மோடியினை இஸ்ரேல் வரவேற்று கொண்டிருக்கின்றது

ஊரை விட்டு ஒருவனை நாட்டாமை பட பாணியில் ஒதுக்கி வைத்திருக்கின்றார்கள், அவனோடு யாரும் பேசுவதுமில்லை, உறவாடுவதுமில்லை

“கொலைகாரப்பயலோடு என்ன உறவு, இவன் சவகாசமே ஆகாது” என சொல்லிவிட்டு பார்த்த இடத்தில் சிரித்துவிட்டு நகர்ந்துவிடுவார்கள்

அப்படி விலக்கி வைக்கபட்டிருக்கும் ஒருவன் வீட்டுக்கு வழிபயணி ஒருவன் “ஹாய் கவ் ஆர் யூ, மே ஐ கம் இன்” என ஒருவன் வந்தால் அவனுக்கு எப்படி இருக்கும்?

என்னையும் மதித்து என் வீட்டிற்கு வந்தீர்களா? என ஆனந்த கண்ணீர் விட மாட்டானா?

அப்படித்தான் மோடியினை இஸ்ரேல் வரவேற்று கொண்டிருக்கின்றது

மற்ற நாடுகள் இதனை ஒரு மாதிரியாக பார்த்துகொண்டிருக்கின்றன, இந்த ஆளுக்கு என்னாயிற்று என்பது போல் தலையிலடிக்கின்றன‌

இஸ்ரேலோ ஆடு சிக்கிரிச்சி டோய் என மாலைபோட்டு கொண்டிருக்கின்றது

இப்படி தேடி சென்று வலையில் சிக்கி இருக்கும் மோடிக்கு, இஸ்ரேலில் எங்களுக்கு வரவேற்பை பார்த்தீர்களா என பலர் சிலிரிக்கின்றனர்

அவர்கள் மோடி என்ன? யார் சென்றாலும் விழுந்தடித்து வரவேற்க ரெடி

மற்ற நாடுகள் அந்த சிகப்பு கம்பளம் பாலஸ்தீனியரின் ரத்தத்தில நனைந்து சிவப்பானது என அச்சபட்டு ஒதுங்குகின்றன‌

ஆனால் மோடி அதற்கெல்லாம் அசைபவரா? அவர் போக்கில் நடந்து செல்கின்றார்

தினமலர் போன்ற ஏடுகள் இது ஏதோ பெரும் சாதனை என எழுதுகின்றன, சில ஒரு மாதிரியான நாடுகளில் இருக்கும் இந்திய தூதர்களின் மனநிலை இப்பொழுது எப்படி இருக்கும் என்பதை சொல்ல வார்த்தைகள் இல்லை

மிக மிக‌ படபடப்பாக இருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்,

அவர்கள் மட்டும் இந்த இந்திய கொண்டாட்ட செய்திகளை கண்டால் அவர்கள் மனம் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்குதான் தெரியும்

மீண்டும் தங்கை மகன் அழைத்தான்

கொஞ்சநாளைக்கு பின் தங்கை மகன் அழைத்தான், இம்முறை அவனின் கோரிக்கை வித்தியாசமாக இருந்தது

“ஏலேய் மாமா, இந்த அம்மா காசு குறையா கொடுத்து சின்ன கிளாக் வாங்கிட்டால‌

அதுல 12 மணி வரைக்கும்தாம்ல இருக்கு, 13,14,15 எல்லாம் இல்லல..

அதுனால எப்பவும் இவா நேரம் இல்லண்ணு சொல்லிட்டே இருக்கால,ஸ்கூலுக்கு கிளம்பும்போது திட்டுதால, விளையாடும் போதும் திட்டுதால,

12 மணியோட இவ கிளாக் முடிஞ்சிறுதுல, அதுக்கு பிறவு 1 , 2ண்ணுதாம்ல வருது

நீ நிறைய பைசா குடுத்து பெரிய கிளாக்கா வாங்கி அனுப்புல, 13,15, 16 எல்லாம் இருக்கணும்ல, 100 வரை இருக்கணும்ல. அப்போதாம்ல நிறைய நேரம் இருக்கும்

