டேய் சரத்குமார் அடிப்பொடிகளா

No automatic alt text available.

டேய் சரத்குமார் அடிப்பொடிகளா, ராக்கெட் ராஜாவின் பூஸ்டர்களா இந்த அநியாயத்தை கண்டீர்களா?

நாடாருக்கு நாடே இல்லையாம், நீங்கள் எல்லாம் அகதியாய் போக வேண்டியதுதானாம்

ராஜபாளையத்து பஸ் நிலையம் பக்கம் சுற்றிகொண்டிருப்பவனுக்கும் இந்த விஷயம் தெரியாது போல‌

அங்கிள் சைமன், எளிய தமிழ்பிள்ளைகள் தமிழகத்தை எப்படி பிரிக்கின்றது பார்த்தீர்களா?

 
 

தமிழ்தாய் வாழ்த்திலுமா கலைஞரை இழுத்துபோட வேண்டும்?

தமிழ்தாய் வாழ்த்திலுமா கலைஞரை இழுத்துபோட வேண்டும்?

தொடக்ககால திமுக‌ ஆட்சியில் தமிழுக்கு எத்தனையோ அங்கீகாரம் கிடைத்தன, பல இடங்களில் தமிழ் வந்தது, சபைகளில் எல்லாம் தமிழ் ஏறியது

அப்பொழுதுதான் தமிழ்தாய் வாழ்த்துபாடல் உருவாக்க வேண்டும், மாநில விழாக்களில் அதனை பாடவேண்டும் என்ற முடிவும் எடுக்கபட்டது

அப்படி பல பாடல்களை புரட்டியபொழுது, விவாதித்த பொழுதுதான் இப்பாடல் பொருத்தமானது

கலைஞரிடம் ஒரு குணம் உண்டு, முக்கியமான முடிவுகளை அவர் தனியே எடுப்பதில்லை. பூட்டிய அறைக்குள் முக்கிய முடிவு எடுப்பவர் அவர் அல்ல‌

எல்லா தமிழறிஞர்களிடமும் விவாதித்தார், எல்லோரும் ஒருசேர சொன்னபின்புதான் இப்பாடல் தேர்தெடுக்கபட்டது

சுந்தரனார் எழுதிய மனோன்மணியத்தில் அதனை திராவிட நாட்டு பாடலாக எழுதியிருந்தார், ஆரியம் போல் அழிந்துவிடாத தமிழே என்றேல்லாம், கன்னடம், மலையாளம் என்றெல்லாம் வரிகள் உண்டு

ஆனால் தமிழ்த்தாய்க்காய் பாடும்பொழுது அவை எல்லாம் ஏன் என எடுத்துவிட்டார்கள்

நிச்சயமாக பாரதியின் பாடலை விட தமிழகத்திற்கு ஒரு பாடல் கிடைத்துவிட முடியாது, ஆனால் அவர் தேசியவாதி எல்லா பாடலிலும் அவரின் தமிழுணர்வோடு தேசிய உணர்வும் கலந்திருக்கும்

பாரதிபாடலை வைத்திருக்கலாம் தான், ஆனால் செய்யவில்லை

அன்று ரபிந்திரநாத் தாகூரின் பாடலை சுருக்கி தேசிய கீதம் ஆக்கிய வழியிலே, சுந்தரனாரின் பாடலையும் சுருக்கி தமிழ்தாய் வாழ்த்தாக்கி விட்டார்கள்

இதில் பாரதிதாசனுக்கு உவப்பில்லை, அவர் உடனே பாண்டிச்சேரிக்க்கு தமிழ்பாடல் எழுத சென்றுவிட்டார், இன்றுவரை புதுவையில் தமிழ்தாய் வாழ்த்து பாரதிதாசன் எழுதிய வேறுபாடலே

