ஆப்பரேசன் எண்டபே : 02

No automatic alt text available.

இஸ்ரேல் பிரதமர் அழுது அழுது (கள்ள அழுகைதான் 🙂 ) “கைதிகளை விடுவிக்கின்றோம்” என சொல்லிகொண்டிருக்கும் பொழுதே 6 மொசாத் உளவாளிகள் உகாண்டாவின் அண்டை நாடான கென்யாவில் சுற்றுபயணிகளாக வெளிநாட்டு பாஸ்போர்ட்டில் இறங்கினர்.

(அவர்களிடம் எல்லா நாட்டு பாஸ்போர்ட்டும் உண்டு, குடிநுழைவு முத்திரையும் அவர்களாகவே குத்திகொள்வார்கள், அப்படியே அசலாக இருக்கும் 🙂 )

உகாண்டாவில் ஆளை வெட்டிய இடி அமீன், ஆடுவெட்டி கொண்டாடினார், தான் இஸ்ரேலை பணிய வைத்ததாக நம்பினார், இஸ்ரேலை தான் அலற வைத்தாக அவருக்கு கடும் உற்சாகம் , இஸ்ரேலை தைரியமாக எதிர்த்தால் என்னாகும்? அதேதான் இஸ்லாமிய நாடுகளின் ஹீரோ ஆகலாம்

இடி அமீன் அந்த ஹீரோ கனவில் இருந்தார்

அதே நேரம் கென்யாவில் 6 இஸ்ரேலிய‌ உளவாளிகள் 2 பேர் சுற்றுலா பயணிகளுக்கான சிறிய ரக விமானத்தை வாடகைகு எடுத்து இரண்டு சுற்று கென்யாவை சுற்றிவிட்டு மூன்றாவது சுற்றாக உகாண்டாவிற்குள் நுழைய முயன்றனர், “நாங்கள் வெளிநாட்டின் சுற்றுபயணிகள், ஒரு ஆப்ரிக்க புத்தகம் தயாரிக்க போட்டோ எடுக்கிறோம், உங்கள் நாட்டின் அழகு பெரிது, உலக புகழுக்கு நாங்கள் பொறுப்பு” என்றனர்.

இது அங்கு அடிக்கடி நடக்கும் விஷயம் என்பதால் உகாண்டா தரப்பு சந்தேகிக்கவில்லை

இடி அமீன் ஏற்கனவே பாதுகாப்பை தளர்த்தி இருந்தார். அனுமதி கொடுக்கபட்டது, அவர்களும் எண்டபே விமான நிலையத்தையும் சேர்த்து எடுத்து படங்களை மொசாத்திற்கு அனுப்பினர். படங்களை பார்த்த கீம்சி திட்டத்தை துரிதமாக்கினார்.

கீம்ஸி முன்னால் இருந்த பிரச்சினை பெரிது, அதாவது உகாண்டா வரை நேரடியாக பறந்து செல்லும் அளவு விமான எரிபொருள் பற்றாது, (இன்று நடுவானில் பெட்ரோல் நிரப்பும் வசதிவரை அவர்களிடமுண்டு) இடையில் ஒரு நாட்டில் இறங்கி நிரப்பவேண்டும், ஆனால் அந்த நாட்டிற்கும் விஷயம் தெரிய கூடாது, தந்திரமாக ஏமாற்றவேண்டும்,

ஒரு வழியாக கென்யாவை தேர்ந்தெடுத்தார், ஆனால் கென்ய அரசாங்கம் விஷயம் தெரிந்தால் ஒத்துழைக்காது, காரணம் இடி அமீன் கொன்யாவை கொத்துகறி ஆக்குவார்.
இஸ்ரேலிய வெளியுறவு துறையை தொடர்பு கொண்டு தெளிவான கீம்ஸி சொன்னார், சர்வதேசத்தை தந்திரமாக கவனம் திருப்புங்கள், இடி அமீனையும் நம்ப்பும் படி செய்யுங்கள், மீதியை நான் பார்த்து கொள்கின்றேன்.

உடனே இஸ்ரேலிய அரசு இடி அமீனுக்கு தொலைபேசியில் பேசிற்று, 1972ம் ஆண்டே இஸ்ரேலிய தூதரகத்தை இடிஅமீன் மூடியிருந்தார், “நீங்கம் எமது மக்களுக்கு உணவும் நீர் கொடுத்து பாதுகாத்தமைக்காக நன்றி, விரைவில் உங்கள் சிரமம் குறையும்” என்றனர்.

இடி அமீனுக்கு அன்று உடலெல்லாம் சிரிப்பு.

