இரு வகை இம்சைகளில் எது ஒழிந்தாலும் நல்லதுதான்..

Image may contain: 2 people, people smiling, people standing

தன் அருகிலிருக்கும் நாடுகளை எல்லாம் நொறுக்கி தள்ளிவிட்டது இஸ்ரேல்

அதன் பயமும், அதன் நோக்கமும் ஈரானை நொறுக்குவது

அது கொஞ்சம் தூர நாடு, இஸ்ரேலிய விமானங்கள் நேரடியாக சென்று திரும்ப முடியாது, ஏவுகனை மட்டுமே சாத்தியம்

சுருக்கமாக சொன்னால் ஈரான் அருகில் ஒரு நட்பு நாடும் அதன் படைதளமும் இருந்தால், இஸ்ரேல் ஈரானை துவைக்கும் பொழுது வசதியாக இருக்கும்

பாகிஸ்தானில் இஸ்ரேல் கால் வைக்கமுடியாது, வேறு எந்த நாடும் ஈரான் அருகில் சாத்தியமில்லை இந்தியா தவிர‌

எதற்கோ கண்ணி வைத்து மோடி தலையில் மிளகாய் அரைத்துகொண்டிருக்கின்றது இஸ்ரேல்

அதன் கணக்குகள் நுட்பமானவை, கண்டுபிடிக்க மகா சிரமமானவை , ஆனால் ஆதாயமின்றி யாரிடமும் பேச கூட செய்யாது

ஈரானுக்கான ஆபத்து கூடிகொண்டே செல்கின்றது, இந்தியா அதில் இணையுமானால் நஷ்டம் இந்தியாவிற்கே

இ என்றால் இந்தியா, இ என்றால் இஸ்ரேல் என ரைமிங்காக முழங்குகின்றார் மோடி, இ என்றால் இரான் என்றும் கள்ள சிரிப்பு சிரிக்கும் நேதன்யாகுவின் சிரிப்பு சிலருக்கே புரிகின்றது


மோடி ஒரு இந்து, அவர் சென்றிருப்பது ஒரு யூத நாட்டிற்கு, அதுவும் இயேசுவினை குட்டிசாத்தானாக கருதும் ஒரு இனம் ஆளும் நாட்டிற்கு

அதற்குள் மோடிக்கு இரங்கும் இயேசப்பா, மோடிக்கு உமது ஒளியினை காட்டுவீராக, அற்புதம் செய்வீராக, அல்லேலூயா என சிலர் ஆரம்பித்திருக்கின்றார்கள்

எவ்வளவு பெரிய அட்டகாசம்?, தாங்க கூடியதா இது?

இவர்களை என்ன செய்யலாம்? அப்படியே பிடித்து சிங்கத்தின் கூண்டில் அடைக்கலமா? வேண்டாம் அது பழைய ஸ்டைல்

இப்பொழுதெல்லாம் பிக்பாஸ் காலம், இந்த அர்ஜூன் சம்பத், எச்.ராசா போன்றோர் இருக்கும் அறையில் தள்ளி 100 நாள் அடைத்து வைக்கலாம்

இரு வகை இம்சைகளில் எது ஒழிந்தாலும் நல்லதுதான்..


 
 
 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s