கமலஹாசனுக்கு குஷ்பூ ஆதரவு

20430013_10209837092019099_4781633466315513425_n.jpg

கமலஹாசனுக்கு குஷ்பூ ஆதரவு, கமலஹாசனின் குரலுக்கு துணை நிற்பதாக செய்தி தெரிவித்துள்ளார்

மொத்த திரையுலகமும் திகைத்து நிற்க, காங்கிரஸ் கட்சி கூட கம்மென்று இருக்கும்பொழுது, கமல்ஹாசனுக்கும் அரசுக்கும் இடையே நடக்கும் மோதலில் குஷ்பூ கமலஹாசனுக்கு துணிவாக தன் ஆதரவினை தெரிவித்திருக்கின்றார்,

உங்கள் பின்னால் தோழியாக நிற்பேன், உங்கள் நோக்கம் நிறைவேறட்டும் என மிக தைரியமாக சொல்லியிருக்கின்றார்

தமிழகத்தில் எந்த நடிகைக்கும் இல்லா தைரியம், எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத தைரியம் அவரிடம் இருக்கின்றது, அந்த தைரிய நாயகியினை வாழ்த்துகின்றோம்

தலைவி ஆதரித்தால் அது கமலஹாசனாக இருந்தாலும் சரி காயத்திரியாக இருந்தாலும் சரி, ஆதரிக்கவேண்டியது சங்கத்தின் கடமை என்பதால், கமலஹாசனுக்கு ஆதரவினை தெரிவித்துகொள்வோம்

இனி அதிமுக அமைச்சர்கள் குஷ்பூவினையும் தாக்கி அறிக்கைவிடுவார்கள், அதற்கு எல்லாம் தக்க பதில்கொடுத்து தலைவியினை ஆதரிக்கவேண்டும் என கோட்டான கோடி ரசிகர்களை கேட்டுகொள்கின்றோம்.

தமிழக நலனுக்காக குரல்கொடுக்கும் கமலஹாசனுக்கு குஷ்பூ ஆதரவு தெரிவித்திருப்பது, தமிழகத்தின்பால் அவர் கொண்டுள்ள அக்கறையினையும், தமிழகம் நன்றாக இருக்கவேண்டும் என்ற அவரின் அபிமானத்தையும் தெரிவிக்கின்றது, அவரை வாழ்த்துகின்றோம்

சிறிய ஓய்விற்கு பின் மறுபடியும் அதிரடிகளை தொடங்குகின்றார் குஷ்பூ

நீ கலக்கு ராசாத்தி

 
 

மத்திய அரசு ரேஷன் விஷயங்களில் தன் பிடியினை இறுக்கிவிட்டது

மத்திய அரசு ரேஷன் விஷயங்களில் தன் பிடியினை இறுக்கிவிட்டது, சில மாநிலங்களில் இனி அது மூடபடலாம், பின் அது கோசாலைகளாக மாற்றபடலாம், ஊழியர்கள் பசுகாவலர்களாகலாம்

ஆனால் தமிழகம் 1967ல் இருந்தே இவ்விஷயத்தில் தனித்து நிற்கின்றது, மத்திய அரசின் உதவி குறைக்கபட்டாலும் அது இயங்கிகொண்டுதான் இருக்கும், தமிழக அமைச்சர் அதனைத்தான் சொல்கின்றார்.

இதனை வைத்தேதான் ஆட்சிக்கே வந்து, அதனை தொடர்ந்து அது சாதனை என சொல்லிகொள்ளும் அரசுகள் இவை, ரேஷன் கடைகளை மூடவே முடாது

நிச்சயம் தமிழக ரேஷன் கடைகள் தொடர்ந்து இயங்கும் சந்தேகமில்லை, மதுகடைகள் இருக்கும் வரை அது சாத்தியம்

கவனித்தால் ஒரு விஷயம் புரியும்

முன்பெல்லாம் மத்திய அரசின் நிதிகளை மறைத்து மொத்தமும் தாங்களே செய்வது போல தமிழக அரசு காட்டிகொள்ளும்,

இனி மத்திய அரசு உதவியினை நிறுத்தினாலும் அந்த சுமையினை சுமக்க மாநில அரசு தயாராக இருக்கவேண்டும், இல்லையென்றால் மாநிலம் மொத்தமாக சேர்ந்து மாநில அரசை குதறியே விடும்

இப்போதைக்கு தமிழக ரேஷன் கடைகளுக்கு ஆபத்தில்லை, ஆனால் செலவுகள் கூடும், கூடினால் என்னாகும்?

