வங்கத்தின் அபாயங்கள் இங்கும் தொடரலாம் …

வங்கத்தில் மதத்தை சீண்டிவிட்டால் அதனை நாம் நினைத்த வழிக்கு கொண்டுவரலாம் என்பது அன்றே வெள்ளையன் கணித்தது

கர்சன் எனும் ஆளுநர் அதனைத்தான் செய்தார் ஒருங்கிணைந்த வங்கத்தை அன்றே இரண்டாக பிரித்தது அவர்தான். அன்றே கலவரத்திற்கான பிரிவினை விதை விதைக்கபட்டது, நிர்வாக காரணம் என அவர் சொன்னாலும் இது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் விஷயம் என பலர் தலையில் அடித்ததை பிரிட்டன் கண்டுகொள்ளவில்லை

பின்னும் ஒருங்கிணைந்த இந்தியாவில் வங்கம் சுதந்திரத்திற்கு பெரும் மக்களை கொடுத்தது சித்தரஞ்சன் தாஸ் , நேதாஜி முதல் சூர்யா சென் என தியாக வரிசை பெரிது, இந்நாட்டின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்தியதும் வங்க பெணகளே

பின் சுதந்திர பிரிவினையில்தான் கர்சனின் திட்டம் வேலை செய்தது, ஆம் கிழக்கு பாகிஸ்தான் என்றொன்று அவசியமே இல்லை ஆனால் இந்திய நிம்மதியினை கெடுக்க வேண்டும் என்றே அப்படி செய்தார்கள்

வங்கம் பற்றி எரிந்தது, காந்தி நவகாளி யாத்திரை எல்லாம் செய்தார், எப்படியோ பெரும் ரத்த ஆறில் அந்நாடு உதித்தது

பின் பாகிஸ்தானுடன் அவர்கள் மோதியபொழுதும் சில காரணங்களுக்காக நாம் அந்நாட்டை பிரித்து கொடுத்தோம், ரஷ்யாவும் கிரீமியாவும் போல இணைந்திருக்க வேண்டிய வரலாறு, அதே மத விவகாரத்தால் நடக்காமல் அது தனிநாடானது

வங்கத்தார் மதத்தால் தீவிரமானவர்கள், விவேகானந்தர் எல்லாம் அங்குதான் உருவானார். அதே நேரம் சிந்தனையும் மிக்கவர்கள்

அங்கு மத அபிமானம் உண்டெனினும் சிந்தனையும் உண்டு, அதனால் சுதந்திர இந்தியாவில் அது கம்யூனிச கோட்டையானது, நெடுநாள் அசைக்க முடியவில்லை, ஜோதிபாசு அப்படித்தான் சாதனை எல்லாம் படைத்தார்

உலகளாவிய கம்யூனிச தோல்வியும், இந்தியா முதலாளிகளுக்கு தன் கதவினை திறந்துவிட்ட 1992க்கு பின் அங்கு காட்சிகள் மாறின, இப்பொழுது மம்தா முதல்வர் அவர் ஒரு மாநில கட்சியின் தலைவர்.

அவருக்கும் மத்திய அரசுக்கும் மோதல், வங்கத்தில் தன் கட்சியினை வளர்க்கும் நோக்கம் அவர்களுக்கு, இது சிந்தனை பூமி என்பது இவர் கணக்கு

இன்று மத்தியில் பாஜக ஆட்சி வலுத்தவுடன் காளி மாநிலம் என அழைக்கபடும் அந்த மாநிலத்தில் மறுபடியும் கலவர காட்சிகள்

இத்தனை காலம் அமைதியாக இருந்த மாநிலம், கம்யூனிஸ்டுகள் எத்தனையோ ஆண்டுகாலம் ஆண்ட மாநிலாத்தில் எப்பொழுதும் இல்லா மத கலவரம் இப்பொழுது எப்படி?

(இதெல்லாம் கேட்டால் நம்மை பாவாடை என்பார்கள், நாங்கள் பாவாடை என்றால் நீங்கள் கோவணம், சில நேரம் அதுவுமில்லை)

காந்திகாலத்திற்கு பின் இப்பொழுது மறுபடியும் வங்கம் எரிகின்றது, அன்று காந்தி எனும் பெருமனிதர் இருந்தார், இந்த விவகாரங்களுக்காக நடைபயணம் , உண்ணாவிரதம் எல்லாம் இருந்து அமைதியினை கொண்டுவந்தார்

இன்று யார் இருக்கின்றார்கள்?

இந்நாட்டில் அமைதி நிலைக்க வேண்டுமென்றால் இஸ்லாம் அடிக்கின்றான், இந்து அடிக்கின்றான் , இந்து சாகின்றான் முஸ்லீம் சாகின்றான் என்பதை விட , அடித்தவன் அடிவாங்கியன் இருவரும் இந்தியன் என நோக்குவதுதான் சரி

காந்தி அந்த நோக்கில்தான் சொன்னார், செய்தார்

இன்று அப்படி அல்ல, எப்படியாவது அந்த பூமியில் மதவெறியினை தூண்டிவிட்டு அங்கு தன்கொடியினை பறக்கவிட பாஜக முயற்சிக்கின்றது அதன் அடிப்பொடிகளும் அதற்கு உடன் செல்லுகின்றன‌.

