தமிழிசைடா..

அட இந்த தமிழிசை கொஞ்சகாலம் எங்கே சென்றார்?? வங்கபக்கம் சென்றிருப்பாரோ, பரவாயில்லை உண்மை நிலவரம் கண்டறிய சென்றிருப்பார் என்றெல்லாம் தேடினால் அம்மணி இலங்கை சென்றிருக்கின்றார்

பல இடங்களுக்கும் சத்தமில்லாமல் சென்றிருக்கின்றார், சீமான் போல மாறுவேடம் எல்லாம் அல்ல, தைரியமாக சுற்றியிருக்கின்றார்

அவருக்கு முள்ளிவாய்க்காலை சுற்றிபார்க்கும் எண்ணம் இருந்திருக்கின்றது, ஆனால் செல்ல முடியவில்லை

ஈழத்தில் பொதுமக்களை தமிழிசை சந்திக்கவில்லை, யாருடைய கட்டளைக்கோ அஞ்சி ஓடிவிட்டார் என்கின்றது செய்திகள்

நாங்கள் தடுக்கவே இல்லை என்கின்றது இலங்கை அரசு, அப்படியானால் தடுத்தது யார்? எனும் கேள்வி எழுகின்றது

ஒருவேளை மத்திய அரசு தடுத்திருக்குமோ?

இச்செய்தி இன்னும் தமிழ் உணர்வாளர்களை எட்டவில்லை போலும், எட்டினால் விஷயம் பெரும் விஷயமாகலாம்

தமிழகம் திரும்பிவிட்டாரா என்பது தெரியவில்லை, ஆனால் இலங்கையினை இந்தியா மீணவர் சட்டம் விவகாரமாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என சொல்லியிருப்பதால் அவர் சென்னை திரும்பியிருக்கலாம்

ஆக ஈழத்திற்கு அட்டகாசமாக தமிழிசை சென்று வந்திருக்கின்றார், தமிழக பாஜக தலைவராக அவர் சென்றிருக்கின்றார்.

சீமான், திருமா எல்லாம் வடை போச்சே என்ற அதிர்ச்சியில் இருக்கலாம், முன்னமே தெரிந்தால் மட்டும் தமிழிசையினை இவர்களால் தடுக்க முடியுமா என்ன? ஆனாலும் கத்துவதற்கு ஒரு வாய்ப்பினை விட்டுவிட்டதில் அவர்களுக்கு கடும் ஆத்திரம்

இவர்கள் கத்தி போகாமல் இருக்க அவர் என்ன ரஜினியா?

தமிழிசைடா..

 
 
 

அமெரிக்கா, ரஷ்யாவிற்கான அமைதி உடன்படிக்கை

சிரியாவில் நடக்கும் யுத்ததை முடிவுக்கு கொண்டுவரும் அமெரிக்கா, ரஷ்யாவிற்கான அமைதி உடன்படிக்கை நடப்புக்கு வந்தது

கவனியுங்கள், யுத்தம் நடப்பது சிரியா அரசுக்கும் ஆட்சி மாற்றம் வேண்டும் என சொல்லும் குழுக்களுக்கும். ஐஎஸ் என்பது வேறு

இப்பொழுது சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடுது எங்கோ இருக்கும் அமெரிக்காவும், ரஷ்யாவும்

இங்கு எங்காவது தீவிரவாதிகளை கலந்தாலோசித்தார்களா என்றால் இல்லை

இப்படி ஒரு ஒப்பந்தம்தான் அன்று இந்தியா இலங்கையிடையே நடப்புக்கு வந்தது

ஆனால் எங்களை கலந்தாலோசிக்கவில்லை என சொல்லி அதனை ஏற்கமுடியாது , எங்களை பிரநிதிகளாக ஏற்கவேண்டும் என சொல்லி புலிகள் ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல, ஈழ அமைதி அதில்தான் அழிந்தது

இதோ ரஷ்ய அமெரிக்க தலையீட்டை ஏற்கமாட்டொம் என சிரிய குழுக்கள் கிளம்பினால் இனி சிரிய மக்களை யாராலும் காப்பாற்ற முடியும்? அது முள்ளிவாய்க்காலில் தான் முடியும் , ஈழத்தில் அப்படித்தான் முடிந்தது.

