பெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா வந்திருந்தார்

பெரியவர் Avt Janardhanan மலேசியா வந்திருந்தார், நேற்று கிளம்பிவிட்டார், கிட்டதட்ட 1 மாதம் தங்கியிருந்தார்

வேகமான இந்த வாழ்க்கையில் அவ்வப்போதுதான் அவரை சந்திக்க முடிந்தது, அற்புதமான மனிதர் அவர்

அவரின் தந்தை கோவை கம்யுனிஸ்ட் தலைவராக இருந்திருக்கின்றார், இவர் ஜனதா தளத்தில் ஒரு காலத்தில் மிக வேகமான தொண்டராக இருந்திருக்கின்ரார்

தமிழக அரசியல் வரலாறு அவரிடம் கொட்டி கிடக்கின்றது, பேசும் பொழுது அவ்வளவு தகவல்கள் வருகின்றன, இந்த அரசியலை கவனித்து வளர்ந்த ஒருவராலன்றி அது சாத்தியமில்லை, அவ்வளவு தகவல்கள்

எல்லா காங்கிரஸ் மாற்று தலைவர்களிடமும் அவருக்கு நல்ல பழக்கம் இருந்திருக்கின்றது, அவ்வளவு அனுபவம் அவருக்கு இருக்கின்றது

வீட்டில் பெரும் புத்தகங்கள் சேகரித்து வைத்திருப்பதாக சொன்னார், அக்கால புத்தகங்கள், நூலகங்களுக்கு நிறைய கொடுத்தது போக மீதி இன்னு ஏராளம் இருக்கின்றது என்றார்

மிக அற்புதமான மனிதர், கோவை வாசிகள் புத்தக பிரியராக இருந்தால் அம்மனிதரை தொடர்பு கொள்ளலாம், அற்புதமான மனிதர் அவர்.

அவரிடம் பேசிவிட்டு திரும்பும்பொழுதெல்லாம் நூலகத்திலிருந்து வெளிவரும் மனநிலைதான் இருந்தது, அப்படி ஏராளமான தகவல்களை, வரலாறுகளை கொண்டிருக்கின்றார்

கோவை நண்பர்கள் யாராவது அரசியல், வரலாறு இன்னபிற விஷயங்களில் ஆர்வம் இருந்தால் அவரை தொடர்புகொள்ளலாம்

அவரின் மனைவியும் அற்புதமான பெண்மனி, இல்லாவிட்டால் இத்தனை புத்தகங்களை ஒரு மனிதன் சேகரிக்க முடியுமா?

அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, எனக்கும் சில புத்தகங்களை கொடுத்திருந்தார், அற்புதமான புத்தகங்கள்

பொதுவாக ஒரு புத்தகத்தை பலமுறை படிப்பது வழக்கம், அப்பொழுதுதான் சில வரிகள் வரலாறுகள் மனதில் தங்கும்

அப்படி அடிக்கடி அந்த புத்தகங்களை வாசிக்கின்றேன், அப்புத்தகங்களை பார்க்கும்பொழுதெல்லாம் அந்த மனிதர் முகமே தெரிகின்றது

கோவைவாசிகள் அவரை பயன்படுத்திகொள்வது நல்லது.

One thought on “பெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா வந்திருந்தார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s