ஆப்பரேஷன் எண்டபே : 03

Image may contain: 1 person

முதல்படம் ஆப்பரேஷனை வெற்றியாக நடத்திய கேப்டன் ஷெர்மன்

அந்த விமான ஆம்புலன்ஸ் தயார் செய்துவிட்டு, கென்ய அரசிடம் இஸ்ரேலிய தரப்பு ஒரு கோரிக்கை கொடுத்தது, “நாங்கள் தீவிரவாதிகளை விடுவிக்க முடிவெடித்துவிட்டோம், பணயகைதிகளில் பலபேர் நோயாளிகள், எனவே அவர்கள் விடுவிக்கப்ட்டவுடன் அவசர சிகிச்சை தேவை எனவே மிக விரைவாக அவர்களை காக்கும் பொருட்டு ஒரு மருத்துவ விமானம் உங்கள் நாட்டில் இறக்க அனுமதி தாருங்கள்”

இதனை சொல்லிகொண்டிருக்கும் பொழுதே இஸ்ரேலிய தளபதிகள் ரோஜா படத்து நாசர் மதுபாலாவிடம் புலம்புவது போல் மீடியா முன் புலம்பினர், “இந்த தீவிர்வாதிகளை பிடிக்க போகும்பொழ்து இறந்தது 10 பேர், அந்த கொடூரனை கைது செய்யும்பொழுது செத்தது 10பேர், இவர்கள் எல்லோர் தியாகமும் வீணானது, இதோ அவர்கள் விடுதலையாக போகின்றார்கள்” என அற்புதமாக நடித்துகொண்டிருந்தனர்.

இதனால் உகாண்டாவில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடி, பாதுகாப்பு சுத்தமாக தளர்த்தபட்டது.
ஒரு நாட்டில் அவர்கள் அனுமதியின்றி விமானம் இறக்கமுடியாது, (விமானம் இறக்குதல் என்ன? குண்டூசி கூட வீச முடியாது) எனவே கேட்டார்கள்,

கென்ய நாடாளுமன்றமும் “மனிதாபிமான” அனுமதி வழங்கியது, விமானம் கென்யாவின் மேற்கு பகுதியில் தரைஇறங்கியது,

அதாவது விக்டோரியா ஏரியை ஒட்டியபகுதி, கென்ய அதிகாரிகளும் விமானத்தின் உள்சென்றுபார்த்தனர், அருமையான ஆம்புலன்ஸ் என வியந்தனர், டாக்டர் 10 பேர் தவிரயாருமில்லை என உத்திரவாதம் கொடுத்தனர், நாளை கென்யா வளர்ந்தநாடாகும் பொழுது இதனை போல 10 வாங்கி கென்யா முழுக்க நிறுத்தவேண்டும் என வேலுநாயக்கர்பாணியில் சொல்லிகொண்டிருந்தனர்.

இரவு நேரத்தில் அந்த கமாண்டோக்கள் வெளிவந்து ஏரிகரைக்கு சென்றனர், ரப்பர் கருவியை விரித்து காற்றடைத்து அருமையான படகாக்கினர், அப்படியே பயணம் செய்து எண்டபே விமான நிலையத்தின் மறுபக்கம் கவர் எடுத்தனர், அது ஒரு காட்டுபகுதி, ஆனால் விமான நிலையத்தை அன்மித்தது.

இனி தாக்குதல் தொடங்கலாமா என கீம்ஸியிடம் கேட்டபொழுது அவர் அமைதியாக சொன்னார், இவர்கள் ஸ்டாண்ட் பை. அதாவது பாதுகாப்பு குழு. தாக்குவதற்கு இன்னொரு குழு செல்லும், அவர்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் மட்டுமே இவர்கள் தாக்குவார்கள், இல்லாதபட்சத்தில் களம் இறங்கமாட்டார்கள். இத்திட்டம் எதிரில் இருக்கும் நமதருமை தளபதியால் இறுதிசெய்யப்ட்டது என கை நீட்டினார்.

அங்கு இருந்தவர் நெப்போலியனை விட 10 மடங்கு,ஹிட்லரை விட 50 மடங்கு போர்வியூகம் அமைக்கும் வல்லமை பெற்ற தளபதி, இரு பெரும் போர்களில் இஸ்ரேலை வெற்றிபெற வைத்து உலகையே வியக்கவைத்தவர். கிட்டதட்ட 10 அரபு நாடுகளை ஒரே நேரத்தில் சமாளித்து விரட்டி இஸ்ரேலை வெற்றிபெற வைத்த பெரும் வியூக வித்தகர்

அவரது போர் வியூகத்தை படிக்கும் எந்த நாட்டு தளபதியானாலும் அவர்காலில் விழுந்து ஆசிபெறுவார், இவ்வளவிற்கும் ஒரு கண் கிடையாது.