இந்தியாவிற்கு ஈழத்தில் என்ன வேலை என புலிகள் கேட்டு அழிந்தது போல, அமெரிக்க ரஷ்யாவிற்கு சிரியாவில் என்ன வேலை என எந்த குரலாவது கேட்கின்றதா? கேட்காது அவர்களுக்கு சிந்திக்கும் அறிவு இருக்கின்றது

இதுதான் உலகம், இந்த உலகத்தோடு ஒத்துபோகாமல் புலிகள் தேடிகொண்டதுதான் ஈழ நாசம்..

ஆப்பரேஷன் எண்டபே : 03

Image may contain: 1 person

முதல்படம் ஆப்பரேஷனை வெற்றியாக நடத்திய கேப்டன் ஷெர்மன்

அந்த விமான ஆம்புலன்ஸ் தயார் செய்துவிட்டு, கென்ய அரசிடம் இஸ்ரேலிய தரப்பு ஒரு கோரிக்கை கொடுத்தது, “நாங்கள் தீவிரவாதிகளை விடுவிக்க முடிவெடித்துவிட்டோம், பணயகைதிகளில் பலபேர் நோயாளிகள், எனவே அவர்கள் விடுவிக்கப்ட்டவுடன் அவசர சிகிச்சை தேவை எனவே மிக விரைவாக அவர்களை காக்கும் பொருட்டு ஒரு மருத்துவ விமானம் உங்கள் நாட்டில் இறக்க அனுமதி தாருங்கள்”

இதனை சொல்லிகொண்டிருக்கும் பொழுதே இஸ்ரேலிய தளபதிகள் ரோஜா படத்து நாசர் மதுபாலாவிடம் புலம்புவது போல் மீடியா முன் புலம்பினர், “இந்த தீவிர்வாதிகளை பிடிக்க போகும்பொழ்து இறந்தது 10 பேர், அந்த கொடூரனை கைது செய்யும்பொழுது செத்தது 10பேர், இவர்கள் எல்லோர் தியாகமும் வீணானது, இதோ அவர்கள் விடுதலையாக போகின்றார்கள்” என அற்புதமாக நடித்துகொண்டிருந்தனர்.

இதனால் உகாண்டாவில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடி, பாதுகாப்பு சுத்தமாக தளர்த்தபட்டது.
ஒரு நாட்டில் அவர்கள் அனுமதியின்றி விமானம் இறக்கமுடியாது, (விமானம் இறக்குதல் என்ன? குண்டூசி கூட வீச முடியாது) எனவே கேட்டார்கள்,

கென்ய நாடாளுமன்றமும் “மனிதாபிமான” அனுமதி வழங்கியது, விமானம் கென்யாவின் மேற்கு பகுதியில் தரைஇறங்கியது,

அதாவது விக்டோரியா ஏரியை ஒட்டியபகுதி, கென்ய அதிகாரிகளும் விமானத்தின் உள்சென்றுபார்த்தனர், அருமையான ஆம்புலன்ஸ் என வியந்தனர், டாக்டர் 10 பேர் தவிரயாருமில்லை என உத்திரவாதம் கொடுத்தனர், நாளை கென்யா வளர்ந்தநாடாகும் பொழுது இதனை போல 10 வாங்கி கென்யா முழுக்க நிறுத்தவேண்டும் என வேலுநாயக்கர்பாணியில் சொல்லிகொண்டிருந்தனர்.

இரவு நேரத்தில் அந்த கமாண்டோக்கள் வெளிவந்து ஏரிகரைக்கு சென்றனர், ரப்பர் கருவியை விரித்து காற்றடைத்து அருமையான படகாக்கினர், அப்படியே பயணம் செய்து எண்டபே விமான நிலையத்தின் மறுபக்கம் கவர் எடுத்தனர், அது ஒரு காட்டுபகுதி, ஆனால் விமான நிலையத்தை அன்மித்தது.

