இந்திய வெளியுறவு துறை இலங்கையில் தோற்றுவிட்டது : திருநாவுக்கரசர்

இந்திய வெளியுறவு துறை இலங்கையில் தோற்றுவிட்டது : திருநாவுக்கரசர்

அதாகபட்டது இலங்கை அதன் பாராளுமன்றத்தில் அதன் நாட்டு எல்லைக்குள் மீன்பிடிக்க வரும் அந்நிய நாட்டினருக்கு எதிராக கடும் சட்டங்களை இயற்றியுள்ளது

இதனை மோடி அரசு ஓடி சென்று தடுக்கவில்லையாம்

ஒரு நாடு இயற்றும் சட்டங்களை இன்னொரு நாடு எப்படி தடுக்க முடியும்? இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத இவர்தான் தமிழக காங்கிரசின் தலைவராம்

என்னவோ காங்கிரஸ் அரசில் இலங்கையினை காலுக்குள் வைத்திருந்தது போலவும், இன்று மோடி அதனை விட்டுவிட்டது போலவும் பேசிகொண்டிருக்கின்றார்

ராஜிவ் காலத்திலே அந்த புலிகளையே வழிக்கு கொண்டுவரமுடியாமல், அழிக்கவும் முடியாமல் தோற்றுபோனதுதான் இந்திய வெளியுறவு துறை

பாஜகவிற்கு தமிழிசை போல காங்கிரசிற்கு இந்த திருநாவுக்கரசர் போல‌

இவர் முன்னாள் பாஜக என்பது குறிப்படதக்கது, ஒருவேளை காங்கிரசின் தவறுகளை சுட்டிகாட்டும் வாய்பினை உருவாக்க ஸ்லீப்பர் செல்லாக இந்து வந்திருக்கின்றாரோ என்னமோ?


கொசுறு

இந்த ஜூலிக்கே 4 பேர் ரசிகர்கள் என திரளும் பொழுது, குஷ்பூவிற்காக பெரும் படை திரள்வதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

அது ஆச்சரியமாக இருக்கவே முடியாது.

நேற்று முளைத்த காளானினை விட நிரந்தரமாக மின்னும் வைரம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது?

ஆக நாம் மிக சரியாகத்தான் போய்கொண்டிருக்கின்றோம் Venkatesh Mothilal , Sadhu Sadhath , Surin VijaySenthil Vasan M,


 

சீமானை பற்றி எழுத என்ன இருக்கின்றது ?(காணொளி )

இனி சீமானை பற்றி எழுத என்ன இருக்கின்றது, இந்த ஈழ நண்பர் பின்னி எடுத்துவிட்டார்

இதற்கு மேலும் சீமான் மைக் பக்கம் வராமலும், மேடை ஏறாமலும் இருப்பது நல்லது,

ஆயிரம் சொல்லுங்கள், சில ஈழதமிழர்களிடம் இருக்கும் சுவாரஸ்யமான நக்கலும், கிண்டலும் தமிழகத்தாருக்கு சுட்டு போட்டாலும் வராது

வீடியோவினை பார்த்தால், நாம் தமிழர் கட்சியினர் கொடியினை இறக்கி வங்க கடலில் வீசுவது உறுதி

உங்கள் வீட்டில் காமெடி சேனல் ஓடிகொண்டிருந்தால் நிறுத்திவிட்டு இதனை பாருங்கள்

குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு வெடிசிரிப்பு விருந்து, ரஜினி ஒருவேளை பார்த்தால் அவர் நோயெல்லாம் ஓடிவிடும்

என்னால் 2 நிமிடம் கூட‌ சிரிக்காமல் கடந்து செல்ல முடியவில்லை, அவ்வளவுக்கு கலாய்த்திருக்கின்றார்

அதனால் ஒவ்வொரு நிமிடமாக நிறுத்தி சிரித்துவிட்டு நகர்கின்றேன், எப்படியும் 1 வாரம் சிரிக்கலாம் போல‌