மதுகடைகள் அதிகரிக்கலாம்..

 
 
 

அணுவீச்சை கட்டுபடுத்த வீணை வாசிப்பா?

Image may contain: textஅணுகுண்டு தாக்குதல் அச்சத்தில் இருக்கும் தென்கொரிய, ஜப்பான், அமெரிக்க தலைவர்களும், உள்ளுக்குள் அதே பயத்தில் இருக்கும் வடகொரிய வெள்ளை தக்காளியும் மிக வேகமாக வீணை கற்றுவருவதாக தகவல்..

இந்த வித்தை ஈரானுக்கு தெரிந்துவிட கூடாது என்பதற்கா ஈரான் மீது வீணை தடையினை செய்திருக்கின்றது இஸ்ரேல்

இந்தியாவிற்கு போலி வீணைகளை தயாரித்து அனுப்புங்கள், இசை வராமல் போகட்டும் என உத்தரவிட்டிருகின்றது சைனா

எங்களுக்கு வீணை வாசிக்க தெரியாதே என அழுகின்றது பாகிஸ்தான்

இனி துப்பாக்கி எதற்கு? ஏவுகனை எதற்கு? எல்லோரும் வீணை வாசித்தே எதிரியினை கொல்லலாம், நாட்டை காக்கலாம்

முதலில் இந்த பக்தர்களை புக்குஷிமாவில் இவர்களை வாசிக்கவிட்டால் நல்லது, அட புக்குஷிமா எதற்கு? கல்பாக்கம்,கூடன்குளம் பக்கம் வீணையோடு அனுப்பலாம்.

இனி இவர்கள் ஆராய்ச்சி தவில், மிருதங்கம், நாதஸ்வரம் என தொடரும்

அதிலும் சொல்வார்கள், தந்தையின் நாதஸ்வர இசை கேட்டு வளர்ந்துதான் கலைஞருக்கு அம்ம்புட்டு அறிவு…

(சரஸ்வதியும், நாரதரும் வீணையோடு அலைவது எதற்கு? வான்வெளியின் அணுவீச்சை கட்டுபடுத்த, சும்மா அல்ல‌)

 
 

நானும் இந்தியாவினை நேசிக்கின்றேன் : காசி ஆனந்தன்

Image may contain: 1 person, smiling, glasses and close-upபிரபாகரன் போலவே நானும் இந்தியாவினை நேசிக்கின்றேன் : காசி ஆனந்தன்

இவர் தாடியினை இழுத்து வைத்து கேட்கலாம், அந்த பிரபாகரன் இந்தியாவினை நேசித்திருந்தால் 1500 இந்திய வீரை கொன்றிருப்பானா? ராஜிவ் காந்தியினை கொன்று ஈழதமிழரை இந்தியாவில் இருந்து பிரித்திருப்பானா?

2009லும் இந்தியா கொடுத்த அமைதி ஒப்பந்தத்தை கிழித்து எறிந்திருப்பானா?

கடைசிவரை தான் செய்தது தவறு என சொன்னனா? மாறாக அவன் நேசகரம் நீட்டுவானாம் இந்தியா ஓடி சென்று அணைக்கவேண்டுமாம்

அன்னார் பாஜகவிடம் அணுக்கமாக இருப்பாராம், காங்கிரஸ் அரசு துரோகம் செய்ததால் அவர் அவர்களோடு பேசவில்லையாம், ஆனால் பிஜேபி நல்ல கட்சியாம்

சரி எங்கே அந்த நல்ல கட்சி தனி ஈழம் அமைத்து கொடுத்துவிடட்டும் பார்க்கலாம், அட அந்த 13ம் சட்டதிருத்ததை செய்யட்டும் பார்க்கலாம்,

அவ்வளவு ஏன் போர்குற்றத்தில் ராஜபக்சேவினை தண்டிக்கட்டும் பார்க்கலாம்?