மற்றபடி அண்ணா இல்லாத காலத்தில், தமிழின் பெருமையினை சொல்லவேண்டும், அதுவும் மிக அழகாக சொல்லபடவேண்டும் என்றுதான் கலைஞர் அமைத்த அறிஞர் குழு இதனை தேர்ந்தெடுத்தது, சில வரிகளை நறுக்கியது

கலைஞர் நினைத்திருந்தால் அவரே ஒரு பாடல் எழுதியிருக்கலாம் இல்லை கண்ணதாசன் போன்றோரிடம் கேட்டிருக்கலாம் , அவர் அப்படிசெய்யவில்லை தமிழறிஞர்கள் நிரம்பிய குழுவிடமே அதனை ஒப்படைத்திருந்தார்

அவர்கள் முடிவில்தான் இவ்வரிகள் பாடலாயின‌

சரி, இன்று அவரை ஏன் சீண்டவேண்டும்? அவராவது தமிழுக்கு ஒரு பாடல் வேண்டும் என விரும்பினார், அந்த ராமசந்திரனின் கரகாட்ட கோஷ்டிக்கு அப்படி ஏதும் திட்டம் இருந்ததா?

“இன்பமே உன் பெயர் பெண்மையோ, இதயக்கனி” , “பொன்மலர் செல்வியோ, நான் தேடிய தலைவியோ”, “நாளை நமதே, இந்த நாளும் நமதே”,”நேரம் நல்ல நேரம்””கன்னத்தில் என்னடி காயம்” போன்ற பாடல்களை தமிழ்நாட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்களாக ஆக்கி தொலைத்திருப்பார்கள்

“பச்சை கிளி முத்துசரம்..” பாடல்தான் தமிழ்தாய் வாழ்த்தாகியிருக்கும், ஜெயா அதனை மாற்றி “பருவம் எனது பாடல்” எனும் பாடலை வாழ்த்துபாடலாக்கியிருப்பார்

கலைஞர் அதிலிருந்து தமிழகத்தை காத்தார், அதற்கு நன்றி சொல்லிவிட்டு பிரச்சினையினை விடுங்கள்

ஒரு குறள் .. தமிழிசை… கொட நாடு ….

குறள்:
“வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

பொருள்:
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

இப்படி சொல்லி ஜிஎஸ்டியினை பலர் கலாய்த்துகொண்டிருக்கின்றனர், பதிலுக்கு இப்படி சொல்ல ஒரு பாஜக காரனையும் காணவில்லை

அவர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தை யோகா பாணியில் தலைகீழாக நின்று படிப்பார்கள் போலிருக்கின்றது

குறள்:
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

பொருள்:
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

வள்ளுவன் தான் எல்லாவற்றிற்கும் பதில் வைத்திருக்கின்றானே? படித்து சொன்னால் என்ன?


Image may contain: 1 person, smiling, flower and plant“ஜிஎஸ்டியால்தாய்மார்களின் உள்ளம் குளிர்ந்திருக்கின்றது, கண்ட கண்ட உணவகங்களில் சாப்பிட்டு உடம்பினை கெடுத்தவர்கள் எல்லாம் ஜிஎஸ்டிக்கு பயந்து ஒழுங்காக தாய், மனைவி சமையலுக்கு ஓடி வருகின்றார்கள்

எல்லா தாய்குலங்களும் இதனால் மோடியினை வாழ்த்துகின்றன,

இதுபோல பெண்கள் மனதை குளிரவைக்கும் ஏராளமான திட்டங்கள் எங்களிடம் உண்டு, ஆதரிப்பீர் எங்களை..”

அப்படித்தான் விரைவில் சொல்ல போகின்றார் நமது தமிழிசை…

 

கொடநாடு விவகாரம் திகில் படம் போல் போய்க்கொண்டிருக்கிறது : சீமான்

ஈழத்திற்கு வியப்பும் திகைப்பும் நிறைந்த பயணம் சென்றது போல, கொடநாட்டுக்கு ஏன் நீங்கள் பயணம் செல்ல கூடாது?