பல வீடியோக்களை சீமானை கலாய்த்து வெளியிட்டிருக்கின்றார், சீமானை நன்றாய் தோலுரித்து காட்டியிருக்கின்றார் எல்லாமே பட்டாசு ரகம்


காணொளியை காணவும்


 


 
 
 

ஜிஎஸ்டி அலப்பறை கொஞ்சம் குறைந்திருக்கின்றது

இந்த ஜிஎஸ்டி அலப்பறை எப்பொழுது கொஞ்சம் குறைந்திருக்கின்றது

ஆனால் அமெரிக்காவில் என்ன சதவீதம் தெரியுமா? சிங்கப்பூரில் எத்தனை சதவீதம் தெரியுமா? என இப்பொழுது அடுத்த ரவுண்ட்

ஆனால் அமெரிக்காவில் 30% வருமான வரி என்பதனையும் மற்ற நாடுகளில் என்ன கொடும் வரி என்பதனையும் மறந்துவிடுவார்கள்

அந்த கொடும் வரிக்கும் மேல்தான் அவர்கள் ஜிஎஸ்டி கட்ட வேண்டும், அது 10% வருகின்றதாம், இவர்கள் அதனை பிடித்து கொள்வார்கள்

ஒரு அமெரிக்க டாலருக்கும், இந்திய பணத்திற்கும் மதிப்பென்ன? அப்படியானால் அவர்கள் பணத்தில் அது எத்தனை பெரிய மதிப்பு?

நிச்சயம் அவர்களுக்கும் அது பெரும் வரிதான்

இந்த ஏழை நாட்டில் உச்சமாக 28% சதம் சில பொருட்களுக்கு விதிக்கபட்டிருப்பது ஏறகுறைய அவர்களை விட குறைவுதான்

ஆக வெளிநாடுகளின் வருமான வரி என்ன என பார்க்கமாட்டான், அவர்களின் பண மதிப்பென்ன? என பார்க்கமாட்டான்

மாறாக அங்கே 8% வரி இங்கே 10% வரி, இங்கு மட்டும் ஏன் இவ்வளவு அசதவீதம் என குதித்துகொண்டிருப்பான்

விசாலை விடுங்கள் ….

Image may contain: 4 people, people smiling

விசாலை விடுங்கள் அவர் எங்கும் இப்படி சிரித்துகொண்டுதான் இருப்பார்,

கீழே மூன்று பேர் இருக்கின்றார்கள் அல்லவா?

அவர்கள் மீது கொலைவெறியினை தூண்டுதல், மன உளைச்சலை ஏற்படுத்துதல், சமூக அமைதியினை கெடுத்தல் , மக்களை ஆயுதம் ஏந்த வைத்தல் இது போன்ற பிரிவுகளில் வழக்கு பாயாதா?

கண்டதும் சுடவேண்டிய நபர்கள் இவர்கள், டெங்கு கொசுக்களை விட அபாயமானவர்கள்

 
 

கன்னி மரியாளுக்கு எப்படி குழந்தை பிறக்கும்- எச்.ராஜா

கன்னி மரியாளுக்கு எப்படி குழந்தை பிறக்கும்- எச்.ராஜா

மஹாபாரத குந்திக்கு எப்படி கர்ணன் பிறந்தான் என நாங்கள் நாகரீகமாக கேட்டுவிடுமோம்

ஆனால் பெரியார் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றார், எல்லாம் சபையில் சொல்லமுடியாத கேள்விகள், அவர் கேட்ட நாகரிகமான கேள்விகள் என இவைகளைத்தான் சொல்ல முடியும்

“ஆண் சாமியான சிவனும், இன்னொரு ஆண் சாமியான விஷ்ணுவும் ஆணும் சேர்ந்து பெற்ற சாமி அய்யப்பனாம், இது எப்படிங்க முடியும்?

ஆயிரம் வருஷம் வருஷம் வேலை வெட்டியே செய்யாம சிவன் உடலுறவு வச்சி பொறந்தானாம் முருகன், அதுவும் தாமரை பூவுக்கும் சிவனுக்கும் பிறந்தவனாம் 
முருகன், எப்படிங்க?

