ஆப்ரேஷன் எண்டபே : 01

Image may contain: 2 people, sunglasses, glasses and close-upகுஷ்பூ பற்றி எழுத தொடங்கினால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை, நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க கூடாது என்பது போல நடிகையர் மூலமும் பார்க்க கூடாது போல, காரணம் எவ்வளவு தேடியும் ஒன்றும் சிக்கவில்லை

அவரை பற்றிய படங்கள் இணையத்தில் நிரம்ப கிடக்கின்றதே தவிர, தகவல்கள் மிக குறைவு. யாரிடம் கேட்டாலும் ஒன்றும் தெரியவில்லை, இரு தொடர்களாவது தேறுமா? என முயற்சித்தாலும் தகவல் திரட்ட முடியவில்லை.

முடிந்தவரை திரட்டுகின்றோம் முடிந்தவரை திரட்டுகின்றோம் ஏதும் தகவல் கிடைத்தால் எழுதலாம், இல்லாவிட்டால் வாழ்க என சொல்லிவவிட்டு மங்களம் பாடலாம்.

அது ஒருபக்கம் இருக்கட்டும், இன்னொரு பக்கம் “சார், மோடி கட்டிபிடித்த அந்த நேதான்யாகு அண்ணன் ஏதோ சாகசத்தில் செய்தார் என எழுதினீர்கள் அல்லவா? அது என்ன சார்?” என பலர் கேட்டுகொண்டே இருந்தார்கள்.

அது உலகின் பெரும் சாகச நிகழ்வுகளில் ஒன்று , எந்த தீவிரவாதத்திற்கும் நாங்கள் அசைந்து கொடுக்க மாட்டோம் என இஸ்ரேல் உலகின் முகத்தில் அறைந்து சொன்ன முதல் நிகழ்வு.

அது பெரும் சம்பவம், அதனை சொல்லலாம், முன்பே எழுதியதுதான். இப்பொழுது மறுபதிப்பு, அது ஆப்பரேஷன் எண்டபே, எத்தனையோ பேர் எழுதிய வரலாறு. பல ஹாலிவுட் சினிமாக்கள் கூட வந்தன‌

1976ம் ஆண்டு ஜூன் 27ம் நாள் ஏர் பிரான்ஸ் விமானம் அது, இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து கிளம்பி கிரீஸின் ஏதென்ஸ்லில் இடைநின்று மறுபடி பாரீஸ் செல்லும் விமானம், கிட்டதட்ட 200 பயணிகள் இருந்தனர். பாதி பேர் யூதர்கள்.

எப்படியாவது இஸ்ரேலை மிரட்டி சில காரியங்களை நிறைவேற்றவேண்டும் என்ற கனவுடைய போராளிகள் கடத்தல்காரர்களாக மாறினர். ஆனால் இன்றளவும் இஸ்ரேலின் டெலஅவிவ் மாகா மகா கெடுபிடியான பாதுகாப்பன விமானநிலையம். உள்ளாடையின் பட்டன் வரை நமக்கு தெரியாமலே சோதனை செய்யும் வித்தை தெரிந்தவர்கள்.

இன்றும் ஏவுகனைகளால் வீழ்த்தமுடியாதது இஸ்ரேலிய விமானங்கள், அவர்கள் பாதுகாப்பு முறை அப்படி. மோடி தங்கியிருந்த ஹோட்டல் மிகுந்த பாதுகாப்பானது என சொன்னார்கள அல்லவா? அப்படி பாதுகாப்பின் உச்சத்தில் இருப்பவர்கள் அவர்கள்

காரணம் அந்த முன் எச்சரிக்கையும், பாதுகாப்பும் விழிப்பும் அது பற்றிய சிந்தனையும் இல்லை என்றால் இஸ்ரேல் என்றொரு நாடு இப்பொழுது இருக்காது, அதன் நிலை அப்படி.

இது கடத்தல்காரருகும் தெரியும் சமத்து பிள்ளையாக பாரீஸ்க்கு டிக்கெட் எடுத்துவிட்டு விமானத்திற்கு வந்தனர்.

