சவுதி அரசருக்கு ஞானம் வந்திருக்கின்றது

வாரிசு அறிவிக்காமல் திரண்ட அதிகாரத்தின் , செல்வத்தின் அதிபதிகள் கண்ணை மூடுவதால் என்னென்ன விளைவு ஏற்படும் என்பதை அதிமுக உலகிற்கு சொல்லிகொண்டிருக்கின்றது

இதில் யாருக்கு ஞானம் வந்ததோ இல்லையோ சவுதி அரசருக்கு வந்திருக்கின்றது, தான் வாரிசு யார் என இப்பொழுதே அறிவித்துவிட்டார்

இனி புதியவர்தான் “செயல் அரசர்”.

வடகொரிய அதிபரை போல இந்த சவுதி செயல் அரசருக்கும் 30+ வயது, அதற்கேற்றபடி செயல்பாடும் இருக்கின்றது

ஏமனில் யுத்தம் நடத்துவது , கத்தாரை முறைப்பது என பல காரியங்களை செய்கின்றார், சவுதியில் புதிய பொருளாதார திட்டம், சவுதியில் வேலை செய்யும் அந்நிய நாட்டவர் சவுதி அரசை நிந்தித்தால் 20 ஆண்டு சிறை என்பதெல்லாம் இவரின் சிந்தனைகள்

இப்பொழுது புதிய அறிவிப்பும் வெளியிட்டிருக்கின்றார், சவுதியும் கத்தாரும் எல்லையினை பகிரும் நாடுகள் கத்தார் மக்கள் சவுதியிலும் உண்டு, பஞ்சாபிய எல்லை போல இரு பக்கமும் உறவுள்ள மக்கள் அவர்கள்

செயல் அரசரின் உத்தரவுபடி கத்தார் மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும், அவர்கள் படித்து கொண்டிருந்தாலோ, சவுதி ஆப்பரேஷன் தியேட்டரில் சிகிச்சை பெற்றுகொண்டிருந்தாலோ உடனடியாக வெளியேற வேண்டுமாம்

அதுவும் கத்தார் மக்கள் கால்நடைகளை கூட விட்டு செல்ல கூடாதாம், ஆடு மாடு ஒட்டகம் என எல்லாவற்றையும் கொண்டு செல்ல வேண்டுமாம், மீறி கத்தார் ஒட்டகம் சவுதியில் நின்றால் சவுதி சும்மா விடாதாம்

நல்ல வேளை, வீடுகளை சுமந்து செல்லாதவரை நல்லது என மூட்டை முடிச்சுகளுடன் கிளம்புகின்றார்கள் கத்தார்வாசிகள்

இதனிடையே இந்த தடைகளால் அச்சபட்ட கத்தார் பெருமளவில் அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் வாங்கி குவிக்கின்றது

கடந்தமாதம் தான் சவுதி அமெரிக்காவிடமிருந்து பல பில்லியன் டாலர்களுக்கு ஆயுதம் வாங்கியது குறிப்பிடதக்கது

ஆக ஒருவன் இரு நாட்டிற்கு ஆயுதம் விற்று சம்பாதிக்கின்ற சாமார்த்தியம் அங்கு நடக்கின்றது..

அமெரிக்கா அப்படித்தான் எல்லோருக்கும் கவலைபடாமல் ஆயுதம் விற்று சம்பாதிக்கும், ஆனால் இஸ்ரேலுக்கு மட்டும் மகா கவனமாக ஆயுதம் வழங்கும்

காரணம் பாகிஸ்தானோ, இந்தியாவோ, அரபுநாடுகளோ அமெரிக்க ஆயுதங்களை வாங்கினால் அப்படியே பத்திரமாக வைத்து கொள்ளும், ஷோ காட்டி மிரட்டும்

ஆனால் இஸ்ரேலியர் அப்படி அல்ல, அதனை அப்படியே அக்குவேறு ஆணிவேறாக பிரிப்பார்கள், படிப்பார்கள்

சத்தமே இல்லாமல் அதனை மேம்படுத்தி சொந்தமாக தயாரிப்பார்கள், இப்படி பல அமெரிக்க விமானங்கள் இஸ்ரேலிய தயாரிப்பாயினை, அமெரிக்கா கொடுத்த பேட்ரியாட் ஏவுகனைகள், ஆரோ ஏவுகனைகளாயின

இதனால் இஸ்ரேலுக்கு மட்டும் கொஞ்சம் யோசித்து மற்ற நாடுகளுக்கு கவலையே இன்றி அமெரிக்கா அள்ளிகொடுப்பது வழக்கம்

கத்தாரும், சவுதியும் அதனை பிரித்து பார்க்கவா போகின்றன? தொட்டுபார்த்தாலே பெரும் விஷயம்

இப்படிபட்ட அமெரிக்காவின் தந்திரத்தை, நண்பன் என சொல்லி மிக முக்கியமான நவீன விஷயங்களை தர தயங்கி ஆனால் சில நாடுகளுக்கு கொடுக்கும் அமெரிக்காவின் நுட்பத்தை இஸ்ரேல் எப்படி பெறும்?

அதுதான் இஸ்ரேல்

இப்படிபட்ட பணக்கார நாடுகள் அமெரிக்க ஆயுதத்தை வாங்கும் அல்லவா? வாங்கிவிட்டு பரணில் போடும் அல்லது நிறுத்தி வைக்கும்

அங்கிருந்து செய்யவேண்டியதை செய்து தொழில்நுட்பத்தை திருடிவருவது அல்லது வாங்கி வருவது இஸ்ரேலிய பாணி, பல ஆண்டுகளாக செய்கின்றது

அமெரிக்க நுட்பம் மட்டுமல்ல, அரபு நாடுகளுக்கு ரஷ்யா, பிரன்ஸ், இங்கிலாந்து,சீனா, என எல்லா நாடு கொடுத்த விஷயங்களும் இஸ்ரேலிய மேஜையில் இருக்கும்

அது இருகட்டும்

இப்பொழுது சவுதி செயல் அரசர் அடுத்து கத்தாருக்கு என்ன தடை விதிப்பார் என்பதுதான் எதிர்பார்ப்பு. கத்தார் காற்று சவுதிக்குள் வர கூடாது, கத்தார் கடல் மீன்கள் சவுதி கடல் பக்கம் வந்தால் சுடுவோம் என்ற அறிவிப்பு வந்தாலும் வரலாம்…

 
 
 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s