தான் கொஞ்சம் அறிவாளி என நினைத்ததால் மற்ற நாட்டு தூதரகங்களை உளவுபார்ப்பார் இடிஅமீன், அங்கெல்லாம் இஸ்ரேலிய செய்திகள் வேண்டுமென்ற சொல்லபட்டன, “என்ன செய்ய இனி தீவிரவாதிகளை விடுதலை செய்வதை தவிர வேறு வழி இல்லை, நீங்களாவது உஷாராக இருங்கள்” என்பதை போன்ற செய்திகள் சென்றுகொண்டே இருந்தன‌.

இடி அமீனும் கவனமாக கேட்டு சிரித்துகொண்டே இருந்தார், பாதுகாப்பை குறைத்தார்.

இடி அமீனின் யோசனைகேற்ப கடத்தல்காரர்கள் 1 வாரம் பணயகாலத்தை நீட்டினர், புன்னகைத்தார் கீம்ஸி,

அதற்குள் கென்யாவில் 2 மொசாத் உளவாளிகள் ஒரு கென்ய நாட்டவரை வளைத்து அவர் மூலமாக விக்டோரியா ஏரியை கடந்து உகாண்டாவுக்குள் புகுந்தனர்.

இஸ்ரேலியரின் கிருஷ்ணன் டேவிட் கீம்ஸி தனது ராஜதந்திர ஆட்டத்தை ஆரம்பித்தார்.

சுமார் 70 பேர் கொண்ட (பெண்கள் உட்பட‌) கமாண்டோ படை அவர் முன்னால் வந்து நின்றது, அதில் 10 பேரை எடுத்து வெள்ளைகோட் கொடுத்து, ஸ்தெதஸ்கோப்பை கழுத்தில் போட்டு டாக்டராக்கினார், ராணவ விமானம் ஆம்புலன்ஸ் போல மாற்றபட்டது, கார்கோ பகுதி மருந்துகளால் மறைக்கபட்டு 60 பேர் உள்ளிருந்தனர்.
வெளிபார்வைக்கு 10 டாக்டர்கள் செல்லும் ஆம்புலன்ஸ் விமானம் அவ்வளவுதான் தெரியும்,

ஆனால் மருந்து பொட்டலங்களுக்குள் 60 வீரர்கள் மறைந்திருந்தனர்.

இப்பொழுது இந்த வேடம் எதற்கு என எல்லோருக்கும் சிந்தனை வந்தது, இது உங்கள் பணி அவ்வளவுதான், என்றார் கீம்ஸி, யாருக்கும் புரியவில்லை ஆனால் தயாராக இருந்தார்கள்

எண்டெபே விமான நிலைய போட்டவை அவர் பார்த்து கொண்டிருந்த பொழுதே உகாண்டாவிற்குள் ஏரி வழியாக ஊடுருவிய உளவாளிகள் அற்புதமான பணியில் தகவல் கொட்ட தொடங்கிற்று.

எப்பொழுதும் இஸ்ரேலியருக்கு ஒரு அதிர்ஷ்டம் தானாக வந்து அமையும், அல்லது ஒரு அருமையான வாய்ப்பு இயற்கையாய் கிடைக்கும் இம்முறை கிடைத்தது அந்த ஏரி.
உற்சாகமானர் கீம்ஸி, அடுத்த திட்டம் கென்யாவை ஏமாற்றுவது,

ஏரியை வைத்து கரை ஏறுவது, காரணம் இரு நாட்டுக்கும் பொதுவான ஏரி அது.

பரபரப்பான காட்சிகள் தொடங்கின‌

தொடரும்..

 
 

பிக் பாஸ் : என்ன கருமாந்திரமோ ஒரே இம்சை …

 நமீதாவின் கம்மல் அவரின் உருவத்திற்கு ஏற்றவாறே உள்ளது,

ஏதும் சில ஆலயத்தின் பிரமாண்ட தேர்கள் காணாமல் போயிருந்தால் நமீதா காதுபக்கம் தேடலாம்


10 வயகாராவினை விழுங்கியவர் போலவோ, மூல வியாதி முற்றிபோனவர் போல இந்த சிநேகன் அலைவதை பார்க்கும் பொழுது எரிச்சலாக வருகின்றது.

இந்த காயத்திரியினை பார்க்கும் பொழுதெல்லாம் அம்மாவும், சின்னம்மாவும் கண்முன் வருகின்றார்கள்

கோழி திருடன் போல அந்த பரணி அலைவதும், செம்மறி ஆட்டை மேய்ப்பவன் போல கத்தும் அந்த கஞ்சா கருப்பும் அஹிம்சையினையே சோதிப்பவர்கள்

இந்த நிகழ்ச்சியில் இருக்க வேண்டியது நடிகை கோவை சரளா, அவர் இருந்திருந்தால் கொஞ்சமாவது தேறியிருக்கும், நன்றாக நடிக்கவாவது செய்வார்

என்ன கருமாந்திரமோ ஒரே இம்சை, காண சகிக்கவில்லை..