விமானம் கிளம்பி சென்று ஏதென்ஸில் நின்றது, பயணிகள் ஏறி இறங்கும் நேரம். ஐரோப்பாவில் கிரீஸ் அன்றே பரிதாப நிலையை எட்டியிருந்தது, பாதுகாப்பு சுத்தமாக இல்லை. துப்புரவு பணியாளர் மூலம் விமான கழிவறையில்ஆயுதங்களை பெற்ற கடத்தல்காரர்கள் (என்ன அருமையான திட்டம்) விமானம் கிளம்புமட்டும் அமைதியானார்,

கிளம்பியதும் பைலடை மிரட்டி அறிவிக்க சொன்னார், விமானம் கடத்தபடுகின்றது.

அதுவரை அவர்கள் திட்டம் சரி, ஆனால் நாம் போராளிகள் நிச்சயம் ஏதாவது ஒரு இஸ்லாம் நாடு ஆதரவு தரும் என நம்பினர், அது தான் தவறானது. அந்நாளைய சிங்கம் கடாபியின் லிபியாவிற்கு விமானத்தை கொண்டு சென்றனர்.

ஆனால் கடாபி உலகம் அறிந்தவர், பக்கத்து எகிப்து கூட பின் அமெரிக்காவிற்கு கடம் வாசிக்க கிளம்பிய காலமது.

பெட்ரோலை நிரப்பிகொண்டு இடத்தை காலிசெய்ய உத்தரவிட்டார், வேறுவழியில்லாத கடத்தலர்கள், விமானத்தை சூடானுக்கு கொண்டு சென்று தரையிரக்க அனுமதி கேட்டனர். கையெடுத்து கும்பிட்டு வழியனுப்பியது அந்த நாடு.

அப்பொழுதுதான் கடத்தல்காரர்கள் மூளையில் ஒரு வெளிச்சம் பிறந்தது, வெளிச்சத்தில் கரும் இருட்டு தலைவர் தெரிந்தார், அவர் இடி அமீன் உகாண்டாவின் அதிபர்.
பார்ப்பதற்கு நடிகர் செந்திலின் சித்தப்பா பையன் மாதிரி இருக்கும் இடிஅமீன் செய்ததெல்லாம் நம்பியார் வேலை.

சாதாரண ராணுவ சமையல்காரர். பின்னாளில் ராணுவ அதிபருக்கு பினாமி. ஒரு அமாவாசை நாளில் அதிபரை அடித்துவிட்டு ஆட்சியை பிடித்த ஆனால் எழுதவோ படிக்கவோ தெரியாத சமார்த்தியசாலி.
ஒரு மனநோயாளி என உலகம் அவரை கருதியது, அதனை மக்கள் உணரும் காலம் வரை அவர் உகாண்டா சக்கரவர்த்தி.

அவர் ஆட்சிபற்றிய விதம் பெரும் காமெடியானது, நாட்டை சீரழித்துகொண்டே சீர் திருத்தம் என்றார், யாராவது கேள்வி கேட்டால் ஆற்றில் முதலைகளின் வயிறு நிரம்பியது, இன்னும் மனிதர்களையே சாப்பிடுகிறார் என்றேல்லாம் தகவல்கள் வந்தவண்ணம் இருந்தது, மொத்தத்தில் அவரால் கொல்லபட்டது 6 லட்சம் மக்கள்.

உகாண்டாவை தாங்கி நின்ற இந்தியரையும், பாகிஸ்தானியரையும் விரட்டி நாட்டை சுடுகாட்டை விட மோசமாக்கி வைத்திருந்தார்.

விமானம் உகாண்டாவில் தரையிரங்க அனுமதி கேட்ட தகவலை கேட்ட மாத்திரத்தில் அவரே உத்தரவு வழங்கினார். காரணம் அவர் அல்லாவை அடிக்கடி கனவில் காண்பவர் (அவரே சொன்னது), தீவிர இஸ்ரேல் எதிரி. ஏதாவது ஒரு வாய்ப்பில் நானும் “உலக ரவுடி” என நீரூபிக்கும் கனவில் இருந்தவர், விடுவாரா?

