இன்று உலக மக்கள் தொகை தினம்

download.jpg

இன்று உலக மக்கள் தொகை தினமாம்

அன்றைய பிரிக்கபடாத‌ இந்தியாவின் மக்கள் தொகை லட்சங்களுக்குள் முடிந்திருக்கின்றது, அதனால்தான் மிக குறுகிய எண்ணிக்கையுள்ள வெள்ளையன் ஆளமுடிந்திருக்கின்றது

பின்னர் பாரதி “முப்பது கோடி முகமுடையாள் சிந்தனை ஒன்றுடையாள்” என அகண்ட பாரதத்திலிருந்து பாடுகின்றான், அதாவது அகண்ட இந்திய மக்கள் தொகை 30 கோடி, 1920களில்

பின் இந்தியா பிரிந்து நாற்பது கோடியாகின்றது, கண்ணதாசன் கூட “நால்வகை மதமும் 40 கோடி மாந்தரும் வருகின்றார்” என பாடல் எழுதுகின்றார்

அப்படி இருந்த மக்கள் தொகை இன்று 120 கோடியினை எட்டியிருக்கின்றது

விஞ்ஞானமும், கொள்ளை நோய் தடுப்பும், போர்களற்ற காலமும் அதனை சாத்தியமாக்கியிருக்கின்றன‌

இன்று உலக மக்கள் தொகை தினமாம், ஆளாளுக்கு சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், சிலர் கவலைபடுகின்றார்களாம்

உண்மையில் இதில் கவலைபட என்ன இருக்கின்றது? மனிதன் பூமியில் பரவவேண்டும் என்பதுதான் ஆண்டவன் கட்டளை

எத்தனாயிரம் கோடி மக்கள் வந்தாலும் அவர்களுக்கு மழைகொடுக்கவும், உணவளிக்கவும், விளைவித்து தள்ள இந்த பூமி தயாராகத்தான் இருக்கின்றது

மனிதன் தான் அதனை செய்யாமல் உணவு தட்டுப்பாடு அது இது என சொல்லிகொண்டே இருக்கின்றான், இது மனிதனின் தவறேயன்றி இயற்கை தவறல்ல‌

எல்லா மக்களுக்கும் உணவும் நீரும் கொடுக்க இயற்கை எப்பொழுதும் தயார்..

அது இருக்கட்டும்

ஒரு நாட்டின் பிராதன வளங்களில் மக்கள் சக்தி முக்கியமானது, அது நமது நாட்டில் நிரம்பியிருப்பது நல்ல விஷயமே

இவ்வளவு பெரும் மக்கள் தொகையினை கொண்டும் இந்நாடு உலக அரங்கில் வெற்றிநடை போடுவதும் அதியிக்கதக்க விஷயம், அதுவும் ஜனநாயக பாதையில் நடப்பதென்பது மிக பெரிய விஷயம்

வாழ்க இந்தியா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s