ஆப்பரேஷன் எண்டபே : 04

Image may contain: 1 person, smiling, close-up

மூன்று விமானங்கள் சென்றன‌, ஒன்று பயணிகளுக்கு, ஒன்று தாக்குதல் கமாண்டக்களுக்கு, இன்னொன்று முழுக்க ஆயுதம் அதாவது திட்டம் பிசகும் பட்சத்தில் மொத்த நிலையமும் காலி எனும் ரகசிய திட்டம்

(பின்ன அவ்வளவு தூரம் வந்து சும்மா செத்துவிடுவார்களா? )

சண்டை தொடங்கிற்று, உடனே குழுவாக பிரிந்து தாக்கினார்கள், மோசே தயான் அப்படித்தான் வியூகம் வகுத்து அனுப்பியிருந்தார்.

ஒரு குழு பயணிகளை ஏற்றியது, ஒரு குழு அவர்களுக்கு வளைய பாதுகாப்பு வழங்கியது, ஒரு குழு இலக்கில்லாமல் சுட்டு தீவிரவாதிகளை குழப்பியது, ஒரு குழு கவனமாக அங்கு நின்ற உகாண்டா ராணுவ விமானங்களை ராக்கெட் வீசி அழித்தது (பின்னால் தொடர்ந்து வந்துவிட கூடாது அல்லவா? திட்டம் எப்படி பாருங்கள் )

5 நிமிடத்தில் கைதிகள் மீட்பு, சண்டை கிட்டதட்ட முடியும் நிலை, அப்பொழுது தூர கட்டத்தில் இருந்து ஒரு ஸ்னைப்பர்(தொலைவில் இருந்து சுடுதல்) தாக்குதலில் இஸ்ரேலிய கமாண்டர் ஜோனத்தான் நேதன்யாகு உயிரிழந்தார், பதிலுக்கு ராக்கெட் அடித்ததில் கட்டமே காலி.

Image may contain: one or more people

உயிரிழந்த ஜோனாத்தான் நேதன்யாகு மற்றும் “தளபதி” மோசே தயான் & co படத்தில் 

எல்லோரையும் அள்ளிபோட்டு அவசரகதியில் கிளம்பி மேலெலுழுந்தது விமானங்கள். மெதுவாக அசைந்து மெதுவாக உயரும் சம்பிரதாய முறை அல்ல, படுபயங்கர வேகமும் அசாத்திய பறத்தலும்.

மோசே தயான் கொடுத்தது 7 நிமிடம், ஆனால் ஆப்பரேஷன் முடிந்தது 5 நிமிடத்தில்.இது தான் இஸ்ரேலியர், இதுதான் அவர்களின் பயிற்சியும் செயல்திறனும்.

இஸ்ரேல் வீரர் ஒருவர் பலி, மருத்துவமனையில் இருந்த 75வயது முதியவர் ஒருவர் பின்னர் உயிரிழந்தார்(அதில்தான் உலகம் இடிஅமீனை திட்டிதீர்த்தது), தவிர்க்க முடியாத காலத்தில், சேதத்தில் குறைந்த சேதம் பெரும் லாபம் என்பது ராணுவ பாடம்.

அப்படிபட்ட நிலையில் இது இஸ்ரேலுக்கு மிக பெரும் வெற்றி

Image may contain: 1 person, sunglassesவிமானநிலையத்தில் அந்தபக்கம் பதுங்கியிருந்த கமாண்டோக்களும் ஓசைபடாமல் திரும்பி ஆம்புலன்ஸ் விமானத்தில் ஏறினர், அந்த டாக்டர்கள்(!) கென்யர்களிடம் சொன்னார்கள் “எங்கள் ராணுவம் ஏதோ செய்திருக்கிறது, எங்களால் உங்களுக்கு சிரமம், நாங்கள் கிளம்புகிறோம்” என சொல்லிவிட்டு நன்றி கடனாக அனோசின் மாத்திரை ஒரு மூட்டை கொடுத்துவிட்டு கிளம்பினர்.

உலகம் மலைப்பின் உச்சத்தில் பிரம்மிப்பாய் இஸ்ரேலை பார்த்தது. கிட்டதட்ட 6000 கிலோமீட்டர் தொலைவு அங்கு சிறைவைக்கபட்ட பயணிகளை, அந்த நாட்டையே ஏமாற்றி அடித்து மீட்டுவருவது எவ்வளவிற்கு சாத்தியம்?

இஸ்ரேலுக்கு எல்லாமே சாத்தியம்,

5 நிமிடத்தில் இறங்கி அள்ளிபோட்டுகொண்டு செல்லுவதென்றால் எவ்வளவு வேகமும், தகவலும் அவர்களிடம் இருந்திருக்க வேண்டும்? அதுவும் விமான இறங்கி ஏறவே 30 நிமிடம் ஆகும் உலகில் எவ்வளவு சவால் எடுத்திருக்கின்றார்கள்??

இதுதான் இஸ்ரேல்..

அவர்களின் சூழ்நிலை அப்படி, எப்பொழுதும் எதற்கும் தயார் என்பது. எல்லாவற்றிற்கும் மேல் தந்திரம்,தைரியம்,தொழில்நுட்பம்,அதிர்ஷ்டம் என சகலமும் கலந்த நாடு.