வங்கத்தின் நிலவரங்கள் என் ஆட்சியினை கலைக்கும் சதி என சொல்ல ஆரம்பித்துவிட்டார் மம்தா

இந்தியாவிற்கு பெரும் சிந்தனையாளர்களை கொடுத்த பூமி அது, இந்தியாவில் இருந்து நோபல் பரிசு வாங்கியவர்களில் பெருவாரி அவர்கள்தான்

வாஜ்பாய் போன்ற நல்ல அரசியல்வாதிகள் எல்லாம் அங்குதான் உருவானார்கள்

அன்று கர்சன் பிரவுவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கத்தை காப்போம் என பொங்கிய அன்றைய இந்தியா போன்று இன்றைய இந்தியாவும் அந்த மாநில அமைதிக்கு குரல் கொடுக்கட்டும்

வங்கத்தவரும் தங்களின் கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுகொள்ளட்டும்

தேவைபட்டால் சீன எல்லையில் இருக்கும் ராணுவத்தை அனுப்பி அங்கே அமைதியினை கொண்டுவருதல் வேண்டும், சீன மிரட்டலை விட மகா அபாயமனானது வங்க நிலவரங்கள்

இதில் மிக மிக கவனமாக பாடம் படிக்கவேண்டியது யார் தெரியுமா? தமிழ்நாடு மக்கள்

பாஜக தான் புக முடியாத இடங்களில் எல்லாம் கலவரங்களை செய்ய தொடங்கியாயிற்று, வாஜ்பாய் போன்ற தலைவர்கள் உருவான வங்கத்தில் அவர்களால் கம்யூனிஸ்டுகளை, மம்தாவினை தாண்டி கைபற்ற முடியவில்லை, மாற்றுவழிக்கு செல்கின்றார்கள்

இதனையே திராவிட கட்சிகளை தாண்டி தமிழகத்தில் எட்டிபார்க்க முடியாத தமிழகத்தில் அவர்கள் செய்யலாம்

எச்.ராசா போன்றவர்கள் அந்த கலவரத்தை தூண்டிவிட முயற்சிக்கலாம், கலவரம் தொடங்குவது என்பது உலகில் மிக மிக எளிதான பணி

சும்மா இருக்கும் மற்ற மதத்துகாரனிடம் சென்று வம்பு இழுத்துவிட்டு, அடிவாங்கிவிட்டு “ஏய் இந்துக்களே, இந்து நாட்டில் இந்துவை ஒரு அன்னியன் தாக்குகின்றான், எங்கே உங்கள் வீரம்??” என கேட்டால் அதுதான் கலவர தொடக்கம்

வங்கத்தில் சில சர்ச்சைகள் நடக்கின்றன, அதன் நிலவரம் இன்னும் தெரியவில்லை, அப்படி சிறுதீயிலே அணைக்கபட்டால் நல்லது

இல்லாவிட்டால் பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும், யாத்திரை சென்று இந்த தேசத்தை காப்பாற்ற இன்னொரு காந்தி இல்லை, அவர் வரவும் முடியாது.

என்றோ நடந்த் மணிப்பூர் கலவரங்களை , சில கிராமத்தில் நடந்த ஊர் சண்டை படங்களை, எங்கோ என்றோ திருடனை போட்டு அடித்த படங்களை இதோ இந்துக்களை கொல்லும் இஸ்லாமிய அட்டகாசம் பாரீர் என கிளம்பிவிட்டார்கள்,

தகவல் தொடர்பு மிகுந்த காலங்களில் இவை எல்லாம் பெரும் கலவரங்களை தோற்றுவிக்கும், இந்த செய்திகளை எல்லாம் அரசு மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும், ஆபத்து என்றால் செய்தி பரப்புவர்களை தூக்கவும் தயங்க கூடாது

வங்க நிலவரத்தை பார்த்து தமிழக அரசு மகா விழிப்பாய் இருப்பது நல்லது, அதனை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை, அது அம்மா சமாதி, டெல்லி சிறை , பெங்களூர் சிறை என சுற்றிகொண்டிருக்கின்றது

இத்தேசத்தை காக்கும் பொறுப்பு நம்மிடம்தான் இருக்கின்றது, நம் ஒவ்வொருவரிடம் இருக்கின்றது

வங்கத்தின் அபாயங்கள் இங்கும் தொடர வாய்ப்பு இருக்கும் நிலையில் தமிழகத்தார் மிக மிக விழிப்பாக இருப்பது நல்லது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s