குறைந்தபட்சம் ராஜிவ் கொலையாளிகளையாவது விடுவிகட்டும் பார்க்கலாம்? செய்யுமா? செய்யாது

இந்தியாவின் நிலைப்பாடு இப்படி இருக்க, அன்னார் என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருக்கின்றார்

இலங்கையினை சீனா விழுங்கிவிடுமாம்

அன்று அமெரிக்கா விழுங்கிவிடும் என சொல்லி உங்களை வளர்த்துவிட்டு பட்டபாடு போதாதா? இனி சீனாவினை சொல்லி பயமுறுத்துவீர்களா?

வரட்டும் அடிக்கட்டும், ஏற்கனவே ஈழபுலிகளால் 1500 ராணுவத்தாரை இழந்த தேசம்தான் இது, அதனை விட சீனன் ஒன்றும் கிழித்துவிடமாட்டான், எம் கடற்படை சும்மா விடாது

ஆமாம், நான் காங்கிரசை எதிர்ப்பேன் , ஆனால் ஒன்றுமே செய்யாத பாஜகவினை இந்து எனும் பெயரில் ஆதரிப்பேன் என சொல்லிவிட்டு செல்லும் ஐயா

காங்கிரசாவது ஈழமக்களுக்காக சில சவால்களை எடுத்து கையினை சுட்டது, இந்த பிஜேபி செய்தது என்ன ஒன்றுமே இல்லை

இதனை சொன்னால், ஆம் பிஜேபி ஒன்றுமே செய்யவில்லை என்பதால்தான் கைகோர்க்கின்றேன் என்கின்றார் காசி ஆனந்தம்

ஏதாவது புரிகின்றதா? புரியாது. இதுதான் இவர் தொடங்கியிருக்கும் இந்திய ஈழ நட்புறவு மையத்தின் கொள்கை

அய்யா, இந்த மையத்தை பிரபாகரன் இருக்கும்பொழுது நீவீர் ஏனய்யா தொடங்கவில்லை?

உண்மையினை சொல்லுங்கள், அமைதிபடையினை விலக்கியது கலைஞர் என சொல்லுங்கள், பல இடங்களில் புலிகளுக்கு உதவியது கலைஞர் என்ற உண்மையினை சொல்லுங்கள், இறுதியில் பிரபாகரன் செய்தது தவறு என சொல்லுங்கள்

அப்படி உண்மையினை சொன்னால் நீர் திமுக மேடையில்தான் இருப்பீர், அந்த காசி ஆனந்தனை வரவேற்போம்

ஆனால் கலைஞர் செய்த உதவிகளை மறந்து, காங்கிரஸ் உங்களுக்கும் பிரபாகரனுக்கும் செய்த உதவிகளை எல்லாம் மறந்து, பிஜேபி மேடையில் இருப்பதை கூட பொறுப்போம், காரணம் நன்றி என்பது உங்கள் கும்பலுக்கு சுட்டுபோட்டாலும் வராது.

ஆனால் எங்காவது நான் பிராபகரன் போல இந்தியாவினை…. என நீர் தொடங்கினால் சும்மா விடுவதாக இல்லை

இவரை விமர்சிப்பவர்கள் சிங்கள அரசின் கைகூலிகள் என்கின்றார்

மிஸ்டர் காவி ஆனந்தம், உங்களை விமர்சிக்க சிங்களன் ஏன்? ஒவ்வொரு இந்தியனும் , அந்த உணர்வுள்ள ஒவ்வொருவனும் புலியினையும் உங்களையும் எதிர்ப்பான்

உங்களை ஆதரித்துதான் எங்கள் தமிழுணர்வை காட்டவேண்டிய அவசியமில்லை

இதுகாறும் இல்லாமல் இப்பொழுது திடீரென இந்திய அரசோடு நீங்கள் குலவுவதை பார்த்தால், புலி பத்மநாபன் சிங்கள அரசோடு இருப்பது போல, கருணா இருப்பது போல நீரும் ரகசிய சிங்கள ஏஜண்ட் எனும் சந்தேகம் இந்தியருக்குத்தான் ஏற்படுகின்றது

எமது நாட்டில் இருந்துகொண்டு, எங்கள் நாட்டு உணர்வினை பேசும்பொழுது நீ சிங்கள கைகூலி என இந்தியர்களை சொல்ல உமக்கு எவ்வளவு தைரியம் அய்யா?