சீக்கிரம் வாங்கி அனுப்புல மாமா.. ஒகே பை”


கணித மேதை ராமானுஜம்

Image may contain: 6 people, people smiling, textஇந்திய கணித அறிவின் அடையாளமாக விளங்கியர் ராமானுஜம், அவரின் வாழ்க்கை படத்தினை இப்பொழுதுதான் பார்க்க வாய்ப்பு வந்தது

மிக அழகாக ராமானுஜனின் வாழ்க்கையினை சொல்லியிருக்கின்றார்கள், பெரும் அறிவாளியான அவன் வறுமையில் வாடியது, வெள்ளையர்கள் லண்டனுக்கு அழைத்து அவனை பட்டை தீட்டியது, பெரும் கடவுள் நம்பிக்கை கொண்ட ராமானுஜம் இறுதிவரை அசைவம் தொடாமல் நோயுற்று செத்தது வரை அட்டகாசமாக செதுக்கியிருக்கின்றார்கள்

எப்படிபட்ட மேதை ராமானுஜம், இன்றைய கணிப்பொறி காலத்திலும் அவன் கணக்கு இல்லாத விஞ்ஞான வசதியில்ல்லை, இன்றைக்கும் அவன் விட்டு சென்ற ஆராய்ச்சி எல்லா கணிதவிலாளருக்கும் பிரமிப்பே

அந்த ராமானுஜனை வெள்ளையன் அடையாளம் கண்டுகொண்டான், இன்று எத்தனை ராமானுஜன்கள் இட ஒதுக்கீட்டால் வீணாய் போனார்களோ தெரியாது, அவர்களை கைதூக்கி விட வெள்ளையனும் இல்லை

அது இருக்கட்டும்

பிராமண சமூகம் என்பதால், சொந்த இனத்தால் எப்படி எல்லாம் அவன் பாரதி போல ஒதுக்கபட்டிருக்கின்றான் என்பது பெரும் கொடுமை, அப்படி ஒரு காலம் இருந்திருக்கின்றது

அதனை விட பெரும் கொடுமை 32 வயதில் இறந்த அவனுக்கு சந்ததி இல்லை, நான் எழுதிய இந்த கணித ஆராய்ச்சிதான் என் வாரிசுகள் என சொல்லி அவன் இறந்த காட்சியில் மனம் வலிக்கத்தான் செய்கின்றது

இந்த குஷ்பூ படங்களை பார்த்ததில் சில நல்ல படங்களை தவறவிட்டிருக்கின்றேன், இவ்வளவு தாமதாக பார்த்திருக்க கூடாது

கும்பகோணத்தில் பிறந்த மாமேதைக்கு அங்கு பெரும் அடையாலமில்லை, ஆனால் அங்கு சிறுவயதில் குடியேறிய அந்த ம.கொ ராமசந்திரனுக்கு கோவிலே உண்டு, தமிழக நியாயம் இது

இந்த தமிழனின் வரலாற்று படம் தியேட்டர்களில் ஓடவே இல்லையாம், எப்படி கொண்டாடபட்டிருக்க வேண்டிய படம் கொஞ்சமும் ஓடவில்லையாம்

பின் அந்த தியேட்டர்கள் எதற்கு தமிழகத்தில் திறந்திருக்க வேண்டும்? ஒரேடியாக மூடிவிட வேண்டியதுதான்

 
 

தமிழிசைதான் அடுத்த கோல்டா மேயர்.. எச்.ராசாதான் அடுத்த மோசே தயான் …

Image may contain: 2 people, people sitting and close-upஉங்க ஊர்ல ராமர் கோவில் மாதிரி , இங்க யூத கோவில் அரசியல் மிஸ்டர் மோடி

ஆனா உங்க நாடு மாதிரி ஜெருசலேம் மசூதிய‌ சட்டுபுட்டுண்ணு இடிக்க முடியல, அவமானமா
இருக்கு

இந்த “கரசேவகர்கள்” எல்லாம் எப்படி திரட்டனும்? ரதம் எல்லாம் ஏறி எப்படி சுற்றிவரணும்? என்னவெல்லாம் செய்யணும்?

