ஓரளவு உண்மையினை சொல்லும் டிவி அல் ஜசீரா

கத்தாருக்கும் அரபுநாடுகளுக்கும் இடையிலான முறுகல் முற்றுகின்றது, கத்தாரின் பெரும் வருமானமான விமான சேவை பல வழிகள் சுற்றி செல்வதால் பெரும் இழப்பினை சந்திக்கின்றது, சில கோரிக்கைகளை வைக்கின்றது

ஆனால் அரபு நாடுகளோ தங்கள் கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றது

இறுதி எச்சரிக்கையாக 48 மணிநேர கெடு விதித்திருக்கின்றன, அந்த 13 கோரிக்கைகளில் அல் ஜசீரா டிவியினை மூடவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றன‌

இந்த உலக மீடியாக்களிலே ஓரளவு உண்மையினை சொல்லும் டிவி அதுதான், ஆப்கன் போர், பின்லேடனின் பேட்டியினை எடுத்தது, ஐஎஸ் போர்முனை, ஏமனின் சவுதி அட்டகாசத்தை வெளிகொண்டுவந்தது என‌ இன்னும் ஏராளமான சாகசங்களை அதுதான் செய்தது

பல ரகசிய தகவல்களை பட்டவர்தனமாக அது போட்டு உடைப்பதால் அதன் மீது அரபுநாடுகள் பலவற்றிற்கு கடும் கோபம் இருந்தது

இப்பொழுது மொத்தமாக போட்டு சாத்துகின்றார்கள், இதனிடையே சவுதி விமானம் ஒன்று இஸ்ரேலில் நிற்கின்றது, இது என்ன புது உறவு? என்ற கேள்விகளில் கடும் சினத்தில் இருக்கின்றது சவுதி

இச்செய்தியினை கிளப்பிவிட்டது யார் என சொல்லி தெரியவேண்டியதில்லை

பெரும் இழப்பினை எதிர்நோக்கும் கத்தார் என்ன செய்யபோகின்றதோ தெரியாது, நிலமை முறுகலாகின்றது

ஒரு உண்மையான ஊடகம் தன் கடமையினை செய்யவிடாமல் தடுக்க ஒரு நாட்டையே முடக்கும் அளவிற்கு அரபுநாடுகள் சென்றிருக்கின்றன என்றால் அதன் வீரியம் எப்படி இருந்திருக்க வேண்டும்

நமது ஊரிலும் இருக்கின்றதே ஊடகங்கள், அட அந்த ஆப்கானும் பின்லேடனும் வேண்டாம், கூடங்குளம் கதிராமங்கலம் செய்திகளையாவது உருப்படியாக சொன்னதா?

நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்

 
 
 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s