Image may contain: one or more people and hatவிமானம் உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் இருந்து தூரத்தில் நமது மதுரை அளவுள்ள சிறிய நிலையமான எண்டபே நிலையத்தில் இறங்கியது, இடிஅமீன் தன்னை மிக சிறந்த அறிவாளியாக நினைத்துகொள்பவர், உடனே யூதர்களை தவிர மற்ற நாட்டவரை விடுதலை செய்தார். ஆனால் விமானி செத்தாலும் என்னை நம்பிய பயணிகளோடுதான் சாவேன் என இறங்க மறுத்தார்

(டைட்டானிக் பட மாலுமி பார்த்திரூப்பீர்கள், அவர்மாதிரி),
விமானம் கிளப்ப அவர்வேண்டும் என்பதால் அவரை வைத்துகொண்டார்கள், ஒரு பிரான்சு கன்னியாஸ்திரி ஒரு யூதனை விடுவித்து தன்னை கொல்லுமாறு வேண்டி நின்றார். உருக்கமான தருணம்தான் இடிஅமீன் உருகுவாரா?, வலுக்கட்டாயமாக இறக்கி அவரை பிரான்சுக்கு அனுப்பினார்.

இப்பொழுது கடத்தல்காரர்கள் இஸ்ரேலிய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றார்கள், இஸ்ரேல் சிறையின்,40 பாலஸ்தீன் தீவிரவாதிகளை கூடவே ஐரோப்பா சிறையின் 15 தீவிரவாதிகள்விடுவிக்கவேண்டும். இரு ஜெர்மானியரை (அவர்கள் இஸ்ரேலிய விமானம் மீது ஏவுகனை வீசி சிக்கியவர்கள்) விடுதலை செய்யவேண்டும், ஏராளமான பணம் வேண்டும்,துப்பாக்கி வேண்டும், பிரியாணி வேண்டும், தந்தூரி வேண்டும் என பல கோரிக்கைகள்.

3 நாள் கெடு, கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் கையில் இருக்கும் 100 யூதர்கள்,விமானி,சிப்பந்தி எல்லோரும் காலி என சொல்லி மிரட்டினார்கள்.

அவரசமாக கூடியது இஸ்ரேலின் பாதுகாப்பு சபை, அதுவரை உகாண்டாவில் மொசாத்தின் நடவடிக்கைக்கு தேவை இல்லை, அது பாலஸ்தீன் ஆதரவு நாடுதான், ஆனால் இடி அமீன் இப்படி செய்ததில்லை. உளவு தகவல் இல்லை,படம் இல்லை, திட்டம் இல்லை, 3 நாட்கள்தான் மீதமிருந்தது.

கப்பலை அனுப்புவது, ராணுவத்தை அனுப்புவது தற்கொலைக்கு சமம். மொசாத்திடம் பொறுப்பு ஒப்ப்டைக்கபட்டது, காட்சிக்குள் வந்தார் அந்த சூப்பர்மேன்.

அவர் டேவிட்கீம்ஸி, இஸ்ரேலின் கிருஷ்ணபரமாத்மா அல்லது சாணக்கியர், மொசாத்தின் அபார மாஸ்டர் மைண்ட், நிச்சயமாக சொல்லலாம் கடந்த 100 ஆண்டுகளில் அல்லது அடுத்த 100 ஆண்டுக்கு உலகம் கண்ட ராஜதந்திர உளவாளிகளில் நம்பர் 1.

அவர் சொன்னார் , “எளிதாக ஜெயித்துவிடலாம் ஆனால் சர்வதேசமோ அரசியல் அழுத்தமோ வராமல் அரசு பார்த்துகொள்ளுமா? என்னை சுதந்திரமாக செயலாற்றவிடுவீர்களா?”

இஸ்ரேல் என்று சர்வதேசத்தை மதித்தது??, உத்தரவு கொடுத்தார்கள்,

முதலிலே அழகான‌ பாயிண்ட் இஸ்ரேலுக்கு கிடைத்தது, அதாவது பலநாட்டு சிறைகளில் இருக்கும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் புன்னகைத்தார் கீம்சி

டேவிட் கீம்சியின் அறிவுறுத்தலில் இஸ்ரேல் பிரதமர் இப்படி சொல்லிகொண்டிருந்தார்

“நாங்கள் தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்கிறோம், பலநாடுகளில் கலந்து பேச இருப்பதால் 3 நாள் கெடுவை ஒரு வாரமாக நீட்டியுங்கள்”

உலகிற்கு இப்படி சொல்லிவிட்டு, ரகசியமாக‌ மிக பெரும் தந்திரமான அதிரடி திட்டம் வகுத்துகொண்டிருந்தார்கள்

தொடரும்….

 
 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s