உங்கள விட்டா இதெல்லாம் சொல்லிதற உலகத்துல யார் இருக்க்கா சொல்லுங்க?”

 

19260452_10209587474218810_3328156799757011425_n.jpgஇஸ்ரேல் என்னவென்றால் என்னவென்று தெரியாமலே சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான்

இஸ்ரேல் யூதநாடாக உருவானது போல, இவர்கள் இந்தியாவினை இந்து நாடாக்குவார்களாம், அது பாலஸ்தீனை ஆக்கிரமித்து நிற்பது போல இவர்கள் பாகிஸ்தானை ஆக்கிரமிப்பார்களாம்

இஸ்ரேல் உருவாக ஏராளமான காரணங்கள், ஹிட்லர் அடித்த அடி, அமெரிக்காவினை வளைத்த யூதர்கள், அவர்களின் ஐரோப்பிய பலம் , யூதர்களின் ஜெருசலேம் வெறி, விஞ்ஞான பலம் என நிறைய‌

மிக முக்கியமான விஷயம் அரேபிய எண்ணெய், அது மட்டும் இல்லையென்றால் வரலாறு மாறியிருக்கும்

அந்த பிரதேசத்தின் தனக்கொரு அடியாள் வேண்டும் என்ற அமெரிக்காவின் ஆசையில்தான் இஸ்ரேல் இன்றும் இருக்கின்றது

அதனை விட மகா முக்கியமான விஷயம் அரேபியர்களிடம் இல்லாத ஒற்றுமை

மொத்தமாக அரேபியா பொங்கியிருந்தால் இஸ்ரேல் என்றோ காலி

ஆக உலக விஷயங்களை தனக்கு சாதகமாக்கி, ஒரு மாதிரியான நாடகம் ஆடி பலர் காலில் இன்று நிற்கும் தேசம் இஸ்ரேல்

மிக முக்கியமான விஷயம் ஒன்று உண்டு, பிராமணரை விட, இஸ்லாமியரை விட மிக பிற்போக்கான இனம் அது, ஆனால் காலத்திற்கு ஏற்றது போல நாகரீகமாக மாறிவிட்டது

மத சட்டங்களை கூட காலத்திற்கு ஏற்றபடி மாற்றிவிட்டார்கள்

அந்த இஸ்ரேலை போல இவர்கள் இந்தியாவினை மாற்றுவார்களாம், கனவு காண்பதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான்

எல்லோரும் இஸ்ரேல் ஆகமுடியுமா?

முன்பு இஸ்ரேலை போல ஈழம் அடைவோம் என சொல்லி ஒரு கும்பல் இப்பொழுதுதான் அடங்கியிருக்கின்றது, அது நடக்காது என விட்டுவிட்டது

இப்பொழுது இவர்கள் இஸ்ரேல் பாணியில் அகண்ட இந்து இந்தியா அமைக்கபோகின்றார்களாம்

ஆகபெரும் அறிவுஜீவி எல்லாம் பாஜகவில்தான் இருப்பான் போல‌

நல்ல வேளையாக இஸ்ரேலிய கோல்டா மேயர் எனும் பெண் அதிபர், மோசே தயான் எனும் வியத்தகு கமாண்டர் பற்றி எல்லாம் இவனுக்கு தெரியவில்லை

தெரிந்துவிட்டால் தமிழிசைதான் அடுத்த கோல்டா மேயர், எச்.ராசாதான் அடுத்த மோசே தயான் என்றால் என்னாகும்?

இஸ்ரேலியர் நாட்டை கலைத்துவிட்டு ஓடியே விடுவர்…


கதிராமங்கலம் மக்கள் மீது போலீசார் தடியடி குறித்து முதல்-அமைச்சரின் பேச்சு பொறுப்பற்றது: சீமான்

பொறுப்பான பேச்சுக்கு எல்லாம் இவர்தான் பொறுப்பு என நம்பிகொள்வோம்


“நமிதா டாய்லெட் க்ளீன் பண்றத பார்த்து கண்கலங்கிட்டேன்” : கலா மாஸ்டர்

நாங்கள் நமீதா உருவத்தை பார்த்தே கண் கலங்கிவிட்டோம், எப்படி இருந்த நமிதா இப்படி ஆகிவிட்டார்?