இதனை நீர் லங்காபுரியில் இருந்து சொல்லவேண்டும், எம் நாட்டுக்குள் வந்து எம்மை நோக்கி சொல்லகூடாது புரிகின்றதா?

உணர்ச்சியுள்ளவர் என்றால் திமுக புலிகளுக்கு செய்த எல்லா உதவிகளும் நினைவிற்கு இருந்திருக்கவேண்டும், அதுதான் உணர்ச்சி

இப்படி பச்சை சந்தர்பவாதம் என்பது உணர்ச்சி அல்ல?

இதற்கு மேலும் பேசினால், நீர் உணர்ச்சி கவிஞர் அல்ல, உணர்ச்சியற்ற …………………..

இவரது பேட்டியினை செய்தியாக்கிய அந்த ஆனந்த விகடன் ஒரு தேசதுரோக பத்திரிகை, நாளை பாகிஸ்தான் தீவிரவாதி , மாவோயிஸ்டுகளையும் இதே போல செய்தியாக்குவார்கள்

ஆனந்த விகடனின் தேசதுரோகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்

இந்த அரசு மாணவர்களை நக்சலைட்டுகள் என கைது செய்கின்றது, பேராசிரியரை நாட்டுக்கு ஆபத்தானவர் என கைது செய்கின்றது

ஆனால் இந்த அந்நியநாட்டு ஆபத்தான பிரிவினை கும்பலகளை மட்டும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கின்றது

தமிழக அரசும், இந்திய அரசும் திருந்தினால் விகடன் தானாக திருந்தும்

 
 

புட்டீன் செய்திருக்கும் ராஜதந்திரம் என்ன தெரியுமா?

Image may contain: 1 person, sunglasses“ரஷ்யா உனக்கு உதவியதா சொல், சொல்.” .

என டிரம்ப் சட்டையினை பிடித்து அமெரிக்க மன்றங்கள் கேட்டுகொண்டிருக்க, மிக அசால்ட்டாக 750 அமெரிக்க அதிகாரிகளை “வெளியே போ” என தள்ளி கதவினை பூட்டியிருகின்றார் புட்டின்

தூதரக அதிகாரிகள் என்னென்ன வேலை செய்வார்கள் என்பது முன்னாள் உளவாளியான புட்டினுக்கு தெரியாதா? விரைவில் நடைபெறவிருக்கும் ரஷ்ய தேர்தலில் ஏதோ இந்த அமெரிக்க தூதர்கள் தெளிக்க , கழுத்தை பிடித்துவிட்டார் புட்டின்

இது போக உக்ரைன் பிரச்சினை, எஸ்தோனியாவில் ரஷ்யாவினை சீண்டும் ஏவுகனை தடுப்பு சாதனம் அமைத்தல் என சில பிரச்சினைகளின் முடிவு இது

ராஜதந்திர மொழியில் புட்டீன் செய்திருக்கும் காரியத்தின் அர்த்தம் என்ன தெரியுமா?

“எப்பொழுதும் சண்டைக்கு தயார்..” எனும் அறிவிப்பு..

எங்கோ, ஏதோ நடந்திருக்கின்றது, கடந்தவாரம் சோதனை வெற்றி என அறிவிக்கபட்ட அமெரிக்க ஏவுகனை தடுப்பு சாதனம் கொரியபகுதியில் நிறுவபட்டிருப்பது தான் புட்டீனின் கோபத்தை சீண்டியிருக்கலாம்

காரணம் அதில் ரஷ்ய எல்லையும் உண்டு, ஒரு நாடு தன் எல்லையில் இன்னொரு நாடு இப்படி செய்ய அனுமதிக்காது

எதனையோ மனதில் வைத்து தில்லாக அமெரிக்கர்களை வெளிதள்ளுகின்றார், கேட்டால் இது கூடுதல் பொருளாதார தடை கொண்டுவரும் அமெரிக்க முயற்சிக்கு பதிலடி என்கின்றார்

எங்கோ மேகம் கறுக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது

இது இருக்கட்டும்

பாகிஸ்தானின் புதிய பிரதமர் இன்று தேர்வு செய்யபடுவாராம், நமது பிரதமர் ஒரு மாதிரியானவர், கடந்த முறை திடீரென பாகிஸ்தானில் இறங்கி “ஹாய் நவாஸ், ஹவ் ஆர் யூ” என கட்டிபிடி வைத்தியம் கொடுத்தவர்

