ஒவ்வொரு வகை அரிசிக்கும் ஒவ்வொரு குழம்புதான் பொருத்தம், அதுதான் அதிருசி

ஒவ்வொரு வகை அரிசிக்கும் ஒவ்வொரு குழம்புதான் பொருத்தம், அதுதான் அதிருசி

இன்றோ ஒரே வகை அரிசிக்கு எல்லா வகை குழம்புகளையும் பொருத்தமில்லாமல் ஊற்றி உண்கின்றோம்

நீண்ட ஆராய்ச்சிக்கு பின் இந்த ஞானம் எனக்கு கிடைத்துவிட்டது

ஒவ்வொரு வகை குழம்பிற்கும் ஒவ்வொரு வகை அரிசி சோறுதான் பெரும் சுவையினை கொடுக்கின்றது, இந்த பொருத்தம் மிக முக்கியம்

பொன்னி அரிசிக்கு வத்த குழம்பு, சம்பா அரிசிக்கு மீன் குழம்பு, புழுங்கல் அரிசிக்கு சாம்பார்,ரசம், சீரக சம்பா அரிசிக்கு கத்தரிக்காய், பாசுமதி அரிசி சோறுக்கு 
ஆட்டுகறி, நடுத்தரமான அரிசிக்கு கோழிகறி
சட்னிக்கு பச்சரிசி வகையறா என மிக அழகாக பொருந்துகின்றது

ஆக குழம்பு மட்டும் ருசியல்ல, அரிசியிலும் விஷயம் இருக்கின்றது, சரியான காம்பினேஷன் மகா முக்கியம்

ஆராய்ச்சியின் ஒரு பகுதியினை வெற்றிகரமாக முடித்து அறிக்கை சமர்பித்தாயிற்று, முடிந்தால் நீங்கள் முயற்சித்துபாருங்கள்

ஜிஎஸ்டி வரியினை அதிகமாக விதித்து மக்களை கொடுமைபடுத்துகின்றனர் : சீமான்

ஜிஎஸ்டி வரியினை அதிகமாக விதித்து மக்களை கொடுமைபடுத்துகின்றனர் : சீமான்

அங்கிள் சைமன் உங்கள் அண்ணன் பிரபாகரன் ஈழ மக்களை வரியில் பிழிந்ததை விடவா இந்தியா வரி சுமத்திற்று?

ஓமந்தை சாவடியில் வன்னி மக்கள் செலுத்திய வரி என்ன?

வாகன வரி, நுழைவு வரி, பொருள் வரி, யுத்த வரி என எத்தனை வரிகளை புலிகள் சுமத்தினார்கள்?

சிங்களன் பகுதியில் 50 ரூபாய்க்கு கிடைத்தபொருள் புலிகள் பகுதியின் வரிகொடுமையால் 150 ரூபாய்க்கு விற்ற கொடுமை எல்லாம் நடந்த காலம் எல்லாம் இல்லையா?

விவசாயிக்கு உழவு வரி, நிலவரி, உற்பத்தி வரி என அவர்கள் பிடுங்கியது என்ன? யாரும் சிந்திக்காத புது புது வரிகளை போட்டு ஈழமக்களை அவர்கள் வதைத்தபொழுது எங்கே சென்றார் இவர்?

உங்கள் அண்ணன் 100% வரியிட்டால் அது சரி, இந்தியா 10% வரியிட்டால் அது மாபெரும் தவறா?

சிங்களனுக்கும் வரிகட்டி, புலிகளுக்கும் 50% வரிகட்டிய ஈழமக்களை என்றாவது நினைத்து நீர் பேசியதுண்டா? கேட்டால் உங்கள் அண்ணனின் ஆட்சி பொற்காலம் என்பீர்

100% வரிபிடுங்குவது பொற்காலமா?

ஐரோப்பிய ஈழமக்களை கடன் வாங்கி புலிகளுக்கு அனுப்ப சொன்னது போலவா இத்தேசம் செய்கின்றது?

அந்த பிரபாகரனின் தம்பி என சொல்லிகொண்டா ஜிஎஸ்டியினை குறை சொல்ல வருகின்றீர் அய்யா? யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியமா?

பிரபாகரனின் வரிகொடுமையில் கொஞ்சம் கூட இந்தியா விதிக்கவில்லை, இதுபற்றி பேச ஒரு தகுதி வேண்டும், அது உங்களிடம் இல்லை

அது இருக்கட்டும், அந்த யாசின் மாலிக்கோடு சேர்ந்து, பஞ்சாப் பிந்த்ரன்வாலே கோஷ்டியோடு சேர்ந்து இன்னும் சில பிரிவினைவாதிகளோடு சேர்ந்து ஜிஎஸ்டி கண்டித்து ஒரு மாநாடு நடத்தினால் என்ன அங்கிள்?