இனி தாக்குதல் தொடங்கலாமா என கீம்ஸியிடம் கேட்டபொழுது அவர் அமைதியாக சொன்னார், இவர்கள் ஸ்டாண்ட் பை. அதாவது பாதுகாப்பு குழு. தாக்குவதற்கு இன்னொரு குழு செல்லும், அவர்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் மட்டுமே இவர்கள் தாக்குவார்கள், இல்லாதபட்சத்தில் களம் இறங்கமாட்டார்கள். இத்திட்டம் எதிரில் இருக்கும் நமதருமை தளபதியால் இறுதிசெய்யப்ட்டது என கை நீட்டினார்.

அங்கு இருந்தவர் நெப்போலியனை விட 10 மடங்கு,ஹிட்லரை விட 50 மடங்கு போர்வியூகம் அமைக்கும் வல்லமை பெற்ற தளபதி, இரு பெரும் போர்களில் இஸ்ரேலை வெற்றிபெற வைத்து உலகையே வியக்கவைத்தவர். கிட்டதட்ட 10 அரபு நாடுகளை ஒரே நேரத்தில் சமாளித்து விரட்டி இஸ்ரேலை வெற்றிபெற வைத்த பெரும் வியூக வித்தகர்

அவரது போர் வியூகத்தை படிக்கும் எந்த நாட்டு தளபதியானாலும் அவர்காலில் விழுந்து ஆசிபெறுவார், இவ்வளவிற்கும் ஒரு கண் கிடையாது.

மோசா தயான், இஸ்ரேலின் பீஷ்மர்

Image may contain: plant, tree, sky and outdoor

துப்பாக்கி தோட்டாக்களின் சுவடு பதிந்த விமானநிலைய கட்டடம்

அவரால் இடபட்ட திட்டம் என்றவுடன் எல்லோரும் அமைதியாயினர், ஆனாலும் ஒருவர் கேட்டார், கென்யர்கள் நம்மை நம்புகின்றார்களா? அல்லது நடிக்கின்றார்களா?
கீம்ஸி அற்புதமான உண்மையை சொன்னார், எல்லா நாட்டு உளவுதுறையும் தனது நாட்டிற்கு ஆபத்து என்றால் மட்டுமே அரசிடம் தகவல் சொல்லும், இல்லாத பட்சத்தில் சகலத்தையும் கண்காணித்துகொண்டு அமைதியாக இருக்கும், தூர நாட்டு உளவுதுறைகளை பகைக்காது.
இது அரசியல் அல்ல உளவு உலகம், கென்ய உளவுதுறையின் சில உறுப்பினர்கள் ஏற்கனவே மொசாத்திற்கு பழக்கம்.

இஸ்ரேல் அதிபருக்கு பொறி தட்டிற்று, இவர் நமக்கும் தெரியாமல் ரகசியம் வைத்திருக்கலாம். இஸ்ரேல் வாழ்ந்தால் சரி என விட்டுவிட்டார்.

கீம்ஸியின் கணிப்பு பொய்க்கவில்லை, மொசாத் உளவாளிகளோடு உகாண்டாவிற்குள் நுழைந்த கென்யர், எண்டபே நிலையத்தில் புகுந்து விமானத்தையும் அதன் கைதிகளையும் பாதுகாப்பையும் நேரில் கண்டு படம் வரைந்து பாகம் குறித்தார். பயணிகள் சிறைவைக்கபட்ட அறை, நிலமை பாதுகாப்பு என சகலமும் புட்டு புட்டு வைத்தார். உகாண்டா மக்களும் கென்யர்களும் உருவத்தால் ஒன்றானவர்கள் அதனால் அவரால் நுழையமுடிந்தது.

