ஜிஎஸ்டி அலை ஓங்கி அடித்துகொண்டிருக்கின்றது

Image may contain: 2 people

ஜிஎஸ்டி அலை ஓங்கி அடித்துகொண்டிருக்கின்றது, ஆளாளுக்கு ஒவ்வொன்றை சொல்லி கொண்டிருக்கின்றார்கள்

காங்கிரசார் முணுமுணுக்கின்றார்கள், சிதம்பரம் ஒரு பக்கம், ராகுல் ஒருபக்கம் முணுமுணுப்பு. இந்த வரியின் பிதாமகன் மன்மோகன் சிங் சத்தமே இல்லை

உண்மையில் இது காங்கிரஸ் அரசின் சீர் திருத்தம், அவர்கள் அன்றே இதனை செய்ய முயன்றார்கள், ஆனால் கூட்டணி அரசில் இருந்த அவர்களால் நினைத்தமாதிரி செய்ய முடியவில்லை, மிக குறைந்த சதவிதம் தான் என இறங்கி பார்த்தும் பலனில்லை

பலர் தாங்கி நின்ற நாற்காலி அது, மு.க அழகிரி எல்லாம் அமைச்சராக இருந்த அந்த அமைச்சரவை என்ன செய்துவிட முடியும்? வரைவு திட்டத்தோடு ஜிஎஸ்டி பரணுக்கு ஏற்றபட்டது

இன்று மிருக பலம், காளை பலம், மாட்டு பலத்துடன் அமர்ந்திருக்கும் பாஜகவிற்கு சட்டங்கள் கொண்டுவர தடங்கலில்லை, தமிழக அதிமுக கூட அவர்கள் கரங்களில் பொம்மை

அப்படிபட்ட பாஜக காங்கிரசின் பல திட்டங்களை தூசு தட்டி நிறைவெற்றுவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌

இது காங்கிரஸ் அரசின் வரைவுதான், அவர்களால் முடியாமல் போன நல்ல திட்டத்தை, இது இப்படித்தான், இத்தனை சதவீத வரிதான், முடிந்தால் யாராவது தடுத்து பாருங்கள் என தில்லாக செய்கின்றது பாஜக‌

இது காங்கிரஸின் திட்டம், நீங்கள் என்னவோ உங்களின் முழு முயற்சி என சொல்கின்றீர்களே என சொல்ல ஒருவரும் இல்லை, ஒரு காங்கிரசாரும் இல்லை

ஒரே ஒரு குரல் துணிந்து சொல்கின்றது, இது காங்கிரஸ் திட்டத்திற்கு பாஜக ஸ்டிக்கர் ஓட்டி பிரபலபடுத்துகின்றது என ஓங்கி சொல்கின்றது

அந்த தைரியமான குரல் யாருடையாதாக இருக்க முடியும்? அது குஷ்பூவின் குரல்

தமிழக காங்கிரசாரே மென்னி விழுங்கும் விஷயத்தில் அல்லது தூங்கி வழியும் நேரத்தில் மிக தைரியமாக உண்மையினை முழங்குகின்றார் குஷ்பூ

அவருக்கு கோடான கோடி ரசிகர்கள் எப்படி சேர்ந்தார்களென்றால் இந்த தைரியத்திற்காகத்தான்

காங்கிரசின் திட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு இவ்வளவு அலப்பறை ஏன்? என அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல பாஜகவில் யாருமில்லை..

தமிழக காங்கிரசின் அதிரடி முகமாக அகில இந்திய அளவில் முழங்குகின்றார் குஷ்பூ

“இங்கிவளை தான் பெறவே என்ன தவம் செய்துவிட்டது காங்கிரஸ்??”

 
 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s