புலிகள் கொடுமையிலே பெரும் கொடுமை அவர்கள் விதித்த வரிகொடுமை, அதனை பற்றி பேசமாட்டாராம்

இத்தேசம் செய்திருக்கும் சிறிய வரி சீர்திருத்தம் என்றால் பக்கம் பக்கமாக முழங்குவாராம்

யார் இந்த யாசின் மாலிக்?

Image may contain: 3 people, people smiling, people sitting and text

காஷ்மீரில் ஒரு தலைமறைவு தீவிரவாதி , அதுவும் மிக கொடிய தீவிரவாதி, அவன் தலைக்கு பல லட்சம் பரிசு என சொன்ன தீவிரவாதி நமது பாதுகாப்பு படையினரால் கொல்லபட்டிருக்கின்றான்

அவன் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட யாசின் மாலிக், அதனை கண்டித்து முழு அடைப்பு நடத்த போவதாக சொல்லிகொண்டிருக்கின்றான், ஏதும் நடந்தால் அவனையும் பிடித்து உள்ளே போட அரசு தயாராகின்றது

யார் இந்த யாசின் மாலிக்?

காஷ்மீர் பிரிவினை வாத தலைவன், தமிழகத்தில் இவனை அழைத்து வந்து சீமான் மாநாடு எல்லாம் நடத்தினார்

எங்கே? காங்கிரஸ் ஆட்சியில் யாசின் மாலிக்கை அழைத்து கூட்டம் போட்ட சைமன் இப்பொழுது யாசினை அழைத்து கூட்டம் போடட்டும் பார்க்கலாம்

அல்லது காஷ்மீர் சென்று ஏ இந்திய ஏகாதிபத்தியமே என சீமான் சீறட்டும் பார்க்கலாம்,

யாசின் மாலிக்கிற்கு ஆதரவாக தமிழகத்தில் நாங்கள் அடைப்பு நடத்துவோம், ஊர்வலம் நடத்துவோம் என சொல்லட்டும் பார்க்கலாம்

முன்பு காஷ்மீர் மக்களுக்கு தமிழர்களின் ஆதரவு, ஏ இந்திய ராணுவமே வெளியேறு என ஊளையிட்ட இந்த தமிழ் உணர்வாளர்களையும் காணவில்லை,

எங்கே சென்றார் சைமன்?? வந்து கத்துவாரா?

அவரையே காணவில்லையே, பின் அவரின் குரலை எங்கே தேடுவது?

ஆக காங்கிரஸ் அரசில் சீமானால் கத்த முடிந்திருக்கின்றது, யாசின் மாலிக்கோடு கை கோர்த்து சுற்றமுடிந்திருக்கின்றது, இந்த அரசு சீமான் அப்படி செய்தால் குமட்டில் குத்த தயாராகின்றது

காங்கிரஸ் ஆட்சியில்தான் 4 வார்த்தை பேசமுடிந்தது என்ற முடிவுக்கு சீமானும் வந்திருப்பார், அதனால் அடுத்து காங்கிரஸ் ஆட்சிதான் வேண்டும் என்ற ரகசிய ஆசை அவர் மனதிலும் வந்திருக்கும்

அடுத்த தேர்தலில் காங்கிரசினை சீமான் ஆதரிக்க பெரும் வாய்ப்பு உள்ளது,

 
 

விம்பிள்டனில் ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் பெரியாரின் கைத்தடிக்கு வேலை வந்துவிட்டது : கீ.வீரமணி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதன்மையானது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள்

அதில் அக்கால‌ அமிர்தராஜ் போன்ற சில‌ தமிழர்கள் முன்பு பங்கெடுத்தார்கள், அந்த வரிசையில் கலந்து கொள்ள போகின்றார் ஜீவன் நெடுஞ்செழியன்

திராவிட ஆட்சி என்ன செய்தது என கேட்பவர்கள் எல்லாம் காதை கொண்டுவாருங்கள் திருகி சொல்கின்றோம், இதோ ஒரு தமிழன் விம்பிள்டன் விளையாடும் அளவு உருவாக்கிவிட்டார்கள்

இந்த திராவிட தமிழன் எப்படி விம்பிள்டன் விளையாட செல்கின்றான் என்றால், இவரின் தாத்தா நெடுஞ்செழியன் ஊட்டிய திராவிட உணர்வு அப்படி

ஆம் இவர் அவரின் பேரன்

தாத்தா எல்லா இடத்திலும் 2ம் இடத்திலே இருந்தவர், அப்படி அவரின் பேரன் இல்லாமல் முதலிடம் பிடித்தால் நல்லது அல்லது தாத்தா போல இரண்டாம் இடம் கிடைத்தாலும் தமிழருக்கு மகிழ்ச்சி

 

GST ஆரிய படையெடுப்பின் உச்சகட்டம், பெரியாரின் கைத்தடிக்கு வேலை வந்துவிட்டது- கீ.வீரமணி

ஆரியன் என இவர்கள் சொல்லும் பிராமணன் கூடத்தான் ஜிஎஸ்டி கட்டபோகின்றான், அவர்களுக்கு என்ன விலக்கா கொடுக்கபட்டிருக்கின்றது?