ஆண்டவனின் மிக அழகான அற்புதமான‌ படைப்பு

Image may contain: 1 person, close-up

கடும் ஆத்திகனுக்கும் இந்த முகத்தை கண்டால் கடவுள் நம்பிக்கை வரும்

ஆண்டவனின் மிக அழகான அற்புதமான‌ படைப்பு,

 

மீத்தேன் வாயு எடுப்பதால் மட்டும்தான் கடல் நீர் ஆழ்குழாய் கிணறுகளில் உள்ளே வரும் என்றில்லை

கட்டுபாடு இல்லாமல் ஆழ்குழாய் கிணறுகளை அமைப்பதாலும், நீர்மட்டம் வற்றி கடல்நீர் உள்ளே வரும், சில இடங்களில் வந்துகொண்டே இருக்கின்றது

ஆக மீத்தேனால் மட்டும் நிலத்தடி நீருக்கு ஆபத்தல்ல, கட்டுபாடற்ற ஆழ்குழாய் கிணறுகளும் ஆபத்தானவை..


ரஜினிகாந்த் தேவையில்லை நானே அரசியல் வெற்றிடத்தை நிரப்புவேன் : எச்.ராசா

கீழ்பாக்கம் மருத்துவமனையில் ஒரு இடம் காலியாக இருக்கின்ற்தாம், அந்த இடத்தினை முதலில் நிரப்பும் ஐயா,

“அதனை ” முதலில் குணபடுத்திவிட்டு வாரும்.


கதிராமங்கலம் ,நெடுவாசல் மக்களை பார்க்கும்பொழுது கண்ணீர்தான் வருகின்றது

19642779_10209586843643046_7343367287477420112_n.jpg

அந்த கதிராமங்கலம் ,நெடுவாசல் மக்களை பார்க்கும்பொழுது கண்ணீர்தான் வருகின்றது

கண்முன்னால் சொந்த மண் அழிக்கபடும் பொழுதும், வாழ்வாதரம் சிதைக்கபடும்பொழுதும் மனதால் செத்துத்தான் போவோம், அவர்கள் அப்படி செத்துகொண்டிருக்கின்றார்கள்

ஆனால் தமிழகம் எப்படி இருக்கின்றது என்றால் அப்படியேதான் இருக்கின்றது

இரு காரணங்கள் தான்,

ஒன்று நமக்கு நேராதவரை அடுத்தவரின் வலி நமக்கு தெரியாது

இன்னொன்று தமிழர்களை ஒருங்கிணைத்து செல்ல நல்ல தலைவர்கள் இல்லை

நன்றாக கவனித்தால் புரியும், ராமேஸ்வரம் மீணவர் பிரச்சினையா? அது அவர்கள் பாடு, ஏன் எல்லை தாண்டவேண்டும் , என்னது 2 பேரை சிங்களன் சுட்டானா? அய்யோ பாவம் அவ்வளவுதான் மற்ற பகுதி மக்கள் நிலை

கூடங்குளத்தில் சத்தமா? அது கிறிஸ்தவ பயல்கள் சும்மா கத்திகொண்டிருக்கின்றான், 2 ஊர்கள்தான் அதனால் அவ்வளவு பெரும் திட்டம் நிறுத்தமுடியுமா? பைத்தியகாரதனம்

நியூட்ரினோவா? அது தேனி பிரச்சினை. முல்லை பெரியாரா? அது வைகை மக்களுக்கு

காவேரியில் நீர் இல்லையா? ஆம் டெல்டா மக்கள் பாவம்தான், இது நியாயமில்லை ஆனால் காவேரி நமக்கா வருகின்றது விட்டு தள்ளுவோம்

அத்திகடவா? அதில் எனக்கென்ன நீர் வரும்? எப்படியும் போகட்டும்

இப்படி தமிழக பிரச்சினைகளை ஏரியா வாரியாக ஒதுக்கிவிட்டு எல்லோரும் மல்லாக்க கிடப்பதனால்தான் தமிழகத்தில் இம்மாதிரி குரல்கள் கேட்கின்றன‌