கொழும்பில் சிங்களன் கண்ணில் மண்ணை தூவி, ஆயிரம் சிங்களர் சுட்டுகொண்டிருக்க, விமானம் குண்டுமழை பொழிய அதிலே சாகசமாக தப்பி சென்று பிரபாகரனை கண்ட உங்களுக்கு இந்த கொடநாடா பெரிய விஷயம்?

ம்ம் கிளம்புங்கள்


இஸ்ரேலில் நமது பிரதமர்….

Image may contain: 1 person, sittingஇஸ்ரேலிய புண்ணிய ஸ்தலங்களை சுற்றி பார்க்கின்றார் மோடி

(வி.கே ராமசாமி பாணியில் வாசிக்கவும்)

“ஏம்பா..அந்த இயேசுநாதர இங்கதான் அடக்கம் பண்ணீங்களா, அந்த‌ கல்லறைய ஒழுங்கா மூடப்புடாது? அரைகுறையா மூடியிருக்காங்க உங்க ஆளுங்க‌

 

அந்த ஆள் திரும்ப வந்து உங்களுக்கும் பிரச்சினை, எங்களுக்கும் பிரச்சினை

இதுக்குத்தான் எங்க ஊருல எல்லாம் ஒருத்தன கொன்னவுடனே எரிச்சிருவோம்,

இனியாவது எவனையும் கொன்னா எங்க பாணில எரிச்சிருங்க, எங்க முன்னோர்கள் ஒண்ணும் முட்டாள்கள் இல்ல”


Image may contain: 1 person, smiling, standing“யூத பெண்கள் எல்லாம் பேரழகிகள் என்றார்கள், ஆனால் உங்களை எல்லாம் விட மிக அழகாக எங்கள் நாட்டில் குஷ்பூ என்றொருவர் இருக்கின்றார்,

உங்கள் நாட்டு அழகிகள் எல்லாம் அவர் முன் நிற்க முடியாது”

 

 

 


Image may contain: 3 people, people standingஹிட்லரால் கொல்லபட்ட யூதர்களுக்கான அஞ்சலி செய்யும் இடமாம்

“கிறுக்கு பயலுக, குஜராத் இனபடுகொலையாளி என சொல்லபட்ட என்னையும் அழைத்து இன்னொரு இனபடுகொலைக்கு அஞ்சலி செலுத்த வைக்கிறானுக‌

சிரிக்காம வச்சிட்டு போயிரணும், முகத்துல சிரிப்பு வருது, வழக்கமா கேமராவ பாக்குற மாதிரி இப்பொ பாத்து தொலைத்துவிட கூடாது பெருமாளே”


Image may contain: one or more people, people standing and outdoor

இதுதான் இஸ்ரேலிய தந்தை தியோடர் ஹெர்சில் கல்லறையாம், அஞ்சலி செலுத்தவேண்டுமாம்

எவனாவது நாட்டின் தேசதந்தைக்கு அஞ்சலி செலுத்துவானா? எங்கள் ஊரில் எல்லாம் தேசதந்தையினை கொன்றவனுக்குத்தான் அஞ்சலி செலுத்துவோம்

இவர் எப்படி செத்தார்? எவன் கொன்றான் என இவரிடம் எப்படி கேட்பது?

இந்த ஊரில் அப்படி எல்லாம் கொல்லமாட்டார்கள் போல, வித்தியாசமான ஊராக இருக்கின்றது


19702203_10209598491334231_3187049629312861434_n.jpgநெசமாவா? இது விவசாயமா? கோவணம் கட்டி வயல்ல இறங்காம இப்படி எல்லாம் விவசாயம் செய்ய முடியுமா?

கம்பியூட்டர் முன்னால இருந்தா இங்க விவசாயம் பண்றீங்க? இதுல இருந்தே எல்லா விவசாய‌ வேலையும் செய்யலாமா? எவ்வளவு 
ஆச்சரியம்?

