ஆப்பரேசன் எண்டபே : 02

No automatic alt text available.

இஸ்ரேல் பிரதமர் அழுது அழுது (கள்ள அழுகைதான் 🙂 ) “கைதிகளை விடுவிக்கின்றோம்” என சொல்லிகொண்டிருக்கும் பொழுதே 6 மொசாத் உளவாளிகள் உகாண்டாவின் அண்டை நாடான கென்யாவில் சுற்றுபயணிகளாக வெளிநாட்டு பாஸ்போர்ட்டில் இறங்கினர்.

(அவர்களிடம் எல்லா நாட்டு பாஸ்போர்ட்டும் உண்டு, குடிநுழைவு முத்திரையும் அவர்களாகவே குத்திகொள்வார்கள், அப்படியே அசலாக இருக்கும் 🙂 )

உகாண்டாவில் ஆளை வெட்டிய இடி அமீன், ஆடுவெட்டி கொண்டாடினார், தான் இஸ்ரேலை பணிய வைத்ததாக நம்பினார், இஸ்ரேலை தான் அலற வைத்தாக அவருக்கு கடும் உற்சாகம் , இஸ்ரேலை தைரியமாக எதிர்த்தால் என்னாகும்? அதேதான் இஸ்லாமிய நாடுகளின் ஹீரோ ஆகலாம்

இடி அமீன் அந்த ஹீரோ கனவில் இருந்தார்

அதே நேரம் கென்யாவில் 6 இஸ்ரேலிய‌ உளவாளிகள் 2 பேர் சுற்றுலா பயணிகளுக்கான சிறிய ரக விமானத்தை வாடகைகு எடுத்து இரண்டு சுற்று கென்யாவை சுற்றிவிட்டு மூன்றாவது சுற்றாக உகாண்டாவிற்குள் நுழைய முயன்றனர், “நாங்கள் வெளிநாட்டின் சுற்றுபயணிகள், ஒரு ஆப்ரிக்க புத்தகம் தயாரிக்க போட்டோ எடுக்கிறோம், உங்கள் நாட்டின் அழகு பெரிது, உலக புகழுக்கு நாங்கள் பொறுப்பு” என்றனர்.

இது அங்கு அடிக்கடி நடக்கும் விஷயம் என்பதால் உகாண்டா தரப்பு சந்தேகிக்கவில்லை

இடி அமீன் ஏற்கனவே பாதுகாப்பை தளர்த்தி இருந்தார். அனுமதி கொடுக்கபட்டது, அவர்களும் எண்டபே விமான நிலையத்தையும் சேர்த்து எடுத்து படங்களை மொசாத்திற்கு அனுப்பினர். படங்களை பார்த்த கீம்சி திட்டத்தை துரிதமாக்கினார்.

கீம்ஸி முன்னால் இருந்த பிரச்சினை பெரிது, அதாவது உகாண்டா வரை நேரடியாக பறந்து செல்லும் அளவு விமான எரிபொருள் பற்றாது, (இன்று நடுவானில் பெட்ரோல் நிரப்பும் வசதிவரை அவர்களிடமுண்டு) இடையில் ஒரு நாட்டில் இறங்கி நிரப்பவேண்டும், ஆனால் அந்த நாட்டிற்கும் விஷயம் தெரிய கூடாது, தந்திரமாக ஏமாற்றவேண்டும்,

ஒரு வழியாக கென்யாவை தேர்ந்தெடுத்தார், ஆனால் கென்ய அரசாங்கம் விஷயம் தெரிந்தால் ஒத்துழைக்காது, காரணம் இடி அமீன் கொன்யாவை கொத்துகறி ஆக்குவார்.
இஸ்ரேலிய வெளியுறவு துறையை தொடர்பு கொண்டு தெளிவான கீம்ஸி சொன்னார், சர்வதேசத்தை தந்திரமாக கவனம் திருப்புங்கள், இடி அமீனையும் நம்ப்பும் படி செய்யுங்கள், மீதியை நான் பார்த்து கொள்கின்றேன்.