இந்த அரசியல் கட்சிகளுக்காவது மொத்த தமிழகத்தையும் திரட்டி ஒரே போராட்டத்திற்கு அழைப்போம் என்றில்லை, அப்படி கூடன்குளத்திற்கோ, நெடுவாசலுக்கோ ஒரு போராட்டம் தமிழகம் முழுக்க நடந்திருக்குமானால் இம்மாதிரி விஷயங்களுக்கு மத்திய அரசு ஆயிரம் முறை யோசிக்கும்

எல்லா திட்டங்களிலும் சாதக பாதகம் உண்டு, வைகை அணையும், மேட்டூர் அணையும் கட்டபட்டபொழுது பல கிராமங்கள் மூழ்கித்தான் போயின‌

அதுவும் விவசாய நிலங்கள் தான், ஆனால் பல்லாயிரம் ஏக்கர் பாசன பரப்புக்கு நீரளிக்க அவைகளை பலிகொடுக்க வேண்டியதாயிற்று

அப்படி சில விஷயங்களை விட்டுகொடுக்கலாம்

ஆனால் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும், சுற்றுபுற சீர்கேட்டை ஏற்படுத்தி மக்களை வாழவே விடாத விஷயங்களை எப்படி ஏற்றுகொள்வது?

தமிழக கட்சிகள் என்ன செய்கின்றன?

அதிமுக கேட்கவே வேண்டாம் பாஜக பல்லக்கை சுமக்கின்றது, அது போராட வராது, இல்லாவிட்டாலும் எதற்கும் அது போராடவே செய்யாது

திமுகவும் கலைஞரின்றி சிக்கிகொண்டது, அதற்கும் டெல்லியில் சில பயங்கள் உண்டு, கனிமொழியும், ராசாவும் தயாநிதி மாறனும் சிக்கியிருப்பது அப்படி

மற்ற தமிழக தேசிய கட்சிகள் ஒருநாளும் தமிழக நலன் பேசாது, கன்னடம் கேரளம் எல்லாம் டெல்லியின் பிரதிநித்களாக கட்சிகள் இருந்தாலும் மாநில நலன் என்றால் கொதிக்கும்

இங்கு அப்படியான நிலை வராமல் போக இந்த பாழாய்போன அரசியல் கட்சிகள்தான் காரணம்

செய்யவேண்டிய காரியங்களை தங்கள் சுயநலனுக்காக அழைகின்றார்கள்

இந்த தமிழ்தேசியம் கும்பலாவது உள்ளதை பேசுமா என்றால், அது பிரபாகரன், ஈழம் என இல்லாத இம்சைகளை எல்லாம் சொல்லிகொண்டிருக்கும்

இவர்கள் எல்லாம் பிரிவினை கோஷ்டிகள் இதற்கு அணுவுலையே பரவாயில்லை என முடிவு செய்துவிடுகின்றார்கள் மக்கள்

மெரீனா புரட்சி போல ஒன்று நடக்காமல் சாத்தியமில்லை, அதுவும் தமிழக அரசின் மறைமுக ஒத்துழைப்போடுதான் நடந்தது

இல்லையென்றால் ஒரே நாளில் அடித்து முடித்திருப்பார்கள்

கொஞ்சம் யோசித்தால் பக்தவத்சலத்திற்கு பின் பன்னீர்செல்வம் தான் மக்கள் போராட்டத்திற்கு மதிப்பு கொடுத்த முதல்வர் என பெயர்பெற்றுவிட்டார்

தேவாரம் அடக்கிய மெரினா மீணவர் பிரச்சினை முதல் இன்று கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் கதிரா மங்கலம், நெடுவாசல் வரை ஒரே காரணம் தமிழகம் ஒன்றாக எழாததே

அல்லது மொத்த தமிழகத்தையும் திரட்டாத விஷயத்தாலே

இப்படி திரளவிடாமல் செய்வதில் அரசியல் கட்சிகளுக்கும் பங்குண்டு, பத்திரிகை டிவிக்களுக்கும் பங்கு உண்டு, மக்களுக்கும் பங்கு உண்டு