இறுதியாக ஜூலை 4ம்நாள் மீட்பு நடவடிக்கை நாள் குறிக்கப்ட்டது, அன்றுதான் கடத்தல்காரர்களின் கெடு முடியும் நாள். அதிகாலை இஸ்ரேலில் இருந்து 3 ராணுவ போக்குவரத்து விமானங்கள் கிளம்பின, ராணுவ அடையாளம் மறைக்கபட்டது, சாதாரண விமானம் போல் தெரிந்தது, தந்திரமாக மோசே தாயன் பிளைட் பாத் (விமானம் பறக்கும் பாதை) கொடுத்தார்.

எந்த நாட்டின் மீதும் பறக்கவேண்டாம் அது வீண் பிரச்சினையை உருவாக்கும், செங்கடல் மீது பறந்து, கடல்பாதையிலே கென்யாவில் இறங்கி பெட்ரோல் நிரப்புங்கள். பின்னர் நான் பயிற்சி அளித்தபடி தாக்கி மீட்டுவாருங்கள்.

இங்கு இஸ்ரேலிய உயர்மட்டம் கன்னத்தில் கைவைத்தது, திட்டத்தின் பெரும் சறுக்கல் இங்குதான் இருந்தது. அதாவது ஆம்புலன்ஸ் விமானத்திற்கு கென்யா அனுமதி கொடுக்கும், ஆனால் இம் மூன்று விமானம் எங்கு செல்கிறது என கேட்டால், முழு விவரம் போதாது என பிடித்துவைத்தால்? நிலமை மகாமோசம்.

ஆனாலும் சவால் எடுத்தார்கள், கென்யர்கள் ஆச்சரியமாக கேள்வி கேட்கவில்லை, சரக்கு விமானம் என நினைத்து பெட்ரோல் நிரப்பி வழியனுப்பினார்கள். (ஏன் கென்யர்கள் கேட்கவில்லை என்பதற்கு எங்கும் எதிலும் பதில் இல்லை.)
கடைசி தடை அகன்றது

இந்த இடத்தில் விமானத்தில் உகாண்டா முத்திரை பதிக்கபட்டதால் கென்யருக்கு சந்தேகம் வரவில்லை என சில கருத்துக்கள் உண்டு, அதுபற்றி உறுதியான தகவல் இல்லை. ஆனால் வாய்ப்பு இருக்கலாம்

3 விமானங்களும் 33,000 அடி உயரம் எழும்பி உகாண்டாவிற்குள் நுழைந்தது.

உகாண்டாவில் இடிஅமீன் கடத்தல்காரர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு ஒரு நாள் முன்பே மொரீசியஸ் சென்றிருந்தார். அதனை மொசாத அறிந்திருந்தது. 3 விமானகங்களும் எண்டபே நிலையத்தை தொடர்புகொண்டு தரையிரங்க அனுமதி கேட்டன, எண்டபே கட்டுப்பாட்டு அறை சம்பிரதாய கேள்வியை கேட்டது.
நீங்கள் யார்? எங்கிருந்து வருகின்றீர்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்.

மிக நுட்பமாக பயிற்றுவிக்கபட்ட இஸ்ரேலிய ராணுவ பைலட், பக்கா உகாண்டா மொழியில் அதே ஸ்லாங்கில் சொன்னார் ” நீ யார்? இது உகாண்டா அதிபரின் விமானம், தீவிரவாதிகள் இஸ்ரேலில் விடுதலை செய்தாயிற்று, பணயகைதிகளை விடுதலை செய்து அனுப்பி வைக்க அதிபரே அவசரமாக மொரீஷியஸில் இருந்து வருகிறார்.
கேள்வியா கேட்கிறாய்..ரஸ்கல்.இரு இறங்கட்டும் இடி அமீன் யார் என உனக்கு காட்டுகிறேன்.”

அவ்வளவுதான் உடனே இறங்க உத்தரவு கொடுத்தார்கள், (உத்தரவு கொடுக்காவிட்டாலும் இறங்கலாம், ஆனால் ரன்வேயில் ஒரு மாட்டுவண்டியை நிறுத்தினாலும் விமானம் “டமால்”)

கட்டுபாட்டு அறை உத்தரவு கொடுத்த சில நிமிடங்களில் விமானங்கள் தரையிரங்கின, எந்த விமானம் தரையிறக்கும் முறையும் பின்பற்றமால் லாண்டிங் செய்யபட்டு, ரன்வே கடந்து டாக்ஸிவேயிலும் வேகமாக சென்று, பயண கைதிகள் இருந்த டெர்மினல் முன்னால் நிறுத்தினார்கள்.