மோசா தயான், இஸ்ரேலின் பீஷ்மர்

Image may contain: plant, tree, sky and outdoor

துப்பாக்கி தோட்டாக்களின் சுவடு பதிந்த விமானநிலைய கட்டடம்

அவரால் இடபட்ட திட்டம் என்றவுடன் எல்லோரும் அமைதியாயினர், ஆனாலும் ஒருவர் கேட்டார், கென்யர்கள் நம்மை நம்புகின்றார்களா? அல்லது நடிக்கின்றார்களா?
கீம்ஸி அற்புதமான உண்மையை சொன்னார், எல்லா நாட்டு உளவுதுறையும் தனது நாட்டிற்கு ஆபத்து என்றால் மட்டுமே அரசிடம் தகவல் சொல்லும், இல்லாத பட்சத்தில் சகலத்தையும் கண்காணித்துகொண்டு அமைதியாக இருக்கும், தூர நாட்டு உளவுதுறைகளை பகைக்காது.
இது அரசியல் அல்ல உளவு உலகம், கென்ய உளவுதுறையின் சில உறுப்பினர்கள் ஏற்கனவே மொசாத்திற்கு பழக்கம்.

இஸ்ரேல் அதிபருக்கு பொறி தட்டிற்று, இவர் நமக்கும் தெரியாமல் ரகசியம் வைத்திருக்கலாம். இஸ்ரேல் வாழ்ந்தால் சரி என விட்டுவிட்டார்.

கீம்ஸியின் கணிப்பு பொய்க்கவில்லை, மொசாத் உளவாளிகளோடு உகாண்டாவிற்குள் நுழைந்த கென்யர், எண்டபே நிலையத்தில் புகுந்து விமானத்தையும் அதன் கைதிகளையும் பாதுகாப்பையும் நேரில் கண்டு படம் வரைந்து பாகம் குறித்தார். பயணிகள் சிறைவைக்கபட்ட அறை, நிலமை பாதுகாப்பு என சகலமும் புட்டு புட்டு வைத்தார். உகாண்டா மக்களும் கென்யர்களும் உருவத்தால் ஒன்றானவர்கள் அதனால் அவரால் நுழையமுடிந்தது.

இறுதியாக ஜூலை 4ம்நாள் மீட்பு நடவடிக்கை நாள் குறிக்கப்ட்டது, அன்றுதான் கடத்தல்காரர்களின் கெடு முடியும் நாள். அதிகாலை இஸ்ரேலில் இருந்து 3 ராணுவ போக்குவரத்து விமானங்கள் கிளம்பின, ராணுவ அடையாளம் மறைக்கபட்டது, சாதாரண விமானம் போல் தெரிந்தது, தந்திரமாக மோசே தாயன் பிளைட் பாத் (விமானம் பறக்கும் பாதை) கொடுத்தார்.

எந்த நாட்டின் மீதும் பறக்கவேண்டாம் அது வீண் பிரச்சினையை உருவாக்கும், செங்கடல் மீது பறந்து, கடல்பாதையிலே கென்யாவில் இறங்கி பெட்ரோல் நிரப்புங்கள். பின்னர் நான் பயிற்சி அளித்தபடி தாக்கி மீட்டுவாருங்கள்.

இங்கு இஸ்ரேலிய உயர்மட்டம் கன்னத்தில் கைவைத்தது, திட்டத்தின் பெரும் சறுக்கல் இங்குதான் இருந்தது. அதாவது ஆம்புலன்ஸ் விமானத்திற்கு கென்யா அனுமதி கொடுக்கும், ஆனால் இம் மூன்று விமானம் எங்கு செல்கிறது என கேட்டால், முழு விவரம் போதாது என பிடித்துவைத்தால்? நிலமை மகாமோசம்.

ஆனாலும் சவால் எடுத்தார்கள், கென்யர்கள் ஆச்சரியமாக கேள்வி கேட்கவில்லை, சரக்கு விமானம் என நினைத்து பெட்ரோல் நிரப்பி வழியனுப்பினார்கள். (ஏன் கென்யர்கள் கேட்கவில்லை என்பதற்கு எங்கும் எதிலும் பதில் இல்லை.)
கடைசி தடை அகன்றது

இந்த இடத்தில் விமானத்தில் உகாண்டா முத்திரை பதிக்கபட்டதால் கென்யருக்கு சந்தேகம் வரவில்லை என சில கருத்துக்கள் உண்டு, அதுபற்றி உறுதியான தகவல் இல்லை. ஆனால் வாய்ப்பு இருக்கலாம்

3 விமானங்களும் 33,000 அடி உயரம் எழும்பி உகாண்டாவிற்குள் நுழைந்தது.