அக்கால இந்தி எதிர்ப்பு வெற்றிபெற்றதென்றால், பின்னாளைய ஜல்லிகட்டு போராட்டம் வெற்றிபெற்றதென்றால் அவை எல்லாம் மொத்த தமிழக பிரச்சினையாக மாற்றபட்டது

இன்றோ ஒவ்வொரு பிரச்சினையும் மாவட்ட ரீதியாக முடக்கபடுகின்றன‌

சென்னையில் மீணவ மக்கள் ஒடுக்கபட்டபொழுது மற்ற பகுதி அமைதியாயிற்று அப்படி ராமேஸ்வரம் மீணவர் பிரச்சினையினை யாரும் கண்டுகொள்ளவில்லை, கூடங்குளம் பிரச்சினையும் அப்படியே போயிற்று

மதுரை கிரானைட் குவாரி, தாது மணல் குவாரி எல்லாம் அதே நிலைதான்

சுருக்கமாக இப்படி சொல்லலாம்

அடுத்தவர் அழும்பொழுது பார்த்துகொண்டிருந்தோம், நாம் அழும்போது யாரும் வரவில்லை வரவும் மாட்டார்கள்

அடுத்தவர் பிரச்சினையினை தன் பிரச்சினையாக தமிழர்கள் உணர்ந்து எழாதவரை இம்மாதிரி குரல்கள் கேட்டுகொண்டேதான் இருக்கும்

இன்று கதிராமங்கலம் அழலாம், நாளை அழுபவர்கள் யாராகவும் இருக்கலாம்

அடுத்தவர் கண்ணீரை துடைக்க நாம் தயாராக இல்லாவிட்டால், நம் கண்ணீரை துடைக்க யாரும் வரமாட்டார்கள்

அப்பொழுது அழுது ஒன்றும் ஆக போவதில்லை

ஒவ்வொரு தமிழகத்தார் பிரச்சினையும் தன் பிரச்சினையாக கொஞ்சம் பொதுநலத்தோடு சிந்திக்காதவரை எந்த அழுகுரலுக்கும் இங்கே முற்றுபுள்ளி இல்லை

தமிழகம் விழித்துகொள்ள வேண்டிய நேரமிது, இனம் சாதி தாண்டி நல்ல தலமை உருவாக வேண்டிய நேரமும் இதுதான்

காமராஜர், ஜீவா, பெரியார், கலைஞர், அண்ணா எல்லாம் இப்படித்தான் உருவானார்கள், அடுத்தவர் பிரச்சினைக்காக எங்கு என்றாலும் ஓடி ஓடி போராடித்தான் உருவானார்கள்

சாதி, இனம் தாண்டிய தலைவர்களால் அவர்களால் உருவாக முடிந்தது இப்படித்தான்

அப்படி மொத்த தமிழகத்தையும் ஒன்று திரட்டும் நல்ல தலைவன் உருவாகாமல் இந்த அழுகைகளை தடுக்க முடியாது

சிக்கல்களை கொடுக்கும் காலம் அதனை தீர்க்க நல்ல தலைவனையும் கொடுக்கட்டும்

அவன் வழியில் ஒவ்வொரு சிக்கலையும் மொத்த தமிழகமும் சேர்ந்து தீர்க்கட்டும், தமிழகம் வாழட்டும்

 

போராட்டம் என்றால் தீ வைப்பது தமிழக காவல்துறை அதிகாரிகளின் டிரென்ட் ஆகிவிட்டது;மு.க.ஸ்டாலின்

போராட்டம் என்றாலே பத்துபேரை கொல்வது என திமுகவிற்கும் ஒரு காலம் இருந்தது, கல்லகுடி முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் என பட்டியல் பெரிது.