இந்த இடத்தில் ஏரிக்கரை இரண்டாம் குழு ஒரு தந்திரம் செய்தது, அதாவது தாக்குதல் குழு தரையிரங்கும் தகவல் கிடைத்ததும். ரேடார் ஜாமர் அல்லது சிக்னல்களை முடக்கும் ஜாமரை இயக்கினார்கள். காரணம் மீட்பு நவடிக்கை தகவல் எங்கும் சொல்லமுடியாது, அல்லாவிட்டால் ஒரு போன் காலில் வந்து சூழ்ந்துகொள்ளும் உகாண்டா ராணுவம்.

ரேடார் உட்பட சகல தொலைதொடர்பும் முடக்கபட்ட நிலையில்தான் தாக்குதல் குழுவின் விமானம் இறங்கிற்று.
மோசே தயான் சொல்லிவிடிருந்தது, விமானத்திலிருந்து இறங்கி 7 நிமிடத்திற்குள் அவர்களை மீட்டு விமானத்தில் ஏற்றி கிளம்பிவிட வேண்டும்.

அந்த உத்தரவுக்காக மின்னலாய் பாய்ந்து கத்தியபடியே சொன்னார்கள், “எல்லோரும் விமானத்தில் ஏறுங்கள்”, அவர்கள் ஹீப்ரு மொழியில் சொன்னது யூதர்களை தவிர யர்ருக்கும் தெரியவில்லை, தளர்த்தப்ட்ட பாதுகாபில் அதிக வீரர்களும் இல்லை.

எனினும் அவசரமாக பயணிகள் விமானத்தில் ஏற்றபடுவதை கண்ட கடத்தல்காரர்கள் சுதாரித்தனர். என்ன நடக்கிறது என நிதானித்து துப்பாக்கி தேடுமுன் 2 நிமிடம் முடிந்திருந்தது.

குழப்பம் ஆரம்பித்தது, கூடவே சண்டையும் ஆரம்பித்தது, அவர்கள் இஸ்ரேலியர்கள் என்று கூட கடத்தல்காரருக்கு தெரியவில்லை, யோசிக்க அவகாசமில்லா நேரம்

பணயகைதிகளை விடுவிக்க பார்க்கின்றார்கள், விட கூடாது என்பது போல கடத்தல்காரர்கள் சுட ஆரம்பித்தார்கள்

தொடரும்..

 
 

விஞ்ஞான மழை பெய்ய வைக்க மனிதனால் முடியவில்லை

இயற்கையினை மாற்றுவதில் மனிதன் வெற்றி பெற்றுகொண்டிருக்கின்றான்.

இயற்கை தனக்கு கொடுத்த எல்லைகளை எல்லாம் உடைத்தெறிந்து தன்னால் முடியாது எதுவுமில்லை என்று நிருபித்துகொண்டிருக்கின்றான்,

பலம் குறைந்த மனிதன் எந்திரங்களினால் ஆயிரம் யானை பலத்தை பெருகின்றான், மிருகங்களை விட அவனால் எந்திரத்தால் வேகமாக ஓட முடிகின்றது

மீன்களை விட வேகமாக கடலை கடக்க முடிகின்றது

இயற்கையினை பல இடங்களில் வென்றுவிட்டான்

சூரியனை போல பெரும் வெப்பத்தை அவனால் அணுவினால் கொடுக்க முடியும், அண்டார்டிக்கா குளிரினை அவனால் அறைக்குள் உருவாக்க முடியும்.

