கதிராமங்கலம் ,நெடுவாசல் மக்களை பார்க்கும்பொழுது கண்ணீர்தான் வருகின்றது

19642779_10209586843643046_7343367287477420112_n.jpg

அந்த கதிராமங்கலம் ,நெடுவாசல் மக்களை பார்க்கும்பொழுது கண்ணீர்தான் வருகின்றது

கண்முன்னால் சொந்த மண் அழிக்கபடும் பொழுதும், வாழ்வாதரம் சிதைக்கபடும்பொழுதும் மனதால் செத்துத்தான் போவோம், அவர்கள் அப்படி செத்துகொண்டிருக்கின்றார்கள்

ஆனால் தமிழகம் எப்படி இருக்கின்றது என்றால் அப்படியேதான் இருக்கின்றது

இரு காரணங்கள் தான்,

ஒன்று நமக்கு நேராதவரை அடுத்தவரின் வலி நமக்கு தெரியாது

இன்னொன்று தமிழர்களை ஒருங்கிணைத்து செல்ல நல்ல தலைவர்கள் இல்லை

நன்றாக கவனித்தால் புரியும், ராமேஸ்வரம் மீணவர் பிரச்சினையா? அது அவர்கள் பாடு, ஏன் எல்லை தாண்டவேண்டும் , என்னது 2 பேரை சிங்களன் சுட்டானா? அய்யோ பாவம் அவ்வளவுதான் மற்ற பகுதி மக்கள் நிலை

கூடங்குளத்தில் சத்தமா? அது கிறிஸ்தவ பயல்கள் சும்மா கத்திகொண்டிருக்கின்றான், 2 ஊர்கள்தான் அதனால் அவ்வளவு பெரும் திட்டம் நிறுத்தமுடியுமா? பைத்தியகாரதனம்

நியூட்ரினோவா? அது தேனி பிரச்சினை. முல்லை பெரியாரா? அது வைகை மக்களுக்கு

காவேரியில் நீர் இல்லையா? ஆம் டெல்டா மக்கள் பாவம்தான், இது நியாயமில்லை ஆனால் காவேரி நமக்கா வருகின்றது விட்டு தள்ளுவோம்

அத்திகடவா? அதில் எனக்கென்ன நீர் வரும்? எப்படியும் போகட்டும்

இப்படி தமிழக பிரச்சினைகளை ஏரியா வாரியாக ஒதுக்கிவிட்டு எல்லோரும் மல்லாக்க கிடப்பதனால்தான் தமிழகத்தில் இம்மாதிரி குரல்கள் கேட்கின்றன‌

இந்த அரசியல் கட்சிகளுக்காவது மொத்த தமிழகத்தையும் திரட்டி ஒரே போராட்டத்திற்கு அழைப்போம் என்றில்லை, அப்படி கூடன்குளத்திற்கோ, நெடுவாசலுக்கோ ஒரு போராட்டம் தமிழகம் முழுக்க நடந்திருக்குமானால் இம்மாதிரி விஷயங்களுக்கு மத்திய அரசு ஆயிரம் முறை யோசிக்கும்

எல்லா திட்டங்களிலும் சாதக பாதகம் உண்டு, வைகை அணையும், மேட்டூர் அணையும் கட்டபட்டபொழுது பல கிராமங்கள் மூழ்கித்தான் போயின‌

அதுவும் விவசாய நிலங்கள் தான், ஆனால் பல்லாயிரம் ஏக்கர் பாசன பரப்புக்கு நீரளிக்க அவைகளை பலிகொடுக்க வேண்டியதாயிற்று

அப்படி சில விஷயங்களை விட்டுகொடுக்கலாம்

ஆனால் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும், சுற்றுபுற சீர்கேட்டை ஏற்படுத்தி மக்களை வாழவே விடாத விஷயங்களை எப்படி ஏற்றுகொள்வது?

தமிழக கட்சிகள் என்ன செய்கின்றன?

அதிமுக கேட்கவே வேண்டாம் பாஜக பல்லக்கை சுமக்கின்றது, அது போராட வராது, இல்லாவிட்டாலும் எதற்கும் அது போராடவே செய்யாது

திமுகவும் கலைஞரின்றி சிக்கிகொண்டது, அதற்கும் டெல்லியில் சில பயங்கள் உண்டு, கனிமொழியும், ராசாவும் தயாநிதி மாறனும் சிக்கியிருப்பது அப்படி

மற்ற தமிழக தேசிய கட்சிகள் ஒருநாளும் தமிழக நலன் பேசாது, கன்னடம் கேரளம் எல்லாம் டெல்லியின் பிரதிநித்களாக கட்சிகள் இருந்தாலும் மாநில நலன் என்றால் கொதிக்கும்

இங்கு அப்படியான நிலை வராமல் போக இந்த பாழாய்போன அரசியல் கட்சிகள்தான் காரணம்

செய்யவேண்டிய காரியங்களை தங்கள் சுயநலனுக்காக அழைகின்றார்கள்

இந்த தமிழ்தேசியம் கும்பலாவது உள்ளதை பேசுமா என்றால், அது பிரபாகரன், ஈழம் என இல்லாத இம்சைகளை எல்லாம் சொல்லிகொண்டிருக்கும்

இவர்கள் எல்லாம் பிரிவினை கோஷ்டிகள் இதற்கு அணுவுலையே பரவாயில்லை என முடிவு செய்துவிடுகின்றார்கள் மக்கள்

மெரீனா புரட்சி போல ஒன்று நடக்காமல் சாத்தியமில்லை, அதுவும் தமிழக அரசின் மறைமுக ஒத்துழைப்போடுதான் நடந்தது

