அழகுமுத்து கோன் மாவீரனுக்கு, வீரவணக்கம்

Image may contain: 1 person, outdoor

அந்த இந்தியா முகலாய வம்சத்தின் கடைசி காலங்களில் வித்தியாசமாக இருந்தது, அதாவது மொகலாய வம்சம் வீழ ஆரம்பித்த பின் ஆளாளுக்கு தங்கள் பகுதி அரசரானார்கள்

புலிகள் இருந்த வரை வேலையாளாகவும் அவர்களுக்கு பின்னால் அந்த ஐரோப்பிய சொத்துக்களை அமுக்கியவர்கள் தொழிலதிபர்கள் ஆனது போலவும், இன்னும் 4 வருடம் கழித்து அதிமுகவில் 130 அணி உருவாக போக போவது போலவும் இருந்ந்தது நிலை

தமிழகதிலும் நாயக்க ஆட்சிக்கு பின் வந்த‌ ஆர்க்காடு நவாபிடமிருந்து பலர் விடுதலை பெற்றதாக சொல்லிகொண்டார்கள், நாயக்க பாளையங்கள் எல்லாம் தனி அரசுகள் ஆயின‌

அப்படி ஏரளமான சிற்றரசுகளில் ஒன்றில் வந்தவர்தான் அழகு முத்து கோன், கோன் என்றால் கோனார் சாதியினை குறிப்பது அல்ல, கோன் என்றால் அரசன் என பொருள்

இவர் தென்னகத்தில் எட்டயபுரம் அருகே ஒரு சிற்றரசர், நெற்கட்டும் செவலை ஆண்ட பூலித்தேவன் போல இருந்திருக்கின்றார்

இந்நிலையில்தான் வங்கத்தில் பிளாசியுத்ததில் வென்றனர் வெளையர், அதுதான் இந்தியாவில் அவர்களின் முதல் வெற்றி இனி ஆளவு முடியும் என அவர்களுக்கு நம்பிக்கை வந்த நேரம்

அப்பொழுது ஐரோப்பா போரின் தொடர்சியாக இந்தியாவிலும் பிரென்ச்ஞ் பிரிட்டிஷ் மோதல் வந்தது, ஆர்காடு நவாப்பினை வைத்து விளையாடினார்கள், வெற்றி பிரிட்டானியருக்கு

அப்பொழுதுதான் ராபர்ட் கிளைவ், கான் சாகிப் எனும் அற்புத வீரனை கண்டெடுக்கின்றான், அவனை படைதளபதியாகவும் ஆக்குகின்றான்

ஆர்க்காடு நவாப் முன்பு எங்கெல்லாம் வரிபிரித்தானோ அங்கெல்லாம் சென்று வரிபிரிக்கும் படியும் கட்ட மறுத்தால் ராஜியத்தை கைபற்றவும் உத்தரவிடுகின்றான் கிளைவ்

அந்த கான் சாகிப் மருதநாயகம் தான், அவன் இயற்பெயர் வேறு இஸ்லாமை தழுவி கான்சாகிப் ஆனார், பின் மதுரையினை ஆளும் பொழுது மதுரை நாயகமாகி பின் மருத நாயகம் ஆனார்

இதற்கு மேலும் தகவல் தேவை என்றால் பிக்பாஸ் கமலஹாசனிடம் கேட்கலாம்

இப்பொழுது கதை மருதநாயகம் பற்றியதல்ல, அழகுமுத்து கோனை பற்றியது

கட்டாலங்குளம் சீமைக்கு வரிபிரிக்க வந்த கான்சாகிப்பிற்கும் அழகு முத்துகோனுக்கும் யுத்தம் வெடித்தது, கடுமையான யுத்தம்

அழகுமுத்துகோன் எட்டயபுரம் படைகளோடு இணைந்து போரிட்டான், கடும் சண்டை அழகுமுத்துக்கோனை வெல்ல முடியவில்லை, மாறாக அவர் உறங்கும் பொழுது எப்படியோ பிடித்தார்கள்

கெஞ்சினார்கள், மிரட்டினார்கள் அவர் மிக வீரமாக வரிகொடுக்க மறுத்தார், அதனால் மிக கொடூரமாக பீரங்கி முனையில் கட்டி கொன்றார்கள், அவரோடு ஏராளமானோர் கொல்லபட்டனர்

தெற்கே வரிகொடுக்க மறுத்து கொல்லபட்ட முதல் மாவீரன் அவர்தான் என வரலாறு சொல்கின்றது, இவருக்கு அடுத்து புலித்தேவன், அவர் கொல்லபடவில்லை ஆனால் தலைமறைவானார், அவரை விரட்டியது அதே கான்சாகிப்

பின்னாளில் இதே கான்சாகிப் வெள்ளையரை எதிர்த்து மருதநாயகமாகி பின் இதே போன்று பீரங்கி முனையில் கட்டபட்ட காலமாற்றமும் நடந்தது