இருந்த இடத்தில் இருந்துகொண்டே கடவுளை போல அவனால் உலகை காண முடியும், அவ்வளவிற்கு அவன் தன் அறிவினை கொண்டு வசதிகளை பெருக்கிகொண்டான்

இருந்த இடத்தில் இருந்து எல்லா மனிதரையும் அவனால் பார்க்க முடிகின்றது, எங்கோ இருந்துகொண்டு எல்லொருடனும் பேச முடிகின்றது

நொடியில் எங்கும் செல்ல முடிகின்றது, நொடியில் நகரை உருவாக்க முடிகின்றது, நொடியில் அழிக்கவும் அவனால் முடிகின்றது

எவ்வளவு பெரும் வெள்ளமானாலும் அணைகட்ட அவனால் முடியும்

எவ்வளவு பெரும் உயரமாயினும் அவனால் பறக்க முடியும், கோள்களையே தாண்ட முடியும்

பஞ்ச பூதங்களில் சிலவற்றை குட்டிபூதமாக உருவாக்க முடியும் மனிதனால் மழையினை மட்டும் நெருங்க முடியவில்லை

எங்காவது மேகம் கூடினால் , அங்கு சில பொடிகளை தூவி குறைபிரசவாக மழைபெய்ய வைக்க அவனால் முடிகின்றது

மற்றபடி விஞ்ஞான மழை பெய்ய வைக்க அவனால் முடியவில்லை

செயற்கை குளிர், செயற்கை வெப்பத்தை, செயற்கை ஒளியினை நொடியில் உருவாக்கும் மனிதனால் நொடியில் மேகத்தை உருவாக்கி, நொடியில் மழையினை கொட்ட வைத்தால் எப்படி இருக்கும்?

சொட்டு தண்ணீருக்காக கண்ணீரோடு தவமிருக்கும் தமிழக விவசாயிகளை, காலி குடங்களோடு தமிழகம் நடுதெருவுக்கு வரும் காட்சிகளை காணும் பொழுதெல்லாம் இதுதான் நினைவுக்கு வருகின்றது

விஞ்ஞானம் அதில் வெற்றிபெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்?


எச்சரிக்கை

ஆப்பரேஷன் எண்டபே அடுத்த பதிவு எப்பொழுது வரும் என கேட்பவர்கள் கவனிக்கவும்

இப்படியே குஷ்பூ தொடரையும் படிப்போம் என சூடமேற்றி சத்தியம் செய்தால் மட்டுமே அடுத்த தொடர் வரும்..


 

வங்கத்தின் அபாயங்கள் இங்கும் தொடரலாம் …

வங்கத்தில் மதத்தை சீண்டிவிட்டால் அதனை நாம் நினைத்த வழிக்கு கொண்டுவரலாம் என்பது அன்றே வெள்ளையன் கணித்தது

கர்சன் எனும் ஆளுநர் அதனைத்தான் செய்தார் ஒருங்கிணைந்த வங்கத்தை அன்றே இரண்டாக பிரித்தது அவர்தான். அன்றே கலவரத்திற்கான பிரிவினை விதை விதைக்கபட்டது, நிர்வாக காரணம் என அவர் சொன்னாலும் இது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் விஷயம் என பலர் தலையில் அடித்ததை பிரிட்டன் கண்டுகொள்ளவில்லை

பின்னும் ஒருங்கிணைந்த இந்தியாவில் வங்கம் சுதந்திரத்திற்கு பெரும் மக்களை கொடுத்தது சித்தரஞ்சன் தாஸ் , நேதாஜி முதல் சூர்யா சென் என தியாக வரிசை பெரிது, இந்நாட்டின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்தியதும் வங்க பெணகளே

பின் சுதந்திர பிரிவினையில்தான் கர்சனின் திட்டம் வேலை செய்தது, ஆம் கிழக்கு பாகிஸ்தான் என்றொன்று அவசியமே இல்லை ஆனால் இந்திய நிம்மதியினை கெடுக்க வேண்டும் என்றே அப்படி செய்தார்கள்

வங்கம் பற்றி எரிந்தது, காந்தி நவகாளி யாத்திரை எல்லாம் செய்தார், எப்படியோ பெரும் ரத்த ஆறில் அந்நாடு உதித்தது