இந்த யழவுபட்ட நிகழ்ச்சியினை பார்க்கும் பொழுதெல்லாம் எழும் கேள்வி, அந்த கமலஹாசன் இந்த நாட்டை விட்டு போகாமல் ஏன் இங்கிருந்து தொலைத்தார் என்பதுதான்


ஆர்வகோளாறில் குதிரைவாலி அரிசி வாங்கிவிட்டேன், என்ன செய்வது என்பதுதான் தெரியவில்லை

அதனை சோறாக்கலாமா? இல்லை இடித்து புட்டுதான் அவிக்க வேண்டுமா? இல்லை இடித்து தேனோடு கலந்து உருண்டையாக்கலாமா?

தெரிந்தவர்கள் சொல்லலாம்


 

 
 

குஷ்புவே நமஹ ! : 1

அன்றைய பாம்பேயில் செப்டம்பர் 29, 1970ம் நாளன்று அந்த குழந்தை சாதாரண குழந்தையாகத்தான் பிறந்தது, பின்னொரு நாளில் தமிழக பெரும் சர்ச்சைகளுக்கு காரணமாகும் என யாருக்கும் தெரியாது. மூன்று சகோதரர்களுடன் அது தவழ்ந்து வளர்ந்தது. நஜ்மா கான் எனும் தனித்து வாழ்ந்த தாய் அந்த 4 குழந்தைகளையும் வளர்த்து வந்தார்

நக்கத் கான் எனும் பெயரோடு வளர்ந்த அந்த குழந்தை படிப்பில் கெட்டிதான். அப்பொழுதே ஆங்கிலம் அதன் நுனிநாக்கில் விளையாடியது. நாக்கில் ஆங்கிலம் ஆடியதை விட அந்த குழந்தை முகத்திலே ஒரு வசீகரம் இருந்தது. வட்ட முகமும், குண்டு கன்னமும், ஓளிவீசும் கண்களுமாய் பார்ப்போரை கவர்ந்திழுந்த அந்த முகம், இந்தி திரையுலகத்தோரை அன்றே திரும்பி பார்க்க வைத்தது, ஒரு வித ஈர்ப்பு அன்றே அக்குழந்தையிடம் இருந்தது. விளைவு அது குழந்தை நட்சத்திரம் ஆனது

தர்மேந்திரா, வினோத் கண்ணா, ஹேமமாலினி நடித்த அந்த “பர்னிங் டிரெய்ன்” படத்தில் 10 வயது ஆன அந்த குழந்தை முதன் முதலாக ஒரு பாடலில் நடித்தது. “தெரி காய் சாமீன்” எனும் பாடலில் அன்றே “தெறி”க்க விட்டது அக்குழந்தை ஹேமா மாலினியியோடு நடித்தாலும், தமிழகத்திலிருந்து பாம்பே சென்று ஜெயித்த ஹேமா மாலினி போல பின்னாளில் தமிழகத்தில் தான் ஜொலிப்போம் என்பதெல்லாம் அதற்கு அன்று தெரிந்திருக்க நியாயமில்லை

அதன் பின் 5 வருடம் படிப்பில் கவனம் என இருந்த அந்த அழகு சிலை 15ம் வயதில் கதாநாயகி ஆனது. ஆம் அச்சிறுமி “ஜானு” எனும் படத்தில் துணை கதாநாயகி ஆனார். மிக இளம் வயது என்றாலும் அந்த வட்ட முகமும், குழந்தை சிரிப்பும் குமரி முகமுமாய், மலந்தும் மலராத மலர் போல இருந்த அவருக்கு வாய்ப்புகள் வரதொடங்கின‌. ஆயினும் மாதுரி தீட்சித், ஸ்ரீதேவி போன்ற பெரும் ராணிகள் இருந்த இடத்தில் இந்த புதுமலர் பெரிய இடத்தை அடைய முடியவில்லை

சினிமா என்பது ஜென்ம சனி. பிடித்தால் விடாது. ஒருமுறை கேமரா முன் நடித்துவிட்டால் அந்த பாதையிலே இழுத்து செல்லும், அதன் தன்மை அப்படி. குழந்தை நட்சத்திரங்கள் வளர்ந்து போராடி வருவது அப்படித்தான், கமலஹாசன் அப்படித்தான் உருவானார். இன்னும் ஏராளம் உண்டு. விதி இவரை தெற்கு பக்கம் தள்ளிவிட்டது, தெலுங்கு பக்கம் வந்தார்

“கலியுக பண்டவுலு” எனும் தெலுங்கு படமே அவருக்கு தெற்கே முதல்படம், 16 வயது மங்கையாக, அதிகாலை பனிபோல மென்மையான முகமாக, 3ம்நாள் பிறையாக, தங்க சிலையாக தெலுங்கில்தான் அறிமுகமானார். அது ரிலாசான அன்றே சொன்னார்கள், மான் போல துள்ளிகொண்டும், மயக்கும் சிரிப்புடனும், கொழு கொழு கன்னத்துடனும், கண்களில் குறும்புடனும் அப்பெண் திரையில் ஜொலித்ததை பலர் கணித்து சொன்னார்கள்

“இப்பெண் தெற்கே ஒரு ரவுண்ட் நிச்சயம் ஜொலிக்கும்”.