அதாவது தமிழனை கொண்டே தமிழனை அழித்துவிட்டு பின் அந்த தமிழனையும் கொன்றனர் வெள்ளையர்

அழகுமுத்துகோன் தொடங்கி வைத்த இந்த எதிர்ப்புதான் பின் பூலித்தேவன், கட்டம்பொம்மன், மருது சகோதரர்கள் என தொடர்ந்து வந்தது

இவர்களை போன்ற மாவீரர்களின் வரலாறு எங்கு சேமிக்கபட்டிருந்தது என்றால் ஓலைசுவடிகளில் அல்ல மாறாக இவர்கள் வீரமாக இறந்தபின், இவர்கள் நினைவாக அப்பகுதி மக்கள் சொன்ன கும்ம்பிபாட்டில் இருந்தது

வெள்ளையர் இருக்கும் வரை அவை ஏட்டுக்கு வரவே இல்லை

பின் சுதந்திரமடைந்த‌ காலத்தில் மபொசி அப்படி ஒரு கும்மிபாட்டை கேட்டுத்தான் கட்டபொம்மன் கதையினை ஏட்டுக்கு கொண்டுவந்தார், அது நாடகமாயிற்று, பின் திரைப்படமாகி மங்கா புகழ்பெற்றது, கட்டபொம்மனும் பிரபலமானார்

மருது சகோதரர் கதையும் கண்ணதாசனால் படமாக்கபட்டது

மதுரை கும்மி பாடலில் வாழும் மருதநாயகம் கதையினை பிடித்து கமலஹாசன் தொங்கி கொண்டிருக்கின்றார் இன்னும் விட்டபாடில்லை, விடமாட்டார்

இன்னும் எத்தனை வரலாற்று நாயகர்கள் கிராமிய பாடல்களில் புதைந்திருந்தனரோ தெரியாது, கிராம கும்மிகள் அழிந்துகொண்டிருக்கும் காலத்தில் அவர்கள் கதையும் வெளி தெரியாமலே அழியலாம்

இந்த பூலித்தேவன், அழகுமுத்துகோன் எல்லாம் கிராமிய பாட்டு வடிவிலே இருந்து பின் வெளிகொணரபட்டன, இன்று அவர்களுக்கு சிலைகளும் நினைவு இல்லமும் உண்டு

ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், முதல் விடுதலை குரலை பூலித்தேவனுக்கு முன்பே ஒலித்தவர் அழகு முத்துகோன்

அவர் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தலாம்

வீரன் அழகு முத்துகோனின் வரலாறு இதுதான், அவர் சிற்றரசன், பூலித்தேவன் போல தனி அரசன், எட்டயபுர அரசனுக்கும் இவருக்கும் நல்ல உறவு இருந்தது, அவர் பின்னாளில் தன்னை விடுதலையான அரசனாக அறிவித்துகொண்டவர்.

சிலர் அவர் கோனார் ஜாதி என்றும், பின் சேர்வையாக பட்டம் பெற்றவர் என்றும் (எப்படி ஜாதிமாற முடியும்), எட்டப்ப அரசின் கீழ் தளபதி என்றெல்லாம் சொல்கின்றனர், வாய்ப்பு இருக்க முடியாது

ஆனால் பின்னாளில் சுந்தரலிங்கம் , பூலித்தேவன் , கட்டபொம்மன் எல்லாம் ஜாதியில் அடைபடும்பொழுது அவரும் ஒரு ஜாதியில் அடைபட்டார்

சுந்தலிங்கம் போக்குவரத்து கழகம் வேண்டும் என்ற குரல் எழும்பிய 1990களில் அழகுமுத்துகோன் போக்குவரத்து கழகமும் வேண்டும் என்ற குரலும் கேட்டது

அன்றே நமக்கும் குஷ்பூ பெயரில் போக்குவரத்து கழகம் கேட்கும் ஆசையும் இருந்தது அதற்குள் கலைஞர் எல்லாவற்றையும் அரசு போக்குவரத்து கழகம் ஆக்கினார்

அழகுமுத்து கோனுக்கு சென்னையில் சிலையும் உண்டு

நெல்லை மண் எத்தனையோ வீரர்களை நாட்டிற்கு கொடுத்தது, அதில் ஒருவர்தான் இந்த அழகுமுத்து கோன்

இன்று அவரின் பிறந்தநாளையும் 144 தடை உத்தரவு போட்டு தூத்துகுடி பக்கம் கொண்டாடும் அளவு தமிழகத்தில் சாதி வெறி உச்சிக்கு சென்றாயிற்று

அழகுமுத்து கோன் என்பது அழகுமுத்து அரசன் என்ற பொருளிலே வரும்

நெல்லை கட்டாலங்குள மாவீரன் அவன்

அந்த வீரதமிழ் அரசனுக்கு, முதல் இந்திய சுதந்திர குரல் எழுப்பிய மாவீரனுக்கு, வீரவணக்கம்

 
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s