இனி புதியபிரதமர் அறிவிக்கபட்டால் வாழ்த்து தெரிவிக்க இப்படி சொல்லாமல் கொள்ளாமல் இந்திய பிரதமர் வந்துவிடுவாரோ என பாகிஸ்தானின் பாதுகாப்பு குழு யோசித்து  கொண்டிருகின்றது


ஜிஎஸ்டியினால் அத்தியாவாசிய விலைகள் குறைந்திருக்கின்றன : மோடி

விமான டிக்கெட் விலை குறைந்திருக்குமோ? அவருக்கு அத்தியவாசியாமன விஷயம் அதுதான்.


 
 

மாவீரன் சின்னமலைக்கு வீர வணக்கமும், அஞ்சலிகளும்….

Image may contain: one or more people and outdoorஅவர் பெயர் தீர்த்தகிரி, எல்லா பயிற்சிகளையும் முடித்து பெரும் வீரரானார், முதலில் வேட்டைக்காரர்தான் ஆனால் நல்ல மனதும் இருந்தது

சில ஏழைகளுக்கு உதவ அவரிடம் பணம் இல்லை, அப்பொழுது மைசூர் சாம்ராஜ்யம் திண்டுக்கல் வரை பரவியிருந்தது, அந்த வரிப்பணம் செல்லும் பாதையில் வந்து வீரர்களிடம் பணம் பறித்து, சிவன் மலைக்கும் சென்னிமலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்தான் என சொல் என பொடரியில் அடித்து விரட்டு அந்த ஏழைகளுக்கு உதவினார்.

பின் வரியினை வெள்ளையன் பறிக்கவந்தபொழுதும் பெரும் படைதிரட்டி அவனை அச்சுறுத்தினார், அப்பக்கம் வெள்ளையன் காலூன்ற முடியவில்லை

Image may contain: sky, outdoor and natureபின் காலங்கள் மாறி திப்பு ஆங்கிலேயருக்கு எதிராக பெரும் யுத்தம் தொடங்கியபொழுது அவனுக்கு பக்கபலமாய் இருந்தார், திப்புவின் வெற்றிகளில் சின்னமலைக்கும் பங்கு உண்டு

திப்பு சுல்தானுக்கும் பிரெஞ்ச் மாவீரன் நெப்போலியனுக்கும் நல்ல தொடர்பு இருந்தது, திப்புவின் பெருமையும் மதிநுட்பமும் அவனின் ஏவுகனைகளும் நெப்போலியனை வியப்பில் ஆழ்த்தின, நான் பிரான்ஸ் திப்பு சுல்தான், திப்பு இந்தியாவின் நெப்போலியன் என சொல்லிகொண்டான்.

திப்புவிற்கு பல உதவிகளை செய்ய அவன் முன்வந்தான், அப்படி திப்புவின் பிரதிநிதிகள் மாவீரன் நெப்போலியனை காணசென்றபொழுது சின்னமலையினையும் அழைத்தார்கள் அவரோ தன் தளபதி கருப்பசேர்வை என்பவரை அனுப்பினார்

திப்புவுடன் சேர்ந்தும், திப்புவிற்கு பின்னரும் பெரும் யுத்தம் நடத்தினார் சின்னமலை, ஆங்கிலேயர் அவருக்கு அஞ்சினர்

திப்புவினை முதலி வீழ்த்திவிட்டு சின்னமலையினை குறிவைத்தனர், முந்திகொள்ள நினைத்த சின்னமலை போராளிகளை எல்லாம் திரட்டி, திப்புவின் எஞ்சிய படையினை திரட்டி கோவை முகாமினை தாக்க திட்டமிட்டார்

அதுமட்டும் வெற்றிகரமாக முடிந்திருந்தால் ஆங்கிலேயபடைகளுக்கு அடியாக இருந்திருக்கும், ஆனால் சில தகவல் தொடர்பு சரியில்லா காரணத்தால் சிலர் முந்திகொள்ள அந்த முயற்சி தோற்றது

ஆயினும் அஞ்சவில்லை சின்னமலை, அவரின் கவனெம்ல்லாம் எப்படியாவது நெப்போலியன் உதவிபெற்று ஆங்கிலேயரை ஓட அடிப்பதில் இருந்தது, வெள்ளையர் அதனை முறியடிக்க தீவிரமாய் இறங்கினர்