எப்படிபட்ட நாடுடா இது?

அது சரி, யோகா செய்யாம, சமஸ்கிருதம் படிக்காம எப்படி உங்களுக்கு இவ்வளவு அறிவும் ஆரோக்கியமும்,

மாட்டுகறி தின்னாலும் எப்படி இவ்வளவு அறிவு?

(இஸ்ரேலிய விவசாய பண்ணையில் மோடி)


 

19702436_10209598421532486_2984109492591516410_n.jpg

“என் அண்ணன் ஜோனத்தன் நேத்தன்யாகு இஸ்ரேலுக்காக உகாண்டாவில் விமானத்தை மீட்கசென்று உயிர்விட்டவர், நானும் 6 நாள் போரில் சண்டையிட்டுருக்கின்றேன், இங்கெல்லாம் நாடுதான் முக்கியம், அதனால் நாட்டுக்காக போராடியவர்கள் தான் பிரதமராக முடியும் , அப்படித்தான் நான் பிரதமராக முடிந்தது.

எங்களுக்கு நாடா முக்கியம்? மாடுதான் முக்கியம் அதனால்தான் என்னை வைத்திருக்கின்றார்கள்

அப்படியா? இது நாட்டுக்காக‌ துப்பாக்கி பிடித்த கை, டீ ஆற்றிய கையினை விட வலுவானது, வேண்டுமானால் தொட்டு பாருங்கள்..”


 ·

Image may contain: 2 people, people standing and suit

 உள்ளூரில் இப்படி குல்லா வைத்தால்

சும்மா விடமாட்டார்கள், அந்த இஸ்லாமியரின் குல்லாவினை, அவர்களின் பங்காளியான யூதர்களுடன் வைத்தால் ஒரு பயலும் கண்டுகொள்ளமாட்டான்

யூதம் ஒரு வகையில் நாகரீகமான‌ இஸ்லாம், இஸ்லாம் இன்னமும் பழமையான யூதம் என்பதெல்ல்லாம் எவனுக்கு தெரியும்?

அதனால் தலையில் இது யூத‌ குல்லா என சொல்லி அணியலாம்..”

 
 

 


பிக் பாஸ் அலப்பறை ….

அந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பதிலாக கமலஹாசனின் 1 மணி நேர பேட்டியினை தினமும் ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும், அது போதும்

அவ்வளவு அனுபவங்கள் அவரிடம் கொட்டி கிடக்கின்றன, அவர் அதனை 100 நாள் சொன்னாலே மகா சுவாரஸ்யமாக இருக்கும்

அதனை விட்டுவிட்டு 13 இம்சைகளை போட்டு வறுக்கின்றார்கள், நடிக்க வரவில்லை என்றால் அவர்களை ஏன் இந்த பாடுபடுத்தவேண்டும்?

அதிலும் ஏதோ செவ்வாய் கிரகத்திற்கு 13 பேரையும் ராக்கெட்டில் ஏற்றி சென்றிருக்கும் பெரும் பொறுப்பினை சுமப்பது போல, தின்றது மாட்டு பிரியாணியோ எனும் சந்தேகத்தில் இருப்பது போல உம்மென்று ஒரு மாதிரி இருக்கும் சிநேகன் என்பவரை சகிக்க முடியவில்லை.

அவரை பார்த்தாலே டிவியினை ஆப் செய்ய தோன்றுகின்றது , இந்த கஞ்சா கருப்பு உண்மையிலே கஞ்சா அடிமையோ என்பது போல அலப்பறை,

வராத நடிப்பை வா என்றால் இவர்களிடம் எப்படி வரும்?

