ஒவ்வொரு சிக்கலிலும் கலைஞரை தமிழகம் நினைவு கூர்ந்தே தீரும்…

மிசா காலங்களை பற்றி எல்லோரும் எழுதிகொண்டிருக்கின்றார்கள்

இந்திய ஜனநாயகத்து கருப்பு நாட்கள் அவை, சஞ்சய் மீதான சர்ச்சை, தன் மீதான தீர்ப்பு இவைகளை திசை திருப்ப இந்திரா அதனை செய்தார் என்பதில் மாற்றுகருத்து இல்லை

இந்திய நாட்டிற்கு ஆபத்து வந்ததாகவும், அதனால் மிசா அறிவிக்க பட்டதாகவும் சொன்னார் இந்திரா

முதல் எதிர்ப்பு கலைஞரிடமிருந்துதான் வந்தது, “ஆபத்து வந்தது நாட்டிற்கா? இந்திரா காந்தி வீட்டிற்கா?” என கேட்டது அவர்தான், அது இந்தியா முழுக்க எதிரொலித்தது

காமராஜரை கலைஞர் அப்படி எதிர்த்தார், இப்படி எதிர்த்தார், வசைபாடினார் என்றெல்லாம் சொல்பவர்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும்

காமராஜரை அரசியல் ரீதியாக கலைஞர் எதிர்த்தாரே அன்றி, அவர் மீது மரியாதை இருந்தது. ஆனால் நேருவின் மகளாக இந்திரா இருந்து ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து காந்தியவாதிகளை எல்லாம் கைது செய்யும் பொழுது, காமராஜரை மட்டும் கொஞ்சநாளைக்கு விட்டு வைத்தபொழுது மனம் நொந்தார் காமராஜர்.

எதிர்ப்பு அதிகமானால் காமராஜரை கைது செய்யும் திட்டமும் இந்திராவிடம் இருந்தது, ஆனால் கலைஞர் காமராஜரை காக்க துணிந்து நின்றார்

“அய்யா ஆட்சியினை விட்டு உங்கள் பின்னால் வர நாங்கள் தயார், ஜனநாயகத்தை காப்போம் வாருங்கள்” என காமராஜரை கலைஞர் அழைத்தபொழுது, காமராஜரே ஆடிப்போனார்

தான் வளர்த்த இந்திரா தன்னை கைது செய்ய துடிப்பதையும், தன்னை எதிர்த்த கலைஞர் தனக்கு காவலாய் இருப்பதையும் எண்ணி எண்ணி மனம் பாதிக்கபட்டார் காமராஜர்

அது 3 மாதத்தில் அவரை கொன்றது, காமராஜரின் சாவுக்கு இந்த மிசாவே, காங்கிரசின் மிசாவே பெரும் காரணம், காந்தியாதியான காமராஜர் மிக சரியாக காந்தி பிறந்தநாளில் செத்தது இப்படித்தான்

கடைசி காலங்களில் அவர் கலைஞரை புரிந்துகொண்டார், எள்முனையும் அவருக்கு கலைஞர் மேல் வருத்தமில்லை

சோ ராமசாமியும், கலைஞரும் மிக துணிவாய் மிசாவினை எதிர்த்து நின்றார்கள், பத்திரிகை தணிக்கை இருந்தபொழுதும் அஞ்சலி கூட்டம், திருமண வீடு என அரசியல் கூட்டம் நடத்தி அசத்தினார் கலைஞர்

தேசிய கீதம் பாடவாவது தடை நீக்கம் உண்டா என நக்கலாக சீண்டினார் சோ.

மிசாவினை கலைஞர் எதிர்த்த அளவு ராஜதந்திரத்தோடு எதிர்த்த தலைவன் எவனுமில்லை

அதன் பின் என்ன ஆனது, மிசாவினால் வலுவடைந்த ஜனதா பல மாநிலங்களில் வளர்ந்து ஆட்சிக்கு வந்தது, தமிழகத்தில் அப்படி ஒரு கட்சி வளராமல் கலைஞர் பார்த்தும் கொண்டார்

இந்திராவினை எதிர்த்து கொண்டே தமிழகத்தில் ஜனதா வளராமல் பார்த்துகொள்வது பெரும் சிரமம், கலைஞர் அந்த நெருப்பாற்றை கடந்தார்

இப்படி கம்யூனிஸ்டுகள், சோ, கலைஞர் எல்லாம் மிக சிரமபட்டு, சில நேரங்களில் தலைமறைவாகி கூட பெரும் போராட்டம் செய்து ஜனநாயகத்திற்காக போராடிய காலங்களில் அந்த ராமசந்திரன் என்ன செய்தார்?

ஒன்றும் செய்யவில்லை, மீணவ நன்பன் போன்ற தன் கடைசிகால இம்சை படங்களில் கேமரா முன்னால் ஆடிகொண்டிருந்தார்

ஆனால் அவர்தான் அடுத்த இரு ஆண்டுகளில் தமிழக முதல்வராக ஜனநாயகம் காக்க கிளம்பினார்

தமிழக தலைவிதி அப்படி இருந்திருக்கின்றது, ராமசந்திரனாவது கட்சி வைத்திருந்தார், முணகிகொண்டிருந்தார்

இந்த புர்ச்சி தலைவி என்ன செய்துகொண்டிருந்தார், எப்படி ஜனநாயகம் காத்தார் என்பதற்கு ஐதராபாத் திராட்சை தோட்டம் தான் சாட்சி

ஆனால் அவர்தான் ராமசந்திரனுக்கு பின் தமிழக ஜனநாயாகம் காக்க வந்தவர்.

தமிழக ஜனநாயகம் எங்கு காணாமல் போனது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

மிசா காலம் நினைவுக்கு வரும்பொழுதெல்லாம், கலைஞரும் அவரின் அட்டகாசமான வழிகாட்டலும், மொத்த இந்தியாவும் அவரை மகா ஆச்சரியமாக பார்த்த காட்சிகளும் நினைவுக்கு வரும்.

இனி ஒரு மிசா வந்தால் தமிழகத்தில் எதிர்க்க அப்படி தலைவன் உண்டு என நினைக்கின்றீர்கள்? இல்லை

அவர் இல்லாத காலம் இப்பொழுதுதான் ஆரம்பம் , இனி ஒவ்வொரு சிக்கலிலும் அவரை தமிழகம் நினைவு கூர்ந்தே தீரும், அம்மனிதனின் ஆற்றல் அப்படி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s