சிறு குறுச் செய்திகள்..

ராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்: முதல்வர் பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுவை முன்மொழிந்தனர்

அதாவது பாஜகவின் தமிழக கிளைச்செயலாளர்கள் இருவர் முன்மொழிந்திருக்கின்றனர், இதிலென்ன அதிசயம்

இவர்கள் ஆட்சியினை காப்பாற்றிகொள்ள தமிழிசையினை கூட முதல்வராக முன்மொழிய தயாராக இருப்பவர்கள், இதில் ராம்நாத் கோவிந்தனை முன்மொழிந்ததா ஆச்சரியம்?

இனி தமிழக பாஜக வரிசை பொன்னார், தமிழிசை என்பதை தாண்டி பன்னீர், பழனிச்சாமி, தம்பிதுரை தினகரன் என நீளும்..

மிஸ்டர் பன்னீர் செல்வம், அம்மா மரணத்திற்கு நீதிவிசாரணை கோரும் உங்கள் தர்மயுத்தம் என்னாயிற்று? அங்கு இன்று வழிமொழியும் நீங்கள், அந்த மர்ம மரணம் பற்றி விசாரிக்க சொல்ல கூடாதா?

மறந்துவிட்டதா?

ஜெயலலிதா என்றொருவர் இருந்தார், அதுவாவது நினைவிருக்கின்றதா?


புதுச்சேரியில் முதல்வருக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் தர்மயுத்தம் மர்மயுத்தம் எல்லாம் நடக்கின்றது, விரைவில் மல்யுத்தமே நடக்கும் போல‌

மாநில முதல்வர் தன் அதிகாரம் என்ன தெரியுமா? என முழங்குகின்றார், இவ்வளவிற்கும் யூனியன் பிரதேசம்

தமிழகத்தில் நிலமை என்ன?

இது எங்கள் உரிமை என சொல்ல உணர்சிமிக்க‌ முதல்வருமில்லை, அவர் சண்டையிட ஆளுநருமில்லை


தாழ்த்தபட்டவன் ஜனாதிபதி ஆவதில் இத்தேசத்தில் சிக்கல் இல்லை,

ஆனால் அவன் அர்ச்சகாராவது முடியாது, கருவறையில் நுழைய முடியாது அது “ஆகமவிதி”படித்தான் நடக்கும்.

விசித்திரமான நாடு இந்தியா


அரசியலுக்கு வருவது குறித்து நேரம் வரும்பொழுது அறிவிப்பேன் : ரஜினி

இந்த பத்திரிகைகாரர்களுக்கும் வேறு வேலையே இல்லை, இதனைத்தானே அவர் 25 வருடமாக சொல்லிகொண்டிருக்கின்றார், பார்க்கும் நேரத்தில் “என்ன மிஸ்டர் ரஜினி? நேரம் வந்துவிட்டதா? இல்லையா?” என கேட்டுவிட்டு சென்றால் பிரச்சினையே இல்லை

முதலில் யாராவது ரஜினிக்கு நல்ல கடிகாரமும், நாள் காட்டியும் வாங்கி கொடுத்தால் நல்லது. அவர் வீட்டு கடிகாரம் ஓடவே இல்லை, நாள்காட்டியும் கிழிக்கபடவில்லை


கத்தியோடு பாய்ந்து கொல்ல வரும் ஒருவன், குத்த ஓங்கிவிட்டு அமைதியாக திரும்பி சென்றால் என்ன நினைப்போம்? ஏதோ ஒரு பயம் இவனிடம் இருக்கின்றது, அதனால் துணிந்து விளையாடலாம் என நினைப்போம் அல்லவா?

அமெரிக்கா போரின் முனைக்கு சென்று திரும்பியபின் வடகொரியாவிற்கு குளிர்விட்டு போயிற்று, உளவாளி மாணவர் சர்ச்சையில் டிரம்ப் சாடியதற்கு அதிரடி பதில் கொடுத்திருக்கின்றது வடகொரியா

அதாவது “டிரம்ப் ஒரு மனநோயாளி, இவரின் போக்கு ஆபத்தானது, இவரை பின்பற்றினால் அமெரிக்காவும், தென்கொரியாவும் பேரழிவினை சந்திக்கும்” என அதிரடியாக சாடியிருக்கின்றது

இதற்கு அமெரிக்க தரப்பில் இன்னும் பதில் இல்லை

இது உண்மைதான் என எடுத்துகொண்டு வெள்ளை மாளிகை அமைதியாக இருக்கின்றதோ என்னமோ?


அமெரிக்காவிடம் இருந்து பறக்கும் கண்காணிப்பு கேமரா வாங்க மத்திய அரசு தீவிரம்

எல்லா நவீன‌ கருவியும் வெளிநாட்டிலிருந்து வாங்கவேண்டும், ஏன் உள்நாட்டில் செய்ய கூடாது எனும் கேள்வி எல்லாம் அவர்களுக்கு வராது

உள்நாட்டு மக்கள் என்னதான் செய்யவேண்டும்?

பசு வளர்க்க வேண்டும், மாட்டு மூத்திரம் குடித்துகொண்டு யோகா செய்யவேண்டும், என்பது மத்திய அரசின் கொள்கை


ஆர்வம் இருந்தால் எந்தத் துறையினரும் அரசியலுக்கு வரலாம்: பொன். ராதாகிருஷ்ணன்

அண்ணே.. நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்ணு சொல்லலாம், ரஜினி அரசிலுக்கு வரலாம்ண்ணு சொல்லலாம், நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம்..


 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s