அப்பெண் சென்னையில் இருந்து கொண்டு வாய்ப்பு தேடினார். 17 வயதில் தன்னந்தனியாக தேடினார். மொழி தெரியாத ஊர், அந்நியமான ஊர். மொழி தெரியாவிட்டாலும், யாரும் தெரியாவிட்டாலும் அவரிடம் பெரும் தைரியம் அன்றே இருந்தது. அந்த தைரியம்தான் சென்னையில் அவரை போராட வைத்தது. தப்பும் தவறுமாக தமிழ்படித்து அவர் தமிழச்சியாக மாற தொடங்கியது அப்பொழுதுதான்.

கொஞ்சமும் அசராமல் போராடினார். அவரின் போராட்டம் ஒரு துணை நடிகைக்கான வாய்பினைதான் பெற்று தந்தது. ரஜினியும் பிரபுவும் இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன் படத்தின் மூலமாகதான் அவர் தமிழகத்திற்கு வந்தார். மெக்கானிக் ஷாப் முதலாளி வேடம். பாத்திரத்தின் பெயர் தேவி. தன் 18ம் பிறந்தநாளை கொண்டாட அவர் தயாராகிகொண்டிருந்த பொழுது செப்டம்பர் 24, 1988 அன்று திரைக்கு வந்தது அப்படம்

ரஜினி அன்றே மாஸ் ஹீரோ. சுஹாசினியும், பிரபுவும் பெரும் குடும்ப வாரிசுகள் எல்லோரும் அறிந்தது. நாசர் அப்பொழுதே நாயகனில் பிரபலமாகியிருந்தார். அவர்களை எல்லோரும் கொண்டாடியது ஆச்சரியமல்ல, மாறாக அவர்களை ஒதுக்கிவிட்டு இந்த புது முகத்தை ஆச்சரியமாக பார்த்தார்கள். ஒரு விதமான அழகு அவர். அதற்கு முன்பு அப்படி ஒரு அழகான பெண்ணை தமிழகம் கண்டதில்லை. அந்த முகம் அப்படி பிரகாசமாக ஜொலித்தது, கண்களும் கன்னமும் பல நூறு கதைகளை சொன்னது

ரோஜா நிறத்தில் வந்த தங்க சிலையாக அவர் ஜொலித்தார்

தமிழகம் மெல்ல அவர் பெயரை உச்சரித்தது. சிலர் குறும்பாக பார்த்தார்கள். சிலர் வியந்து பார்த்தார்கள். துறுதுறுவான வெண்ணை கட்டி சிலையாக இருந்த அப்பெண்ணின் பெயரை எல்லோரும் உச்சரித்தார்கள்.

“குஷ்பூ” எனும் பெயர் அன்றுதான் தமிழகத்தில் நுழைந்தது, எல்லோர் பார்வையும் அவர் மேல் பதிந்தது. இத்தனைக்கும் மிக சிறு பாத்திரத்தில்தான் அவர் நடித்திருந்தார். பல டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் கவனம் அவர் மேல் பதிந்தது. அவர் காட்டில் அடைமழை கொட்டுவதற்கான மேகங்கள் அப்பொழுது கூடின‌

எல்லோர் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர அவரும் தயாரானது அந்த தருணத்தில்தான்.

தமிழ் திரையில் எத்தனை நாயகிகள் வந்தாலும் வெகு சிலரே ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு நிரந்தரமாக அமர்வார்கள், அஞ்சலி தேவி, பத்மினி, சாவித்ரி, சரோஜாதேவி வரிசை என அந்த வரிசை மிக சிறியது

அந்த மிக சிறிய வரிசையிலும் குஷ்பூ பெரும் இடம் பெற வழி வகுத்தவர் பாசில். வருடம் 16 என படமெடுத்து அடுத்த வந்த 20 வருடங்களை அவர் நாயகியாக ஆள அவர்தான் அடித்தளமிட்டார். பெரும் திறமைசாலியும், மிக நுண்ணிய ரசனையும் கொண்ட பாசில் தன் படத்தில் குஷ்பூவினை அனுமதிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம், மிக சரியாக அந்த கதையில் மிக பொருத்தமாக குஷ்பூவினை பொருத்தினார் பாசில்