அன்றெல்லாம் போராட்டம் என்றால் மற்ற கட்சிகள் யோசித்த நிலையில், எந்த உயிரழப்புக்கும் அஞ்சாமல் போராடி அரசியல் செய்தது திமுக தான்

அவ்வளவு ஏன் தினகரன் அலுவலக சம்பவம் எல்லாம் என்ன வகை? அதுவும் திமுகவினர் போரட்டம்தான்

வாயினை கொடுத்து வாங்கி கட்டிகட்ட போகின்றார் ஸ்டாலின்

கதிராமங்கலத்தில் சிக்கல் என்றால் திமுக கட்சியோடு களமிரங்கலாம், கலைஞர் கல்லகுடியில் செய்தது போல புரண்டு உருளலாம்,

அதனை விட்டுவிட்டு இப்படி எல்லாம் பேசிகொண்டிருந்தால் அது அரசியல் ஆகாது

பதிலுக்கு யாராவது பழைய திமுக சம்பவங்களை சொல்ல தொடங்கினால் மகா சிக்கல்,..


ஜிஎஸ்டி அலப்பறைகள் இன்னும் ஓயவில்லை

ஜிஎஸ்டி அலப்பறைகள் இன்னும் ஓயவில்லை, என்னவோ அதற்கு முன்பு வரியே இல்லாதது போலவும், புதிதாக வரி வந்தது போலவும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

உணவங்களில் முன்பு சேவை வரி, அந்த வரி இந்தவரி என நிறைய இருக்கும், எல்லா பில்களிலும் இருக்கும் அதனை எல்லாம் எவனும் படமெடுத்து போட்டு கொண்டிருக்கவில்லை.

உப்பு முதல் தங்கம் வரை எந்நாளும் வரி இருந்தது, வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் வரி உண்டு.

வரியே இல்லாத தேசமாக இது என்றிருந்தது? மன்னர் காலம் முதல் வெள்ளையர் காலம், நமது மக்களாட்சி காலம் என எல்லா காலத்திலும் இருந்தது, வரியின்றி அரசு சாத்தியமில்லை

அதனை சீர்படுத்தி மொத்தமாக ஒரே வரி என சொன்னால் உடனே பொங்குகின்றார்கள்

தனி தனியாக பல வரிகள் கட்டுவார்களாம், ஆனால் ஒரே வரியாக்கினால் பொங்குவார்களாம்

வித்தியாசமான மக்களாகத்தான் இருக்கின்றார்கள்.

இந்த மோடியாவது பொறுத்தமாக பேசி தொலைக்க வேண்டும்

அன்றே சாணக்கியன் அர்த்தசாஸ்திரத்தில் வரி பற்றி சொல்லியிருக்கின்றான், வள்ளுவன் குறளில் அரசு வருமானம் பற்றி சொல்லியிருக்கின்றான் என சொன்னால் கைதட்டி வரவேற்கலாம்

அவரோ பகவத் கீதை, உபன்யாசம் என எங்கோ எடுத்துகாட்டுகளை சொல்லி வாங்கிகட்டிகொண்டிருக்கின்றார்

பகவத் கீதைக்கும், வருமான வரிக்கும் என்ன தொடர்பு?

இந்த மனிதரிடம் உள்ள கெட்ட பழக்கம் இதுதான், சம்பந்தமில்லாமல் பேசிதொலைப்பார்

சாணக்கியன் சொல்லாததையா பகவத் கீதை சொல்லிற்று?

மோடி இம்சை ஒரு பக்கம் என்றால், இந்த சாப்பாட்டு கடைகளுக்கு செல்வோர் இம்சை இன்னொருபுறம்

எல்லா பயலும் ரெஸ்டாரண்ட் பில் பாரீர் என்றுதான் படத்தை போட்டு இம்சை செய்கின்றான், எவனும் மற்ற கடைகளுக்கு செல்லவே மாட்டான் போலும்

ஜிஎஸ்டி பற்றி வேறு ஒன்றுமே அவனுக்கு சொல்ல தெரியவில்லை, அல்லது விசாரித்துபார்க்க தெரியவில்லை

ஆக அவ்வளவு பயலும் சாப்பாட்டுகடையில் மட்டும்தான் ஜிஎஸ்டியின் விளைவினை தேடிகொண்டிருக்கின்றான்,

உருப்படுமா தேசம்?