இல்லையென்றால் ஒரே நாளில் அடித்து முடித்திருப்பார்கள்

கொஞ்சம் யோசித்தால் பக்தவத்சலத்திற்கு பின் பன்னீர்செல்வம் தான் மக்கள் போராட்டத்திற்கு மதிப்பு கொடுத்த முதல்வர் என பெயர்பெற்றுவிட்டார்

தேவாரம் அடக்கிய மெரினா மீணவர் பிரச்சினை முதல் இன்று கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் கதிரா மங்கலம், நெடுவாசல் வரை ஒரே காரணம் தமிழகம் ஒன்றாக எழாததே

அல்லது மொத்த தமிழகத்தையும் திரட்டாத விஷயத்தாலே

இப்படி திரளவிடாமல் செய்வதில் அரசியல் கட்சிகளுக்கும் பங்குண்டு, பத்திரிகை டிவிக்களுக்கும் பங்கு உண்டு, மக்களுக்கும் பங்கு உண்டு

அக்கால இந்தி எதிர்ப்பு வெற்றிபெற்றதென்றால், பின்னாளைய ஜல்லிகட்டு போராட்டம் வெற்றிபெற்றதென்றால் அவை எல்லாம் மொத்த தமிழக பிரச்சினையாக மாற்றபட்டது

இன்றோ ஒவ்வொரு பிரச்சினையும் மாவட்ட ரீதியாக முடக்கபடுகின்றன‌

சென்னையில் மீணவ மக்கள் ஒடுக்கபட்டபொழுது மற்ற பகுதி அமைதியாயிற்று அப்படி ராமேஸ்வரம் மீணவர் பிரச்சினையினை யாரும் கண்டுகொள்ளவில்லை, கூடங்குளம் பிரச்சினையும் அப்படியே போயிற்று

மதுரை கிரானைட் குவாரி, தாது மணல் குவாரி எல்லாம் அதே நிலைதான்

சுருக்கமாக இப்படி சொல்லலாம்

அடுத்தவர் அழும்பொழுது பார்த்துகொண்டிருந்தோம், நாம் அழும்போது யாரும் வரவில்லை வரவும் மாட்டார்கள்

அடுத்தவர் பிரச்சினையினை தன் பிரச்சினையாக தமிழர்கள் உணர்ந்து எழாதவரை இம்மாதிரி குரல்கள் கேட்டுகொண்டேதான் இருக்கும்

இன்று கதிராமங்கலம் அழலாம், நாளை அழுபவர்கள் யாராகவும் இருக்கலாம்

அடுத்தவர் கண்ணீரை துடைக்க நாம் தயாராக இல்லாவிட்டால், நம் கண்ணீரை துடைக்க யாரும் வரமாட்டார்கள்

அப்பொழுது அழுது ஒன்றும் ஆக போவதில்லை

ஒவ்வொரு தமிழகத்தார் பிரச்சினையும் தன் பிரச்சினையாக கொஞ்சம் பொதுநலத்தோடு சிந்திக்காதவரை எந்த அழுகுரலுக்கும் இங்கே முற்றுபுள்ளி இல்லை

தமிழகம் விழித்துகொள்ள வேண்டிய நேரமிது, இனம் சாதி தாண்டி நல்ல தலமை உருவாக வேண்டிய நேரமும் இதுதான்

காமராஜர், ஜீவா, பெரியார், கலைஞர், அண்ணா எல்லாம் இப்படித்தான் உருவானார்கள், அடுத்தவர் பிரச்சினைக்காக எங்கு என்றாலும் ஓடி ஓடி போராடித்தான் உருவானார்கள்

சாதி, இனம் தாண்டிய தலைவர்களால் அவர்களால் உருவாக முடிந்தது இப்படித்தான்

அப்படி மொத்த தமிழகத்தையும் ஒன்று திரட்டும் நல்ல தலைவன் உருவாகாமல் இந்த அழுகைகளை தடுக்க முடியாது

சிக்கல்களை கொடுக்கும் காலம் அதனை தீர்க்க நல்ல தலைவனையும் கொடுக்கட்டும்

அவன் வழியில் ஒவ்வொரு சிக்கலையும் மொத்த தமிழகமும் சேர்ந்து தீர்க்கட்டும், தமிழகம் வாழட்டும்

 

போராட்டம் என்றால் தீ வைப்பது தமிழக காவல்துறை அதிகாரிகளின் டிரென்ட் ஆகிவிட்டது;மு.க.ஸ்டாலின்

போராட்டம் என்றாலே பத்துபேரை கொல்வது என திமுகவிற்கும் ஒரு காலம் இருந்தது, கல்லகுடி முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் என பட்டியல் பெரிது.

அன்றெல்லாம் போராட்டம் என்றால் மற்ற கட்சிகள் யோசித்த நிலையில், எந்த உயிரழப்புக்கும் அஞ்சாமல் போராடி அரசியல் செய்தது திமுக தான்

அவ்வளவு ஏன் தினகரன் அலுவலக சம்பவம் எல்லாம் என்ன வகை? அதுவும் திமுகவினர் போரட்டம்தான்

வாயினை கொடுத்து வாங்கி கட்டிகட்ட போகின்றார் ஸ்டாலின்

கதிராமங்கலத்தில் சிக்கல் என்றால் திமுக கட்சியோடு களமிரங்கலாம், கலைஞர் கல்லகுடியில் செய்தது போல புரண்டு உருளலாம்,

அதனை விட்டுவிட்டு இப்படி எல்லாம் பேசிகொண்டிருந்தால் அது அரசியல் ஆகாது

பதிலுக்கு யாராவது பழைய திமுக சம்பவங்களை சொல்ல தொடங்கினால் மகா சிக்கல்,..


Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s