பின் பாகிஸ்தானுடன் அவர்கள் மோதியபொழுதும் சில காரணங்களுக்காக நாம் அந்நாட்டை பிரித்து கொடுத்தோம், ரஷ்யாவும் கிரீமியாவும் போல இணைந்திருக்க வேண்டிய வரலாறு, அதே மத விவகாரத்தால் நடக்காமல் அது தனிநாடானது

வங்கத்தார் மதத்தால் தீவிரமானவர்கள், விவேகானந்தர் எல்லாம் அங்குதான் உருவானார். அதே நேரம் சிந்தனையும் மிக்கவர்கள்

அங்கு மத அபிமானம் உண்டெனினும் சிந்தனையும் உண்டு, அதனால் சுதந்திர இந்தியாவில் அது கம்யூனிச கோட்டையானது, நெடுநாள் அசைக்க முடியவில்லை, ஜோதிபாசு அப்படித்தான் சாதனை எல்லாம் படைத்தார்

உலகளாவிய கம்யூனிச தோல்வியும், இந்தியா முதலாளிகளுக்கு தன் கதவினை திறந்துவிட்ட 1992க்கு பின் அங்கு காட்சிகள் மாறின, இப்பொழுது மம்தா முதல்வர் அவர் ஒரு மாநில கட்சியின் தலைவர்.

அவருக்கும் மத்திய அரசுக்கும் மோதல், வங்கத்தில் தன் கட்சியினை வளர்க்கும் நோக்கம் அவர்களுக்கு, இது சிந்தனை பூமி என்பது இவர் கணக்கு

இன்று மத்தியில் பாஜக ஆட்சி வலுத்தவுடன் காளி மாநிலம் என அழைக்கபடும் அந்த மாநிலத்தில் மறுபடியும் கலவர காட்சிகள்

இத்தனை காலம் அமைதியாக இருந்த மாநிலம், கம்யூனிஸ்டுகள் எத்தனையோ ஆண்டுகாலம் ஆண்ட மாநிலாத்தில் எப்பொழுதும் இல்லா மத கலவரம் இப்பொழுது எப்படி?

(இதெல்லாம் கேட்டால் நம்மை பாவாடை என்பார்கள், நாங்கள் பாவாடை என்றால் நீங்கள் கோவணம், சில நேரம் அதுவுமில்லை)

காந்திகாலத்திற்கு பின் இப்பொழுது மறுபடியும் வங்கம் எரிகின்றது, அன்று காந்தி எனும் பெருமனிதர் இருந்தார், இந்த விவகாரங்களுக்காக நடைபயணம் , உண்ணாவிரதம் எல்லாம் இருந்து அமைதியினை கொண்டுவந்தார்

இன்று யார் இருக்கின்றார்கள்?

இந்நாட்டில் அமைதி நிலைக்க வேண்டுமென்றால் இஸ்லாம் அடிக்கின்றான், இந்து அடிக்கின்றான் , இந்து சாகின்றான் முஸ்லீம் சாகின்றான் என்பதை விட , அடித்தவன் அடிவாங்கியன் இருவரும் இந்தியன் என நோக்குவதுதான் சரி

காந்தி அந்த நோக்கில்தான் சொன்னார், செய்தார்

இன்று அப்படி அல்ல, எப்படியாவது அந்த பூமியில் மதவெறியினை தூண்டிவிட்டு அங்கு தன்கொடியினை பறக்கவிட பாஜக முயற்சிக்கின்றது அதன் அடிப்பொடிகளும் அதற்கு உடன் செல்லுகின்றன‌.