வீரத்தில் வெல்லமுடியா சின்னமலையினை சமையல்காரனுக்கு லஞ்சம் கொடுத்து சாதித்தனர், மிக நுட்பமாக பிடிக்கபட்டார் சின்னமலை

கொஞ்சம் தாமதித்திருந்தால் அவருக்கு பிரெஞ்ச் படை உதவியிருக்கும், வரலாறு மாறியிருக்கும் ஆனால் விதி அதுவல்ல‌

இதே நாளில் அந்த மாவீரனை தூக்கிலிட்டார்கள். வெள்ளையனுக்கு கோவை பகுதியில் சிம்ம சொப்பணமாக விளாங்கிய அந்த மாவீரன் இந்த நாளில்தான் இறந்தான்

அவன் இறந்தாலும் அவரின் வீரமும், அவர் பெற்ற பல வெற்றியும், கொஞ்சமல்ல, மாவீரன் நெப்போலியனிடம் கவனம் பெற்ற வீர இந்தியர்களில் சின்னமலைக்கு நிச்சயம் இடம் உண்டு

வீரம் வீரத்தை விரும்பும் என்பது அதுதான்

நாட்டிற்காய் போராடிய அம்மாவீரன் இன்று ஒரு சாதி அடையாளமாக சுருங்கிவிட்டதுதான் பெரும் கொடுமை.

அவன் வேறுசாதி, அவன் தளபதி இன்னொரு சாதி, அவனின் படைகளில் நாயக்கன், மராட்டியன், கன்னடன் என எல்லா மக்களும் இருந்தார்கள் , அவன் படை எல்லா சாதிகளையும் கொண்டிருந்தது

அந்த மாவீரனைத்தான் இன்று சாதி அடையாளத்தில் வைத்திருக்கின்றார்கள், பெரும் கொடுமை

அந்த ஓடாநிலை கோட்டை, சங்ககிரி கோட்டை அவனின் மாவீரத்தை சுமந்தபடி இன்றும் நிலைபெற்று நிற்கின்றது

அந்த மாவீரனுக்கு வீர வணக்கமும், அஞ்சலிகளும்.

 
 

முருகன் – நளினி மகள் லண்டனில் டாக்டர்

லண்டனில் இருக்கும் தன் மகள் திருமணத்திற்கு செல்ல அனுமதி கோரி நளினி மனு

கவனியுங்கள், சாதரண அலுவலக ஊழியர் நளினி. தலைகீழாக நின்றாலும் தன் மகளை தமிழக அரசு கல்லூரி தவிர எங்கும் அவரால் படிக்க வைக்க முடிந்திருக்காது, உறவுகளும் பெரும் புள்ளி அல்ல‌

ஆனால் முருகன் நளினி மகள் லண்டனில் டாக்டராகியிருக்கின்றாள், அவளின் திருமணத்திற்கு செல்ல நளினி ஒற்றைக்காலில் நிற்கின்றார்

எப்படி லண்டனில் படிக்க வைக்க நளினியால் முடிந்தது?

சிவராசன் பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தின் மிக முக்கிய வரி “நளினியின் ஒத்துழைப்பு மிக அபாரம்”..

எப்படிபட்ட கூலி கொடுக்கபட்டிருக்கின்றது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்..

இந்த குற்றவாளியினை லண்டனுக்கு அனுப்பவேண்டுமாம், ஏன் விஜய்மல்லையா, லலித்மோடி வரிசையில் சேர்ந்துகொள்ளவா?

முருகன் சாமியாராகிவிட்டதால் மகள் பற்று அற்றுவிட்டதாம், அனேகமாக நித்தி சுவாமிகளை சந்திக்க அவர் பரோல் கேட்கலாம்

அதற்குள் சாமி உள்ளே சென்றுவிட்டால் முருகனுக்கு பரோலில் சிக்கல்தான்..