அதுசரி மிஸ்டர் வீரமணி, பெரியாரின் கைதடிக்கு வேலை வந்தது இருக்கட்டும், பெரியாரின் பணபெட்டிக்கு எப்பொழுது வேலை வரும்? அதனை சொல்லுங்கள்.

ஓஹோ பெரியாரின் சொத்து வருமானத்தில் ஜிஎஸ்டி கட்ட வெண்டும் என்ற வயித்தெரிச்சலா?

பெரியார் சொத்து கொடுக்கும் வருமானத்தில் யாராவது கைவத்தால் இவருக்கு உடனே அவரின் கைத்தடி நினைவுக்கு வருவதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது?


 
 
 

நிர்மலா சீத்தாராமன் பேச்சில் கடுமை இருக்கலாம் ….

Image may contain: 1 person, smiling, close-up

அந்த நிர்மலா சீத்தாராமன் பேச்சில் கடுமை இருக்கலாம், வீட்டிலே சாப்பிட்டால் என்ன என்ற வரிகளில் அபத்தம் இருக்கலாம்

அதற்காக அவர் ஆணவம் பிடித்தர், திமிர் பிடித்தவர் என்பதெல்லாம் சொல்ல கூடாத குற்றசாட்டுகள். அரசியலுக்கு ஒரு பெண் வரும்பொழுது இயல்பான அச்சத்தை மறைக்க கொஞ்சம் தைரியமாக பேச முயற்சிப்பார்கள்

நிர்மலா சீத்தாராமன் அதனை செய்யலாம், சில தடுமாற்றங்களை மறைக்க அதித துணிவோடு காட்டிகொள்ளலாம்

அதற்காக அவர் ஆணவம் பிடித்தவர், பார்பணீய திமிர் என்பதெல்லாம் சரியல்ல‌

ஜெயா என்றொருவர் இருந்தார், 7 மாதம் முன்பு வரை உயிரோடு இருந்தார், அதற்கு 3 மாதம் முன்பு வரை 25 ஆண்டுகளாக ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினார், ஆணவத்தின் உச்சியில் இருந்தார்

அதுதான் ஆணவம், அதுதான் பார்ப்பண திமிர், அதுதான் நான் மகாராணி எனும் அகங்காரம்.

அவரை கண்டிக்க திராணியற்றவர்கள் , ஆணவக்காரி ஜெயா காலத்தில் கம்மென்று இருந்தவர்கள், கூவத்தூரில் ஆணவ சசிகலா உத்தரவிடும்பொழுது குப்புற கிடந்தவர்கள் எல்லாம இன்று நிர்மலா சீத்தாராமனை ஆணவக்காரி என சொல்லிகொண்டிருக்கின்றான்.

அவர் கருத்துக்களை சாடலாமே அன்றி, பார்பண திமிர் என்பதெல்லாம் சரியே அல்ல‌

தமிழிசை தமாஷாக‌ பேசுவதைத்தான் அவர் சீரியசாக பேசுகின்றார், அவ்வளவுதான் விஷயம்.

இரண்டுமே காமெடி வகைதான்

தமிழிசையினை விட்டுவிட்டு மட்டும் நிர்மலா சீத்தாராமனை சீண்டுவதன் பெயர்தான் “பார்ப்பன வெறுப்பு”


“அ.தி.மு.க-வில், செல்வாக்கு பெற்ற தலைவர் யாருமில்லை” : வானதி சீனிவாசன்

தமிழக பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் நோபல் பரிசு பெற்று, ஐ.நாவில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்கள்

தொடர்ந்து 234 தொகுதியிலும் பிரச்சாரத்திற்கு செல்லாமலே பல தேர்தல்களில் ஜெயித்து வருமளவிற்கு செல்வாக்கு மிக்கவர்கள்

ஏம்மா..அந்த அதிமுகவின் கழுத்தை பிடித்து அமுக்கி கொண்டு இப்படி எல்லாம் சொல்ல உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?????


 
 

திமுக போல் அதிமுக.,வில் குடும்ப அரசியல் இல்லை : தம்பிதுரை

திமுக போல் அதிமுக.,வில் குடும்ப அரசியல் இல்லை : தம்பிதுரை

எம்ஜிஆருக்கு பின் வந்த ஜாணகி யார்? எம்ஜிஆருக்கு மனைவி இல்லையா? சொல்லவே இல்லை..