ஒருவார காலம் தங்களின் தூக்கம் கெடுத்த இடிஅமீனை, மறைமுகமாக பழிவாங்கினர், அதுதான் “மக்கள்புரட்சி” . நாட்டைவிட்டு ஓடிபோய் சவூதி அரேபியாவில் வாழ்ந்து செத்தார் இடிஅமீன். இஸ்ரேலை எதிர்த்தார் என்பதற்காக அந்நாடு அவருக்கு அடைக்கலம் கொடுத்தது.

மீட்பு சம்பவத்திற்கு பின் கீம்ஸி உலகின் பெரும் ராஜதந்திரி ஆனார், மோசே தயான் அதற்கு முன்பே உலகபுகழ் பெற்றிருந்தார் இன்னும் புகழ் கூடிற்று.

இஸ்ரேல் இவ்வளவு பெரிய சக்தியா? என பெரும் அரசுகளே மிரண்டன.

அதன் பின் இஸ்ரேல் தன் விமான பாதுகாப்பினை பலபடுத்தியது, எல்லா இஸ்ரேலிய விமானத்திலும் ஒரு பயிற்சி பெற்ற வீரர் பயணி போலவே அமர்ந்திருப்பார், அவருக்கான ஆயுதம் அவர் அருகிலே மறைத்து வைக்கபட்டிருக்கும்

அவர் சாதரண பயணிகளில் ஒருவர் போலவே இருப்பார், தேவை ஏற்பட்டால் மட்டுமே வெளிதெரிவார், இல்லாவிட்டால் உண்டுவிட்டு சாதாரண பயணியாக‌ தூங்குவார்.

எந்த ஏவுகனையும் தங்கள் விமானத்தை தாக்காதவாறு தொழில்நுட்பத்தை புகுத்தியது இஸ்ரேல், இன்று மிக மிக பாதுகாப்பான விமான பயணம் அவர்களுடையது

“இதுதான் நாங்கள், யாருக்கும் அஞ்சமாட்டோம், இதோ எங்கள் விமானம் பறக்கின்றது, முடிந்தால் தொட்டுபார்” என தில்லாக இஸ்ரேல் நிற்பது அதற்கு பின்புதான்

எந்தவகை தீவிரவாதத்திற்கும் இஸ்ரேல் அசையாது என உலகிற்கு சொன்ன சம்பவம் இது,

இது என்ன புதுவகையான நாடு என உலகம் மிக மிரட்சியாக இஸ்ரேலை நோக்கியது அதன் பின்புதான்

“எது எல்லாம் எதிரியின் பலவீனமோ அதனை எல்லாம் பலமாக எடுத்து, அவர்களை நம்ப வைத்து குழப்பி எதிர்பாரா நேரத்தில் அடி, இது யுத்தம் இங்கு நேர்மை, நியாயம் எல்லாம் வேலைக்காகாது

அடி, எல்லா வகையிலும் அடி. தயாரிப்பை செம்மையாக செய்துவிட்டு ஒரே அடியாக அடி” என்பதுதான் அந்த தாக்குதல் தத்துவம்.

எல்லா நாட்டு உளவுதுறைகளும் இந்த சம்பவத்தை அடிப்படை பாடமாகவே வைத்துள்ளன

உளவு,திட்டமிடுதல்,பாதுகாப்பான தாக்குதல், நேரம் மேலாண்மை, உளவியல் ரீதியாக‌ குழப்புதல் என பல தலைப்புகளில் இதனை படிக்காத எந்த உளவாளியும் தற்போது இருக்கமாட்டார்.

இது வெளியே தெரிந்த பெரும் சாதனை, இதனைபோல நூற்றுகணக்கான சம்பவங்கள் உண்டு. தொடர்ந்து அவர்களை பற்றியே பார்த்தால் மற்ற விஷயங்களை விட்டுவிடுமோம் அல்லவா?, அவ்வப்போது பார்க்கலாம்.

இதனை படித்துவிட்டு காந்தாகாரில் நாம் சரணடைந்தோம் என கவலைகொள்ளாதீர்கள், 1985ல் ஆனானபட்ட அமெரிக்காவே ஒரு விமான கடத்தலில் தீவிரவாதிகளிடம் சரண்டைந்து கைதிகளை கொடுத்தது.

ஆனால் பின்னாளில் ஒருவர் விடாமல் பின்னால் அலைந்து பழிதீர்த்தது, ஆதரவான நாடுகளின் தலைவர்களை அழித்தே விட்டது.

ஆனால் இந்தியா விடுவித்த தீவிரவாதி என்ன செய்கிறார்?, பாகிஸ்தான் டிவியில் அடிக்கடி அறிக்கைவிடுகிறார். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சமூக சேவையும் செய்கிறார்,பாடம் நடத்துகிறார் அதை வேண்டுமானால் கவலையோடு பார்க்கலாம்.

மொசாத்தின் சாகசங்கள் இப்படி ஏராளம் உண்டு, அர்ஜெண்டினாவில் இருந்து ஹிட்லர் தளபதியினை கண்டுபிடித்து கடத்தியது, முனிச் படுகொலைகளுக்கு பழி தீர்த்தது சதாமின் அணுவுலைகளை தகர்த்தது என ஏராள வீரதந்திர வரலாறுகள் உண்டு

அவ்வப்போது பார்க்கலாம், அப்படியே இஸ்ரேலை போலவே மங்கா புகழ்பெற்றிருக்கும் குஷ்பூவின் தொடரையும் பார்க்கலாம்

தொடரும் …

 
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s