 
 
 

இந்த சாதி வெறியர்களோடு வாழமுடியாது

Image may contain: one or more people, people standing and outdoorஒரு சிலர் சொல்லிகொண்டிருந்தான், கிறிஸ்தவர் பணத்திற்காக மதம் மாறினர் என்றும், இஸ்லாமியர் அதிகாரத்திற்காகவும் மதம் மாறினர் என்றும் உளறிகொண்டிருந்தான்

அவனெல்லாம் உ.பி வீடியோவினை பார்த்தால் விஷயம் புரியும்

இந்த கொடுமைதான் அக்காலமும் நடந்தது, இதனை விட கொடுமையான விஷயம் எல்லாம் நடந்தது, புத்தனனும் மகாவீரனும் ஓரளவு மாற்றம் கொடுத்தாலும் அது மறுபடி அந்த பூதம் எழுந்து நின்றது

இக்கொடுமையில் வாழமுடியாமல்தான், இவர்களின் கொடூர சாதிவெறுப்பிற்கு தப்பித்தான், மனிதனை மாட்டை விட கேவலமாக பார்க்கும் இந்த சாதி வெறியர்களோடு வாழமுடியாது என்பதால்தான் அபலைகள் அந்நிய மதம் தேடினர்.

புத்தம் அழிக்கபட்டபின், இஸ்லாமும் கிறிஸ்தவமும், ஜெராஸ்டிரியமும் அவர்களுக்கு அடைக்கலமாயின.

கிராமத்து சிறுவர்கள் ஓணான்களை வதைப்பது போல, சரச நடமனாடும் பாம்புகளை சுற்றி நின்று கல்வீசி ரசிப்பதை போல, இந்த சக மனிதர்களை இம்சிக்கும் கொடுமை காலம் காலமாக உண்டு, வாயில்லா ஜீவன்கள் என்ன செய்யும் சாகும்?

ஆனால் வாயுள்ள ஜீவன்கள், தன் காயத்தை துடைத்து மருந்திட்டு வாஞ்சையுடன் பாதுகாக்கும் ஒருவன் பின் செல்லாதா?

நாயே நன்றியோடு இருக்கும்பொழுது, நாயினும் கீழாய் நடத்தபட்ட மக்கள், தங்களுக்கு அங்கீகாரம் தந்தவர்கள் பின் செல்லமாட்டார்களா?

பின்னாளில் அம்பேத்கார் அதனையே செய்தார், சாதி முறை கடவுள் படைத்ததாக இருந்தால் கடவுளே பொய் என துணிந்து நின்றார் பெரியார்

என் மரியாதை எனக்கு முக்கியம், என் மானம் எனக்கு முக்கியம் , நாங்கள் உங்கள் மூட சட்டங்களுக்கு கட்டுபட மாட்டோம் என துணிந்து நின்றார் பெரியார்.

உறுதியாக சொல்லலாம், இந்துமதம் அற்புதமான மதம் ஆனால் அதன் பெரும் குறை இந்த சாதி அமைப்பு

அவர்கள் காசுக்கோ , உணவிற்கோ மதம் மாறியவர்கள் அல்ல, இப்படி உபியில் அடித்தது போலத்தான் , இந்தியா முழுக்க அடித்தார்கள், கன்னியாகுமரியிலும் அடித்தார்கள், சூத்திர நாயே உனக்கேன் மேலாடை என சொல்லி அடித்தார்கள்.

அவர்களின் கண்ணீரை துடைத்து ஆறுதல் அளித்தவர்கள் பின்னால், ஆடை கொடுத்தவன் பின்னால், கல்வி கொடுத்தவன் பின்னால் அம்மக்கள் சென்றார்கள், அம்மதங்களை தழுவினார்கள்.

ஒரு காதலை பொறுக்காதவர்கள், அந்த சூத்திர சாதி சந்தோஷமாக இருக்க பொறுக்காதவர்களா கல்வி கொடுப்பார்கள்?

கல்வி கிடைத்த இடத்திற்கு அவர்கள் இதனால்தான் ஓடினார்கள்.