இதில் ஜூலி என்பவர் ஏதோ சொல்லிவிட்டாராம், அவர் சரியாக சொன்னால்தான் ஆச்சரியம்

“சின்னம்மா.. சின்னம்மா” என கூவிவிட்டு அம்மணி விஜய்டிவியில் இருக்கின்றது

இதே ஜெயா உயிரோடு இருந்தால் 10 கஞ்சா வழக்கு, சில சர்ச்சை வழக்கு பாய்ந்து இந்த‌ அம்மணியின் பிக்பாஸ் இப்பொழுது புழல் சிறையில் நடந்துகொண்டிருக்கும்…


என்ன அநியாயம் இது?

உடனே அந்த விஜய்டிவி பிக்பாஸ் வீட்டை உடைத்து அந்த ஜூலிக்கு கதற கதற தமிழ்தாய் வாழ்த்தை எழுதியது யார் என‌ சொல்லிகொடுக்க வேண்டும்,

அவரின் உடைந்த பல் அருகே இன்னொரு பல் உடைந்தாலும் பரவாயில்லை

ஏய் சூலி சேய்ய்ய் ஜூலி…. வாழ்த்தை எழுதியது மூன்றுபேர் தெரியுமா? அது வீரப்பன், பிரபாகரன் மற்றும் அங்கிள் சைமன்


 

 
 

தியேட்டர்கள் மூடபட்டால் குற்றங்கள்  அதிகரிக்கும் : டி.ராஜேந்தர்

தியேட்டர்கள் மூடபட்டால் குற்றங்கள்  அதிகரிக்கும் : டி.ராஜேந்தர்

உண்மையினை சொன்ன இவரை வாழ்த்ததான் வேண்டும், மனிதர் அவ்வளவு வெள்ளந்தியானவர்

அதாவது தியேட்டர்கள் மூடியபின‌ இரு நாளாக கிட்டதட்ட 50 கோடி வருமானம் இழப்பாம்

பார்க்கிங், டிக்கெட், பாப்கார்ன் என எப்படியெல்லாம் கொள்ளையடித்த பணம், எவ்வளவு வருமானம்? இதனை இழந்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா?

அதனால் தியேட்டர்காரர்களும் ஊழியர்களும் வழிப்பறி, கத்தி காட்டி மிரட்டுதல், வீடு புகுந்து கொள்ளையடித்தல், காரினை மறித்து புடுங்குதல் போன்ற காரியங்களில் ஈடுபடலாம் என்பதை மறைமுகமாக தெரிவிக்கின்றார்

சினிமாக்காரர்களில் யாராவது இதனை தைரியமாக சொன்னார்களா?

இப்படி தியேட்டர் கொள்ளை தடுக்கபட்டால், அது அடிதடி கொள்ளையாக மாறி தமிழக அமைதியினை குலைக்கும் என மிக தைரியமாக சொன்ன டி.ஆருக்கு வாழ்த்துக்கள்

“தல யாரு
தைரியமான டியாரு…”

சென்னையில் ஐஎஸ் ஆதரவாளர் கைது: ராஜஸ்தான் போலீஸார் அதிரடி

சென்னையில் ஐஎஸ் ஆதரவாளர் கைது: ராஜஸ்தான் போலீஸார் அதிரடி

அப்படியானால் தமிழக போலிஸ் என்ன செய்துகொண்டிருந்தது என யாரும் கேட்டுவிட கூடாது, குட்கா விவகாரம் எல்லாம் நினைவுக்கு வர கூடாது

வழக்கமாக வாங்கும் மாமூலுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு என போட்டு கொண்டிருந்தார்களோ என்னமோ இவனை பிடிக்க மறந்துவிட்டார்கள் ,

ராஜஸ்தான் போலீஸ் அசத்திவிட்டது

சரி, தமிழக காவல்துறைக்கு பொறுப்பு அமைச்சவர் யார்? எடப்பாடி பழனிச்சாமிதான்

ஏன் தமிழக காவல்துறை தூங்கியது என கேட்டால், இது திமுகவின் சதி அவர்கள்தான் காரணம் என்ப்பார்கள்