முனிவர் பொண்டாட்டி எங்க இருக்காண்ணு ஒருத்தன் தேடி தேடி ஓடிருக்கான், அவன் தேவர்களுக்கு அரசனாம். அவனே அப்படிண்ணா மற்ற தேவர்கள் எல்லாம் எப்படி இருப்பானுக?

முக்காலம் உணர்ந்த முனிவனுக்கு இந்திரன் தன் பொண்டாட்டி கூட இருக்கும் போது தெரியாதாம்

இந்திரனுக்கு சாபத்துல உடம்பெல்லாம் 
பெண்குறி வந்ததாம், ஏனுங்க அத பாத்துபுட்டா தேவர்கள் எல்லாம் சும்மாவா இருந்துருப்பானுக…

இவனுக கதை எல்லாமே ஆபாசமுங்க, ஏதும் சொன்னா நம்மளை நாத்திகன்னு திட்டுரானுக, நீங்களே யோசிங்க‌”

இன்னும் பெரியாரின் கேள்விகள் ஏராளம் உண்டு, எல்லோரும் கேட்டால் நிச்சயம் அது சமூக அமைதிக்கு நல்லதல்ல‌

மொத்தத்தில் ராசா விரைவில் தமிழகத்தின் பெரும் கலவரங்களுக்கு காரணமாக இருக்க போகின்றார்

இப்போதே அதனை தடுப்பது அரசின் கடமை

ரஜினியோ அமெரிக்காவில் கேசினோ விளையாடி கொண்டிருக்கின்றார். : சீமான்

நாங்கள் மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கின்றோம், ரஜினியோ அமெரிக்காவில் கேசினோ விளையாடி கொண்டிருக்கின்றார். : சீமான்

எப்படி இருக்கின்றது இந்த பச்சை பொய்.

ரஜினி அமெரிக்கா சென்றிருக்கின்றார், சில இடங்களுக்கு செல்வார், அப்படி ஒரு கிளப்பிற்கு சென்றிருக்கின்றார்

ஏன் ஆனானபட்ட நேருவே அமெரிக்க கிளப் சென்ற கதை இல்லையா? அவர் நாட்டுபற்று இல்லாதவரா?

எம்ஜிஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவில்லையா? அப்பொழுது சில இடங்களுக்கு செல்லவில்லையா? அதற்காக அவரை கழுத்தை நெறித்து கொல்லவா செய்தார்கள்?

சீமான் மக்களுக்காக போராடுகின்றாராம்? எங்கே சென்னையில் வீட்டில் இருந்து அறிக்கை வாசித்துகொண்டா?

ரஜினி கிளப் சென்றது எல்லாம் பிரச்சினையா?

முன்பு இவர் விஜயலட்சுமியுடன் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை அந்த அம்மணியே சொன்னது

24 மணிநேரமும் மக்களுக்காக போராடுவது யார்? அரசியல்வாதியின் மைக் கூட சில நேரம் ஓய்வெடுக்கும்

இப்படியுமா ரஜினியினை கரித்த்துகொட்டுவார்கள்?

ரஜினியினை விடுங்கள் சைமன், பாரத பிரதமர் கிடைக்கும் விமானதில் எல்லாம் பறந்து ஏதவது ஒரு நாட்டுக்கு சென்றுகொண்டே இருக்கின்றார்

அவரைபற்றி ஏதும் சொன்னால் என்ன? ஏன் திருமுருகன் காந்த்தியின் சிறைகதவு கண்ணுக்குள் வந்து போகின்றதா?