ஜெயா இருக்கும் பொழுதே, பின் அவருக்கு பின்னர் கூட வந்திருக்கும் சசிகலா, தினகரன், சுதாகரன், பாஸ்கரன், இளவரசி, ராவணன், வெங்கடேஷ், சிவர்குமார், திவாகரன், விவேக் எல்லாம் என இவர்கள் எல்லாம் ஐரோப்பா, ஆசிய ஆப்ரிக்காவில் இருந்து வந்த சம்பந்தமில்லாதவர்களா?

பொது செயலாளர், துணை பொது செயலாளர் எல்லாம் ஒரே குடும்பம் அல்லாமல் என்ன?

நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் என பகிரங்கமாக சொன்னவர் நடராஜன், அதாவது கட்சியின் பொதுசெயலாளரின் கணவர் அப்படி சொன்னார்

இதில் இவர் திமுகவினை சாடுகின்றாராம்

காலில் விலங்கிட்டு, கண்களை கட்டி வைத்து, கைகளை பின்புறம் முடக்கி வைத்து இருட்டு அறையில் முரட்டு குத்தாக பாஜக அதிமுகவினை கும்மி எடுக்கின்றது

அப்பொழுதும் அம்மா என கத்தாமல் திமுக என கத்துகின்றார்கள் அல்லவா?

இதுதான் பாஜக் அடி, நான் அடிக்க அடிக்க நீ திமுக என கத்திகொண்டே இருக்க வேண்டும் என்பது அங்கு நடைபெற்ற ஒப்பந்தம்

அதனால் இம்மாதிரி குரல்கள் கேட்டுகொண்டே தான் இருக்கும்..

ஜனாதிபதி தேர்தல் முடியட்டும் அந்த கோவிந்த் வெற்றிபெறட்டும், அப்பொழுதும் இந்த அதிமுகவினர் என்ன சொல்வார்கள் தெரியுமா?

பாஜக வேட்பாளர் வெற்றிபெற திமுகதான் காரணம், அவர்கள் மீராகுமாரை ஆதரித்ததால் நாங்கள் வேறுவழியின்றி கோவிந்தினை ஆதரித்தோம், இப்படி ஏதாவது சொல்லிகொண்டே இருப்பார்கள்

முதுகில் விழும் அடியில் அப்படி ஏதாவது உளறினால்தான் அவர்களுக்கு ஆறுதல்

 
 
 

பெண்கள் உலகக்கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தியது இன்னும் பிற

பெண்கள் உலகக்கோப்பை: இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது

இந்திய பெண்கள் அணி, இந்திய ஆண்கள் அணியுடன் மோத சவால் விடும் காலம் தொலைவில் இல்லை போலிருக்கின்றது

சொல்லமுடியாது அப்படி ஒரு போட்டி நடந்து கெஸ்ட் பிளேயர்கள் என இந்த அனுஷ்கா சர்மா, கிம் சர்மா, நம்ம ஊர் லஷ்மி ராய் எல்லாம் பந்துவீசினால் கோலி முதல் டோனி வரை எளிதில் வீழ்வார்கள்.

எதற்கும் கோஹ்லி, டோனி எல்லாம் சவால் விடாமல் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

இந்திய மகளிர் அணி கோப்பையினை வென்றால் அடுத்து என்ன நடக்கும் என ஊகிக்க முடிகின்றதல்லவா?

தமிழகத்தில் நடிகைகள் நட்சத்திர கிரிக்கெட் நடக்கும், அந்த இம்சையினை டிவிகள் எல்லாம் ஒளிபரப்பும்

அப்படி நடந்தால் குஷ்பூவினை அம்பையராக நிறுத்தலாம் என சங்கம் கோரிக்கை வைக்கின்றது.


 

ரஜினியைப்பற்றி அவதூறு பரப்பும் சுப்பிரமணியசாமி மீது வழக்கு தொடருவோம்: அர்ஜூன் சம்பத்

இப்படி எல்லாம் செய்துவிட்டு, நாளை ரஜினி அரசியலுக்கு வரவில்லை அதுவும் உங்கள் கட்சிக்கு வரவில்லை என்றால் அவர்மீதும் வழக்கு பதிவீர்கள், அப்படித்தானே அய்யா?


ஜிஎஸ்டி வரியால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது: கே.பழனிசாமி

அதிமுக அரசினையே சகித்து சமாளிக்கும் தமிழக‌ மக்கள், ஜிஎஸ்டியினை சமாளிக்க மாட்டார்களா என்ன?


ஜிஎஸ்டி பெயரில் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: நிதியமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

ஆமாம், அரசும் அமைச்சர்களும் எந்த மோசடியும் செய்யலாம், குட்கா விவகாரம் போல‌ யாரும் கேட்கமுடியாது

ஆனால் மற்றவர்கள் ஏதும் மோசடி செய்தால் அரசு சும்மா இருக்காது