குஷ்பூவின் மிக சிறந்த படமான வருஷம் 16 தயாரானது. டெல்லியில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த பெண் பாத்திரத்தில் குஷ்பூ மிக அழகாக பொருந்தினார். அதுவரை மலையாள நடிகைகளை கண்டுகொண்டிருந்த தமிழகத்தில் ஒரு மாறுதலுக்காக பாசில் குஷ்பூவினை ஒப்பந்தம் செய்தார்

அது பிப்ரவரி 17, 1989 நிச்சயம் ஒரு சுபயோக தினமாக இருக்க வேண்டும், அன்றுதான் அப்படம் திரைக்கு வந்தது

பெருவெற்றி பெற்ற அப்படம், குஷ்பூவினை எப்படி தமிழகத்தின் சொத்தாக மாற்றியது? எப்படி எல்லாம் குஷ்பூ மங்கா அடையாளம் பெற்றார்?

(பூ பூக்கும்)

ஒரு வழியாக தொடர் தொடங்கியாயிற்று

Image may contain: 1 person, text and outdoor

ஒரு வழியாக தொடர் தொடங்கியாயிற்று.,குஷ்பூ ரசிகர்மன்றத்தினர் கவனத்தில் கொள்ளலாம்.

தலைவியின் புகழை தரணியில் முழங்க வைப்போம்

(LKG பாய்ஸ் இனி முகநூலை விட்டே ஓடிவிடுவார்கள்)


1 hr · 

தமிழ் திரையில் எத்தனை நாயகிகள் வந்தாலும் வெகு சிலரே ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு நிரந்தரமாக அமர்வார்கள், அஞ்சலி தேவி, பத்மினி, சாவித்ரி, சரோஜாதேவி வரிசை என அந்த வரிசை மிக சிறியது 

http://bit.ly/2trYUTI 


#Kushpoo #KushbuSundar #Varusham16 #DirectorFazil #KushpoolifeHistory#StanlyRajan #TamilcinemaHeroins #Top10Heroines


 

டிரம்பும் புட்டீனும் ஜெர்மனில் சந்தித்தார்கள்

Image may contain: 1 person, suitடிரம்ப் பதவிக்கு வர ரஷ்யா உதவியது என்ற குற்றசாட்டில் டிரம்பினை பாடாய் படுத்தி விசாரிக்கின்றார்கள், அங்கு சட்டம் எல்லோருக்கும் சமம் என்பதால் டிரம்பிடம் கேள்விகள் தொடுக்கபடுகின்றன‌

பதில் சொல்லிவிட்டு வெளியே வந்த டிரம்ப் களைப்பில் சொல்லிவிட்டார், “ரஷ்யா தவிர இன்னும் சில நாடுகளும் எனக்கே தெரியாமல் இதில் விளையாடியிருக்கலாம்”

இம்மாதிரி விஷயங்களில் ரஷ்யா தவிர ரிஸ்க் எடுக்கும் நாடுகளில் இஸ்ரேல் போன்ற சில உண்டு, அதனை டிரம்ப் சொல்லியிருக்கலாம்

Image may contain: 2 people, people smiling, people sittingஇது நமது மோடி பிரியர்களுக்கு தெரியாதவரை நல்லது இல்லாவிட்டால் புட்டீனுடன் சேர்ந்து டிரம்பினை அதிபராக்கியது மோடி தான் என கிளம்பிவிடுவார்கள்

நேற்று டிரம்பும் புட்டீனும் ஜெர்மனில் சந்தித்திருக்கின்றார்கள், வடிவேலுவின் “ஸ்நேக் பாபு “காமெடி நினைவுக்கு வருகின்றது

மோடியும் ஜெர்மன் சென்றார் ஆனால் பிரியங்கா சோப்ராவினை சந்திக்கவில்லை, மறுபடி எப்படி சந்திப்பார்? பட்ட பாடு போதாதா?


கொசுறு

எல்லை தாண்டும் மீணவருக்கு 20 கோடி வரை அபராதம் : இலங்கை அரசு சட்டம்

முன்பு தமிழக மீணவர்களின் படகை பிடித்து வைத்துகொள்ள நான் தான் ஆலோசனை கொடுத்தேன் என சொன்ன சுப்பிரமணியன் சாமியினை இப்பொழுது காணவில்லை

இந்த ஆலோசனையும் அவர் கொடுத்திருக்க வாய்ப்பு உண்டு


ஆப்ரேஷன் எண்டபே : 01

Image may contain: 2 people, sunglasses, glasses and close-upகுஷ்பூ பற்றி எழுத தொடங்கினால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை, நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க கூடாது என்பது போல நடிகையர் மூலமும் பார்க்க கூடாது போல, காரணம் எவ்வளவு தேடியும் ஒன்றும் சிக்கவில்லை

அவரை பற்றிய படங்கள் இணையத்தில் நிரம்ப கிடக்கின்றதே தவிர, தகவல்கள் மிக குறைவு. யாரிடம் கேட்டாலும் ஒன்றும் தெரியவில்லை, இரு தொடர்களாவது தேறுமா? என முயற்சித்தாலும் தகவல் திரட்ட முடியவில்லை.

