனை தொட்டு கூட பார்க்கமுடியாது என்பதனை சொல்லி கொள்ள விரும்புகின்றேன்”

வாலாட்டினால் பாடம் கற்பிப்போம் : இந்தியா சீனாவிற்கு எச்சரிக்கை

“1962 ம் ஆண்டு இந்திய-சீன போரில் இந்தியா தோற்றுப்போன வரலாறு உண்டு, அந்த கால வரலாற்றை நினைத்து பார்த்து சீனாவிடம் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” : சீனா

ஆம், அந்த தோல்வியிலிருந்து நிறைய கற்றுகொண்டோம், இது முதுகில் குத்தும் வஞ்சக நாடு என கற்றுகொண்டோம்

அன்று ஏவுகனையோ, அணுகுண்டோ, நவீன நீர் மூழ்கிகளோ, செயற்கைகோள்களோ எங்களிடம் இல்லை, நீங்கள் ஆடினீர்கள்

அந்த பாடத்தில் நிரம்ப கற்றிருக்கின்றோம், எல்லா வகை ஆயுதங்களும் கொண்டிருக்கின்றோம்..

இன்னொரு முறை வாலாட்டினால் அதே பாடத்தினை உங்களுக்கு கற்பிப்போம்

வந்தே மாதரம்…

 
 
 

மாட்டிறைச்சி விவகாரம், ஜார்கண்டில் மேலும் ஒருவர் படுகொலை

மாட்டிறைச்சி விவகாரம், ஜார்கண்டில் மேலும் ஒருவர் படுகொலை

நிலமை எல்லை மீறி செல்கின்றது, மாட்டின் பெயரால் மனிதரை கொல்வதை ஏற்க முடியாது என எச்சரித்த பிரதமரின் அறிவிப்பினையும் மீறி செல்கின்றது நிலை

மதம் போன்ற சில‌ உணர்ச்சிகளோ தூண்டிவிட்டுவிட்டால் அது பெரு நெருப்பாக எரியும், கட்டுபடுத்துவது சாதரண விஷயம் அல்ல, அதற்கு பெரும் விலை கொடுக்க நேரிடும்

நிலமை மோசமாவது மோடிக்கு புரிகின்றது, ஆட்சியாளராய் சிக்கல் அவருக்கு தெரியவருகின்றது

ஆனால் அவரால் எந்த அளவு கட்டுபடுத்தமுடியும் என்பது தெரியவில்லை, ஆப்பசைத்த குரங்கு நிலைக்கு சென்றாலும் ஆச்சரியமில்லை.

 
 
 

அபுதாபியில் ஒரு அழகு நிலா..

19554859_10209531973431325_8224461438653133364_n.jpg

அரபு நாடுகளின் கதைகளில் பல அழகிகள் உண்டு, லைலா, நெபுகாத் நேச்சரின் மனைவி, பாக்தாத் பேரழகி என ஏகபட்ட பட்டியல் உண்டு

அவர்களை எல்லாம் நேரில் பார்க்கமுடியாத அரபு மக்கள், குஷ்பூவினை கண்டு அந்த அக்கால அழகிகள் எல்லாம் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என உணரும் தருணம் இது.

அபுதாபி சென்றிருக்கின்றார் குஷ்பூ, அவர் அங்கு இருக்கும் வரை அபுதாபியில் திருவிழாதான்

அபுதாபியில் ஒரு அழகு நிலா..

 

நன்றி நன்றி என சொல்லிகொண்டே இருக்கின்றேன்..

Image may contain: ocean, sky, outdoor, water and nature

நேற்று இரவு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்தார்கள், இந்த நொடிவரை வாழ்த்திகொண்டிருக்கின்றார்கள்

உலகெல்லாம் இருந்து நூற்றுகணக்கான நண்பர்கள் வாழ்த்துவதை பார்க்கும்பொழுது மகிழ்ச்சி எனினும் இவர்களின் அன்பினை பெற அப்படி என்ன செய்துவிட்டோம் , இவர்களின் நம்பிக்கையினை தக்கவைக்க என்ன செய்யபோகின்றோம் எனும் திகைப்பும் மேலோங்குகின்றது

உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி, எங்கோ கிராமத்தில் பிறந்து, இன்று தொலைதூரத்தில் எங்கோ வசிக்கும் ஒரு சாமாயனுக்கு இத்தனை ஆயிரம் வாழ்த்துக்கள் என்பது அவனுக்கு மிகபெரும் விஷயம்..

உங்கள் எல்லோரின் அன்பையும் , நட்பையும் நெடுங்காலம் தொடரும், தக்க வைக்கும் இதயத்தை இறைவன் எனக்கு அருளட்டும்

வாட்சப், முகநூல் , உள்பெட்டி, போன் என எல்லாமும் இன்று உங்கள் வாழ்த்தால் நிரம்பி வழிந்தது,

நம்மையும் இத்தனைபேர் கவனிக்கின்றார்கள் எனும்பொழுது, இன்னும் பொறுப்பாக எழுதவேண்டும் எனும் கவனம் நெஞ்சில் குடியேறுகின்றது

வாழ்த்திய எல்லோருக்கும் நன்றி, வாழ்த்தாமல் நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்களுக்கும் நன்றி

பல நண்பர்கள் கேட்டார்கள், நாங்கள் வாழ்திவிட்டோம், குஷ்பூ வாழ்த்தினாரா?