வங்கத்தின் நிலவரங்கள் என் ஆட்சியினை கலைக்கும் சதி என சொல்ல ஆரம்பித்துவிட்டார் மம்தா

இந்தியாவிற்கு பெரும் சிந்தனையாளர்களை கொடுத்த பூமி அது, இந்தியாவில் இருந்து நோபல் பரிசு வாங்கியவர்களில் பெருவாரி அவர்கள்தான்

வாஜ்பாய் போன்ற நல்ல அரசியல்வாதிகள் எல்லாம் அங்குதான் உருவானார்கள்

அன்று கர்சன் பிரவுவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கத்தை காப்போம் என பொங்கிய அன்றைய இந்தியா போன்று இன்றைய இந்தியாவும் அந்த மாநில அமைதிக்கு குரல் கொடுக்கட்டும்

வங்கத்தவரும் தங்களின் கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுகொள்ளட்டும்

தேவைபட்டால் சீன எல்லையில் இருக்கும் ராணுவத்தை அனுப்பி அங்கே அமைதியினை கொண்டுவருதல் வேண்டும், சீன மிரட்டலை விட மகா அபாயமனானது வங்க நிலவரங்கள்

இதில் மிக மிக கவனமாக பாடம் படிக்கவேண்டியது யார் தெரியுமா? தமிழ்நாடு மக்கள்

பாஜக தான் புக முடியாத இடங்களில் எல்லாம் கலவரங்களை செய்ய தொடங்கியாயிற்று, வாஜ்பாய் போன்ற தலைவர்கள் உருவான வங்கத்தில் அவர்களால் கம்யூனிஸ்டுகளை, மம்தாவினை தாண்டி கைபற்ற முடியவில்லை, மாற்றுவழிக்கு செல்கின்றார்கள்

இதனையே திராவிட கட்சிகளை தாண்டி தமிழகத்தில் எட்டிபார்க்க முடியாத தமிழகத்தில் அவர்கள் செய்யலாம்

எச்.ராசா போன்றவர்கள் அந்த கலவரத்தை தூண்டிவிட முயற்சிக்கலாம், கலவரம் தொடங்குவது என்பது உலகில் மிக மிக எளிதான பணி

சும்மா இருக்கும் மற்ற மதத்துகாரனிடம் சென்று வம்பு இழுத்துவிட்டு, அடிவாங்கிவிட்டு “ஏய் இந்துக்களே, இந்து நாட்டில் இந்துவை ஒரு அன்னியன் தாக்குகின்றான், எங்கே உங்கள் வீரம்??” என கேட்டால் அதுதான் கலவர தொடக்கம்

வங்கத்தில் சில சர்ச்சைகள் நடக்கின்றன, அதன் நிலவரம் இன்னும் தெரியவில்லை, அப்படி சிறுதீயிலே அணைக்கபட்டால் நல்லது

இல்லாவிட்டால் பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும், யாத்திரை சென்று இந்த தேசத்தை காப்பாற்ற இன்னொரு காந்தி இல்லை, அவர் வரவும் முடியாது.

என்றோ நடந்த் மணிப்பூர் கலவரங்களை , சில கிராமத்தில் நடந்த ஊர் சண்டை படங்களை, எங்கோ என்றோ திருடனை போட்டு அடித்த படங்களை இதோ இந்துக்களை கொல்லும் இஸ்லாமிய அட்டகாசம் பாரீர் என கிளம்பிவிட்டார்கள்,

தகவல் தொடர்பு மிகுந்த காலங்களில் இவை எல்லாம் பெரும் கலவரங்களை தோற்றுவிக்கும், இந்த செய்திகளை எல்லாம் அரசு மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும், ஆபத்து என்றால் செய்தி பரப்புவர்களை தூக்கவும் தயங்க கூடாது

வங்க நிலவரத்தை பார்த்து தமிழக அரசு மகா விழிப்பாய் இருப்பது நல்லது, அதனை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை, அது அம்மா சமாதி, டெல்லி சிறை , பெங்களூர் சிறை என சுற்றிகொண்டிருக்கின்றது

இத்தேசத்தை காக்கும் பொறுப்பு நம்மிடம்தான் இருக்கின்றது, நம் ஒவ்வொருவரிடம் இருக்கின்றது

வங்கத்தின் அபாயங்கள் இங்கும் தொடர வாய்ப்பு இருக்கும் நிலையில் தமிழகத்தார் மிக மிக விழிப்பாக இருப்பது நல்லது