முடிந்தவரை திரட்டுகின்றோம் முடிந்தவரை திரட்டுகின்றோம் ஏதும் தகவல் கிடைத்தால் எழுதலாம், இல்லாவிட்டால் வாழ்க என சொல்லிவவிட்டு மங்களம் பாடலாம்.

அது ஒருபக்கம் இருக்கட்டும், இன்னொரு பக்கம் “சார், மோடி கட்டிபிடித்த அந்த நேதான்யாகு அண்ணன் ஏதோ சாகசத்தில் செய்தார் என எழுதினீர்கள் அல்லவா? அது என்ன சார்?” என பலர் கேட்டுகொண்டே இருந்தார்கள்.

அது உலகின் பெரும் சாகச நிகழ்வுகளில் ஒன்று , எந்த தீவிரவாதத்திற்கும் நாங்கள் அசைந்து கொடுக்க மாட்டோம் என இஸ்ரேல் உலகின் முகத்தில் அறைந்து சொன்ன முதல் நிகழ்வு.

அது பெரும் சம்பவம், அதனை சொல்லலாம், முன்பே எழுதியதுதான். இப்பொழுது மறுபதிப்பு, அது ஆப்பரேஷன் எண்டபே, எத்தனையோ பேர் எழுதிய வரலாறு. பல ஹாலிவுட் சினிமாக்கள் கூட வந்தன‌

1976ம் ஆண்டு ஜூன் 27ம் நாள் ஏர் பிரான்ஸ் விமானம் அது, இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து கிளம்பி கிரீஸின் ஏதென்ஸ்லில் இடைநின்று மறுபடி பாரீஸ் செல்லும் விமானம், கிட்டதட்ட 200 பயணிகள் இருந்தனர். பாதி பேர் யூதர்கள்.

எப்படியாவது இஸ்ரேலை மிரட்டி சில காரியங்களை நிறைவேற்றவேண்டும் என்ற கனவுடைய போராளிகள் கடத்தல்காரர்களாக மாறினர். ஆனால் இன்றளவும் இஸ்ரேலின் டெலஅவிவ் மாகா மகா கெடுபிடியான பாதுகாப்பன விமானநிலையம். உள்ளாடையின் பட்டன் வரை நமக்கு தெரியாமலே சோதனை செய்யும் வித்தை தெரிந்தவர்கள்.

இன்றும் ஏவுகனைகளால் வீழ்த்தமுடியாதது இஸ்ரேலிய விமானங்கள், அவர்கள் பாதுகாப்பு முறை அப்படி. மோடி தங்கியிருந்த ஹோட்டல் மிகுந்த பாதுகாப்பானது என சொன்னார்கள அல்லவா? அப்படி பாதுகாப்பின் உச்சத்தில் இருப்பவர்கள் அவர்கள்

காரணம் அந்த முன் எச்சரிக்கையும், பாதுகாப்பும் விழிப்பும் அது பற்றிய சிந்தனையும் இல்லை என்றால் இஸ்ரேல் என்றொரு நாடு இப்பொழுது இருக்காது, அதன் நிலை அப்படி.

இது கடத்தல்காரருகும் தெரியும் சமத்து பிள்ளையாக பாரீஸ்க்கு டிக்கெட் எடுத்துவிட்டு விமானத்திற்கு வந்தனர்.

விமானம் கிளம்பி சென்று ஏதென்ஸில் நின்றது, பயணிகள் ஏறி இறங்கும் நேரம். ஐரோப்பாவில் கிரீஸ் அன்றே பரிதாப நிலையை எட்டியிருந்தது, பாதுகாப்பு சுத்தமாக இல்லை. துப்புரவு பணியாளர் மூலம் விமான கழிவறையில்ஆயுதங்களை பெற்ற கடத்தல்காரர்கள் (என்ன அருமையான திட்டம்) விமானம் கிளம்புமட்டும் அமைதியானார்,

கிளம்பியதும் பைலடை மிரட்டி அறிவிக்க சொன்னார், விமானம் கடத்தபடுகின்றது.

அதுவரை அவர்கள் திட்டம் சரி, ஆனால் நாம் போராளிகள் நிச்சயம் ஏதாவது ஒரு இஸ்லாம் நாடு ஆதரவு தரும் என நம்பினர், அது தான் தவறானது. அந்நாளைய சிங்கம் கடாபியின் லிபியாவிற்கு விமானத்தை கொண்டு சென்றனர்.