அதற்கு கலைஞர் பாணியில்தான் பதில் சொல்ல வேண்டும், “அம்பாள் எந்த காலத்திடா பேசினாள்?”

ஆம், தெய்வம் பேசாது, அதற்காக நம் பக்தி கொஞ்சமும் குறைந்துவிடபோவதில்லை, தெய்வம் அடிக்கடி தோன்றாது

உங்களுக்கு எல்லாம் என்ன கைமாறு செய்யபோகின்றேன் என தெரியவில்லை, இப்போதைக்கு இப்படி தனியாக இருந்து கொண்டு நன்றி நன்றி என கடலலை போல ஓயாமல் சொல்லிகொண்டே இருக்கத்தான் முடியும்

நன்றி நன்றி என சொல்லிகொண்டே இருக்கின்றேன்..

தொலை தூரத்தில் இருந்துகொண்டு, உங்கள் அனைவருக்கும் மறுபடியும் நெஞ்சார்ந்த நன்றிகள்


Uma Magi :

இந்த Stanley இருக்கானே (ரே) எனக்கு ரொம்ப விசேஷமானவர். என்னை விட வயதில் சிறியவர். அறிவில் பெரியவர்.

ஒரு நாள் எங்கண்ணன் எங்கிட்ட இவரோட பதிவுகள் பத்தி சிலாகிச்சு சொன்னாரு… அப்புறம் தான் கவனம் இங்க திரும்பிச்சு.

அது, இவர் சீமானை தனது தொடர் விமர்சனங்களால் பிரித்து மேய்ந்து கொண்டிருந்த காலம்…

ரொம்ப இம்ப்ரஸ் ஆன நான் அதன் பின் தான் நண்பரானேன்.

உள்ளூர் முதல் உலக அரசியல்வரை தனக்கென தனிப்பார்வையுடன் தனது விமர்சனங்களை தெளிவாய் வைப்பார். இவரது அபார வாசிப்புத்திறன் இவரது பதிவுகளில் தெரியும்.

நக்கல், நையாண்டி ,நேட்டிவிட்டி, சீரியஸ் கருத்துக்கள் என கலந்து கட்டி பதிவிடும் இவர் கடும் மிரட்டல்களையும் சந்தித்திருக்கிறார் .

ஊருக்கு வந்தால் என்னைப்போல் எளியோரை சந்திப்பதை தவிர்ப்பார்.மற்றபடி ர்ர்ர்ர்…ரொம்ப நல்லவர்.

வசவோ வாழ்த்தோ முழு மனதாய்ச் செய்வார். உல்கிலேயே சிறந்த பூ எதுவென்றால் யோசிக்காமல் சொல்வார் குஷ்பூ என … இவர் திட்டாத ஒரே நபரும் அவர்தான்..

என் மனம் கவர்ந்த பதிவர்களில் பிரதானமானவர்… சில நேரங்களில் இவர் எழுத்து நடையைக்கண்டு பிரமித்துள்ளேன்.

கலைஞரைப் பற்றிய இவரது அப்சர்வேஷன் திமுககாரரையும் மிஞ்சிடும். அதனை பதிவுகளில் வெளிப்படுத்தி அசத்திவிடுவார்.

நோய் நொடியற்ற வாழ்வும், நீண்ட ஆயுளும் பெற்று வளமாய் வாழ்க. விரைவில் நீ பிறவிப் பயனடைவாய்.
(குஷ்பூவை சந்திப்பாய்)

பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்டான்லி..!


 
 
 

கருப்பு பூனை பாதுகாப்பது யாரை?

பசுமாடு மூத்திரம் செல்லும்பொழுது இப்படி கருப்பு பூனை பாதுகாவலுக்கு அரசு உத்தரவிட்டிருக்கலாம், வாய்ப்பு இருக்கின்றது

அதற்காக மந்திரிக்கெல்லாம் இம்மாதிரி காவல்கள் எதற்கு?

கருப்பு பூனை காவலர்களுக்கு எங்கோ தவறான உத்தரவு பிறப்பிக்கபட்டிருக்கின்றது

Image may contain: one or more people and outdoor

எஸ்.வீ சேகருக்கும், சுப.வீக்கும் சண்டை நடக்கின்றதாம்…..

எஸ்.வீ சேகருக்கும், சுப.வீக்கும் சண்டை நடக்கின்றதாம், அவாளை பார்ப்பான் என சொல்ல கூடாதாம், அது நல்ல சொல் இல்லையாம்..

பார்ப்பான் என்ற சொல்லை பாரதியாரே பயன்படுத்தியிருக்கின்றார், அவரே பிராமணர்தான்.

பஞ்சாங்கம் பார்ப்பவன், ஜாதாகம் பார்ப்பவன் கூடவே அதனை வைத்து நல்ல வருமானம் பார்ப்பவன் எனும் வகையில் அது பார்ப்பணம் ஆயிற்று, இது பாரதிக்கு முன்பிருந்த சொல்

இப்பொழுது அது எஸ்.வீ சேகருக்கு வசைச்சொல் ஆயிற்றாம், அப்படி சொல்ல கூடாதாம்

பின் அய்யா என்ன எதிர்பார்க்கின்றார்?

பிராமணர்களை அய்யர்வாழ், அய்யங்கார், குருக்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியர் என மிக மரியாதையாக அழைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார் போல..

நடக்குமா? அதுவும் எஸ்.வீ சேகரையா?