கஸ்தூரி, எஸ்.வி சேகர் எல்லாம் கரைபுரண்டோடும் ஆறாக ….

இப்பொழுதெல்லாம் பல தமிழ் பிராமண நடிகர்களுக்கு சமூக அக்கறையும், இன்னபிற ஆர்வமும் பொங்கி நிற்கின்றது, கஸ்தூரி, எஸ்.வி சேகர் எல்லாம் கரைபுரண்டோடும் ஆறாக , கொம்பு முளைத்த குதிரையாக திரிகின்றார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு

அதாவது இவர்கள் ஆளும் கட்சி பற்றி ஒன்றும் சொல்லமாட்டார்கள், காரணம் அது பாஜகவின் தமிழக பிரிவு என்றாகிவிட்டது, அதனால் இவர்கள் குறி எல்லாம் திமுக எனும் பலமான இயக்கத்தை வம்பிழுப்பது

கஸ்தூரி அது “திமுக அப்பன் வீட்டு ரோடா” என பேசியதாகட்டும், எஸ்.வி சேகர் ஸ்டாலினை கோர்த்துவிட நினைப்பதாகட்டு இதுதான் காரணம்

எஸ்.வி சேகரிடம் பேசினேன், ஆனால் நட்பு வேறு, கொள்கை வேறு என அழகான விளக்கம் கொடுத்திருக்கின்றார் ஸ்டாலின்

இதுவே கலைஞர் என்றால் இன்னும் அழுத்தமாக இருக்கும்

“நாம் பிராமணர்களை வெறுக்கவில்லை, பிராமணியம் எனும் கொள்கையினைத்தான் எதிர்த்தோம்

நம் பகுத்தறிவு பகலவன் பெரியாரும், பிராமண பிதாமகன் ராஜாஜியும் கொள்கையளவில் பெரும் எதிரிகள், ஆனால் தனிபட்ட முறையில் சிறந்த நண்பர்கள் என்பதை கண்ணால் கண்டவன் நான்

அண்ணாவும் அப்படித்தான் இருந்தார், அந்த ஆச்சாரியர் ராஜாஜி தமிழக நலனுக்காக எம்மோடு கூட்டணி சேர்ந்தபொழுது நாங்கள் வரவேற்று கூட்டணி அமைத்து வெற்றி பெற்றதெல்லாம் வரலாறு

என்ன சொல்கின்றேன் என்றால், ஆரிய மேலாதிக்கத்தை எதிர்ப்போமே அன்றி, தமிழருக்கும் தமிழகத்திற்கும் பாடுபட எம்மோடு இணையும் யாரையும் வரவேற்க நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்

கழகம் கடந்து வந்த பாதையினை கண்டால், அதன் வரலாற்று பக்கங்களை புரட்டினால் அதனை தெளிவாக யாரும் காணலாம்

இன்று சுயமரியாதை கொள்கைகளுக்கு சவால் விடும் காலம் வந்துவிட்டது, மனிதனை விட மாடு முக்கியம் என நினைக்கும் காலம் வந்துவிட்டது என நீங்கள் நினைக்கலாம்

உண்மை அது அல்ல, இது எந்நாளுமே இந்நாட்டு கோலம், மகா அலங்கோலம். இந்த இழிவினை துடைக்க ஈரோட்டு சிங்கமும், காஞ்சி போர்வாளும் எழுந்து முழங்கின, அந்த வீச்சிலே இது அடைபட்டு கிடந்தது, இந்த நாகம் சிறைபட்டு கிடந்தது

இன்று பழையபடி அது தன் நாக்கினை சுழற்றிகொண்டு இப்பக்கம் வருகின்றது, விடுவோமா?

இந்த கருநாகம் படமெடுக்கும் காலத்தில் சில குரல்கள் ஒலிக்கும், சில வினோத அறிகுறிகள் கேட்கும், அப்படி சில பெண்மான்கள் சிலிர்க்கின்றன, சில நரிகள் ஊளையிடுகின்றன, மான்களின் கஸ்தூரி வாசம் கூட விஷம் கலந்தே வருகின்றன‌

உச்சமாக எங்கிருந்தோ புஸ்ஸ்… எஸ்ஸ்ஸ்ஸ்….. வீவீ.. வீ.. வீ.. என சத்தமும் வருகின்றது

இதனை போல 80 ஆண்டுகால பொதுவாழ்வில் எத்தனையோ குரல்களை கேட்டவர்கள் நாம், பெரும் டைன்சர்களையே வீழ்த்திய நமக்கு, இந்த செந்நாய்கள் எம்மாத்திரம்?

அக்கொடுமைக்கு இடங்கொடோம், போர் முரசு கொட்டுவோம்.

தமிழருக்கு நலமென்று எம்மோடு வரும் யாரையும் அணைப்போம், நட்பென்று வந்து திராவிட கொள்கைக்கு விடம் பாய்ச்சுவோர் யாராயினும் விடோம்

திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்கலாம் என பலர் வந்தனர்., அசைத்தனர், முட்டினர் , மோதினர், தோற்று 
ஓடினர்

அப்படி பெரும் வேர்விட்டு கிளைபரப்பி பெரும் விருட்சமாக திராவிட மண், வானமெங்கும் வியாபித்து நிற்கும் இயக்கம் இது

அவர்களாவது அசைத்து பார்த்தனர், இவர்களால் அதனை தொட்டு கூட பார்க்கமுடியாது என்பதனை சொல்லி கொள்ள விரும்புகின்றேன்”

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s