ஆனால் கடாபி உலகம் அறிந்தவர், பக்கத்து எகிப்து கூட பின் அமெரிக்காவிற்கு கடம் வாசிக்க கிளம்பிய காலமது.

பெட்ரோலை நிரப்பிகொண்டு இடத்தை காலிசெய்ய உத்தரவிட்டார், வேறுவழியில்லாத கடத்தலர்கள், விமானத்தை சூடானுக்கு கொண்டு சென்று தரையிரக்க அனுமதி கேட்டனர். கையெடுத்து கும்பிட்டு வழியனுப்பியது அந்த நாடு.

அப்பொழுதுதான் கடத்தல்காரர்கள் மூளையில் ஒரு வெளிச்சம் பிறந்தது, வெளிச்சத்தில் கரும் இருட்டு தலைவர் தெரிந்தார், அவர் இடி அமீன் உகாண்டாவின் அதிபர்.
பார்ப்பதற்கு நடிகர் செந்திலின் சித்தப்பா பையன் மாதிரி இருக்கும் இடிஅமீன் செய்ததெல்லாம் நம்பியார் வேலை.

சாதாரண ராணுவ சமையல்காரர். பின்னாளில் ராணுவ அதிபருக்கு பினாமி. ஒரு அமாவாசை நாளில் அதிபரை அடித்துவிட்டு ஆட்சியை பிடித்த ஆனால் எழுதவோ படிக்கவோ தெரியாத சமார்த்தியசாலி.
ஒரு மனநோயாளி என உலகம் அவரை கருதியது, அதனை மக்கள் உணரும் காலம் வரை அவர் உகாண்டா சக்கரவர்த்தி.

அவர் ஆட்சிபற்றிய விதம் பெரும் காமெடியானது, நாட்டை சீரழித்துகொண்டே சீர் திருத்தம் என்றார், யாராவது கேள்வி கேட்டால் ஆற்றில் முதலைகளின் வயிறு நிரம்பியது, இன்னும் மனிதர்களையே சாப்பிடுகிறார் என்றேல்லாம் தகவல்கள் வந்தவண்ணம் இருந்தது, மொத்தத்தில் அவரால் கொல்லபட்டது 6 லட்சம் மக்கள்.

உகாண்டாவை தாங்கி நின்ற இந்தியரையும், பாகிஸ்தானியரையும் விரட்டி நாட்டை சுடுகாட்டை விட மோசமாக்கி வைத்திருந்தார்.

விமானம் உகாண்டாவில் தரையிரங்க அனுமதி கேட்ட தகவலை கேட்ட மாத்திரத்தில் அவரே உத்தரவு வழங்கினார். காரணம் அவர் அல்லாவை அடிக்கடி கனவில் காண்பவர் (அவரே சொன்னது), தீவிர இஸ்ரேல் எதிரி. ஏதாவது ஒரு வாய்ப்பில் நானும் “உலக ரவுடி” என நீரூபிக்கும் கனவில் இருந்தவர், விடுவாரா?

Image may contain: one or more people and hatவிமானம் உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் இருந்து தூரத்தில் நமது மதுரை அளவுள்ள சிறிய நிலையமான எண்டபே நிலையத்தில் இறங்கியது, இடிஅமீன் தன்னை மிக சிறந்த அறிவாளியாக நினைத்துகொள்பவர், உடனே யூதர்களை தவிர மற்ற நாட்டவரை விடுதலை செய்தார். ஆனால் விமானி செத்தாலும் என்னை நம்பிய பயணிகளோடுதான் சாவேன் என இறங்க மறுத்தார்

(டைட்டானிக் பட மாலுமி பார்த்திரூப்பீர்கள், அவர்மாதிரி),
விமானம் கிளப்ப அவர்வேண்டும் என்பதால் அவரை வைத்துகொண்டார்கள், ஒரு பிரான்சு கன்னியாஸ்திரி ஒரு யூதனை விடுவித்து தன்னை கொல்லுமாறு வேண்டி நின்றார். உருக்கமான தருணம்தான் இடிஅமீன் உருகுவாரா?, வலுக்கட்டாயமாக இறக்கி அவரை பிரான்சுக்கு அனுப்பினார்.

இப்பொழுது கடத்தல்காரர்கள் இஸ்ரேலிய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றார்கள், இஸ்ரேல் சிறையின்,40 பாலஸ்தீன் தீவிரவாதிகளை கூடவே ஐரோப்பா சிறையின் 15 தீவிரவாதிகள்விடுவிக்கவேண்டும். இரு ஜெர்மானியரை (அவர்கள் இஸ்ரேலிய விமானம் மீது ஏவுகனை வீசி சிக்கியவர்கள்) விடுதலை செய்யவேண்டும், ஏராளமான பணம் வேண்டும்,துப்பாக்கி வேண்டும், பிரியாணி வேண்டும், தந்தூரி வேண்டும் என பல கோரிக்கைகள்.