உடனே இஸ்ரேலிய அரசு இடி அமீனுக்கு தொலைபேசியில் பேசிற்று, 1972ம் ஆண்டே இஸ்ரேலிய தூதரகத்தை இடிஅமீன் மூடியிருந்தார், “நீங்கம் எமது மக்களுக்கு உணவும் நீர் கொடுத்து பாதுகாத்தமைக்காக நன்றி, விரைவில் உங்கள் சிரமம் குறையும்” என்றனர்.

இடி அமீனுக்கு அன்று உடலெல்லாம் சிரிப்பு.

தான் கொஞ்சம் அறிவாளி என நினைத்ததால் மற்ற நாட்டு தூதரகங்களை உளவுபார்ப்பார் இடிஅமீன், அங்கெல்லாம் இஸ்ரேலிய செய்திகள் வேண்டுமென்ற சொல்லபட்டன, “என்ன செய்ய இனி தீவிரவாதிகளை விடுதலை செய்வதை தவிர வேறு வழி இல்லை, நீங்களாவது உஷாராக இருங்கள்” என்பதை போன்ற செய்திகள் சென்றுகொண்டே இருந்தன‌.

இடி அமீனும் கவனமாக கேட்டு சிரித்துகொண்டே இருந்தார், பாதுகாப்பை குறைத்தார்.

இடி அமீனின் யோசனைகேற்ப கடத்தல்காரர்கள் 1 வாரம் பணயகாலத்தை நீட்டினர், புன்னகைத்தார் கீம்ஸி,

அதற்குள் கென்யாவில் 2 மொசாத் உளவாளிகள் ஒரு கென்ய நாட்டவரை வளைத்து அவர் மூலமாக விக்டோரியா ஏரியை கடந்து உகாண்டாவுக்குள் புகுந்தனர்.

இஸ்ரேலியரின் கிருஷ்ணன் டேவிட் கீம்ஸி தனது ராஜதந்திர ஆட்டத்தை ஆரம்பித்தார்.

சுமார் 70 பேர் கொண்ட (பெண்கள் உட்பட‌) கமாண்டோ படை அவர் முன்னால் வந்து நின்றது, அதில் 10 பேரை எடுத்து வெள்ளைகோட் கொடுத்து, ஸ்தெதஸ்கோப்பை கழுத்தில் போட்டு டாக்டராக்கினார், ராணவ விமானம் ஆம்புலன்ஸ் போல மாற்றபட்டது, கார்கோ பகுதி மருந்துகளால் மறைக்கபட்டு 60 பேர் உள்ளிருந்தனர்.
வெளிபார்வைக்கு 10 டாக்டர்கள் செல்லும் ஆம்புலன்ஸ் விமானம் அவ்வளவுதான் தெரியும்,

ஆனால் மருந்து பொட்டலங்களுக்குள் 60 வீரர்கள் மறைந்திருந்தனர்.

இப்பொழுது இந்த வேடம் எதற்கு என எல்லோருக்கும் சிந்தனை வந்தது, இது உங்கள் பணி அவ்வளவுதான், என்றார் கீம்ஸி, யாருக்கும் புரியவில்லை ஆனால் தயாராக இருந்தார்கள்

எண்டெபே விமான நிலைய போட்டவை அவர் பார்த்து கொண்டிருந்த பொழுதே உகாண்டாவிற்குள் ஏரி வழியாக ஊடுருவிய உளவாளிகள் அற்புதமான பணியில் தகவல் கொட்ட தொடங்கிற்று.

எப்பொழுதும் இஸ்ரேலியருக்கு ஒரு அதிர்ஷ்டம் தானாக வந்து அமையும், அல்லது ஒரு அருமையான வாய்ப்பு இயற்கையாய் கிடைக்கும் இம்முறை கிடைத்தது அந்த ஏரி.
உற்சாகமானர் கீம்ஸி, அடுத்த திட்டம் கென்யாவை ஏமாற்றுவது,

ஏரியை வைத்து கரை ஏறுவது, காரணம் இரு நாட்டுக்கும் பொதுவான ஏரி அது.

பரபரப்பான காட்சிகள் தொடங்கின‌

தொடரும்..

 
 

One thought on “ஆப்பரேசன் எண்டபே : 02

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s