உகாண்டாவில் இடிஅமீன் கடத்தல்காரர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு ஒரு நாள் முன்பே மொரீசியஸ் சென்றிருந்தார். அதனை மொசாத அறிந்திருந்தது. 3 விமானகங்களும் எண்டபே நிலையத்தை தொடர்புகொண்டு தரையிரங்க அனுமதி கேட்டன, எண்டபே கட்டுப்பாட்டு அறை சம்பிரதாய கேள்வியை கேட்டது.
நீங்கள் யார்? எங்கிருந்து வருகின்றீர்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்.

மிக நுட்பமாக பயிற்றுவிக்கபட்ட இஸ்ரேலிய ராணுவ பைலட், பக்கா உகாண்டா மொழியில் அதே ஸ்லாங்கில் சொன்னார் ” நீ யார்? இது உகாண்டா அதிபரின் விமானம், தீவிரவாதிகள் இஸ்ரேலில் விடுதலை செய்தாயிற்று, பணயகைதிகளை விடுதலை செய்து அனுப்பி வைக்க அதிபரே அவசரமாக மொரீஷியஸில் இருந்து வருகிறார்.
கேள்வியா கேட்கிறாய்..ரஸ்கல்.இரு இறங்கட்டும் இடி அமீன் யார் என உனக்கு காட்டுகிறேன்.”

அவ்வளவுதான் உடனே இறங்க உத்தரவு கொடுத்தார்கள், (உத்தரவு கொடுக்காவிட்டாலும் இறங்கலாம், ஆனால் ரன்வேயில் ஒரு மாட்டுவண்டியை நிறுத்தினாலும் விமானம் “டமால்”)

கட்டுபாட்டு அறை உத்தரவு கொடுத்த சில நிமிடங்களில் விமானங்கள் தரையிரங்கின, எந்த விமானம் தரையிறக்கும் முறையும் பின்பற்றமால் லாண்டிங் செய்யபட்டு, ரன்வே கடந்து டாக்ஸிவேயிலும் வேகமாக சென்று, பயண கைதிகள் இருந்த டெர்மினல் முன்னால் நிறுத்தினார்கள்.

இந்த இடத்தில் ஏரிக்கரை இரண்டாம் குழு ஒரு தந்திரம் செய்தது, அதாவது தாக்குதல் குழு தரையிரங்கும் தகவல் கிடைத்ததும். ரேடார் ஜாமர் அல்லது சிக்னல்களை முடக்கும் ஜாமரை இயக்கினார்கள். காரணம் மீட்பு நவடிக்கை தகவல் எங்கும் சொல்லமுடியாது, அல்லாவிட்டால் ஒரு போன் காலில் வந்து சூழ்ந்துகொள்ளும் உகாண்டா ராணுவம்.

ரேடார் உட்பட சகல தொலைதொடர்பும் முடக்கபட்ட நிலையில்தான் தாக்குதல் குழுவின் விமானம் இறங்கிற்று.
மோசே தயான் சொல்லிவிடிருந்தது, விமானத்திலிருந்து இறங்கி 7 நிமிடத்திற்குள் அவர்களை மீட்டு விமானத்தில் ஏற்றி கிளம்பிவிட வேண்டும்.

அந்த உத்தரவுக்காக மின்னலாய் பாய்ந்து கத்தியபடியே சொன்னார்கள், “எல்லோரும் விமானத்தில் ஏறுங்கள்”, அவர்கள் ஹீப்ரு மொழியில் சொன்னது யூதர்களை தவிர யர்ருக்கும் தெரியவில்லை, தளர்த்தப்ட்ட பாதுகாபில் அதிக வீரர்களும் இல்லை.

எனினும் அவசரமாக பயணிகள் விமானத்தில் ஏற்றபடுவதை கண்ட கடத்தல்காரர்கள் சுதாரித்தனர். என்ன நடக்கிறது என நிதானித்து துப்பாக்கி தேடுமுன் 2 நிமிடம் முடிந்திருந்தது.

குழப்பம் ஆரம்பித்தது, கூடவே சண்டையும் ஆரம்பித்தது, அவர்கள் இஸ்ரேலியர்கள் என்று கூட கடத்தல்காரருக்கு தெரியவில்லை, யோசிக்க அவகாசமில்லா நேரம்

பணயகைதிகளை விடுவிக்க பார்க்கின்றார்கள், விட கூடாது என்பது போல கடத்தல்காரர்கள் சுட ஆரம்பித்தார்கள்

தொடரும்..

 
 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s