3 நாள் கெடு, கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் கையில் இருக்கும் 100 யூதர்கள்,விமானி,சிப்பந்தி எல்லோரும் காலி என சொல்லி மிரட்டினார்கள்.

அவரசமாக கூடியது இஸ்ரேலின் பாதுகாப்பு சபை, அதுவரை உகாண்டாவில் மொசாத்தின் நடவடிக்கைக்கு தேவை இல்லை, அது பாலஸ்தீன் ஆதரவு நாடுதான், ஆனால் இடி அமீன் இப்படி செய்ததில்லை. உளவு தகவல் இல்லை,படம் இல்லை, திட்டம் இல்லை, 3 நாட்கள்தான் மீதமிருந்தது.

கப்பலை அனுப்புவது, ராணுவத்தை அனுப்புவது தற்கொலைக்கு சமம். மொசாத்திடம் பொறுப்பு ஒப்ப்டைக்கபட்டது, காட்சிக்குள் வந்தார் அந்த சூப்பர்மேன்.

அவர் டேவிட்கீம்ஸி, இஸ்ரேலின் கிருஷ்ணபரமாத்மா அல்லது சாணக்கியர், மொசாத்தின் அபார மாஸ்டர் மைண்ட், நிச்சயமாக சொல்லலாம் கடந்த 100 ஆண்டுகளில் அல்லது அடுத்த 100 ஆண்டுக்கு உலகம் கண்ட ராஜதந்திர உளவாளிகளில் நம்பர் 1.

அவர் சொன்னார் , “எளிதாக ஜெயித்துவிடலாம் ஆனால் சர்வதேசமோ அரசியல் அழுத்தமோ வராமல் அரசு பார்த்துகொள்ளுமா? என்னை சுதந்திரமாக செயலாற்றவிடுவீர்களா?”

இஸ்ரேல் என்று சர்வதேசத்தை மதித்தது??, உத்தரவு கொடுத்தார்கள்,

முதலிலே அழகான‌ பாயிண்ட் இஸ்ரேலுக்கு கிடைத்தது, அதாவது பலநாட்டு சிறைகளில் இருக்கும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் புன்னகைத்தார் கீம்சி

டேவிட் கீம்சியின் அறிவுறுத்தலில் இஸ்ரேல் பிரதமர் இப்படி சொல்லிகொண்டிருந்தார்

“நாங்கள் தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்கிறோம், பலநாடுகளில் கலந்து பேச இருப்பதால் 3 நாள் கெடுவை ஒரு வாரமாக நீட்டியுங்கள்”

உலகிற்கு இப்படி சொல்லிவிட்டு, ரகசியமாக‌ மிக பெரும் தந்திரமான அதிரடி திட்டம் வகுத்துகொண்டிருந்தார்கள்

தொடரும்….

 
 

தமிழ் படங்கள் : அப்படி ஒரு காப்பி ….

“ராமன் எத்தனை ராமனடி” என்றொரு சிவாஜிகணேசனின் படத்தை பார்க்க முடிந்தது, மனிதர் நன்றாக நடித்திருக்கின்றார் என்பது குஷ்பூ அழகாக இருக்கின்றார் என்பது போன்றது

விஷயம் சிவாஜி நடிப்பல்ல‌

அந்த ஒரு படத்திலிருந்து பாக்யராஜின் தாவணிகனவுகளுக்கு மூலக்கதை, ரஜினியின் ராஜாதி ராஜாவிற்கு ஒரு கதை , சின்ன தம்பிக்கு ஒரு கதை, சத்யராஜின் வள்ளலுக்கு ஒரு கதை என சுமார் பத்து படத்திற்கு கதை எடுத்திருக்கின்றார்கள். அந்த படத்தின் சம்பவங்களை 10 ஆக பிரித்து பத்து படங்கள் 1990களில் வந்திருக்கின்றன‌

நேற்று பார்த்த சபாஷ் மீனா படத்தினை பார்த்தால் சுந்தர்.சியின் உள்ளத்தை அள்ளித்தா படத்தினை இன்னொரு முறை பார்க்க வேண்டாம், ரம்பா மட்டும் மிஸ்ஸிங்

அப்படி ஒரு காப்பி

ஆக நாம் 1960 படங்களை காப்பியடித்த 1990ம் ஆண்டுகால படங்களை பார்த்து வளர்ந்திருக்கின்றோம்

இக்கால தலைமுறை பராவாயில்லை, அது ஹாலிவுட் படங்களை , கொரிய‌ காப்பியடித்து எடுக்கபடும் தமிழ்படங்களை ரசித்துகொண்டிருக்கின்றது