காசுக்கும், உணவிற்கும் மாறவில்லை அவர்கள், மாறாக மானத்திற்கும், சமத்துவதுவத்திற்கும் ஏங்கி அழுததால் மாறியவர்கள்

இப்படி அடித்து விரட்டுவார்களாம், கேவலபடுத்துவார்களாம் இதனை எல்லாம் சகித்துகொண்டு இருக்கவேண்டுமாம், அவர்கள்தான் இந்தியர்களாம், தேசபற்று மிக்கவர்களாம்

இதனை பொறுக்க சகிக்காமல் , அடுத்த மதம் ஓடியவர்கள் உணவிற்கும், காசுக்கும் ஓடியவர்களாம், துரோகிகளாம்

புரியாதோர் இனியாவது புரிந்துகொள்ளட்டும்…

 
 

மலேசிய தமிழ் வானொலியில் பிக் பாஸ்

மலேசிய தமிழ் வானொலியில் காலை நிகழ்ச்சிகள் அசத்தும் அவர்கள் தமிழ் அவ்வளவு அழகு, விஷயங்களும் நல்ல பயனுள்ளதாக இருக்கும்

அதற்கும் மேல் பல்துறை நிபுணர்கள், சாதனையாளர்கள் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை அல்லது மக்கள் கவனமாக இருக்கவேண்டிய காரியங்கள் குறித்து ஆலோசனை சொல்வார்கள்

குழந்தை நலம், சமூகம் நலம், மன‌ நலம், பண நலம் , உடல்நலம் என எல்லா விஷயங்களும் உண்டு

இன்று வாழ்வியல் பிரச்சினை என பேசினார்கள், நல்ல தகவலை எல்லாம் சொன்னார்கள். பிரச்சினை என்பது சூழ்நிலையே, அது எப்பொழுது வேண்டுமானாலும் மாறும் என்றேல்லாம் பேசிவிட்டு, கடைசியில் சொன்னார்கள்

“நேயர்களே நிகழ்ச்சியினை கேட்டீர்களா, ஆக பிரச்சினை என்றால் பரணி சுவர்தாண்டி ஓடியது போல ஓட கூடாது, மாறாக டார்லிங் ஓவியா போல நின்று சமாளிக்கவேண்டும்”

பிக்பாஸ் எங்கெல்லாம் பாதித்துவிட்டது..


நமீதா வெளியில் சென்றால் மும்தாஜை உள்ளே அனுப்புவதுதான் சரி, அப்பொழுதுதான் கணக்கு சரியாகும்

இந்த பிந்துமாதவி எப்படி உள்ளே வரலாம்?

நியாயமற்ற காரியங்களை செய்யும் பிக்பாஸினை வன்மையாக கண்டிக்கின்றது தமிழகம்.

அனுப்பு… அனுப்பு.. மும்தாஜை உள்ளே அனுப்பு


 பிந்து மாதவி வெந்து நொந்த மாதவியாக ஓடிவருவது விரைவில் நடக்கலாம்..

அங்கிருக்கும் தீ நாக்குகள் அப்படி, வார்த்தையிலே வெந்துவிடுவார் பிந்து, அதுவும் அந்த சினேகன் முகத்தை கொஞ்சநேரம் பார்த்தாலே சுவரில் அடித்த பந்தாக வந்துவிடுவார் பிந்து


 
 

உபியில் பெரும் கொடுமை நடந்திருக்கின்றது

உபியில் பெரும் கொடுமை நடந்திருக்கின்றது. பாகிஸ்தானில் நடந்த அந்த பஞ்சாயத்திற்கும் இதற்கும் பெரும் வித்தியாசம் ஒன்றும் இல்லை

ஏன் என்றால் அப்படித்தான், இன்று எல்லைகள் வகுத்துவிட்டாலும் ஆப்கன், பாகிஸ்தான் போன்ற சில காட்டுமிராண்டி கலாச்சாரம் வட இந்தியாவிலும் உண்டு, அவர்கள் பழக்கவழக்கம் அப்படி.

இதனால்தான் பெரியார் சொன்னார் , “இந்தியா பாகிஸ்தான் என பிரிப்பதை விட , வட இந்தியா தென் இந்தியா என பிரியுங்கள். அவர்கள் கலாச்சாரம் என்பதும், மண்வாசனை என்பதும் வேறுமாதிரியானது, தென்னவர்கள் கலாச்சாரம் வேறுமாதிரியானது

மதத்தின் அடிப்படையில் பிரித்தாலும் அந்த குணத்தை மாற்றமுடியாது, அதனால் கலாச்சார அடிப்படையில் பிரியுங்கள்”

அது உண்மை என்பதை இச்சம்பவங்கள் நிரூபித்துகொண்டே இருக்கின்றன..

அந்த அசகசாய சூரர் யோகி என்னதான் செய்து கொண்டிருக்கின்றார்?