அமெரிக்கர்கள் சுதந்திரமானவர்கள்

அமெரிக்கர்கள் சுதந்திரமானவர்கள், அடிக்கடி தமாஷ் செய்வார்கள், உடனே மற்றவர்களும் கூட சேர்ந்து பெரும் காமெடி செய்வார்கள்

அப்படி டெக்சாஸ்லில் உள்ள மொலோசியா கிராமத்தில் 13 பேர் தாங்கள் தனிநாடு உருவாக்கிவிட்டதாக சொல்லி தமாஷ் செய்தார்கள், சும்மா அல்ல இது 40ம் ஆண்டு சுதந்திர விழா என சொல்லிகொண்டார்கள்

மற்ற மக்களும் வாழ்த்தினார்கள், இவர்களோ இது எங்கள் கொடி இது எங்கள் அரசு, இது எங்கள் மக்கள் என சொல்லிகொண்டே இருந்தார்கள்

அந்த 13 பேர்தான் அமைச்சர்கள், அதிபர்கள் அவர்கள்தான் மக்கள், அவர்கள் தான் ராணுவம் அவர்கள்தான் மொத்தமும்

சரி காமெடி போதும் வரி கட்டினீர்களா என அமெரிக்க அரசு கேட்க, அடுத்த நாட்டுக்கான நிவாரண உதவியினை எப்பொழுதோ வழங்கிவிட்டோம் என மறுபடியும் சிரிக்க வைத்திருக்கின்றார்கள்

உலகின் பல நாடுகளின் சுதந்திரத்தினை அமெரிக்கா தடுக்கின்றது என்பதை இப்படி அங்கு சிலர் காமெடி செய்து எதிர்ப்பு தெரிவிப்பார்களாம்

இது அவர்கள் உலக வல்லரசான காலத்தில் இருந்து உள்ள விஷயம், வியட்நாம் போரின் பொழுதும் அமெரிக்கர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவித்தார்கள்

இது அதில் ஒருவகை அவ்வளவுதான், இது நிச்சயமாக வேடிக்கை

ரஜினி ரசிகர்கள் பாரதிராஜாவினை கண்டு கொள்ளாதது போல அமெரிக்க அரசும் இவர்களை கண்டு கொள்ளாது

ஆனால் இது நமது பக்கம் நாம் தமிழர், தமிழர் உரிமை, இன உணர்வு என பேசிகொண்டிருப்பவர் காதில் விழுந்தால் என்னாகும்?

சீனா எங்கிருக்கின்றது என தெரியாமலே, சீனாவுடன் இந்தியா யுத்தம் புரிந்தால் சீனாவினை ஆதரித்து தமிழ்நாடு அமைப்போம் என சொல்லிகொண்டிருக்கும் கூட்டம் இது

ஒருவேளை இந்த அமெரிக்க சம்பவம் தெரிந்துவிட்டால்?

உலகம் காமெடியாக நினைப்பதெல்லாம் இவர்களுக்கு மகா சீரியஸ், உலகம் சீரியஸ் என நினைப்பதெல்லாம் இவர்களுக்கு காமெடி

அவ்வளவுதான், தமிழகத்தில் சீரியசாக 10 பேர் , 5 பேர் சேர்ந்து நாடு அமைப்பார்கள், அங்கிள் சைமன் தன் அலுவகத்திலே அதிபர், வெளியுறவு, ராணுவம் என 4 மேஜைகளை போட்டு சுதந்திர பிரகடனத்தை அறிவித்துவிடுவார்

“அமெரிக்காவில் மொலிசியா இருப்பது போல் நாங்கள் கவுரவமாக இந்த நாட்டிற்குள் நாடாக இருப்பதில் என்ன தவறு என் சொந்தமே ” என சீரியசாக கிளம்புவார்கள்

“இலக்கை அடைந்தோம், இன விடுதலை பெற்றோம், இது தமிழ் வானம்” என அவராக தன் அல்லக்கைகளோடு மொட்டை மாடியிலும் கத்துவார்

அதற்கும் கைதட்ட ஒரு கூட்டம் இருக்கும், அதோடு விடுமா? அண்ணே வாருங்கள் பாகிஸ்தானோடு சேர்ந்து இந்தியாவோடு யுத்தம் தொடங்கி அகண்ட தமிழகம் அமைப்போம் என சிலர் சீரியசாக சொல்வார்கள்